Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 22 1

Advertisement

Admin

Admin
Member




அத்தியாயம்---22

வெளியில் வந்த மினி ஹாலில் ஷோபாவில் கண் மூடி அமர்ந்து இருந்த தன் தாத்தாவின் அருகில் அமர்ந்து தன் கையை அவர் தோளில் வைத்தாள்.அந்த தொடுகையில் கண் விழித்த தீனதயாளன் பேத்தியை பார்த்து “என்னம்மா… உன் பாட்டி என்ன சொன்னா…..”என்று கேட்டு ஆராயும் பார்வையுடன் அவளை பார்த்தார்.

பத்தூ சொன்னதை கேட்டு தன் பேத்திக்கு தன் மகன் மேல் உள்ள கோபம் போய் அவன் வாழ்வு சரியாகுமோ….என்று ஒரு தந்தையாக அவர் மனம் கவலைக் கொண்டது.தாத்தாவின் முகத்தை பார்த்து அவர் உணர்வுகளை புரிந்துக் கொண்ட மினி “தாத்தா நான் உங்கள் பேத்தி எது என்றாலும் என்னடம் உரிமையுடன் கேட்க வேண்டும் அதை விட்டு என் முகத்தை நோட்டம் இடும் வேலையெல்லாம் வேண்டாம்.” என்று கூறினாள்.

பேத்தியின் பேச்சைக் கேட்ட தீனதயாளன் “சரி இப்போது கேட்கிறேன் என் மகன் மேல் உள்ள கோபம் போய் விட்டதா….?”

“பாட்டி சொன்னதில் என் கோவம் பாதி போய் விட்டது.” பேத்தியின் பேச்சில் “அப்போது மீதி பாதி கோபம் எப்போது போகும்.”

“அது உன் மகன் என்னிடத்தில் நடந்துக் கொள்ளும் விதத்தில் உள்ளது.” என்ற மினியின் வார்த்தைக்கு “எங்கள் பரம்பரை பற்றி உனக்கு தெரியாது மனைவி எள் என்றால் நாங்கள் எண்ணையாக நிற்போம்.”என்ற பதிலில்.

“ தாத்தா அப்போது என் மீதி கோபம் போவது கடினம் தான்.”

“ஏன் ராசாத்தி அப்படி சொல்கிறாய்….?

“பின் என்ன தாத்தா எனக்கு சொல் பேச்சி கேட்காதவங்கள சுத்தமா பிடிக்காது.நான் எள் வேண்டும் என்றால் எள் தான் கொடுக்க வேண்டும் அதை விட்டு எண்ணை கொண்டு நீட்டினால்….எப்படி தாத்தா…”என்று கூறி சிரித்தாள்.

பேத்தியின் சிரிப்பில் உள்ளிருந்து பத்தூவே...வந்து விட்டாள். “பாட்டி நீங்க ஏன் வெளியில் வந்திங்க உங்களை ஒய்வு தானே எடுக்க சொன்னேன்.” என்று தன் பாட்டியை அதட்டினாள்.

பேத்தியின் அதட்டலில் மகிழ்ந்து போய் “ஏங்க நம்ம பேத்தி என்னம்மா...அதட்டுகிறாலேங்க….” என்று அதற்கும் மகிழ்ந்து போனார்.”

மனைவியின் பேச்சில் இருந்த ஜீவனை பார்த்த தீனதயாளன்.இந்த மகிழ்ச்சி கடைசி வரை அவளுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொன்டார்.

பேத்தியை பார்த்து “பாரும்மா...உன் பாட்டியை பேத்தி அதட்டுனதுக்கு இவ்வளவு சந்தோஷப் படுறவ நான் அதட்டினாள் மட்டும் ஒரு முழ நீளத்துக்கு முகத்தை தூக்கி வைச்சிப்பா…..”

கணவரின் பேச்சில் “யாரு நீங்க என்ன அதட்டுவீங்க.நடக்குறத பேசுங்க “என்று கணவரை பார்த்து பொங்கி சிரித்தாள்.

தன் மனைவியின் சிரிப்பை பார்த்து “ராசாத்தி இதெல்லாம் உன்னால் தாம்மா…. சாந்திக்கு அப்புறம் இப்போதாம்மா இது வீடாவே தெரியுது.இல்லேன்னா...ஒரே அமைதியா தான் இருக்கும்.பிரதாப் காலையில் போனால் நடுயிரவு தான் வீடே திரும்புவான்.”

தாத்தாவின் பேச்சை இடையிட்ட பேத்தி ஒரு மனைவியாக “ஏன்….? நடுயிரவு வரை வெளியில் என்ன வேலை….?” என்று கேள்வி எழுப்பினாள்.

பேத்தியின் கேள்வியில் ஒரு நிமிடம் தீனதயாளன் தடுமாறி போனார்.மனதுக்குள் என்ன பேசிக் கொண்டிருக்கோம் நம் மகன் வாழ்க்கையை நாமே பேசி கெடுத்து விடுவோம். போல என்று தன்னையே திட்டிக் கொண்டார்.பின் தன்னை சமளித்தவராய்…”எல்லாம் பிஸ்னஸ் மீட்டிங் தான்மா….நம்ம பிஸ்னஸ் பெரும் பாலும் வெளிநாட்டவருடன் தான். அதனால் அவர்களுக்கு பார்ட்டி என்று வைக்கும் போது நடுயிரவு வரை சென்று விடுகிறது.பிரதாப் தினம் எல்லாம் நடுயிரவு வரமாட்டான்.இது மாதிரி சமயங்களில் தான்.” என்று கூறி …

“சரிமா…நீ போய் ரெஸ்டு எடு நானும் உன் பாட்டியும் வந்ததில் இருந்து பேசிக் கொண்டே இருக்கிறோம்.நீ போம்மா… மாடியில் மூன்றாவது அறைத்தான் பிரதாப்போடது.” போம்மா என்று அனுப்பி வைத்தார்.

மினியும் ஒன்றும் சொல்லாமல் தன் தாத்தாவிடம் “என்னுடைய பேக்கெல்லாம் அவர் அறையில் வைச்சாச்சா…..தாத்தா” என்று கேட்டாள்.

மினியின் கேள்வியில் தீனதயாளனுக்கு ஒரு நிம்மதியே வந்தது.அவருக்கு எங்கே தன் பேத்தி தன் பையனுடன் ஒரே அறையில் தங்க மாட்டேன் என்று கூறிவிடுவாளோ...என்று பயந்திருந்தார்.மினியின் இப்பேச்சில் பயம் அகன்றவராய்…

“அப்போதே உன் தீங்ஸ் எல்லாம் அவன் ரூமில் வைச்சாச்சும்மா…”என சந்தோஷத்துடன் கூறினார்.

தாத்தாவின் மகிழ்ச்சியில் மினியின் மனம் நெகிழ்ந்து “நீங்க எதற்கும் கவலை படாதீங்க தாத்தா எல்லாம் நல்லதாவே நடக்கும்.” என்று அவருக்கு நம்பிக்கை அளித்து விட்டு தன் பாட்டியிடம் “நீங்கள் இன்னும் உங்கள் அறைக்கு செல்லாமல் இங்கே என்ன செய்கிறீங்க” என்று தன் பாட்டியையும் அவர் அறைக்கு அனுப்பி வைத்தாள்.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தீனதயாளன் தன் பேத்தியின் உச்சி முகர்ந்து. “போ ராசாத்தி நானும் கொஞ்சம் நேரம் தூங்க போகிறேன்” என்று தன் பேத்தியை ரூமுக்கு அனுப்பி வைத்தார்.

ரூமுக்குள் வந்த மினிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.வயதான தன் தாத்தா பாட்டி வருத்தப்பட கூடாது என்று மகிழ்ச்சியாய் வெளியில் காட்டிக் கொண்டாலும்.உள்ளுக்குள் பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.முன்பு சகுந்தலா பாட்டி பேசியது எல்லாம் இப்போது மினிக்கு விளங்கியது.

அதுவும் தன் தாத்தா பாட்டி இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணம் தன் தந்தை என்று கருதும் போது அவளால் நம்பக்கூட முடியவில்லை.பின் தனக்குள் முடிவு எடுத்தவளாய் ஒரு இரண்டு நாள் கழித்து தன் தந்தையை அழைத்து இதை பற்றி பேசவேண்டும் என்று முடிவு செய்தாள்.

இப்போது பேசினால் கண்டிப்பாக பிரச்சினை பெரியதாக தான் ஆகும்.இப்போதும்…. தன் தந்தை மீது நம்பிக்கை இருந்தது.இருவது வருடம் அவர் வளர்த்த வளர்ப்பும் அவர் பாசமும் தெரிந்தவள் ஆயிற்றே….தன் தந்தையின் செயலுக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று ஒரு மகளாய் அவருக்காக மனம் வாதடியது.

தந்தை விஷயம் இப்படி என்றால் தன் கணவர்.என்ன தான் அவர் பக்கம் நியாயம் இருந்தாலும் தன் தாய் தந்தையரிடம் தன்னை சேர்ப்பதுக்கே தன்னை திருமணம் செய்துக் கொண்டார்.என்பதை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எல்லாம் தவறையும் மன்னிக்க முடிந்த அவளால் காதல் இல்லாமல் தன்னை மணந்தான் என்பதனை தான் அவளால் மன்னிக்க முடியவில்லை.அதற்கு என்று அவனை விட்டு பிரியும் எண்ணமும் அவளுக்கு இல்லை.

என்னத்தான் தன் தாத்தா பாட்டியின் சந்தோஷம்.அதற்க்காக தான் இங்கு இருக்கிறேன் என்று வெளியில் கூறிக் கொண்டாலும்.அவள் உள் மனதுக்கு தெரியும் இவ்வளவு நடந்தும் நாம் அவனை விட்டு பிரிவது என்ன அதை பற்றி யோசிக்காததிற்க்கு காரணம் அவன் மேல் தனக்கிருந்த காதல் தான் என்று.

மினி இவ்வாறு நல்ல விதமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது வெளியில் சென்ற பிரதாப் ஒரு பார்க்கில் அமர்ந்துக் கொண்டு அசோக்கை அழைத்தான்.அவன் போன் எங்கேஜ்டு என்றே… வந்தது.பின் சிறிது நேரம் கழித்து அழைக்கலாம் என்று போனை அணைத்து வைத்தான்.

பார்க்கில் உள்ள அனைவரையும் சுற்றும் முற்றும் பார்த்தான்.பெரும்பாலோர் வயதானவர்களே...ஒரு சிலர் தனியாக வந்திருந்தனர்.ஒரு சிலர் தன் பேரனோ….பேத்தியயோ….அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.

தன் பேரப்பிள்ளையோடு வந்திருந்தவர்கள் அந்த பார்க்கில் உள்ள சருக்கு மரத்திலோ….சீசாவிலோ….விளையாட விட்டு அதனை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

அவற்றையெல்லாம் பார்த்தா பிரதாப்புக்கு தன் அப்பா,அம்மாவை,நினைத்து வருத்தமாக இருந்தது தன் பெற்றவர்களுக்கு தன் அக்காவின் குழந்தையை இவ்வாறு அழைத்து வரும் கொடுப்பினை இல்லையே என்று வருந்தினான்.

அவனுக்கு நன்றாக நினைவு இருக்கிறது.இருபத்தியொறு வருடத்திற்கு முன் அப்போது அவனுக்கு எட்டு வயது இருக்கும்.பள்ளியில் இருந்து வந்ததும் எப்போதும் போல் தன் அக்காவை கட்டி பிடித்ததும்.அதற்க்கு தன் மாமா தன்னை தள்ளியது.பின் நடந்த சண்டை என்று.

அவர் எப்போதும் அப்படி தான்.அக்கா தன்னை கொஞ்சும் போது எல்லாம் தன்னிடம் கடுமையாகவே நடந்துக் கொள்வார்.ஒரு நாள் இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த கொஞ்சல்ஸ் எல்லாம்.பின் எங்களுக்குன்னு ஒரு குழந்தை உருவாகினாலே போதும்.என்று அவர் தன்னை பார்த்த பார்வை.

அப்போது அவர் பேசிய வார்த்தைக்கும்,அவர் பார்த்த பார்வைக்கும் அர்த்தம் புரியவில்லை.ஆனால் வருடம் ஆக...ஆக...அவனுக்கு அனைத்தும் விளங்கியது.தன் அக்காவை திட்டம் இட்டு மணந்தது.பின் தங்களிடம் இருந்து பிரித்தது.

அதுவும் அவர் சொன்ன மாதிரி தன் அக்கா கருவுற்ற மறுநாளே…அவன் யோசனையின் முடிவில் இதெல்லாம் சொன்னால் தன் மனைவி புரிந்துக் கொள்வாளா….?என்று அவன் மனதில் கேள்வியாய் வந்து வீழ்ந்த வண்ணம் இருந்தது.

தன் மனதின் கேள்வியை தடை செய்யும் விதமாக தன் பக்கத்தில் அசைவை உணர்ந்து பார்த்தான்.மோனா பிரதாப்பை பார்த்து சிரித்துக் கொண்டே… “என்ன பிரதாப் தனியாக இருக்கிறாய்.என்ன போர் அடிக்கிறதா வாங்களேன் காப்பி ஷாப்பில் காபி குடித்துக் கொண்டே பேசலாம்.”என்ற மோனாவின் பேச்சை காதிலேயே….விழாதவாறு இருந்தான்.

மனதில் இவனை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிடலாம் என்று பார்த்த இப்படி நழுவினே இருக்கானே...என்று நினைத்துக் கொண்டே “ரொம்ப நாளா...டெல்லியிலேயே நீங்க இல்ல போல எங்க வெளிநாடுக்கு போயிட்டிங்களா…?”என்றதற்கு மட்டும் பதில் அளித்தான்.

“வெளிநாடு எல்லாம் போகவில்லை.சென்னை தான் போயிருந்தேன்.”என்று கூறினான்.

பிரதாப் தன்னை மதித்து பதில் அளித்ததில் மகிழ்ந்த மோனா “பிஸ்னஸ் விஷயமாக போனிங்களா…? பிரதாப்”

“இல்லை திருமணம் செய்ய போனேன்.”என்று கூறி தன் செல்போனில் வந்த மேசேஜை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

பிரதாப்பின் பேச்சில் குழம்பித்தான் போனாள் விளையாட்டுக்கு சொல்கிறானோ… என்று கருதக்கூட முடியவில்லை.அவன் அந்த மாதிரியெல்லாம் கிடையாது.அதுவும் தன்னிடம் கண்டிப்பாக ம்..ம்…

“விளையாட்டுக்கு தானே சொல்றிங்க பிரதாப்” என்ற மோனாவின் கேள்வியில்.

“முதலில் என்னை பெயரிட்டு அழைப்பதை நிறுத்து.பிறகு உன்னிடம் விளையாட நீ என் அத்தை பொண்ணோ….மாமா பொண்ணொ...இல்லை என் அக்கா பொண்ணோ இல்லை.அதுவும் இல்லாமல் ஆல்ரெடி எனக்கு என் அக்கா பெண்ணோடு திருமணம் முடிந்து விட்டது.அதனால் இனிமேல் என் மாமா பெண்...அத்தை பெண் வந்தா கூட நான் விளையாட மாட்டேன்.அப்படி இருக்கும் போது நீ யார்…? என்னிடம் விளையாடுவதற்க்கும் அனைத்திற்கும் என் மனைவி இருக்கிறாள்.”என்று அனைத்திலும் என்றதில் அழுத்தம் கொடுத்தான்.
 
:love::love::love:

அக்கா பொண்ணு தானே........
வச்சி செய்யாமல் இருக்கணும் உன்னை........
உனக்காக காத்துக்கிட்டிருக்காள்........ சீக்கிரமே வா........ இல்லைனா வெளியே நிக்கவச்சிடுவா........ உங்கம்மா போட்டுக்குடுத்தாச்சு நீ லேட்டா வர்றன்னு......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:
Top