Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 17 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---17

படுக்கையில் இருந்து கண் விழித்த பிரதாப் முதலில் பார்த்தது.பத்மினியிடம் முகத்தை தான்.ஆம் அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு நாள் கடந்து இருந்தது. இப்போது அவர்கள் ஹனிமூனுக்காக கோவாக்கு வந்திருக்கிறார்கள்.அவன் திருமணத்துக்கு அவன் செய்த வேலைகளை நினைத்து பார்த்தான்.பத்மினியை பார்த்து ஒரு மாதம் கடந்து இருக்குமா…..முதலில் பழி வாங்கத்தான் திருமணம் என்று தன் மனதுக்குள் கூறிக் கொண்டாலும் பத்மினியை நாம் டிவியில் பார்த்தவுடனே பிளாட் என்று இப்போது மனதார ஒப்புக் கொண்டான்.

ஜோசியரை பார்த்து வந்தவுடன் தான் செயல்பட்ட வேகமும், அசோக்கின் நட்பும்,மயில்வாகனம்,சந்தானம்,ஆகியோரின் உதவியும் இல்லாமல் கண்டிப்பாக இத்திருமணத்தை இவ்வளவு சீக்கிரமாகவும்,எந்த விதமான பிரச்சனையும் இன்றி முடிந்து இருக்காது.

அப்பா,அம்மா,இல்லாமல் திருமணம் செய்தது தான் மனதுக்கு சிறு கவலையாக இருந்தது. ஆனால் அதுவும் தன் தந்தை எங்கள் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கும்.மேலும் எனக்கு மிக பெரிய சந்தோஷமே…. பத்மினியை சீக்கிரம் திருமணம் முடிப்பது தான். என்று அவர் கூறியவுடன் அந்த சிறு கவலையும் அகன்றது…என்றாலும் நீ வருவதற்குள் உன் அம்மவிடம் சாந்தி பற்றி செய்தியை சொல்லி விடுகிறேன் என்றது தான் கொஞ்சம் பயமாக இருந்தது.

அவனுக்கு தெரியும் அம்மா சாந்தி அக்காவை பார்க்க எவ்வளவு ஏங்கினார்கள் என்று.இப்போது அவரை எப்போதும் பார்க்க முடியாது என்று தெரிந்தால் அதை தாங்கி கொள்வார்களா…..?என்று கவலைப்பட்டான்.

தன் திருமணத்தில் இரண்டு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தான்.ஒன்று பாதபூஜை சம்பிரதாயத்தை நடத்த விடவில்லை.இந்த சாங்கியம் வேண்டாம் என்று திட்ட வட்டமாக மறுத்து விட்டான்.தன் தாய் ,தந்தைக்கு செய்ய வேண்டிய மரியாதை மற்றவர்களுக்கு செய்ய அவனுக்கு விருப்பம் இல்லை.

மற்றொன்று தன் வாழ்க்கையை கேசவமூர்த்தி வீட்டில் தொடங்க அவன் விரும்பவில்லை.அதனால் கேசவமூர்த்தி எவ்வளவு தடுத்தும் திருமணம் முடிந்த அன்றே கோவாவுக்கு கிளம்பி விட்டான்.என்ன ஒன்று அந்த சகுந்தலா அம்மாவை சமாளிப்பது தான் பெரும் கஷ்டமாக இருந்தது.திருமணம் அவ்வளவு சீக்கிரம் வைத்துக் கொள்வதில் அவருக்கு துளி கூட விருப்பமே இல்லை.

ஆனால் அவரை சரிக்கட்டும் பொறுப்பை அவர் மகன் கேசவமூர்த்தியே எடுத்துக் கொண்டதால் நமக்கு வேலை மிச்சம் என்று எண்ணிக் கொண்டான். அவன் தன் எண்ணங்களில் மூழ்கி இருக்கும் போதே பத்மினி தூக்கம் கலைந்து திரும்பி,திரும்பி படுப்பதை பார்த்த பிரதாப் புது மணமகனாக அவளை நெருங்கி…

”என்ன மினி தூக்கம் வரலயா….என்று கேட்டவாரே அவள் கழுத்தில் தன் முகம் பதித்து தன் மூச்சு காற்றை இழுத்து விட்டவாரே மினி உன்னிடம் வித்தியசமா...எதோ வாசனை ம்...இப்போ தெரியுது உன் வேர்வையும் நேற்று நான் கட்டிய தாலியில் உள்ள மஞ்சளும்,மற்றும் உனக்கே உன்டான வாசனையும் தானே….”என்று தன் கண்டுப்பிடிப்பை மிக பெருமையாக் கூறினான்.

“அய்யோ எது தான் ரிஸர்ச் செய்றது என்று விவஸ்தையில்லையா….”என்று வெட்கத்துடன் கூறினாள்.நேற்று இரவுக்கு பிறகு பிரதாப்பை மிக நெருக்கமாக கருதினாள்.பத்மினி சட்டென்று யாருடனும் உரிமையுடன் பேச மாட்டாள். கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவள்.ஆனால் அந்த கூச்சத்தை நேற்று நடந்த சங்கமம் தகர்த்தது.

பத்மினியின் வெக்கம் பிரதாப்பை மீண்டும் அவளிடம் நெருங்க தூண்டியது.”ஏய்….இப்போ இந்த ரிசர்ச் தான் பண்ணனும்.வேறு ஏதாவது பண்ணினா தான் தப்பு.ரிசர்ச்சிலே சின்ன டவுட் அதை கிளையர் பண்ணிக்கவா… என்று கூறிக்கொண்டே நேற்று நள்ளிரவில் முடித்த கதையை…..மீண்டும் அதிகாலையில் தொடங்கினான்.

பிரதாப்பின் மனம் எப்போதும் இல்லாதா அளவுக்கு மிக லேசாக உணர்ந்தான்.பக்கத்தில் இருக்கும் பத்மினியிடம் “மினி நீ சந்தோஷமா….இருக்கியா….?”என்ற பிரதாப்பின் கேள்வியில் ஒன்றும் புரியாமல் “நீங்கள் என்ன சொல்றீங்க புரியலையே….”

“இல்லே பத்மினி இந்த பத்து நாள் எனக்கு போனதே தெரியலை.நான் இது வரை இவ்வளவு சந்தோஷமா இருந்ததே இல்லை.என் எட்டாவது வயதில் இருந்தே ஒரு வித இறுக்கத்துடன் தான் நான் இருப்பேன்.என் சுபாவத்தை மாற்ற அசோக் எவ்வளவோ முயற்ச்சி பண்ணான்.ஆனால் என்னால் தான் முடியவில்லை.பின் நான் தொழிலில் இறங்கியவுடன் என் தனிமையை போக்க வேறு வழியை நாடினேன்.”என்று கூறினான்.

பாவம் பத்மினிக்கு தன் தனிமையை போக்க வேறு வழி என்பதை தொழிலிலேயே அவன் முழுகவனத்தையும்,செலுத்தினான்.என்று புரிந்துக் கொண்ட பத்மினி “நீங்கள் உங்கள் கவனத்தை தொழிலிலேயே….செலுத்தியதால் தானே...உங்களுக்கு தொழிலில் இவ்வளவு முன்னேற்றம்.”என்று கூறியதை கேட்ட பிரதாப்புக்கு, இவளுடைய நிம்மதிக்காவது என் கடந்த காலம் இவளுக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டான்.

பிரதாப்புக்கு அனைத்தும் சரியாகவே நடந்துக் கொன்டிருந்தது.ஆணால் ஒன்று மட்டும் தான் அவனுக்கு எரிச்சலை வரவழித்தது.காலை ஆறு மணி ஆகக்கூடாது. கேசவமூர்த்தி போன் வந்து தான் அவர்கள் துயில் களைவதே…..

அவன் தன் கை வித்தையாலும்,தன் உதட்டின் திறமையாலும்,பத்மினியை வேறு எதை பற்றியும் சிந்திக்கவே விடாமல் செய்தான். அதில் ஒரளவுக்கு வெற்றியும் கிடைத்தது.ஆனால் இவர் போனால் தன் முயற்சி கெடுவதாக கருதினான்.

டெல்லி சென்றவுடன் அவள் சிம்மை மாற்றுவது தான் தன் முதல் வேலை என்று எண்ணிக் கொண்டான்.ஆம் அவன் பத்மினியை சென்னை பக்கமே அனுப்பும் எண்ணம் இல்லை.கோவாவில் இருந்து நேராக டெல்லிக்கு அழைத்து செல்வது தான் அவன் திட்டம்.

இவன் யோசனையில் மூழ்கி இருக்கும் போது அவன் தந்தையிடம் இருந்து போன் வந்தது.அதனை எடுத்து காதில் வைத்தவாரே பத்மினியை பார்த்தவாறு பால்கனிக்கு சென்று பேசினான்.அதில் தன் தந்தையின் பதட்டமான குரலை கேட்ட பிரதாப் “அப்பா என்னப்பா என்ன விஷயம் “என்று பதட்டதுடன் கேட்டான்.

பிரதாப்பின் பதட்டத்தை பார்த்த பத்மினி பால்கனிக்கு விரைந்து வந்து “என்ன பிரதாப் என்ன விஷயம்” என்று கேட்டதற்க்கு கை அசைவில் இரு என்று சொல்லி தந்தையின் பேச்சை கவனிக்க அதில் “பிரதாப் அம்மாவுக்கு உடம்பு முடியலை இரண்டு நாள் முன் நான் சாந்தியை பற்றி சொன்னேன். அதில் அவள் பிபி அதிகமாகி ஹாஸ்பெட்டலில் சேர்க்கும் அளவுக்கு சென்று விட்டது.இதோ இப்போது தான் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தேன்.”என்று தந்தை கூறிய செய்தி கேட்டதும்.

“அப்பா ஏம்பா….இதை முதலிலேயே சொல்லலே…”என்ற பிரதாப்பின் பதட்டத்தை பார்த்த பத்மினி என்னங்க மாமாக்கு என்ன என்று கேட்டதற்கு “கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா….”என்று எரிந்து விழுந்தான்.

இந்த பக்கம் அவன் பேச்சை போனில் மூலம் கேட்ட தீனதயாளன் “என்ன பிரதாப் எதற்கு இப்போ பத்மினியை திட்டுகிறாய்…கொஞ்சம் அமைதியா இரு இருக்கிற பிரச்சினையில் கூட நீயும் மேலும் பிரச்சினை சேர்க்காதே…”என்ற அதட்டலுக்கு ஏதும் சொல்லாமல் “சரிப்பா இப்போ உடனே கிளம்பி நாங்க அங்க வருகிறோம்.”என்று கூறி போனை வைத்தவுடன்.

பத்மினியிடம் சீச்சிரம் நாம் கிளம்ப வேண்டும்.எல்லாவற்றையும் எடுத்து பேக் பண்ணு நான் பிளைட் டிக்கட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்.என்று கூறிக் கொண்டே விரைந்தான்.

பத்மினி ஒரு நிமிடம் ஒன்றும் செய்யாமல் கட்டிலில் சிலையாக அமர்ந்தாள்.பிரதாப் தன்னை திட்டியதுக்கு கூட அவள் வருந்தவில்லை.பின்னாவது தன்னிடம் தன் தாயின் உடல் நிலையை பற்றி கூறுவான்.பின் அதனால் தான் டென்ஷனில் உன்னை திட்டும் படி ஆகிவிட்டது என்று தனக்கு விளக்கம் அளிப்பான் என்று அவள் எதிர் பார்த்தாள்.

பத்மினிக்கு பிரதாப்பின் போன் உரையாடளிலேயே விஷயம் அவளுக்கு விளங்கி விட்டது.ஆனால் பிரதாப் தன்னிடம் ஒன்றும் சொல்லாமல் எதோ கட்டளை போல் உரைத்து சென்றது தான் அவள் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

மேலும் தன்னிடம் தன் தாயின் உடல் நிலையை பற்றி கூறி தன்னிடம் ஆறுதல் பெறவில்லையே…என்பதும் பத்மினிக்கு வருத்ததை தந்தது.பின் தன் கவலை ஒதுக்கி பிரதாப் வருவதற்குள் அனைத்தும் எடுத்து வைக்க வேண்டுமே என்று விரைந்து செயல் பட்டாள்.

வெளியே சென்ற பிரதாப்புக்கு தன் தாயின் உடல் நிலைப் பற்றி கவலை ஒரு புறம் என்றால்.பத்மினியை எவ்வாறு சமாளிக்க போகிறோம். என்ற கவலையும் சேர்ந்துக் கொண்டது.சற்று நேரத்துக்கு முன்பு தான் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தேன். அதற்குள் இப்படி ஆகி விட்டதே என்று வருந்தினான்.
 
"கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு டிக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு
முக்கு டிக்கு தாளம்..........."
 
Last edited:
நினைத்தது நடந்தது
இனி பிரதாப் எப்படி சமாளிக்க போகிறானோ
 
Top