Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 15

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம்------15

பிரதாப் மனதில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் போதே அசோக் பிரதாப்பிடம் “ஆமாம் இந்த நேர்மையானவர்களுக்கு காலேஜ் டைமில் மவுண்ரோட்டில் என்ன வேலை..? என்று கேட்டு சொல்கிறாயா…..”என்ற அசோக்கின் பேச்சில் தான்….

கேசவமூர்த்தியிடம் பத்மினியையும், ஷாலியையும், காப்பற்ற தான் கூப்பிட்டதாக சொன்னது நினைவு வந்தது.பிரதாப் பத்மினியையும், ஷாலியையும் பார்த்து “ஆமாம் நீங்கள் ஏன் அங்கு வந்தீர்கள். அதுவும் உன் தந்தையிடம் கூட சொல்லாமல்…”என்று வினாவினான்.

அவனுக்கு பத்மினி மற்றும் ஷாலினியை தவறாக ஒரு சதவீதம் கூட நினைக்க வில்லை.ஆனால் தன் வீட்டில் சொல்லாமல் சென்றது அவனுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.கேசவமூர்த்தியை அவனுக்கு பிடிக்காது தான். ஆனாலும் பத்மினி அவரிடம் சொல்லாமல் வந்தது அவனுக்கு சரியாக பட வில்லை.

அதுவும் பெண்களின் பாதுகாப்பு இல்லாத நிலையில் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டாள்.அதனால் ஒரு வித அதட்டலோடு தான் கேட்டான்.பத்மினி ஒன்றும் சொல்லாமல் ஷாலினியையே பார்த்தாள்.

அசோக்குக்கு சட்டென்று தெரிந்து விட்டது. இதற்கு மூலக்காரணம் ஷாலினி தான் என்று. ஏன்…?பிரதாப்புக்கும் தெரிந்துவிட்டது. இந்த ஷாலினி தான் ஏதோ செய்து இருக்கிறாள் என்று ….ஆனாலும் பிரதாப் ஷாலினியை ஒன்றும் சொல்லாமல் அசோக்கை பார்த்தான். என்ன தான் அசோக்கின் நெருங்கிய நண்பன் என்றாலும் தான் கேட்பதை விட அசோக் தான் கேட்க வேண்டும் என்று கருதியதால் தான் அசோக்கை பார்த்தான்.

சட்டென்று புரிந்துக் கொண்ட அசோக் ஷாலினியிடம் “ஏன் பத்மினியை அங்கு அழைத்துக் கொண்டு நீ சென்றாய் ….”என்று நேரிடையாகவே கேட்டான்.”

ஷாலினியும் மூடி மறைக்காமல் “சுல்தான் பார்க்க போனோம்” என்று மொட்டையாக சொன்னால்… என்ன தான் நம்பிக்கை அது… இது… என்று நம் மனதில் இருந்தாலும் மனது ஒரு குரங்கு தானே அது வேலையை அது சரியாக செய்தது.

பிரதாப், அசோக் ஒரே நேரத்தில் ஒன்றாக “யார்..?அந்த சுல்தான் என்ற இருவரின் ஒரே சமய கேள்வியில் அவர்களின் எண்ணபோக்கை புரிந்துக் கொண்ட ஷாலினி ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள் என்றால்….

பத்மினி அவர்கள் தவறாக நினைப்பதை தாங்க முடியாமல் சட்டென்று.. “சுல்தான் படம் என்று சட்டென்று உரைத்தாள்.” பின் சிறியதான குரலில் “ஷாலினிக்கு சல்மான்கான் என்றால் மிகவும் பிடிக்கும்.நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்.ஆனால், அவள் தான் முதல் நாள் முதல் காட்சி பார்த்ததே இல்லை.நீயும் திருமணம் செய்துக் கொண்டாள். இப்படி…. எல்லாம் வர முடியாது என்று கூறினாள்.அதனால் தான் காலேஜை கட் அடித்து சென்றோம். ஆனால் இதற்கு முன் இது போல் நாங்கள் சென்றதே கிடையாது.”என்று கூறி முடித்தாலும் அவள் மனது முரண்டியது.அது எப்படி…? தன்னை தவறாக எண்ணலாம் என்று.

பிரதாப்புக்கும் சட்டென்று அவள் முகம் மாறியது என்னவோ போல் ஆனாது. அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர “ஏன் ஷாலினிக்கு மட்டும் தான் சல்மான்கானை பிடிக்குமா...உனக்கு பிடிக்காதா….?என்ற கேள்வி எழுப்பி அவனே அவனுக்கு ஆப்பு வைத்துக் கொண்டான்.

இந்த கேள்விக்கு பத்மினிக்கு பதிலாக ஷாலினி சட்டென்று “அவளுக்கு சல்மான்கான் என்பது இல்லை அவளுக்கு யாரையும் பிடிக்காது”என்று பாதியிலேயே தன் பேச்சை நிறுத்தினாள்.பிரதாப்பை எப்படி கூப்பிடுவது என்ற குழப்பத்தில்…..

பிரதாப் என்னை அண்ணா என்றே கூப்பிடு என்று எடுத்துக் கொடுத்தான்.பின் ஷாலினியும் பத்மினிக்கு ஏன்…..? அவளுக்கு யாரையும் பிடிக்காது என்ற அரிய கருத்தை எடுத்துரைத்தாள். “ஏன் என்றால் நடிகர் என்றாலும் அவரும் ஒரு ஆண் மகன் தான்.இப்படி நினைப்பது தன் வருங்களா….கணவருக்கு செய்யும் துரோகம் என்பது அவள் எண்ணம்.”

பிரதாப்புக்கு என்ன சொல்வது என்று புரிய வில்லை.ஒரு நடிகனை நினைப்பது கூட தவறு என்று நினைக்கும் அவள் எங்கே…..நான் எங்கே….. நம் வாழ்கையில் என் கடந்த காலம் என் எதிர் காலத்தை பாதிக்குமோ… என்று கவலை கொண்டான்.

அவனின் மனநிலையை அறிந்த அசோக் சட்டென்று சூழ்நிலையை தனதாக்க முயன்றான்.”ஷாலினியிடம் கோபம் போல் காட்டி நீ கெடுவதும் இல்லாமல் காலேஜ் கட் அடித்து பத்மினியையும் அழைச்சிட்டு போயிருக்கே…. நீ கெட்டதும் இல்லாமல் அவளையும் கெடுக்க பார்க்கிறாயா…..?”என்று பிரதாப்பின் கவனத்தை திருப்பதான் அவன் அவ்வாறு கூறினான்.

ஆனால் ஷாலினியோ இதற்கு எல்லாம் நான் ஆளில்லை என்ற ரீதியில் “சரி அப்போ உனக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்.நீ உனக்கு ஏத்தா மாதிரி அடக்கமான பொண்ணா….சினிமாவுக்கு எல்லாம் செல்லாதா….பொண்ணா முடிந்தா காலேஜ் வாசலை தாண்டாத பொண்ணாவே நீங்க பார்த்துக்குங்க… எனக்கும் இந்த பழம் வேண்டாம்.”என்று கூறி திருப்பினாள்.

அசோக்கோ சட்டென்று அவள் கைப்பற்றி “ தாயே எனக்கு வாழ்வு கொடு . நான் என் வேலை வெட்டி எல்லாம் விட்டுக் கூட உன்னை சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறேன்”என்று சாட்சாங்கமாக வீழ்ந்தான்.

இந்த பேச்சால் பிரதாப் தன் எண்ணத்தில் இருந்து விடுபட்டு ஷாலினியை பார்த்து சிரித்தான்.பின் அசோக்கிடம் “இப்போது ஷானியிடம் என்ன ?சொன்னே….வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு….சினிமாவுக்கு போவே...அதுவும் என் எதிரிலேயே தைரியமா…. அதை சொல்கிறாய்…”என்ற பிரதாப்பின் பேச்சுக்கு ஷாலினி அப்போதும் விட்டு கொடுக்காமல்…..

“ஆமாம் அண்ணா இவருக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் உங்கள் எதிரிலேயே இப்படி சொல்வார்.முதலில் அவரை வேலையை விட்டு நிறுத்துங்கள்.”என்று ஷாலினி கூறியதுக்கு….

அசோக்….”பின் நான் உன்னை கல்யாணம் செய்துக் கொண்டு உனக்கு மூன்று வேலை கஞ்சி எப்படி ஊத்துவது.அது மட்டும் அல்லாமல் உன்னை சினிமா அழைச்சிட்டு போறதுக்காவது பணம் வேண்டாமா…..?என்றதற்கு ….

அதற்கும் கூலாக” எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.இப்போது கூட சென்னையில் ஒரு ஒட்டலை வாங்கி இருக்கிறார்.டெல்லியில் ஒரு பெரிய மால் கூட உள்ளது.அவர் நமக்கு திருமணமும் செய்து வைத்து….அந்த ஒட்டலையும் எனக்கே கொடுத்துடுவார்.அவ்வளவு நல்லவர்…..அதனால், உங்க கஞ்சியெல்லாம் எனக்கு வேண்டாம்.சினிமா பத்திக் கூட நீங்க கவலை படவேண்டாம். அவர் மாலிலேயே….மூன்று ஷோவையும் பார்த்திடுவேன்.”என்று கூறி புன்னகைத்தாள்.

பிரதாப் சிரித்துக் கொண்டே “ எந்த பால் போட்டாலும் அடிச்சிடுறடா…..உன் தனிமை போக்க இவள் தான் உனக்கு சரியான ஜோடி என்று கூறி”ஷாலினியின் தலையில் கைய் வைத்து உச்சி முகர்ந்தான்.

பின் “ஷாலினி நீ கிண்டலுக்கு தான் ஒட்டலை உனக்கு கொடுப்பதை பற்றி பேசினாய்… என்று எனக்கு தெரியும்.ஆனால் உண்மையிலேயே…. அசோக்குக்கு திருமணம் ஆனாதும் அவனுக்கென டெல்லியில் உள்ள என்னுடைய ஒரு ஒட்டலை அவனுக்கே கொடுப்பதாக நான் முன்பே தீர்மானித்திருந்தேன்.ஆனால் உனக்கு சென்னை விருப்பம் என்றால் நான் சென்னையில் உள்ளதையே கொடுத்து விடுகிறேன்.”என்று கூறினான்.

அவன் கூறியதை கேட்ட ஷாலினிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.”அண்ணா நான் சும்மா தான் என்று அவள் பேச்சை தொடரவிடாமல்….”எனக்கு தெரியும் அவனை கலைய்க்க தான் அப்படி பேசினாய்…. என்று. ஆனால்,நான் உன்னிடம் சொன்னது உண்மையே...மேலும் உன்னை அண்ணன் என்று கூப்பிட சொன்னது ஒரு பார்மால்டிக்கு கிடையாது.உள்மனதோடு தான் சொன்னேன்….”

.என்ற பிரதாப்பின் பேச்சில் ஷாலினி,பத்மினி இரண்டு பேரும் நெகிழ்ந்து போயினர்.ஏன்…? பத்மினி ஷாலினி கூட சிறிய வயதில் இருந்தே தோழிகள் தான். ஆனால் இவர்கள் அளவுக்கு நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

ஷாலினி பிரதாப்பிடம் “ கண்டிப்பாக நீங்க எனக்கு அண்ணா தான்”.என்று கூறி பிரதாப்பின் கையை பிடித்துக் கொண்டாள்.

“அப்போ இந்த அண்ணா என்ன சொன்னாலும் கேட்பியா…?என்ற கேள்வியில்….

“முதலில் கேளுங்க… நான் எந்த சென்டிமெண்டுக்கும் லாக் ஆக மாட்டேன்.அண்ணான்னு சொன்னவுடனே நீங்க என்ன சொன்னாளும் நாங்க கேட்டுறுவோமா….அந்த சீன் எல்லாம் இங்க இல்லேம்மா….. நாங்களும் ராமாயணம் பார்த்து இருக்கோம்… அதில் தசரதன் தன் மனைவியிடமே வரம் கொடுத்து மாட்டிக்கொண்டது எனக்கு தெரியும்.”என்று எப்போதும் பேசும் ஷாலினியாக மாறினாள்.

பிரதாப் … “அம்மாடி உனக்கு அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த்தில்லை …இப்போ நீ இருப்பது போல் எப்போதும் ஜாலியாக பேச வேண்டும் அவ்வளவு தான்.”என்ற பேச்சில் ஷாலினி ,பத்மினி இரண்டு பேரும் குழம்பி விட்டனர்.

பிரதாப் மேலும் “அசோக் சிறு வயதிலேயே பெற்றோரை பறிகொடுத்து விட்டான்.நான் எவ்வளவு தான் நெருங்கினாலும் அவன் ஒரு எல்லை கோட்டோடு தான் பழகுவான்.இப்போது சென்னை வந்து தான் கொஞ்சம் அதிக உரிமையுடன் பழகுகிறான்.ஆனாலும் உறவு என்ற அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியாது.அந்த இடத்தை உன்னால் மட்டும் தான் நிரப்ப முடியும்.நீ எப்போதும் இப்படி சந்தோஷமாக பேசி நீயும், மகிழ்சியாக…. இருந்து அவனையும் மகிழ்சியாக…. வைத்துக் கொள்ளவேண்டும்.”என்று கூறினான்.

பிரதாப் பேசியவுடன் அசோக் தாவி வந்து அவனை அணைத்துக் கொண்டான்.அசோக்குக்கு பிரதாப் தன் மேல் அன்பு வைத்திருக்கிறான் என்று தெரியும்.ஆனால் தன் தனிமையையும் புரிந்தது தான் அவனுக்கு ஆச்சரியம்.

பத்மினிக்கு பிரதாப்பை நினைத்தாள் மிக பெருமையாக இருந்தது.நட்புக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை நினைத்து மகிழ்ந்தாள்.மேலும் அசோக்கும்,ஷாலினியும் பழகுவதையும் தெரிந்துக் கொண்ட பத்மினி தன் திருமணத்தால் நாமும் தன் தோழியை பிரியதேவை இல்லை.தன் தந்தையையும்,பிரியதேவை இல்லை. தன் மனதுக்கு பிடித்த மாப்பிள்ளை என்று அகம்மகிழ்ந்து போய்யிருந்தாள்.தன் திருமணத்தை ஆவாளுடன் எதிர் பார்த்தாள்.

கேசவமூர்த்தி தன் நண்பர் விக்டரிடம் பேசிவிட்டு இவர்களிடம் வந்து சேர்ந்தார்.அப்போது பத்மினியின் முகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மலர்ந்திருப்பதை பார்த்து தான் எடுத்த முடிவு சரி தான் என்று எண்ணிக் கொண்டார்.

பிரதாப்பிடம் “நாளை உங்கள் பெற்றவர்களிடம் போனில் பேச முடியுமா…?”என்ற கேசவமூர்த்தியின் கேள்வியில்…..

“கண்டிப்பாக பேசலாம் சார்…”

கேசமூர்த்தி “என்ன சார் என்று வெளி ஆளை அழைப்பது போல் உள்ளது.மாமா என்று அழையுங்கள் என்ற வார்த்தையில்” பிரதாப்பின் நினைவு இருபது ஆண்டுக்கு முன் சென்றது.ஒரு வித அமைதியுடன் கேசவமூர்த்தியை பார்த்தான். பின்பு பத்மினியை பார்த்தான். பத்மினியை பார்த்ததும் அவளுக்காக தான் அழைத்து தான் ஆகவேண்டும்.

“சரி ம...மாமா நீங்கள் ஜோசியம் பார்க்க வேண்டும். என்று சொன்னீர்களே அதையும் நாளையே… பார்த்து விடலாம்.எங்கு என்று சொன்னால் …நாங்கள் நேரிடையாக அங்கயே வந்து விடுகிறோம்.”என்ற பிரதாப்பின் பேச்சு சரி என்று பட்டதால் கேசவமூர்த்தி ஜோசியரின் இடம் சொல்லி அங்கேயே வந்து விடுமாறு கூறினார்.

பிரதாப்புக்கு இது போததா…..”சரி மாமா”என்று கேசவமூர்த்தியிடம் விடைப்பெற்றார்.பத்மினியிடம் தலை அசைத்து விடைப்பெற்றான்.

பத்மினியும் ஒரு புன் சிரிப்புடன் தலை அசைத்தாள்.பின் அசோக் கேசவமூர்த்தியிடம் “ஷாலினியை தங்களுடன் அழைத்து செல்கிறோம். அவர்கள் வீட்டில் விட்டு விடுகிறோம் என்று அனுமதி கேட்டு அழைத்து சென்றான்.

பிரதாப் அசோக்கின் அழைப்பில் ஏதாவது காரணம் இருக்கும் என்று கருதி அவன் ஏதும் சொல்லாமல் காரை எடுத்தான்.

பிரதாப் எதிர் பார்த்த மாதிரியே அசோக் கார் அருகில் வந்ததும்.பிரதாப்பிடம் “காரை நீ ஒட்டுக்கிறாயா…..?நானும் ஷாலினியும் பின்னால் அமர்ந்து வருகிறோம்.”என்ற அசோக்கின் பேச்சிக்கு எந்த எதிர் கேள்வியும் கேட்க்காமல் சரி என்று தலை அசைத்தான்.

பிரதாப்புக்கு அசோக்கை பற்றி தெரியும் ஷாலினியிடம் ஏதோ பேச தான் தங்களுடம் அழைத்து வந்து இருக்கிறான் என்று…..

ஆனால் இது தெரியாத ஷாலினிக்கு என்னவோ போல் ஆகி விட்டது. “என்ன அசோக் அண்ணா என்ன…? நினைத்துக் கொள்வார்.”என்று வெக்கப் பட்டுக் கொண்டே கூறினாள்.

ஷாலியின் பேச்சை கேட்ட அசோக் “அந்த சீன்னெல்லாம் இப்போ இல்லேமே….இன்னும் டைம் இருக்கு அலையாதே”என்ற அசோக்கின் பதிலில் …

ஷாலினி “இரு அப்புறம் உங்களை வைத்துக் கொள்கிறேன்”

“அது தான் நானும் சொல்றேன் அப்புறம் வைத்துக் கொள்ளலாம்.இப்போது முக்கியமான விஷயம் பேசணும் பின்னால் ஏறு”என்று கூறிக் கொண்டே ஷாலினிக்கு காரின் பின் கதவை திறந்து வைத்தான்.

ஷாலினியும் முறைத்தவாரே….ஏறி அமர்ந்தாள்.டிரைவர் சீட்டில் இருந்த பிரதாப்புக்கு இவர்களின் பேச்சை கேட்டு சிரிப்பும் மகிழ்ச்சியுமாக இருந்தது.அவன் வாழ்நாளில் அசோக்கை இவ்வளவு மகிழ்சியோடு எப்போதும் பார்த்தது இல்லை. அவன் மகிழ்ச்சி இப்படியே நீடிக்க…. வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்.

பின் காரை எடுத்த பிரதாப் சிறிது தூரம் சென்றதும். அசோக்கிடம் “எங்காவது காரை நிறுத்தட்டுமா…..நான் சிறிது நேரம் காத்திருக்கிறேன். நீ ஷாலினியிடம் பேசு”என்று கூறினான்.

பிரதாப்பின் பேச்சைக் கேட்ட அசோக் அவன் அந்தஸ்த்து என்ன? அதுவும் அவன் எப்போதும் ஸ்டேட்டஸை பார்ப்பவன். தன்னிடம் மட்டும் தான் அவன் பார்க்க மாட்டான்.ஆனால் இப்போது தனக்காக காரை டிரைவ் செய்ததோடு மட்டும் இல்லாமல்.தனக்காக ஷாலினியையும் ஏற்றுக் கொண்டு நாங்கள் தனிமையில் பேச தான் காத்து இருக்கிறேன் என்று கூறியது கேட்டு அகமகிழ்ந்து போனான்.

“வேண்டான் பிரதாப் உனக்கு தெரியாததை நாங்கள் எதுவும் புதியதாக பேசப்போவது இல்லை.நீ காரை எடு நாங்கள் காரிலேயே பேசிக் கொள்கிறோம் “என்று கூறினான்.

என்ன தான் அசோக் கூறினாலும் ஷாலினி என்ன நினைப்பாள் என்று ஷாலினியை பார்த்தான். “அண்ணா...வண்டியை எடுங்கண்ணா...நீங்கள் என்னை இறக்கி விட்டால் என்னை வெய்யிலில் தான் வாட வைப்பார்.அதற்கு இந்த ஏசி காரில் வைத்தே பேசிக் கொள்கிறோம்.”என்று கூறினாள்.

பின் என்ன..? அவளுக்கு இந்த அழுவாச்சி சீனெல்லாம் செட்டாகாது.இருந்தாலும் சூழ்நிலை கருதி அவளும் தன்னை சாதாரணமாக காட்டிக் கொள்ள படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறாள்.இன்னும் என்றால் ….அவளும் எவ்வளவு நேரம் தான் அடக்கமாகவே காட்டிக் கொள்ள முடியும்.

பிரதாப் சிரித்துக் கொண்டு “ உனக்கு ஒகே என்றால் சரி என்று காரை எடுத்தான்.கார் சிறிது தூரம் சென்று கூட அசோக் ஒன்றும் பேசவில்லை.ஷாலினிக்கு வந்ததே பார் கோபம்.”அண்ணா...வண்டியை நிறுத்துக்கள்.”

அசோக் “ஏன் ஷாலினி வண்டியை நிறுத்த சொல்ரே…..பேசணும் தானே...உன் கிட்டே சொன்னேன்.”

“ஆமாம் பேசணும் தான் சொன்னீங்க எங்கே …..பேச்சு தான் வரமாட்டேங்குதே…..இதற்கே இந்த இழுவேன்னா….உங்களை கல்யாணம் பண்ணுவதை பற்றி நான் இன்னும் ஒரு தடவை நல்ல யோகிக்கணும் போலவே…..”

“அய்யோ ஷாலினி சட்டென்று அந்த முடிவை எடுத்துடதே ….நான் உன்னிடம் பேச வந்ததே உன் குடும்பத்தை பத்தி கேட்க தான்.”

“ஏன் எவ்வளவு தெறும் என்று தெரிஞ்சிக்கவா….”

“ஷாலினி நான் சீரியஸாக பேசணும்.உன் குடும்பத்தை பற்றி முதலில் சொல்…?”

“எனக்கு ஒரு அப்பா….”அசோக்கின் பார்வையில் தன் விளையாட்டு தனத்தை கைவிட்டு. அப்பா ஒரு தனியார் கம்பனியில் அக்கவுண்டரா இருக்கிறார்.அம்மா ஸ்கூல் டீச்சரா இருக்காங்க…..ஒரு அக்கா பி.இ முடிச்சிட்டு வேலைக்கு முயற்ச்சி பண்ணிட்டு இருக்கிறாள்.என் அப்பா அவளுக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளையை பார்த்து கொண்டு இருக்கிறார்.ஒரு தம்பி பிளஸ் டூ படிக்கிறான்.இது தான் என் குடும்பம்.இப்போ சொல்லுங்க எதற்க்கு கேட்டீங்க….”

“நான் திருமணம் செய்து கொள்ளும் பெண் குடும்பத்தை பற்றி நான் தெரிஞ்சிக்க வேண்டாமா…”

“என்னது நீங்க என்னை திருமணம் செய்ய போறீங்களா….?ம்… முதலில் நீங்கள் உங்களின் லவ்வையே இன்னும் ஒழுங்கா சொல்லலே….அப்புறம் தானே திருமணம்.”என்ற ஷாலினியின் பேச்சில்.

“சொன்னா தானா….லவ் என்பது நீ பார்க்கும் சினிமாவில் இருப்பது போல் இருக்காது. நிஜத்தில் வேறு மாதிரி வாழ்க்கைத்தான்.முதலில் நான் சொல்வதை கேள்…?நான் எப்படி ஆராம்பிப்பது” என்று இழுத்தவாறு பிரதாப்பை பார்த்தான்.

பிரதாப்புக்கு புரிந்து விட்டது.பிரதாப் அசோக்கை பார்த்து “உனக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தோன்றுக்கிறதோ… சொல்”என்றான்.

அசோக் ஷாலினியிடம் “ஷாலினி இப்போ உன் அக்காக்கு மாப்பிள்ளை பார்கிறதா...சொன்னலே...முதலில் அவர்கள் திருமணம் முடியட்டும்.அது வரை நமக்கு டைம் இருக்கு.பிரதாப்பின் திருமணத்துக்கு பிறகு நான் டெல்லிக்கு போய்விடுவேன்.நான் ஒன்று மட்டும் சொல்கிறேன்.எது நடந்தாலும் என்னை நீ நம்பவேண்டும்.பிரதாப்பையும் நம்பவேண்டும்.”என்ற அசோக்கின் பேச்சில் முதலில் பேசியதாவது கொஞ்சம் புரிந்தது.ஆனால் கடைசியில் சொன்ன பிரதாப்பையும் நம்பனும் என்றதை தான் சுத்தமாக புரியவில்லை.

இருந்தாலும் தலையை...தலையை...ஆட்டி வைத்தாள்.பின் புரியவில்லை என்றால் முதலில் இருந்து ஆராம்பித்தால் கேட்கும் பொறுமை அவளுக்கு இல்லை. இது வரை இவ்வளவு பொறுமையாக கேட்டதே அதிசயம்.

இந்த இருவர்களின் எண்ணம் ஈடெறுமா……
 

Advertisement

Latest Posts

Top