Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி -5

Advertisement

Ramya Anamika

Well-known member
Member
?கைதி -5?


"டீ காரரே!! டீய குடுத்துட்டு கிளம்புங்க" என்றான் ராகவ்.

மூவருக்கும் டீயை கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சென்றார்.
"மும்பை டிரெயின் ஊட்டி போயிட்டா டா போகும்?" என்றான் கிண்டலாக.

"ஒருவேளை மேடம் போற ட்ரெயின் மட்டும் அந்த மாதிரி ரூட்ல விட்டுறாங்களோ! என்னவோ!! டா விக்ரம்" என்றான் கிண்டலாக. மிருணா முழித்துக் கொண்டே நின்றாள்.

"உட்காருங்க உட்கார்ந்து டீய குடிங்க" என்றான் விக்ரம். மிருணா எதுவும் பேசாமல் உட்கார்ந்து டீ குடித்தாள்.மற்ற இருவரும் அவளுக்கு எதிரே உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தனர்.

"பாத்தியாடா விக்ரம் நம்ம கண்ணுலயே மண்ண தூவிட்டு தப்பிச்சு போலாம்னு பார்க்குறத?" என்றான் மிருணாவை பார்த்து கொண்டே.

"விடு ராகவ் மேடம் உங்க நேம் என்ன???".

மிருணா முறைப்புடன்,"முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட நேம் சொல்ல முடியாது" என்றாள் கோபமாக.

"அப்ப நான் எழுந்து நின்று முன்ன பின்ன திரும்பி காட்டுறேன், இல்ல பக்கத்துல வந்து காட்டுறேன், அப்பவும் தெரியலனா ஹாஸ்பிடல் தான் போகணும், நேம் கேட்டா நேம்ம சொல்ல மாட்டீங்களா நான் போலீஸ் என்கிட்டயே வா!!" என்றான் ராகவ்.

மிருணா முறைத்துக் கொண்டே,"சோ வாட் நீங்க போலீஸா இருந்தா பெயர சொல்லனுமா?? என்ன???" என்றாள் புருவம் உயர்த்தி.

"ராகவ் வெளில நேம் போட்டுருந்தாங்களே ஸ்ரீஹரிணின்னு அதுதான் மேடம் ஓட பெயர், சரி உங்க போன் நம்பர் குடுங்க".

"எதுக்கு கேக்குறீங்க???" என்றாள் வேகமாக.

"உங்கள ஃபாலோ பண்ணிட்டு வந்தாங்கல்ல அவங்கள உள்ள தள்ளியாச்சு அத பத்தி உங்ககிட்ட சில விஷயம் நாளைக்கு கேக்கணும் அதுக்கு தான், போன் நம்பர் வேணும்" என்றான் ராகவ் விளக்கமாக.

"ஓ..." என்று பழைய நம்பரை கொடுத்தாள்.

டிரெயின் கிளம்புவதற்கான அறிவிப்பு வந்தது. விக்ரம் வேகமாக இருவரின் பெயர், போன் நம்பரையும் ஒரு சிறிய பேப்பரில் எழுதி அவளிடம் நீட்டினான்." இதுல எங்க ரெண்டு பேரோட நேம் அண்ட் போன் நம்பர் இருக்கு ரீச்சானதும் சொல்லுங்க" .

"இல்ல நானே போயிப்பேன் எனக்கு யார் உதவியும் தேவையில்ல" என்றாள் முகத்தை திருப்பி.

விக்ரம் அவள் கையை பிடித்து சீட்டை வைத்து," எல்லா நேரமும் தனியா எல்லாத்தையும் சமாளிக்க முடியாது, கண்டிப்பா ஒரு துணை தேவைப்படும் இது யூஸ் ஆகும் வச்சுக்கோ!!!" என்று தந்து விட்டு கையை விடுவித்தான்.

"விக்ரம் டிரெயின் கிளம்ப போகுதுடா வா போலாம் பத்திரமா போயிட்டு வாமா".

"ம்ம்..." என்று தலையை ஆட்டினாள்.

"நீங்க பாட்டுக்கு வெளிய இறங்கி தண்ணி வாங்குறேன் அது வாங்குறேன் இது வாங்குறேன்னு இறங்காதீங்க" என்றான் விக்ரம்.

"ஹலோ நான் ஒன்னும் குழந்தை இல்ல..." என்றாள் கோபமாக.

"அதனாலதான் அவன் சொல்றான் குழந்தைனா பயந்து எங்கேயும் போகாது நீங்க அப்படியா???" என்றான் கிண்டலாக.

"நீங்க ரெண்டு பேரும் என் கூட வர ஐடியால இருக்கீங்களா?? என்ன???" என்றாள் கோபமாக.

"ஏன்???" என்றனர்.

"சிக்னல் போட்டுட்டாச்சு".

"ஓ... பாய்.. டேக் கேர்.." என்று இருவரும் இறங்கி ஜன்னல் பக்கம் வந்தனர்.

"அப்புறம் ஸ்ரீ ஹரிணி" என்றனர் இருவரும் கோரசாக.

"அய்யாசாமி காவல்துறை என் நண்பன்னு புரிஞ்சுகிட்டேன் எடத்த காலி பண்ணுங்க " என்று கையெடுத்துக் கும்பிட்டாள். இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர். ட்ரெயின் மெதுவாக நகர்ந்தது.

"இம்சைகள் சரியான ஜொள்ளு பார்ட்டி" என்று திட்டிக்கொண்டே விக்ரம் கொடுத்த பேப்பரை ஜன்னல் பக்கம் தூக்கி போட்டாள்.

அது காற்றில் பறந்து இவர்கள் காலடியில் விழுந்தது ராகவ் அதனை எடுத்துப் பார்த்து சிரித்துக்கொண்டே,"நீ எழுதுன பேப்பர காத்துல பட்டம் விட்டுட்டா டா" என்றான் வயிற்றை பிடித்து சிரித்துக்கொண்டே.

"டேய்!!! உன் அண்ணிய அவ இவன்னு சொல்லாத" என்றான் கிண்டலாக.

"தம்பி பொண்டாட்டிய யாராச்சும் அண்ணின்னு கூப்பிடுவாங்களா டா??" என்றான் இவனும் கிண்டலாக.

"உன்னைய பார்த்த போலீஸ்னு யாராச்சும் நம்பவே மாட்டாங்க டா, இந்த யூனிபார்ம், ஜிம் பாடி இருக்கதுனால தப்பிச்சுட்ட, சரியான சிரிப்பு போலீஸ்" என்றான் கிண்டலாக.

"ஏன் சொல்ல மாட்ட? என்னைய ஹீரோன்னு நானே சொல்ல வேண்டியதா இருக்கே!! நீ இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ டா" என்றான் பொய்யான சோகத்துடன்.

"ஆஹா... ஹீரோ நீயா ம்ம்.. அடிக்கடி சொல்லுங்க ஹீரோ சார் அப்பதான் நான் நம்புவேன்" என்றான் நக்கலாக.

"சரிடா போதும் ரொம்ப ஓட்டாத நாம மத்த போலீஸ் மாதிரி இருக்கக் கூடாதுன்னு ஏற்கனவே முடிவு பண்ணுனது தானே!! நம்ம கிளையண்ட் கிட்ட இருந்து முன்னாடியே கால் வந்துருச்சுடா, அவங்க கிட்ட பேசணும்".

"ம்ம்... சரி ராகவ் பேசலாம்" என்றான் யோசனையுடன்.

"இந்த ட்ரெயின்ல போற பொண்ணுக்கு மனசுல பெரிய விஜயசாந்தின்னு நினைப்பு டா போனா போகுதுன்னு அந்த பசங்க கிட்ட இருந்து காப்பாற்றினா!! ரொம்ப பண்ணுதுல? இந்த திமிரு கூட ஒரு அழகு தான்" என்றான் சிரிப்புடன்.

"ராகவ் அண்ணிய சைட்டடிக்காத" என்றான் கிண்டலாக.

"தம்பி ஒய்ஃப்ப என்னடா சொல்லுவாங்க??? என்னமோ சொல்லிட்டு போறாங்க, தம்பி ஒய்ஃப்ப சைட் அடிக்காத" என்றான் இவனும் கிண்டலாக சிரித்துக்கொண்டே.

"உன்ன... வாடா" என்று பின்னங்கழுத்தில் கை வைத்து இழுத்து சென்றான்.

'இந்த ரெண்டு மரத்துக்கு அந்த நச்சுப்பாம்பு கூட பரவால்ல போல இம்சை... ஜொல்லு பார்ட்டி.. இவனுங்களால நான் கிளம்புனத மெசேஜ் கூட பண்ணல, முதல்ல மெசேஜ் பண்ணனும் ' என்று தனக்குள்ளயே புலம்பி தலையில் அடித்துக்கொண்டு மூவருக்கும்(அமர், முகில்,விஷா) தகவல் சொன்னாள். விஷா இவர்கள் மூவரும் ஃப்லைட் ஏற போவதாக சொன்னாள்.

'ம்ம்.. எப்படி இருந்த நன் இப்படி ஆயிட்டேன்னு சொல்லுற மாதிரி , எப்படி இருந்த என் வாழ்க்க ஒரு வாரத்துல இப்படி ஆகிடுச்சு' என்று பெருமூச்சுடன் நிழல் உலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு வந்தாள். அவளது இந்த டிரெயின் பயணமும் முடிவுக்கு வந்தது. குன்னூர் என்ற போர்டை பார்த்தாள்.

'ம்ம்... இந்த இயற்கை அழகு கூட ரசிக்காம, குளிர் கூட தெரியாம எனக்குள்ளயே மூழ்கிட்டேனே!! இப்படி இருந்தா நல்லதே இல்லை கவனமா இருக்கணும்' என்று தனக்கு தானே அறிவுரை சொல்லிக் கொண்டே குளிருக்கு கையை தேயித்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள். டிரெயின் நின்றதும் இறங்கி வெளியே வந்தாள்.

ஸ்ரீ ஹரிணி என்று போர்டுடன் டிரைவர் உடையில் ஒருவர் நின்று கொண்டு வருபவர்களை கவனித்துக்கொண்டு இருந்தார். அவர் பக்கத்தில் சென்றாள். "அம்மணி நீங்க சக்கரவர்த்தி ஐயா வீட்டுக்கு வந்து இருக்கீங்களா???" என்றார் பணிவுடன்.

மிருணா எதுவும் சொல்லாமல் அமைதியாக அவரை உற்றுப் பார்த்தாள்." அம்மணி நான் ஐயா வீட்டு டிரைவருங்க பதினைந்து வருஷத்துக்கு மேல வேலை பார்க்குறேங்க இருங்க ஐயா கிட்ட பேசுங்க" என்று போன் போட்டு கொடுத்தார்.

"ஹலோ...".

"மிருணா இறங்கிட்டியா டா அவரு நம்ம டிரைவர் ஆறுமுகம் தான் அவர் கூட கார்ல ஏறி வாடா, நான் அமர் கிட்ட சொல்லிடுறேன்".

"சரிங்க அங்கிள்" என்று வைத்தாள்.

"வாங்க அம்மணி ஏறுங்க " என்று பின்னால் கதவை திறந்து விட்டார். மிருணா அமைதியாக ஏறி உட்கார்ந்தாள். ஆறுமுகம் காரை ஓட்ட ஆரம்பித்தார்.

"அம்மணி நீங்க இந்த ஊருக்கு இப்ப தான் வரிங்களா??".

"ம்ம்... ஆமா".

"உங்களுக்கு போற வழியில ஐயாவோட தேயிலை தோட்டம் இருக்குங்க அதெல்லாம் காட்டுறேன், இங்க ஐயா தான் பெரிய ஆளுங்க அம்மணி".

"ம்ம்.." என்று வேடிக்கை பார்த்தாள்.

"சக்கரவர்த்தி ஐயாவும் சோமமூர்த்தி ஐயாவும் ராமன் லக்ஷ்மணன் மாதிரிங்க அம்மணி, சக்கரவர்த்தி ஐயா என்ன சொன்னாலும் ஏன்னு கேக்காம பண்ணுவாங்க, அவங்க மட்டும் இல்லைங்க ஐயாவோட மனைவியும் அவங்கள மாதிரியே தங்கமானவங்க" என்றார் பெருமையாக.

இவர் அவர்களின் விசுவாசி என்பது அவர் பேச்சின் மூலமே தெரிந்து கொண்டாள்."ம்ம்.." என்றாள் லேசான சிரிப்புடன்.

"எங்க ஐயாவோட மூணு பிள்ளைகளும் அவளோ ஒத்தும அம்மணி, வீட்டோட கடைக்குட்டி தான் ஸ்ரீ பாப்பா. நீங்க பாப்பாவோட நாத்தனாருன்னு சொன்னாங்க, எங்க பாப்பா ரொம்ப தங்கமான பொண்ணு எப்போதுமே கலகலப்பா இருப்பாங்க. அவங்கள உங்க அண்ணாவ நல்லா பார்த்துக்க சொல்லுங்க அம்மணி" என்றார் சிரிப்புடன்.

"கண்டிப்பா சொல்றேன்" என்றாள் சிரித்துக்கொண்டே.

"அம்மணி இந்த ரெண்டு பக்கம் பாருங்க கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் இருக்கிறது நம்ம அய்யாவோடது தாங்க".

பச்சை வண்ண போர்வையை போல் போத்தி இருந்தது அந்த தேயிலை தோட்டம். கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்க்கவே ரம்மியமான காட்சிகள் அவள் மனதை கொள்ளை கொண்டது. அதன் பிரதிபலிப்பு அவள் முகம் காட்டியது." இது மட்டும் இல்லைங்க பலா, ஆரஞ்சு, ஆப்பிள், இன்னும் நிறைய மரங்கள், தோட்டம், எஸ்டேட்ல இருக்குங்க, சின்னய்யா வந்தாங்கன்னா உங்கள் அழைச்சுட்டு போவாங்க".

"ம்ம்... சரி எப்ப வீடு வரும்??" என்றாள் சோர்வாக.

"இன்னும் அஞ்சு நிமிஷத்துல போயிடலாம் அம்மணி" என்று வேகமாக ஓட்டினார். பெரிய காம்பவுண்ட் கேட் இவர்கள் கார் பக்கத்தில் வந்ததும் திறந்தது. இரண்டுபக்கமும் அழகு மரமும், அங்கங்கு பூச்செடிகளும், புல் தரையும் அழகாக இருந்தது. சிறிது தூரம் சென்றதும் வீடு இல்லை.. இல்லை.. வெள்ளை மாளிகை, மாளிகையின் இருபக்கமும் பூ கொடி பந்தம் போல் தொங்கியது. இவள் வந்த கார் போர்டிகோவில் வழுக்கிக் கொண்டு போய் நின்றது. கார் நின்றது கூட தெரியாமல் யோசனையுடனே இருந்தாள்.

காரின் கதவை திறந்து," மிருணா.." என்று சிரிப்புடன் ஒர் அழகிய பெண் நின்றாள்.

மிருணா வேகமாக திரும்பி,"அண்ணி.." என்றாள் சந்தோசமாக.

"ஆமா நான் தான், வாங்க மேடம் காரை விட்டு இறங்க மனசு இல்லையா??" என்று கையை பிடித்து வெளியே அழைத்தாள்.

"சாரி அண்ணி நான் ஏதோ யோசனையில்ல" என்றாள் ஒருகையால் நெற்றியில் தேய்த்தபடி.

"இட்ஸ் ஓகே டா " என்று அணைத்து விடுவித்தாள்.

"வாடா.." என்றனர் தன் அம்மா அப்பா வயது ஒட்டிய ஆண்கள் இருவரும் பெண்கள் இருவரும்.

மிருணா லேசான சிரிப்புடன் தலையசைத்தாள்." உள்ள வாடா" என்று அழைத்து சென்றார் சக்கரவர்த்தி.

மிருணா உட்கார்ந்ததும் காபியை குடுத்தனர். அவள் குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்." நீ ரொம்ப டயர்டா தெரிஞ்ச டா அதனாலதான் நாங்க யாரும் அறிமுகப்படுத்திக்கல நீ வந்ததும். நான் சக்கரவர்த்தி, இவன் என் தம்பி சோமமூர்த்தி, இவங்க என் மனைவி மீனாட்சி, இவங்க சோமு மனைவி வாணி, இவள உனக்கு தெரியும்ல என் பொண்ணு ஸ்ரீ ஹரிணி.." என்று அறிமுகப்படுத்தினார். அனைவரையும் பார்த்து சிரிப்புடன் தலையசைத்தாள்.

"மிருணா இத உன் வீட நினைச்சுக்கோ டா எந்த தயக்கமும் வேண்டாம் " என்றார் மீனாட்சி.

"ம்ம்.."என்று தலையை ஆட்டினாள்.

"மிருணா பேச மாட்டியா டா?? ஒருவேள பயத்துல இருக்கியா?? பயப்படாத யாரும் இங்க வர முடியாது வீட்டை சுற்றி எப்போதுமே காவலுக்கு ஆள் இருப்பாங்க" என்றார் வாணி ஆறுதலாக.

"ஆமாடா எதுக்காகவும் நீ கவலைப்பட வேண்டாம்" என்றார் சோமு ஆறுதலாக.

"ம்ம்... சரி " என்றாள் சிரிப்புடன்.

"போதும் போதும் வந்ததும் அவள நல்லா சாப்பிட்டு தூங்க விடுங்க, நைட் எல்லாம் தூங்கல போல கண்ணெல்லாம் சிவந்து இருக்கு" என்றாள் அக்கறையாக.

"ஆமா ஸ்ரீ பார்த்த தூங்களேன்னு தெரியுது, வாடா வந்து சாப்பிடு, வாணி டைனிங் டேபிள்ல எல்லாத்தையும் எடுத்து வைமா".

"சரிங்க அக்கா" என்று உள்ளே சென்றார்.

"ஆன்ட்டி நான் இன்னும் ரெப்ரஷாகல, எந்த டிரஸிம் கொண்டு வரல இனிமே தான் போய் வாங்கணும்".

"இல்லம்மா நீ வெளியில போக வேண்டாம் என்ன வாங்கனும்னு சொல்லு நாங்க வாங்கிட்டு வந்துறோம்" என்றார் சக்கரவர்த்தி.

"சரிங்க ஆங்கிள்".

"ஸ்ரீ இவ யூஸ் பண்றதுக்காக கொஞ்சம் டிரஸ் வாங்கிட்டு வந்தல்ல அத எடுத்து குடுடா, மிருணா ரெஃபிரேஷ் பண்ணிட்டு வா டா சாப்பிடலாம்" என்று அனுப்பினார்.

"சரிங்க ஆன்ட்டி" என்று ஸ்ரீயுடன் செல்லப் போகும் போதுதான் வீட்டை கவனித்தாள். பெரிய பெரிய தூண்களும் விசாலமான ஹாலும், இடப்பக்கம் சென்றால் டைனிங் ஹாலில் பெரிய டைனிங் டேபிளும், பக்கத்தில் கிச்சனும், அதை அடுத்து சாமி அறையும், அடுத்தடுத்து நிறைய அறைகள் மூடியிருந்தது, ஹாலுக்கு நடுவே மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் அது இரண்டாக பிரிந்தது, படிக்கட்டு கம்பிகள் வட்ட வடிவமாக மேலே இருந்து கீழே பார்க்க வசதியாக இருந்தது, மேலே ஒரு ஹால் மூன்று சோபா போட்டு இருந்தது. மாடியிலயே எட்டு அறைகளுக்கு மேல் இருப்பதை கவனித்தாள். பழமையும் புதுமையும் கலந்த செல்வ செழிப்பு ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது. எங்கு பார்த்தாலும் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பொருளாகவே இருந்தது.

"மிருணா நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு அப்புறமா உனக்கு வீட்ட சுத்தி காட்டுறேன்".

"சரிங்க அண்ணி".

"ஏய் அண்ணிலா வேணா, நான் என்ன உன்ன விட ஒரு வயசு பெரியவளா இருப்பேன் அவ்ளோ தான். என்னைய ஸ்ரீனே கூப்பிடு இனிமே நாம ஃப்ரெண்ட்ஸ்" என்றாள் சிரிப்புடன்.

"சரி அ.. இல்ல ஸ்ரீ " என்றாள் சிரிப்புடன்.

"என் ரூமுக்கு பக்கத்து ரூம் தான் உனோட ரூம்" என்று அழைத்து சென்றாள்.

பெரிய ரூம்மாவே இருந்தது நடுவே இரு ஆள்கள் படுக்கக்கூடிய தேக்குமர கட்டிலும், இடப்பக்கம் பாத்ரூம், வலது பக்கம் பால்கனி செல்லும் கதவுகள் இருந்தது."எனக்கு இந்த ரூம் ரொம்ப பிடிச்சு இருக்கு ஸ்ரீ " என்றாள் சிரிப்புடன்.

"இது கெஸ்ட் ரூம் டா, என் ரூம் அண்ணாங்க ரூம்ல பார்த்த அசந்து போயிடுவ, அதுலயும் என் பெரிய அண்ணா ரூம் ரொம்ப சூப்பரா இருக்கும், சின்ன அண்ணா அண்ட் என் ரும்ம விட அது ரொம்ப பெருசு" என்றாள் சிரிப்புடன்.

"ம்ம்....".

"உனக்கு நான் கொஞ்சம் தான் ட்ரெஸ் எடுத்து இருக்கேன் , அப்புறம் இன்னர், நைட் டிரஸ், ஸ்வெட்டர் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன், இதுக்கு மேல உன்னால கண்டிப்பா குளிர் தாங்க முடியாது அதனால சீக்கிரம் போய் சேஞ்ச் பண்ணிட்டு வா, நான் இங்க வெயிட் பண்றேன் " என்று அங்கேயே மூளையில் இருந்த சிறிய சோபாவில் உட்கார்ந்தாள்.

மிருணா பாத்ரூமிற்கு சென்று உடையை மாற்றி மேலே ஸ்வெட்டருடன் வெளியே வந்தாள். "குட்.. உனக்கு இந்த சுடி நல்லா இருக்கு, என்னைய மாதிரி தான் இருப்பன்னு அமர் சொன்னாங்க டவுட்ல தான் எடுத்தேன் கரெக்டா இருக்கு" என்றாள் சிரிப்புடன்.

"தேங்க்ஸ்.. ஸ்ரீ நீங்க மட்டும் இல்லேன்னா இன்நேரம் நான் என்ன ஆகி இருப்பானோ!! தெரியல" என்றாள் கரகரத்த குரலில்.

"அதுலாம் ஒன்னும் இல்ல இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம் சரியா??, வா சாப்பிடலாம்" என்று அழைத்து சென்றாள். சாப்பிட்டு முடித்ததும் அவளை ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பினார்கள்.ஸ்ரீ அவள் தூங்கும் வரை அவள் அருகிலேயே உட்கார்ந்து தட்டிக் கொடுத்தாள். மிருணா படுத்தவுடனே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.

சென்னை:

"மிருணா காலையில இருந்து எங்கேயாச்சும் போனாலா டா???"
என்றான் சிவா அடியாட்கள் ஏழு பேரிடம்.

"இல்லன்னா அண்ணி வெளியிலயே வரல" என்றான் ஒருவன் பணிவுடன்.

"சரி நான் போய் பார்க்குறேன் நீங்கல்லாம் இங்கேயே!! இருங்க டா" என்று இவன் கூட வந்த சில அடியார்களையும் விட்டுவிட்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றான். வீடு பூட்டியிருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியுடன் நின்றான்.

"டேய் இங்க வாங்கடா..." என்று கத்தினான். அனைத்து அடியாட்கள் உள்ளே வேகமாக ஓடி வந்தனர்.

" அண்ணே!!".

"என்னடா வீடு பூட்டி இருக்கு, எங்க டா மிருணா??" என்றான் கோவமாக.

"அண்ணா அண்ணி வெளில வரவே இல்ல நாங்க கண்காணிச்சு கிட்டு தான் இருந்தோம்" என்றான் ஒருவன்.

"இதுதான் நீங்க கண்காணிக்கிற லட்சணமா டா , உங்கள... முதல்ல போயி தேடுங்க டா" என்று கத்தினான். சிலபேர் வேகமாக வெளியே சென்றனர்.

"எங்க போனா...? எங்க போனா..?" என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து தலையில் லேசாக தட்டி யோசித்தான்.

"குடிச்சிங்களா டா??" என்றான் ஆக்ரோஷமாக.

"அண்ணே அது வந்து..." என்று தலையை சொரிந்தான் ஒருவன்.

சிவாவின் கைகள் இரும்பாக அவன் கன்னத்தில் இறங்கியது ஒரே அடியில் தரையில் விழுந்து கிடந்தான்." குரு மிருணாவோட போட்டோவ கொடுத்து தேட சொல்லு, அவ எங்க இருக்கானு எனக்கு உடனே தெரிஞ்சாகணும்" என்று கத்திக்கொண்டே வண்டியில் ஏறி சென்றான்.சிவாவின் இடக்கை வலக்கை எல்லாமே குரு தான்.

மிருணாவை சென்னையில் ஒரு இடம் விடாமல் தேட ஆரம்பித்தனர்.மாலை சிவா அமரின் வீட்டிற்கு சென்றான்.அமர் டீ குடித்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்திருந்தான்."டேய் எங்கடா மிருணா? சொல்லு, இல்ல உன்னைய கொண்ணு போட்டுடுவேன்" என்று கோபமாக வந்து அவன் சட்டையை பிடித்து நிறுத்தினான்.

அமரின் கையில் இருந்த கப் கீழே விழுந்தது."என்ன டா சொல்லுற?? எங்க டா என் தங்கச்சி??" என்று பதிலுக்கு அவனும் சிவாவின் சட்டையை பிடித்தான்.

சிவா லேசான அதிர்ச்சியுடன் அமரின் சட்டையில் இருந்து கையை எடுத்தான்." எங்க டா என் தங்கச்சி??? என்னடா பண்ணுன அவள??? கொண்ணுட்டியா??" என்றான் கோபமாக.

"டேய் அவள தப்பிக்க வச்சுட்டு என்கிட்டயே நடிக்கிறியா???" என்றான் அவன் சட்டையில் இருந்த அமரின் கையை தட்டிவிட்டு.

"ஏய்!!! உன் முன்னாடி தானே எனக்கும் அவளுக்கும் இனிமே ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டா, நான் அதுக்கு அப்பறம் அவள பார்க்கவே இல்ல.. நான் எப்படிடா அவள தப்பிக்க வைப்பேன்?? " என்றான் கோவமாக.

"ம்ம்... அத நீதான் சொல்லணும், ஒன்னு மட்டும் ஞாபகத்தில வச்சிக்கோ உன் தங்கச்சி கழுத்துல தாலி கட்டிட்டு தான் குடும்பம் நடத்தனும்னு இருந்தேன், அத உன் தங்கச்சியே!! கெடுத்துக்கிட்டா அவள நான் பார்த்தேன் அடுத்த நிமிஷம் என் பொண்டாட்டியா தான் இருப்பா" என்று கர்ஜித்தான்.

அவன் கர்ஜனையில் அமரின் மனம் படபடத்தது பயத்தை முகத்தில் காட்டாமல் தடுக்க சிரமப்பட்டான். சிவாவின் போன் அடித்தது. "சொல்லு குரு".

"அண்ணா.. அண்ணிய நேத்து பார்த்தேன்னு சொன்னானுங்க நாலு பேரு அவங்கள நம்ம குடோனுக்கு இழுத்துட்டு போறேன் நீங்க அங்க வந்துடுங்க".

"நான் உடனே வரேன் குரு" என்று வைத்தான்."உன் தங்கச்சிய அடையாமல் விட மாட்டேன், உன் தங்கச்சிய கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் உன்ன வந்து பார்க்குறேன்" என்று வெறியுடன் கத்தி விட்டு சென்றான்.

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. அமரின் முகம் பயத்தில் வேர்த்து இருந்தது, துடைத்துக்கொண்டு கதவை மூடிவிட்டு வந்து வேறு சிம்மை போனில் போட்டு கால் செய்தான். "அவன் வந்தான்.." என்று நடந்த அனைத்தையும் சொன்னான்.

..............

"அம்மாவையும் அப்பாவையும் நல்லவேள கோவிலுக்கு அனுப்புனேன் இல்லனா என்ன ஆகிருக்குமோ!! தெரியல, அம்மா இதெல்லாம் பார்த்து இருந்தா ரொம்ப பயந்து இருப்பாங்க".

...............

"ம்ம்..‌‌மிருணா பத்திரம் இவன் வெறியோட சுத்திட்டு இருக்கான்.

.............

"ம்ம்...நானும் கவனமா இருக்கேன், பாய்.." என்று வைத்தான்.

மிருணாவின் வீட்டை முன்னால் யார் பூட்டினார்கள்???அமர் யாரிடம் போனில் பேசினான்??? அந்த நான்கு பேர் யார்?? என்ன சொல்லப் போகிறார்கள்?? அவர்கள் சொல்வதை வைத்து மிருணாவை சிவா கண்டுபிடிப்பானா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....................

?கைதியின் சிறை தொடரும்?................
 
அமர் மிருணாட்ட பேசிருப்பான்.
நேத்து நைட் ஃபாலோ பன்ன நாலு பேர் மாட்டிருப்பானுங்க
இந்த மாதிரி கிளம்பி வெளிய போனாங்க நாங்க பாலோ பன்னோம் கடைசில போலீஸ்கிட்ட போய்டாங்கனு அவனுங்க சொல்லப்போறானுங்க...

இந்த பனைமரமும் தென்னைமரமும் ஓவரா பன்றானுங்களே...அவங்க வீட்டுக்கு தான் இவ போயிருக்காளா...இவ யாருனு 2 மரத்துக்கும் தெரிஞ்சிருக்குமோ..அவங்க தான் வீட்டையும் பூட்டிருக்கனும்
 

Advertisement

Top