Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கெளதம் பேகனின் "High on காதல் - 3"

Advertisement

Gowtham began

Member
Member
April 2018,

அருணின் நண்பர்களுக்கும் அவனின் தற்போதைய நிலை கவலை அளித்தாலும், கல்யாணம், குடும்பம் என்று ஆகிவிட்டபடியால் அவர்களால் அருணிற்கு சமாதானம் சொல்லவோ மனம் விட்டு பேசவோ நேரம் இல்லை..

இருப்பினும் செந்தில் மட்டும் அவ்வப்போது அருணிடம் Touch - இல் இருப்பான். செந்திலும்- லாவண்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். (குறிப்பு - அருணிற்கு பின் காதலித்தவர்கள்.. சென்ற ஆண்டு கல்யாணம் முடித்து லாவண்யா இப்பொழுது 3 Months pregnant ) ..
அடுத்த நாள் இருவரும் Gatsby Pub-ற்கு செல்ல முடிவு செய்து கூடவே அருணையும் கூட்டி சென்றால் அவனுக்கும் ஒரு Change கிடைக்கும் என்று யோசித்தார்கள்..

லாவண்யா : செந்தில் நம்ம ரெண்டு பெரும் Couple entry ல போயிடுவோம் But அருண்??

செந்தில் : நானே சொல்லணும் - னு நெனச்சேன்.. உன் Friend - யாரவது கூப்பிட முடியுமா?? So That, அவங்க கூட பழக சான்ஸ் கெடைச்சு அருணிற்கும் ஒரு Change இருக்கும் After his breakup… What do u say??
நல்ல ஐடியா அப்போ அருண் Couple என்ட்ரி ல வந்துடலாம்… கேட்டு பாக்கிறேன் ஸ்வேதா கிட்ட… She was also asking me for a night out!!!

So செந்தில்- லாவண்யா, அருண் - ஸ்வேதா Couple entry யில் செல்ல முடிவெடுத்தார்கள்…

முதலில் இந்த பிளான் அருணுக்கு ஒகே இல்லைதான் என்றாலும் அவனுக்கும் ஒரு Change இருந்தால் நன்றாக தான் இருக்கும் என்று Feel செய்தான் …

செந்தில் நான் வந்துட்டேன். Parking lot- ல இருக்கேன்.. எங்க இருக்கீங்க ?? என்று அருண்..
கொஞ்சம் டிராபிக் a இருக்குடா… வந்துட்டே இருக்கோம் மூணு பேரும்.

வெள்ளிக்கிழமை அன்னிக்கு இவங்க எல்லாரும்.. அப்படி எங்க தான் பறப்பாங்களோ!!!
டிராபிக்கை எண்ணி சலித்து கொண்டான் அருண்.

அரை மணி நேரமாய் Parking lot-ல் நின்று கால் தான் வலித்தது. சிகரெட் பழக்கமும் நஹி!!! இருந்தால் அடலீஸ்ட் 3 சிகரெட்டாவது புகைத்து பொழுதை போக்கி இருக்கலாம். மது பழக்கம் அறவே கெடயாது.
Dope, கஞ்சா, Joint, Pot…Hmmm.. கேட்கவே வேணாம்.. காதல் தோல்வியில் இதை எல்லாம் தொடாதவன் உலகத்திலே இவன் ஒருவனாக தான் இருக்க கூடும். பின்ன எந்த டேஷுக்கு Pub-க்கு செல்கிறான் என்று நீங்கள் கேட்கலாம்!!!
நண்பர்களுடன் சென்றால் சைடு டிஷ் சாப்பிடுவான்… ஸ்ருதியுடன் சென்றால் டான்ஸ் ஆடுவான்… அவ்வளவு தான் அருண்!!!
இந்த மாதிரி பழக்கம் லா இருந்திருந்தா ஸ்ருதி கூட இருந்துருப்பாளோ என்னவோ என்று வழக்கம் போல் நினைத்து கொண்டே நடந்து Entrance வரை சென்றான். இதற்கு முன் ஸ்ருதியுடன் இது போன்ற இடங்களுக்கு சென்றாலும் சென்னையில் இது ஒரு மிகப்பெரிய Clubbing இடம் என்பதை புரிந்து கொண்டு ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தான் அருண்..

மீடியா ஆட்களும், பணக்காரர்களும் இளசுகளும் விடிய விடிய ஆட்டம் போடும் இடம். சொகுசு கார்களில் கும்பலாகவோ , Couple ஆகவோ மனிதர்கள் இறங்கி கொண்டே இருந்தனர்.
Tubetops, Gown, Mini skirts , Jeans என்று பல்வேறு ஆடையில் பெண்கள் வந்த வண்ணம் இருந்தனர்.. ஆனால் சொல்லி வைத்தார் போல எல்லாரும் உடையில் மிகுந்த சிக்கனத்தை கடை பிடித்திருந்தனர். 40 வயதில் உள்ள சில Aunties Tubetop- இல் வருவதை பார்த்து அருணுக்கு சகிக்கவில்லை.
செந்தில், லாவண்யா மற்றும் ஸ்வேதா ஒரு வழியாக வந்து சேர்ந்தனர்.
Hai da This is Shwetha…And Shwetha this is arun!! என்ற செந்திலின் அறிமுகத்துடன் கைகுலுக்கி கொண்டு அனைவரும் உள்ளே சென்றனர்.. Entry இடத்தில் வண்ணமிகு விளக்குகளில் இசை சத்தம் மெலிதாக கேட்டு கொண்டு இருந்தது. Couple Entry- க்கு Pay செய்தவுடன் MGM, Kishkintha போன்ற Theme Park-ல் மாட்டி விடுவது போல் கையில் ஒரு Band மாட்டி விட்டார்கள்..

கதவை திறந்தவுடன் அது வரை மூடி வைத்திருந்த மொத்த சத்தமும் அதிர தொடங்கியது. மேலும் கீழும் இளசுகளும், Auntyகளும் இசை சத்தத்திற்கு ஏற்ப ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். உலகத்தின் கடைசி நாள் இது என்பது போன்ற அவர்களின் கொண்டாட்டம் உச்சம் தொட்டு கொண்டு இருந்தது.

அந்த மொத்த இடத்திலே இவர்கள் தான் கொஞ்சம் அதிகம் உடை உடுத்தி வந்தவர்கள் போல இருந்ததால் மற்ற அனைவரும் இவர்களை வேற்று கிரகத்தில் இருந்து வந்த Aliens போல பார்த்தனர்.

அனைவரும் Drinks order செய்ய, அருண் மட்டும் வேண்டா வெறுப்பாக எப்போதும் போல ஒரு Mocktail சொன்னான். அருணை மேலும் கீழும் பார்த்தபடி Bearer சென்றான்.
Excuse me Ladies!! என்றபடி செந்தில் அருணை அழைத்து Restroom சென்றான்…
குடிப்பதற்கு முன் தன்னுடைய Tank- ஐ Clear செய்வது செந்திலின் வழக்கம். அப்படி Clear செய்துகொண்டே…

டேய் ஸ்வேதா Single தான்டா!!!
அதுக்கு ??
Actually It looks like she has a interest on you!! லாவண்யா நீ வர னு சொன்ன உடனே ஒகே சொல்லிட்டா…
தெரியுமா?

சோ ??

சும்மா சீன் போடாத.. ஒழுங்கா பேசு அவ கிட்ட. Friend ah பேச தான் சொல்றேன். நீ பாட்டு தண்டத்துக்குனு ஓரமா இருக்காத!!!

ஹான்… ஹான்.. பாக்கலாம் !!!

Hey நானும் லாவண்யாவும் Dance floor போறோம்.. How about you guys??

Am actually too shy to dance.. U guys carry on!!
என்றாள் ஸ்வேதா.
செந்தில் லாவண்யாவுடன் Dance floor செல்ல. அருணும் எந்திருக்க முயல…தோளை அமுக்கி ஸ்வேதாவிற்கு Company குடுக்க Signal குடுத்து சென்றான் செந்தில்.
இப்போ புரியுது இதுங்க ரெண்டும் என்ன பிளான் பண்ணிருக்கு-னு என்று முனகி கொண்டே வாயில் வைக்க முடியாத அந்த Mocktail- ஐ வாயில் வைத்தான் அருண் …

Actually நீ Try கூட பண்ணது இல்லையா ??

என்னது??

I meant… Drinks..

இல்ல… அது என்னமோ Not interested from the beginning…

ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அப்போ டான்ஸ் ஆடுவியா ??

எதோ அப்படி இப்படி கொஞ்சம் ஆட தெரியும்….
லிமிடெட் ஆகவே பேசி கொண்டு இருந்தான் அருண்.

எதாவது யோசனையில் இருக்கியா??

ஹ்ம்ம்.. இல்ல… Nothing.. ஆபீஸ் la
.. என்றபடி எதோ மழுப்பி முயல…

Hey come on.. Leave all this office shit !! See how everyone celebrate here!!


அப்பொழுது தான் ஸ்வேதாவை கவனிக்க தொடங்கினான் அருண்..
நவநாகரிக பெண் போன்ற கலை முகத்தில் தெரிந்தாலும்., Dressing sense Very நீட்.
சிம்பிள் ஆன ஒரு Black colour Short Wear off Shoulder dress-ல் இருந்தாலும் உடல் முக்காவாசி மூடி இருந்தது அருணிற்கு Comfortable ஆக இருந்தது..
Cute and Pretty என்று மனதிற்குள் அவளை Compliment செய்து கொண்டான்.

இருவரும் Dance floor சென்றனர். அங்கே செந்திலும், லாவண்யாவும் கொஞ்சமாக இசைக்கு ஏற்ப இசைந்து கொண்டிருந்தார்கள்.. அருணையும் ஸ்வேதாவையும் உள்ளே இழுத்து ஆட அழைத்தனர் இருவரும்.
சட்டென்று தன்னிச்சையாக அருண் டான்ஸ் ஆட தொடங்கினான். ஒரு தேர்ந்த டான்சர் போல் அவனது Dance இல்லை என்றாலும் அவனிடம் ஒரு ஸ்டைல் இருப்பதை கண்டு ஸ்வேதா ஆச்சரியத்துடன் அவனை பார்த்து கொண்டு இருந்தாள்..

இருட்டில், இரைச்சலில் யாருக்கும் தெரியப்போவதில்லை என்று அவளும் தன் வெட்கம் மறந்து அருண் உடன் ஆட வந்தாள்.. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அருண்..
இருப்பினும் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் ஆட தொடங்கினான்.. ஸ்வேதா ஆடிக்கொண்டு இருந்தாலும் அருணின் ஆட்டத்தை தான் பெரும்பாலும் ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.
மறைந்து மறைந்து மின்னிய LED விளக்குகளின் வெளிச்சத்தில் அவளது முகத்தை இன்னும் பக்கத்தில் பார்க்க நேர்ந்தது. அவள் இருபக்கமும் அசைந்து கொண்டே ஒரு பக்க கேசத்தை மற்றொரு பக்கம் தள்ளுவது ரசிக்கும் படியாக தான் இருந்தது. ஒரு சிறு பிள்ளையை போல குதித்து குதித்து ஆடிய பொழுது அவள் உடல் அதிர்வுகளை தன் பார்வைக்கு முடிந்தவரை தவிர்க்க பார்த்தான் அருண்.
சட்டென்று தன் இரு கைகளை அருணின் கை இடுக்கில் பொருத்தினாள் ஸ்வேதா. ஐஸ் கட்டியில் உறைந்த கைகளின் வலியை உணர்ந்தான் அவன். ஸ்வேதாவின் கை ஸ்ருதியின் கையை விட மிகவும் குட்டியாக இருப்பதாக தோன்றியது. கை அசைவுகளாலே கை பிடித்து அவளை சுற்றி விடும் படி அருணிடம் கேட்டாள்.

அந்த இசை சத்தத்தில் அந்த கூட்டத்தில் எதை பற்றியும் அவனால் யோசிக்க முடியவில்லை. கேட்டபடியே கை பிடித்து சுற்ற தொடங்கினான். செந்தில், லாவண்யா ரசித்து கைதட்டி உற்சாகப்படுத்தி கொண்டு இருந்தனர். அவளின் தோள்கள் அருணின் மார்பில் பட, அவளின் கேசமோ அவன் முகத்தில் படர்ந்து போக, தள்ளி நின்று கை பிடிக்க முயன்றான் அருண். ஸ்ருதியின் Hair Spray வாசனையை மட்டுமே உணர்ந்த அவனுக்கு இந்த நறுமணம் புதிதாக இருந்தது.

பின்னர் நால்வரும் கும்பலாக வட்டமிடித்து ஆடியபொழுது ஸ்வேதா அருணின் இடுப்பை பிடிக்க நேர்ந்ததும் ஒரு வித கூச்சத்துடன் நெளிந்தான் அருண். ஸ்வேதாவின் இடுப்பை பிடிக்க வேண்டிய நிலை ஆனாலும் அவளின் Dress-ல் மட்டும் கை படும் படி Distance - ஓடு இருந்தான்.

Dance என்றாலும் இப்படி ஸ்வேதா உடன் நெருக்கம் காட்டுவது என்னவோ போல் தான் தோன்றியது. ஸ்ருதி இருக்கும் பொழுதே அவளின் சில தோழிகளுடன் கை பிடித்து ஆடியது உண்டு என்றாலும் ஸ்ருதியின் பிரிவில் இது போல ஆடுவதும் உரசுவதும் சரியாக படவில்லை அருணிற்கு.
அருணின் இந்த நடவடிக்கைகள் எதுவும் புரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலையில் ஸ்வேதாவும் இல்லை.

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய செந்தில் லாவண்யா ஜோடி வெளியே சென்றனர்.

எதோ அப்படி இப்படி ஆட தெரியும்னு சொன்ன… இப்படி சூப்பரா ஆடுறியே
அலறும் மியூசிக் நடுவே அருணிற்கு மட்டும் கேட்கும் படி சத்தமாக ஸ்வேதா.

Hey Thanks.. கொஞ்சம் Free Style ஆட பிடிக்கும். அதான்..

Dance School எங்கயாச்சும் போயிட்டு இருக்கீயா??


இல்லை. இல்லை.

அப்பொழுது ஒரு பெருத்த வயிறுடன் ஒரு அங்கிள், ஹிந்தி பாடலுக்கு ஏற்ப போதையில் இவர்கள் அருகில் கன்னா பின்னாவென்று காலை உதைத்து கொண்டு இருந்தார். சிரித்து கொண்டே அங்கு இருந்து அடுத்த இடத்திற்கு நகர்ந்தனர் இருவரும். இருட்டாக இருந்த ஒரு அறையை எட்டி பார்த்தனர். அங்கே 20 வயதில் இரு ஜோடிகள் அந்த களேபரத்தில் மெய் மறந்து தங்கள் இணையின் உதடுகளை சுவைத்து கொண்டு இருந்தனர்.

ஸ்ருதி நியாபகம் வரவே வெடுக்கென்று திரும்பிய அருண் பின்னர் ஸ்வேதாவிற்காக புன்னகைத்து வேறு இடத்திற்கு செல்வோம் என்பது போல சொன்னான். ஸ்வேதா அதை ரசிப்பது போல் தெரிந்தது.

இங்க மட்டும் ஒவ்வொருத்தரும் அவங்களோட வேற ஒரு Life வாழுற feel லே??
என்று சிலாகித்து ஸ்வேதா !!!

Dance actually gives semma energy!! I can feel that now..
ஆமாம் என்பது போல் தலையசைத்தான் அருண்…

Actually என்னோட Girlfirend Professional dancer.. என்று ஆரம்பித்தான் அருண்!!!


பின்னர் இருவரும் யாரும் Disturb செய்யாத வகையில் யாரையும் Disturb செய்யாதவாறு பேசி கொண்டே இருந்தனர். ஸ்வேதா அவனது பேச்சை மிகவும் ரசித்து கேட்டு கொண்டு இருந்தாள். செந்தில்- லாவண்யா இவர்களின் சுவாரஸ்யமான பேச்சை கண்டு,
பரவலா லாவண்யா… அருண் உன் Friend கிட்ட நல்ல பேசுறான் போலயே !!!
சரி Let them have a good time நாம disturb பண்ண வேண்டாம் என்று Drinks order
செய்ய ஆரம்பித்தனர்.
அருண் பேச பேச கண் கொட்டாமல் கவனித்தாள் ஸ்வேதா..

மணி 1.30 am ஆனது. கூட்டம் மெல்ல மெல்ல களைய, இவர்களும் தள்ளாடி கொண்டே நகர ஆரம்பித்தனர். நன்றாக குடித்து இருப்பதால் கார் ஓட்டுவது risk என்று செந்தில் Cab book செய்து விட்டான்.. இப்பொழுது தெளிவாக இருப்பது அருண் மட்டுமே.. மற்ற அனைவரும் மிதமான போதை கலந்த தூக்கத்துடன் காரை நோக்கி சென்றனர்..

You are really very nice arun! Nice meeting you!! கண்டிப்பா எனக்கு Text பண்ணு என்று அவனிடம் விடை பெற்றாள் ஸ்வேதா.

செந்திலும் லாவண்யாவும் ஒருவரை ஒருவரை பார்த்து சிரித்து கொண்டனர். தங்கள் Plan success ஆனதில் மனதிற்குள் சந்தோஷமடைந்தனர்.
Bye bye.. பாத்து வீட்டுக்கு போங்க என்று கிளம்பினான் அருண்.. கார் சென்று கொண்டு இருந்தது. லாவண்யா களைப்பில் தூங்கியே விட்டாள். அருணும் ஸ்வேதாவும் என்ன பேசி இருந்தார்கள் என்ற ஆவலில் செந்தில்,

என்ன யா ஒரே நைட்ல நீயும் அருணும் நல்ல Close ஆயிட்டீங்க போல என்று தூண்டில் போட்டான்.

Hey ஆமா.. He is very sweet and also ரொம்ப பாவம்.. Have never seen someone who loves a girl this much என்று உச் கொட்டினால் ஸ்வேதா.

உன்கிட்ட அவன் Breakup மேட்டர் a சொன்னானா
குழப்பத்துடன் செந்தில்…

Yeah yeah fulla அத பத்தி தான் பேசிட்டு இருந்தோம்… Like How much he loves her..What exactly happened .. Chancey இல்ல… I hope everything turns better for him.. One day definitely She will understand you.. கண்டிப்பா கல்யாணத்துக்கு கூப்பிடுனு சொன்னேன்… எதையோ சாதித்த உணர்வுடன் அவள்.

மொத்த போதையும் தெளிய தொடங்கியது செந்திலுக்கு… தன்னை தானே தலையில் அடித்து கொள்ளலாம் என்பது போல் தோன்றிய பொழுது ஸ்வேதாவின் Hostel வந்து விட்டது…

Bye... லாவண்யா கிட்ட சொல்லிடு!!! Good night என்று கிளம்பினாள் ஸ்வேதா.

இவனுக்கு ஒரு Change இருக்கும்னு Plan போட்டா கூட இருக்கவளையே Change பண்ணிட்டானே என்று நொந்து கொண்டே Whatsapp Message எடுத்து பார்த்தான்.
அருணே தான்.

Machan I Reached.. u?


கெட்டவார்த்தையில் திட்ட பார்த்தான் செந்தில்… கூடவே புதிதாக Status- ம் போட்டு தொலைத்து இருந்தான் அருண்..

பாட்ஷா படத்தில் ரஜினி தன் தங்கையின் காதலுக்காக உருக்கமாக பேசும் வசனம்,

“ஒரு பையனுக்கும் பொண்ணுக்கும் வாலிபத்தில் ஏற்படுற முதல் காதலை, அவங்க வாழ்க்கை பூரா மறக்க மாட்டாங்க… எவ்ளோ பெரிய இடத்துல எப்பேர்ப்பட்ட ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட அந்த முதல் காதல்.. அவங்க இதயத்துல முள்ளா மாறி அவங்க வாழ்நாள் பூரா குத்திகிட்டே இருக்கும்…”

உண்மையிலயே குத்திக்கிட்டு சாவுடா என்று status-க்கு reply செய்து விட்டு தலையை பிடித்து கொண்டான் செந்தில்!!!
 
மிகவும் அருமையான பதிவு,
கௌதம் பேகன் டியர்
 
Last edited:
Top