Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கெளதம் பேகனின் "High on காதல்" -1

Advertisement

Gowtham began

Member
Member
அருண் முன்புபோல் இல்லை என்று எல்லாருக்கும் தெரியும். ஏதோ ஒரு மனக்குழப்பத்தில்…. எதையோ பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்… திரியும் அருணாக தான் குடும்பத்தார் பார்வைக்கு தெரிகிறான். நெருங்கிய நண்பர்களுக்கு அருணின் பிரச்சனை தெரிந்த ஒன்றே.
ஏனென்றால் அவர்களிடம் அருண் சமீபமாக ஓயாமல் புலம்பும் ஒரே விஷயம்…

மச்சான் ஸ்ருதி என்கிட்ட பேசுறதே இல்லடா..


ஸ்ருதியும் அருணும் கல்லூரியில் அறிமுகமாகி, பின்னர் காதலாகி கசிந்துருகி, “ஒருவனுக்கு ஒருத்தி”, “மணாளனே மங்கையின் பாக்கியம்” போன்ற அரத பழசான காதல் கதைகள் புரிந்த கடைசி தலைமுறை 90’s கிட்ஸ் வகையறாவை சார்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த இந்த ஏழு ஆண்டுகளில் காதலித்து, கைபிடித்து, குழந்தை பெற்று, பின்னர் விவாகரத்தும் பெற்ற இவர்களின் நண்பர்களின் எண்ணிக்கை ஏராளம்..
150 Mbps ஸ்பீடில் பயணிக்கும் இந்த காலத்து தலைமுறைகள் இடையே இவர்களின் ஏழு ஆண்டு காதல் வாழ்க்கை அனைவருக்கும் ஆச்சரியமே!!! அருண் -ஸ்ருதி உட்பட!!

அப்படி யார் கண் பட்டதோ, ஒரு சின்ன வாக்குவாதத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு இருவரின் Relationship - Breakup வரை செல்லும் என அருண் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை…

கடைசியாய் ஸ்ருதியும் அருணும் பேசி கொண்டது…Sorry sorry… சண்டை போட்டு பேசி முடித்தது…

August 18th 2017.




இன்று…. November 17th 2019…….
ஸ்ருதியின் வருகைக்காக coffee shop-ல் அருண். கடைசியாய் அவளை நேரில் பார்த்து 9 மாதம் இருக்கும் கிட்டத்தட்ட இந்த இரண்டரை வருட சண்டைக்கு பின்னான பிரிவுக்கு பிறகு பேசுவதற்கு அவளிடம் என்ன இருக்குமோ வெறுமையை கண்களில் சுமந்தபடி காத்திருந்தான்.

சண்டை போட்டு இருவரும் பேசிக்கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிது அல்ல.. 7 ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் இது போன்று சண்டை போட்டு எப்படியாவது ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.. அப்படி தான் அவனும் நினைத்தான்...ஆனால்…

டேய் மச்சி விடுடா உனக்கு வேணும்ங்கிறது உங்கிட்ட கண்டிப்பா வந்தே தீரும்
- இது ஷிவா

எங்கடா போய்ட போகுறா உன்னை மாதிரி ஒரு பையனை விட்டு போக யாருக்கு மனசு வரும்??
- இது லாவண்யா


மச்சான் வா சரக்கடி எல்லாம் சரியா போய்டும்
- என்று எப்போதும் போல் செந்தில்…c

இப்படியாக போட்டி போட்டு அருணுக்காக விட்டு கொடுக்காமல் அவனின் நண்பர்கள்.. அருணும் அப்படி தான் தன் நண்பர்களை எப்பொழுதும் விட்டுக்கொடுக்கவே மாட்டான்..
அப்படி விட்டுக்கொடுக்காமல் இருந்தது தான் அருண் ஸ்ருதி சண்டைக்கே முதல் முக்கிய காரணம் என்றால்??

May 2017,
ஹலோ…. ஷ்ருதி பிளான்- ல ஒரு சின்ன சொதப்பல். செந்திலும் அவன் Wife-um பெங்களூரு போறாங்க… நம்ம பிளான்- a Next week வெச்சிக்கலாமா-னு கேக்கறாங்க..

அருண்… நான் போன மாசமே சொன்னேன்.. எனக்கு Office-ல லீவு கிடைக்கிறதே கஷ்டம்… Peak season-னு.. கடைசி நேரத்துல இப்படி சொதப்புனா எப்படி???

ஹேய்… இல்ல யா…. ரொம்ப Unavoidable situation..அதான் சாரி சொல்றாங்க… வேணும்னா…..

போதும் அருண்… நாம தான் எல்லாத்துக்கும் எல்லாருக்கும் Adjust பண்ணிட்டு போகணும்… அவங்க நெனச்சபடி தான் எப்போவும் நடக்கணும்.

ஷ்ருதி நாம எதுக்கு ஒருத்தங்க கிட்ட Expect பண்ணனும்… அப்படி பண்ணா தானே இந்த Disappointment எல்லாம்..

என்னால உன்ன மாதிரி நல்லவளா லாம் இருக்க முடியாது எப்போ பாத்தாலும் அவங்களுக்கு தான் Support பண்ணுவ நீ… கொஞ்சம் மாத்திக்கோ உன்னை..

ஸ்ருதி சில பேருக்கு அப்படி தான். இயல்பான Character la மாத்திக்க முடியாது..

அப்போ நான் உனக்காக மாத்திக்கணுமா????

நான் அப்படி சொல்லவே இல்லையே…

அப்போ நான் உன்னை Dominate பண்றேன்னு சொல்றீயா??

இப்போ பிரச்னை பண்ணணும் முடிவுல இருக்கீயா???

உன் நல்லதுக்கு தான் சொல்றேன் …. உன் மண்டைக்கு அது புரியலையா?? என்ன தான் Friends- னாலும் ஒரு Limit இருக்கு.. எல்லாரும் உன்னை Take it for Granted – a தான் பாக்குறாங்க.. யாரை எங்க வெக்கணுமோ அங்க வை…

அது என்னோட Privacy..எனக்கு தோணுற மாதிரி தான் நடந்துக்க முடியும்… நீ தலையிட்டு Complicate பண்ணாத…

Okay. Bye!!


- தொடரும்
 
Last edited:
உங்களுடைய "High on
காதல்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கௌதம் பேகன் டியர்
 
Top