Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 17

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 17
வாழ்க்கையே தலை கீழாக மாறியது போல உணர்தாலும், மாயாவுக்காக பூமி சுற்றாமல் போகவில்லையே! ‘என்ன நடந்தாலும், வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்’ என்பதற்கு இணங்க ஒரு விதமான மந்தமான நிலையிலேயே அந்த வாரம் முழுவதும் அனைவருக்கும் சென்றது! மாயா கார்த்திக், இருவரின் சொந்தங்களுக்கும் கல்யாணம் பேசிவிட்டதை தெரிவித்திருந்தனர்.

மாயாவின் நெருங்கிய சொந்தங்களுக்கு ஏற்கனவே தெரியுமாதலால் அவர்கள் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை…. சுப்பிரமணியத்தின் சொந்தங்கள் தான் முனங்கினர். அதையும் அவர் “பையன் ஆசைப்பட்டுட்டான்…. அதான் இப்படி!” என்று கூறி சமாளித்தார். அதுவும் சிலர் மாயாவின் வரலாற்றை படித்துவிட்டு, அவரிடமே அறிவுரை வழங்கும் செய்தனர்.

எல்லாவற்றையும் ஒரு புன்சிரிப்புடன் கையாள பழங்கிக் கொண்டார் சுப்பிரமணியம். அந்த சிரிப்பின் பின் இருக்கும் சோகத்தை யாரும் காணவில்லை இருவரை தவிர. ஒருவன் அந்த சோகத்தின் மூலக் காரணமும், தற்சமயம் அதை உரைவிடமுமாக கொண்ட கார்த்திக்! இன்னொருவன் விநாயகம்…. தந்தை இந்த அளவிற்கு மனம் நோகுவார், தன்னை புறக்கனிப்பார் என கார்த்திக் சத்தியமாக நினைக்கவில்லை….

தன்னை திட்டுவார், அடிப்பார், சில நாட்கள் பேசாமல் இருப்பார், பின் கோபம் தனிந்ததும் உறவு சீர்ப்படும் என மனக் கோட்டை கட்டினான். கோட்டை சரிந்து அவனின் தலையிலேயே விழுந்ததுமல்லாமல், மூச்சு முட்ட அவனை குழித் தோண்டி புதைத்தது! இதில் கல்யாணம் முடிந்ததும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையே அவன் சிந்ததை ஆக்கிரமித்தது. தன்னால் தன் அப்பாவிற்கு இந்த அளவுக்கு மனக் குடைச்சல் இருக்கும் என யோசிக்காமல் போனதற்காக தன்னைத் தானே திட்டியும் கொண்டான்.

மாயா தன் கூடவே இருக்க வேண்டும், தன்னை விட்டு அகலக் கூடாது என்று நினைத்து அவன் செய்த செயலே அவனை மாயாவிடம் இருந்து பிரித்ததை அவனால் நம்ப முடியவில்லை! கல்யாணம் என்று ஒரு வகையில் உறவு ஏற்படுகிறதே என்ற அர்ப்ப சந்தோஷம் மட்டுமே அவன் இதயத்தில்! இதில் நண்பனும் துச்சமாக எண்ணி தூக்கி ஏறிந்ததை கண்டு மனதளவில் செத்தே விட்டான்!

இவன் இந்த வகை என்றால் விநாயகம் தான் சுப்பிரமணியத்தை தேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

தன் வளர்ப்பு தப்பாகிப் போனதாக அவர் தினமும் ஐந்து முறையாவது அவனிடம் புலம்புவார். இங்கே இவரை தேற்றி, மாயாவின் வீட்டில் அனைவரையும் கவனிக்கும் பொறுப்பு அவனுடையதாகிற்று. பையித்தியம் பிடிக்காத குறை தான் அவனுக்கு. அவனுடைய தாயிடம் கதிர் இறந்ததால் மாயாவுக்கு வந்த கெட்டப் பெயர், பின் அபிராமியின் உடல் நலக்குறைவால் மாயா உடைந்து போயிருப்பதாக கூறி இருந்தான். விநாயகத்தின் அம்மாவும் புரிந்துக் கொண்டதால், அவனுக்கு வீட்டில் பிரச்சனை இல்லாமல் போயிற்று. கல்யாண வேலைகளையும் மாயாவின் தாய்மாமன் ரமேஷுடன் சேர்ந்து இவனே செய்தான். மேலும் காலம் கடத்தாமல் நிச்சயதார்த்தம் எல்லாம் வைக்காமல் நேராக திருமண வைபவத்திற்கு திட்டம் போட்டனர் இருவீட்டாரும்.

திருமணம் சிம்பிளாக இருக்க வேண்டும் என மாயா கேட்டுக் கொள்ள, கோவிலில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது! அது தான் தாலி என்னும் தூக்கு கயிர் ஏறிவிட்டதே! இரண்டாவது தூக்கு கயிறு எப்படி ஏறினால் என்ன? ஒரே மகனுக்கு கோவிலில் திருமணமா என வாயை பிளந்தவர்களை, “பையனோட ஜாதகத்துல கோவில்ல தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இருக்கு.” என கூறி மூட வைத்தார் சுப்பிரமணியம்! உயிரற்று கிடந்த மாயாவையும், அபிராமியையும் ரித்தியா தான் மாற்றினாள்.

“நான் சொல்றேன்ல பாருடி…. உன்னோட நல்ல மனசுக்கு நீ ராணி மாதிரி இருப்ப!! இது எதோ போறாத காலம். விட்டுடு!! நீ சென்னையில எங்க படிக்கறதுனு முடிவு பண்ணிட்டியா??”

மாயாவின் கவனத்தை அவளின் படிப்பின் பக்கம் திருப்ப முடிந்த ரித்தியாவால், அவ்வளவு சீக்கிரம் அபிராமியின் மூளையை சலவை செய்ய இயலவில்லை. தன் இரு பெண்களையும் இரு கண்களாக காத்துக் கொண்டு வந்தவரின் வாழ்க்கையில், ஒரு ஒளியே இல்லாமல் இருட்டாக இருப்பது போல் உணர்ந்தார் அபிராமி.

“அம்மா நீங்க என்ன தான் யோசிச்சாலும், பீல் பண்ணாலும் நடக்கறது நடக்கத் தான் போகுது! யாராலையும் விதியை மாத்த முடியாது..... தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காதீங்கமா….”

பதினேழு வயதான மகளின் அறிவுறுத்தலை கேட்ட அபிராமிக்கு, தான் நினைப்பது போல் தன் மக்கள் உலகம் அறியாத சிறுவர்கள் அல்ல என்று மட்டும் விளங்கியது. பிடிவாதம் பிடிக்கும், கோபம் பொத்துக் கொண்டு வரும் ஒரு அவசர குடுக்கை என மனதில் நிலைக் கொண்ட மாயா எடுத்த முடிவிலேயே அவரின் எண்ணங்கள் மாற்றம் கண்டன!

இப்போது இளய மகளும் தன்னை தேற்றும் வார்த்தைகள் கூறவும், அபிராமி இனி நடப்பதை அந்த விதியின் வசம் விட்டு, நெஞ்சில் குடியிருந்த பாரத்தை கடவுளிடம் கூறி மெதுவாக குறைத்தார். அபிராமி மருத்துவமனையிலிருந்து வந்த இருபதாம் நாள் கல்யாண முகூர்த்தத்தை வைத்தனர். இதில் முதல் பத்து நாட்கள் மேற்சொன்ன படி கழிய, அடுத்த பத்து நாட்களை மாயாவுக்கு வேறு விதமாக சென்றது!

சென்னையில் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் மாயாவின் மனதில் நின்ற இடம் ‘எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி’! எல்லோரும் பொதுவாக அழைப்பது ‘அடையார் பிலிம் இன்ஸ்ட்யூட்’!!! பெரிய பெரிய ஜாம்பவான்கள் பயின்ற கல்லூரி என பெயர் பெற்ற இடத்தில் தானும் பயில வேண்டும் என மனதின் மூளையில் ஒரு ஆசையை ரொம்ப காலமாக வளர்த்து வைத்திருந்தாள் மாயா.

அதையே அவள் விநாயகத்திடம் தெரிவிக்கவும், அவனும் விறுவிறுப்பானான். “சூப்பர்டா. சென்னையில எங்க உன்னை படிக்க அனுப்பறதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். இப்போவே மாமாகிட்ட சொல்லி அப்ளிகேஷனை வாங்க சொல்றேன்!”

தன் அக்காவின் கணவரிடம் போன் செய்து, உடனே சென்று அப்ளிகேஷனை வாங்கி கோயம்பத்தூருக்கு கொரியர் அனுப்பச் சொன்னான். படிப்பது என்று முடிவானவுடன் விநாயகம் புதிதாக ஒரு வேண்டுக்கோளுடன் வந்தான் அபிராமியிடம்.

தன் அக்கா மைதிலியிடம் பேசிவிட்டு அவன் முடிவெடுத்ததை அவரிடம் பகிர்ந்தான். “மாயா சென்னையில அக்கா வீட்டுலயே தங்கட்டும்மா. வேற எங்கேயும் அனுப்பக் கூடாது சொல்லிட்டேன். வீட்டுல எல்லார்கிட்டயும் பேசிட்டேன். கதிருக்கு இப்படி ஆனது, உங்களுக்கு உடம்பு சரியில்லாம ஆனது எல்லாத்தையும் சொல்லி, மாயா கொஞ்சம் வெக்ஸா இருக்கான்னு மட்டும் சொல்லிருக்கேன்.

நீங்க கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்லயே அனுப்பிருங்க! என்னோட அக்கா சூப்பரா பார்த்துப்பா….”

விநாயகம் கூறியதை கேட்டு அபிராமிக்கு பாதி தயக்கம், மீதி சம்மதம் என்ற நிலை வந்தது. தயக்கம் விநாயகத்தின் அக்காவை ஒரு முறை கூட பார்த்து பழகியிராததால்! சம்மதம் தனியாக ஹாஸ்ட்டலில் பெண்ணை தங்க வைக்க நேராமல், பாதுக்காப்பான இடத்தில் அவள் தங்குவது. அதையே அவர் வாய்மொழியாக கூறினார்.

“அக்கா வேலைக்கு போறாங்களா?? அவங்க வீட்டுல எல்லாருக்கும் ஓகே தான??”

“அக்கா வீட்டுல தான் இருக்காமா. ஒரே ஒரு வாண்டு. லேகா ஸ்ரீ! அவளை பார்த்துக்கனுமே! மாமா, அக்கா, குட்டி மட்டும் தான் வீட்டுல. மாமாவோட அப்பா, அம்மா எல்லாம் இங்க தான் இருக்காங்க. ஒண்ணும் பிரச்சனை இல்ல…. மாமா கிட்ட கூட பேசியாச்சு. அதுக்கப்புறம் தான் இங்க வந்து சொல்றேன்.”

தம்கட்டி பேசி ஒருவழியாக அபிராமியை சரிகட்டினான் விநாயகம். மாயாவுக்கு தங்குவதற்கு மைதிலியின் வீடே சரியாகப்பட்டது. மைதிலியின் கணவர் ராம்பிரசாத் அனுப்பிய அப்ளிகேஷனை பூர்த்தி செய்து அனுப்பினாள் மாயா. எண்ணற்ற அப்ளிக்கேஷன் வந்து சேரும் இடத்தில் தன்னுடைய அப்ளிகேஷன் தேர்வாக வேண்டுமெ! அது வேறு மனதின் ஓரத்தில் தனியாக ஓர் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், சற்று சிந்தித்து பார்த்தப் போது தான் மனதில் ஒரு வகையான வெற்றிடம் நிலவுவதை உணர்ந்தாள் மாயா!

தனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்க வேண்டும்?? சாதாரணமான ஓர் கல்யாணம் கூட நடக்கவில்லையே தனக்கு?? இது எல்லாவற்றிருக்கும் காரணமான கார்த்திக்கை நினைத்தப் போது அவளின் உதிரத்தின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. அதே கோபத்துடனும், எரிச்சலுடனும் அவளின் திருமணத்தை எதிர்கொண்டாள் மாயா.

தன் கழுத்தில் ஏற்கனவே பாரமாக தொங்கிய தாலியை கடினப்பட்டு பிளவுஸில் மறைத்தும் ஆயிற்று. அன்று வீட்டை விட்டு போகும் போது தான் கடைசியாக கார்த்திக்கை பார்த்தாள். அதன்பின் இப்போது தான் பார்க்கிறாள். முகம் செத்து பல நாட்கள் ஆகியது போல் இருந்தது. கார்த்திக் கல்யாணம் வரை நாட்களை அவன் அப்பாவின் முகத்தை பார்த்தே ஓட்டினான்.

கல்யாணம் பின் தான் பார்க்க முடியாதே?? கல்யாண நாள் வரை இப்படி சென்றது என்றால், கல்யாண நாள் பெரும் சோதனைக்குள்ளாகியது. அன்று முழுவதுமே மாயா இவனின் முகத்தை ஒரு முறை கூட நேர்கொண்டு காணவில்லை. காலையில் வந்ததும் ஒரு முறை கண்களால் அணலைக் கக்கிவிட்டு விலகியவள் தான்! திருமண சடங்குகள் நடக்கும் போது தெளிவாகவே அவளின் சம்மதமின்மையை காண்பித்தாள் மாயா.

தன் விதியை நொந்தபடி நேரத்தை ஓட்டி, அவளின் கழுத்தில் தாலியை கட்டினான் கார்த்திக்! திருமணம் முடிந்ததும் நேராக மாயாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கே இளைப்பாரிய போதும், மாயாவின் சொந்தங்கள் தான் மாப்பிள்ளையை தடபுடலாக உபசரித்தனர். விஷயம் அறிந்தவர்கள் யாரும் அவனை மதிக்கக் கூடயில்லை. ஆனால், அதை மற்றவர்கள் அறியாமல் செய்வதில் வல்லவர்களாக இருந்தனர்.

மாலை ரிசப்ஷனுக்கு ஒரு பிரபல ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், அதற்கு தயாராக நான்கு மணியிலிருந்து அனைவரும் கிளம்பினர். ரிசப்ஷனில் பல பேர் வந்திருந்தனர். மாயாவின் உதட்டில் அளந்து வைத்தது போன்ற புன்னகை மட்டுமே.

மற்றபடி கார்த்திக் யாரையாவது அறிமுக படுத்தும் போது ஓர் தலையசைப்பு! அவ்வளவே…. மாயா அந்த அறிமுகபடலத்தை கூட செய்யவில்லை!

இழுத்து வைத்த செயற்கை புன்னகையும், எரிச்சலான மனதுமாக ரிசப்ஷன் நிறைவுற்றது. நெருங்கிய சொந்தங்கள் இருந்ததால், வேறு வழியில்லாமல் மாயா கார்த்திக்கின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். கார்த்திக்கின் வீட்டிற்கு செல்லும் வழியிலேயே மாயாவிற்கு மனம் எங்கேங்கோ சென்றது! அலைபாயும் மனதை இழுத்து பிடித்து வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.

உள்ளே சென்றதும் வீட்டை கண்களால் அளந்தவளை, கார்த்திக்கின் சொந்தக்கார பெண் யாரோ ஒருவர் வந்து அவளை அலகரிந்த்துக் கொள்ள சொன்னார். உள்ளம் உளைக்கமாக கொதித்தாலும், வெளியே எதையும் காண்பிக்காமல் பொம்மையாக செயல்பட்டாள் மாயா. அலங்காரத்தின் முடிவில் பதுமையாக ஜொலித்தவளை கார்த்திக்கின் அறையின் உள்ளே அனுப்பினார்.

உள்ளே இவள் செல்லவும் அவன் கீழே படுக்கையை விரிக்கவும் சரியாக இருந்தது. சுப்பிரமணியத்தின் முடிவை பற்றி விநாயகம் கூற, மாயா அறிய நேரிட்டது. காலையில் இருந்து அவன் அருகில் இருக்க நேரிட்டதால், உண்டான மன ஊளைச்சலில் தன் கோபத்தின் உச்சத்தை தொட்ட மாயா, அதை உள்ளேயே அடக்கி வைக்க முடியாமல் வெளியே கத்தவும் செய்தாள்.

“இப்போ எதுக்கு கீழ படுக்குற?? நீ படுத்த இந்த பெட்டுல நான் படுக்க மாட்டேன்…”

மாயா கூறியதை கேட்டு சில நொடிகள் வேலை நிறுத்தம் செய்த கார்த்திக்கின் கைகள், மீண்டும் தங்களின் பணியை செவ்வனே செய்தன. “ஹே காதுல விழலையா இல்ல எல்லாத்தையும் தொடச்சுட்டு போற மாதிரி இப்போயும் இருக்கியா??”

இதற்கும் எந்தவிதமான பதிலும் வரக் காணோம். ட்யூப் லைட்டை அணைத்து விட்டு, நைட் லாப்பை போட சென்றவனை வழி மறித்து அவன் இதயத்தை வார்த்தை என்னும் வாளால் ஆழமாக காயப்படுத்தினாள்.

“என்ன எதுவுமே பண்ணாம போற?? இன்னிக்கும் எனக்கு தாலி கட்டிருக்க! இப்போ ஒண்ணுயில்ல ரெண்டு தாலி இருக்கு, கழுத்துல. கிட்ட கூட வராம போற??”

“மாயா ப்ளீஸ்ஸ்ஸ்….”

“ச்சீசீ வாய மூடு. கொஞ்ச நாள் ஆனா இவ எல்லாத்தையும் மறந்துருவா… நம்ம கூட வந்துருவான்னு நினைச்சியா?? அது எப்போவுமே நடக்காது! யாருமே இல்லாம தனியா கிடந்து சாவு! அப்போ தான் உனக்கு இருக்குற திமிரு எல்லாம் அடங்கும்.”

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கத்திவிட்டு, கடைசி சவுக்கடியை கொடுத்தாள். “அன்னிக்கு தாலி கட்டிட்டா மட்டும் போதாதுன்னு தான என்னை தொட்ட?? என்னை பொறுத்த வரைக்கும் சுயநினைவே இல்லாத பொண்ண தொட்ட நீ எல்லாம் ஒரு ஆம்பிளையே இல்ல!!! தெரிஞ்சிக்கோ…”

கண்களை உறுட்டியபடி சொல்லிவிட்டு, ஒரு தலையனை மட்டும் எடுத்துக் கொண்டு கார்த்திக் படுக்கை விரித்த இடத்திற்கு நேர் எதிராக படுத்துக் கொண்டாள் மாயா. கார்த்திக் மூடிய கண்களுடன் பல மணி நேரம் அதே இடத்தில் நின்றிருந்தான்!

மறுநாள் காலையில் மறுவீடு சென்றனர் இருவரும். கார்த்திக் வேலை இருப்பதாக கூறிக் வெளியே கிளம்ப, மாயா வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்தாள். அவள் வீட்டில் தங்கியதற்கு நற்செய்தியாக அவளின் அப்ளிகேஷன் தேர்வான கடிதம் வந்தது….

வீட்டில் அனைவருக்கும் சந்தோஷம் பல நாட்கள் கழித்து. இதில் மிகவும் குதூகலித்த விநாயகத்தை மாயா தான் அடக்கினாள். “இது வெறும் அப்ளிகேஷன் செலக்ட் ஆன லெட்டர் தான். இன்னும் மூணு டெஸ்ட் இருக்கு. எல்லாத்தையும் பாஸ் பண்ணா தான் அங்க சீட் எனக்கு.”

“அதெல்லாம் பண்ணிடுவ!” விநாயகத்தின் வாக்கு பலிக்க வேண்டும் என அங்கே எல்லாரும் வேண்டினர். அடுத்த மூன்று நாட்களிலேயே மாயா மைதிலி குடும்பத்தாருடன் சென்னைக்கு பயணப்பட வேண்டும் என்று முடிவாகியது! மைதிலி கார்த்திக்-மாயா திருமணத்திற்காக வந்திருந்தாள் குடும்பத்துடன்.

மாயா இங்கே சென்னை கிளம்ப ஏற்பாடு செய்யப்பட, யாரும் கண்டுக் கொள்ளாத கார்த்திக் சத்தமில்லாமல் பெங்களூர் கிளம்பினான்!! திருமணம் ஆன மூன்றாவது நாள் காலையில் எழும் போதே சுப்பிரமணியத்தின் முன் ஒரு காகிதம் கிடந்தது. தான் வீட்டை விட்டு போவதை தெரிவித்திருந்த கார்த்திக், எப்போழுதாவது முடிந்தால் அவனை மன்னிக்கும்மாறும் கேட்டுக் கொண்டிருந்தான்.

கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரில் கார்த்திக்கின் மேல் தனக்கிருந்த பிணைப்பை உணர்ந்தார் அவர் தந்தை. எல்லாம் திட்டமிட்ட படி சரியாக தான் சென்றுக் கொண்டிருந்தது, கார்த்திக் சென்னையில் குடியேறும் வரை! அதுவும் எங்கே??? மாயா தங்கியிருந்த அதே அடுக்குமாடி குடியிருப்பில்….
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Top