Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 16 1

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 16
கார்த்திக் அபிராமியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வரும் போது உடன் இருந்தான். ஆனால், முகமே பூகம்பத்தை உள்ளடக்கியதாக இருந்தது… சுப்பிரமணியம் எதுவாக இருந்தாலும் வீடு சென்று பார்ப்போம் என முடிவெடுத்திருந்தார். மாயாவின் வீடு வரும் போது நண்பகல் ஒரு மணி ஆகி இருந்தது. அனைவரும் சாப்பிட்டு ஹாலில் கூடினர். அபிராமியும் கூட தான்.

“எப்போவுமே படுத்துட்டே இருக்க முடியல ரித்து. நான் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கேன்.” என இளய மகளிடம் கூறியவாரே சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். மாயா எழுந்து அவர் அருகில் தோள் சாயவும், அவளை தட்டிக் கொடுத்தபடி கேள்விக் கனைகளை எழுப்பினார். “எப்படி உனக்கு எங்கள விட்டுட்டு போகனும்னு தோணுச்சு மாயு?? அம்மா உன்னை அந்த அளவுக்கு டார்சர் பண்ணிட்டேனா?”

வலிமிகுந்த கண்களுடன் மாயாவை தடவிக் கொடுத்தபடி அவர் கேட்க, அழுகையின் ஊடே ரித்தியாவிடம் அளித்த பதிலையே தாயிடமும் கூறினாள். அவளின் அழுகையை பார்த்த விநாயகத்திற்கு தான் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“இப்போ எதுக்கு இப்படி அழுதுட்டே இருக்க?? மூணு நாளா ஒழுங்கா சாப்பிடறது இல்ல, எந்நேரமும் அழுதுட்டே இருக்க… என்ன தான் நடந்துச்சு?? உங்க ரெண்டு பேர்ல யாராவது இப்போ சொல்லியே ஆகனும்!”

மாயாவையும் கார்த்திக்கையும் மாறி மாறி பார்த்தனர் அனைவரும். மாயா விநாயகத்தின் அதட்டலில் மேலும் தாயிடம் ஒன்டினாள். அவளின் கைகள் நடுங்குவதை உணர்ந்த அபிராமிக்கு, எதுவோ பெரிதாக நடந்திருக்கின்றது என்று புரிந்தது. “மாயு இங்க பாருடா… என்ன நடந்துச்சோ அப்படியே சொல்லு… அம்மா தாங்கிப்பேன்! மனசுலயே வைச்சு குழப்பிக்காதடா! ப்ளீஸ் சொல்லுமா…”

அபிராமியின் வற்புறுத்தலில் மாயா வீட்டிலிருந்து கிளம்பியது முதல், கார்த்திக்கிடம் போன் பேசி பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்தது வரை கடகவென ஒப்பித்தாள்.

மேற்கொண்டு நிகழ்ந்ததை கூற முடியாமல், மாயா கார்த்திக்கை குற்றம் சாட்டும் பார்வையுடன் பார்க்க, கார்த்திக் அப்போதும் உதடுகளை பிரிக்கவில்லை! அப்படியே மரமாக குனிந்த தலையுடன் நின்றான். விநாயகமும், சுப்பிரமணியமும் அவனை உலுக்கிக் கேட்டும் பதில் வரவில்லை…. “நீயாவது சொல்லுமா என்னாச்சுன்னு?? எங்களுக்கு எல்லாம் என்னவோ மாதிரி இருக்கு.”

சுப்பிரமணியம் பதற்றமான குரலில் கேட்கவும், மாயாவுக்கு கோபம் தலைக்கேறியது. “என்னா ஆச்சா?? உங்க பையன் எனக்கு மயக்க மருந்து கொடுத்து, என்னை காருக்கு கூட்டிப் போய் அங்கயே இதை கழுத்துல போட்டுட்டான்…”

மூன்று நாட்களாக யாருக்கும் காட்டாமல் ஒளித்து வைத்திருந்த தன் தாலிக் கொடியை வீட்டினருக்கு வெளியே எடுத்து காண்பித்தாள் மாயா. விநாயகமும் சுப்பிரமணியமும் இப்படி தான் ஏதாவது நடந்திருக்கும் என யூகித்திருந்தனர். ஏன்னென்றால் கார்த்திக் மாயாவை தேடி புறப்படும் முன் கூறிய வார்த்தைகள் அவர்களுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. “என்னவும் செய்வேன்! ஆனா, வந்தா அவ கூடத் தான் திரும்ப வருவேன். இல்லனா வரவே மாட்டேன்!” ஆனால், மாயாவை மிரட்டி, கெஞ்சி ஏதாவது செய்வான் என்று எண்ணியிருந்தனர். அவன் இப்படி நினைவில்லாத பெண்ணை திருமணம் செய்துக் கொள்வான் என நினைக்கவில்லை…

அபிராமிக்கும் ரித்தியாவிற்கும் அதிர்ச்சியே! திகைப்பில் அனைவரும் தத்தளிக்க, மாயா அடுத்த அணுகுண்டை சிந்தாமல் சிதராமல் போட்டாள். “எனக்கு எதுவுமே தெரியாது! மயக்கத்துல இருந்தேன். இவன் தான் எல்லாத்தையும் சொன்னான். தாலி செயினை கழுத்துல போட்டுட்டு, பெருந்துரைல ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்…..”

மாயா ஓவென தாயை கட்டிக் கொண்டெ அழத் துவங்க, அபிராமி சமைந்துப் போனார். மாயா முடிக்காமல் விட்ட வாக்கயங்களிலேயே என்ன நடந்திருக்கும் என அறிந்தனர் எல்லோரும். சுப்பிரமணியம் செயலற்று, ஜீவனற்று தன் மகனின் முகத்தை பார்க்க, அவனோ குனிந்த தலையை நிமிரவில்லை….

விநாயகம் தான் பாய்ந்து சென்று அவன் சட்டையை உலுக்கி கேள்வி கேட்டான். “ஏன்டா தாலி தான் கட்டிட்டல?? எதுக்குடா அவளை ஹோட்டலுக்கு எல்லாம் கூட்டிட்டு போன?? உன்னை நம்பி அனுப்பினா, என்னடா செஞ்சுட்டு வந்திருக்க?? தூதூ! அசிங்கமாயில்ல?? ஏன்டா அப்படி பண்ண?? வாயை திறந்து சொல்லு!”

தன் கோபத்தை அடக்க முடியாமல் கார்த்திக்கை சரமாரியாக அடித்தான் விநாயகம். கார்த்திக் தடுக்கவில்லை… அவன் விட்ட ஒரு குத்து கார்த்திக்கின் வாயிலேயே பட, உதடு கிழிந்து ரத்தம் வரத் துவங்கியது!! ரித்தியா விநாயகத்தை பிடித்து நிறுத்தினாலும், அவன் அடங்கவே இல்லை…. “சொல்லுடா இப்போ சொல்ல போறீயா இல்லையா??”

விநாயகம் தன்னை பேசவிடாமல் போக மாட்டான் என உணர்ந்த கார்த்திக், முதன் முதலாக வாய் திறந்தான். “எனக்கு மாயா எங்க தாலியை மதிக்காம தூக்கிப் போட்டுடுவாளோன்னு பயமா இருந்துச்சு! வேற வழி தெரியலை…. அதான் இப்படி…”

இவ்வார்த்தைகளை கேட்டு விநாயகம் மீண்டும் கார்த்திக்கை அடிக்க வர, இம்முறை சுப்பிரமணியம் அவனை தடுத்து அவன் வேலையை தனதாக்கிக் கொண்டார்! ஐம்பத்தி நான்கு வயதில் அவருக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு சக்தி வந்ததோ?! சிறு வயதில் கார்த்திக்கின் மேல் அடிப்பதற்காக கை வைத்ததோடு சரி. அதன்பின் அவர் அவனை அடித்ததில்லை!

அடிப்பதற்கான சந்தர்பம் வந்ததில்லை என்றே கூற வேண்டும். இன்று தன் வளர்ப்பு பொய்த்துப் போனதில் மனம் உடைந்து அவனை விளாச ஆரம்பித்தார். “உன்னை எப்படியெல்லாம் நினைச்சுட்டு இருந்தேன்டா... பாவி! இப்படியா பண்ணுவ?? மனசாட்சியே இல்லாம ஒரு பொண்ணோட வாழ்க்கையே நாசமாக்கிட்டு வந்திருக்கியேடா!

ஒரு பொண்ணு மயக்காம இருக்கும் போது கல்யாணம் பண்றதே தப்பு… இதுல அவள எந்த தைரியத்துல தொட்ட? மிருகமாடா நீ??? உனக்கும் ரேப் பண்றவனுக்கும் என்னடா வித்தியாசம்…. ச்சீசீ, உன்னை தொடறது கூட பாவம் தான்…”

அவனை முடிந்த மட்டும் கீழே தள்ளி அடித்துக் கொண்டே இருந்தவர், கடைசியில் மூச்சு வாங்க தடுமாறி விழப் போன வேளையில் விநாயகம் தான் அவரை தாங்கி அமர வைத்தான்.

அவ்வளவு நேரம் ஆவேசமாக அடித்துக் கொண்டிருந்தவர், சோபாவில் அமர்ந்ததும் உடைந்து அழ ஆரம்பித்தார். “உனக்கு சரின்னு படறத செய்ன்னு சொல்லி சொல்லி வளர்த்ததே தப்பா போச்சே…. கடவுளே!!! என்னை மன்னிச்சிடுங்கமா…. இவன் இப்படி பட்ட கேடுகெட்டவன்னு எனக்கு தெரியாம போச்சு…”

அபிராமியிடம் கை கூப்பி கூனிக் குறுகி சுப்பிரமணியம் மன்னிப்பு வேண்ட, அபிராமி மாயாவை கட்டிக் கொண்டு அழுதபடியே இருந்தார். ரித்தியா ஒரு பக்கம் மடிந்து அழுதவாரு இருக்க, அவர்களை எப்படி தேற்றுவது என தெரியாமல் நின்றான் விநாயகம். கார்த்திக்கை பார்த்த போது கொலைவேறி வந்தது அவனுக்கு…. இருந்தாலும் அடுத்து நடக்க வேண்டியதை பற்றி யோசிப்போம் என சுப்பிரமணியத்திடம் திரும்பி கண் சமிஞ்சை செய்தான்.

அவரும் புரிந்துக் கொண்டு அபிராமியிடம் மேலே என்ன செய்வது என விவாதித்தார். “அம்மா நீங்க உங்க பொண்ணுங்களோட பேசுங்க… இவனுக்கும் இவன இப்படி வளர்த்த எனக்கும் என்ன தண்டனை வேணும்னாலும் வாங்கிக் குடுங்க. போலீஸ் ஸ்டேஷன்ல கம்பிளையின்ட் செஞ்சாலும் எனக்கு சம்மதம் தான்மா…”

“கம்பிளையின்ட் செஞ்சு, என்ன ஆகப் போகுது?? என்னோட பொண்ணு திரும்ப பழைய மாதிரி எனக்கு கிடைப்பாளா சொல்லுங்க?? பாருங்க எப்படி ஒடுங்கிப் போயிருக்கா பாருங்க… எவ்வளோ தைரியமான பொண்ணு தெரியுமா! ப்ச்ச்ச் எல்லாம் போச்சு….”

அபிராமி மீண்டும் அழ ஆரம்பிக்க, சுப்பிரமணியம் வாய் அடைத்து போனார். கார்த்திக் இத்தனைக்கும் வாய் திறக்கவே இல்லை… பல அடிகள் அவன் மேலே! ஆனால், அசையாமல் அமர்ந்திருந்தான் ஓர் மரம் போல். விநாயகம் தான் இவனை பார்ப்பதும் மாயாவை பார்ப்பதுமாக விதியை நொந்தான். பிறகு அவனே அபிராமியிடம் அடுத்து என்ன செய்வது என பேசவும் செய்தான். “இப்போ என்ன தான்மா பண்றது?? மாயாவோட கல்யாணம் பத்தி அவளோட அத்தை, மாமா எல்லாரும் கொஞ்ச நாள்ல பேசுவாங்க…. அப்போ என்ன பண்றது?? ஹாஸ்பெட்டலையே அப்பாவை பார்த்து கல்யாணத்துக்கு மாயா ஒத்துக்கிட்டா போலனு பேசிட்டு இருந்தாங்க அவங்களுக்குள்ள… எல்லாருக்கும் என்ன பதில் சொல்றது??”
 
கார்த்திக் பிரச்சனைய பெரிசு
பண்ணிட்டான்
 
Top