Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 15 2

Advertisement

Admin

Admin
Member

எண்ணங்கள் பல அவள் நெஞ்சில் உலா வந்த நேரம், தூக்கமோ மயக்கமோ அவளின் சிந்தனை ஆற்றலுக்கு தடை போட்டது. மீண்டும் மயங்கினால் என்னென்ன செய்வானோ?? மயக்கத்தையும் மீறி கடினப்பட்டு கண்களை திறக்க முயன்ற மாயாவை பார்த்து, கார்த்திக் அருகே வந்தான். அவன் வந்ததும் சட்டென கட்டிலில் நகர முயன்றால் மாயா. அவளை தொடாமல், அருகில் அமர்ந்துக் கொண்டு “பயப்படாத மாயு. உனக்கு தூக்க மாத்திரை குடுத்திருக்கேன். நீ தூங்குவ கொஞ்ச நேரம், இப்படி தான்.” என்று கனிவான குரலில் கூறினான்.

மாயாவுக்கு வந்த கோபத்திற்கு அவன் சட்டையை பிடித்து, “இன்னும் என்னடா பண்ணப் போற?? எதுக்கு இப்போ தூக்க மாத்திரை குடுத்திருக்க??” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், சில நிமிடங்களிலேயே தூக்கம் அவளை முழுமையாக ஆட்கொண்டது. தூங்கும் அவளையே கண்ணிசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். பிறகு, அவளுக்கு தான் வாங்கி வந்த சுடிதாரை அணிவித்தான். நேரத்தை பார்த்தால் இரவு ஒரு மணி என்றது. தன் அலைப்பேசியை அப்போது தான் எடுத்தான்.

விநாயகமும், சுப்பிரமணியமும் பல முறை அவனை அழைத்து இருந்தனர்… உடனே தன் தந்தைக்கு அழைத்தான். “அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க ரெண்டு பேரும் கோயம்பத்தூருக்கு கிளம்பிடுவோம். அங்க வந்து பேசிக்கலாம். அத்தை எப்படி இருக்காங்க??”

“அவங்கள ஐ.சி.யூ.ல தான் வைச்சிருக்காங்க. நாளைக்கு தான் ரூம்முக்கு மாத்துவாங்களாம். நீ இப்போ எங்க இருக்க?? மாயா எப்படி இருக்கா??”

“நான் அங்க வந்துட்டு எல்லாத்தையும் சொல்றேன்பா. வைச்சிடுறேன்.”

தந்தையிடம் நடந்ததை கூறும் தைரியம் இல்லை கார்த்திக்கிற்கு. அவரிடம் மட்டும் இல்லை, யாரிடமும் கூற முடியாது. தன்னை எல்லோரும் சேர்ந்து வெறுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, என்பதை மட்டும் உணர்ந்தான். காலம் எல்லவற்றையும் ஆற்றும் என்ற நம்பிக்கையில் தந்தையிடம் கூறியபடியே விரைவில் அறையை காலி செய்து, மறுபடியும் மாயாவை கைத்தாங்கலாக பிடித்து காருக்குள் ஏற்றினான்.

கோயம்பத்தூரை நோக்கி பயணப்பட்டவனுக்கு இதயம் தாருமாறாக துடித்தது. அங்கே எல்லோரையும் எப்படி சமாளிப்பது?? விடை அறியா கேள்வியுடன் தன் சொந்த ஊரை அடைந்தும் விட்டான் ஒருவழியாக. மாயா அப்போதும் தூங்கிக் கொண்டே தான் இருந்தாள்.

முதலில் அவன் சென்று நின்ற இடம் அபிராமி இருக்கும் மருத்துவமனை. அங்கே சென்றதும் எல்லோரும் இவனை சூழ்ந்துக் கொண்டு மாயா எங்கே என்றனர் ஒரு குரலாய்.

“மாயா கார்ல இருக்கா. அவளுக்கு தூக்க மாத்திரை குடுத்திருக்கேன். ரித்து நீ வீட்டு சாவி தா, நான் அவளை காலையில கூட்டிட்டு வரேன்.”

“தூக்க மாத்திரையா!!!! அவளுக்கு என்ன ஆச்சு??”

ரித்தியாவின் பதற்றமான குரலை கேட்டு, “ஒண்ணுமில்ல. நான் தான் இங்க வந்தா அத்தையை இன்னும் பயமுறுத்துவான்னு தூங்க வைச்சேன்.” என்று வாயில் வந்ததை விளக்கமாக சொன்னான் கார்த்திக்.

யாரின் முகத்தையும் நேர்கொண்டு பார்க்காமல் பேசும் தன் மகனை, ஆராயும் கண்களுடன் நோக்கினார் சுப்பிரமணியம். “நானும் உன்கூட வரேன், கார்த்திக்.” சுப்பிரமணியம் கூறியதை கேட்டு மறுத்தான் மகனவன். “இல்ல நான் பார்த்துக்கறேன். நீ இங்க இருப்பா. ரித்து சாவி தாமா…”

அவசரமாக சாவியை ரித்தியாவிடமிருந்து பிடிங்கிக் கொண்டு செல்லும் கார்த்திக்கை மூவருமே கலவையான முகத்துடன் நோக்கினர். அபிராமியின் சொந்த பந்தங்கள் யாரிடமும் நடந்ததை கூறவில்லை. மாயா எங்கே என்று கேட்டால் என்னவென்று கூறுவது??

பெருமூச்சுடன் அனைவரும் மீண்டும் இருக்கைகளில் அமர்ந்து விதியை நொந்தனர். கார்த்திக் அதன்பின் தாமதிக்காமல் மாயாவை அவளின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். முதலில் அவளின் துணிகளில் காலர் வைத்த சுடிதாரை தேடி எடுத்து அவளுக்கு உடை மாற்றினான். தான் எடுத்த சுடிதாரில் இருப்பதை பார்த்தால் என்ன செய்வாளோ??

அதன்பின் மாயா எழுவதற்காக காத்திருக்க வேண்டியதாக போயிற்று அவனுக்கு. காலை ஆறரைக்கே மாயாவுக்கு முழிப்பு வந்தது. கண்கள் திறந்தவுடன் தான் இருப்பது தன் அறையில் என்று உணர்ந்தவளின் மனதில் ஒரு நிம்மதி….

தன் வீட்டில் தான் பத்திரமாக இருப்பதாக நினைத்தவளின் நிம்மதியை கலைக்கவே கார்த்திக் அவள் முன்னால் தோன்றினான். அப்போது தான் மாயாவுக்கு இரவு நடந்ததேல்லாம் மீண்டும் மனதில் படையெடுக்க ஆரம்பித்தது. தான் இழந்தது எதை என்று உணர்ந்ததும், ஓவென அழுகை பொங்கியது மாயாவுக்கு! முகத்தில் தன்னை தானே அடித்துக் கொண்டு அழுதாள். அவளின் செய்கையை நிறுத்த வேண்டி அருகில் வந்தவனை மூச்சு வாங்க கோபத்துடன் உறுத்து விழித்தாள். தன் வாழ்க்கையை முற்றிலுமாக நாசம் செய்தவனை நோக்கி கையில் கிடைத்ததை எல்லாம் வீச தொடங்கினாள் மாயா.

அவ்வளவு ஆத்திரம்! அவ்வளவு உக்கிரம்!! அவனிடம் ஓடிச் சென்று கைகளால் முடிந்த மட்டும் அறைந்தாள் கார்த்திக்கை… “பாவி! நீ எல்லாம் ஒரு மனுஷனாடா?? எவ்வளவு தூரம் சொன்னேன் போன்ல?? என்னை விட்டுடு, என்னை விட்டுடுனு. கேட்டியா?? என்னோட வாழ்க்கையே போச்சே உன்னால…. ஐய்யோ அம்மா என்னால தாங்க முடியலையே!!!”

கார்த்திக்கை அடித்து அடித்து ஒய்ந்து போய் மடிந்து அழ ஆரம்பித்தாள். மனம் ஊமையாக அவளின் அன்னை மடியை யாசித்தது. “அம்மா அம்மா” என கூவிய சேய் பறவையாய் அறையிலிருந்து ஓடினாள் வெளியே… வீடு முழுவதும் தேடினாலும் யாரையும் காணவில்லை. அதற்குள் கார்த்திக் வந்து, நடந்தவற்றை கூறவும் அடுத்த இடி ஆடாமல் அசையாமல் மாயாவின் மேல் விழுந்தது.

தான் வீட்டை விட்டு வெளியேறியதால் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்கா?? மீண்டும் உடைந்து அழுதவளை, கார்த்திக் கெஞ்சி ஹாஸ்பெட்டலுக்கு அழைத்தான். “உன்னை ஒரு தடவ அத்தை பார்த்துட்டாங்கனா அவங்களுக்கு சரியாகிடும் மாயா. ப்ளீஸ் வா ஹாஸ்பெட்டல் போலாம். எல்லாருமே அங்க தான் இருக்காங்க.”

தன் தாயை மருத்துவமனையில் காணும் சக்தி இப்போது தனக்கு இருப்பதாக மாயா எண்ணவில்லை. இருந்தாலும் தாய் குணமடைய ஒரு சிறு முயற்சியாய் மருத்துவமனை செல்ல முடிவெடுத்தாள். அப்போதும் அவன் காரில் செல்லாமல், ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனை விரைந்தாள்.

கார்த்திக் வேறு வழியில்லாமல் வீட்டை பூட்டிக் கொண்டு ஆட்டோவை பின் தொடர்ந்தான். மருத்துவமனையில் ரித்தியாவை பார்த்ததும் கண்களில் அணை மீண்டும் உடைந்தது மாயாவுக்கு. “ஏன்டி, எங்கள பத்தியெல்லாம் யோசிச்சு பார்த்தியாடி?? ஏன் இப்படி பண்ண??”

ரித்தியாவும் அழுதுக் கொண்டே மாயாவை கட்டி அணைத்து கேட்கவும், தமைக்கையவளும் அழுகையின் ஊடே பதில் அளித்தாள். “நான் கொஞ்ச நாள் கனி வீட்டுல இருந்துட்டு வந்திடலாம்னு தான் இருந்தேன்…. ஆனா…. இப்படி….” வார்த்தைகள் வராமல், கண்களின் வழியாக மாயா கஷ்டப்படுவதை உணர்ந்ததை ரித்தியா அவளை தேற்றினாள். விநாயகம் தான் குறுக்கே புகுந்து, “முதல்ல நீ அம்மாவ போய் பாரு மாயு. அம்மாக்கு எல்லாம் சரியாகிடும். அழுவாத அம்மாகிட்ட!” என்று அறிவுறுத்தி மாயாவை ஐ.சி.யூ.வின் உள்ளே அனுப்பினான்.

மாயா சென்றதும் அவன் கவனம் கார்த்திக்கின் பக்கம் சென்றது. அவனை நோக்கி அடியெடுத்து வைக்க, கார்த்திக் அதை முன் கூட்டியே அறிந்ததால், உடனே மறுபுறம் திரும்பி நடக்க ஆரம்பித்தான். “டேய் கார்த்தி நில்லுடா ஹே உன்னை தான்டா…”

விநாயகம் கூப்பிடுவதை கேட்டு திரும்பிப் பார்த்த கார்த்திக், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்குடா. நான் அப்புறமா வரேன்.” என ஓடியே போனான். ஓடும் போதே இப்படி எவ்வளவு நாள் ஓட முடியும் என்ற கேள்வியும் பிறந்தது. ஐ.சி.யூவின் உள்ளே மாயாவை ரித்தியாவுடன் பார்த்த அபிராமியின் மனதில் சொல்லொன்னாத அமைதியும், நிம்மதியும் தோன்றியது.

“அம்மாமா சாரிமா… இனிமே இப்படி போக மாட்டேன்மா. உன்மேல சத்தியமா போக மாட்டேன்மா….” மாயா கண்ணீருடன் கூறியதை கேட்டு, அபிராமி கண்களை மூடித் திறந்து தன் ஆறுதல்களை கூறினார். அன்று மாலையே அவரை ரூம்மிற்கு மாற்றினர். ஆனால், யாருக்கும் புரியாத புதிராக விளங்கியது மாயாவின் கண்ணீர்!

விநாயகம், ரித்தியா, சுப்பிரமணியம் மூவரும் எத்தனையோ விதமாக கேட்டும் விட்டனர். ஆனால் பதில் தான் வந்தபாடில்லை. மாயாவுக்கு மடி சாய்ந்து அழ அவளின் அன்னை தேவையாக இருந்தார். ரித்தியாவை பார்த்தாலும் பாவமாக இருந்தது அவளுக்கு. பதினேழே வயதான பெண்ணிடம் தனக்கு நடந்த அசிங்கத்தை என்னவென்று சொல்வது?? அதுவும் மருத்துவமனையில் ஒன்றும் பேச முடியவில்லை. போதாதற்கு மாயா திரும்பியதால் மேலும் மறைக்க முடியாமல், அவளின் அத்தையிடமும் மாமாவிடமும் அபிராமிக்கு வந்த அட்டாக் பற்றி கூற, அவர்கள் எல்லாம் மருத்துவமனைக்கு படையெடுத்தனர். பார்க்க வந்த சொந்தங்கள் எல்லாம் அம்மாவுக்கு நடந்ததை நினைத்து மாயா அழுகிறாள் என அவளை தேற்றினர். ரித்தியா, விநாயகம், சுப்பிரமணியம் இவர்கள் மூவருக்கு மட்டுமே எதுவோ நடந்திருக்கின்றது என்று நெஞ்சை பிசைந்தது.

கார்த்திக் காலையில் சென்றவன் இருட்டிய பின் தான் மருத்துவமனை வந்தான். அதுவும் எல்லோருக்கும் சாப்பிட டிபன் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு உடனே நகர்ந்தான். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது போல…. விநாயகமும் சுப்பிரமணியமும் வீட்டிற்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சென்றனர். மற்றபடி யார் இருந்தார்களோ இல்லையோ அவர்கள் இருந்தனர் மருத்துவமனையில்! ஞாயிறும் திங்களும் இவ்வாரே கழிய, செவ்வாய் அன்று அபிராமியை வீட்டுற்கு அனுப்பினர். சுப்பிரமணியம் தான் அழைத்து வந்தார்.

இப்போது அபிராமி ஓரளவிற்கு தேறி இருந்தாலும், மாயாவுக்கு நடந்ததை கூற பயமாகவே இருந்தது. இதையெல்லாம் கேட்டு அன்னைக்கு மீண்டும் ஏதாவது வந்துவிட்டால்?? அதுவே அவளின் வாயை கட்டிப் போட்டது! ஆனால், மூவர் குழு அவளிடம் விஷயத்தை வாங்காமல் விடவில்லை… அதன் பிறகு நடந்ததோ??

 

Advertisement

Top