Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 15 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 15
மாயாவுக்கு கண் முழித்ததும் முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை! தலை பாரமாக சுற்றியது! கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன…. எதுவோ ஒன்று அவளின் பின் மண்டையில் சுத்தியல் கொண்டு அடிப்பது போன்ற ஒரு பிரம்மை! எழுந்துக் கொள்ளவும் முடியாத ஒரு மயக்கம்… எல்லாம் சேர்ந்து அவளை பாடாக படுத்தினாலும், தான் எங்கேயிருக்கிறோம் என்று அவளுக்கு அறிய வேண்டியிருந்தது!

கண்களை கஷ்டப்பட்டு திறந்தால் மேலே இருந்த மின்விசிறி அந்த அறை முழுவதும் சூழலுவது போல மங்கலாக தோன்றியது. பாதி மயக்கத்தில் இமைகளை சிமிட்டியபடி நன்றாக திறந்து பார்த்ததும் தான் புரிந்தது தான் படுத்துக் கொண்டிருப்பது ஒரு ஹோட்டல் அறையில் என! தனி அறை என்றவுடன் பயம் நெஞ்சை அடைக்க, யார் தன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது என அறிந்துக் கொள்ள அவசர அவசரமாக எழ பார்த்தாள்.

முடியவில்லை…. அவளால் கால்களை அசைத்து, கைகளை ஊன்றி எழவே முடியவில்லை… உடம்பு முழுவதும் ஒவ்வொரு அணுவிலும் ஒரு வித வலி ஓடியதை உணர்ந்ததும், மாயாவிற்கு என்னவோ தோன்ற தன்னை குனிந்து பார்த்தாள் அப்போது தான். தன் ஆடைகள் எங்கே என கேட்கும் வண்ணம் அவள் உடைகளற்று போர்வையால் மூடப்பட்டு இருந்தாள். தனக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை உணர முடியாத பேதை அல்லவே அவள்….

உடம்பில் சட்டென எழுந்த கூச்சத்திலும் அவமானத்திலும் போர்வையோடு சுருட்டிக் கொண்டாள் அவளை!! திகைப்பு என்பதையும் தாண்டி மாயா அதிர்ந்து அப்படியே உறைந்து போனாள் சில நொடிகள்! வாழ்க்கையே முடிந்தது போன்ற உணர்வு அவளுக்குள்!! அப்போது தான் மாயா எழுந்த ஓசையை கேட்டு சேரில் அமர்ந்திருந்த கார்த்திக் அவளிடம் வந்தான். அவனை பார்த்ததும் தான் அடுத்த பேரதர்ச்சிக்கு உள்ளானாள் மாயா.

இவனா?? கடைசியில் கார்த்திக்கா இப்படி பண்ணியது?? தான் மனதார நேசித்தவனா தன் நினைவு, விருப்பம் இரண்டும் இல்லாமல் தன்னை சீரழித்தது??? மாயாவால் நம்பவே முடியவில்லை! ஏற்கனவே முடியாமல் சுற்றிய தலை, இப்போது மயக்கத்தையும் தாண்டி அதிர்ச்சியில் புதிய மயக்கம் வருவது போன்ற ஒரு பிரம்மையை உண்டு பண்ணியது. மாயாவால் வாய் திறந்து கார்த்திக்கை திட்டக் கூட முடியவில்லை! உதடுகள் பிரிய மறுத்தன, அழுகையில்!!!

அவள் ஊமையாக அழுவதை பார்த்து கார்த்திக் ஊமையாக நிற்காமல் வாய் திறந்தான். “மாயா நான் தெரியாம செஞ்சிட்டேன்னு சொல்லப் போறதில்லை. தெரிஞ்சே தான் பண்ணேன்… பட், எனக்கு வேற வழி தெரியலை…. சாரின்னு கேட்டு தப்பிக்க முடியாது. அந்த அளவுக்கு சின்ன தப்பு இல்லைன்னும் தெரியும். இதுக்காக நான் நீ என்ன பனிஷ்மென்ட் குடுத்தாலும் தாங்கிக்கறேன். எனக்கு அந்த நேரம் நீ மட்டும் தான் கண்ணுல தெரிஞ்ச…. உன்னை என்னால எப்போவும் இழக்க முடியாது மாயு! அதான் இப்படி….”

கார்த்திக் பேசப் பேச கத்தி ஒன்று கிடைத்தால் குத்தி கொலைப் பண்ணி விடலாமா என தோன்றியது மாயாவிற்கு. பாவி, இப்படி குற்ற உணர்ச்சியுடன் பேசுவது போல் நடித்தால், தான் அவனை மன்னித்து விடுவோம் என்ற நினைப்பா?? அவனின் முகத்தை கூட காண பிடிக்காமல், கண்களை மூடிக் கொண்டாள் மாயா. ஆனால், இவள் இப்படி புறக்கனிப்பை மதியாமல், கார்த்திக் நடந்தவற்றை அவளுக்கு விளக்கினான்.

காரில் ஈரோடு நோக்கி பயணிக்கும் போதே மனதில் பல திட்டங்களுடன் தான் விரைந்தான் கார்த்திக்! பேருந்து நிலையத்தில் அலைந்து திரிந்து தேடியதில் கடைசியாக அவனின் கண்ணம்மா கண்ணில் பட்டாள். அதன்பின் தான் அவன் மாயாவிற்கு மயக்க மருந்து கொடுத்து, அவளை கைத்தாங்கலாக காருக்கு கூட்டிச் சென்றான். அவனின் கார் பேருந்து நிறுத்தத்திற்கு சற்று ஒதுக்கப்புறமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்தது.

அவளை பின் இருக்கையில் கிடத்திவிட்டு, மூச்சு வாங்க அடுத்து செய்யப்போவதை பற்றி சிந்திக்கலானான். சிறிதும் தயக்கம் இன்றி அடுத்து அவன் செய்த காரியம் தான் அனைத்திற்கும் தொடக்கப் புள்ளியாக ஆகியது.

தன் ஊரில் வாங்கி வந்த தங்க தாலி செயினை தன் பாக்கேட்டில் இருந்து எடுத்து, மாயாவின் கழுத்தில் போட்டு அவளின் விருப்பம் அல்லாமலே தன்னில் பாதியாக ஆக்கிக் கொண்டான்! ஒரு நிமிடம் அவனின் செயலை அவனாலேயே நம்ப இயலவில்லை.

இந்த கல்யாணத்தை மாயா ஏற்றுக் கொள்வாளா?? கல்யாணம் என்பதை விட தாலி என கூற வேண்டுமோ…. மயக்கம் தெளிந்து எழுந்ததும், “போடா என்னோட நினைவே இல்லாம நீ தாலி போட்டுட்டா அது கல்யாணம் ஆகிடுமா?? இந்தா நீ ஆச்சு உன் தாலியாச்சு!” என அதை தூக்கிப் போட்டுவிட்டாள்?

இந்த சூழ்நிலையை கார்த்திக் யோசிக்கவே இல்லை. அதுவரை மாயாவிற்கு தாலியை அணிவிக்க வேண்டும் என்று மட்டும் தான் சிந்தித்தான். இப்போது மாயாவை பார்த்ததும் அது தோன்றியது. அவளின் பிடிவாதமும், இறுகிய இதயமும் இப்போது என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்…

அதற்குள் தான் எதாவது செய்தாக வேண்டும்! அவளை தன்னிடம் இருந்து நீங்காமல் காத்துக் கொள்ள என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்… இப்படி யோசித்ததும், கார்த்திக்கின் மனதை ஏதேதோ எண்ணங்கள் வந்து சூழ்ந்துக் கொண்டன. மனதில் வழி ஒன்று பிறந்ததும், காரை எடுத்து கோயம்பத்தூரை நோக்கி செலுத்தினான். ஈரோட்டில் இருந்து அரை மணி நேரத்தில் அவனை வரவேற்றது பெருந்துரை!

முதலில் அவன் மாயாவிற்கு ஒரு ரெடிமேட் சுடிதார் எடுத்தான். பிறகு, அந்த ஊரிலேயே தான் நினைத்தை செய்து முடிக்க கார்த்திக் ஒரு நடுத்தர தரமான தங்கும் விடுதியை நாடினான். மாயாவை ஒரு கையில் தாங்கலாக பிடித்து வரவும், ஹோட்டல் ரிசப்ஷனில் இருப்பவன் என்னவென்று வினவினான்.

“என்னோட வைப் சார். அவ இப்போ மூணு மாசம்… அதனால, தலை சுத்தல் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு அவளுக்கு!” மாயாவின் கழுத்தில் தொங்கிய தாலியே கார்த்திக் கூறியதை நம்புவதற்கு போதுமானதாக இருந்தது அந்த ஊழியற்கு. போதாதற்கு, கர்ப்பிணி பெண் என்ற இரக்கமும் சேர்ந்துக் கொள்ள உடனடியாக அறை ஒதுக்கினான்.

“முதல்ல உட்காருங்க சார். மேடமுக்கு எதாவது சாப்பிட, குடிக்க??”

“அதெல்லாம் வேணாம் சார். இப்போ தான் வாந்தி எடுத்தா சாப்பிட்ட எல்லாத்தையும்…”

வாய் கூசாமல் கார்த்திக் பொய் அளந்துக் கொண்டே தங்களுக்காக கொடுத்த அறையில் புகுந்தான். பின்னேயே கார்த்திக் கொண்டு வந்த பை, ஹோட்டல் ஊழியர் ஒருவரால் கொண்டு வந்து வைக்கப்பட்டது. மாயாவை படுக்க வைத்து, ஹோட்டல் காரனுக்கு இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினான் கார்த்திக்.

அவன் மாயாவை பேருந்து நிலைத்தில் பார்த்ததுமே விநாயகத்தை அழைத்து விஷயத்தை கூறிவிட்டான். அதனால் இப்போது கார்த்திக்கின் மனதில் வேறு யாரும், எந்தவித நினைவும் இல்லை! அவன் மாயா… இவர்கள் மட்டுமே…

அந்த இரவுப் பொழுதும், மாயாவின் மேல் அவனுக்கிருந்த தீராத காதலும், யாருமற்ற தனிமையும் அவனின் மனதில் என்னென்னவோ முடிவுகளை எடுக்க வைத்தது. அதன் விளைவாகவே அவன் மாயாவை தன்னில் பாதியாக்கிக் கொண்டான், உடலாலும்!!!

அதன் மேற்கொண்டு கூற முடியாமல் கார்த்திக் அமைதியாக, மாயாவிற்கு அந்த ஆழ்ந்த மயக்கத்திலும், வாந்தி வருவது போல் இருந்தது இதையெல்லாம் கேட்டு. அவன் கூறியதும் தான் தன் கழுத்தில் இருந்த தாலிக் கொடியை பார்த்தாள் மாயா. இதை விட தூக்கு கயிறே மேல் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றாமல் இல்லை. தூக்கு கயிறில் தொங்குவதற்கு தான் என்ன தவறு செய்தோம்?? தப்பு செய்தவனே நன்றாக தன்னிடம் எல்லாவற்றையும் கூறும் போது தான் ஏன் சாக வேண்டும்??
 
Top