Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்)7ம் அத்தியாயம்

Advertisement

இள மாறன் சந்திக்க நினைத்த பூங்குழலியா.....
சேரர்கள் தான் எல்லா சதிக்கும் காரணமா .... கிரேக்க இளவரசர் யாருக்கு ஆதரவு தருவார்....
 
கதையில் குறையா? காட்சி அமைப்பில் குறையா? இல்லை இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காது என்று மக்கள் நினைக்கின்றார்களா? ஜாலியான நாகரீக காதல் கதை தான் பிடிக்கும் போல.... ???????
நீங்க இப்படி எல்லாம் நினைக்க வேண்டாம்... வரலாற்று புதினம் கொஞ்சம் பதிவு போன பிறகு படிக்கலாமனு கூட நிறைய பேர் நினைப்பார்கள்..... நானும் அப்படி தான் இருந்தேன் என்னால் சஸ்பென்ஸ் தாங்க முடியாது ஆனாலும் இன்று படித்து விட்டேன்.. ....

கதை தொய்வில்லாமல் நகர்கிறது..... தொடர்ந்து பதிவு விடுங்கள்..... கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள்.....
 
மிக்க நன்றி சகோதரி... சஸ்பென்ஸ் தான் வரலாற்று புதினங்களின் தனித்துவம். ஒரே விதத்தில் யூகிக்க விடாது அடுத்த யூகத்தை புதிதாக உருவாகும். அதுவே அடுத்த பாகத்தை படிக்க தூண்டும். இந்த கதையின் அடுத்த அத்தியாயம் வரும் திங்கள் அன்று பதிவிடப்படும். நன்றி சகோதரி
 
Last edited:
இள மாறன் சந்திக்க நினைத்த பூங்குழலியா.....
சேரர்கள் தான் எல்லா சதிக்கும் காரணமா .... கிரேக்க இளவரசர் யாருக்கு ஆதரவு தருவார்....
கிரேக்க இளவரசரை விட அவரின் இளைய சகோதரிக்கு பலம் அதிகம் என்று ஆறாம் அத்தியாயத்தில் குறிப்பிட்டு உள்ளேன். இன்னமும் வராத அந்த கதாபாத்திரம் தான் சிறப்பு மிக்கது. போஸ்டரை பாருங்கள். Photo_1591177914561.jpg
 
ஒரு விஷயம் நெருடியது.
இரவில் வந்த பெண்ணை விசாரிக்க வேண்டும் என்று வந்த போது, வேல்விழியோடு நலங்கிள்ளியும் சேர்ந்து பயப்படுவது போல எழுதி இருக்கிறீர்கள். "நாக்கு மேல்லண்ணத்தில் ஒட்டிக் கொண்டது." என்பது போல வரும்.

போர் வீரன் நலங்கிள்ளி, வீராங்கனை வேல் விழி. இவர்கள் மறைவிடத்தில் இருக்க, பயம் கொள்வது ஏன்?

லாஜிக் இடிக்கிறது நண்பா.?
 
இந்த பதிவுக்கு நன்றி. வேல்விழியும், நலங்கிள்ளியும் கோட்டைத் தலைவன் விசாரிக்க வரும்போது மறைந்து கொள்வதும். வந்த பெண்ணை விசாரிக்க வேண்டுமென அவன் கேட்கும் போது ஞானப்பிரம்மர் முதல் அனைவருக்கும் ஏற்படும் ஒருவித பதட்டம் இயற்கை. அதிலும் நலங்கிள்ளி, தலைமறைவாக உறையூர் கோட்டைக்குள் இருக்கின்றான். அவனை விரோதியாக கருதி இருக்கும் நெடுங்கிள்ளியிடம் சிக்கிக்கொண்டால் அவனுடைய கனவு எதுவும் நிறைவேறாது. காலமெல்லாம் சிறையில் அடைபட வேண்டும். வேல்விழி வேறு ராஜ்ஜியத்தை சேர்ந்தவள். அவளை தேடி கண்டுபிடிக்கத்தான் அரச உத்தரவு. இவ்வாறு இருக்க கோட்டைத்தலைவன் வேல்விழியை விசாரிக்க வேண்டும். அவ்வாறு வேல்விழி அவன் முன் விசாரணைக்கு சென்றால் அவன் அவளை சிறையெடுத்து இரும்பிடைவல்லனின் முன் நிறுத்துவான். அவளை காப்பாற்ற நலங்கிள்ளி சண்டையிட நேரும். அப்போது எதிரிகள் அனைவரும் ஒன்றாக ஞானப்பிரம்மர் வீட்டில் இருந்ததாக குற்றபழி அவர் மீது விழும். அத்தனையும் இப்போது உள்ள சூழலில் ஆபத்து. அதை நினைத்த மாத்திரத்தில், எழும் அச்ச உணர்வே மேல் வாயில் நாவு ஒட்டிய உணர்வு. இது வீரம் சார்ந்த பயம் இல்லை. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. ஆகவே இதில் லாஜிக் ஓட்டை இருப்பதாக எனக்கு தோன்றவே இல்லை. மிக்க நன்றி சகோதரி
 
Top