Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-4

Advertisement

Miloni

Active member
Member






மறுநாள் காலையில் வழக்கம்போல் தாமதமாக எழுந்து அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு வேலைக்கு கிளம்பினாள் சைதன்யா..
அவசர அவசரமாக ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு அந்த வணிக வளாகத்திற்கு வந்து சேர்ந்தபோது சிறிது தாமதமாக விட்டிருந்தது.. லிப்ட்டை ஓபன் பண்ணி அவளுடைய பொட்டிக் இருந்த இரண்டாவது தளத்திற்குள் நுழைந்தபோது சுந்தரி அவளைப் பார்த்து என்னக்கா இப்படி லேட்டாக வந்திருக்கிறாய் இன்று அவர்களிடம் பேசச்செல்ல வேண்டுமல்லவா அவர்கள் மணிக்கணக்கை சரியாக பின்பற்றுபவர்கள் முதல் நாளே லேட்டாக சென்றாள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்..


அவளை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு மூன்றாவது தளத்திற்கு சென்றபோது ரிசப்ஷனிஸ்ட் ரஞ்சனி ஸ்நேகமாக புன்னகைத்து அவர்களைப் பற்றி விவரம் கேட்டாள்.. விவரம் சொன்னவுடன் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு மேனேஜரை அழைத்து விவரம் சொன்னாள்..

ஆனால் மேனேஜருக்கு பதிலாக மிதுர்வனுடைய பிஏ வந்து அவர்களை சந்தித்தான் தன் பெயர் கருணாகரன் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவளைப்பற்றி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை வசதியாக இருக்கிறதா என பார்க்கச் சொன்னான்..அவனுடன் கூடவே அவர்களும் சென்றார்கள்..

அப்போது கருணாகரன் மேடம் நீங்கள் இனி இங்கு வரும்போது தாமதம் ஆகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் எங்கள் எம்டிக்கு தாமதமாக வருவது பிடிக்காது என சொன்னான்..
சுந்தரியை பார்த்துக்கொண்டே " ம் " தலையாட்டினாள்..

அவர்களுக்கான இடத்தை பார்வையிட்டபோது மிகவும் விஸ்தாரமாக கட்டிங் டேபிள் ஒருபுறமும் மிஷின்கள் ஒருபுறம் எனபார்க்க நன்றாகவே இருந்தது..
மேடம் உங்களுக்கு இந்த இடம் வசதியாக இருக்கிறதா ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமானாலும் சொல்லுங்கள் செய்துவிடலாம்..
இல்லை சார் இதுவே நன்றாக இருக்கிறது ஏதும் தேவையானால் சொல்கிறேன் என ஒன்றிரண்டு பொருட்களை இடம் மாற்றிவைக்க மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்..


கிளம்பும்முன் யார் யாருக்கு உடைதைக்க வேண்டும் என்ற லிஸ்டை பெற்றுக்கொண்டாள் அவர்களுக்கு தேவையான ஆடைகள் குறித்த விளக்கங்களை கேட்டபோது அவர்கள் பிறகு அதைப்பற்றி உங்களுக்கு தெரிவிப்பார்கள் என கூறினான்..

இப்போது சிறுவர் சிறுமிகளின் ஆடைகளுக்கு டிசைனிங் மட்டும் உடனடியாக கொடுக்குமாறு கேட்டான்..
சரி சார் என விடைபெற்றுக் கிளம்பினாள்..


பொட்டிக் வந்து மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் இடையிடையே சிறுவர் சிறுமியரின் ஆடைகளைப் பற்றிய புது வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என சிந்தனை ஓடியது புதிதாக தோன்றும் எண்ணங்களை வரைந்து வைத்தாள் ஏற்கனவே உள்ள டிசைன்களில் சிறந்ததை தேர்ந்தெடுத்து வைத்தாள்..
அந்த டிசைன்களுக்கு ஏற்ப துணிகளை எடுத்துவைத்தாள் சிறியவர்களுக்கு என்பதால் இரண்டு மூன்று துணி வகைகளை தேர்ந்தெடுத்தாள்..
பருத்தி ஆடைகளையே முன்னிறுத்தி இருந்தாள் எல்லா வேலையும் முடித்து நிமிர்ந்தபோது களைப்பாக இருந்தது..


மறுநாள் அந்த டிசைன்கள் அடங்கிய பைலை எடுத்துக்கொண்டு பிஏ கருணாகரனை சந்தித்து அவரிடம் கொடுத்தாள்..
இன்னொரு பைலில் அவள் தேர்ந்தெடுத்த ஆடையின் வகைகளை "பின்" செய்து கொடுத்திருந்தாள்..
அவன் அந்தப் பைலில் உள்ள எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது மேடம் நான் அவர்களிடம் காட்டிவிட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன் என்றான்..


சந்தோஷுக்கு பதற்றமாகவே இருந்தது ஒரு பெரிய வேலையை முதல்முறையாக செய்யப்போகிறான் அதனால் அவ்வப்பொழுது அவளிடம் வந்து யோசனை கேட்டுவிட்டு செல்வான்.. அவன் பயமும் நியாயம்தானே சிறுசிறு கம்பெனி நிகழ்ச்சிகள் கல்யாண நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார்கள் அதில் ஒரு சிலர் மட்டுமே முக்கிய விருந்தாளியாக இருப்பார்கள் ஆனால் இங்கு வருபவர்கள் எல்லாருமே முக்கிய விருந்தாளிகள் அவர்களை வரவேற்பது முதல் திருப்பி அனுப்பிவைப்பது எல்லாம் இவர்களது பொறுப்புதான் அதனால் அவனுக்கு பயமாக இருந்தது அவனிடம் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாலும் அவளுக்கும் மலைப்பாக தான் இருந்தது..


அதைப்பற்றி மேலும் யோசிக்க நேரமில்லாமல் அடுத்தடுத்த வேலைகள் அவளுக்கு சரியாக இருந்தது..
மறுநாள் வேலையில் இருந்து கிளம்பும்போது சந்தியாவிடம் இருந்து கால்வந்தது அதனை புன்னகையுடன் பார்த்தவாறு அட்டென்ட் செய்தாள்..

சந்தியாவும் இவர்களின் சின்ன வயது தோழி தான் ஆனால் அவள் வேலை கிடைத்து பெங்களூரு சென்று விட்டாள் மூவரும் ஒரே துறையில்தான் பயின்றார்கள் ஆனால் சந்தோஷும் சைதன்யாவும் சென்னையை விட்டு வர மறுத்துவிட அவள் மட்டும் பெங்களூர் போய் வேலை செய்வது என முடிவானது.. அவளையும் தங்களுடனே பொட்டிக்கில் சேர்ந்துகொள்ள சொல்ல அவள் ஏனோ வேண்டாம் என மறுத்துவிட்டாள்.. இவர்களும் அவளது விருப்பம் என விட்டுவிட்டார்கள்..


பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் அவள் கால் செய்வாள் வேலை அதிகமாக இருந்ததால் சைதன்யாவால் அவளை சென்று பார்க்க முடியவில்லை அவளாக பொட்டிக்கிற்கு இரண்டுமுறை வந்து பார்த்தாள்..
இந்த முறை அவள் வரும்போது கண்டிப்பாக சைதன்யாவை வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தாள்..
எப்படி டி இருக்கிறாய் என சைதன்யா கேட்க அவள் பொரிய தொடங்கினாள் பெங்களூர் போனதிலிருந்து மாதத்திற்கு ஒரு தடவை கால் செய்வதே உனக்கு பெரியதாக இருக்கிறது நானே கால்செய்து பேசினாலும் வேலையாக இருக்கிறேன் கடைக்கு பொருட்கள் வாங்கி கொண்டிருக்கிறேன் என ஏதாவது சொல்லி கட் செய்து விடுகிறாய்..
உன்னை வெளியே வேலை பார்க்க அனுப்பி விட்டு அந்த தடிமாடு என்ன செய்கிறது என சந்தோஷை திட்ட அவனை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் அவனுக்கும் வேலை சரியாக இருக்கிறது டி சரி இப்பொழுது நீ எங்கே இருக்கிறாய் பேச்சை மாற்றினாள்..


அதானே அவனை ஒன்றும் சொல்லிவிட கூடாதே, நான் சென்னையில்தான் இருக்கிறேன் நாளையே ஊருக்கு கிளம்புகிறேன் நீ வீட்டுக்கு வாயேன் டி உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிறது என வருத்தத்துடன் கேட்கவும் சைதன்யாவுக்கும் அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது..
மணி ஆறு ஆக போகிறது அவள் வீட்டிற்கு சென்றுவிட்டு எட்டு மணிக்கு கிளம்பி விடலாம் என நினைத்து சரி வருகிறேன் என்று சொல்லவும் அவள் ஆர்ப்பரித்துவிட்டு போனை வைத்தாள்..


சைதன்யாவும் சிரித்துக்கொண்டே அவள் வீடு நோக்கி ஸ்கூட்டியை ஓட்டி சென்றாள்... அவளை வரவேற்று உபசரித்தவள் அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.. இருவரும் வெகுநாள் கதைகளை பேசஆரம்பித்தனர் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு எதார்த்தமாக மணியை பார்க்க அது ஒன்பது மணியை காட்டியது..

தியா மணி ஆகிவிட்டது டி நான் பாட்டுக்கு கவனிக்காமலேயே பேசிக்கொண்டு இருந்துவிட்டேன் என் சாலையில் ஆள் நடமாட்டமே இருக்காது கிளம்புகிறேன் அடுத்த முறை வரும் போது சந்திப்போம் என விடைப்பெற்று கிளம்பினாள் வேகமாக வந்த பொழுதும் ஒருமுறை வண்டி மக்கர் செய்ய புறப்பட நேரமாகிவிட்டது..


வண்டியை சரிசெய்து ஸ்டார்ட் செய்தபோது இன்னொரு பைக்கில் வந்த இரு வாலிபர்கள் அவளை கலாட்டா செய்தனர்.. இவளை முன்னாலேயும் போகவிடாமல் அவர்களும் போகாமல் முன்னும் பின்னுமாக போய்க்கொண்டிருந்தனர் ஒரு கட்டத்தில் ஒரு கார் அவர்களை இடிப்பது போல் வர பயத்தில் அவர்கள் அவள் போய்க்கொண்டிருந்த திசையில் பைக்கை திருப்ப ஸ்கூட்டியில் லைட்டாக இடித்துவிட்டனர் அவள் பிரேக்போட்டு சுதாரிப்பதற்குள் வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டாள் அடி ஒன்றும் இல்லையெனினும் விழுந்த அதிர்ச்சியில் மயங்கி விட்டாள்..


அவள் மயங்கியதை பார்த்த அந்த இளைஞர்கள் பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டனர்.. காரிலிருந்து இறங்கிய அவன் அவளை தூக்கி மடியில் சாய்த்து "சது" என அழைத்து கன்னத்தை தட்டுவது அரை மயக்கத்தில் தெரிந்தது.. குரல் யாரென தெரியாவிட்டாலும் அவனது பதற்றமான அழைப்பிலும் அக்கறையிலும் அதிக அன்பு தெரிந்தது..
அவளை அணைத்தவாறு தூக்கி கார்சீட்டில் கிடத்தினான் யாரென அவள் யோசிக்கும்பொழுதே முழுதாக மயங்கி விட்டாள்..

அவளை ஹாஸ்பிடலில் சேர்த்து அவள் கடைசியாக அழைத்த நம்பருக்கு அழைத்து தகவல் சொல்லி சந்தியாவை வரவழைத்து அவளிடம் விபரம் சொல்லி அவளுக்கு ஒன்றும் இல்லை அதிர்ச்சியால் வந்த மயக்கம் தான் என தெரிந்துகொண்டு விடைபெற்றுக் கிளம்பினான்..
கிளம்பும் போது அவன் சைதன்யாவை பார்த்த பார்வையில் அப்பட்டமான காதல் தெரிந்தது.. அவன் யார் என யோசிக்கும் முன்னே விடைபெற்று கிளம்பி விட்டான்.. பெருமூச்சுடன் சைதன்யாவின் வீட்டுக்கு சொல்லிவிட்டு அவர்கள் வருவதற்காகக் காத்திருந்தாள்..


மறுநாள் காலையில் அவள் கண்விழித்த போது அருணாவிடமிருந்து சரியான மண்டகப்படி கிடைத்தது.. சைதன்யாவுக்கு ஸ்கூட்டியிலிருந்து விழுந்தது வரை தான் ஞாபகம் இருந்தது சந்தியாவும் யாரோ ஒருவன் கொண்டுவந்து சேர்த்துவிட்டு தகவல் தெரிவித்ததாக மட்டும்தான் சொன்னாள் அவன் பார்வையை பற்றி சொல்லலாமா என யோசித்துவிட்டு வேண்டாமென விட்டுவிட்டாள் .. அவனுக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்க முடியவில்லையே என்று வருத்தம் அடைந்தாள் சைதன்யா..





no_photo.png
ReplyForward








 
அந்தக் காரில் வந்தது மிதுர்வன்தானே
பார்றா பய புள்ளைக்கு சைதன்யாவின் மீது எம்புட்டு லவ்வான லவ்வு
"சது"வாமே
அப்போ தங்கச்சிக்கு சைது மேல பாசம் இல்லையா?
பாசம் நேசம் லவ்வு எல்லாம் அண்ணனுக்குத்தானா?
பின்னே காலம் இருக்கும் இருப்பில் நேரம் கெட்ட நேரத்தில் ப்ரெண்ட்டைப் பார்க்கப் போயிட்டு கீழே விழுந்து புதையல் எடுத்துட்டு வந்தால் மகளை அருணா கொஞ்சுவாங்களா?
 
Last edited:
அந்தக் காரில் வந்தது மிதுர்வன்தானே
பார்றா பய புள்ளைக்கு சைதன்யாவின் மீது எம்புட்டு லவ்வான லவ்வு
"சது"வாமே
அப்போ தங்கச்சிக்கு சைது மேல பாசம் இல்லையா?
பாசம் நேசம் லவ்வு எல்லாம் அண்ணனுக்குத்தானா?
பின்னே காலம் இருக்கும் இருப்பில் நேரம் கெட்ட நேரத்தில் ப்ரெண்ட்டைப் பார்க்கப் போயிட்டு கீழே விழுந்து புதையல் எடுத்துட்டு வந்தால் மகளை அருணா கொஞ்சுவாங்களா?
??
 
Top