Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!- 22

Advertisement

பார்க்கிங் பகுதிக்கு ஸ்கூட்டியை எடுக்க செல்கையில் ஒருவன் அவளிடம் வந்து "எக்ஸ்க்யூஸ் மீ சைதன்யா ஐ அம் அரவிந்த் நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்றான்..

சிறிது தயக்கத்திற்கு பிறகு சொல்லுங்கள் என்றாள்.. இங்கேயே பேச வேண்டாம் சைதன்யா வாருங்கள் அந்த கார்டனில் இருக்கிற காபி ஷாப்பிற்கு போகலாம் எனக் கூட்டிச் சென்றான் அங்கே சென்ற பின் தயங்கி தயங்கி பேசினான்..

அரவிந்த் நீங்கள் சீக்கிரம் என்னவென்று சொல்லுங்கள் பிறகு இருட்டி விடப்போகிறது அதற்கு பிறகு என்னால் எங்கள் சாலையில் போக முடியாது நீங்கள் சொல்ல வந்ததை சொல்லுங்கள் எனவும் மேலும் தயங்கிவிட்டு சைதன்யா நான் மிதுர்வன் சாருடைய ஐடி கம்பெனியில் வேலை செய்கிறேன்..

நல்ல சம்பளம், வீட்டிற்கு ஒரே பையன், உங்களை வந்த நாளில் இருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் எனக்கு உங்களை மிகவும் பிடித்து இருக்கிறது உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் நீங்கள்தான் எனக்கு நல்ல முடிவாக சொல்ல வேண்டும் என அவள் முகத்தை பார்த்தான்..

ஒரு கிளையன்ட்டிடம் மீட்டிங் முடித்து விட்டு மேனேஜருடன் அங்கே அமர்ந்து டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தான் மிதுர்வன்.. மேனேஜர் விடைபெற்று கிளம்பவும் காபி ஆர்டர் செய்து அருகில் இருந்த டேபிளில் காபி குடித்துக் கொண்டிருந்தான்..

எதார்த்தமாக திரும்புகையில் அரவிந்தும் சைதன்யாவும் வருவதைப் பார்த்தான் பொழுது சாய்ந்து இருந்ததாலும் அவன் மறைவான இடத்தில் அமர்ந்து இருந்ததாலும் அவர்களுக்கு அவன் அமர்ந்திருந்தது தெரியவில்லை..
அரவிந்த் பேசப் பேச மிது உள்ளங்கையை மடக்கி தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தான்..

ஆனால் சைதன்யா, சாரி அரவிந்த் எனக்கு இதில் விருப்பம் இல்லை எனவும் ஏமாற்றமான அரவிந்த் ஏன் சைதன்யா என்னை நிராகரிக்க என்ன காரணம் அழகில்லையா, அறிவில்லையா, படிப்பில்லையா, பணமில்லையா, நான் என் பெற்றோருக்கு ஒரே பையன் அவர்கள் உன்னை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள் என சொல்ல சாரி அரவிந்த் எனக்கு உங்களிடம் அப்படி ஒரு எண்ணம் தோன்றவில்லை என்றாள்..

இப்பொழுது இல்லை என்றாலும் பிறகு தோன்றலாம் இல்லையா..

கண்டிப்பாக தோன்றாது அரவிந்த்..

ஏன் சைதன்யா நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா..

என் தனிப்பட்ட விஷயங்களை நான் யாரிடமும் சொல்வது கிடையாது அரவிந்த் உங்களுக்கு நல்ல பெண்ணாக கிடைக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் இப்பொழுது நான் வருகிறேன் எனக்கூறி கிளம்பி விட்டாள்..

அரவிந்த் வருத்தத்துடன் அவள் போவதை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்..

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மிதுவுக்கு சைதன்யாவை நினைத்து நிம்மதியாக இருந்தாலும் அரவிந்தை நினைத்து கோபமாக வந்தது..

எவ்வளவு தைரியம் அவனுக்கு அவள் மறுக்க மறுக்க பிடிவாதமாக இருக்கிறானே இவனுக்கு சரியான பாடம் புகட்டுகிறேன் என அங்கிருந்து கோபமாக எழுந்து சென்றான்..

அதன் பிறகு இரண்டொரு நாளில் அரவிந்த் வேலையை விட்டு சென்று விட்டதாக அவளுக்கு தகவல் கிடைத்தது என்னவென்று விசாரித்ததில் அது மிதுர்வனின் நேரடி உத்தரவு என பதில் கிடைத்தது..

சைதன்யாவிற்கு புரிந்துபோனது மிதுவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது கண்டிப்பாக இது அவன் வேலை தான்..

இவன் ஏன் இப்படி செய்கிறான் நேரடியாக அவனிடமே சென்று கேட்டாள் ஏன் சார் அரவிந்தை வேலையை விட்டு அனுப்பினீர்கள்..

அது கம்பெனி விஷயம் உன்னிடம் சொல்ல முடியாது அவனிடமிருந்து கோபமாக பதில் வந்தது..

அதே கோபத்துடன் நீங்கள் எதற்காக இதை செய்தீர்கள் என எனக்கு தெரியும் சார் ஆனால் ஏன் என்பதுதான் எனது கேள்வி..

அவள் ஏன் என கேள்வி கேட்கவும் ஆத்திரத்துடன் ஆமாம் உன்னிடம் அவன் அப்படி பேசியதற்காக தான் வேலையைவிட்டு அனுப்பினேன் அதற்கு என்ன இப்போது..

உங்களுக்கு யார் சொன்னது..

யாரும் சொல்லவில்லை நானே கேட்டேன் பக்கத்து டேபிளில் தான் அமர்ந்திருந்தேன்..

"ஓ" ஒட்டு கேட்டீர்களா ஆனால் ஒட்டு கேட்பவர்கள் நல்லதை கேட்பதில்லை தெரியுமா..

அதோடு அவர் விருப்பத்தை சொல்ல அவருக்கு உரிமை உண்டு அதை ஏற்பதும் ஏற்காததும் என் விருப்பம் அவர் காதலை சொல்லி ஏற்றுக்கொள்ளவில்லை என்றதும் கண்ணியமாக விலகிக் கொண்டார்..

இதில் அவரை வேலையைவிட்டு அனுப்பும் அளவிற்கு என்ன பிரச்சனை இருக்கிறது..

அவனை பார்த்தால் விலகி போகிறவன் போலவா தெரிகிறது அது சரி நீ எதற்காக அவனுக்கு இவ்வளவு சப்போர்ட் செய்கிறாய்..

கிண்டலுடன் என்ன அவனை திருமணம் செய்து கொள்ள எண்ணம் ஏதும் இருக்கிறதா அதுதான் வேலை போய்விட்டால் வருமானத்திற்கு என்ன செய்வதென சிபாரிசு செய்கிறாயா கோபத்தில் அவன் பேசி விட சைதன்யாவுக்கு தான் அதிர்ச்சியானது..

எவ்வளவு ஈஸியாக எவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லி விடுகிறான்..

முதலில் சந்து இப்பொழுது அரவிந்தா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் கோபத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லி விடலாமா கொஞ்சம் கூட என் மீது நம்பிக்கை இல்லையே கோபத்துடன் அவனை முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

சொந்த விஷயத்தையும் கம்பெனி விஷயத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டாம் என்று சொன்னால் உடனே திருமணம் செய்துகொள்ள எண்ணமா என கேட்கிறான்..

அவள் கோபத்தில் இருந்ததால் அதற்கு அடுத்தடுத்த நாளும் அவன் பேச முயற்சி செய்தும் அவனை கண்டுகொள்ளவில்லை..

ஏதோ கோபத்தில் பேசி விட்டோம் சமாதானப் படுத்தலாம் என்று பேச முயற்சி செய்தால் வேண்டும் என்றே முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறாளே இவளை என்ன செய்வது ஏதோ யோசனை தோன்ற வீணாவிற்கு போன் செய்து அவளை வரச் சொன்னான்..

வீணாவுக்கும் மகிழ்ச்சிதான் இவ்வளவு நாட்கள் முகம் கொடுத்துக் கூட பேசாத அத்தான் தன்னை கூப்பிடுகிறான் என்றதும் உடனே கிளம்பி வந்து விட்டாள்..

சும்மாவே அவனை உரசிக்கொண்டு தான் பேசுவாள், அமர்வாள், அவனே கூப்பிட்டதும் இன்னும் நன்றாக அவனுடன் ஒட்டினாள்..

வீணா வரும்பொழுதே வேண்டுமென்றே சைதன்யாவையும் அவன் அறைக்கு வரவழைத்தான்..

சைதன்யாவிடம் வேலைகளைப் பற்றிச் சொல்ல சொல்லி விட்டு அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வீணாவிடம் பேசிக்கொண்டிருந்தான்..

அவன் நின்று கொண்டு பைலை பார்த்துக் கொண்டிருக்க அவன் மேல் சாய்ந்தபடி வீணாவும் நின்றிருந்தாள்..

சைதன்யாவின் முகம் இந்த முறை கோபத்தில் சிவந்திருந்தது கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல் எப்படி நடந்து கொள்கிறார்கள்..

இது ஆபீஸ் என்பது கூட ஞாபகம் இல்லையா எவ்வளவு பேர் வந்து போகிற இடம் இங்கு வந்து தோளில் சாய்ந்து கொண்டு நிற்கிறாளே ஆனால் என்னை மட்டும் அவ்வளவு தூரம் பேசினான்..

இவ்வளவுக்கும் அரவிந்திடம் விருப்பமில்லை என்று தான் சொன்னாள் அதற்குப் பிறகு அவன் அவளை தொந்தரவு செய்யவும் இல்லையே..

எனக்கும் இவனிடம் ஒரு சில சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் கேட்டு அவனை வருத்தமடைய செய்யக் கூடாது என எவ்வளவு பொறுமையாக இருக்கிறேன்..

நான் அரவிந்திடம் பேசியது எல்லாம் கேட்ட பிறகும் சந்தேகப்படுகிறானே இதில் இந்த மேனாமினுக்கியை வேறு கூட்டிவந்து ஆபிஸிலேயே ஆட்டம் போடுகிறான் அவளுக்கு எரிச்சலாக வந்தது..

தலைவலியாக இருக்கவும் டீ குடித்துவிட்டு வந்து வேலையை தொடர்ந்தவள் வீணா வந்து அவளது ஆடையைப் பற்றி கேட்டபோதும் ஒன்றிரண்டு வார்த்தையில் பதில் சொல்லி அனுப்பினாள்..

அவளும் ஒன்றும் பேசாமல் ஒரு மாதிரி பார்த்து விட்டு சென்று விட்டாள்..
Nice one டியர் sis
 
Top