Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருத்தேனடி உனது காதலுக்காக!!-21

Advertisement

Miloni

Active member
Member
சுந்தரி அன்று வேலைக்கு ரொம்பவும் மகிழ்வோடு வந்து சேர்ந்தாள்..

கொஞ்ச நாட்களாக ஏதோ ஒரு கவலையோடு வலம் வந்து கொண்டிருந்த சுந்தரியை இன்று இப்படி பார்த்ததும் என்னடி ஒரே சந்தோஷமாக இருக்கிறாய் போலிருக்கிறது என்றாள் சைதன்யா..

ஆமா அக்கா என் பிரச்சனைக்கெல்லாம் ஒரு விடிவு காலம் வந்துவிட்டது.. எப்படிடி சைதன்யாவுக்கு இந்த விஷயம் புதிதாய் இருந்தது..

என்னக்கா இப்படி கேட்கிறாய் உனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாதா.. என்னடி சொல்கிறாய் எனக்கு ஒன்றும் புரியவில்லை.. அப்போது உனக்கு உண்மையிலேயே எதுவும் தெரியாதா.. தெரியாது என தலையை ஆட்டினாள்..

சார் உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையாக்கா.. சலிப்புடன் இப்போது நீ சொல்லப் போகிறாயா இல்லையா.. சரி சரி கோபப்படாதே என நடந்ததை சொல்ல தொடங்கினாள்..

அன்று குடிப்பதற்கு காசு கிடைக்காததால் சுந்தரியின் அப்பா கணேசன் ரொம்ப கோபத்தில் இருந்தார்..

வீட்டிற்கு வந்து காசை தேடுகிறேன் என பொருட்களை உடைக்கவும் சுந்தரியின் தம்பிக்கு கோபம் வந்துவிட்டது..

அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்து இந்த குடும்பத்தை காப்பாற்றுகிறார் நீ என்னவென்றால் குடித்துவிட்டு இப்படி வந்து வீட்டில் கலாட்டா செய்கிறாயே..

என்னடா ரொம்ப பேசுகிறாய் நான் இல்லையென்றால் நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியுமா உங்களை படிக்க வைத்தது எதற்காக சம்பாதித்த போடுவதற்காகத்தான்..

நீ எங்களை படிக்க வைத்தாயா எப்படி அப்பா இப்படி எல்லாம் உன்னால் பேச முடிகிறது அக்கா சின்ன வயதிலிருந்து எவ்வளவு வீடுகளில் வேலை செய்து அவளும் படித்து என்னையும் படிக்க வைத்து நமது செலவுகளையும் பார்த்தாள் என்பது இங்கு உள்ள எல்லோருக்கும் தெரியும்..

ஏன்ப்பா நீயும் அம்மா நம்மோடு இருந்த வரையிலும் நன்றாக தானே இருந்தாய் அப்புறம் ஏன் இப்படி மாறி போனாய்.. உன்னால் தான் அவள் என்னை விட்டு போனாள் உனக்கு வைத்தியம் பார்க்கிறேன் என அவளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்..

ஏய் ஜெயந்தி என்ன செய்கிறாய் எனக்கு இப்போதே காசு வேண்டும் வீட்டு செலவுக்கு சுந்தரி காசு தந்திருப்பாளே அதிலிருந்து கொடு.. என்னிடம் இல்லை அண்ணா எல்லாம் செலவாகி விட்டது பயத்துடன் ஜெயந்தி பதில் சொன்னார்..

சுந்தரியின் ரூமிற்கு சென்றவர் ஆராய்ந்து தம்பியின் மருத்துவ செலவிற்கு என்று எடுத்து வைத்திருந்த காசை எடுக்கவும் அவள் தம்பிக்கும் கணேசனுக்கும் சண்டை வர அவர் எட்டி உதைத்ததில் தூணில் அடிபட்டு அவன் மண்டையிலிருந்து ரத்தம் வழிந்திருக்கிறது..

கணேசன் இதை எதிர்பார்க்கவில்லை பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார்.. சுந்தரி மாலை வீட்டிற்கு போன பிறகுதான் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சொல்லி அவளுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது..

பதறியடித்து உடனே ஹாஸ்பிடல் சென்று பார்த்தால் தம்பி மயக்கத்தில் இருந்தான்.. ஆனால் அவனுக்கு ஒன்றும் இல்லை சாதாரண அடி தான் ரத்தம் போனதில் மயக்கத்தில் இருக்கிறான் இப்போது கண்விழித்து விடுவான் என்று டாக்டர் சொல்லும் வரை சுந்தரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அவ்வளவு பதற்றத்தில் இருந்தாள்..

கணேசனை போலீசார் அரெஸ்ட் செய்திருந்தனர் என் நம்பருக்கு முயற்சி செய்துவிட்டு எடுக்கவில்லை எனவும் அப்பாவிடம் கேட்டு மிது சாரின் கம்பெனிக்கு கால் செய்திருக்கிறார்கள்..

அவரும் ஆளனுப்பி அப்பாவை பெயிலில் எடுத்துவிட்டார்கள் என்னை தேடி மிது சார் ஹாஸ்பிடலுக்கு வந்தார் அக்கா..

சைதன்யா உன்னைப் பற்றி எல்லாம் என்னிடம் சொல்லியிருக்கிறாள் எனக்கு கொஞ்சம் வேலை அதிகம் இருந்ததால் அது முடிந்த பிறகு உனது பிரச்சினையை பார்க்கலாம் என்று நினைத்தேன்..

அதற்குள் இவ்வளவு சீரியசாகும் என்று நான் நினைக்கவில்லை உன் அப்பாவிற்கு சிகிச்சையளிக்க மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருக்கிறேன்..

அவர் உன் தம்பிக்கு இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை குற்றவுணர்ச்சியில் இருந்தவர் தானே முன்வந்து மறுவாழ்வு மையத்திற்கு செல்வதாக சொன்னார் கொஞ்ச நாள் கழித்து திரும்பி வந்து உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக சொன்னார்..

அவர் நல்லபடியாக திரும்பி வந்ததும் எங்கள் கம்பெனியில் ஏதாவது ஒரு வேலை போட்டுத் தருகிறேன்..

அதோடு உன் தம்பிக்கு கேரளா பக்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன் உன் அத்தையுடன் கொஞ்ச நாள் அவனுடன் அங்கேயே இருக்கட்டும்..

ரொம்ப நன்றி சார் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என் எல்லா பிரச்சினையும் இப்படி ஒரே நாளில் முடியும் என நான் நினைக்கவே இல்லை சார் என் தம்பி இப்படி இருக்கிறானே என்று நான் வருந்தாத நாளே இல்லை..

அப்பா இயல்பில் நல்லவர் தான் சார் ஆனால் அம்மா இறந்த பிறகுதான் அவர் இப்படி மாறிவிட்டார்..

உன் எல்லாம் பிரச்சினையும் முடிந்தது தானே இனி சரவணனுக்கு நோ சொல்ல உன்னிடம் காரணம் இல்லை சீக்கிரம் ஓகே சொல்லிவிடு அப்புறம் நல்ல பையன் கிடைப்பது ரொம்ப கஷ்டம்..

வெட்கத்துடன் முகம் சிவந்தவள் உங்களுக்கு உங்களுக்கு எல்லாம் தெரியுமா சார்.. புன்னகையுடன் தெரியும் அவர் இருக்கும் வரை அவரை நிமிர்ந்து பார்க்காமல் போன பிறகு குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பாயே ஓரிருமுறை கவனித்திருக்கிறேன்..

ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்கு தேவையான பணம் கட்டி விட்டேன் இப்போது முக்கியமான வேலை இருக்கிறது கிளம்புகிறேன் என அவளிடம் விடைபெற்றுக் கிளம்பினான்..

எல்லாம் சொல்ல சொல்ல சைதன்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.. அப்பாவிடம் சொல்ல தான் அவள் முதலில் நினைத்தது ஆனால் அவர் வேலையாய் இருக்கவும் அவரிடம் சொல்ல முடியாமல் போனது..

அந்த ஆதங்கத்தில் ஒருநாள் பேச்சு வாக்காக தான் மிதுவிடம் சுந்தரி பிரச்சினை பற்றி சொன்னது ஆனால் அவன் அதை சீரியசாக எடுத்துக் கொண்டு முழு பிரச்சனையும் சரி செய்வான் என எதிர்பார்க்கவில்லை..

அப்பாவிடம் சொல்லி இருந்தாலும் முழுமையான தீர்வு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே அதே சந்தோசத்துடன் மிதுவின் அறைக்கு சென்று அவனிடம் நன்றியை சொன்னபோது சிரித்துக் கொண்டான்..

என்ன தன்யா நன்றியை வாயால் மட்டும் தான் சொல்லவேண்டுமா வேறு விதத்திலும் வெளிப்படுத்தலாமே..

அவன் சொல்ல வருவது புரிந்து கொண்டவள் இவ்வளவு பெரிய உதவியை செய்து இருக்கிறீர்கள் உங்களுக்கு கையால் பதில் சொன்னால் சரியாக இருக்குமா சார் வேண்டும் என்றால் அப்படியும் சொல்லட்டுமா என இரு கைகளையும் தேய்த்துக்கொள்ள அம்மாடி நீ செய்தாலும் செய்வாய் வேணாம் என தனது கன்னங்களை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்..

அந்த பயம் இருக்கட்டும் என அவள் சிரிக்க அவளோடு சேர்ந்து அவனும் சிரித்தான்.. அப்போதுதான் கம்பெனிக்குள் நுழைந்த வீணா அவர்களைப் பார்த்து கோபத்தில் கனன்றாள்.. ஆபீஸில் இந்தக் கூத்தெல்லாம் அடிக்கிறீர்களா இருக்கட்டும் கவனித்துக் கொள்கிறேன்..

இடையில் இரு முறை வீணா கம்பெனிக்கு வந்து சென்றாள்.. முதல் முறை வந்த பொழுது அன்று பேசியதற்கு மன்னிப்பு கேட்டவள் அன்று என் நண்பர்களுடன் சின்ன பிரச்சனை அந்த கோபத்தை உங்கள் இருவரிடமும் காட்டி விட்டேன்.. நீங்களே என் ஆடைகளைத் தைத்து தாருங்கள் என அளவையும் டிசைனையும் கொடுத்துவிட்டு சென்றாள்..

அதற்கு அடுத்த முறை என்னுடைய உடை எந்த அளவு வந்திருக்கிறது என பார்க்க வந்தேன் என சொன்னாள்.. கிருஷ்டிக்கும் சுந்தரிக்கும் அவளை பார்த்தாலே பிடிக்கவில்லை அதனால் அவள் வந்தாலும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்து விடுவார்கள்..

சைதன்யாவுக்கும் அவள் வருவது பிடிக்கவில்லை என்றாலும் இது அவளுடைய உறவினர் கம்பெனி நான் என்ன சொல்ல முடியும் என அமைதியாக இருந்து கொள்வாள்.. ஆனால் சில சமயம் அவள் பேசும்போது வரும் கோபத்தை அடக்க பெரும் பாடுபட வேண்டியதிருக்கும்..

அப்படித்தான் இந்தமுறை வேண்டுமென்றே வானதி விஷயத்தை சொல்லி நான் அன்றே சொன்னேன் பார்த்தாயா இதுகளுக்கு இதுதான் வேலை வேலைக்காரியாக வந்து வீட்டுக்காரி ஆக மாறிவிடலாம் என நினைப்பு..

என் அத்தான் கில்லாடி எப்படி துரத்திவிட்டார் பார்த்தாயா என பெருமை அடித்தாள்.. மிதுவும் என்ன நினைத்தானோ அவளிடம் வந்து ஓரிரு வார்த்தைகள் பேசி சென்றான்..

ஒருநாள் வேலை முடிந்து பார்க்கிங் பகுதிக்கு சென்று ஸ்கூட்டியை எடுக்க செல்கையில் ஒருவன் அவளிடம் வந்து நான் உங்களிடம் பேசவேண்டும் சைதன்யா என்றான்..
 
சுந்தரிக்கு, மிதுன் உதவிசெய்ததை நினைத்து மிதுனுக்கு நன்றிகூறிகிறாள், அவன் அவளிடம் கிண்டல் பண்ணுவதும், மகிழ்வாகவும் பேசுவதும் அருமை??????
 
சுந்தரிக்கு, மிதுன் உதவிசெய்ததை நினைத்து மிதுனுக்கு நன்றிகூறிகிறாள், அவன் அவளிடம் கிண்டல் பண்ணுவதும், மகிழ்வாகவும் பேசுவதும் அருமை??????
மிக்க நன்றி sis..
 
Top