Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 9 2

Advertisement

Admin

Admin
Member
அவர்கள் சென்றதும், அந்த நேரத்தில் அண்ணனும் தங்கையும் அந்த திண்ணையில் அமர்ந்தனர்.

“என்ன பண்ண போற அங்கை?”

“அப்பாக்கிட்ட தான் இதை கேட்கணும் அண்ணா”

“என்ன அப்பா கிட்டையா?” என்றான்.

“ம்ம்” என்பது போல தலையசைதவள் அமைதியாய் இருக்க,

“என்ன அங்கை நடக்குது?”

“நான் சொல்ல முடியாது அண்ணா, அப்பா தான் சொல்லணும்” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கரிஷ்மாவிடமிருந்து ஃபோன்.

“எங்க இன்னும் காணோம் உங்களை” என்று ஹிந்தியில் கேட்க, மனோ “வருகிறேன்” என்று சொன்னது தமிழிலில்.

ஆம்! தமிழ் அவளுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான் , இருந்தாலும் அவளுக்கு கொஞ்சம் பதட்டமாகி விட்டாலும் ஹிந்தி தான் வரும்.

“கூல் ஜிங்லி” என்று ஆரம்பித்தவன் சற்று தள்ளி சென்று மனைவியிடம் பேசி வந்தான்.

“ம்ம், கொஞ்சல்ஸ் முடிஞ்சதா ண்ணா”

“முடிஞ்சா, அது கொஞ்சல்ஸ் கிடையாது” என்றவன்,

“அம்மாவை முதல்ல அப்பா கூட அனுப்பு, என்னால அவங்களை பார்க்கவே முடியலை”

“எனக்கு என்ன தெரியும்ண்ணா” என்றாள் பரிதாபமாக.

பின் “அவங்களை விடு, இங்க பாரு அவங்களால இத்தனை வருஷமா இவங்க கஷ்டப் படுறாங்க. அப்பா அம்மா செஞ்சதை சரி பண்ண வேண்டியது நம்ம கடமை. நாம என்ன பண்ண போறோம்” என்றாள்.

“ஒன்னும் செய்யப் போறதில்லை” என்று அவன் எழுந்து நிற்க,

“என்ன? என்ன அண்ணா இப்படி சொல்ற?” என்று அவள் அதிர,

“அதெல்லாம் நம்ம பண்ண வேண்டாம் அங்கை, நாம பண்ணினோம்னா அவுட் ஆஃப் தி வே எதுவும் பண்ண மாட்டோம். போலிஸ் ஸ்டேஷன் கோர்ட் கேஸ்ன்னு நம்ம பசங்க நம்ம வயசு வரும் வரை அது இழுக்கும். ஆத்மன் ஆல்சோ இஸ் குவைட் பவர்ஃபுல்”

“அப்போ என்ன செய்யறோம்”

“நாம ஒன்னுமே செய்ய மாட்டோம், என்னோட ஜிங்லி பார்த்துக்குவா, எதுக்கு இருக்கார் அவர் தாத்தா சென்ட்ரல் மினிஸ்டர், நாம கோடு போட்டா அவர் ரோடு போடுவார் என் ஜிங்லிக்காக. அவரோட செல்ல பேத்தி அவ”

“நீ உன்னோட விஷயம் மட்டும் பேசு, அப்பா கிட்ட இது எதுவும் பேசிக்காத. அப்புறம் இல்லை, இது வேண்டாம், நாம நேர் வழில தான் போகணும்னு சொல்வார். எல்லாம் சரி பண்ணிட்டு சொல்லிக்கலாம்”

“எவன் அடிக்கறான்னு கூட தெரியாம அவனுங்க அடிவாங்குவாங்க, அதுக்கு நான் பொறுப்பு, மூணே நாள் அவனுங்க அலறி சமாதானம் பேச வருவாங்க”

“நீ உன்னோட வாழ்க்கையை என்ன பண்ண போற, அதை முடிவு பண்ணு, ஒன்னு சேர்ந்து வாழு, இல்லை விலகிடு”

அதற்கு அங்கை எந்த பதிலும் சொல்லவில்லை, “சரி, வீட்டுக்கு போகலாம் கிளம்பு”

“அப்பா பெர்மிஷன் கொடுக்கணும்”

“நான் போகணுமே, இல்லை அம்மாவும் இவளும் என்னவோ ஏதோன்னு பதறுவாங்க, என்னோட செக்யுரிட்டி இருக்கான் அவனை பார்த்துக்க சொல்லவா வெளில இருந்து”

“ஏன்? அண்ணா ஏன்? அவன் கோவில்ல எப்படி அடி வாங்கினான்னு நீ பார்க்கலையா?”

“அப்போ நீ வா”

“நான் வர முடியாது”

“அப்போ நான் எப்படி போக”

“நீ கிளம்புண்ணா”

“ம்ம், முடியாது”

“சரி, அப்பாக்கு ஃபோன் பண்ணு”

“அப்பா என்னை இங்க வரக் கூடாது சொன்னார்”

சிரித்து விட்டவள் “இன்னும் நீ அப்பாக்கு தெரியாம தான் எல்லாம் பண்ற” ஆம்! மனோவின் வீர தீர சாகசம் எல்லாம் அப்பாவின் முன் பெட்டிப் பாம்பாய் அடங்கி விடும்.

“ம்ம், சரிப்பா” என்பதை தவிர அவனின் வாய் மொழியாக வேறு வார்த்தை வராது.

“அப்போ நான் ராஜராஜன்க்கு தான் போன் பண்ணணும்”என்றான் இருந்த கடுப்பில்.

“அது உன் விருப்பம்” என்று அங்கை சொல்ல,

“விளையாட்டுக்கு சொல்லலை அங்கை”

“நானும் விளையாட்டுக்கு சொல்லலை” என்று அவள் கௌண்டர் கொடுத்தாள்.

யோசிக்கவேயில்லை உடனே போன் அடித்தான் ராஜராஜனிற்கு, அமைதியாய் தான் அமர்ந்திருந்தாள்.

அந்த பக்கம் உடனே எடுக்கப் பட, “நான் கூப்பிடறேன், அங்கை என்னோட வர மாட்டேங்கறா. என்னோட செக்யுரிட்டி இங்க விடறேன்னு சொன்னேன். நீங்க அவனை அடிப்பீங்கன்னு சொல்றா, நான் என்ன பண்ணட்டும்?”

“நான் ஊருக்கு போகணும், நாளைக்கு காலையில ஏழுமணிக்கு நாங்க பிளைட் பிடிக்கணும், டெல்லி போயே ஆகணும்” என்றான். ஆம், அவளின் தாத்தா அடுத்த வாரம் வெளிநாடு செல்கிறார். அதற்குள் காரியங்கள் நடத்திக் கொள்ள வேண்டும்.

“என்னது செக்யுரிட்டியா? என்ன விளையாடறீங்களா. முன்ன இல்லை பின்ன நடக்கணும் செக்யுரிட்டின்னா, இவன் என்னவோ உடமைப் பட்டவன் மாதிரி கூட நடந்து வர்றான். அது தான் அவனோட முகத்தை பஞ்சர் பண்ணினேன்” என்றான் ஆத்திரமாக.

“எனக்கு போகணும் ராஜன், ஆத்மன் எதுவும் பண்ணும் முன்ன நான் பண்ணனும். அவன் என்ன பண்ணனும் கூட யோசிக்க விடக் கூடாது, அதுக்கு நான் லீவ்ல போறேன் ஒரு வாரம், அம்மாவையும் மனைவி குழந்தைங்க எல்லாம் கூட்டிட்டு போறேன், நான் இங்க இருந்தா நான் தான் பண்றனோன்னு சந்தேகம் வரும். அது என் வேலைக்கு நல்லதில்லை”

“இவ வர மாட்டேங்கறா, நீங்க இங்க வருவீங்களோ, இல்லை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களோ, இது ரெண்டுல எதுன்னாலும் உங்க சாய்ஸ்” என்று அவனை போலவே சொன்னவன் , “இது நம்ம ரெண்டு பேர்குள்ள மட்டும் இருக்கட்டும் யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்”

“எது?”

“நான் டெல்லி போற விஷயம், உங்க வீட்டுக்கு கூட தெரியவேண்டாம், நான் அங்கை கிட்டக் கூட சொல்லலை. எதோ பண்ண போறேன் சொன்னேன். ஆனா அதுக்காக டெல்லி போறேன்னு தெரியாது”

“டெல்லி போய் என்ன பண்ண முடியும்?”

“போகும் போது தானே யோசிக்கணும்” என்று சொல்ல,

“இவன் என்ன என்னை லூசுன்னு நினைச்சானா?” என்று ராஜராஜனுக்கு தோன்றிய போதும் அவன் கல்கடர் நிச்சயம் புத்திசாலியாய் தான் இருப்பான் என்று புரிந்து அமைதியாகினான்.

“அப்புறம் இதை நான் எதுக்கு சொல்றேன்னா எனக்கு இங்க ஏதாவது தகவல் வேணும்ங்கும் போது உங்களை தான் கூப்பிடுவேன் அதுக்காக”

“ஏதாவது செய்யும் போது சொல்லிட்டு செய், சரிவருமா இல்லையான்னு பார்க்கணும், உனக்கு இங்க எதுவும் தெரியாது” என்றவனிடம்,

“ம்ம் சரி” என்றான், இன்னும் அவன் மரியாதையில்லாமல் பேசுவது மனோவிற்கு மனதிற்கு ஏதோ செய்த போதும் “போறான் விடு” என்று சமாளித்துக் கொண்டான்.

தனியாய் நின்று தான் பேசினான்.

இவன் வந்ததும் “என்ன அண்ணா?” என்றவளிடம், ராஜன் க்கு சாய்ஸ் கொடுத்தேன் என்றான் நக்கலாக, பேசி முடித்த ஐந்தாம் நிமிடம் ராஜராஜன் அங்கே இருந்தான்.

“நீ கிளம்பு, நான் இங்க பார்த்துக்கறேன், கிழவி வரட்டும் என்னன்னு பேசிக்கலாம்”

மனோவும் நிற்கவில்லை, செய்தே ஆக வேண்டும் அவனிற்கு, கிளம்பிவிட்டான்!

ராஜராஜன் நேராய் கட்டிலுக்கு சென்றவன் படுத்துக் கொள்ள, இப்போது பேன்ட் சட்டையில் இருந்து வேஷ்டி டீ ஷர்டிற்கு மாறியிருந்தான்.

“உள்ள வந்து படுக்கறீங்களா?” என்றாள்.

“பிடிக்கலை பிடிக்கலைன்னு அவங்கப்பா கிட்ட அந்த கூவு கூவு கூவிட்டு உள்ள எப்படி கூப்பிடறா. நீ ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டாளோ” என நினைத்தவனுக்கு சிரிப்பு வந்தது.

அதை வெளிக்காட்டாமல் “இல்லை எனக்கு இங்க தான் சௌகரியம், முடிஞ்சா தலையணை பெட்ஷீட் குடு” என்று சொல்ல,

வேகமாய் போய் அவளும் கொண்டு வர, அதை போட்டவன் படுத்து கொள்ள, இவள் உள்ளே படுத்துக் கொள்ள செல்ல,

“கதவை தாள் போட்டுக்கோ, நான் தேவைன்னா பெல் அடிக்கறேன். முன்னமே அசந்து தூங்கிட்டேன் போல, யாரும் வந்தாலும் எனக்கு தெரியாது”

“அதுக்கு எதுக்கு காவல்” என்று அவள் முனகிக் கொண்டே செல்ல,

“வேற என்ன? என் தலையெழுத்து!” என்று ராஜராஜன் சத்தமாய் சொல்ல,

“ஒன்னும் பயமில்லை, நல்லா தூங்குங்க, சின்ன சத்தம்னாலும் நான் எழுந்துக்குவேன். நான் பார்த்துக்கறேன் உங்களை” என்று அவளும் சத்தமாய் சொல்ல,

“இவ அடங்கவே மாட்டாடா” என்று தான் ராஜராஜனிற்கு தோன்றியது.

அவ்வளவு அழுகை அழுத அங்கையின் மனம் இப்போது அப்படி இல்லை! தன் அப்பா அம்மாவினால் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்கள் என்று புரிய, அதன் வெளிப்பாடு அமைதியாய் நடக்க முற்பட்டாள்.


ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்

 
Hi jingly...

Karishma Pola look viduvaaala ?

இன்னுமே இண்ட்ரோ செஷன் மாறியே போகுதே எனக்கு மட்டும் தான் அப்படி தோனுதா?????
 
Last edited:
எனக்கு ஒரே ஜாலியா இருக்கு..
மூணு நாள்ல நடக்க போறது நினைச்சி..
திமிரா பேசின ஆத்மன் எப்படி பம்ம போறானோ??
 
Last edited:
ஹா ஹா ஹா ஹா
வெளிய படுத்து இருக்கற தைரியசாலிக்கு உள்ள தாழ் போட்டு காவல்... ???
நடத்துங்க.. நடத்துங்க..
 
Last edited:
கலெக்டருக்கு ஒன்னும் தெரியாதாம்...
ராஜன்ட்ட சொல்லிட்டு செய்யனுமாம்..
செம.. செம..

இவர் ராஜா.. அவர் தளபதி..
தாக்குதல் காண ஆவலோட நாங்க..
 
Last edited:
Top