Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 4 2

Advertisement

Admin

Admin
Member
“இந்த வயசுல அது மட்டும் முடியுமா? என்ன நீங்க?” என்று மகன்கள் இருவரும் அவரை அதட்டினர்.

இதெல்லாம் வாசலில் நின்ற அங்கையர்கண்ணி கேட்டிருந்தால், ஆம், தகவல் சொல்லியதும் அவள் அவளின் ஆக்டிவாவில் கிளம்பி வந்திருந்தாள், பஸ்ஸிற்கு நின்றால் நேரமாகும் என்று.

என்னவோ இவர்கள் பேச்சுக்களை எல்லாம் கேட்டது அப்படி ஒரு வருத்தமாய் இருந்தது, அவளுக்கு வேலைகள் பழக்கமே அல்ல. ஆனாலும் இங்கே வந்ததில் இருந்து அவளே தான் செய்வாள். நாச்சி வந்தாலும் “போங்க பாட்டி” என்று விடுவாள்.

சமையல் அவளுக்கு தெரியாது, அதனால் அவர் சமைப்பார். இப்போது அதுவும் சுமாராய் செய்ய கற்றுக் கொண்டு விட்டாள். ஆனால் அவளை சொல்லியும் குற்றமில்லை, நாச்சிக்கு நாக்கிற்கு வக்கனையாய் வேண்டும். அவருக்கு அவளின் சமையல் பிடிப்பதில்லை. இன்னும் மசாலாவை அம்மியில் அரைத்து சமைப்பார். சட்னிக்கு கூட மிக்சி அவருக்கு ஆகாது. சிறிய ஆட்டுக்கல்லில் அரைப்பார். அவளும் தான் என்ன செய்வாள்?

அவள் வெளியில் நிற்பதை அப்போது தான் ராஜராஜன் பார்க்க, “உள்ள வா” என்றான்.

அப்போது தான் பார்த்த சுவாமிநாதன் அவனை முறைக்க, “அவ பாட்டியை அவ பார்க்க வந்திருக்கா” என்று சொல்ல,

அவர் வெளியில் சென்று நின்று கொள்ள அவள் உள்ளே வந்தாள்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவள் , “என்ன பாட்டி ஆச்சு?” என,

“தெரியலை கண்ணு, உடம்பு ஒரு மாதிரி இருந்தது. அதான் ராஜாவை பார்க்க வந்துட்டேன்”

“ஏன் நீங்க என்கிட்டே சொல்லலை?”

“நீ பயந்துக்குவன்னு சொல்லலை”

“என்ன பாட்டி நீங்க? நல்லா இருக்கும் போது என்கூட இருந்துட்டு, உடம்பு சரியில்லைன்னா ராஜன் கிட்ட போய்டுவீங்களா”

“பேர் சொல்லக் கூடாது சொல்லியிருக்கேன் தானே” என்று நாச்சி அதட்ட,

“மறந்துட்டேன்” என்றாள் மெல்லிய குரலில்.

ஆனால் அதில் வருத்தமோ இல்லை மன்னிப்போ எல்லாம் இல்லை. பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக இருந்தது.

“ராஜன்னா அது நானா? ஓஹ், இது எப்போது இருந்து” என்று தோன்றியது, குரல் மிகவும் இலகுவாய் ஒலித்தது போல இருந்தது.

அப்போது பார்த்து மருத்துவர் வர,

“கொஞ்சம் எல்லோரும் வெளில இருங்க” என்று நர்ஸ் சொல்ல,

எல்லோரும் வெளியேற அங்கை அங்கேயே நிற்க, ராஜராஜன் வெளியேற போகவும் தில்லை தான் “நீ இருடா டாக்டர் என்ன சொல்றாருன்னு கேளு” என்றார். பின்பு அவனும் நின்றான்.

டாக்டர் “சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளவில்லை, புட் பாய்சனிங் ஆகிவிட்டது” என்றவர், “இன்னும் ஒரு நாள் இருந்து நாளை அழைத்து செல்லுங்கள்” என்று விட்டார்.

தில்லை அவருடன் இருப்பது என்று முடிவாக, “நீ வீட்டுக்கு கிளம்பு கண்ணு” என்ற நாச்சி சோர்வாய் கண் மூட,

என்னவோ இத்தனை மாதங்களாய் தன்னுடன் இருந்த பாட்டி அந்நியமாய் தோன்ற, “ம்ம் சரி” என்று வேறு எதுவும் பேசாமல், கேட்காமல் உடனே கிளம்பிவிட்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராஜராஜனிற்கு என்னெவென்று புரியவில்லை, ஆனால் பாட்டி “போ” என்று சொன்னது பிடிக்கவில்லை என்று தோன்றியது.

அவள் உடனே வெளியேறி விட, “ஏன் பாட்டி போன்னு சொன்ன, அவளே போயிருப்பா தானே”

“நேரமாகுது ராஜா, இருட்டி போச்சுனா போகறது சிரமம் தானே”

“ஏன் அவ பத்திரமா போறதை நான் பார்த்துக்க மாட்டேனா?”

“உன்னை எப்படிய்யா நம்பறது? உன் பெரியப்பன் சொன்னா நீ நின்னுக்கிட்டு, யாரையாவது துணைக்கு அனுப்புவ, அதுல எனக்கு இஷ்டமில்லை” என்று பாட்டி பட்டு பட்டு என்று பேச,

“கிழவி ஆசுபத்திரில படுத்தாலும் என்னமா யோசிக்குது” என்று அவரை முறைத்து பார்த்தான்.

“ராஜா அவளுக்கு தமிழ் படிக்க தெரியாது, பேச மட்டும் தான் செய்வா. ஏதாவது பஸ் மாறி ஏறிடப் போறா பார்த்துக்கோ” என்று கூறி கண்மூடிக் கொண்டார்.

இனி அவன் பார்த்துக் கொள்வான் என்று தெரியும். மனோ நாச்சி இடம் தெளிவாய் உரைத்து சென்றான்.

“தோ பாருங்க பாட்டி, ஒன்னு சேர்ந்து வாழ்ந்தா வாழட்டும். இல்லை என்னவோ பார்த்துக்கலாம். அங்கையை அனுப்பி விடுங்க, எங்க அப்பா அம்மா பண்ணினதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது, இவ எதுவும் வாய் திறந்து பேச மாட்டேங்கறா? ஏன் இங்க இருக்கான்னு எனக்கு புரியலை. என் தங்கை எனக்கு ரொம்ப முக்கியம். இனியும் இப்படியே விட்டு வைக்க முடியாது. உங்க பேரன் என்னன்னா எனக்கு மரியாதை கூட குடுத்து பேச மாட்டேங்கறான். உங்களுக்காக அம்மாக்காக தான் பொறுத்து போனேன்” என்று நன்றாய் அவருக்கு கொடுத்து விட்டு சென்றிருந்தான்.

அதன் பொருட்டே உடல் நிலை கொஞ்சம் தொந்தரவு காண்பிக்கவும், அதை சாக்காய் வைத்து அங்கையிடம் காரணம் சொல்லாமல் கூட ராஜராஜனிடம் வந்திருந்தார்.

கணவர் நடத்தி வைத்த திருமணம் நிலைக்க வேண்டும் என்ற பேரவா இருந்த போதும், சில சமயம் தோன்றும், ராஜராஜனை வளர்த்தவர் அல்லவா, இப்போது அங்கையுடன் இருக்கிறார் அல்லவா. இருவரின் குணத்திற்கு இயல்பிற்கும் பழக்க வழக்கத்திற்கும் தோற்றத்திற்கும் ஒத்துப் போவது வெகு சிரமம் என்று. அவனுக்கு தென்னிந்திய சாயல், அவளுக்கு வடஇந்திய சாயல் தான். அப்பா அம்மா தமிழ் என்றாலும் அங்கே பிறந்தது வளர்ந்தாலோ என்னவோ, நிறமும் அதற்கு தக்க இருக்க, உடை பாவனை அப்படி தான் வந்தது.

நடப்பது நடக்கட்டும் ஈசன் செயல் என்று விட்டுவிட்டார்.

இவன் வேகமாய் எங்கே அவள் என்பது போல வெளியே வந்து பார்க்க, அவள் ஆக்டிவாவில் வந்திருப்பது தெரிந்தது. ஆம்! அவள் ஆக்டிவாவை ஸ்டார்ட் செய்ய, அது சற்று மக்கர் செய்தது.

அவள் அதை உதைத்து கொண்டிருக்க, அருகில் சென்றவன், “இருட்டிடுச்சு, இங்க இருந்து இருபது கிலோமீட்டர் மேல போகணும், தனியா வேண்டாம்” என்றான்.

“எனக்கு ஒன்னும் பயமில்லை” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“உனக்கு பயமில்லை, உன்னை தனியா அனுப்ப எனக்கு பயம்” என்றான் பளிச்சென்று. உண்மையில் அவர்கள் பேசிக் கொண்ட ஞாபகமே ராஜராஜனிற்கு இல்லை. மனோகணபதியிடம் காட்டும் அலட்சியம் அவனுக்கு அங்கையிடம் வராது. மனைவி என்ற பாசமோ?

அதற்குள் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகிவிட.. “எனக்கு பயமில்லை” என்று நிறுத்தி நிதானமாய் சொல்லி விட்டு கிளம்ப,

என்னவோ ராஜராஜனிற்கு மனதிற்கு சரியாய் படவில்லை, “இரு நான் உன் பின்னே, வர்றேன்” என்று அவன் சொல்லச் சொல்ல,

“தேவையில்லை” என்று கிளம்பியிருந்தாள்.

உள்ளே சென்று அம்மாவிடம் சொல்லி அப்பாவை பார்த்துக்கச் கொள்ள சொல்லி, அவரின் பைக் சாவியை பெற்றுக் கொண்டு கிளம்பினான். இவன் தான் பாட்டியை அம்பாசிடரில் அல்லவா அழைத்து வந்திருந்தான்.

பெரியப்பா “எங்கடா இவ்வளவு அவசரமா போற?” என,

“ஒரு வேலை பெரியப்பா” என்று மட்டும் சொல்லி கிளம்பினான்.

அவன் வேகமாய் சென்றாலும் அவன் மனது உரைத்தபடி சற்று சரியில்லாமல் போக, விஷயமும் கை மீறி இருக்க,

அங்கிருந்த போலீசிடம் அவள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தாள்.

“ஜீப்ல ஏறும்மா” என்றவர்களிடம்.

“ஜீப்ல எல்லாம் ஏற முடியாது, நான் என் வண்டில வர்றேன் போங்க” தைரியமாய் உரைத்து நின்றாள். இவன் செய்வதறியாது திகைத்து நின்றான்.

ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்

செல்லம் அவசரத்துல ஹெல்மெட் போடலையா???
கட்டுன மாமன் பேச்சு கேட்காம வேகமா வந்து
போலீஸ் மாமாகிட்ட மாட்டிக்கிட்டியே!!
 
Last edited:
அடடா.. Licence கொண்டு வரலையா..
போலீஸ்.. போலீஸ்.. கலெக்டர் தங்கச்சி... போலீஸ்.. பார்த்து செய்ங்க...
பின்னாடியே தாஸ் வர்றார்.. எச்சரிக்கை..
 
Last edited:
Hi..
அங்கைக்கு
தமிழ் படிக்க தெரியாதா
அதுவே கூட பாட்டி சொல்லித்தான் ராஜனுக்கு தெரியும் போல
பொருந்தாது பாட்டிக்கு புரியுது..
ம்...
இனி நடப்பவை ஈசன் செயல்தான்..
 
Intha kaavalthurai Yoda kadamai unarchiku alave ila ba
 
Top