Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 25

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
காரோட்டி கண்மணியும் கதிரும் உரையாடியதை அப்படியே சென்று அஜித்திடமும் ராஜதுரையிடமும் சொல்ல ..சினம் தலைகேறியது ராஜதுரைக்கு .."என்ன அந்த விசாலாட்சி மகனா அவன்? அவளுக்கு பிள்ளை இல்லைனு நெனச்சோமே ..இப்போ வசமா சிக்கியிருக்கான் ..இனி விடக்கூடாது." என்று ஆளும் அம்புமாக கிளம்ப .. பக்கத்து அறையில் இருந்த சுஜித்திற்கும் சூர்யாவிற்கு கூட இதெல்லாம் காதில் விழ விவரம் தெரியாவிட்டாலும் ஏதோ பிரச்னை பண்ண போகிறார்கள் என்று புரிந்து ஆதித்யனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினர்.



கண்மணியும் கதிரும் எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருக்க ஊரின் எல்லைக்கு வந்திருந்தனர் . பஸ் நிலையத்துக்கு அருகில் ஒரு டாக்சி நிற்க அதில் எற முற்படும்போது வேகமாக ஒரு வாகனம் வந்து நின்றது.


ராஜதுரை அஜித்.. தங்கள் அல்லக்கைகளோடு வந்து இறங்க ..கதிரை குறி வைத்து தாக்க துவங்க அவனால் ஓரளவுக்கே சமாளிக்க முடிந்தது..என்ன இருந்தாலும் நால்வர் சேர்ந்து ஒருவனை தாக்கினால் தற்காத்துக் கொள்வதே கஷ்டம் ..இதில் எங்கு திருப்பி தாக்க?

இதற்குள் கண்மணியை இழுத்து சென்று காரில் அடைத்திருந்தனர் .

நல்லவேளையாக அந்நேரம் சுஜித்தும் மற்றவர்களும் வர ..அந்நேரம் அந்த வழியாக சென்ற பேருந்தில் அமர்ந்திருந்தான் அவன். முந்தைய தினம் பக்கத்து ஊருக்கு சென்றபோது பார்த்த இளைஞன். அவனும் பேருந்தில் இருந்து இறங்கி வர ஒரு வழியாக கதிரை விலக்கி காத்திருந்த டாக்சியில் ஏற்ற ..கார் விரைந்து சென்றது.


கதிர் தப்பித்து விட்டதை கண்ட அஜித் இயலாமையில் தரையை ஓங்கி மிதித்தவன் தன் தம்பியை பார்ததும்கோபம் அவன் மேல் பாய அவனையும் ஓங்கி அறைந்திருந்தான்.


வீட்டிற்கு வந்து இறங்கிய மகளை கண்டதும் வடிவின் பதட்டம் கூடியது.


கண்மணிக்கு நடந்த எதுவும் புரியவில்லை ! ஆனால் மனதில் ரொம்பவும் பயமாக இருக்க ..அஜித் வேறு கன்னத்தில் அறைந்திருந்தான் ..அதில் கன்னம் சிவந்து வீங்கியிருக்க .. கண்களில் இருந்து நீர் விடாமல் இறங்கி கொண்டிருந்தது.


அவளை தரதரவென்று இழுத்து வந்தவன் ஒரு அறையில் தள்ளி கதவை வெளிப்புறமாக பூட்ட அனைவரும் வாயடைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். சிறியவர்கள் அனைவரும் சத்தம் கேட்டு மாடியில் இருந்து வர அழுத முகமாக அறையின் ஜன்னல் வழி எட்டி பார்த்துக் கொண்டிருந்த கண்மணியின் முகமும் சீற்றத்தை தாங்கியிருந்த அஜித்தின் முகமும் பதற்றத்தை அளித்தது.


"பெரியப்பா " என்று கர்ஜித்தவன் .."காலையில இவளுக்கு கட்டி வைத்தீங்களே அவன் யாரு தெரியுமா ? அந்த விசாலாட்சியோட மகன்."


இதை கேட்டதும் வேலனின் முகத்திலும் ஒரு அதிர்ச்சி. நின்றிருந்தவர் அப்படியே நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.


வடிவோ எந்த வித உணர்வையும் காட்டாமல் இருந்ததில் இருந்தே அவருக்கு இது தெரிந்த விஷயம் தான் என்று புரிந்தது. தன் மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்த வேலனுக்கு அவர் எல்லாவற்றையும் தெரிந்து தான் செய்திருக்கிறார் என்று புரிந்தது.


கதிரை பக்கத்து ஊருக்கு அழைத்து சென்ற அந்த இளைஞன் ..அவன் அன்புச்செல்வன் .. சிவில் சர்வீஸ் பரீட்சைகளில் இப்போதுதான் தேறியிருக்கிறான் .போஸ்டிங்கிற்காக காத்திருக்கிறான் . இளங்கலை பயின்றதும் சட்டத்தில்!

அவனுக்கு சட்டென்று நிலைமை புரிந்தது.

தங்கள் ஊருக்கு கதிரை அழைத்து சென்றவன் தன் வீட்டிலேயே தங்க வைத்து அவனுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் செய்தவன் அவனை ஒரு அறையில் ஓய்வெடுக்க சொல்ல கதிருக்கோ தன்னவளுக்கு எண்ணானதோ என்பதே மனதில் ஓடியது.


தன் தந்தைக்கு அழைக்க அவரோ சென்னையில் இருந்து இவர்கள் திருமண செய்தி அறிந்தபோதே கிளம்பியிருந்தார் . நாதன் தற்போது ரிசர்வ் பாங்கில் உயரிய பதவியில் இருக்க ..போலீஸ் கமிஷனரிடம் உதவி கோரியிருந்தார். அவரும் பாதுகாப்புக்காக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சொல்லியிருந்தனர்..அவர்கள் கண்மணியின் ஊருக்கு வந்து சேர்வதற்குள்ளாகவே இத்தனை கலாட்டா நடந்து முடிய ..அதை அவருக்கும் தெரிவித்திருந்தனர்.


அதிலிருந்து விடாமல் மகனுக்கு அழைத்திருந்தார்.. கதிரின் மொபைல் சன்டை நடந்த இடத்தில் விழுந்திருக்க அழைப்பு எடுக்கப் படாமலே போனதும் மேலும் கலவரமுற்றது பெற்ற மனம்.


கதிர் அன்பின் செல்லில் இருந்து அழைத்து பேசிய பிறகே சற்று ஆசுவாசமடைந்தவர் அவன் இருக்கும் இடம் அறிந்தவுடன் "விதி உன்னை வர வேண்டிய இடத்திற்கு தான் கூட்டி வந்திருக்கு. நான் அங்க வந்துக்கிட்டிருக்கேன் .பத்திரமாயிரு! " என்று அழைப்பை துண்டித்தார் .


மூன்று மணி நேரங்களிலேயே விரைந்து வந்து சேர்ந்த நாதன் தன் மகனை ஆராய .. நெற்றியில் சிறு காயம் ..மற்றபடி வேறொன்றுமில்லை என்றறிந்தவுடன் தான் அவர் மனம் ஆறியது.


தன் மகனுக்கு தான் யார் என்பதை சொல்லாமல் எதையும் புரியவைக்க முடியாது என்று உணர்ந்தவராக நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.." உங்கம்மா யார் தெரியுமா ? சிங்கார வேலனின் உடன் பிறந்த தங்கை விசாலாட்சி " என்று ஆரம்பித்தவர் கடந்த காலத்தை.. இருபத்தைந்து வருடங்கள் முன் நடந்ததை மகனிடம் கூற தொடங்கினார்.


இதே கதையை தான் வடிவும் தன் வீட்டில் இளைய பெண்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க கண்மணியும் அறைக்குள்ளிருந்து கேட்டிருந்தாள்.
 
Last edited:
கண்மணி அத்தை மகனாக கதிர் 😀
சூப்பர் 😀
 
Top