Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கால்வாய் குடிப்பது கால் வாய் மட்டுமே

Advertisement

Joyram

New member
Member
காதல் ஒரு கால்வாய் ஆனால் குடிப்பது கால் வாய் மட்டுமே

காதல் என்ற சொல்லை கேட்டாலே காதலிக்க ஆசையாக உள்ளது
காதலுக்கு ஏனிந்த இனிமை? இது தமிழ் சொல்லில்தானே உள்ளது
காதல் என்ற சொல்லில் எவ்வளவோ அர்த்தங்கள் நிறைந்துள்ளது
அன்பு ஆசை போதை விருப்பம் நெருக்கம், இதுபோல் பல உள்ளது

எல்லா உறவுகளும் காதல் என்ற முகவரிக்கு சொந்தமானதல்ல
ஆனால் அனைத்து உறவுகளிலும் அன்பு மிகவும் முக்கியமானது
காதலுக்கு அடிப்படை தேவை அன்பு, அன்பின்றி காதல் இல்லை
ஆனால் அந்த அன்பு எவ்வளவு தூயது என்பது தான் பெரிய புதிர்

அன்பு என்று சொல்கையில் அது உண்மையில் தெய்வீகமானது
ஆனால் பொதுவாக காதலின் நோக்கம் இருவர் ஒருவதாவதற்கு
இந்த ஒருமித்தம் புனிதமாக இருப்பின் அக்காதல் அன்பாலானது
ஒருமை உடல்சார்ந்து மட்டும் இருப்பின் தூய அன்பு இருக்காது

வேறு ஒரு கோணத்தில் அன்பின் பண்பை கூறவேண்டுமெனில்
காமத்தின் கோணத்தில் மட்டும் காதல்வயப்படுவது அன்பல்ல
உடலால் இருவர் அருகில் இருக்கும்போது காதல் தரும் காமம்
இருவர் வெகு தொலைவில் இருப்பினும் காதல் வசப்பட்டால்
அது, தூய உன்னதமான அன்பு பிணைப்பு கொண்டஉயர்காதல்

தற்போதைய உலகினில் காதல் என்பது வெறும் உடல் மோதல்
காதல் வெற்றியோ தோல்வியோ எவரும் புரிவதில்லை சாதல்
பட்டால் பாக்கியம் இல்லையேல் லேகியம் என்பது தான் இன்று
ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என சொல்வது சால நன்று

இன்றைய சினிமாவில் காதல் என்னும் பேரில் விதவித விரசம்
எந்த ஒரு ஜோடியும் கூடி பார்த்தால் செய்ய தோன்றுமே சரசம்
காதல் இருவருக்கிடையில் பிறர் காண முடியாத தனிமை ரசம்
இதை நாம் சுட்டிக்காட்டினால் வந்துவிடுவார்கள் பேச, சமரசம்!
 
???
Rasam sottuthu
 
Top