Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலில் கரைந்தேனடா.. 1

Lakshmisivakumar

New member
Member
கதிரவன் தன் வெதுவெதுப்பான கரங்களால் புவியை அணைக்க வரும் வேளையில்.. புள்ளினங்கள் பாடி பரவசப்படும் அதிகாலையில்..அல்லல் பட்ட நெஞ்சங்களில் எல்லாம் துள்ளலுடன் ஏறும் அந்த வேளையில்.. மூன்று நதிகள் அணிகலனாகக் கொண்டு அழகுற காட்சி தரும் காஞ்சியின் எழில்மிக்க கிராமம் ஒன்றில்.. காமாட்சி அன்னையின் அருளோடு..இருள் இல்லா இனிய வாழ்வு வாழ்ந்து வரும் இனிய குடும்பத்தின் மூத்த தலைவரான.. முருகேசன் இன்னும் துயில் கலையாமல் படுத்துக் கொண்டிருந்தார்..

"கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.."என்று யாரோ கூற.. முருகேசன் கண்கள் பணிக்க.. இரண்டு கைகளையும் மேலே தூக்கி..வலது கைகளில் இருந்த பொன் போன்ற மஞ்சள் கலந்த அரிசியையும் பூவையும் தன் அன்பு மகளான மதுமிதாவின் மீது தூவி பல்லாண்டு வாழ்க ..வாழ்க வளமுடன் என்று வாழ்த்திக் கொண்டிருந்தார்..

அந்த நேரம் பார்த்து மண்டையில் டமால் என்று ஏதோ இடிக்க.. சடாரென்று விழிப்பு வந்து எழுந்தவர்.. படாரென்று கையை ஓங்கி அடிக்க வந்தது யார் என்று பார்த்தார்..

அரை தூக்க கலக்கத்தில் இருந்து பார்த்தாலும்அகோர தாண்டவமாடும் காளியின் முகத்தினை அம்சமாக கொண்ட அகிலாண்டேஸ்வரி தான் அங்கே கையில் ஒரு கிண்ணத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.. தன்னை அடித்த தன் அன்பில்லாத மனைவியை கண்டிக்க முடியாது முருகேசன்.. தன்னை காயப்படுத்திய கிண்ணத்தின் மீது தன் கோபப் பார்வையை வீசினார்..இந்த கோபப் பார்வையை அகிலாண்டேஸ்வரி மீது வீசினாள் அந்த வீட்டில் அவருக்கு தங்கவே இடம் இருக்காது என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் தானே.. அதனால் சப்த நாடியும் ஒடுங்கி தான் படுத்து கிடந்த கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தார் முருகேசன்..

"என்னம்மா ஒரு குரல் கொடுத்திருந்தால் வந்திருப்பேனே நீ ஏன் இவ்வளவு தூரம் வந்திருக்க.." இன்று அகிலாண்டேஸ்வரியை பார்த்து பயத்துடனேயே கேட்டார்..

"ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் உன்ன அடிச்சு தான் எழுப்பணும்.. இதுதான் எனக்கு தெரிஞ்ச ரூல்ஸ்.. இப்ப என்ன என்ற.. எழுந்து வருவியா மாட்டியா.."என்றாள்அகிலாண்டேஸ்வரி

முருகேசன் மனதிற்குள்.. என் பொண்ணு மதுமிதாவுக்கு நடக்கிற ஒரு நல்லது கூட இவ நடக்க விடமாட்ட.. அட்லீஸ்ட் கனவுல யாராவது எதையாவது அவளுக்கு நல்லது நடக்கிற மாதிரி கனவு காணலாம் என அதையும் வந்து கெடுத்து விடுவா இந்த ராட்சசி..என்று அகிலாண்டேஸ்வரியே பார்த்து மனதுக்குள் முறைத்துக் கொண்டிருந்தார்..

"வயல்ல நடவுக்கு ஆளுங்க வந்து இருக்காங்க போயி என்னன்னு பார்த்து கூடமாட வேலை செஞ்சு உடம்புல இருக்குற கொழுப்பை கொஞ்சம் குறைத்து கொண்டு வா.."என்று ஏக வசனத்தில் அகிலா அவரைப் பார்த்து பேச..

முருகேசன் மனதிற்குள்.." ஏண்டி நீ எல்லாம் இருக்கிற சைஸுக்கு என்ன வந்து கொழுப்பை கரைக்க சொல்றியா.. உனக்கு இருக்குற கொழுப்பை கரைக்க வழியே பாப்பியா என்ன கரைக்கு சொல்றா ராட்சசி ராட்சசி.. இவ 100 கிலோ இருந்துகிட்டு என்ன சொல்றா..என்று மனதுக்குள் மறுகின் ஆனாலும் அவரால் எதுவும் செய்ய முடியாமல் போவதுதான் இயல்பு..

அகிலாண்டேஸ்வரியின் வாயில் மீண்டும் விழாமல் இருக்க அந்த வீட்டில் இருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்பு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓட்டமும் நடையுமாக அவர் அகிலாண்டேஸ்வரிக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் உள்ள வயல் பார்க்க கிளம்பினார்..

முருகேசன் அகிலாண்டேஸ்வரிக்கு வாழ்க்கைப்பட்டு தன் வாழ்க்கையை தொலைத்தது மிகப்பெரிய துயரமான சம்பவம்.. அகிலாண்டேஸ்வரி தன் சொந்த அத்தை மகள் தான் முருகேசனுக்கு.. வசதி வாய்ப்பு குறைவாக இருந்த முருகேசன் அவனுடைய தந்தை ரங்கநாதன் அகிலாண்டேஸ்வரியின் தாய் கமலாவிற்கு உடன் பிறந்த அண்ணன்.. அண்ணன் வைத்திருந்த கொஞ்சநஞ்ச வயல் வரப்பு களையும் தவறான நபர்களோடு குடியும் சீட்டாட்டம் ஆடி தொலைத்துவிட்டு நிற்க.. ஐந்தாம் வகுப்பு பள்ளியில் சேர்ந்து ஆசையுடன் படிக்க நினைத்த முருகேசனின் படிப்பு அன்றோடு நின்றுபோய் வயலுக்கு கூலி வேலை செய்யும் அம்மாவோடு தானும் சென்று வேலை செய்தால் தான் வயிற்றில் ஈழம் படும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்..

தன் அண்ணன் அண்ணனால் கஷ்டப்படுவதை கமலாவால்.. என்றுமே தாங்கிக்கொள்ள முடியாது ஆனாலும் அவளால் ஒன்றுமே செய்ய முடியாது.. ஒருநாள் தன் அண்ணனும் இறந்துவிட.. அண்ணியும் முருகேசனும் தனியாக விடப்பட்ட போதும் தன் கையில் இருந்து ஒரு நூறு ரூபாயை கூட கொடுக்க கமலாவின் கணவர் மறுத்துவிட்டார்..

வளர்ந்து பெரியவனான முருகேசனுக்கு தன் தாய் தன்னால் இயன்ற ஒரு எளிய கிராமத்துப் பெண்ணை மணமுடித்து வைத்தார்.. வைதேகி நல்ல பொறுப்பான குடும்பத்தை பார்த்து பார்த்து நடத்தக்கூடிய பொறுமைசாலி.. ஆனால் அவள் அதிர்ஷ்டசாலி இல்லை ஏனென்றால் மதுமிதா பிறந்த மூன்று மணி நேரத்துக்குள் அவள் இறந்து விட..

மனைவி இறந்த துயரை விட பிறந்த குழந்தை உடனே தாயை இழந்த வருத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாத முருகேசன் அரும்பாடுபட்டு தன்னால் முடிந்த வேலைகளை செய்து தன் அன்பு மகளை பாராட்டி சீராட்டி வளர்த்து படிக்க வைத்தார்..

மதுமிதா விற்கு இரண்டு வயது ஆகும்போது அகிலாண்டேஸ்வரியின் தாயும் தந்தையும் ஒரு ஆக்சிடெண்டில் இறந்து விட..அனாதையாக நின்ற அகிலாண்டேஸ்வரிக்கு அடைக்கலம் கொடுக்கும்படி முருகேசனிடம் அந்த ஊரே மன்றாடியது.. ஆனால் அந்த நொடி மட்டும்தான் முருகேசன் அகிலாண்டேஸ்வரிக்கு வாழ்க்கை கொடுக்கப் போகிறோம் என்று நினைத்தார்..ஆனால் காலம் முழுக்க அகிலாண்டேஸ்வரியின் நினைப்பு மற்றும் சொல் நான் தான் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்று..

பழைய நினைவுகளை அசைபோட்டபடி..அகிலாண்டேஸ்வரியின் கழுத்தில் கட்டிய தாலியில் தன் உரிமையும் தன் மகளின் உரிமையும் பறிக்கப்பட்டு விட்டதை நினைத்து லேசாக மனம் வருந்திய படி இருந்த முருகேசனுக்கு திடீரென்று காலையில் வந்த கனவு மீண்டும் நினைவுக்கு வந்து அவன் நெஞ்சத்தில் தித்திப்பை தந்தது..

"ஆஹா என்ன அருமையான கனவு ..என் மகள் மதுமிதாவுக்கு கல்யாணம் எவ்வளவு சிறப்பாக நான் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தது.. இன்று கனவில் நடந்தது போல் ஒருநாள் நிச்சயம் சீரும் சிறப்புமாக என் மகளுக்கு நான் திருமணம் செய்து வைப்பேன் என்று"மனதில் மனக்கோட்டை கட்டிக் கொண்டு இருந்த அந்த தகப்பனாருக்கு அந்த சமயம் தெரியாது.. அவர் நினைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவர் மகள் மதுமிதாவுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று..

காதலில் கரைவாளா மதுமிதா?
(தொடரும்...)
 
Last edited by a moderator:
Top