Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 03(B)

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ அடுத்த அப்டேட்டுடன் வந்துட்டேன்... சென்ற பதிவிற்கு கருத்துகள் பகிர்ந்தவர்களுக்கு நன்றி!!!


காதல் 03(B)

702

“டொக்… டொக்…” என்று நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு சத்தம் வந்தது. இரவு தூக்கம் வராமல் அந்த ஹோட்டலில் டீஷர்ட்-ட்ராக் பேண்ட்டுடன் உலவிக்கொண்டிருந்த அனிலா, அந்த ஒலி வந்த திசையை நோக்கி சந்தோஷத்துடன் நடந்தாள்.

அங்கே, ஹோட்டலின் பின்பு இருந்த பேஸ்கெட்பால் கோர்ட்டில் விளையாடிக்கொண்டிருந்தான் முகில். அவனை இந்த நேரத்தில் இங்கே எதிர்பார்க்கவில்லை அவள். (சில ஹோட்டல்களில் பேஸ்கட்பால் கோர்ட் இருக்கும். இப்பொழுதெல்லாம் சில ஹோட்டல் ரூமின் உள்ளேயே இருக்கிறது)

அவளுக்கு பேஸ்கெட்பால் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் பந்தின் ஒலியைக் கேட்டதும் ஹோட்டலில் கோர்ட் இருக்கிறது என்று அறிந்து அது எங்கே இருக்கிறது எனக் காண வந்தாள்.

அங்கே இரவு விளக்குகளின் வெளிச்சத்தில் முகிலைக் காணவும், இருப்பிடத்தைக் கண்டு செல்லலாம் என நினைத்தவளின் கால்கள் அவன் இருக்கும் திசையை நோக்கி நடை போட்டது.

தன் பின்னால் காலடி சத்தம் கேட்க, தன் நண்பர்களில் ஒருவராக இருக்கும் என்று நினைத்து பாலை தட்டிக்கொண்டே திரும்பியவன் கண்களில் அனிலா அவனை நோக்கி வருவது தெரிந்தது. அவளை அங்கு எதிர்பாராதவன் சிறு ஆச்சரியத்தை முகத்தில் காட்டினான். அதுவும் சில நொடிகளே. பின், அவளை பார்த்து சிநேகமாக புன்னகைக்க, அதற்கு பதிலாக அவளும் புன்னகைத்தாள்.

“ஹாய்…” என்று அவள் கூற,

“ஹாய்…” என்று தானும் பதிலுக்கு உரைத்தவன், தற்போது தட்டுவதை விட்டுவிட்டு அந்த பாலை தன் உடலை சுற்றி இருகைகளாலும் விளையாடிக்கொண்டிருந்தான்.

“நல்லா விளையாண்டீங்க இன்னைக்கு” என்று அவள் கூற, அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

“தேங்க்ஸ்”

அவளுக்கு மட்டும் அவன் மைதானத்தில் அவள் மீது இருந்த கோபத்தை தான் பந்திடம் காட்டினாள் என்று தெரிந்தால் அவள் முகம் எவ்வாறு போகும் என்று நினைக்க, மேலும் அவன் இதழ்கள் விரிந்தது.

“ஏன் மேல இருந்த கோபம் எல்லாம் நீங்க ஹால்ஃப் சென்ச்சுரி அடிச்சப்போவாவது போயிடுச்சா? இல்லை, இன்னும் கொஞ்சம் இருக்கா?” என்று அவள் கேட்கவும்,

திடுக்கிட்டவன், “உங்களுக்கு எப்படி?” என்று கேட்க வந்து, பின் “ஸாரி!” என்று மன்னிப்பு கேட்டான்.

“விடுங்க. நானும் தான தப்பு செய்தேன். நான் அப்படி பேசிருக்கக் கூடாது” என்க,

முகிலின் மனமும் அவன் தவறை எடுத்துரைக்க, “ஸாரி! நானும் அப்படி நடந்துருக்கக் கூடாது” என்றான்.

‘ஜஸ்ட் லீவ் இட்’ என்னுமாறு கையை ஆட்டியவள், “பை த வே, ஐ ஆம் அனிலா. பேசிக்கலி, நான் ஒரு சிங்கர். சின்னதா கன்சர்ட்ஸ் எல்லாம் செய்வேன். இப்போ அதற்காகத் தான் வந்திருக்கேன். கன்சர்ட் முடித்து ஊரை சுற்றி பார்த்துட்டு இருக்கேன். ஒரு வாரம் கழித்து” என்று ப்ளைட்டில் பறப்பது போல் சைகை செய்தாள்.

“ஐ ஆம் முகில். பேசிக்கலி, நான் ஒரு கிரிக்கட்டர். இப்போ தான் இந்திய அணில என்னை சேர்த்திருக்காங்க. இங்கே என்னோட முதல் சீரீஸ் (series) ஆட வந்திருக்கேன்” என்று அவன் முடித்துவிட்டு மீண்டும் பாலை தரையில் தட்டத் துவங்க,

“கிரிக்கெட்டர்க்கு பேஸ்கெட்பால் கூட வரும் போல!” என்று கேட்டாள், அவன் கையில் இருக்கும் பாலை பார்த்துக்கொண்டே, அது தன் கையில் சேராதா? என்ற ஏக்கத்தோடு.

“ஸ்கூல் படிக்கும்போது முதலில் விளையாட ஆரம்பித்தது பேஸ்கட்பால் தான். பின், எப்படியோ, கிரிக்கெட்டில் ஆர்வம் வந்துட்டது. யூ நோ வாட், நான் பேஸ்கட்பாலில் ஸ்டேட் ப்ளேயர்” என்று அவன் கூற,

அவன் கூறுவதைக் கேட்டவள், “நான் கொஞ்ச நேரம் விளையாடவா?” என்று கேட்டாள்.

“உங்களுக்கு விளையாடத் தெரியுமா?” என்று கேட்டவன் முகத்தில் வியப்பு.

“ம்ம்ம்…” என்று அவள் தலையாட்ட, அவளிடம் பந்தை வீச நினைத்தவன் அதனை தான் நின்றிகொண்டிருந்த இடத்தில் இருந்தே தன் பின்புறம் இருந்த கூடையை நோக்கி செலுத்த, பந்து சரியாக கூடையில் விழுந்தது.

அதனைக் கண்டு ஏமாந்தாலும், அந்த பந்தை எவ்வாறேனும் கைபற்ற வேண்டும் என்னும் முனைப்பில் அவள் ஓட, அவளை பின்தொடர்ந்து ஓடினான் முகில்.

நினைத்தபடியே அனிலாவிற்கு முன் தானே பந்தை எடுத்தவன் அதனை அருகில் இருந்த கூடையில் போடுவதற்காக தன் ஒற்றைக் கையை தூக்கி கூடையில் அருகில் கொண்டு செல்ல, அந்தோ பரிதாபம்!

அவன் கையில் இருந்த பந்து அனிலாவின் வசம் சேர்ந்திருந்தது. அவள் எதிர்திசையில் இருந்த கூடையை நோக்கி ஓட, அவளை துரத்திப் பிடிக்க ஓடினான் முகில்.

எவ்வளவு முறை தடுத்தாலும் அவள் லாவகமாக அவனை தாண்டி முன்னேறிய விதத்திலேயே தெரிந்தது அவள் மிகவும் திறமையான கூடைப்பந்து வீராங்கனை என.

இருந்தும் ஒரு முறை அவளிடம் இருந்து பறித்தே விட்டான். இப்போது அவன் பின்னே ஓடுவது அவள் முறையானது.

அவனிடம் இருந்து பந்தை எடுக்க நினைத்தும் அவன் சுத்தி சுத்தி தடுத்துக்கொண்டே இருக்க, பாதி தூரம் தாண்டியபோது சிறிது எகிறி பந்தை கூடையின் அருகே தரையில் படுமாறு வீசியவன், அதனை அவள் உணரும் முன்னமே அவ்விடம் விரைந்தான்.

தரையில் ஒரு முறை பட்டு எகிறிய பந்தை எடுத்து அவளை பார்த்தவாறே திரும்பி குதித்து கூடையினுள் பந்தை போட்டுவிட்டு அந்த கூடையையே பிடித்து தொங்கி அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

இவை எல்லாம் சில நொடிகளில் நடக்க, அவன் நடத்திய டேங்க் ஷாட்டில் ‘ஆ’வென வாயை பிளந்திருந்தவள், தன்னை நோக்கிய அந்நொடியில் அவன் ஆழ்ந்த விழிகளுக்குள் விழுந்து எழுந்தாள்.

விரைவில் தன்னை சுதாரித்தவள், “ரொம்ப நல்ல ஷாட்!” என்க, அதற்கு நன்றி பகர்ந்தவன் தன்னறை நோக்கி சொல்வதற்காக உடைமைகளை எடுக்கலானான்.

அனைத்தையும் எடுத்துக்கொண்டவன், அங்கிருந்து செல்ல எத்தனிக்கும்போது அதுவரையும் கிளம்பாமல் இருந்த அவளை நோக்க, தன்னை தனியாக அங்கே விட மனமில்லை அவனுக்கு என புரிந்து போனது அனிலாவிற்கு.

தானும் அவனோடு சேர்ந்து நடக்கலானாள். அத்தோடு சிறு உரையாடல்.

“நீங்க தனியாவா வந்திருக்கீங்க? உங்க ஃப்ரெண்ட் இல்லையா?” என்று முகில் கேட்க,

“அவள் உங்க மேட்சினை பார்த்து கத்திய டயர்டில் தூங்கறா” என்றவள், தன்னுள் எழுந்த சந்தேகத்தை கேட்டாள்.

“மேட்ச் விளையாண்டு டயர்டாக இல்லையா? இங்கே விளையாண்டுட்டு இருக்கீங்க?”

“தூக்கம் வரல. நேற்று இங்கே கோர்ட் இருப்பதை பார்த்தேன். கொஞ்ச நேரம் விளையாடலாம்னு தோனுச்சு” என்றவன், “நீங்க எப்படி இன்னேரம் அங்கே வந்தீங்க?” என்று கேட்க,

“தூக்கம் வரவில்லை. சரி, ஒரு வாக்கிங் போகலாம்னு நினைத்து வந்தேன். அப்போதான் பால் சவுண்ட் கேட்டது. கோர்ட் எங்க இருக்குன்னு பார்த்துட்டு போகலாம் என்று வந்தேன். உள்ளே நீங்கள் இருக்கவும், இன்னைக்கு விளையாண்டதுக்கு விஷ்ஷஸ் சொல்ல வந்தேன்”

“ஓஓ… அந்த நேரத்தில் எப்படி தனியாக என்னைப் பார்த்து ஓடாம இருந்தீங்க?” என்று கேட்டான் அவன். ஏனென்றால், அவள் வரும்போது மணி பத்தை கடந்திருந்தது. தற்போது மணி நடுநிசியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

“நீங்க என்ன சிங்கமா? இல்லை புலியா?” என்று அவள் கேட்க,

“தன்னம்பிக்கையா இல்லை ஓவர் காண்ஃபிடண்சா?” என்று கேட்க,

“தன்னம்பிக்கைன்னும் சொல்லலாம், இல்லை, உங்க மேல வெச்ச நம்பிக்கைன்னும் சொல்லலாம்” என்று தன் மனதில் பட்டதை மறைக்காமல் சொன்னாள் அனிலா.

அவள் கூறியதை கேட்டவன் எதுவும் பேசவில்லை. அதற்குள் இருவரும் ஹோட்டல் லாபியில் இருந்தார்கள்.

ஏனோ, பிரிய இருவருக்குமே மனமில்லை போலும். எவ்வாறு பேச்சை மேலும் வளர்ப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தவர்களின் கண்ணில் பட்டது உணவகம்.

“ஏதாவது சாப்பிடலாமா? பசிக்கிறது” என்று முகில் உண்மையான பசியோடு கேட்க,

தனக்கு பசியில்லை என்றாலும் அவனோடு சிறிது நேரம் செலவளிக்கலாம் என்ற நினைவில் அவனுடன் வந்தாள் அனிலா.

ரெஃப்ரெஷ் செய்துவிட்டு தங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தபோது,

“நீங்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவரா?” என்று அவள் கேட்க, “தமிழ்நாடு, நீங்க?” என்று அவன் பதில் கேள்வி எழுப்ப,

“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே Adelaide” என்றாள் மங்கை.

“ஓஓஓ… இரண்டு மாதம் கழித்து இந்திய அணி ஆஸ்திரேலியா வருகிறது, அங்கே ஒரு சீரீஸ் விளையாட” என்று அவன் கூற,

“இஸ் இட்? அப்போ நீங்க கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரனும், எங்க அம்மா, அப்பா எல்லாரையும் பார்க்கலாம்” என்று கோரிக்கை வைத்தாள் அனிலா, கண்களில் மின்னலோடு.

அவள் ஆர்வத்தைப் பார்த்து சிரித்த முகில் இலகுவாகவே “நான் டீம்ல இருந்தேன் என்றால் கண்டிப்பாக வரேன்” என உறுதி கூறினான்.

அவன் வருவேன் என்று சொன்னது சந்தோஷத்தை அளித்தாலும், டீமில் இருந்தால் வரேன் என்று சொன்னது மனவருத்தத்தைத் தர, அதை மறைத்து,

“ஏன் அப்படி சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“இன்னைக்கு நடந்த மேட்ச்ல தான் நான் கொஞ்சம் நல்லா விளையாடிருக்கேன். இன் கேஸ் நான் விளையாடலைன்னா என்னை சீக்கிரமே அணியில் இருந்து தூக்கலாம். அப்படி இருக்கும்போது நான் எப்படி அங்கே வர முடியும்?” என்று கேட்டான்.

“அது எல்லாம் நீங்க நல்லா தான் விளையாடுவீங்க” என்றவள் அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர, அதில் கவனத்தைத் திருப்பினாள்.

இருவருமே பரிமாறியவாறு உண்டு முடிக்க, “உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா?” என்று கேட்டான் முகில்.

“இதுவரை பிடிக்காது. ஆனால், இனி பிடிக்கும் என்று நினைக்கிறேன்” என சொல்ல, சிரிக்க ஆரம்பித்தான் முகில்.

அவனுக்கு அவள் புறம் சாய துடிக்கும் மனதை கட்டுப்படுத்தும் விதம் தெரியவில்லை. அவளோடு எப்போதும் ஒட்டியிருக்கும் ஒரு குழந்தைத்தனமும் துடிப்பும் அவனை அவள் வசம் கட்டியிழுக்க, அவளுக்கும் அவன் வசம் செல்லத்துடிக்கும் மனதை தடுக்க மனமில்லை.

இதுவே வேறு ஒரு பெண் அவனிடம் இவ்வாறு பேசியிருந்தால் அவன் மறுநொடி அங்கே நின்றிருக்க மாட்டான், அவளும் இந்த நேரத்தில் ஒரு மூன்றாம் நபருடன் நின்று பேசியிருக்க மாட்டாள்.

தனக்குள் நடக்கும் மாற்றம் இருவருக்கும் புரிய, அதனை மேலும் தெளிவுபடுத்திய பின்பு அடுத்தவரிடம் பகிரலாம் என்று நினைத்த இருவரும் தங்களை அறியாமலேயே ஒருமித்த பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர்.

அன்றைய இரவு இருவரும் அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர்கள் கைப்பேசி ஒலித்தது, “குட் நைட்” என.

அதனைக் கண்டவர்கள் இருவரும் ஒரு புன்னகையுடனேயே அந்த இரவைக் கழித்தனர்.




The time we spend with our loved ones is always best and precious and the same love filled moments make us realise where they stand in our life
 
Last edited:
Top