Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கல்யாணம்..கச்சேரி..(E9-நிறைவுப்பகுதி)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew
Helloooo makkale!!!!

here comes the final epi from..
கல்யாணம்..கச்சேரி.. ? ?

Thanksss alottt for the support you guys gave me!!!!??

share your thoughts makkale!!!!

கச்சேரி-9

மூன்று வருடங்களுக்கு பின்…

"சர்தான் போடாஆ!!!"

"நீ போடீ!!!"

"என்னையா டீ சொன்ன!!??உன்ன..."

"நீனும்தான் டா போட்ட அதுவும் அந்த 'டா' வுல எவ்வளோ அழுத்தம்!??"

"கொலை காண்டுல இருக்கேன் மரியாதையா ஓடிரு!"

"அது எப்படி மரியாதையா ஓடுறது மேடம்...???" என்று தீவிரமான முக பாவத்துடன் வினவியவனை கொலை வெறியுடன் முகிலினி பார்க்க

"ரைட்டூ....இதோ வரேனத்த!!!" என்று அங்கிருந்து பறந்திருந்தான் மகிழன்.

"என்னடா இது சிங்கமும் சிறுத்தையும் இப்படி அடிச்சுக்குது...?" என்று கேள்வியெழுப்பிய சஞ்சுவிடம்

"நீ வேற...ரெண்டும் அப்போல்ல இருந்து இப்படிதானிருக்கு...உன் பர்த்டே பார்ட்டீ நடந்தா மாதிரிதான்" என்று அவன் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான் ஜீவன்.

"எல்லாம் இந்த முகியால வந்த வினை...அவதான் ஏதாவது பண்ணிருப்பா" என்றது சஞ்சு

ஜீவனோ "ஏண்டா முகிய திட்டுற இந்த மகி தான் ஏதாவது வம்பிழுத்திருப்பான்.."

இவன் அக்காவிற்காக அவனும், அவன் அண்ணனுக்காக இவனும் வாதாடிக் கொண்டிருக்க அங்கிருந்த டேபிள்மேல் ஏறி லாஃப்டிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்த மகி அங்கிருந்த வாண்டுகளில் ஒன்று ஓடியதில் தட்டிவிட தடுமாறி விழப்போனான்.

டேபிளிலிருந்தவன் தரையில் லாண்டாவதற்கு முன் அவனை தாங்கியிருந்தது இரு கரங்கள்...!!

அந்த பக்கம் டெகரேஷன்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த முகி அவனை தாங்கி பிடித்திருக்க...

ஜீவனும் சஞ்சுவும் அதிர்ச்சியில்...!!

"டேய்...இதே மாதிரிதான மூணு வருஷம் முன்னாடி மகி முகிய பிடிச்சான்..." என்று ஜீவன் வாய் பிளக்க

"ஆமாண்டா...பட் இப்போ முகி மகிய பிடிச்சிருக்கா..." என்றிருவரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

"எரும எரும கீழ விழுந்து சிதறிருப்ப...உன்ன எவன் ஏற சொன்னான் கூப்பிட்டிருக்கலாம்ல?? கைய காட்டு...கால காட்டு...எங்கயாவது பட்டுச்சா...???" என்றவளின் அதட்டலில் சிரிப்புதான் வந்தது அவனுக்கு

"ஹ்ம்ம் புருஷன்ற மரியாதை இருக்கா பாரேன் உனக்கு..."என்றவனின் கேலிக்குரலில்,

"ஹ்ம்ம் அது ஒன்னுதான் கொறச்சல் இப்போ...மரியாதையா இப்போ ஒரு இடத்துல உக்காருற நீ...பாரு கையில லேசா சிராய்ச்சிருக்கு..." என்றவள் ஆயின்மெண்ட்டை தடவி விட்டு மற்ற ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றாள்.

"ஜீவா...இவங்க சமாதானம் ஆகிட்டாங்களா...?"

"தெரிலையே சஞ்சு"
என்றிருவரும் தீவிரமான யோசனையிலிருக்க

"அங்கு என்ன தெரிகிறது???" என்று தோளை தொட்ட மகியிடம் ஒரு அசட்டுச் சிரிப்பை தந்துவிட்டு ஓடியிருந்தனர் இருவரும்.

"உன்ன உக்கார தானே சொன்னேன்!!!" என்று கையில் ஜுஸ் தம்ளருடன் நின்றிருந்தவளைப் பார்த்து 'ஈஈஈ' என்பது இப்பொழுது அவன் முறையானது.

தூரத்திலிருந்து பார்த்திருந்த இருவரோ…’ அப்படி என்னதான்டா ப்ரச்சனை இவங்களுக்கு??’ என்று தலையை பிய்த்துக்கொள்ளாத நிலையில்!!

மதிய வேளையில்… கதிரவனின் காதல் கதிர்களில் இருந்து தப்பும் முயற்சியில் சிலர் அந்த பூங்காவினுள் அடைக்கலம் தேடியிருக்க… அங்கு பலரும் அந்த சுற்றுவட்டார நிறுவனங்களில் பணிபுரிபவர்களே!!

மதிய உணவு இடைவேளையென்று சிலர் ஆசுவாசமாய் நடைபயின்றபடியிருக்க.. அந்த ஃபுட் ட்ரக்கோ மிக பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.

அந்த பகுதியிலேயே அவர்களது சுகாதாரம் மட்டுமின்றி தரமான உணவு வகைகளும் கைமணமும் பிரசித்தி பெற்றிருந்தது!!

சொல்லப்போனால் வளர்ந்துவரும் தொழிலில் இருந்து… வளர்ந்துவிட்ட தொழில் என்னும் பெயரை எட்டுவது கையெட்டும் தூரத்தில்தான் இருந்தது “நளபாகம்”.

நளபாகம்…. சிறிய காலத்திலேயே கடின உழைப்பால் பல கிளைகளை பரப்பியிருக்கும் ஃபுட் ட்ரக் பிஸ்னஸ்!!
பல தடைகளை தாண்டி அயராத உழைப்பால் மட்டுமே உயர்ந்த நிறுவனம்.

நளபாகத்தின் மெயின் மெனுவே… கூட்டாஞ்சோறும், எண்ணை கத்திரிக்காயும் கூல்வத்தலுமே!! எளிய வகைகளே ஆனாலும்.. நளபாகத்தின் ருசியே மக்களை அவர்கள்புறம் இழுத்திருந்தது!!

“எங்க ஆச்சி கையால சாப்பிட்ட ஃபீல்ங்க!!” என்ற வாடிக்கையாளர்களின் நிறைந்த முகம்தான் நமக்கு வெற்றியென உறுதியாய் நம்பியவர்கள் அவர்கள்!! அப்படி பலர் வாயால் அதை கேட்கபெறும்போது மனதில் எழும் உற்சாகமே அடுத்து அடுத்து என இதுவரை இழுத்து வந்திருந்தது.

இது ஒருபுறம் என்றால்.. மற்றொன்று அதன் உரிமையாளர்கள்.. ஆம் உரிமையாளர்களே!! ஒன்றில் தொடங்கி இன்று ஐந்து ஃபுட் ட்ரக்குளை சொந்தமாக்கியிருந்தும்… இன்றைக்கும் இருவரும் ஊழியர்களுடன் இணைந்து நின்றுதான் வேலை செய்கின்றனர். அதை விரும்பவும் செய்கின்றனர்.

எத்தனையோ முறை கேட்டிருக்கிறாள்.. “ஏன்க்கா நீங்களும் இங்க வரனுமா??” என்று ஆனால் அவள் கேட்டப்பொழுதெல்லாம் அழகாய் புன்னகைத்து தலையசைத்தவளாய், “ நான் இங்க இருந்துதான் ஆரம்பிச்சேன் சந்தியா! வெற்றின்றது இது இல்ல!!” என்று அவள் அறையில் தொங்கும் விருதை சுட்டிக்காட்டுபவள் “உண்மையான சக்ஸஸ்… நிறைவான மனசு சந்தியா!! எவ்வளவு பெரிய வெற்றியா இருந்தாலும் சாட்டிஸ்ஃபேக்ஷன் இல்லன்னா… அது தோல்விதான்… எனக்கு இதுதான்! உனக்கும் புரியும்..” என்பவள் மற்றவளின் தோளில் தட்டிவிட்டு சென்றுவிடுவாள்.

எண்ணங்கள் அதன்போக்கில் ஓடிக்கொண்டிருக்க அதை கலைத்தான் அவன்!

தன்னெதிரே நிற்பவனையே பார்த்திருந்த சந்தியாவோ பதறியடித்தபடி நிதர்சனத்துக்கு வந்திருந்தாள். உணவு இடைவேளை முடிந்து கூட்டம் கலைந்திருக்க அந்த பூங்காவிலும் அத்தனை அமைதி நிலவியது!!
அவனோ “உங்க அக்காவ எங்க??” என்றான் புருவங்களிரண்டும் நெளிய.

“இவ்வளவு நேரம் இங்கதானிருந்தாங்க… இப்பதான் வெளியப்போனாங்கண்ணா!” என்றாள் சந்தியா.

“சாப்பிட்டாச்சா சந்தியா??” என்றவனின் கேள்விக்கு ஆமென்பதாக தலையசைத்தாள் அடுத்த கேள்வி தெரிந்திருந்தும்.

“உங்க அக்கா??” என்றவனின் கேள்வியில் மற்றவள் தலை மறுப்பாய் அசைய
ஃபோனை கையிலெடுத்தவனோ மெஸேஜ் ஒன்றை தட்டிவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டான்.

“நான் கால் பண்ணவா அண்ணா??” என்றவளிடம் மறுப்பாய் அவன் தலை அசையும் முன்னரே அங்கு ஆஜராகியிருந்தாள் முகிலினி.

அத்தனை நேரம் வெளியில் நின்ற சந்தியாவும் உள்ளே பாதியில் விட்டிருந்த வேலைகளை தொடரச் சென்றுவிட்டாள் அவர்களுக்கு தனிமையளித்து.

“என்ன அகன்??” என்று தன் முன் நின்றிருந்த மனைவியையே மௌனமாய் பார்த்திருந்தான் மகிழன்.

“எதாவது ப்ரச்சனையா??” என்றவளின் கேள்வியில் மறுப்பாய் தலையசைத்தவன்,

“நீ சாப்பிட்டியா??” என்று கேட்க நொடிப்பொழுதில் புரிந்துப்போனது முகிலினிக்கு.

‘இல்லை’ என்ற அவள் தலையசைவில் அவனுக்கு அத்தனை கோபமென்பது அவன் முகமே பிரதிபலித்தது.

“என்ன முகில்!?! எத்தன தடவ சொல்றது? அப்படியென்ன வேலை?! சாப்டுட்டு பாக்கலாம்தானே?!” என்றவன் பொரிய அவளோ வாட்ச்சை திருப்பி பார்த்தவளாய்,

“உன் ப்ரேக் டைம் முடிஞ்சிருக்குமே?!” என்க அவனோ “பெர்மிஷன் போட்டேன்!” என்றான் கோபம் தணியாமலே.

“ப்ச்! இப்போ என்ன??!” என்றாள் அவனின் கோப முகத்தை காண சகியாமல்.

“இன்னைக்கு கால் வரல்லன்ன ஒடனே தெரியும்! நீ சாப்பிட்டிருக்க மாட்டேன்னு!!” என்றவனோ அதே பிடியில்.

அவனது குற்றச்சாட்டில், “அதில்ல அகன் வேலை கொஞ்சம் அதிகம்…”என்றவள் நினைவு வந்தவளாய் “நீ சாப்பிட்டியா??” என்றாள் சந்தேகமெழ

இம்முறை அமைதி காப்பது அவன் முறையாகிட அவளோ “நேரத்துக்கு சாப்பிடறதுக்கு என்ன??” என்று பொரிய அவனோ ‘அத யார் சொல்றா?!’ என்ற பாவனையில் பார்த்து நின்றான்.

கையில் இரண்டு தட்டுகளுடன் வந்த சந்தியாவோ அதை அவர்கள் கையில் திணித்தாள்.
“அடடா! உங்களோட இதே வேலையா போச்சு!! மொதல்ல இரண்டு பேரும் சாப்பிடுங்க!” என்றுவிட்டு உள்ளே ஓடியிருந்தாள்.

தட்டுடன் அங்கிருந்த பெஞ்சொன்றில் அமர்ந்தனர் இருவரும்.

தட்டை மட்டும் நடுவில் வைத்துக் கொண்டு இருவரும் உர்ரென இருக்க முதலில் அந்த மௌனத்தை உடைத்தது மகிழனே!
“ஆறதுக்குள்ள சாப்பிடு முகில்!” என்க அவளோ “நீயும்!!” என்றுவிட இருவரும் உண்டிருந்தனர்.

இது அவ்வப்பொழுது நடக்கும் ஒன்றுதான்! வழமையாய் மதிய வேளைவில் சிறு அழைப்போ…இல்லை ஒரு குறுந்தகவல் பரிமாற்றமோ நடக்கும்.. அது இல்லையெனில் அடுத்த சில நேரங்களிலேயே மகிழன் அங்கிருப்பான்.

அவன் அவளை நன்கறிவான்! அதனாலேயே வந்து அவள் உண்பதை கண்டுவிட்டே திரும்புவான்.
அப்படிதான் அன்றும் அவன் வந்திருந்தான் அதன் தொடர்ச்சிதான் இப்பொழுதும் இருவரும் முட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.

கையில் ஜூஸ் தம்ளருடன் நின்றிருந்தவளைக் கண்டு அவன் சிரித்துவைக்க அவளோ அனலாய் நின்றிருந்தாள்.
“உன்ன நான் உக்காரதான சொன்னேன்…” என்று தொடங்கியவளிடம் தன் வாயில் ஒற்றை விரல் வைத்தவனாய் உயர்ந்த அவள் குரலை “ஷ்..” என்க அவன் ஷ்… என்று சொல்லச்சொல்ல அவள் குரல் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கியது!

நெறித்திருந்த அவள் நெற்றியை நீவியவனோ “குட் கர்ள்! இப்போ சொல்லு!” என்றான் பொறுமையாய்.
அதுதான் மகிழன். ஒவ்வொரு முறை அவள் கோபத்தின் உச்சிக்கு செல்லும்பொழுதும் ஒற்றை வார்த்தையில் சுலபமாய் அவளை கீழிறக்கிவிடுவான். கோபத்தில் நெறிந்திருக்கும் புருவத்தை நீவி விட்டு இப்போ சொல்லு! என்றவன் கேட்கும் பொழுது அவள் நிதானத்திற்கு வந்திடுவாள்.

“நீ செய்றது சரியே இல்ல!!” என்றவளிடம் “என்ன செஞ்சேன்?” என்று கேட்டு அவளை கோவப்படுத்தும் எண்ணமில்லாதவனாய்..

“நீ செய்றது மட்டும் சரியா?? சந்தியாவ சாப்பிட சொன்னல்ல?! அப்பவே நீயும் சாப்பிடறதுக்கு என்ன??” என்றான் அமைதியாகவே.

“உனக்கே தெரியாத அகன்.. யுகாவால இப்போ முன்னமாதிரி வேலை செய்யக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காங்க.. ஏழாவது மாசம் வேற! அங்கேயும் நான் பாக்கனும்ல?!” என்றவளின் குரல் முற்றிலுமாய் இறங்கி சாதாரணமாய் ஒலித்தது.

அவனுக்கும் ஒன்றும் புரியாமலில்லை இருந்தும்.. “புரியுது முகில்! ஆனா நீ உன்னையும் பாத்துக்கனும்ல… நேரா நேரத்துக்கு சாப்பிட்டாதானே தெம்பா என்ன வெளுக்கலாம்?!” என்று சீரியஸாய் தொடங்கி கேலியில் முடிக்க தீவிரமாய் கேட்டிருந்தவளோ கடைசி பகுதியில்.. “உன்ன!!! மொதல்ல இந்த ஜூஸ குடிச்சிட்டு உக்காரு!! நிலா வேற அத்தைய ஒருவழியாக்கிட்டு இருக்கா! இன்னும் பத்து நிமிஷத்துல ஆரம்பிச்சரலாம்!” என்றவாரே அடுத்தடுத்த திட்டங்களை போட்டுக்கொண்டே அவள் நகர மகிழனோ சின்ன சிரிப்பினூடே வந்திருந்த விருந்தினரை வரவேற்க சென்றான்.
முல்லையே முதலில் மறுத்தார்தான் இந்த ஏற்பாடுகளை கண்டு “இத்தன வயசு பையனுக்கு பர்த்டே பார்ட்டியா??” என்றவரிடம் “என் தம்பிக்கு எத்தன வயசானாலும் நான் பர்த்டே பார்ட்டீ வப்பேன்!” என்றிருந்தாள் முகிலினி.

ஏனோ எத்தனை உயர்ந்தும்…காலங்கள் கடந்தும்.. சில வழக்கங்களை மற்றும் மாற்றிக்கொள்ளும் மனமே வருவதில்லை!!

கருநீல வானில் மினுமினுத்த நட்ச்சத்திரக்கூட்டமும் அதற்கு போட்டியாய் மிளிர்ந்த நிலவையும் அந்த திறந்த பால்கனியில் நின்றபடி.. உள்ளம் தீண்டும் பனிக்காற்றை நெஞ்சின் அடியாழம் வரை நிரப்பியவளாய் நின்றிருந்தாள் முகிலினி. உறங்கும் மகளுக்கு தோதாய் விளக்கை அணைத்து வைத்திருந்தாள்.

நிலவின் ஒளிமட்டுமே அவ்வறையின் அழகியலை பறைசாற்றியபடியிருக்க அவள் கவனமோ அந்த அறையின் சுவற்றில் இருந்த அவர்களது புகைப்படத்தை தொட்டு மீண்டது!! அதில் மணக்கோலத்தில்.. முகம் முழுக்க சிரிப்பு பரவியிருக்க சிரித்தபடி இருந்த கேண்டிட் வகை புகைப்படமது!! விழியோரத்தில் சிரிப்பால் சுருங்கியிருந்த அவன் முகத்தை கண்டவளுள்ளோ பல நினைவுகள் அலை அலையாய்!!

முதல் முறை இலாவின் வீட்டில் அவனை சந்தித்ததே நினைவிலாடின அவளுக்கு.. அவனை கவனித்திருந்தாள்தான்!! அவனது கண்ணியமான பார்வையும்.. குறும்புத்தனம் மின்னும் பேச்சுமென சாதாரணமாய் தான் பார்த்திருந்தாள்..

கல்யாணம் என்ற சொல்லிற்கு அவள் வைத்திருந்த பிம்பமே உடைந்திருந்தது அவர்களது திருமணத்திற்குபின். அவள் லட்சியவாதி!! வாழ்க்கையில் சாதித்துவிட்டுதான் மற்றதெல்லாம் என்றிருந்தவள். ஒவ்வொரு முறை கல்யாணப் பேச்செழும்பொழுதெல்லாம் அவளுரைத்தது இதுவே.. மொதல்ல நான் நான் யாருனு கண்டுபிடிக்கனும்!! எனக்கான பாதைய.. எனக்கான தேடல.. நான் நானாவே செய்யனும்!! என்றிருந்தவள்தான் பல காரணங்கள்,ப்ரச்சனைகள்..

இருந்தும் தளர்ந்துவிடாமல் அவள் தன் முயற்சிகளை மேற்கொண்டப்பொழுது உறுதுணையாய் நின்றது மகிழனே!!

ஒவ்வொரு முறை துவண்டப்பொழுதும்… மீண்டெழ கை கோர்த்தவனும் அவனே!! தட்டிக்கொடுக்க கையில்லாத பொழுதே அத்தனை முயன்றவள் அவள்!! அப்படியிருக்க அவனோ என்னவானாலும் விட்டுக்கொடுத்துறாத முகில்!! உன்னால முடியும் என்று நிற்க.. அவளது தேவையும் அதானே?!! மாரல் சப்போர்ட்!! அது அவளுக்கு அள்ள அள்ள குறையாமல்..

அவள் கனவுகளின் காவலனாய் அவனிருக்க விடாது முயற்சித்தவளின் வெற்றியாய் இன்று!!

அவனை நினைக்க நினைக்க தாமாய் பூத்த புன்னகையொன்றுடன் வான்வெளியை பார்த்தவளாய் நின்றிருந்தாள் அவள்.

அவள் புன்னகைக்கு காரணமானவனோ மெல்ல கதவைத்திறந்தவனாய் அறையினுள் நுழைந்தான்.

“வெல்லக்கட்டி என்ன பண்றாங்க??!” என்றவனின் குரலில் தலையை மட்டும் அவன் புறம் திருப்பியவள் ‘ஷ்’ என சைகை செய்தவளாய்..

“ம்ம்ம்… தூங்கறா!!” என்றாள் படுக்கையில் அயர்ந்து உறங்கும் தங்களது இரண்டு வயது மகளான… மகிழனால் வெல்லக்கட்டியென அழைக்கப்படும் நன்னிலாவில் பார்வையை பதித்தவளாய்.

பூனைபாதம் வைத்தவனாய் மகளிடம் சென்றவன் அவளது பிஞ்சு கைரவிரல்களை மென்மையாய் வருடியவனாய்.. அந்த சின்ன நெற்றியில் இதழொற்றினான்.

மகளில் இருந்த பார்வையை அவள் இப்பொழுது வானில் திருப்பியிருந்தாள்.
விலகியிருந்த போர்வையை ஒழுங்கு செய்தவன் பால்கனிக்கு சென்றான்.
வானை வெறித்து நிற்கும் மனைவியை கண்டவனின் மனதிலோ… பிடித்த பாடல் ஒன்றின் இடைப்பட்ட வரிகள் முனுமுனுப்பாய் ஓட… “அட உலகை இரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு…” என்ற வரியை மட்டும் அவனிதழின் முனுமுனுப்பாய்..!!

அதில் பட்டென அவன்புறம் திரும்பியவளோ “ஆஹான்!?” என்றாள் கேலியா?? கேள்வியா?? என்று பிரித்தறிய முடியாத பாவனையில்.

அதில் அவளிடம் வந்தவனோ வானை நோக்கி அவளை நிறுத்தி பின்னிருந்து அவளை தன் கைக்குள் இறுத்தி அவள் தோளில் தாடையை வைத்தவனாய் அவ்விரவின் இனிமையை இரசிப்பவனாய்..

கருநீல வானில் கிள்ளி எறிந்த நகத்துண்டாய் காட்சியளித்த நிலவில் பார்வை பதித்து.. “அந்த நிலாவோட விளிம்புல ஊஞ்சல் கட்டினா எப்படியிருக்கும்??” என்றான் அனுபவித்து.

“ஆஹான்?!! நிலா மேல அத்தன இஷ்டமா??” என்றவளின் தலையில் செல்லமாய் தட்டியவனோ.. “ம்ஹூம்! இந்த முகில் பக்கத்துல இருந்து அந்த நிலா பாக்கறதுல இஷ்டம்!!” என்றான் கண்சிமிட்டியவனாய்!!

“அடடே!! கவித கவித!!கொஞ்சம் ட்ரமாட்டிக்கா இல்ல?!...” என்றவள் பின் “அகனுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷமாவுது!!” என்றாள் கேலியாய் அவனோ பிடியை இறுக்கியவனாய்.. “ட்ரமாட்டிக்கோ! ரொமாண்ட்டிக்கோ அதெல்லாம் தெரியாது!! ஆனா முப்பது வருஷமானாலும் அகன் இப்படிதான் இருப்பானாம்!!” என்றான் மென்மையாய் அவள் தலையில் இடித்து!!

“முப்பது?? பாப்போம் பாப்போம்!!” என்று வம்பிழுத்தவளின் மனமோ உண்மையிலேயே அந்த நிலா விளிம்பில் ஊஞ்சல் கட்டி ஆடியது!!

கண்ணெதிரில் குட்டி தேவதையாய் அவனின் வெல்லக்கட்டி!! கைக்குள் அவனுலகமாய் அவனவள்!! ஓர் நொடி கண்களை மூடி ஆழ மூச்சிழுத்தவனுள் எழுந்ததெல்லாம்… “எத்தனை இனிமையான வாழ்விது!!” என்ற எண்ணமே.

கச்சேரி களைகட்டியது!!!!

******சுபம்*******
 
இனிமை இனிமை மிக இனிமை
 
Top