Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கல்யாணம்..கச்சேரி..(E7)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew
Helllooo makkale!!!!

thanksss alottt for the support you guys gave for the last epi... :love: ?

Here comes the next epi from...
கல்யாணம்..கச்சேரி..??

share your thoughts makkale!!!!



கச்சேரி-7




அந்த வகுப்பறையே நிசப்த்தத்தில் மூழ்கியிருந்தது. ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தார் அந்த ப்ரொஃபஸர்.

“நேத்து பாதிக்கு மேல க்ளாஸ் காலி!....ம்ம்ம் யாருலாம் வரல?? எழுந்துருங்க!!” என்றவரின் அதட்டல் குரலிலேயே பாதி எழுந்திருக்க மீதி சிலரோ ஆமா இவருக்கு வேற வேலை இல்ல!! என்பதைபோல் அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொருவராய் காரணத்தை அவர் கேட்டுக் கொண்டு வர ஜீவனோ,

“வீட்ல ஃபங்ஷன் சர்” என்றான் சுருக்கமாய்.

“என்ன ஃபங்ஷன்??...திடீர்னு” விடுபவரா அவர்?!

“அண்ணாவுக்கு எங்கேஜ்மெண்ட் சர்!” அவ்வளவுதான்!!

“அண்ணனுக்கு எங்கேஜ்மெண்ட்னு முதல்லையே தெரியாதா?? ப்ரையர் நோட்டிஸ் குடுக்கறதுக்கு என்ன??” என்றவர் பொரிய இங்கு இவனுள்ளமோ

‘சத்தியமா தெரியாது!!’ என்று அலறியது. ஆனால் அவர் நம்ப போவதும் இல்லை… அவன் சொல்லப் போவதும் இல்லை! அருகில் அமர்ந்திருந்த நண்பன் ஒருவன் அவன் கையை இழுத்தவனாய் கிசுகிசுத்தான்.

“பாத்தீயா?!! சொல்லவேயில்ல!” என்று கேட்டவனையே வெறித்து நோக்கியவனுக்கோ… ‘எனக்கே சொல்லலையே பக்கி!!’ என்று பொறுமியது.

அப்பொழுதே உரைத்தது அவனுள்ளத்தில்… சம்பந்தப்பட்ட அவன் அண்ணனாகப்பட்ட அகமகிழனுக்கே தெரியாதே?! என்று.
“நீ இன்னும் கிளம்பலையா??” என்று வந்த தம்பியையே கொலைவெறிப்பார்வை பார்த்து வைத்தான் மகிழன்.

அன்று புதன்! அவனுக்கு ஆப்ஷனல் ஹாலிடே! லீவ் பாலன்ஸ் பல இருந்ததால் அன்று துணிந்து அதை உபயோகித்திருந்தான்… அதற்காக இன்னும் சில நேரத்தில் தான் வருந்தப்போவதை அறியாதவனாய்..!!

காலையிலேயே வீட்டில் அத்தனை பரபரப்பு! ஆனந்தனின் உயிர் நண்பனும்… தூரத்து உறவினனுமானவர் வீட்டு விசேஷம் என்று. நேற்றிரவு “காலைல சீக்கிரம் கிளம்பிடு மகிழா! உனக்கும் லீவ்தான…” என்ற தாமரைக்கு தலையை தலையை ஆட்டினானே தவிர அதன் தீவிரத்தை அப்பொழுது அவன் உணர்ந்திருக்கவில்லை!

அந்த காலை நேரத்தில் வீட்டில் அனைவரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க அப்பொழுதே உரைத்தது… தானும் கிளம்பியாக வேண்டுமென!

அறைவாயிலில் நின்றபடி தன்னை விரட்டும் ஜீவனைக் கண்டவனோ,

“நீ காலேஜ் போல??” என்றான் சந்தேகமாய்!

“ என் பெஸ்ட் ஃப்ரெண்டு வீட்டு ஃபங்ஷன்! நான் இல்லாமையா! அவன் இல்லன்னா க்ளாஸ்ல போரடிக்கும் மகி” என்றவன் உரைக்க மகிழனோ,

“என்னவோ போ! நம்ம வீட்டு ஃபங்ஷனுக்குகூட இப்படி…இவ்வளோ பரபரப்பா இருக்காதுபோல!” என்றவன் கேலியாய் உரைத்துச் சென்றான்.

“என்ன இப்படி சொல்லிட்ட? முகியோட நிச்சயம் நாம கட்டாயம்…” என்றுரைத்தவனின் வார்த்தைகள் தடைபட விறுவிறுவென அழைத்த அன்னையிடம் விரைந்தான்.

முகி… என்ற பெயரில் ஓர் நொடி எங்கயோ கேட்ட பேரா இருக்கே… என்றவன் எண்ணமிருக்க நேர விரயம் செய்ய விரும்பாதவனாய் கிளம்பினான்.
அன்று இலக்கியாவின் வீட்டில் நடந்தவை… ஜீவனின் சந்தேகப்பார்வை எல்லாம் கொஞ்ச நேரமே அவன் மனதில்… அதற்கு காரணமானவளே சற்று நேரத்தில் கிளம்பியிருக்க அவன் பார்வையில் அவள் விழவேயில்லை!

ஜீவனிடம் கேட்க வேண்டுமென நினைத்தவனோ மற்ற சில அலுவலக அழுத்தங்களில் மறந்தே போனான் என்றுவிட முடியாதெனினும் அதெல்லாம் அவன் மனதின் அடியில் அமிழ்ந்துவிட்டன.

இன்று ஏனோ முகி… என்ற ஜீவனின் பேச்சில் எங்கேயோ கேட்டக்குரலைப்போல…. எங்கேயோ கேட்ட பெயர்… என்று மனதை தேற்றியவனாய் கதிரவன் வீட்டு முகப்பறையில் அமர்ந்திருந்தான்.

மாப்பிள்ளை வீட்டாரும் வந்திருக்க சிலபல நலவிசாரிப்புகளும்… பேச்சுக்களுமாய் போய்க்கொண்டிருந்தது அந்த சூழல்!! அதை உடைப்பதுபோல் அவன் நாசியை தீண்டிய லாவண்டர் வாசத்தில் அவன் கண்மணிகள் இரண்டும் ஆச்சர்யத்தில் விரிய… சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டான் யார் கவனத்திலும் படியாதவாறு!!

அறையிலிருந்து வெளியேறி… வந்து கொண்டிருந்தவளில் அவன் விழிப்பார்வை உறைய அவனுள்ளமோ… ஷாக்க கொற ஷாக்க கொற என்று அதட்டியது என்றால் மற்றொன்றோ… ஓ… இவளுக்குதான் நிச்சயமா??? என்றது… அது சோர்வா… இல்லை….

அந்த கத்திரிப்பூ நிற மைசூர் சில்க் புடவையில் வந்தவளிலேயே அவன் பார்வை ஃப்ரீஸ்!!!!

“ஹே!!! இந்த கலர்ல…மைசூர் சில்க் செம முகி!! லாவண்டரும் இல்லாம… டார்க்காவும் இல்லாம ரொம்ப வித்தியாசமா... அழகாருக்கு..” என்று சொல்லிக் கொண்டே போன யுகாவின் பேச்சு மற்றவளின் கவனமின்மையில் தடைப்பட்டது!

முகியின் கவனம் அவளிடம் அதுவும் அங்கு இல்லை என்பதை உணர்ந்தவள் அவள் தோளை ஆதரவாய் பற்ற அதில் சுயத்திற்கு மீண்டவளோ அந்த சேலைக்கு ஏற்ற ரவிக்கையை எடுத்து வந்தாள்.

“என்ன ப்ரச்சனை முகி??” என்று வினவியவளிடம் ஒன்னுமில்லை என்பதாக தலையசைத்தவள் அங்குமிங்குமாய் அந்த அறையில் அலைந்துக் கொண்டிருக்க அவள் கை பற்றி தடுத்த யுகா, அவள் கண்பார்த்தவளாய்..

“அப்பாட்ட நான் பேசவா..??” என்றாள்.. அவளால் முகியின் மௌனத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை.

யுகாவின் வருத்தம் புரிந்தவளாய் மென்சிரிப்பொன்றை உதிர்த்தவள் வேண்டாம் என்று தலையசைத்தவளாக நகர்ந்துவிட்டாள்.

அவளது அமைதியே இவளை உலுக்கியது. என்ன யோசிக்கறா?? என்ன ப்ரச்சனை?? என்று பதறிய உள்ளத்தை அடக்க முயற்சித்தவளாய் யுகா…
அமைதியே உருவாய் தயாராகிக்கொண்டிருப்பது நிச்சயம் முகியல்ல!! மற்றவர்களிடம் எப்படியோ. ஆனால் அவளிடம்…அதுவும் இப்படிப்பட்ட சூழலில் இவள் அமைதி காப்பது ஏனோ யுகாவிற்கு சரியாய்படவில்லை!

முதலிலேயே நாங்கள் மாப்பிள்ளை வீடு என்ற முறுக்கு!! அதிலும் வந்திருப்பது ஒன்னுவிட்ட தம்பியின் வீடு என்றாகிட சிவகாமியின் கெத்துக்கு கொறச்சலா…??!!

அந்த ஓரளவு பெரிதாய் இருந்த முகப்பறையில் அனைவரும் அமர்ந்திருக்க இருந்ததிலேயே ஓங்கி ஒலித்தது சிவகாமியின் குரலே!!

அதற்கு நேரெதிராய் மௌனம் ஒன்றே மொழியாய்… அவ்வப்பொழுது சிற்சிறு பேச்சுக்களோடு அமர்ந்திருந்தான் அவன்…ஸ்ரீதரன்!!

ஆறடி உயரம்.. அலை அலையாய் கேசம்… கூர் நாசியென காலம்காலமாய் வரும் ஹீரோக்களின் அத்தனை அம்சம்களும் வரப்பெற்றவனாய் அமர்ந்திருந்தான் அவன்.

“மகி..” என்று கிசுகிசுத்த தம்பியிடம் தன் காதை அவன் கொடுக்க,
“மாப்பிள்ள ஹாண்ட்ஸம்தான்ல??!!” என்ற ஜீவனை காண,

‘உன் இரசனைல இடி விழ!!’ என்று உள்ளத்தில் உள்ளதை போட்டுடைத்த மைண்ட்வாய்ஸை கண்டித்தவனாய் அதே வாக்கியத்தை தங்கம்…வெள்ளியென பல கோட்டிங் அடித்து வெளியிட்டான் அண்ணன்காரன்.

‘தமிழ் சினிமால வர்ற அமெரிக்கா மாப்பிள்ள மாதிரி இருக்கான்’என்று தோன்றிட
“லுக்ஸ்ல என்னடா இருக்கு??!! “ என்று பட்டும்படாமல் உரைத்திருந்தான். முதலில் அவனுக்கு இப்படி குடும்பமாய் சேர்ந்து அவனை குண்டுகட்டாய் தூக்கி வந்ததே எரிச்சல் என்றால்… இவன் என்னடாவென்றால்…

“முகி செமல!! இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் ஸாரில பாக்கறேன்…” என்ற ஜீவனின் இரசனை பரிமாற்றங்களில் நொந்துப்போனான் மகிழன்!!

எப்படா கிளம்புவோம்!? என்ற மனநிலைக்கே வந்திருந்தான். அவன் கண்களில் விழுந்தவை எதுவும் மனதில் பதியவில்லை… அவர்கள் தட்டை மாற்ற தயாராகும்வரையிலுமே!!

"அப்போ எல்லாம் சரிதான??" என்ற பெரியவர் ஒருவர் அடுத்தக்கட்ட வேலைகளில் இறங்க,

"ஒரு நிமிஷம்!" என்று அவர்களைத் தடுத்தவளாக அறையினுள் சென்றாள் முகி.

அத்தனை நேரம் அமைதியாய் இருந்த மகள்… கிட்டத்தட்ட இரண்டு மூணு நாட்களாகவே ஏதோ சிந்தனையில் இருந்தவள்தான்… இன்று… அதுவும் முக்கியமான நேரத்தில் நிறுத்தியதிலேயே கதிரவனுக்கு ஏதோ சரியில்லை என்று உறுத்த தொடங்கியிருக்க… யுகாவின் இதயத்துடிப்போ தாறுமாறாய்..!!

அவளை யாரும் தடுக்கவுமில்லை… மற்றவர்கள் தடுக்குமளவுக்கு அவள் அவர்களுக்கு வாய்ப்புமளிக்கவில்லை!! ஒரு நிமிஷம் என்றவள் விடுவிடுவென அறையினுள் சென்றிருந்தாள்.

முல்லைக்கோ மகளின் செயலில் கோபமெழாமல் இல்லை!! அவர் எண்ணமெல்லாம்… நல்ல காரியம் நடக்கும்போது… ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணா என்ன?? என்றுதானிருந்தது. பாவம் அவர் அறிந்திருக்கவில்லை அடுத்து வரப்போவதை!!

“இருக்கு! ஏதோ பெருசா இருக்கு!!” என்ற மகிழனின் உள்ளுணர்வு அடித்துரைக்க அதை மெய்ப்பிப்பதுபோல் கையில் ஒரு ஃபைலுடன் அறையில் இருந்து வெளியே வந்தாள் முகிலினி.

அவள் நடையின் நிமிர்வே அவனை மற்றவர்களை கவனிக்க வைத்தது!
“நல்ல நேரம் போறதுக்குள்ள…” என்று தொடங்கிய உறவினரெல்லாம் அவள் பார்வை வட்டத்தினுள்ளே இல்லை!! எப்படியிருக்கும்??!! உள்ளம் முழுமையிலும்….

“அப்பா… நான் கொஞ்சம் பேசனும்…” என்றிட அது அனுமதி வேண்டலா…இல்லை வெறும் தகவலா?? என்ற குழப்பமே பலருக்கும்..

மகளின் முகத்தை கண்ட கதிரவனும் என்ன நினைத்தாரோ தலையாட்டிவிட்டார்.

எல்லோரும் ஒன்று நினைத்திருக்க அதற்கு மாறாய் சிவகாமியிடம் வந்தவளோ,

“அத்தை”என்றழைக்க அவரும்

“சொல்லு முகி…என்னாச்சு??” என்று கேட்டார்.

கையில் இருந்த ஃபைலில் கவனம் பதித்தவளோ அவரிடம்..”அது..அத்தை காலம் ரொம்ப கெட்டு கெடக்குல… யார் எப்படின்னே நமக்கு தெரியறதில்ல இல்லையா??” என்க எதற்கு சம்பந்தமேயில்லாமல் என்று அனைவரும் பார்த்திருக்க சிவகாமியும் தலையசைத்து வைத்தார் ஆம் என்பதாக.

“அதான்… ஸ்ரீதரும்… என்னை பத்தி தெரிஞ்சிக்கறதுக்காக… கல்யாணம் இல்லையா??! ஸோ என் கேரக்டர் எப்படினு விசாரிச்சுருப்பார் போல… அவர் பயப்படறதும் நியாயம்தானே…” என்றவள் சிவகாமி வாயை திறக்கவும் அவரை தடுத்தவளாய்…

“அத நான் தப்பு சொல்லல அத்தை!! அது அவரோட க்ளாரிட்டிக்காக பண்ணிருக்காருபோல…” என்றவள் நினைவு வந்தவளாய் கையில் இருந்த ஃபைலை அவரிடம் திணித்தாள்.

அவர் சந்தேகமாய் பார்க்க அவளோ,

“என் மெடிக்கல் ரிபோர்ட் அத்தை…வெர்ஜினிட்டி டெஸ்ட்!!” என்றவளின் வார்த்தையில் மொத்த வீடும் அதிர்ச்சியில்!!

அதிர்ந்து விழித்த சிவகாமியிடம்..” அதொன்னுமில்லத்த… இன்னைக்கு வெறும் வாய் வார்த்தையா என் கேரக்டர பத்தி… எனக்கு வேற அஃபேர் இருக்கானு விசாரகச்சுருக்காங்க… நாளைக்கு டௌட்னு ஒன்னு வந்துரக்கூடாதுல…” என்றது தான் தாமதம் அங்கெல்லோரும் வெவ்வேறு மனநிலையில்.

மகளின் கேரக்டரை பற்றி விசாரித்தான் என்றதிலேயே கதிரவனுக்கு வெறுத்துவிட்டது! அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க சிவகாமியோ அதற்கு நேரெதிராய் யோசித்தார்.

“ராஜாத்தி!!” என்று அவளுக்கு திருஷ்டி கழித்தவர் “அவன் கேட்டத எவ்வளோ நல்ல விதத்துல எடுத்துட்டு… நல்ல முடிவா எடுத்துருக்க… நீ தான்டா என் வீட்டு மருமக!!” என்ற சிவகாமியிடம் அமைதி காத்தாள் சிறியவள்.

மகிழனுக்கு உள்ளூர உதைத்தது!! இவ இப்படியெல்லாம் பேசக்கூடியவ இல்லையே??! என்றிருக்க ஜீவனும் அதையேதான் உரைத்தான்.

“இந்த முகிக்கு என்ன லூசா?? என்ன இப்படி பண்றாங்க??!! நான் கேக்க போறேன்!” என்று முன்னேறத்துடித்தவனை கை பற்றி தடுத்தார் ஆனந்தன்.
முல்லைக்கோ நடப்பதை கிரகித்துக் கொள்ளவே நேரம் தேவைப்பட்டது.என்றால் சஞ்சயனோ ஒன்றும் புரியாத நிலையில்.

கதிரவன் இறுகிப்போய் நிற்க அவளே தொடர்ந்து அந்த மௌன நாடகத்தை உடைத்தாள் முகிலினி.

“இப்போ… ஸ்ரீதர் டௌட்ட நான் க்ளியர் பண்ணிட்டேன்ல… அதே மாதிரி என் டௌட்டயும் ஸ்ரீதர் க்ளியர் பண்ணனும்!” என்க சிவகாமியின் பார்வை கூர்மையானது.

“என்ன பண்ணனும்??” என்றவரும் நேரடியாய் வந்துவிட அவளும் சுற்றி வளைக்காமல் “ஹெச்.ஐ.வி. டெஸ்ட் எடுத்துக்கணும்!” என்றாள் அத்தனை நேரம் பிடித்து இழுத்து வைத்திருந்த மென்மையை கைவிட்டவளாக.

அவளுரைத்த வார்த்தையில் அத்தனை பேரும் அதிர ஸ்ரீதரனோ எழுந்தே இருந்தான்.

“ஏ! என்ன பேசற நீ??” என்று வந்தவனிடம் பார்வையைக்கூட அவள் திருப்பவில்லை.

கண்கள் முழுக்க கோபக்கனலில் மின்ன ஆக்ரோஷமாய் பார்த்து நின்றவரிடம் கை காட்டியவள்,

"உங்க பையன் கேக்கும்போது...கேக்ககூட இல்ல...பெருசா தெரியலை!! நான் கேட்டா தப்பா?!" என்றவளின் குரலில் இருந்த அழுத்தமே சொல்லியது அவளுள் கனன்றுக் கொண்டிருக்கும் கோபத்தை!!
“இப்ப என்ன பண்ணனும்ங்கற??” என்ற சிவகாமியின் குரலும் உயர அவளோ

“அவன் தெரிஞ்சிக்க நினைச்சத...ஆதாரத்தோட குடுத்துருக்கேன்! அதாவது அவன் பாஷைல நான் ரொம்ம்ம்ப “சுத்தமானவன்னு” இப்போ அவனும் ப்ரூவ் பண்ணனும்!!!” என்றவளை பலரின் பார்வையும் மௌனமாய் கண்டித்தன..

முதலில் எழுந்த பெரியவரே நிலவரத்தின் தீவிரத்தை உணர்ந்தவராய் கதிரவனிடம் வர கதிரவனோ கல்லாய் நின்றாரென்றால்… முல்லை எந்நேரமும் உடைய காத்திருந்தார்.

“ஏ! என்ன நானும் பாக்கறேன் நீ ரொம்ப பேசற!! இப்போ என்னாங்கற??” என்று வந்த ஸ்ரீதரனைக் கண்டவளோ

“ஸிம்பிள்! நீ ஹெச்.ஐ.வி. டெஸ்ட் எடுத்துக்கனும்” என்று அதிலேயே நிற்க பொறுமையிழந்தவனாய்

“நான் ஏன் எடுக்கனும்?? நீ யாரு அத சொல்ல??” என்று வார்த்தைகளை கடித்து துப்ப தயாராகினான்.

“கரெக்ட்! அப்போ நான் மட்டும் எதுக்கு ப்ரூவ் பண்ணனும்?? எப்படி எப்படி?? உனக்கு வந்தா ரத்தம்!! எங்களுக்குனா தக்காளி சட்னியா?? நல்ல நியாயம்டா சாமி உங்களது!!! நாலு பேப்பர்ல ஜட்ஜ் பண்ற நியாயம்.." என்றவளின் குரலில் இருந்த எள்ளலில் தன்னிலை மறந்தவனோ

“ஹே! நீ பெரிய உத்தமி மாதிரி பேசாதா!! உன்ன பத்தி விசாரிச்சாதான் தெரியும் உன் லட்ச்சணம்!!” என்ற வார்த்தை முகியை பாதித்ததோ இல்லையோ முல்லையை பாதித்தது!! நிலைதடுமாறிப்போனவரை கைதாங்கலாய் பிடித்தனர் யுகாவும் சஞ்சயனும்.

“நான் உத்தமியா இல்லாமலே போறேன்! தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்!! நீங்க மூடிட்டு கெளம்புங்க சர்!!” என்றவள் முல்லையிடம் விரைந்தாள் அவள் உதிர்த்த வார்த்தைகளில் ஆடிப்போன சிவகாமியோ தன் தம்பியிடம்

“நல்ல பொண்ண வளர்த்து வச்சுருக்கடா நீ!!! எல்லாரும் திமிரு பிடிச்சவன்னு சொன்னப்ப கூட உனக்காத்தான் வந்தேன்! வந்ததுக்கு நல்லா செஞ்சிட்ட!!” என்றவர் முகிலினியிடம் திரும்பியவராய்.

“இப்பவே இந்த பேச்சு பேசறியே!! உன்னல்லாம் எவன் கட்டிக்கறான்னு நானும் பாக்கறேன்!!” என்றுவிட

அவர் சாபத்தைபோல உரைக்க தேறியெழுந்த முல்லையோ தரையில் அமர்ந்துவிட தாமரையும் ஜீவனும் அவரிடம் விரைந்தனர்.

“பாத்து முல்லை!” என்று தன்மேல் சாய்த்துக் கொண்ட தாமரையோ ஜீவனிடம் திரும்பியவராக

“கொஞ்சம் தண்ணி கொண்டா ஜீவா!” என்க அவன் அடுக்களைக்குள் சஞ்சயனையும் தள்ளிக் கொண்டு சென்றான்.

“என்ன அக்கா நீங்க! சாபமெல்லாம் குடுத்துக்கிட்டு?!” என்ற தாமரையின் குரலில் மகிழன் ஆச்சர்யமாய் நோக்கினான் என்றால் சிவகாமியோ

“இவளுக்கிருக்க ஆணவத்துக்கு… “என்று இன்னொரு சாபத்தை உதிர்க்க அதற்குமேல் தாங்காது என்பதைபோல வெடித்திருந்தார் கதிரவன்.

“போதும்!!!! எல்லாரும் வெளில போங்க!!!” என்று கத்திவிட முதல்முறை தன் நண்பனின் குரலை உச்சஸ்தாயியில் கேட்ட ஆனந்தனே அதிர்ந்துதான் போனார்.
மனதளவில் நண்பன் நொறுங்கிவிட்டான் என்று புரிய தானே முன்வந்து அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

அதிர்ந்து பேசாத தம்பியின் அதிர வைக்கும் குரலில் திடுக்கிட்ட சிவகாமியோ அதற்குமேலும் அங்கு நிற்க மனமின்றி வெளியேறினார்.
சிவகாமி ஒன்றும் அத்தனை மோசமானவரில்லைதான்! ஆனால் மகன் என்று வரும்பொழுது… அவரும் சராசரி மனுஷியே!!

இறுக்கையில் கல்லாய் இறுகியிருந்த கதிரவனின் தோளில் ஆதரவாய் கைபோட்ட ஆனந்தன் அவரை நிலைபடுத்தும் முயற்சியில்.

முல்லையின் நிலைக்கண்ட யுகாவோ முகிலினியை வெளுத்து வாங்கியிருந்தாள். “அடிப்பாவீ!!! நான்தான் அப்பதே கேட்டேனே?? எதாவது ப்ரச்சனையா எதாவது ப்ரச்சனையான்னு… சொல்லிருக்க வேண்டிதானே!? இப்படியா பண்ணுவ???!! நீ ரொம்ப ஸ்ட்ரைட் ஃபார்வர்டாவே இருந்துட்டு போ!! அதுக்கு அப்பாம்மா என்ன பாவம் செஞ்சாங்க??!! அவங்களையும் சேர்த்து ஏன் கஷ்டப்படுத்தற???” என்றவள் மற்றவளை பற்றி உலுக்கிட அவளை தடுத்த ஜீவனோ “என்ன யுகா நீங்க??” என்றான்

“இல்ல ஜீவா! உனக்கு தெரியாது!!நான் அத்தனை வாட்டி கேட்டேன்…சொல்லிருக்கலாம்ல?!” என்க
“ஆமா!! சொல்லல போதுமா?! என்ன பத்தி எவ்ளோ கேவலமா அவன் விசாரிச்சுருக்கான்!! அது உனக்கு தெரியலைல?? நான் கேட்டது தப்பா தெரியுது!! நான் அப்படிதான்! சிலத நாம உடச்சு பேசமாட்டோம்ங்கற தைரியத்துலதான ஆடுறாங்க?! நான் எனக்கு தோணினத தான் செஞ்சேன் யுகா! எனக்கு நானே டிஃபென்ட் பண்ணினா உங்களுக்கு நான் தப்பா தெரியறேன்ல!” என்றவளோ

“கல்யாணம்னு வரும்போது விசாரிக்கறது ஒன்னும் தப்பில்லதான்!... ஆனா…அந்த பொண்ணு எப்படினு விசாரிக்கறதுக்கும்… அவளுக்கு எத்தனை ஃப்ரெண்ட்ஸு?? அதுல எத்தன பசங்க?? அவங்க கூட அவ எப்படி பழகுவா??..னு விசாரிக்கறதுக்கும் பெரிய டிஃப்ரெண்ஸ் இருக்கு யுகா!!... என் காதுபடவே நான் கேட்டேன் அவன் விசாரிச்சத!! அவன் செஞ்சது தப்பில்ல… நான் செஞ்சது தப்பு இல்லையா??!!” என்றவள் உதடு துடிக்க... மூக்கு விடைத்து முகமெல்லாம் சிவந்து என பார்வையிலேயே அனலை கக்கியபடி நின்றவளை கண்ட யுகா ஆடிப்போனாள். கோபம் இயல்பான உணர்வுதான் என்றாலும் இது அதன் உச்சத்தை தொட்டிருந்தது!! ஒருபுறம் கண்கள் கசிய மறுபுறம் கோபக்கனலாய் நின்ற அவள் முகியின் வலியின் ஆழத்தை உணர உணர இங்கு இவள் மனமோ கலங்கியது.

மகிழனே அதிர்ந்துபோனான்.. அவள் நின்ற கோலத்தில்.
‘பீபி எகிறப்போது!! எவ்வளோ கோவம்?? இவ்வளோ கோவப்பட்டா உடம்பு என்னாவறது??’ என்று தோன்றிய மறுகணம் அவன் மனம் உணர்ந்தவனை போல தண்ணி எடுக்க விரைந்திருந்தான் ஜீவன்.

“நான் அப்படி நினைக்கல முகி!!!” என்ற தோழியின் கண்ணீர் அவர்கள் அன்பின் ஆழத்தை பறைசாற்ற முகியை இறுக்கியிருந்தாள் யுகா.

ஏனோ அத்தனை நேரம் எரிமலையாய் நின்றவள் மற்றவளின் அணைப்பில் உடலும் உள்ளமும் தளர சிற்றோடையாய் வந்துக் கொண்டிருந்தது வெள்ளப் பெருக்காய் அவள் விழியில்!! அவள் வாய்விட்டு அழவில்லை… ஆனால் கண்ணீர் மட்டும் நிற்காமல்…வேகமெடுத்தது.

ஒற்றை அணைப்பு போதுமே உலகத்தின் அத்தனை சோகத்தையும் கடந்திட..!!

அணைப்புக்குள் இருந்தவளின் தேகத்தின் சூடே அவள் கோபத்தின் அளவை பிரதிபலிக்க ஏனோ அந்த ஸ்ரீதரனை அடித்து நொறுக்கிவிடும் வேகமெழுந்தது யுகாவினுள்.

யுகாவிடம் இருந்து விலகியவள் கண்களிரண்டையும் அழுந்த துடைத்தவளாய்,

“நான் பண்ணது தப்புனு எனக்கு தோணலை….” என்றவளின் குரலில் தடங்கல்!!

“நீ பண்ணது தப்புனு நாங்க யாருமே சொல்லல முகிம்மா!!” என்றது சாட்சாத் நம்ம ஆனந்தனே!!

அவளின் விழிப்பார்வையில்… “ஆமா முகிம்மா! நீ செஞ்சது தப்புனு நாங்க யாருமே சொல்லலையே?!... என்ன பொருத்தவரைக்கும் நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும்.. அத்தனையும் அவ்வளோ நியாயமானதுதான்!! யெஸ்!! ஆனா… அத நீ செஞ்ச விதம்தான்…. பரவால்லடா!! அந்த பயலுக்கு நல்ல பாடம் இது!!” என்று முடிக்க முகிலினி மட்டுமின்றி மகிழனுமே அவன் தந்தையை ஆச்சர்யமாய் பார்த்துவைத்தான்.

‘இவருக்கு இப்படிலாம்கூட பேச வருமா என்ன??’ என்றுதானிருந்தது அவனுக்கு. ‘தலைல அடிகிடி எதுவும் பட்றுச்சோ?!’ என்றுதான் அவன் சிந்தை இருந்தது…

“மாமா…” என்றவளின் குரலில் இருந்தது ஆறுதலா இல்லை ஆச்சர்யமா என்று புரியாமல் போனது.

ஆனால் அவரோ அத்தனை நேரம் காத்திருந்தவரை போல… “அது உண்மையானா நல்லாருக்கும்ங்கறது என் விருப்பம்!” என்றார் பட்டென.

அவள் கேள்வியாய் பார்த்து நிற்க அவரோ…”உன்ன எங்கவீட்டு பொண்ணாக்கிக்கனும்னு ஆசைப்பட்டோம்… நானும் தாமரையும்… ஆனா அதுக்குள்ள என்னென்னவோ நடந்துருச்சு… ஆனா சத்தியமா உனக்கு ஒரு விசேஷம் நடக்கப் போகுதுன்ற சந்தோஷத்துல தான் வந்தோம்!” என்க முல்லையோ விருட்டென நிமிர்ந்தார் தாமரையின் முகம் காண…

அதில் தொக்கி நின்ற கேள்வியை உணர்ந்த தாமரையோ ஆம் என்பதாய் தலையசைக்க இது எதுவுமே பதியாத மனதுடன் நின்றிருந்தான் மகிழன்.

முகியின் முகத்திலேயே பார்வை பதித்து நின்ற ஆனந்தனோ… விறுவிறுவென கதிரவனிடம் விரைந்தார்.

நண்பனின் தோள் தொட்டவர் அவரையே கேள்வியாய் நோக்க… முகம் முழுக்க சந்தேகங்களுடன் கதிரவன்.

நடப்பவையை கிரகித்து கொள்ளவே சில மணித்துளிகள் தேவையாய் இருந்தது மகிழனுக்கு. விஷயம் புரிந்த பிறகோ மனதுக்குள் ஆபாயமணி அசுர வேகத்தில்..!!

‘லைஃப் என்ன மல்ட்டிபிள் சாய்ஸ் க்வஸ்டின்னா?? ஒன்னு இல்லன்னா இன்னொன்னுனு!!... அதுவும் கல்யாணம்லாம்…. அவ இருக்கற கொழப்பத்துக்கு இது தேவையா??’ என்று பல கேள்விகள் அவனுள்…

அதே கேள்விகள் கதிரவனை சூழ்ந்து நிற்க அதை உணர்ந்த ஆனந்தனோ

“நான் ஒன்னும்… அவங்க சொன்னதுக்காக கேக்கல கதிர்!! முகி நான் தூக்கி வளத்த பொண்ணுடா!! அவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போணும்னு நினைச்சோம்… ஆனா அதுக்குள்ள அவங்க பேசி… நிச்சயம்வர வந்துடுச்சு…” என்ற நண்பனையே அவர் பார்த்திருக்க அந்த பார்வையில் இருந்த கலக்கத்தை உணர்ந்த ஆனந்தனோ “ முகி தங்கமான பொண்ணு கதிரு!! நிச்சயம் அவளுக்கு இன்னொரு வரன் வரும்…அதனால நான் பெரிய மனசு பண்றதா மட்டும் நினைச்சிராதடா” என்றுவிட கதிரவனின் பார்வை மகளையும் மகிழனையும் தொட்டு மீண்டது.

அவர் விழிகள் இரண்டும் முல்லையை நாட முல்லையோ இவரையே பார்த்திருந்தார். எந்த நொடி ஸ்ரீதரன் தன் மகளை பற்றி தவறாக விசாரித்தான் என்று தெரிய வந்ததோ அந்நொடியே அவனை தூக்கி வீசியிருந்தார் வருங்கால மாப்பிள்ளை என்ற மதிப்பிலிருந்து! முகிலினியே சமாதானம் அடைந்திருந்தாலும் அதற்குபின் முல்லை அந்த திருமணத்திற்கு ஒப்பியிருக்க மாட்டார்!! என்னதான கல்யாணம் கல்யாணம் என்று மகளை நச்சரித்தாலும்… அது மகளின் மனதை காயப்படுத்துமெனில் தூக்கியெறியவும் தயங்காத சராசரி தாய்!!

சிவகாமி பேசியது மட்டுமின்றி… கூட்டத்தில் சிலரின் கிசுகிசுப்பான குரலின் சுவாரஸ்ய கதைகளே அவரை தடுமாறச் செய்திருந்தது!!

“மகி..??” என்று தொடங்கிய நண்பனின் கேள்வி புரிந்தவராய்

“மொதல்ல நீங்க சொல்லுங்க” என்றிட இருவரின் பார்வையுமே முகி இடத்தில்..!!

பின்வாங்க முடியாத தூரத்திற்கு வந்துவிட்டதாய் உணர்ந்த மகிழனுக்கோ பல குழப்பங்கள் மனதினுள் குமிழிட தந்தையின் கேள்வியில் நிமிர்ந்தவன் ஓர் நொடி அவளில் தன் பார்வை பதித்தவனாய்.. பின் சம்மதமாய்..!!

தன் உத்தரவின்றி வெளியேறிய வார்த்தைகளும்… அசைந்த சிரத்தையும்… தண்டிக்க வழியின்றி… நின்றிருந்தவனினுள்ளோ பல வினாக்கள்..!!

அப்பா அம்மா மாமா என்று அந்த அறையில் இருந்த அத்தனை பேரின் பார்வையுமே அவளில் தேங்கியிருந்தது..

அவளோ மௌனத்தின் பிடியில்.. தீவிர சிந்தனையில்..

மௌனம் எப்பொழுதும் சம்மதமாக மட்டுமே இருப்பதில்லை அல்லவா?!!

அதை உணர்ந்தவராய் வாய்த்திறந்திருந்தார் ஆனந்தன்.

தன்னில் நின்ற பார்வைகளை உணர்ந்திருந்தவளின் கண்கள் தாய்..தந்தை என்று சுற்றி மகியிடம் வர… ஓர் நொடி நிதானித்தவள் சம்மதமாய் தலையாட்டியிருந்தாள்.

யாரும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை… அவர்கள் நினைத்திருந்தால்… நிச்சயம் நிறுத்தியிருக்கலாம் இக்கல்யாணத்தை..!! இருந்தும் அவர்கள் நிறுத்தவில்லை..
இருவரின் சம்மதத்திக்கான காரணமும்….அவர்களுக்கே வெளிச்சம்!!!

இதுவே சாதாரண நேரமென்றால் “ஹே!!!” என்று துள்ளி குதித்திருப்பர் சஞ்சுவும் ஜீவனும். யுகாவோ முகிலினியையே கவனித்திருந்தாள்.

அதன்பின் எல்லாமே ஜெட் வேகம்தான்!! அன்றிலிருந்து சரியாய் மூன்று மாதத்தில் கல்யாணம் என்று முடிவாகிவிட… முதலில் ஒருமாதிரி இருந்தாலும் விரைவிலேயே வேலைகள் இழுத்துக்கொள்ள இரு குடும்பங்களும் அவர்கள் வீட்டின் முதல் விசேஷத்திற்கான ஏற்பாடுகளில் ஆனந்தமாய் ஈடுபட்டிருந்தனர்.
விறுவிறுவென ஆக்ஷன்பட க்ளைமாக்ஸாய் அந்த மூன்று மாதங்களும் கழிந்து…இன்று இதோ… இங்கு இந்த அர்த்த இராத்திரியில் இருவரும்..!!

‘ஹ்ம்ம்ம்!!! சினிமால இந்த மாதிரி ஸீன் வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சேன்ல… எனக்கு தேவைதான்!! இதோ இப்போ மிஷ்கின் படத்துல வர்ற மாதிரி அர்த்த இராத்திரில அலை விட்டாள்ல… உனக்கு தேவைதாண்டா!! உனக்கு தேவை!!’ என்று அவனை வஞ்சனையில்லாமல் வறுத்தவாறு கலாய்த்து தள்ளிய மனக்குரலை அப்படியே புறந்தள்ளியவனாய் நடந்தான்.. ஏனோ நினைவுகளை அசைபோட்டவனின் இதழின் ஓரம் லேசாய் வளைந்திருந்தன…

இருள் சூழ் இரவின் அழகு அது அலாதியானது..!!

அன்று அவள் அவன் அலுவலகத்துக்கு வந்ததுதான் அவர்களிருவரும் சந்தித்து பேசியது!! அதன்பின் சந்திக்க நேர்ந்தாலும்கூட பெரிதாய் ஒன்றும் உறவாடிவிடவில்லை!! அவனும் அழைத்து பேசவில்லை.. அவளும் அழைத்து பேசவில்லை..

வேக எட்டுக்களுடன் நடந்தவர்கள் அந்த மெயின் ரோட்டை நெருங்கியிருந்தனர்…

கச்சேரி களைகட்டும்!!!!!!
 
Last edited:
நல்லா இருக்கு முகி கேட்டது
அருமையான பதிவு
 
Top