Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கல்யாணம்..கச்சேரி..(E4)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew
Makkale!!!!!

thankssss alottttt for the support you guysss gave for the 3rd epi :love:

Here comes the next episode from...
கல்யாணம்..கச்சேரி..??

share your thoughts makkale!!!!

கச்சேரி-4

வெள்ளித் துண்டங்களாய் மிளிர்ந்த அந்த வெண்ணிற டைல்ஸ் கற்களின் குளுமை அவள் பாதங்களை உறுத்தியதில் அவள் மனம் வேறொன்றை உணர்த்தியது.

தலையை உலுக்கி அதில் இருந்து விடுபட்டவளாக அந்த வீட்டையே கண்களால் அளவெடுத்தாள்.

வீட்டின் மூலைகளையும்.. தரையிலிருந்து பிரதிபலிப்பதை போலொரு உணர்வை உண்டாக்கும் அந்த வெள்ளிச் சாயம் பூசிய சுவற்றையும், உத்திரத்தையுமென ஒவ்வொன்றை மனதில் குறித்துக் கொண்டவள் சிலதை தன் ஃபோன் கேமராவிலும் அடக்கிக் கொண்டாள்.

காஃபி டேபிள் ஒன்றைச் சுற்றி போடப்பட்டிருந்த சோஃபா செட்டும்… அதற்கு நேரெதிரில் சுவற்றில் ஒய்யாரமாய் நின்றிருந்த 46 இஞ்ச் LED டீவியுமாய் நவீனத்துவத்தின் அடையாளமாய் நின்ற அந்த பரந்து விரிந்த முகப்பறையை பார்வையால் சுழற்றியபடி நின்றாள் முகிலினி.

கையில் பெரிய காபி ட்ரேயுடன் வந்த அவள் அண்ணி இலக்கியா அதை அந்த காபி டேபிளில் வைத்தளாக,

“காபி எடுத்துக்க முகி” என்று அவளிடமும் ஒரு கோப்பையை நீட்டினாள்.

ஒரு ‘தாங்க்ஸ்’ உடன் அதை பெற்றுக் கொண்டவளோ இன்னும் அமராமலேயே நின்றுக் கொண்டிருக்க

“உட்காரேன் முகி!” என்றாள் மற்றவள்.

அதை சிறு புன்னகையால் மறுத்தவள் ஒரு ‘சிப்’ காபியை உள்ளிறக்கியவளாக
அந்த அறையிலேயே பார்வையை பதித்து

“இந்த ரூம்தானா இலா?” என்றாள் கேள்வியாக.

இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்களாய் இருக்க மற்றவர்களிடம் அண்ணி என்று உறவு முறையுடன் உரைத்தாலும் என்றும் அவளை நேரில் அண்ணி என்றழைத்தது இல்லை.

தூரத்து உறவு என்றாலும் மனதளவில் அவர்கள் குடும்பத்துக்கு ஓரளவு நெருங்கிய உறவு என்றால் அது நித்யனின் தாயார் வள்ளிதான்.

வள்ளியும் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட ஏற்கனவே மகனைப்போல பார்த்திருந்த நித்யனை இப்பொழுது அவர்களின் இன்னொரு மகனாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர் கதிரவனும்.. முல்லையும்.

அவள் இங்கு வந்திருப்பதுகூட நித்யன்-இலக்கியாவின் செல்லமகள் சாத்விகா குட்டியின் இரண்டாவது பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளுக்காகத்தான்.

அவளுக்கு கலையின் மீதுள்ள ஆர்வம் சற்று ஓவர் டோஸேஜ்!!

முதலில் தனக்காக… தனக்கு பிடித்தவர்களுக்காகவென்று செய்துக் கொண்டிருந்தது… அவளது கலையுணர்வில் கவரப்பட்டவர்கள் நெருங்கிய சிலர் உதவியென அழைக்கும்பொழுது தயங்காமல் செல்வார்கள். யுக்தா இல்லாமலா?!

பார்ட்னர் இன் க்ரைம் மட்டுமல்ல. இது போன்ற வேலைகளையும் இருவரும் சேர்ந்தேதான் செய்வர். இன்றும் அப்படிதான்.

சில நாட்களாகவே அழுத்திக் கொண்டிருந்த மனதை திசை திருப்ப நினைத்தவள் இலக்கியா உதவியென்று வரவும் உடனே ஒத்துக் கொண்டாள்.

“ம்ம்… ஆமா முகி” என்றவளின் குரலில் தலையசைத்தவளின் பார்வை அறையிலிருந்து அகலவேயில்லை.

“ம்ம்… சரி அப்போ நான் கிளம்பறேன்” என்றவள் மேசையின்மேல் அந்த கோப்பையை வைத்துவிட்டு நிமிர

“ஒரு ஸெக்! முகி” என்று உள்ளறைக்குள் புகுந்திருந்தாள் இலக்கியா.

பையை குறுக்காக மாட்டியவளின் பார்வை அந்த அறையையே அங்குலம் அங்குலமாய் அளந்தது. எதை எங்கு வைத்தால் நன்றாக இருக்கும் என்று அவளின் மனம் கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.

வெளியில் வந்த இலக்கியாவின் கையில் கத்தையாக பணம் அடங்கியிருக்க நிர்மல வதனமாய் அதை பார்த்து வைத்தவள் பின் ஒற்றை புருவம் உயர்த்தினாள் கேள்வியாய்.

“அதில்ல முகி. வீட்டு செலவுக்குனு எப்பவும் கைல கொஞ்சம் கேஷ் வச்சிருப்பேன். எப்பவும் ஏ.டி.எம். நெட் பேங்கிங்க்னு இருக்க முடியல. அதான்…” என்றிழுத்தவள் பின்

“இது இதுக்காகனு எடுத்து வச்சது “ என்றவளை பார்க்க முகிலினிக்கும் சற்று உள்ளம் கசிந்துதான் போனது. நித்யன் workaholic ரகம்! வேலை வேலையென்று ஓடிக்கொண்டிருப்பவன். அவனுக்கு நேரெதிர் இலக்கியா.

யோசனையாய் நோக்கியவள் “அதுக்கெதுக்கு இவ்வளவு?? மெட்டீரியல்ஸுக்கு மத்ததுக்கெல்லாம் சேர்த்தே இது போதும் இலா” என்று அதில் இருந்து சில தாள்களை மற்றும் உறுவினாள்.

அதற்கு மறுப்பாய் தலையசைத்த இலக்கியாவை கண்ட முகிலினியின் முகத்தில் முறுவல் தோன்றிட “when you are good at something, don’tdo it for free! இது ஒரு பிரபலமானவர் சொன்னது. நானும் எதையும் ஃப்ரீயா பண்ணிக்குடுக்கல இலா! செஞ்சு குடுக்கறதுக்கு சார்ஜ் பண்ணதும் சேர்த்துதான் இது!” என்று இலக்கியாவிற்கு விளக்கினாள்.

இலாவின் முகம் தெளியும் சமயம் உள்ளே சாத்விகாவின் சிணுங்கல் சத்தம் கேட்க “எழுந்துட்டானு நினைக்கறேன். ஒரு நிமிஷம் முகி!” என்றபடியே உள்ளே விரைந்தாள்.

தூக்கத்தில் தாயின் கதகதப்பை தேடி சிணுங்கிய குழந்தைக்கு தட்டிக் கொடுத்தவள் சாத்வி உறங்கவும் மெல்லிய போர்வை ஒன்றால் மகளுக்கு போர்த்திவிட்டு முகிலினியிடம் திரும்பினாள்.

இலா வரவும் அவளிடம் மற்ற விபரங்களை விசாரித்தவாறு வெளியேறினாள் முகிலினி.

“சின்ன சின்ன வேலையெல்லாம் கொஞ்ச கொஞ்சமா செஞ்சிரலாம்… மத்தபடி அன்னைக்கு காலைல வந்து மத்தத ரெடி பண்ணிரலாம்.” என்றவாறே செருப்பின் வாரை செருகியவள்.

“வெள்ளி தானே இலா?” என்றாள் உறுதிசெய்து கொள்ளும் விதமாய்

“ஆமா முகி! வெள்ளிக்கிழமைதான்” என்றவள் மற்றவளை வழியனுப்பிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

######

“என்னது?!!! வெள்ளிக்கிழமையாஆ???!!!” என்று என்னவோ பெரிய அதிர்ச்சிகரமான செய்தியை கேட்டுவிட்டதுபோல் நெஞ்சைபிடித்தான் மகிழன்.

“ஆமா மகிழா! நாங்களே போய்ட்டு வந்துருப்போம்.. இப்ப திடீர்னு வினூக்கு கல்யாணப் பட்டெடுக்க வெள்ளி கிழமைதான் நல்ல நாளுன்னு அத்தை சொல்லிட்டாங்களாம்.அதான் நீயும் ஜீவாவும் போயிட்டு வந்துருங்க!” என்று அசால்டாய் அவன் தலையில் குண்டை தூக்கி போட்டிருந்தார் தாமரை.

பின்னே! ஃப்ரைடே நைட்! பார்ட்டி நைட்! ஆயிற்றே! அன்றுதானே என்றோ ஒரு காலத்தில் கடைசி பெஞ்சில் இவன் கண்ணிலே பட்டிராத நண்பனையெல்லாம் சந்திக்க முடியும். அடுத்த நாள் அலுவலகம் இல்ல! டீம் லீட் இல்ல! வர்க் ப்ரஷர் இல்ல! என்று பல ‘ இல்ல’களிலும் இன்பம் காணும் நாளல்லவா அது!?

அப்படிபட்ட வெள்ளிக்கிழமையை. அதுவும் மாலை நேரத்தில். வேலை கொடுத்தால்?! நொந்து போனான் மகி.

அவன் முகத்தை படித்தவராக தாமரை, “மகிழா! இலக்கியாக்குனு கூட பொறந்தவங்க யாருமில்ல. அதுவும் இங்க பக்கத்துல நாமதான் இருக்கோம்!” என்றுவிட அதன்பின் அவனுமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஜீவனிடம்கூட “அந்த ஏலக்காய்க்கு நாமதானே பண்ணனும்” என்றுவிட்டான்.

#######

“உன் மூஞ்சியே சரியில்ல முகி! என்னத்த போட்டு ஒழப்பிக்கற உள்ள???” என்று தன் முன் அமர்ந்து அந்த டிண்டட் பேப்பரை வெட்டுவதற்கு வாகாய் மடித்துக் கொண்டிருந்தவளை கேட்டேவிட்டாள் யுக்தா.

அவளும் பொறுத்துதான் பார்த்தாள் முகிலினி சொல்வதாக இல்லை. அதான் நேரடியாக கேட்டுவிட்டாள். இருந்தும் மற்றவளிடம் இருந்து பதில் வராமல் போக

“அம்மாகிட்ட ஓகே சொல்லிட்டியாமே?!” என்றாள் கேள்வியாக. இத்தனை காலம் கல்யாணம் வேண்டாமென்றிருந்தவள்… அதற்கான காரணத்தையும் இவள் நன்கறிவாள். அப்படியிருக்கையில் எப்படி ஒத்துக் கொண்டாளென்றுதான் இருந்தது யுக்தாவிற்கு.

என்னதான் முல்லைக்காக இவளிடம் வந்து பேசினாலும்… இப்பொழுது அவளுக்கே மனம் பொறுக்கவில்லை! முகிலினி இப்படியிருந்து அவள் கண்டதில்லை.

“சொல்லு முகி! ஸ்ரீதருக்கு ஓகே சொல்லிட்டியாமே”

கையில் இருந்தவற்றை அப்படியே மேசையின் மேல் போட்டவள் “நாம நினைச்சது நடக்கல… அவங்க நினைச்சதாவது நடக்கட்டுமே” என்றுவிட்டு மறுபடியும் தொடர்ந்தாள் வேலையை.

இந்த முகிலினி அவளுக்கு புதியவள்! இது அவள் முகியல்ல! வார்த்தைகளில் வழிந்தோடியது விரக்தி மற்றவளை உலுக்கியது. எழுந்து அவளிடம் சென்றவள்

“முகி..” என்றவள் தோள்தொட அவள் கையை பற்றிக் கொண்ட முகிலினி

“நான் என்ன பண்றது யுகா?? எவ்வளவோ முயற்சி பண்ணேன். எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு! பண்ணுவேன்! ஆனா… அம்மா கையப் பிடிச்சிட்டு அழவும் ஒன்னும் தோணலை. சரி இந்த ஒருதடவை அவங்க சொல்றத கேட்டு பாப்போம்னு விட்டுட்டேன்!” என்றவள் பின்

“யுகா! அந்த லாவண்டர் கலர் டிஷ்யூ பேப்பர்ல…” என்று பேச்சை வேலையில் திருப்பிவிட்டாள். இனி இதைபற்றி பேச ஒன்றுமில்லை என்பதாக.

இது அவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு பகுதி நேர வேலைபோலதான். இருவரும் ஒரு தனியார் நிறுவத்தில் பணிபுரிகின்றனர். யுக்தா சேல்ஸ் டீமில். இவள் இம்ப்ளிமெண்ட்டேஷன் டீமில்.

“சீக்கிரம் யுகா! வெள்ளிக்குள்ள முடிக்கனும்” என்றவளையே பார்த்தவள்

“அடுத்த புதன் பாக்கவராங்கன்னு அம்மா சொன்னாங்க?” என்றாள் கேள்வியாய்.

இவளும்,”ஆமா.. கிட்டத்தட்ட நிச்சயம் மாதிரி!” என்றவளின் வார்த்தையில் கடுப்பாகியவள்.

“கொஞ்சமாச்சும் சீரியஸா பேசறியா நீ?! ஒன்னு வச்சா குடுமி இல்ல எடுத்தா மொட்டங்கற மாதிரி பேசக்கூடாது! “

“ஸ்ரீதர் அம்மா,அதான் சிவகாமி அத்த அப்பாவுக்கு நெருங்கின சொந்தமாம். அப்பாவோட ஒன்னுவிட்ட அக்கா” என்க இங்கு யுக்தாவிற்கோ இவளுக்கு ஒன்னு விட்டா என்ன?? என்றானாள்.

முகிலினி முகமே சொல்லியது! அவள் அவளாக இல்லை என்று! எப்படியிருந்தாலும்… முகியின் யுகாவா? இல்லை முல்லையின் யுக்தாமாவா? என்று கேட்டாள் நிச்சயம் முகியின் யுகாவைதான் அவள் தேர்ந்தெடுப்பாள்.
யுக்தாவை பொருத்தமட்டில் முதலில் அவளுக்கு முகிலினிதான் முக்கியம். அதன்பின்தான் மற்றவர்கள் அது முல்லையே ஆனாலும்.
ஆயிரம் சண்டைகள் நடந்தாலும் அவளால் முகிலினியிடம் பேசாமல் ஒருநாள்கூட தாக்குப்பிடிக்க முடியாது. முகிலினியும் அப்படியே!

அப்படியிருக்கையில் உயிர்த்தோழியின் முகம் வாடுவதை எவரால் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியும்? யுக்தாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

அவளும் எப்படி நிலைமையை சீர் செய்யலாம் என்ற சிந்தனையில் இறங்கிவிட்டாள்.

#######

“நாங்க கிளம்பறோம் மகிழா! நைட்டுக்குள்ள வந்துருவோம். மதியத்துக்கு டேபிள்ல இருக்கு. சாப்பிடும்போது சூடுபண்ணிக்கோங்க. நைட்டுக்கு மாவிருக்கு!
தேங்காய் அரைச்சு சட்னி வச்சுக்கோங்க. “என்று ஒவ்வொன்றாய் இரு மகன்களுக்கும் சொல்லியவர் பின் ஆனந்தனுடன் கிளம்பிவிட்டார்.

“சாத்விக்கு ஏதாவது வாங்கனுமேடா!” என்ற அண்ணனையே கேள்வியாய் நோக்கியவன்

“அதான் அம்மா. வாங்கி வச்சிருக்காங்களே!” என்றுவிட்டு மறுபடியும் தன் போனுக்குள் தலையை புதைத்துக் கொண்டான்.

இங்குதான் பேசியதை ஜீவா சரியாக கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த மகிழன் அவன் ஃபோனை பறித்துவிட

எதிர்பாராத சமயம் அவன் பறித்ததால் விழித்தவன் பின் சுதாரித்தவனாக மகிழனை கேலியாய் பார்த்து வைத்தான்.

“யாரோ வெள்ளிக்கிழமையான்னு நெஞ்ச பிடிச்சாங்களே…” என்று கேலியாய் இழுக்க மகிழனோ சற்று சீரியஸ் மோடிற்கு மாறினான்.

“அதில்லடா! நம்ம ஏலக்காய்க்கு நாமதான பாக்கனும். அம்மா செயின் வாங்கி வச்சிருக்காங்க ஜீவா! நாம ஏதாவது செய்ய வேணாமா? ரெண்டு வயசுபிள்ளைக்கு தங்கச் செயினுன்னா என்ன தெரியும்? சாத்வி குட்டிக்கு ஏத்த மாதிரி எதாவது செய்ய வேணாமா??” என்றான். அவன் உரைப்பது மற்றவனுக்கு புரிந்துவிட உள்ளுக்குள் சிந்தனை வலை பின்னினாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளாதவனாய்…

“அதுக்கு ஏண்டா நீ இப்போ லா..லா..லா வாசிக்கற?? ட்ரெஸ் மாத்திட்டு வரேன்” என்று உள்ளே ஓடிவிட்டான். பின்னே வாடா போடாவென்று ஏகவசனத்தில் பேசியாயிற்று மகிழன் சிந்தனையில் இருந்ததால் சரியாய் கவனிக்கவில்லை. இல்லையெனில்…

#####

“ர்ர்ரூம்ம்ம்…” என்ற வண்டியின் உறுமலில் பால்கனியில் இருந்து எட்டிபார்த்தவள் கீழே முகிலினியைக் காணவும் தபதபவென கீழிறங்கி வெளியே ஓடினாள்.

“ஏன் இப்படி ஓடிவர??? என்ற.முகியின் கேள்விக்கு சற்று மூச்சுவாங்கியவளாக

“லேட்டாகிருச்சா?? ஒரு ஃபைவ் மினிட்ஸ்! உள்ள வா” என்றுவிட வண்டியை ஓரமாய் நிறுத்தியவள் யுக்தாவுடன் வீட்டினுள் சென்றாள்.

பார்வையை சுழலவிட்டவள் “பாட்டி தாத்தா எங்க??” என்று வினவ மற்றவளோ அசுர வேகத்தில் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

“பக்கத்துலதான் கோவிலுக்கு போயிருக்காங்க” என்றவளின் பதிலும் அதே வேகத்தில் வந்து விழுந்தன.
யுக்தா தயாராகிவர வண்டியை கிளப்பியவள் அந்த பெரிய அளவிலான பையை உள்ளிருக்கும் பொருளுக்கு எந்தவிதமான சேதாரமும் ஆகாதவாறு வைத்தாள்.

யுக்தாவும் பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்துவிட்டு வந்துவிட வண்டி இலாவின் அப்பார்ட்மெண்ட்டை நோக்கி விரைந்தது.

கச்சேரி களைகட்டும்!!!!!!
 
Top