Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கல்யாணம்..கச்சேரி..(E1)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew
Heyyyy makkale!!!!

வந்துட்டேன்!! வந்துட்டேன்!!?

Thanksss alottt for your support friendsss!!!!!!:love:?

Here is the first episode from
கல்யாணம்..கச்சேரி..??

share your thoughts makkale!!!!?

கச்சேரி-1

இன்று...

கல்யாணம்.

சிலருக்கு ஒரு நாள் கூத்து. சிலருக்கு வாழ்க்கையில் வண்ணம் சேர்க்கவிருக்கும் ஒரு நாள். காதல்..கௌரவம்..அந்தஸ்த்து.. உறவுகள்..பாதுகாப்பு.. சமுதாயம்.. என்று வெவ்வேறு சூழ்நிலைகளும்..காரணங்களும்..!!
. இருவரை… இருவாழ்க்கையை மட்டுமின்றி இரு குடும்பத்திலும் உள்ள அத்தனை பேரின் தினசரியை ஓரே நாளில் திருப்பி போட்டுவிடும் வல்லமையும் இந்த ஒற்றை சொல்லிற்கே!

அப்படிபட்ட கல்யாணத்தின் முக்கிய கட்டமாய் நின்றுக் கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம்.

வாசலில் வாழைத்தார் வைத்து கட்டியதில் பழமையின் வாசம் ஒருபுறமிருக்க.. மறுபுறமோ “தி சோ கால்ட் நவீன வெட்டிங் ஹாலுக்கே” உண்டான வண்ண வண்ண விளக்குகளும்.. வெல்வெட் பின்னனியில் ஒளிரும் பெயர்களுமாய் தனது முழு உயரத்தையும்.. பரப்பளவையும்.. கம்பீரமாய் பறைசாற்றிக் கொண்டிருந்தது அந்த மண்டபம்.

அந்த மையிருட்டிலும் மண்டபம் ஒளிர்ந்துக் கொண்டிருக்க அந்த வெளிச்சத்தில்.. சிலர் அங்குமிங்குமாய்.. பதற்றம் அப்பிய முகத்துடன் அடுத்த நாள் காலை முஹூர்த்தத்திற்கான வேலையில் இருந்தனர்.

அதே அளவு… இல்லை அதைவிட சற்று அதிக அளவிலான பதற்றத்துடன் அங்கு மணமகள் அறையில் ஒருத்தி கையில் ஃபோனை வைத்துக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துக்கொண்டிருந்தாள்.

அவ்வளவு நேரமும் அமைதி காத்தவள் எதிர்புறம் பேச பேச முகத்தினில் கோபமும்..பதற்றமும் போட்டியிட “ வரேன்!” என்றாள் ஒற்றை வார்த்தையாக.

சொன்னவள் அதற்குபின் அந்தப் பக்கத்தின் பேச்சை கேட்க விரும்பாதவள்போல அழைப்பை துண்டித்தும்விட்டாள்.

அவளது பார்வை அந்த அறையையே வட்டமிட அது அந்த சுவர் கடிகாரத்தில் வந்து நின்றது.
மணி பதினொன்றை எப்பொழுதோ தாண்டியிருந்தது.
அவளுடனிருந்த வித்யா ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில்! இனி அவ்வளவாக அந்த அறை பக்கம் யாரும் வரப்போவதில்லை.

இப்பொழுது அவள் சென்றே ஆக வேண்டும்! ஆனால் அவள் அங்கு இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதையும் அவளறிவாள்.

அவள் செய்யவிருப்பது மற்றவர்களுக்கு பைத்தியக்காரத்தனமாய் தோன்றினாலும் (அதுதான் உண்மையும்கூட) அவளுக்கு வேறு வழியும் இல்லை!

இதற்குமேல் தாமதிக்க கூடாது என்று முடிவெடுத்தவள் கிளம்பிவிட்டாள். என்ன வந்தாலும் பரவாயில்லை என்று.

@@@@@@@@@@

தனது அறை யன்னலின் சாளரத்தின் வழியாக அந்த மண்டபத்தின் வெளிபுறத்தையும்.. அங்கு சிலர் மும்முரமாய் வேலைகளில் ஈடுபட்டிருப்பதையும் பார்த்து நின்றவனின் முகத்திலோ துளியும் ஆர்வமோ…ஆனந்தமோ இல்லை. மாறாக ஏதோ ‘கடனே’’என்று நிலவையும்.. அவ்வப்பொழுது வேலை செய்பவர்களையும் பார்த்துக் கொண்டான்.

அவனால் முடிந்ததெல்லாம் ஆனந்தனை மனதளவில் காய்ச்சியெடுப்பது மட்டுமே. ஏனோ ஒருவிதத்தில் விரக்தியாய்கூட உணர்ந்தான்.

‘இந்த மனுசனுக்கு என் வாழ்க்கைல விளையாடறதே வேலையா போச்சு!!’ என்று மனதினுள் புலம்பியவனின் பார்வை தூரத்தில் தெரிந்த காட்சியைக் கண்டு சுருங்கியது.

மண்டபத்தின் பின்புறம் சற்று ஒதுக்குபுறமாய் நின்ற கட்டை சுவரின் பக்கம் ஜீன்ஸும்… முழங்கை வரை நீண்டிருந்த அந்த காட்டன் ஷாட் டாப்பும் அதற்குமேலாக அவள் தலையை சுற்றி அவள் முகத்தை மறைத்து நின்ற ஸ்கார்ஃபையும் பார்த்தவன் ‘அவளா?’ என்று உற்றுநோக்க அவள் சுற்றுமுற்றும் நோக்கியதில் விலகிய ஸ்கார்ஃப் அவனுக்கு அடையாளம் காட்டியது.

பாத்ரூமினுள் இருந்த தம்பியை தொந்திரவு செய்யாது… யார் பார்வைக்கும் விருந்தாகாமல் பின்வாசல் பக்கம் விரைந்திருந்தான்.

அந்த கட்டை சுவரின் பக்கமிருந்த சிறிய அளவிலான க்ரிள் கேட்-டையே நோட்டமிட்டவள் சத்தமெழாத வண்ணம் அதை திறக்க அதில் கை வைக்க அவள் தோளில் படிந்து தன் புறம் திருப்பிய கரத்தின் உரிமையாளனை கண்டவளின் பார்வையோ ஒர் நொடி அதிர்ந்து பின் ‘நீதானா?’ என்ற பாவனைக்கு தாவியிருந்தது!

அவளது அலட்சிய பாவனையில் இன்னுமின்னும் கடுப்பாகியவன் “இங்க என்ன பண்ற??” என்றான் சற்று உரக்க

“கத்தாத!!” என்று அடிக் குரலில் சீறியவளோ யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டாள்.

அதில் இன்னும் கோபமேறினாலும் அவளது முகத்தில் தெரிந்த பதற்றம் அவனை அமைதி காக்க வைத்தது.

‘ஏதோ சரியில்லை!’ என்பதை உணர்ந்தவன் அமைதியாய் அவள் முகம் பார்த்து நின்றான்.

சுழன்ற அவளது பார்வை அவனிடம் வந்து முடிய “நான் இப்போ வெளிய போனும்” என்றாள் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்.

“லூசா நீ??? இப்போ நீ போனா கல்யாணம் பிடிக்காம ஓடிபோயிட்டான்னு சொல்லுவாங்க!!” என்றவனின் குரலிலோ ‘தெரிந்து தான் பேசுகிறாளா?’ என்ற சந்தேகம்.

அவனையே ஆழமாய் நோக்கியவளோ “கல்யாணம் பிடிக்கலன்னா நான் ஏன் ஓடனும்? உன்னதான் ஓட வப்பேன்! இப்போ மேட்டரு அதில்ல” என்றாள் தோளை குலுக்கியவளாக.
‘இவ செஞ்சாலும் செய்வா!’ என்று தோன்றிவிட அவளிடம் என்னவென்று கேட்கத்தான் எண்ணினான்.. ஆனால் அவளிருந்த அவசரத்தை கண்டவன் ஃபோனை கையிலெடுக்க அவனையே சந்தேகமாய் பார்த்து வைத்தாள் அவள்.

அவளது பார்வை உணர்ந்து “நானும் வரேன்” என்றவன் ஃபோனை தூக்கிக் கொண்டு சற்று தள்ளிச் சென்றான். அவள் மறுக்க அவன் அனுமதிக்கவில்லை. அவளும் மறுக்கவில்லை!!

மற்ற நேரமென்றால்…நின்றுகூட பதிலளித்திருக்க மாட்டாள்.அதுவும் அவன் பிடித்திழுத்ததெற்கெல்லாம் நாலு அப்பு அப்பியிருந்தாலும் அதிசயப்படுவதற்கில்லை ஆனால் ஏற்கனவே அவள் மனம் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருக்க எதுவும் சிந்திக்க தோன்றவில்லை.

அவன் பேசி வந்த சில நொடிகளில் அரக்கபரக்க ஓடிவந்தான் ஜீவா என்றழைக்கப்படும் ஜீவன்.
குளியலறையில் இருந்து வெளியே வந்த ஜீவனின் கண்கள் மற்றவனைத் தேடியது. எங்கு சென்றான்? என்றோடிய அவன் எண்ணவோட்டத்தை தடை செய்தது அவன் ஃபோன் அலறல் சத்தம். திரையில் அவன் பெயரைக் கண்டபொழுது எழுந்த நிம்மதியுணர்வு அவனிடம் பேசிய மறுகணமே அமிழ்ந்து அழிந்தே போயிருந்தது.

அவனிடமிருந்து வண்டி சாவியை பறித்தவனோ “நாங்க வர வரைக்கும் சமாளி!” என்றுரைக்க ஜீவனிற்கோ இன்னும் அதிர்ச்சி கலையாத நிலை!

“லூசாடா நீ?? “ என்றவனின் கேள்வியைக்கூட நின்று காது கொடுத்து கேட்காதவன்

“எப்படியாவது சமாளி!” என்று அவளையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

ஜீவனிற்குதான் ஒன்றும் விளங்காத நிலை! உள்ளம் முழுக்க பதற்றம் சூழ எப்படி சமாளிப்பதென்று புரியாமல் நின்றான். அவன் காரணத்தை சொன்னாலாவது பரவாயில்லை… இப்படி தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்… ‘அடிச்சும் கேப்பாங்க அப்பயும் சொல்லிராதீங்க!’’ ரேஞ்சிற்கு பயமுறுத்திச் சென்றால்..

தலையை பிய்த்துக் கொள்ளும் நிலையில் நின்றவனின் கை தானாய் ஃபோனை நாடியது.

“சஞ்சுஊஊஊஊ” என்ற அலறலிலேயே அடிபிடித்து ஓடி வந்தான் மற்றவன். அவனைப்போலொருவன்!

இன்னும் சிலமணிநேரங்களில் அவனுக்கு நெருங்கிய உறவினன் ஆகவிருக்கும் உயிர்தோழனும், தூரத்து உறவினனுமான சஞ்சயன்.

சஞ்சயனிற்கு நன்றாகத் தெரியும், அதிகாலை முஹூர்த்தத்தை வைத்துக் கொண்டு அவனை யாரும் நிம்மதியாய் கண்ணையர விடப்போவதில்லையென்று. அதனால்தானோ என்னவோ கண்ணில் சிக்கிய அத்தை மகள்களிடமெல்லாம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான். கடலை வறுக்குமளவுக்கு திறமை அவனிடம் இல்லை என்றாலும் வரும் வேலைகளனைத்தும் பார்த்தவண்ணம் கேலியும் கிண்டலுமாய் திரிந்தவனின் அந்த சந்தோஷத்திலும் லாரி லாரியாய் மண்ணள்ளி கொட்டினான் அவனது உயிர் நண்பன்.

ஜீவனின் அலறலிலேயே அடுத்த கணம் அவன் மண்டபத்தின் பின்வாசலுக்கு வந்திருந்தான்.

“என்னடா ப்ரச்சனை உனக்கு இப்போ???” என்றவனின் குரலிலோ அப்பட்டமாய் எரிச்சல் வழிந்தது.

மற்றவனுக்குத் தெரியாத என்ன!? இவன் எரிச்சல் குரலின் காரணம். அது புரிந்தவனோ அதற்குமேலாய் எரிந்து விழுந்தான்.

“இவன் ஒருத்தன்! மனுசனுக்கு இருக்க ப்ரச்சனை புரியாம…” கோபத்தில் தொடங்கி முணுமுணுப்பாய் முடிந்த ஜீவனின் குரலிலேயே எதுவோ சரியில்லை என்று பட மற்ற ப்ரச்சனைகள் அனைத்தும் பின்னுக்கு போய்விட்டன சஞ்சயனிற்கு.

“என்னடா?” என்றவனிடம் தனக்குத் தெரிந்த விபரத்தை அவனுரைக்க சஞ்சயனிற்கோ தலை சுற்றாத குறை.

மறுகணம் அவன் கை ஃபோனில் பதிந்தது. அவன் அத்தனை முறை அழைக்க முயன்றும் எதிர்ப்பக்கம் எடுக்கபடவே இல்லை. அதில் இன்னும் பதற்றமடைந்தவன் பக்கத்தில் கிடந்த கல்லில் அப்படியே அமர்ந்துவிட்டான் தலையை கைகளால் தாங்கியவாறு.

அவன் நிலை புரிந்த ஜீவன் அவன் தோள்தொட அவ்வளவு நேரம் வராமல் இருந்த வார்த்தைகள் அனைத்தும் உடைப்பெடுத்தன.

“ நினைச்சேன்டா! எப்படி ப்ரச்சனையே இல்லாம போகுதுனு. இப்படி பண்ணிவச்சிருக்கா…” என்றவனை தடுத்தவனாக

“அவங்க தனியா போகல சஞ்சு…” என நிமிர்ந்து பார்த்த சஞ்சுவின் முகத்திலோ புரியாத பார்வை ஒன்று.

“வெளங்கிறும்! காலைல முஹூர்த்தத்த வச்சுக்கிட்டு… எப்படிடா சமாளிக்க???” என்று ஒருவித இயலாமை மேலிட கேட்ட சஞ்சயனையே வெறித்து நோக்கியவன்

“அதுக்குள்ள வந்துருவாங்க சஞ்சு! அதுவரைக்கும் நாம எப்படியாவது சமாளிச்சே ஆகனும். விஷயம் வெளில தெரிஞ்ச பெரிய ப்ரச்சனையாகிடும்”

‘அப்போ ஏன் போகவிட்ட?’ என்று கேட்குமளவு சஞ்சு முட்டாளில்லை!

அவன் அவளை நன்கறிவான்.
யாருடைய கட்டுக்குள்ளும் அடங்காதவள் அவள்..
அப்படியிருக்கையில் ஜீவனால் அவளை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?! அதுவும் அவளென்றால் ஜீவனிடம் தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும்பொழுது.
ஆனால் ‘அவன்’. அவன் ஏன் அவளுடன் செல்ல வேண்டும்??
ஒவ்வொன்றாய் யோசனையில் மிதக்க சஞ்சயனுக்கோ தலை வெடித்துவிடும்போல் ஆனது.

“ஆண்டவா!! என்ன ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோடல்லாம் சேர வைக்கற???” என்றவன் உள்ளம் கதறியது வெளியே கேட்க வாய்ப்பில்லைதான்.

எப்படி இருந்தாலும் சமாளித்துதான் ஆகவேண்டும். பின்வாங்க முடியாத தூரத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்தவன் எழுந்துக் கொண்டான் ஒரு முடிவுடன்.

“சரி.வா ஜீவா! உள்ள போவோம்” என்றவனின் குரலில் பதற்றம் குறைந்திருக்க அவன் தெளிந்துவிட்டதை புரிந்துக் கொண்டவனாய் அவனுடன் மண்டபத்தினுள் விரைந்தான் ஜீவன்.

***********************************************************************************************************************

அந்த இரு சக்கர வாகனத்தில். அவன் பின்னே அமர்ந்திருந்தவளின் மனமோ எங்கெங்கோ பயணிக்க அதை பிடித்து இழுத்து தன் கட்டுக்குள் வைக்க முயன்றாள் அவள்.

சுற்றுப்புறத்தில் கவனம் பதிக்க முயன்றவளாக அவள் பார்வையை சுழலவிட ‘வேற மண்டபமே கிடைக்கலையா இவங்களுக்கு??!!” என்றுதான் தோன்றியது அந்த அனாதரவாய் நின்ற சாலைகளும்.. இருபுறமும் வளர்ந்து நின்று பயங்காட்டிய ராட்ச்சத மரங்களும்.

“சீக்கிரம்..” என்றவளின் அவசரக்குரலில்,

“ம்ம்ம்” என்று தலையசைத்தான் அவன்.
‘இவளுக்கென்ன பைத்தியமா?? எப்படி முஹூர்த்தத்துக்குள்ள வரமுடியும்?’ என்றவன் உள்ளம் புலம்பித் தள்ள இன்னொன்றோ ‘அப்போ நீ ஏண்டா கூட வந்த?’ என்று கேட்டு அவனை வாரியது. ‘ அதானே! நாம ஏன் இவ பேச்ச கேக்கறோம்??’ என்ற கேள்வி எழ அதற்குத்தான் எவரிடமும் விடையில்லையே.

‘மெயின் ரோடே கண்ணுக்குத் தெரியலையே!’ என்றவளின் கவலையை தூரத்தில் ஒளிர்ந்த விளக்கொன்று போக்கிவிட அதன்பின் மௌனம் மட்டுமே அங்கு நிலவியது.

அவளும் பேசவில்லை
அவனும் பேச முயலவில்லை

ஆனால் இவர்களிருவரும் பேசாததை கண்டோ என்னவோ துக்கம் தாளாமல் அந்த வண்டியின் டயர் ஒன்று மூச்சிழந்தது.

அந்த ஆளரவமில்லாத இடத்தில் வண்டி சக்கரமும் பஞ்சராகிவிட அடுத்து என்ன என்ற கேள்வியே பூதாகரமாய் அவர்கள் முன் நின்றுச் சிரித்தது.

அங்கே
மஞ்சள் நாணும்.. மக்கள் கூட்டமும்..
இங்கோ
இருள்சூழ்ந்த இரவும்.. நீண்டு நின்ற பாதையும்..

நடக்கவிருப்பது கல்யாணமா..இல்லை கச்சேரியா..

கச்சேரி களைகட்டும்!!!!
 
Last edited:
Tension

startinge tension
 
உங்களுடைய "கல்யாணம்
கச்சேரி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
யஞ்ஞா டியர்
 
Last edited:
Top