Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரிசல் #காட்டு #காவியம்-Part-4

Advertisement

Puthumairaj A

Member
Member
#ஆவாரங்காடு
செல்லம்மாளுக்கு ஓராண்டு படிப்பு உள்ளது . இராமையாவுக்கு இராணுவ பயிற்சி ஓராண்டு உள்ளது . இருப்பினும் பிணைப்புச் சங்கிலி போல் இருவர் காதலும் பிணைந்தே
வந்தது .
ஓராண்டு பிரிவென்பது இருவர் உள்ளத்திலும் தாளாத வேட்கையை
உண்டுபண்ணியது .
புரண்டு புரண்டு படுத்த செல்லம்மாளுக்குத் தூக்கம் கொள்ளவில்லை . அக்கா அருகில் படுத்திருக்கிறாள் என்ற நினைவுகளின்றி இருவரும் பேசுவதாக கற்பனையில் மிதந்து கொண்டிருந்தாள் செல்லம்மா .
சிரிப்பும் சிணுங்கல்களும் அந்த இரவுப் பொழுதை ஆக்கிரமித்தன .
வள்ளிக்குப் புரிந்துபோனது தங்கையின் காதல் பருவம் . தனக்கு தங்கை என்றாலும் , தங்கை மனதிலும் ஒரு காதல் துளிர்விடும்போது தங்கை பெரியவள் என்ற எண்ணம் வந்தது வள்ளிக்கு . தன் தாங்கையின் மனதைத் திருடிய கள்வன் யாரென்று நாளை தங்கையிடம் கேட்டுவிட வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டாள் வள்ளி .
வள்ளிக்கும் இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் தூக்கம் வருமா என்ன ! .
" அக்கா நீ இன்னும் தூங்கலையா ? "கேட்டாள் செல்லம்மா .
" எனக்குத் தூக்கம் வரல. நீ ஏன் இன்னும் தூங்கல ? " கேட்டாள் வள்ளி .
" அது... வந்து... அக்கா.... சும்மா ஏதாவது நினைச்சிக்கிட்டு இருந்தேன் அதனால தூக்கம் வரல . திருநெல்வேலிக்கு போனப்போ 'கல்யாணபரிசு ' படம் பார்த்தேனா . அந்தப் படம் ஞாபகத்தில் இருந்தது . அதுதான் யோசிச்சேன் சிரிச்சேன் " என்றாள் செல்லம்மா.
" படத்தை யோசிச்சு சிரிச்சியா , இல்ல படம் பார்க்கப்போனவங்கள நினைச்சு சிரிச்சியா . அக்கா கிட்ட பொய் சொல்லக்கூடாது " என்றாள் வள்ளி .
" நான் ஏன் உன்கிட்ட பொய் சொல்லணும் ? . நெசமாவே கல்யாணபரிசு படம் செம... நீ மட்டும் அந்தப் படத்துக்கு வந்திருந்த நீயும் அதைத் தான் நினைத்துக்கொண்டு இருப்பே " என்றாள் செல்லம்மா .
" நீ சொல்றத நம்பிட்டேன் தாயி. உனக்கு ஒன்னு தெரியுமா தாயே .
நாளைக்கு உன்னப் பொண்ணு பாக்க வெளியூரிலிருந்து வாராங்க " என்றாள் வள்ளி .
பதறியடித்து எழுந்தாள் செல்லம்மா. " அக்கா இராமையாவை தவிர நான் யாரையும் கட்டிக்க மாட்டேன் " அவசரமாய் சத்தமாய்ச் சொன்னாள்.
" அப்படி வா வழிக்கு . இவ்வளவு நேரம் நீ புரண்டு புரண்டு படுத்ததன் காரணமே அதுதானே . இதை உன் வாயிலிருந்து வர வைக்கத் தான் நான் அவ்வாறு சொன்னேன் . யாரும் உன்னப் பொண்ணு பாக்க வரல . கவலைப்படாதே . திரும்பவும் கயிறு எடுத்துட்டுப் போய் தொங்கி விடாதே "
தங்கைக்கு ஒரு அடி வைத்தாள் வள்ளி .
இவர்கள் இருவரும் பேசுவதை தூங்குவதுபோல் கேட்டுக்கொண்டிருந்தாள் ஆச்சி . அதுதானே பெரியவர்களுக்கு அழகு .
ஆச்சியின் விருப்பமும் அதுதானே .
" அக்கா நீ கண்டுபிடிச்சிட்டியா...
மாமா கிட்ட சொல்லிடாதே . மாமா பொல்லாத ஆளு . வெட்டிப்போட்டிடு வருவாரு . இன்னும் ஒரு வருடம் எனக்கு படிப்பு முடியும் வரை எனக்கு கல்யாணப் பேச்சு பேசாமல் இருந்தால் போதும் " என்றாள் செல்லம்மா.
" அதைப் பத்தி கவலைப் படாதே தாயே . ஆச்சி எப்படியாவது மாமாவ
சமாளிச்சிக்கிடுவா . அதுக்காக இப்படி எல்லாம் தூங்காம உடம்பைக் கெடுத்துக்கக் கூடாது . ஒழுங்கா இப்பத் தூங்கு " என்றாள் வள்ளி .
" சரி சரி . நீயும் தூங்கு " சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு இருவரும் தூங்கிப் போனார்கள் .
இராமையாவின் கனவுகளை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தாள்
செல்லம்மா . இளமை தாகத்திற்கு
இதயராணியின் உருவம் நிழலாடுதல்
இயல்பின் வழமையே !
நடுநிசிக்குப் பின்வந்த தூக்கம் என்பதால் கருக்கல் விடியல் அவர்கள் தூக்கத்திலேயே கடந்து போனது . மாடுகளின் பசிக் குரல்கேட்டு எழுந்தான் இராமையா . மனிதர்களை மட்டும் பிரிவது வருத்தம் அல்ல . தன் வீட்டு கால்நடைச் செல்வங்களை விட்டு பிரிவதும் கூட வருத்தம் தான் .
இரண்டு கட்டு நாற்றுகளை உலைத்தவன் அரிவாளால் அவற்றைத் துண்டுகளாக்கி மாட்டுக் காடியில் தீவனம் ஆக்கினான் . மாட்டின் கழுத்தைத் தடவியவாறே " இன்னும் ஒரு வாரத்துல நானும் இந்த வீட்டிலிருந்து போகப் போறேன் . நீங்களும் போகப் போறீங்க . அடிமாட்டுக்கு வாங்கிட்டு போகாம விவசாயத்துக்கு வாங்கிட்டுப் போறவங்க கைகளில் போய்ச் சேரணும் " என்று மாட்டிடம் பேசினான் இராமையா .
இரண்டு மூன்று நாட்களில்
இராமையாவின் வீட்டில் இரண்டு அக்கா குடும்பம் இரண்டு , அண்ணன் குடும்பம் இரண்டு என்று வீடே அல்லோலப் பட்டது . எல்லோரும் இராமையாவை வளைய வளைய சுற்றி வந்தார்கள் .
குடும்பத்தினரின் அன்பு மழையில் நனைந்தான் இராமையா .
நாட்கள் நகர்ந்தன . நாளை மதிய பேருந்திற்கு வெலிங்டன் பயணத்திற்காக இராமையா கிளம்பவேண்டும் . இன்று மாலை நேரத்தில் மட்டுமே செல்லம்மாளை சந்திக்க முடியும் .
இராமையாவும் , சுப்பிரமணியும் செக்காரகுடி சென்று தைக்கக் கொடுத்திருந்த சட்டையை வாங்கி வந்தார்கள் . கூடவே சில பொருட்களும் .
அந்தி மாலை நேரத்தில் ஆலமரத்தின் இலைகளும் அசையாது இருந்தன . அவைகளுக்கும் தெரிந்திருக்குமோ இந்தக் காதல் கிளிகள் இனி இங்கு கூடாது என்று .
இன்று எப்படியும் ஆவாரம்பூ காட்டிற்குள் சென்று அரை மணி நேரமாவது மனம்விட்டுப் பேச வேண்டும் என்று நால்வர் மனமுமே சொல்லியது . அப்படியே யார் கண்ணிலும் பட்டுவிட்டால் கூட
இராமையாவும் செல்லம்மாளும் அஞ்சுவதாக இல்லை . சுப்பிரமணி மட்டும் தன் தந்தைக்குத் தெரிந்து விடுமே என்று பயந்து கொண்டிருந்தான் .
சொக்கியும் செல்லம்மாவும் அழகு ரதமென அசைந்து வந்தார்கள் . இராமையா அவர்களைப் பார்த்ததும் சிரிக்க வேண்டுமே என்பதற்காகச் சோகத்தை மறந்து முகத்தில் சிரிப்பை வரவழைத்தான் .
இராமையா " அந்த ஓடை வழியாகச் சென்று ஒரு ஐந்து நிமிடம் ஆவாரங்காட்டுகுள்ள பேசிவிட்டு வருவோமா " என்றான் .
" போவோம் . நாங்களும் அதைத்தான் நினைத்துக் கொண்டு வந்தோம் "என்றாள் செல்லம்மா .
ஆவாரம்பூ சூழ்ந்த அந்தக் கரிசல் காட்டில் நால்வருமே செடிகளுக்கு நடுவே ஒன்றாக உட்கார்ந்தார்கள் .
கனத்த மனதோடு மௌனித்தார்கள் .
இராமையாவும் சுப்பிரமணியும் அவரவர் சட்டைப் பைக்குள்ளிருந்து
ஆளுக்கு ஒரு ரோஜாவை எடுத்தார்கள் .
" நம்ம ஊர்ல பிறந்ததிலிருந்து வயசுக்கு வர வரைக்கும் பெண்குழந்தைகள் பூ வைப்பாங்க.
வயசுக்கு வந்தபிறகு நிச்சயதார்த்தம் பண்ணிய பிறகு தான் பூ வைப்பாங்க . எனக்குத் தெரியும் தான் . இருந்தாலும் இந்த இயற்கை சாட்சியாக நாம் நால்வரும் ஒருவருக்கொருவர் நிச்சயம் செய்து கொள்வோம் . ஒரு நிமிடம் இந்த பூவை உங்கள் தலையில் வைத்துக்கொண்டு பின்பு பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் . நாங்கள் இராணுவப் பயிற்சி முடித்து வந்ததும் திருமணம் செய்து கொள்கிறோம் என்றான் " இராமையா.
" சொக்கி பயப்படாதே . நான் இன்று இரவு அத்தையைப் பார்க்க வருகிறேன் . தைரியமாக இந்தப் பூவை வாங்கிக்கோ " என்றான் சுப்பிரமணி.
செல்லம்மாள் தன் தலையில் இருந்த கேர்ப்பினை உருவி இராமையா கையில் கொடுத்து
திரும்பி நிற்க எவ்வித சலனமுமின்றி
காதல் மீதூற அன்பின் வெளிப்பாடாய் அவள் தலையில் சூட்டினான் மலரை .
சொக்கி சுப்பிரமணியனின் காதலை மனதார ஏற்றாள் . இருந்தாலும் இரு பெண்களுக்குமே அவரவர் மாமனுக்குப் பயம்தான் .
செல்லம்மா தனது முந்தானை மடிப்பில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து இராமையாவிடம் நீட்டினாள்.
" இது எனது முதல் வருடத் தேர்விற்கு
எனது வகுப்பு ஆசிரியர் எனக்கு வாங்கித் தந்த அன்புப் பேனா . எனக்கு மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பெற்றுத் தந்தது இந்தப் பேனா . இதை என் அன்புப் பரிசாக உனக்குத் தருகின்றேன் . நீ கடிதம் எழுதும் போதெல்லாம் உனக்கும் எனக்குமான உறவைச் சொல்லும் இந்தப் பேனா "என்றாள் செல்லம்மா .
இந்த அளவுக்குச் சிந்திக்கத் தெரியாத சொக்கி கையில் எதையும் எடுத்து வரவில்லை . ஆனால் முழு நம்பிக்கையோடு இன்று தான் சுப்பிரமணியின் காதலை ஏற்றாள் .
செல்லம்மா ," நாளை மதிய பேருந்துக்கு நானும் வருவேன் .
ஆனால் நீயும் நானும் பேசிக் கொள்ள முடியாது . இரண்டாம் ஆண்டிற்கு எனக்கு ஏதோ புத்தகம் வாங்க வேண்டியிருக்கிறது என்று சொல்லி வருகிறேன் . அத்தை அழைத்தால்
பேருந்து ஏறும் வரை அத்தையோடு இருந்துவிட்டு இரவு பேருந்துக்கு அவர்களோடேயே வீடு திரும்புகிறேன்.
அழைக்காவிட்டால் கண்டுகொள்ள வேண்டாம் . நான் எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து விடுவேன் . நமது கண்களின் பார்வைகள் போதும் "
என்றாள் .
இவை யாவற்றுக்கும் வழியில்லாததால் சொக்கி அமைதியாக இருந்தாள் . இருவரும் தண்ணீர்க் குடத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினர் .
சுப்பிரமணி " சொக்கி இரவு நான் அத்தையைப் பார்க்க வீட்டுக்கு வருவேன் " என்று சொல்லியனுப்பினான் .
செல்லம்மா "அப்போ நீங்க ? "என்றாள் இராமையாவிடம் .
நான் "காலையில் ஆச்சியிடம் ஆசி வாங்க வருவேன் " என்றான் இராமையா . குலுக்கிப் போட்ட சோவியைப் போல கலகலவென்று சிரித்தாள் செல்லம்மா .

#வெலிங்டன்

நட்சத்திரக் கூட்டத்தின் வெளிச்சம் மட்டுமே தெருவில் இருந்தது . அமாவாசை என்பதால் நிலவு தன் முகத்தை மறைத்துக் கொண்டது .
பாச்சான்களின் சத்தம் வெளிச்சம் குறைவான அந்த இருள் பொழுதுகளில் அதிகமாய்க் கேட்டன .
இராமையா‌ அந்த இரவையும் இரசித்துக் கொண்டே படுத்திருந்தான் .
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு நொடியும் இரசனைக்குரியவையே...
இராமையாவின் வீட்டு வாசலில் சுப்பிரமணி வந்து நின்றான் .
" அத்தான் வாங்க என்னோட . எங்க அத்தை வீட்டு வரைக்கும் போயிட்டு வருவோம் " என்றான்.
" ஏல... மாப்ள... உங்க அத்தை வீட்டுக்கு நீ போறதுக்கு நான் எதுக்கு உனக்கு துணைக்கு ? . என்னவோ போருக்கு போற மாதிரி பயப்படுற..." என்றான் இராமையா .
" இல்ல எங்க அத்தை வீட்டுக்கு போயி எட்டு வருஷமாச்சு . கொஞ்சம் கால் கூசுது . நீங்க வாங்க அத்தான் .
எங்க அப்பாட்ட கூட நான் உங்க வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன் " என்றான் சுப்பிரமணி.
" சரி. வா மாப்ள போகலாம் " என்றவாறு தெற்குத் தெருவில் இருக்கும் சொக்கி வீட்டுக்குச் சென்றார்கள் .
" அத்தே " எனக் குரல் கொடுத்தான் சுப்பிரமணி .
சொக்கி , " அம்மா உங்க அண்ணன் மகன் வந்திருக்கான் பாரு " என்றாள்.
" என்னைய்யா... மிலிட்டரி சேர்ந்து இருக்கியாம்ல . அத்தை கிட்ட சொல்லிட்டுப் போனுமின்னு உனக்காவது தோணுச்சே . பத்திரமா போயிட்டு வாய்யா ... " என்றவள் சொக்கியை நோக்கி , " அந்த திருநீற்றுக் கொப்பரையை எடுத்துட்டு வா " என்றாள் .
சொக்கி எடுத்துவந்து கொடுத்தாள் . அதிலிருந்து திருநீற்றை எடுத்து சுப்பிரமணிக்கும் இராமையாவுக்கும் பூசிவிட்டாள் . இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையிலிருந்து பத்து ரூபாயை சுப்பிரமணி கையில் கொடுத்து " இரண்டு பேரும் எடுத்துக்கோங்கப்பா " என்றாள்.
" அத்தே சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே . அப்பா உன் கூடப்பிறந்த அண்ணன் . அவரு கோபம் எவ்வளவு நாளைக்கு நிலைக்கப் போகுது . சொக்கிய வேறு யாருக்கும் கட்டிக்கொடுக்க பேச வேண்டாம் . நானே கட்டிக் கொள்வேன் " என்றான்.
" உங்க அப்பா வேண்டாமுன்னு சொன்னா என்னய்யா செய்வ " என்றாள் .
" அத நான் பாத்துக்குறேன் . முடியும் வரைக்கும் போராடிப் பார்ப்பேன் முடியாத பட்சத்தில் நீ கவலைப்பட வேண்டாம் . சொக்கிய நான் கண்கலங்காமல் பார்த்துப்பேன் .
என்ன நம்பு அத்தை . நான் கெளம்புறேன் . இப்போ நான் அப்பாட்ட சொல்லாமத் தான் வந்தேன். ஒரு வருடம் போகட்டும் பார்த்துக் கொள்ளலாம் " என்றான் .
" சொக்கி வரட்டுமா ! "என்று விடை பெற்றான் சுப்பிரமணி .
வீடு வந்து பேசி விட்டுப் போனதில் மிகுந்த நம்பிக்கையானது சொக்கிக்கு.
அமைதியான அந்த கிராமத்து வாசம் மறந்து பரபரப்பான ஒரு வாழ்க்கைச் சூழலுக்கு நாளையிலிருந்து பழகிக் கொள்ளத்தான் வேண்டும் . தன் ஊர் இளைஞர்கள் ஒன்றாக வருவது மட்டுமே ஆறுதல் . இருந்தாலும் ' இராணுவ வீரன் 'என்ற இலட்சிய பயணம் அவர்கள் விரும்பி ஏற்றதே...
எண்ணச் சுழற்சியில் சிந்தித்தவாறே உறங்கிப் போனான் .
" தம்பி எழுந்திருப்பா . இன்று நீ ஊருக்குக் கிளம்ப வேண்டும் அல்லவா ! நாங்களும் உன்னோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரம் எழுந்து விட்டோம் " என்றாள் பெரியக்கா .
பிரிவு ஒன்று வருகின்ற போது தான் உறவின் ஆழம் நமக்குப் புரிகிறது . அம்மா , அக்கா , மதினி அனைவரும் ஒன்று சேர்ந்து இராமையா கொண்டு செல்வதற்காக முறுக்கு , அதிரசம் , சீடை , இட்லிபொடி ஆகியவற்றை தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார்கள் .
இராமையா ஒரு தகரப் பெட்டியில் தான் ஊருக்கு கொண்டு செல்வதற்கான ஒரு போர்வை , துண்டு இதர சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் .
" ஏல.... தம்பி ஞாபகமா மாசத்துக்கு ஒரு தடவையாவது கடுதாசி போடு "
என்றாள் கருத்தம்மா .
" நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாரேன் " என்றவாறு இராமையா கிளம்பினான். " புளியோதரை நாலு கட்டு கட்டி வைக்கிறேன் " என்றாள்
முத்தம்மா .
" இரண்டு கட்டு போதுமே " என்றான் இராமையா.
"கூட ரெண்டு இருக்கட்டும் ஐயா. ஒன்னா வந்த பிள்ளைகளுக்கு தேவைப்பட்டால் கொடுக்கலாமே "
என்றாள் .
இராமையா ஆச்சி வீட்டிற்குச் சென்றான் . செல்லம்மாளுக்கு ஏற்கனவே இராமையா வருவான் என்பது தெரியும் . ஆதலால் எதிர்பார்த்தே இருந்தாள் .
" வாங்க கொழுந்தனாரே ! வேலைக்குச் சேர்ந்ந்தாச்சாமில்ல .
அப்போ , அடுத்த வருடம் கல்யாணம் தான் " என்றவாறு தங்கையை நோக்கி நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் வள்ளி .
" ஆமா மதினி . இன்னும் ரெண்டு மாசத்துல உங்களுக்கு கல்யாணமே . என்னால இருக்க முடியாமல் போனதுதான் வருத்தம் " என்றான் இராமையா .
ஆச்சி , " ஊருக்கு கிளம்பியாச்சா அய்யா . ரெண்டு தடவை உங்க வீட்ல மாப்பிள்ளை கேட்டாச்சு . நேரம் ஒத்துழைக்கல . அடுத்த வருடமாச்சும் நடக்கட்டும் ஐயா " என்றாள்.
" சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கண்டிப்பா நடக்கும் ஆச்சி . சரி நான் சொல்லிட்டு போகத்தான் வந்தேன் ஆச்சி . போய் வாரேன் " என்றான் .
ஆச்சி திருநீறு பூசி ஐந்து ரூபாயை கையில் கொடுத்தாள் .
" செல்லம் நீயும் கூட இன்று மதிய பேருந்துக்கு ஏதோ சாமான் வாங்க போகணும் என்று சொன்னாயே " என்றாள் வள்ளி .
" ஆமாம் அக்கா . நானும் போகணும் கிளம்பப் போகிறேன் " என்றாள் செல்லம்மா . இராமையா முகத்தில்
ஆயிரம் பௌர்ணமியின் ஒளி வெள்ளம் . விடைபெற்றான்
ஆச்சியிடமிருந்து .
இராமையா மெதுவாக அடுக்களைக்குள் நுழைந்தான் அம்மா அருகில் அமர்ந்தான் .
" என்னப்பா ஏதோ சொல்ல வந்தி ருக்கே போலத் தெரியுதே " என்றாள் அம்மா.
" ஆமாம்மா. தெற்குத் தெரு வழியாக போனேன் . ஆச்சு வீட்ல வயசானவங்க இல்லையா ! அதனால ஆச்சி கிட்ட சொல்லப் போனேன்‌ . ரெண்டு தடவை மாப்பிள்ளை இல்லைன்னு சொன்னது இந்த ஆச்சிக்கு கொஞ்சம் வருத்தம் போல . அதான் நான் அந்த ஆச்சி கிட்ட
' அம்மா சரி சொல்லிடுவா ஆச்சி' ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன் . வேற எங்கேயும் எனக்கு பொண்ணு பேச வேண்டாம் அம்மா " என்றான் இராமையா .
" உன் விருப்பந்தான் முக்கியம் . புள்ள படிச்ச புள்ளயின்னு உங்களுக்குள்ள பிரச்சனை இல்லை என்றால் தாராளமாக முடிச்சுடுவோம் .
வாழுற பிள்ளைக நீங்க . உன் முடிவு தான்யா " என்றாள் முத்தம்மா .
" பேருந்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டது எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க " என்று குரல் கொடுத்தான் பெரிய அண்ணன் மாணிக்கம் .
தூரத்தில் தெரிந்தது பேருந்து .
பாதி பேருந்தில் தான் எப்போதும் ஆட்கள் இருக்கும் . இன்று நிரம்பி வழிந்தது .
செல்லம்மாவும் ஏதோ வேலையாய்ச்
செல்வது போல் பேருந்தில் ஏற இருக்கை காலியில்லை .
முத்தம்மா அருகில் உட்கார்ந்திருந்த
இராமையா " அம்மா செல்லத்தை கூப்பிட்டு உன்கிட்ட உட்கார வச்சுக்கோ . நான் நின்னுக்கிறேன் " என்றான்.
" தாயி இங்கே வந்து உட்கார்ந்துக்கோம்மா " என்று குரல் கொடுத்தாள் முத்தம்மா .
செல்லம்மா அருகில் வந்தமர்ந்தாள்.
முத்தமா செல்லம்மாளைப் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தாள் .
" புத்தகம் மட்டும்தானே வாங்க போற தாயே . எங்க கூடவே வா . வரும்போது வாங்கிட்டு வரலாம் ஒத்தையிலே அலைய வேண்டாம் " என்றாள் அக்கறையாகவும் , உரிமையோடும்.
தூத்துக்குடி சென்றது பேருந்து .
குன்னூருக்குச் சென்றுதான் வெலிங்டன் செல்லவேண்டும் .
குன்னூருக்கு பேருந்து மாலை ஆறு மணிக்கே இருந்தது .
வந்திருந்த அத்தனை பேரும் சேர்ந்து அதுவரை பொழுதைக் கழிக்க சிவன் கோவிலுக்குச் சென்றார்கள் .
அத்தனை பேரின் கண்களும் செல்லம்மாள் மேல் .
ஏனென்றால் வயதுக்கு வந்த பெண்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்வதில்லை . அந்த கிராமத்தின் முதல் படித்த பெண் செல்லம்மாள் தான் . இப்படி நகர் புறத்திற்குத் தனியாக வரும் முதல் பெண்ணும் செல்லமாய் தான் .
மேலும் செல்லம்மாவும் முத்தம்மாவும் இருக்கும் நெருக்கத்தை பார்க்கும்போது முத்தம்மாவின் மருமகள் செல்லம்மாள் தான் என்பது எல்லோராலும் கிசுகிசுக்கப்பட்டது .
மாலை ஆறு மணிக்கு அந்தக்
கூட்டத்தில் இருந்தவர்களில் அந்த கிராமத்து இளைஞர்கள் பன்னிரெண்டு பேரோடும் , பிற கிராமங்களிலிருந்து வந்த முப்பது இளைஞர்களையும் சேர்த்துச் சுமந்து கொண்டு கிளம்பியது குன்னூர் பேருந்து .
கிளம்பிய ஒருமணி நேரத்தில்
அரட்டையோடு மகிழ்ச்சியானார்கள்
இளைஞர்கள் . அதிகாலை ஏழு மணிக்கெல்லாம் வெலிங்டன்
இராணுவப் பயிற்சி மையத்தில்
தடம் பதித்தார்கள் .
இந்திய இராணுவ வீரர்களாய்....!

( கரிசல் கதை தொடரும் )
 
Nice ud
 
Top