Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

#கரிசல் #காட்டு #காவியம் -2

Advertisement

Puthumairaj A

Member
Member
#விழா #நாள்

நெல்லை சந்திப்பு என்ற பெயர்ப் பலகையை முதன்முதலாக அப்போதுதான் பார்க்கிறாள் செல்லம்மா .

தாமிரபரணி நதி ஓட்டமும் , பிரம்மாண்டமான பாலங்களும் செல்லம்மாளின் விழிகளை விரியச் செய்தன .

நெல்லை சந்திப்பில் இறங்கியதும் , அங்கு தென்பட்ட மனிதர்களிடம் இராமையா அரசு பொருட்காட்சித் திடலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று விசாரித்துக் கொண்டிருந்தான் .

இரண்டு அடுக்கு புதிய மேம்பாலத்தைக் கண்டு , நின்று வேடிக்கை பார்த்தாள் செல்லம்மா . திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் மேம்பாலம் அது .

இருபுறமும் இருந்த கடைகளை வேடிக்கை பார்த்தபடி செல்லம்மா இராமையாவுடன் பேசிக் கொண்டே நடந்தாள் .

" இந்தப் படிப்பு மட்டும் நான் படிக்காமல் போயிருந்தால் நமது கிராமத்திலேயே முடங்கிப் போயிருப்பேன் தானே ! . எனது உலகம் நமது கிராமமாக மட்டும் இருந்திருக்கும் . பாவம் வள்ளி அக்கா. நான் பிறந்த வயிற்றில் தானே அவளும் பிறந்தாள் . இன்று என்னோடு வரவேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டாள் . மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வருவதால் அவளால் இங்கு வரமுடியாமல் போய்விட்டது "
என்றாள் செல்லம்மா.

" உண்மைதான் செல்லம் . படிப்பு மட்டும் இருந்தால் எந்த செல்வத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம் . 'கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ' என்று நாம் படித்திருக்கிறோமே . இன்று அது உண்மையாயிற்று பாரேன் " என்றான் இராமையா.

" நான் முதலிடம் பெறுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை . நம்ம ஊரில் இருந்து போனப்போ நகரத்துப் பிள்ளைகள் என்னுடைய உடையையும் , என்னுடைய பேச்சையும் பார்த்து என்னைக் கேலி செய்தார்கள் .
அந்த அவமானமே என்னைப் படிக்கத் தூண்டியது . இன்று அந்த முயற்சியே என்னை இவ்வளவு பெருமைக்கு ஆளாக்கி விட்டது " என்றாள் .

அரசு பொருட்காட்சித் திடலும் வந்தது . அழகாய் சீர் செய்யப்பட்ட பந்தல் . வாசலில் குலை வாழை மரங்கள் . அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளைக் கண்டு வியந்து பார்த்தாள் செல்லம்மா . மேலே அண்ணாந்து பார்த்தாள். பந்தலில் வண்ண வண்ணக் காகிதங்கள் அழகழகாய் வடிவம் செய்யப்பட்டிருந்தன . அவை காற்றில் ஆடுவது மிகவும் வேடிக்கையாக இருந்தது .

அங்கு பணி செய்து கொண்டிருக்கும் பணியாளர் ஒருவர் ஓடிவந்து கையெழுத்துப் போட்டுவிட்டு வந்து அமருமாறு கூறினார்கள் .

"அம்மா நீங்க யாருன்னு சொன்னா எழுதிக்கிறேன் " என்றார் பணியாளர் .
செல்லம்மா பெயரைச் சொன்னதும்
" அம்மா உங்களுக்கு இருக்கை இந்த கூட்டத்தில் இல்லைமா . அங்கே தனியாகப் போட்டிருக்கு என்று அழைத்துச் சென்றார் . அவளுக்கான இருக்கையைக் காண்பித்து " நீங்கள் இங்கு தான் அமர வேண்டும் அம்மா .
காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு . உங்களோடு வந்த வர்களோடு நீங்கள் அங்கு சென்று உணவருந்திவிட்டு இங்குவந்து அமர்ந்து கொள்ளுங்கள் . இன்னும் ஒரு மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியாளர் வந்துவிடுவார் " என்றார் .

" சரி " என்ற செல்லம்மா இராமையாவைப் பார்த்து கையசைத்து அழைத்தாள் உணவு உண்ண .

இராமையாவும் செல்லம்மாவும் கூசி கூசி அந்த இடத்திற்குச் சென்றார்கள்.
ஆனால் அங்கிருந்த வரவேற்பைப் பார்த்ததும் சகசமாகிப் போனார்கள்.
இட்லி ,வடை , பூரி , கேசரி என விதவிதமான காலை உணவுகள் .

உண்டு முடித்தபின் இருக்கைக்கு சென்றால் தனித்தனியாக தூரத்தில் இருக்கவேண்டி இருக்கிறது என்பதற்காக , " நாம் கொஞ்சநேரம் இங்கேயே நிற்போமே " என்றாள்.

இராமையா , " செல்லம் , உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா " என்றாள்.

" ம்ம்... தாராளமாய்க் கேளுங்கள் " என்றாள்.

" என்னைத் தவிர யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்பதற்காகத் தானே அன்று உயிரைவிடத் துணிந்தாய் ? .
அப்புறம் என்னோடு பேசுவதற்கு உனக்கு என்ன தயக்கம் ? " என்றான் .

" நல்லாத்தானே பேசுகிறேன் " என்றாள் .

" ஆமாம் . ஆனால் என்னை எந்த உறவு முறையும் சொல்லி அழைக்காமல் மொட்டையாக அழைக்கிறாயே " என்றான் .

" மரியாதை இல்லாமல் பெயர் சொல்லி அழைக்க வில்லையே " என்றாள் .

" அதுசரி . பெயர் சொல்லி அழைத்தால் கூடப் பரவாயில்லை போல.... மொட்டையாக அழைப்பது அதைவிட சங்கடமாக இருக்கிறது .
நான் என்ன அயலவனா . நான் உன்னை அன்போடு செல்லம் என்றுதானே அழைக்கிறேன் " என்றான்.

" இல்லை . எனது பெயரே செல்லம்மாள் தானே ! அதனால் செல்லம் என்று சுருக்கி அழைக்கிறீர்கள் . சரி . சொல்லுங்கள் நான் உங்களை எவ்வாறு அழைப்பது ? " என்றாள் .

" அத்தை மகனை எவ்வாறு அழைப்பார்கள் ? அவ்வாரே அழைக்க வேண்டும் "என்றான் .

" அவ்வாறு திருமணத்திற்குப் பின்பு அழைகிறேனே ! " என்றாள் .

" அப்படியானால் அதுவரை அண்ணா என்று அழைத்துக் கொள்கிறாயா ? " என்றான் கிண்டலாக .

இராமையாவை முறைத்துப் பார்த்தாள் செல்லம்மா.

" அப்புறமென்ன ? ஒழுங்காக ' அத்தான்' என்று கூப்பிடு " என்று கட்டளையிட்டான் இராமையா .

"ம்ம் " என்று முந்தானையை திருகிக்கொண்டு வெட்கப்பட்டாள் செல்லம்மா .

அதற்குள் மாவட்ட ஆட்சியாளரின் மகிழுந்து வருகைதர அவரவர் இருக்கைக்குச் சென்று நின்று அவருக்கு வரவேற்பு கூறினார் .

வரவேற்புரை , சிறப்புரை களுக்குப்பின் மாவட்ட ஆட்சியாளர்
பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது .

செல்லம்மாவைப் பாராட்டிப் பேசி ,
சந்தன மாலை , பொன்னாடை அணிவித்து , சான்றிதழ் வழங்கப்பட்ட போது பத்திரிக்கை புகைப்படக்காரர்கள்
தங்கள் புகைப்படக் கருவியில் செல்லம்மாளைப் படம் பிடித்துக் கொண்டனர் . மறுநாள் பத்திரிகைகள் அனைத்திலும் செல்லம்மாளின் புகைப்படம் இடம் பெறத் தயாரானது .

மாவட்ட ஆட்சியாளர் கிளம்பிச் சென்றதும் , செல்லம்மாள் படித்த நிறுவனத்திலிருந்து வந்திருந்த முதல்வர் , ஆசிரியர்கள் செல்லம்மாளை பாராட்டிப் பேசிவிட்டு அடுத்த ஆண்டு படிப்புச் செலவிற்கு ஒரு ரூபாய் கூட செல்லம்மா கட்டத் தேவையில்லை என்பதையும் தெரிவித்துவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள் .

இராமையா செல்லம்மாவிடம்
," செல்லம் நாம் காதலிப்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் . நீ நன்றாக யோசித்துப் பார் . மாவட்ட ஆட்சியாளர் உன் பள்ளி முதல்வர் அனைவரின் பாராட்டும் உதவியும் உனக்கு இருக்கும்போது நீ மேலும் மேலும் படிக்கலாம். நாளை நீயே மாவட்ட அளவில் ஒரு அதிகாரியாக வரலாம்.
' உனக்கு நான் ஏற்றவன் தானா ' என்று எனக்கு யோசிக்க தோன்றுகின்றது . அப்படியானால் உனக்கு இந்த யோசனை வரவில்லையா ? " என்றான் .

" எப்படி நீங்கள் இப்படிக் கேட்கலாம் ? . இந்தப் படிப்பு மதிப்பெண்கள் இதெல்லாம் எதேச்சையாகக் கிடைத்தது.
ஆனால் நமது காதல் , உள்ளுணர்வோடு கூடியது. நமது மண்ணின் மணம் . உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் நாம் இருவரும் ஒன்றாகத்தான் செல்ல வேண்டும் . இது நான் எப்போதோ எடுத்த முடிவு . ஒருக்காலமும் அதில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை " என்றாள் .

" இல்லை இல்லை . உன்னைத் தவறாக நினைத்துக் கேட்கவில்லை . ஒருவேளை நானே உன் படிப்புக்குத் தடை போடுகிறேனோ என்று நினைத்தேன் . அது தான் கேட்டேன். சரி செல்லம் , நீ இன்று தானே திருநெல்வேலி வந்திருக்கிறாய். இதுவரை திரைப்படத்திற்குப் போயிருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன் . போவோமா ? ஐந்து மணிக்கு முடிந்துவிடும் ." என்றான் .

" நானும் பேருந்தில் வரும்போது இருபக்கங்களிலும் விளம்பரச் சுவரொட்டிகள் இருப்பதைப் பார்த்துக்கொண்டே வந்தேன் . நேரம் எப்படி அமைகிறதோ அதற்கு ஏற்றார்போல் போகலாமென்று நினைத்தேன் . போலாமா அத்தான் "
என்றாள் .

இராமையாவுக்கு கோடையிலும் குளிர் எடுத்தது . உடம்பில் இறக்கை முளைத்து வானவீதியில் வட்டம் அடித்தது போலிருந்தது . இந்த உலகத்திலேயே தாங்கள் தான் மிகச் சிறந்த சோடிக்கிளிகள் என்று
பறப்பதாக உணர்ந்தான் . எங்கேயோ வெறித்தபடி அவன் பார்வை நிலைகுத்தி நின்றன . அவன் நினைவுக் குதிரைகள் உலகையே வலம் வந்தன .

செல்லம்மா பெருவிரலையும் ஆள் காட்டி விரலையும் இணைத்து அவன் கைகளில் லேசாய் சுண்டினாள் .
சுய நினைவுக்கு வந்தான். சிரித்தாள் செல்லம்மா .

" வா செல்லம் . ரத்தினா திரையரங்கத்தில் 'கல்யாணப்பரிசு ' படம் திரையிட்டிருக்காங்க . ஜெமினி கணேசன் , சரோஜாதேவி நடித்தது " என்றான் .

" எனக்கு எந்த நடிகர் , நடிகையும் தெரியாது . திரையரங்கத்தில் கால் வச்சது இல்ல . அப்புறம் எந்த படமென்றால் என்ன ?" என்றாள் .

சிறிது தூர நடைப்பயணத்தில் வந்தது ரத்னா திரையரங்கம் . இரண்டு ரூபாயில் இரண்டு டிக்கெட் எடுத்தாயிற்று . உள்ளே சென்று இருக்கைகளில் அமர்ந்தார்கள் .

அப்பொழுது தான் முதல் முறையாக இராமையாவின் அருகில் உட்காருகிறாள் செல்லம்மா . இருப்பினும் போதிய இடைவெளியை
இருவருமே கடைப்பிடித்தனர் .

இராமையாவுக்கு செல்லம்மாவின் அருகாமை மிகுந்த இன்ப உணர்வை ஏற்படுத்தியது . செல்லம்மாளுக்கு
இன்றைய நிகழ்வுகள் அனைத்துமே புதுமையாக இருந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள் .

திரையில் விளம்பரங்கள் ஓடத்தொடங்கின . செல்லம்மாளுக்கு அவை அதிசயமாய் இருந்தன
' இவ்வளவு நேரம் வெற்றுத் திரையாய் தெரிந்த இடத்தில் இப்பொழுது மனிதர்கள் நடமாட்டம் தெரிகின்றதே .
நேரடியாக நம்மோடு பேசுவது போல் கேட்கின்றதே ' என்ற வியப்பு .

திரைப்படம் தொடர ஆரம்பித்தது .
" வாடிக்கை மறந்ததும் ஏனோ " என்ற பாடலின் பனங்காடுகள் , மிதிவண்டி காட்சிகள் எல்லாம் இராமையா செல்லம்மாவை தங்கள் கிராமங்களுக்கு கற்பனையாகச் சென்று வந்தார்கள் .

படத்தினுடைய பாடலை ரசித்தவாறே இராமையா, " செல்லம் நீயும் மிதிவண்டி ஓட்டப் பழகிக்கோ .
ரொம்ப நல்லது ‌ . இது மாதிரி நாமளும் சுத்தலாம் " என்றான் .

ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தாள் செல்லம்மா . இடைவேளை பொழுதுகளில் முறுக்கும் கடலைமிட்டாயுடன் கழிந்தது .

' உன்னைக் கண்டு நானாட ' பாடலுக்கு செல்லம்மா தாளமிட்டு
ரசித்ததைக் கண்டு , செல்லம்மாவை சொர்க்கத்துக்கே அழைத்து வந்ததாய்ப் புளங்காகிதம் அடைந்தான் இராமையா.

நினைவுகளை இரசித்தபடி, கனவுகளில் மிதந்தபடி , ஊர் வந்து சேர்ந்தார்கள் காதல் கிளிகள் .

(கரிசல் கதை தொடரும் )
 
Super
 
Top