Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவு பட்டறை! கதை தொழிற்சாலை! - 2020 Rules and Regualtions

Advertisement

AshrafHameedaT

Administrator
ஹாய் ஃபிரெண்ட்ஸ்,

Wish you a Happy New Yearrrrrrr, உலக நாயகன் ஸ்டைல்ல படிங்க , புத்தாண்டை புன்னகை முகமாய் வரவேற்போம். போட்டியுடன் வரவேற்போம். அதொன்னுமில்லீங்க நாவல் போட்டி தானுங்க,

என்ன திடீர்ன்னு எல்லோரும் பண்ணறதுனாலையான்னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது, ஆனா அப்படி இல்லை , இது முன்னம் இருந்தே நாம நினைச்சு இருந்தது தான். ஆனா அதை செய்யறதுக்கான சந்தர்ப்பம் இதுவரை நமக்கு அமையலை.
இப்போ அதற்கான ஒரு சமயம்.

Yes with a Bang, We are here to announce a novel competition in tamilnovelwriters.com
anyone can particiapate! everyone can participate!

போட்டி ஆரம்பிக்கும் நாள் தமிழர் திருநாளாம் திருநாள் – 15.01.2020
முடிவு பெரும் நாள் - 30.06.2020

போட்டியின் விதிமுறைகள்:
01. ஜனரஞ்சகமான ஒரு கதை , மக்களை ஈர்க்கும் கதை , காதல் இருக்கலாம் ஆனால் விரசமில்லாமல் இருக்கவேண்டும் means a family melodrama , a kind of classic one which can have love, emotions, romance, comedy, thriller etc any thing and any kind, good readable novel for everyone.
02. கதைகள் குறைந்தது இருபத்தி ஐந்து அத்தியாயம் இருக்க வேண்டும் , ஐம்பதாயிரம் வார்த்தைகளுக்கு அதிகம் இருக்க வேண்டும் , முடிந்தவரை எழுத்துப் பிழையில்லாமல் இருக்க வேண்டும்.
03. கதை, கதை போல இருக்க வேண்டும் எழுத்து வடிவில். அதாகப்பட்டது, Punctuations. வாக்கியங்கள் முற்றுபெற்று, வார்த்தைகள் மேற்கோள்களில் என்று தேவையான இடங்களில் தேவையானவை இருக்க வேண்டும்.
04. போட்டியில் பதிவுகள் எழுத்தாளர்களின் பெயர்களுடன் தான் பதிவிட வேண்டும்.

05. ஒருவர் ஒரு கதை அல்ல எத்தனை கதை வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் முடிக்க வேண்டும். குறிப்பிட்ட அத்தியாயத்திற்கும் வார்த்தைகளுக்கும் இருக்க வேண்டும் இல்லை அதற்க்கு மேல் இருக்க வேண்டும்.
06. போட்டிக்காக எழுதப்படும் கதை முதல் முறை இங்கே தான் பதிவிடப் பட வேண்டும். முன்பே வேறு இணைய தளத்தில் எழுதிய கதையாகவோ அல்லது புத்தகமாகவோ அல்லது மின்னூல் ஆகவோ , எந்த வகையிலும் பிரசுகரிகப்படாததாக இருத்தல் வேண்டும்.
07. இங்கே போட்டிக்காக எழுதப்படும் கதைகள் போட்டி முடிந்து, முடிவுகள் அறிவிக்கும் வரை வேறு எந்த தளத்திலும் பதிவேற்றம் செய்யக் கூடாது.
08. முடிவுகள் வந்த பிறகும் போட்டிக்கான கதைகள் இந்த தளத்தில் அப்படியே தான் இருக்கும், நீக்கப்பட மாட்டாது.
09. போட்டியில் கதைகள் பரிசுகளுக்காய் தேர்ந்தெடுக்கப் படுவது வாக்கு முறையிலும் ( readers voting ) நடுவர் முறையிலும் ( Jury's decision ) நடைபெறும்.


போட்டிக்கான மொத்த பரிசு தொகை நிர்ணயிக்கவில்லை, ஏனென்றால் பங்கு பெரும் அனைவருக்குமே பரிசு தொகை உண்டு. மொத்த பரிசு தொகை தான் நிர்ணயமில்லை.
முதல் பரிசு – ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம்
இரண்டாம் பரிசு – ரூபாய் பதினைந்தாயிரம்
மூன்றாம் பரிசு – ரூபாய் பத்தாயிரம்

பங்கு பெற்று நிர்ணயித்த தேதிக்குள் கதை முடிப்பவர் அனைவருக்கும் தலா ரூபாய் இரண்டாயிரம் பரிசு (பங்கேற்பு பரிசுத்தொகை).

இது எழுத்தாளர்களோடு வாசகர்கள் கைகோர்க்கும் திருவிழா!
வாருங்கள்!! எழுதுங்கள்!! படியுங்கள்!!
இது கனவு பட்டறை! கதை தொழிற்சாலை!
எழுத விருப்பமுள்ளவர்கள், உங்கள் பெயர் மற்றும் கதையின் தலைப்புடன் எங்களை www.tamilnovelwriters.com/community - மில் Admin id யை இன்பாக்ஸ் ஸில் தொடர்பு கொள்ளலாம் இல்லை [email protected] மிற்கு மின்னஞ்சல் செய்யலாம்.
 
இது ஏற்கனவே சொன்னதுதானே
மாற்றம் ஒன்றும் காணோமே
இப்போ திரும்பவும் ஏன் எதுக்கு போட்டிருக்கீங்க, அஷ்ரப் ஹமீதா டியர்?
 
"நீ நதி போலே ஓடிக் கொண்டிரு" நீங்கள் எழுதிய நாவலா, அஷ்ரப் ஹமீதா டியர்?
 
"நீ நதி போலே ஓடிக் கொண்டிரு" நீங்கள் எழுதிய நாவலா, அஷ்ரப் ஹமீதா டியர்?
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பானு அது ஹமீதா ஹமீது எழுதியது.....
உந்தன் அலாதி அன்பினில் எழுதியவங்க........
 
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பானு அது ஹமீதா ஹமீது எழுதியது.....
உந்தன் அலாதி அன்பினில் எழுதியவங்க........
ஓ அப்படியா?
ரைட்டர் நேம் வெறுமனே ஹமீதான்னுதான் இருந்தது
அதான் கேட்டேன்ப்பா
புக் உள்ளே நான் பார்க்கலை
 
ஓ அப்படியா?
ரைட்டர் நேம் வெறுமனே ஹமீதான்னுதான் இருந்தது
அதான் கேட்டேன்ப்பா
புக் உள்ளே நான் பார்க்கலை
அவங்க வெறும் ஹமீதா னு தான் போடுறாங்க.......
 
Top