Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள் .....கதையின் பின்பாதி

Srija Venkatesh

Well-known member
Member
அகிலாவுக்கும் ஆனந்துக்கும் கல்யாணம் நல்லபடியா நடந்து அவர்கள் இல்வாழ்க்கை இன்பமாகவே தொடங்கியது. ராதாவின் அண்ணன் அவள் பெயருக்கு சென்னை வீட்டையும், ஊட்டியில் இருக்கும் ஒரு சிறிய டீ தோட்டத்தையும் எழுதி வைத்து விட்டார். ராதா எவ்வளவோ வேண்டாம் எனச் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. சென்னை வீட்டை மட்டும் வைத்துக்கொண்டு தேயிலைத் தோட்டத்தை கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்க்கு விற்று விட்டாள் ராதா. அந்தப் பணத்தில் பாதியை அகிலா பேரிலும் மீதியை ஆனந்துக்கும் கொடுத்து விட்டாள். இப்போது ராதாவின் சொந்த வீட்டில் தான் இலவச முதியோர் இல்லம் நடை பெற்று வருகிறது. ஆதரவற்ற முதியோர், பெண்களுக்கு இலவசமாக இடமும் செய்வதற்கு வேலையும் அளித்துக் காப்பாற்றி வருகிறார்கள் அகிலாவும் ஆனந்தும். அவர்களது சேவையைப் பாராட்டி ரோட்டரி சங்கம் பரிசும் பாராட்டும் வழங்கி கௌரவித்தது.

ராதாவுக்கு சொத்து கிடைத்த விஷயம் நாகராஜனுக்குத் தெரிய வர மீண்டும் அவர்களைத் தேடி வந்தான். இம்முறை உடை கிழிந்து, தலை கலைந்து சோற்றுக்கே கஷ்டப்படுபவன் போல இருந்தது அவன் தோற்றம். "ராதா! உனக்கு நான் செஞ்ச பாவத்துக்கெல்லாம் எனக்கு தண்டனை கெடச்சிருச்சும்மா! நான் பார்த்துக்கிட்டு இருந்த தோழில்ல ஏகப்பட்ட நஷ்டம். வீடு, கார் எல்லாம் ஏலத்துல போயிட்டுது. இப்ப சாப்பாட்டுக்கே வழியில்லாமக் கஷ்டப்படுறேன். என்னை ஏத்துக்கோ ராதா ப்ளீஸ்" என்று கெஞ்சினான். கண்டிப்பாக அவனை அடித்து தான் விரட்டுவாள் அம்மா என்று எதிர்பார்த்தாள் அகிலா. மாமியும் அங்கே தான் இருந்தாள். ஆனால் ராதாவின் முகம் இரக்கமாகப் பார்க்கவும் அனைவருக்கும் பதறியது.

"ராதா! இவனால நீ பட்ட பாட்டையெல்லாம் மறந்துட்டியா? இப்ப எதுக்கு அவனை இரக்கமாப் பாக்கற?" என்றாள் மாமி பதறியபடி.

"அம்மா! இந்த ஆளெல்லாம் திருந்தவே மாட்டான். தயவு செஞ்சு விரட்டுங்க" என்றாள் அகிலா.

சற்று நேரம் மௌனமாக அனைவரையும் பார்த்தாள் ராதா. "உங்களை நான் ஏத்துக்கறேன்" என்றாள் அமைதியாக. ஆனந்த் வெறுத்து விட்டான். உண்மையிலேயே ராதாவுக்கு புத்தி சரியில்லையோ என சந்தேகப்பட்டான். அகிலா அம்மாவைக் கோபமாகப் பார்த்தாள்.

"உங்களை நான் ஏத்துக்கறேன்னா என் கணவனா ஏத்துக்கறேன்னு அர்த்தமில்லை மிஸ்டர் நாகராஜன். எங்க ஆதரவற்றோர் விடுதியில எத்தனையோ ஆதரவற்ற ஆண்கள் கூட இருக்காங்க. அதுல ஒருத்தரா நீ இருக்குறதான எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை." என்றாள்.

அகிலாவும் ஆனந்தும் ஒரே நேரத்தில் கை தட்டினார்கள். மாமி ராதாவுக்கு திருஷ்டி கழித்தாள்.

"இருங்க மாமி நான் இன்னமும் முடிக்கல்ல. இதைப் பாருங்க மிஸ்டர் நாகராஜன், உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். கை கால் நல்லா இருக்கிறவங்க யாரா இருந்தாலும் இங்கே உழைச்சா தான் சாப்பாடு. அதனால நீங்க தோட்டத்தை சுத்தம் பண்றது, காய்கறி வாங்கிக்குடுக்குறது, இந்த மாதிரி வேலையெல்லாம் செய்தாகணும். அதுக்கு இஷ்டம் இருந்தா இங்க இருக்கலாம். இல்லைன்னா அதோ கேட் திறந்து தான் இருக்கு" என்றாள்.

ஆனந்த் சிரித்து விட்டான். "நான் தோட்டத்தை சுத்தம் செய்யணுமா?" என்றான் நாகராஜன்.

"ஆமா மிஸ்டர் நாகராஜன். செடி கொடிகளோட கொஞ்ச நேரம் இருந்தாலாவது உங்க மனசுல நல்ல எண்ணம் வரலாம். சுத்தம் செய்யும் போது உங்க மனசும் சுத்தமாகலாம் இல்லையா? அதே போல எக்காரணம் கொண்டு எங்க குடும்பம் இருக்குற இந்தப் பகுதிக்கு நீங்க வரக் கூடாது. உங்க இடம் இந்த கேட் வரை தான். சொல்லிட்டேன். இஷ்டம்னா எங்க மேனேஜர் அதோ அங்க இருப்பாரு. அவர் கிட்ட நான் சொன்னதாச் சொல்லி சேர்ந்த்துக்குங்க. இல்லை போயிட்டே இருங்க" என்று சொல்லி விட்டு மாமியைப் பார்த்தாள்.

"என் கண்ணு" என்றாள் மாமி. அனைவரையும் கோபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மேனேஜரை நோக்கி நடந்தான் நாகராஜன். சிரித்தபடியே உள்ளே சென்றார்கள் மாமியும், ராதாவும். பின் தொடர்ந்தனர் அகிலாவும் ஆனந்தும் கைகள் கோர்த்தபடி.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu 😍😍😍
 
Top