Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்....அத்தியாயம் 7...

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
மாலையும் கழுத்துமாகத் தன்னைப் பார்த்ததும் அப்பாவும் அண்ணன்களும் முதலில் திட்டுவார்கள் . கோபப்படுவார்கள். ஆனால் இறுதியில் ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்று மனதார நம்பினாள் ராதா. அதே நம்பிக்கை நாகராஜனுக்கும் இருந்தது. இவர்களை வாசலில் பார்த்த உடனே அண்ணன்கள் இருவரும் ஓடி வந்தனர்.

"ராதா! என்னம்மா இப்படிப் பண்ணிட்டியே? நாங்க உனக்கு எவ்வளவு நல்ல மாப்பிள்ளை பாத்திருந்தோம் உனக்கு என்ன அவசரம்? ஏம்மா இப்படிச் செஞ்ச?"

"என்னை மன்னிச்சிடுங்கண்ணா! எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல்ல! நான் இவரை காதலிக்கறேன். இவரை மனசுல நெனச்சிக்கிட்டு இன்னொருத்தருக்கு வாழ்க்கைப்பட என்னால முடியாதுண்ணா"

"கார்த்தி அவ கிட்ட என்ன பேச்சு? என்னிக்கு நம்மை மீறிக் கல்யாணம் கட்டிக்கிட்டாளோ அப்பவே அவ நம்ம தங்கச்சி இல்ல! இனி இவளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு நெனச்சு தலை முழுக வேண்டியது தான்"

"என்ன செந்தில் சொல்ற? இதை நாம எப்படி முடிவு செய்ய முடியும்? அப்பா என்ன சொல்வாரோ?" என்று இரண்டாவது அண்ணன் பேசிக் கொண்டிருக்கும் போதே அப்பா உள்ளிருந்து வந்தார். அவரது முகம் சலனமற்று அமைதியாக இருந்தது.

"அப்பா! உங்க அருமைப் பொண்ணு செஞ்சிருக்கற வேலையைப் பாத்தீங்களா? நீங்க இருக்கீங்க! ரெண்டு அண்ணனுங்க நாங்க இருக்கோம், எல்லாரையும் விட்டுட்டு நேத்து வந்தவனோட வந்து நிக்கறா"

அப்பா உணர்ச்சிவசப்படவில்லை. கத்தவில்லை. மெதுவாகத் தலை யாட்டினார்.

"உம் ! அதான் பாக்கறேனே!நீங்க எதுக்கு இப்படிக் கெடந்து கத்துறீங்க? அவ வாழ்க்கையை அவ முடிவு பண்ணியிருக்கா! அவ்ள தானே? இதைப் போயி ஏன் பெருசா எடுத்துக்கறீங்க? எனவும் அயர்ந்து போனார்கள் அனைவரும்.

மனமெல்லாம் பூவாக மலர்ந்தது ராதாவுக்கு.

"அப்பா நீங்க என்னை மன்னிச்சிட்டீங்களா? நான் செஞ்சதுல உங்களுக்குக் கோவமில்லியா? ரொம்ப நன்றிப்பா ! உள்ள போயி விவரமாப் பேசுவோம்" என்றபடி நாகராஜனை அழைத்துக் கொண்டு உள்ளே போக எத்தனித்தாள்.

"நில்லும்மா" என்றது அப்பாவின் குரல்.

"நீ எந்த உரிமையில எங்க வீட்டுக்குள்ள வர? உன்னோட இந்த முடிவுனால நானோ , உன் அண்ணன்களோ எப்படி பாதிக்கப்படுவோம்னு நெனச்சுப் பாக்கக் கூட நீ தயாரா இல்ல! என்னிக்கு உன் வாழ்க்கையை நீயே அமைச்சுக்கிட்டியோ அப்பவே நீ தனியாளா ஆகிட்ட! இப்ப நீ வெளியாள். எங்களால உனக்கோ உன் புருஷனுக்கோ ஆக வேண்டியது ஏதாவது இருந்தாச் சொல்லிட்டு கிளம்புங்க! எங்களால ஆனதைச் செய்யுறோம்" என்றார் நிதானமாக.

நாகராஜன் ஒரு எட்டு முன்னால் வந்தான்.

"சார்! நீங்க எங்களை மன்னிக்கணும்! எங்கே ராதா எனக்குக் கிடைக்க மாட்டாளோங்கற பயத்துல தான் நான் இந்த முடிவுக்கு வர வேண்டியதாப் போச்சி! இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல்ல! ரகசியமா நடந்த இந்தக் கல்யாணம் யாருக்குமே தெரியாது. நீங்க ஊரறிய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி நீங்க நடத்தி வெக்கறா மாதிரி செஞ்சிடுங்க! அப்ப உங்களுக்கு அவமானம் இல்லை"

சிரித்தார் சதாசிவம்.

"உங்க கல்யாணத்தை நான் ஏம்ப்பா ஊரறிய நடத்தணும்? ஒரு பொண்ணு கழுத்துல எத்தனை தடவை தான் தாலி கட்டுவ? அதுவும் போக எனக்கு பொண்ணே கிடையாது. அப்படி இருக்கும் போது மாப்பிள்ளை எப்படி வருவாரு?"

"சார்! என்னால உங்களுக்குள்ள தகறாரு வேண்டாம். நான் விலக்கிக்கறேன். நீங்க உங்க பொண்ணை அழைச்சுக்கிட்டு உள்ள போங்க" என்றான் நாகராஜன்.

"நீங்க ஏங்க இவங்க கிட்டக் கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க? அப்படி என்ன செய்யக் கூடாத தப்பை நாம செஞ்சிட்டோம்? காதலிச்சிக் கல்யாணம் பண்ணிக்கறது அவ்வளவு பெரிய பாவமா? இவங்க ரத்தம் தான் என் உடம்புலயும் ஓடுது! எனக்கும் அதே வைராக்கியம் இருக்கு. வாங்க நாம போகலாம்" என்றபடி நடந்தாள்.

"இரு ராதா! என்னைப் பத்திக் கவலை இல்ல! எப்படியும் பொழச்சுக்குவேன். ஆனா பாவம் நீ வசதியா வாழ்ந்தவ! என்னால நீ கஷ்டப்பட வேண்டாம். நமக்குக் கல்யாணமே நடக்கல்லன்னு நெனச்சிக்கோ! தாலியக் கழட்டிக் குடுத்துட்டு நீ போ! அப்ப அவங்க உன்னை ஏத்துக்குவாங்க"

"கேவலம் பணத்துக்காக நான் தாலியைக் கழட்டிடுவேன்னு நெனச்சீங்களா? இன்னிக்கு தூசியைத் தட்டி விடறா மாதிரி என்னை கழிச்சு விட்டுட்டாங்க இல்ல? இவங்க முன்னாடி நாம வாழ்ந்து காட்டுவோம்! நம்ம கிட்ட உழைப்பு இருக்கு! அதை நம்பினாப் போதும். வாங்க"

"இதப்பாரும்மா! இன்னியோட உனக்கும் இந்த வீட்டுக்கும் உள்ள பந்தம் முடிஞ்சி போச்சி ! இனி பணமோ நகையோ கேட்டுக்கிட்டு இந்த வீட்டு வாசப்படி நீ மிதிக்கக் கூடாது! அப்படி செய்யற தைரியம் உனக்கு இருக்கா?"

ஏதோ சொல்ல வாய் திறந்த நாகராஜனை அடக்கி விட்டுப் பேசினாள் ராதா.

"இதப்பாருங்க சார்! நான் இனி இந்த வீட்டுக்கு வரவே மாட்டேன். இனி எனக்கு எல்லாமே இவரு தான். உங்க சொத்துல நயாபைசா கூட எனக்கு வேண்டாம். உங்க பணத்தை வெச்சுக்கிட்டு நீங்களே அழுங்க" என்றவள் நாகராஜனை அழைத்துக் கொண்டு வந்தாள்.

இனி பழைய வேலை அவனுக்கு இல்லை என்பதை உணர்ந்து இருவரும் திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருக்கும் கிராமத்துக்கு வந்தார்கள். அது தான் சதாசிவத்துக்கு பூர்வீகம் என்று சொல்லிக் கேட்டிருக்கிறாள் ராதா. அங்கே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து குடித்தனம் ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. தலையில் கை வைத்து ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டான் நாகராஜன்.

"நீங்க கவலைப் படாதீங்க ராஜ்! நான் இருக்கேன் உங்களுக்கு. வேற வேலை கிடைக்காமயாப் போயிடும்" என்றாள் ஆறுதலாக.

சீறினான் அவன்.

"மூதேவி! என் திட்டத்தையே கெடுத்துட்டியே! கரு முண்டம் மாதிரி இருக்கற உன்னை நான் எதுக்குக் காதலிச்சேன்? இல்லை இல்லை காதலிக்கறா மாதிரி நடிச்சேன் தெரியுமா? நீ சாதாசிவத்தோட ஒரே பொண்ணு. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா வசதியா வேலை செய்யாம வீட்டோட மாப்பிள்ளையா இருக்கலாம். சொத்து கணிசமாத் தேறும்னு கணக்குப் போட்டேன். சனியன் எல்லாத்தையும் கெடுத்துட்டியே"

மனதின் நடு மையத்தில் பலமாக அடி வாங்கினாள் ராதா. தலை சுற்றியது. நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடின. குப்பென்று வியர்த்து விட்டது. அதிர்ச்சியில் நாக்கு ஒட்டிக் கொண்டது.

அவன் பாட்டுக்கப் பேசிக் கொண்டே போனான்.

"அவனுங்க ஏத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்ச ஒடனே தியாகம் பண்றா மாதிரி நடிச்சு உன்னைக் கழட்டி விட்டுட்டு கணிசமான பணத்தை கறக்கலாம்னு பாத்தா பெரிய பத்தினி மாதிரி தாலியைக் கழட்ட மாட்டேன்னு சொல்லி அதையும் கெடுத்த"

நாகராஜன் பேசப் பேச அவனது சுயரூபம் அவளுள் விரிந்து கொண்டே போனது. இவனுக்கு மனதே இல்லை. இவன் வெறும் பணப்பிசாசு என்பதை மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டாள் அந்தப் பேதை. இதயம் வலித்தது. மூளைக்குள் பல குழப்பங்கள்.

"சரி சரி! போனது போகட்டும்! இப்ப நம்மால செய்யக் கூடியது ஒண்ணே ஒண்ணு தான். சீக்கிரமே ஒரு குழந்தையைப் பெத்து அதை உங்கப்பன் காலடியில போட்டா ஒரு வேளை அவன் நம்மை ஏத்துக்கிட்டு கொஞ்சமாவது சொத்து குடுப்பான். இங்க பாரும்மா ! நாம இவனைக் கல்யாணம் கட்டிக்கிட்டோம். அவன் தான் வேலை செஞ்சு நம்மைக் காப்பாத்துவான்னு கனவு காணாத! வீட்டுக்கு சல்லிக்காசு நான் குடுக்க மாட்டேன். " என்றபடி வெளியேறினான்.

அவன் போனதும் தான் கொஞ்சம் கொஞ்சமாக சுய உணர்வுக்கு வந்தாள் ராதா.

"கடவுளே! இவனை நம்பி எவ்வளவு பெரிய தப்புப் பண்ணிட்டேன்? அப்பா எத்தனை சொன்னாரு? ஏன் கேக்கல்ல? காதல் கண்ணை மறைச்சது. இனி நான் என்ன செய்ய?" கழிவிரக்கம் காரணமாக கண்களில் நீர் பெருகியது. தன் தலையெழுத்தை நினைத்து நெடுநேரம் அழுது கொண்டிருந்தாள். தேற்றக் கூட ஆளில்லை.

இரண்டு மணி நேரமாகியும் போனவனைக் காணவில்லை. இப்போது அந்த பயம் வேறு சேர்ந்து கொண்டது.

கண்களைத் துடைத்துக் கொண்டாள். கடவுள் மேல் பாரத்தைப் போட்டாள். எப்போதோ இறந்து போன அம்மாவின் நினைவில் மீண்டும் கண்ணீர் பெருகியது. "அம்மா நீ இருந்தா எனக்கு இபப்டியெல்லாம் நடக்குமா?" என்று அழுதாள்.

"இனியும் இப்படி அழுது கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை. என் வாழ்க்கை இப்படித்தான் என்று ஆகிவிட்டது. எக்காரணம் கொண்டும் நான் மீண்டும் என் பிறந்த வீட்டிற்குப் போக மாட்டேன். இது உறுதி! இவனை நம்பி இனிப் பயன் இல்லை! என் கையை நம்பித்தான் நான் பிழைக்க வேண்டும். என் படிப்பு எனக்குக் கை கொடுக்கும். என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.

சுமார் ஏழு மணி வாக்கில் நாகராஜன் வந்தான். நன்றாகக் குடித்திருந்தான் என்பது கிட்ட வரும் போதே தெரிந்தது.

"நீங்க குடிப்பீங்களா?" என்றாள் அதிர்ச்சியுடன்.

"ஆமா! நான் நல்லாக் குடிப்பேன்! உனக்கென்ன வந்தது? உன் காசுலயா குடிச்சேன்? என்னடி மொறக்கிற? இன்னிக்கு நமக்கு முதலிரவு ! சீக்கிரமே குழந்தை வேணும்னு வேண்டிக்க!" என்றான்.

மறு நாள் விடிந்து விடியாமல் இருக்கும் போது வெளியே போய் விட்டான்.

"வீட்டில் ஒரு ஜீவன் இருக்கிறதே! அவள் சாப்பாட்டுக்கு , துணி மணிக்கு என்ன செய்வாள்? என்ற யோசனை கொஞ்சம் கூட இல்லாமல் நான் ராத்திரி தான் வருவேன்" என்று சொல்லி விட்டுப் போனான்.

மீண்டும் அழத் தெம்பும் இல்லை மனமும் இல்லை ராதாவுக்கு. ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்தாள்.

கையில் , காதில் போட்டிருந்த சொற்ப நகைகளை விற்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கினாள். கொஞ்சம் பணத்தில் இரண்டு சேலை , உள்ளாடைகள் என வாங்கிக் கொண்டாள்.

பக்கத்தில் ஒரு தனியார் பள்ளி ஒன்றிருந்தது. அங்கு சென்று தன்னுடைய படிப்பைச் சொல்லி வேலை கேட்டாள். அவள் எம் எஸ் சி கணிதம் பயின்றிருந்ததால் உடனே வேலை கிடைத்தது. சம்பளம் மாதம் இரண்டாயிரம். சனிக்கிழமை கூட பள்ளி வர வேண்டும். என எல்லா நிபந்தனைகளுக்கும் ஒப்புக் கொண்டு வேலையில் சேர்ந்தாள் ராதா. அவளுக்கு வேலை கிடைத்து விட்டது என்று தெரிந்த உடன் வேலை தேடுவதையே விட்டு விட்டான் நாகராஜன்.

எப்போது பார்த்தாலும் மனைவியை திட்டிக் கொண்டிருப்பான். அவன் திட்டம் பாழாகி விட்டது. காசு கிடைக்கவில்லை என்று புலம்புவான். சில சமயம் அடியும் கிடைக்கும். நாட்கள் செல்லச் செல்ல அவன் மூர்க்கமானானே தவிர இவள் பால் இரக்கமோ கருணையோ காட்டவேயில்லை.

எல்லாவற்றையும் மௌனமாக சகிக்கப் பழகிக் கொண்டாள் ராதா. மனம் கடிவாளத்தை மீறி தன்னுடைய கடந்த கால இனிமையான நினைவுகளை அசைபோடும். எப்படியோ வசதியும் வாய்ப்புமாக இருக்க வேண்டியவள் இப்படித் திண்டாடுகிறோமே என்று ஏக்கம் பிறக்கும். அப்போதெல்லாம் மனதைக் கல்லாக்கிக் கொள்வாள். பள்ளிப் பிள்ளைகளின் நோட்டையோ , விடைத்தாளையோ எடுத்து வைத்துக் கொண்டு வேலையில் மூழ்கி விடுவாள்.

ஒவ்வொரு நாளும் நரகமாகக் கழிந்தது அவளுக்கு. இருந்தாலும் பல்லைக்கடித்துக் கொண்டு சமாளித்தாள். இந்நிலையில் தான் அவள் கர்ப்பம் உறுதிப்பட்டது. விஷயம் தெரிந்த உடன் நாகராஜன் ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

"இது பிறந்த பிறகாவது உங்கப்பன் உன்னைச் சேர்த்துக்கறானா பாப்போம்" என்றான்.

ஆனால் ராதா தன் குழந்தையை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தாள். வறண்ட பாலை நிலத்தில் பெய்த மழை போல , நாவில் விழுந்த தேன் துளி போல தன் வாழ்வின் இன்பமே இக்குழந்தை தான் என்பதில் உறுதியாக இருந்தாள். நன்றாகச் சாப்பிட்டு உடலைத் தேற்றிக் கொண்டாள். தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டாள். மொத்தத்தில் குழந்தையின் வரவை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தாள்.

பிரசவ வலி எடுத்து அக்கம் பக்கத்தவர் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சேர்ந்தாள். பிரசவம் ஆகப் போகிறது என்ற நிலையிலும் நாகராஜன் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

புதன் கிழமை மாலை அழகான பெண் குழந்தைக்குத் தாயானாள் ராதா. மூன்று நாட்கள் மருத்துவ மனையில் இருந்தாள். அப்போது கூட அவன் வரவில்லை. தானே ரிக்ஷா வைத்து வந்து வீட்டில் இறங்கினாள்.

பிள்ளைப் பெற்ற உடம்பு களைப்பாக இருந்தது. இருந்தும் அவளால் ஒரு நிமிடம் கூட ஓய்ந்து உட்கார முடியவில்லை. ராதா இல்லாத நேரத்தில் நாகராஜன் வீட்டை அலங்கோலம் செய்து வைத்திருந்தான். அதை சுத்தம் செய்து பால் வாங்கிக் காய்ச்சி குழந்தைக்குக் கொடுத்து , தனக்கு பத்தியமாக உணவு தயாரித்து என்று அவள் வேலை செய்து முடிப்பதற்குள் மயக்கமாக வந்து விட்டது.

இவளது நிலை கண்டு பக்கத்து வீட்டில் இருக்கும் வீட்டு வேலை செய்யும் தேவகி சாப்பாடு செய்து கொடுத்து விடுவதாகவும் அதற்கு உரிய பணத்தைப் பெற்றுக் கொள்வதாகவும் கூறி உணவுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அது ராதாவுக்குப் பேருதவியாக இருந்தது.

நாகராஜனைக் காணவேயில்லை. அதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை அவள். மாதங்கள் ஐந்து ஓடி விட்டன. குழந்தையை தேவகியிடம் விட்டு விட்டு பள்ளி செல்லத் துவங்கினாள் ராதா. வாழ்க்கை சீராக ஓடியது.

திடீரென ஒரு நாள் வந்தான் கணவன்.

"அடடே! இதான் உன் குழந்தையா? பொம்பளைப் புள்ளையா? அட சனியனே ஆம்பிளையாப் பொறந்திருக்காது? உனக்கு சாமர்த்தியம் பத்தாது! அதான் பொம்பளைப் பிள்ளையைத் தூக்கிக்கிட்டு வந்துட்ட" என்றான் கடுமையாக.

மௌனமாக அவனுக்கு தட்டு வைத்துப் பரிமாறினாள் மனைவி.

"ஆம்பிளைப் பிள்ளையா இருந்தா தாத்தா சொத்து பேரனுக்கு வரும்னு சொல்லி கேஸ் போடலாம் இல்ல? அதான் சொன்னேன். சரி சரி! இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல்ல! பிள்ளையைத் தூக்கிட்டுக் கிளம்பு! "

"எங்க?" என்றாள் குழம்பை ஊற்றிக் கொண்டே.

"வேற எங்க உங்க வீட்டுக்குத்தான். உங்கப்பன் காலடியில குழந்தையைப் போடு! இவளை வளக்க எங்களால முடியல்ல! காசே இல்லாம திண்டாடுறோனு சொல்லி அழு. அவரு உன்னை மட்டும் சேர்த்துக்கிட்டாக் கூடப் போதும் . நான் மெதுவா வந்து ஒட்டிக்குவேன். அது வரைக்கும் நீ கொஞ்சம் காசு குடுத்து எனக்கு உதவ மாட்டியா என்ன?" என்றவன் சாப்பிட்டு எழுந்தான்.

"இருக்கறதுலேயே கிழிசல் சேலையாக் கட்டிக்கோ! குழந்தைக்கும் கிழிஞ்ச துணி போடு! இப்படி பவுடர் போட்டு சுத்தமாக் கூட்டிக்கிட்டுப் போகாத! அழுக்கா வெச்சிக்க பிள்ளையை. அப்பத்தான் உன்னைப் பாத்தா பரிதாபம் வரும்" என்றான்.

அதுவரை பேசாமல் பொறுமையாக இருந்தவள் குழந்தையைத் தூளியில் போட்டு தூங்க வைத்து விட்டு வந்தாள். மெதுவான ஆனால் உறுதியான குரலில் பேசினாள்.

"இதப்பாருங்க! நீங்க என்னை எவ்வளவு கட்டாயப் படுத்தினாலும் நான் எங்கப்பா கிட்ட பிச்சை கேட்டுப் போயி நிக்க மாட்டேன். அவருக்கு இருக்கற மன உறுதியும் மான ரோஷமும் எனக்கு இருக்காதா? என் குழந்தையை பிச்சைக் காரியா ஆக்க நான் விட மாட்டேன். நீங்க என்னை அடிச்சிக் கொன்னாலும் சரி அந்த வீட்டு வாசப்படி நான் மிதிக்க மாட்டேன். அவ்வளவு தான்" என்றவள் தூளியை ஆட்ட முற்பட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் நாகராஜன் வாயிலிருந்து வந்த வசவுகள் சொல்லத்தரமல்ல. அத்தனைக் கேவலப்படுத்தினான். ஒரு கட்டத்தில் கையை நீட்டி அடிக்க வரும் போது அவனது கையைப் பிடித்துத் தடுத்தாள்.

"இதப்பாருங்க! என்னை அடிக்க கை ஓங்குனீங்க இனியும் நான் சும்மாயிருக்க மாட்டேன். திருப்பி அடிச்சிடுவேன். அந்த அவமானம் உங்களுக்குத் தேவையா? ஒழுங்கா மரியாதையா இருந்தா புருஷங்கற மொறையில சோறு போடறேன். அதை விட்டுட்டு உன் வீட்டுக்கு போ ! காசு கொண்டு வா! அப்டி இப்படீன்னு ஆரம்பிச்சீங்க நான் சும்மா இருக்க மாட்டேன். போலீஸ்ல புகார் குடுத்து உள்ள தள்ளிடுவேன். அப்புறம் உனக்கு ஆயூசுக்கும் களி தான்." என்றாள் ஆங்காரமாக.

ராதாவை வெறித்துப் பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் குரோதம் கொப்பளிக்க கதவை படீரென மூடி விட்டு வெளியேறினான் அவன். அந்த சத்தத்தில் குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது.
 
Nirmala vandhachu ???
 
அவனுக்கு எதுக்கு சோறு போடுறிங்க ராதா?
அது தான் நம் தமிழ்ப் பெண்கள் செய்யும் தப்பு. தாலி கட்டிட்ட ஒரே காரணத்துக்காக பொறுத்துப் போவாங்க.
 
Top