Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்...அத்தியாயம் 6

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
ஆர் வி இண்டஸ்டிரீஸ் சொந்தக்காரரான சாதாசிவத்தின் ஒரே மகள் ராதா. அவளுக்கு இரு அண்ணன்கள் மட்டுமே. வீட்டின் ஒரே பெண் வாரிசு என்பதாலும் , தாயில்லாப் பெண் என்ற காரணத்தாலும் ராதாவுக்கு ஏகப்பட்ட செல்லம். அவள் கொஞ்சம் கறுப்பு அதோடு பற்களும் சற்று எடுப்பாக இருக்கும். தான் அழகில்லை என்ற குறை அவளுக்கு எப்போதுமே உண்டு.

அண்ணன்களான கார்த்திகேயனும் , செந்தில் நாதனும் அவளை உள்ளங்கையில் வைத்துத்தாங்கினார்கள்.

"அப்பா! தங்கச்சிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பாத்துருக்கேன். நம்ம அளவு அந்தஸ்து இல்லைன்னாலும் நல்ல குடும்பம். அவங்க கெமிக்கல் ஃபேக்டரி வெச்சிருக்காங்க! பையன் எம் பி ஏ படிச்சிருக்கான். என்ன சொல்றீங்க?"

"எனக்கு பையன் படிச்சிருக்கணும் அதை விட முக்கியம் குடும்ப அந்தஸ்து. நமக்குக் கொஞ்சமும் குறைஞ்சவங்களா இருக்கக் கூடாது. சொல்லப் போன இன்னும் ஒரு படி மேல இருந்தா இன்னும் நல்லது"

"என்னப்பா இப்படிச் சொல்றீங்க? நம்ம அளவுக்கு அந்தஸ்து உள்ளவங்க ரொம்பக் கம்மித்தான் தமிழ்நாட்டுல"

"அதுனால என்ன? இருக்கற குடும்பங்களைப் பாரு. என் பொண்ணு வாழப் போற எடத்துல ராணியா இருக்கணும். புரியுதா?" என்று சொல்லி விட்டார்.

அதன் பிறகு ஓரிரண்டு மாப்பிள்ளைகள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் ராதாவைப் பிடிக்கவில்லை. மனம் உடைந்து போனாள் அவள்.

"அப்பா! எனக்குக் கல்யாணமே வேண்டாம்.. நீங்க இனி எனக்கு மாப்பிள்ளை பாக்காதீங்க"

"ஏண்டா கண்ணு?"

"நீங்க அழச்சுக்கிட்டு வர மாப்பிள்ளைங்க எல்லாம் என்னைப் பாத்துட்டு கறுப்பா இருக்கா! பொண்ணு நல்லாயில்லன்னு சொல்லிட்டுப் போறாங்க! எனக்கு ரொம்ப அவமானமா இருக்குப்பா! பிளீஸ் ! புரிஞ்சிக்கங்க" என்று அழுதாள்.

மகன்களைத் தனியே அழைத்தார் சதாசிவம்.

"இதப்பாருங்கடா! நம்ம ராதா மனசு கஷ்டப்பட்டதுன்னா என்னால தாங்க முடியாதுன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். அதனால நான் என் கொள்கையை கொஞ்சம் விட்டுக் குடுக்கலாம்னு இருக்கேன். நம்ம அந்தஸ்துக்குக் கீழ உள்ள பையன்னாலும் பரவாயில்ல! ஆனா நல்லாப் படிச்ச பையனாப் பாருங்க! வேணும்னா அவனை நாம வீட்டோடயே வெச்சிக்கலாம்" என்றார்.

மீண்டும் மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமானது.

இந்த நிலையில் தான் நாகராஜன் இவர்களது ஃபேக்டரியில் வேலைக்குச் சேர்ந்தான். ஆறடி உயரமும் , நல்ல நிறமுமாக அவனைப் பார்த்ததும் ராதாவின் மென்மையான மனது சலனப்பட்டது. அவளுக்குப் பொழுது போவதற்காக எப்போதாவது ஆபீசுக்கு வருபவள் இப்போது தினமும் செல்ல ஆரம்பித்தாள். அவனும் ராதாவைப் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருந்தது.

நாகராஜனை நினைத்துத் தவித்தாள். அவனுடைய அழகுக்கு முன் தான் எம்மாத்திரம் என்ற தாழ்வு மனப்பான்மை அவளை சூழ்ந்து கொண்டது. ஒரு நாள் ஃபேக்டரியில் இருக்கும் மரத்தடியில் பொடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து பறவைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஓசைப்படாமல் வந்து நின்றான் நாகராஜன்.

"என்ன மேடம்? பறவைகளை ரசிக்கறீங்களா?"

அவன் நேரிடையாகப் பேசியதால் வெட்கத்தில் சிவந்தது முகம்.

"ஐயையோ! நான் வந்தது உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் போயிடறேன் மேடம்! அதுக்காக நீங்க கோபப்படாதீங்க! " என்று நகரப் போனவனை அவள் குரல் தடுத்தது.

"இல்லை ! எனக்குக் கோவமில்ல! நீங்க உக்காருங்க ! நான் வேணா போயிடறேன்"

"சரியாப் போச்சு போங்க! நான் உங்க கூடப் பேசணும்னு தான் வந்தேன். நீங்க என்ன போறேங்கறீங்க?"

"நிஜமாவா? என்னைப் பாக்கவா வந்தீங்க? "

"பின்ன? எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்ங்க! அதான் உங்க கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போகலாம்னு நினைச்சேன்"

வானத்தில் பறப்பது போல உணர்ந்தாள் ராதா.

"நிஜமாவா? உங்களுக்கு என்னைப் பிடிக்குமா? உங்களை விரும்ப ஆயிரம் பேர் வருவாங்களே? நல்ல சிவப்பா அழகா .. அவங்க கூடப் பேசினா பிரயோஜனம் உண்டு. எங்கிட்ட என்ன பேசப் போறீங்க?"

"ராதா! நீங்க கொஞ்சம் கறுப்பு அவ்ளோ தானே? அது ஒரு குறையா? உங்க அழகு எனக்குப் பிடிக்குது. அதை விட உங்க மனசு ரொம்ப ரொம்பப் பிடிக்குது. "

"என்ன சொல்றீங்க ?"

"நீங்க பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணாயிருந்தும் இத்தனை எளிமையா இருக்கீங்களே? அது ஒண்ணே போதுமே? இன்னமும் என் மனசு புரியலியா? இல்லை தெரிஞ்சுக்கிட்டே நடிக்கறீங்களா?"

அவன் பேச்சு போதையேற்ற கிறங்கிப் போனாள் அவள்.

"ராஜ்! நிஜமாவா சொல்றீங்க? நீங்க என்னை..?"

"யெஸ்! ராதா ! இப்பவாவது புரிஞ்சிக்கிட்டியே ஐ லவ் யூ! உனக்கு என்னைப் பிடிக்குதா?" என்றான் காதருகில்.

மயங்கிய அவள் அவன் கைகளைப் பிடித்தாள். வானமே வசப்பட்டாற்போலத் தோன்றியது அவளுக்கு. ஒரு அழகான இளைஞன் என்னைக் காதலிக்கிறான். என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டாள்.

அவர்களது காதல் நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.

அன்று யாரோ ஒரு மாப்பிள்ளையை பெண் பார்க்க ஏற்பாடு செய்திருந்தான் அண்ணன் கார்த்திகேயன். இது தான் தன் காதலைச் சொல்ல மிகச் சரியான தருணம் என்று முடிவு செய்து கொண்டாள் ராதா.

"அப்பா! இனிமே யாரையும் பெண் பாக்க வரச் சொல்ல வேண்டாம்ப்பா! "

"ஏம்மா! அவங்க உன் மனசைப் புண் படுத்த மாட்டாங்கம்மா ! நான் பாத்துக்கறேன்"

"அது இல்லப்பா! வந்து.. வந்து... "

"என்ன ராதா? உனக்கு யாரையாவது பிடிச்சிருக்கா? அப்படியிருந்தா சொல்லும்மா? " என்றான் அண்ணன் கார்த்திகேயன்.

"ஆமாம் அண்ணா! நான் ஒருத்தரை மனசார விரும்புறேன். அவரும் என்னைக் காதலிக்கறாரு. ஆனா..ஆனா.."

"என்ன ஆனா..?

"அவரு நம்ம அளவு பணக்காரர் இல்ல! அதான் எனக்குப் பயமா இருக்கு"

"யாரு சொல்லு! நல்ல எடமா இருந்தா நாங்களே முடிச்சி வைக்கிறோம். தைரியமாச் சொல்லு" என்றான் அண்ணன் செந்தில் நாதன்.

"அண்ணா வந்து..நம்ம ஃபேக்டரியில மேனேஜரா இருக்காரே நாகராஜன் அவரைத்தான் நான் விரும்புறேன்"

புயல் கடந்த பூமியாக அந்த இடம் அமைதியாக இருந்தது. அப்பா தான் முதலில் வாய் திறந்தார்.

"உங்களுக்குள்ள எத்தனை நாளாப் பழக்கம்?"

"இப்பத்தான் ஒரு மாசமா"

"ராதாக் கண்ணு ! அவன் நல்லவன் இல்லைம்மா! நீ அவனை மறந்துடு! அவன் நம்ம பணத்தைக் குறி வெச்சி தான் உன்னை விரும்பறான். புரிஞ்சிக்கோடா பிளீஸ்" என்றார் அப்பா மெல்லிய குரலில்.

கேட்டவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்தது ராதாவுக்கு.

"ஏன் இப்படிப் பேசறீங்கன்னு எனக்குத் தெரியும். நான் அழகா இல்லை அவரு அழகா இருக்காரு. அவன் எப்படிடா இந்தக் கறுப்பியை விரும்புவான்னு உங்களுக்கு சந்தேகம் சரிதானா? அவரு விரும்பறது என்னோட மனசைத்தான். என்னோட பணத்தை இல்ல"

"ராதா! அப்பா சொல்றது சரிதாம்மா! அவன் ரொம்ப பணத்தாசை பிடிச்சவன்னு அவன் பேச்சுலருந்தே புரிஞ்சிக்கிட்டேன். அவன் திட்டம் போட்டு தான் உன்னை நெருங்கியிருக்கான். நீ நிறைய படிச்சிருக்கியே தவிர உலக அனுபவம் உனக்கு போதாதும்மா! அப்பா சொல்றதைக் கேளு! அவனை மறந்திடு" என்றான் செந்தில் நாதன்.

"முடியவே முடியாது அண்ணா! நான் இல்லாம அவரு தவிச்சிப் போயிடுவாரு. அந்த அளவு என் மேல பிரியம் வெச்சிருக்காரு":

"அப்டீன்னா நாங்க உன்மேல பிரியம் வைக்கலியாம்மா? இத்தனை வருஷமா வளத்தவங்க நாங்க ! நேத்து வந்தவன் எங்களை விட ஒசத்தியாப் போயிட்டானா?" கேட்டான் கார்த்திகேயன்.

"நீங்க எனக்கு ரத்த சொந்தம். அதனால வேற வழியில்லாம பாசம் காட்டறீங்க! அவரு எனக்குக் கொஞ்சமும் சம்பதமில்லாதவரு. ஆனா என் மேல உசிரையே வெச்சிருக்காரு. அதுக்குப் பேர் தாண்ணே காதல். "

அப்பாவுக்கு முதல் முறையாகக் கோபம் வந்தது.

"ராதா ! என்னது ?அண்ணனுங்க சொல்லிக்கிட்டே இருக்காங்க! நீ எதுத்துப் பேசிக்கிட்டே போறியே? உன் வாழ்க்கை எப்படி அமையணும்னு எனக்குத் தெரியும். நீ பேசாம உள்ள போ! இனி அந்த நாகராஜனைப் பாத்தேன்னா எனக்குக் கடுங்கோபம் வரும். காதலாம் காதல். எல்லாம் வேஷம் ! நான் பாக்கற மாப்பிள்ளையத்தான் நீ கட்டிக்கணும். புரிஞ்சதா? " என்று சொல்லி விட்டு ஃபேக்டரிக்குப் போய் விட்டார்.

கொஞ்ச நேரம் பேசாமல் அமர்ந்திருந்த ராதாவுக்கு ஒரு யோசனை உதித்தது. ஃபேக்டரிக்கு இன்னார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஃபோன் செய்து நாகராஜனை உடனே பூங்காவுக்கு வரச் சொன்னாள். அடுத்த அரைமணியில் அவன் பூங்காவில் இருந்தான். அவனிடம் வீட்டில் நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் சொன்னாள் ராதா. சொல்லி முடித்ததும் அவனைப் பார்த்தாள். கண்களில் நீர் தெரிந்தது.

"உங்க வீட்டார் சொல்றது தான் சரி ராதா! என்னை மாதிரி ஏழைங்க எல்லாம் காதலிக்கக் கூடாது. அப்படியே காதலிச்சாலும் அவங்க தகுதிக்கு ஏத்தா மாதிரி தான் பாக்கணும். என்ன செய்ய? காதல் என்ன நிறம் , பணம் இதைப் பார்த்துட்ட வருது..ஹூம்!"

"நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"என்ன இருந்தாலும் நீ பணக்கார வீட்டுப் பொண்ணு ! ஏதோ பொழுது போக்குக்காக என்னைக் காதலிச்சிருக்கே? நான் தான் அதைத் தப்பா நெனச்சுக்கிட்டு கற்பனையை வளத்துக்கிட்டேன். தப்பு என் பேர்ல தான் ராதா. நீ உங்கப்பா சொல்ற பையனையே கட்டிக்க. என்னால உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது!" என்று சொல்லி நகரப் போனவனின் கைகளை இறுகப் படித்தாள் ராதா.

"ஏங்க ! இப்படிப் பேசுறீங்க? என்னைப் பாத்தா உங்களுக்கு பொழுது போக்குக்காக காதலிச்ச மாதிரியா தெரியுது? நீங்க அப்படித்தான் என்னைப் புரிஞ்சு வெச்சிருக்கீங்களா? ஏதாவது வழி சொல்லுவீங்கன்னு உங்களைத் தேடி வந்தா? நீங்க என்னென்னவோ பேசுறீங்களே?"

"நீ உண்மையிலேயே என்னைக் காதலிக்கறியா? எனக்காக என்ன வேணும்னாலும் செய்வியா? சொல்லு ராதா செய்வியா?"

"கண்டிப்பா செய்வேன். என்ன செய்யணும் சொல்லுங்க?"

"நீ எனக்காக உன்னோட சொத்து சுகம் ஆஸ்தி அந்தஸ்து எல்லாத்தையும் விட்டுட்டு வரத் தயாரா?"

"ராஜ்...நீங்க...?"

"ஆமாம் ராதா! நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிப்போம். மாலையும் கழுத்துமா போயி அவங்க கால்ல விழுவோம். ஏத்துக்கிட்டாங்கன்னா ரொம்ப நல்லது. இல்லைன்னா நீ ஒண்ணும் கவலைப் படாதே! என் படிப்பு இருக்கு. எங்க போனாலும் உன்னைக் காப்பாத்த என்னால முடியும். சொல்லு நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா?"

பதில் பேசாமல் நின்றாள் ராதா. அவளுள் பலப்பல சிந்தனைகள்.

"பாத்தியா தயங்கற? உனக்கு என் மேல நம்பிக்கை இல்லியா? சொல்லு ராதா ! ஏன் யோசிக்கற?"

"எனக்கு சொத்து , பணம் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல ராஜ்! ஆனா என்னை செல்லமா வளத்து ஆளாக்கின அண்ணன்களையும் , அப்பாவையும் விட்டுட்டு வரணுமே அதை நெனச்சாத்தான் என் இதயத்தை அறுக்கறா மாதிரி இருக்கு! எனக்காகத்தான் எங்கப்பா ரெண்டாம் கல்யாணமே பண்ணிக்காம இருந்தாரு."

"கவலைப் படாத ராதா! ஒரு வருஷத்துல ஒரு குழந்தையைப் பெத்துக் குடுத்துட்டோம்னா அவங்க கோவம் எல்லாம் காணாமப் போயிடும். திரும்ப உன்னை ஏத்துக்குவாங்க! இது எல்லா எடத்துலயும் நடக்கறது தான்" என்றான்.

யோசித்தாள் ராதா.

"நாகராஜனைக் கல்யாணம் செய்து கொள்ள அப்பா கண்டிப்பாக அனுமதிக்கப் போவதில்லை. அவனை மறந்து மற்றொருவனுடன் வாழ என்னால் முடியாது. இப்போது கல்யாணம் செய்து கொள்வதால் நாகராஜன் என் பணத்துக்காகத்தான் என்னைக் காதலித்தான் என்று அண்ணனும் , அப்பாவும் நினைத்துக் கொண்டிருப்பது தவறு என்று நிரூபிக்கலாம். ராஜ் சொல்வது போல ஒரு குழந்தை பிறந்த பின் அவர்கள் மனசு மாறினால் நல்லது தானே?" என்று முடிவுக்கு வந்தாள்.

"சரிங்க! நம்ம கல்யாணத்தை எப்ப வெச்சிக்கலாம்?" என்றவளைத் தூக்கி சுற்றப் போனான். அதைத் தடுத்துச் சிரித்தாள் ராதா.

அடுத்த வாரமே புதன் கிழமை நல்ல நாளில் சிவன் கோயிலில் வைத்து ராதாவின் கழுத்தில் தாலி கட்டினான் நாகராஜன். புதுத்தாலியோடு மாலை வாசம் மாறுமுன் அவனை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தாள் ராதா.
 
Nirmala vandhachu ???
 
Nice update sis :love: :love: :love:
காதலோடு தாழ்வு மனப்பாண்மையும் சேர்ந்து ராதா நாகராஜ்ஜை கைபிடிச்சுட்டா. பாவம்
தாழ்வு மனப்பான்மை தான் காதலை விட அதிகம். தன்னையும் ஒருவன் காதலிக்கிறானே என்ற நினைப்பு தான் அவளது இந்த முடிவுக்குக் காரணம்.
 
Nice epi
Yenkirunthu tha kadhal varutho yenakku puriyave illai
நம்ம சம்மொகம் உருவாக்கி வெச்சிருக்குற தவறான பிம்பம் அதனால வருகிற இரக்க உணர்ச்சி அல்லது தாழ்வு மனப்பான்மை. இதைத் தவறா காதல்னு எடுத்துக்றாங்க நிறைய இளைஞர்கள்.
 
Top