Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்....அத்தியாயம் 10.

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
ஊட்டிக்கு வந்து ஐந்து தினங்கள் ஓடி விட்டன. அவர்கள் தங்கியிருந்தது ஒரு அழகான ஓட்டல். அதில் புல்வெளியில் போடப்பட்டிருந்த பென்சில் அமர்ந்து சுற்றிலும் உள்ள இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் அகிலா. ஊசியிலை மரங்கள் அதில் தவழும் மேகங்கள் என எல்லாமே கவிதையாய் இருந்தது. ஆனால் மனதில் தான் முன்னிருந்த உற்சாகம் இல்லை. எதையோ இழந்தது போல தோன்றியது.

அகிலா தான் ஆனந்தின் நினைவில் அப்படி இருந்தாள் என்றால் அம்மா ராதாவும் கூட அப்படித்தான் இருப்பதாகத் தோன்றியது. என்ன காரணத்தினாலோ அப்பா என்று அழைத்து அவருடன் பாசமாக இருக்க முடியவில்லை. ஊட்டியில் பல இடங்களுக்கு அழைத்துப் போனார். ஏரியில் படகு சவாரி செய்யும் போதும் சரி , ஊசியிலைக்காட்டில் மரங்களுக்கு நடுவே நடக்கும் போதும் சரி ஏனோ ஒரு குடும்பமாக வந்திருப்பதாக அவளால் உணர முடியவில்லை.

அம்மா வந்து அருகில் உட்கார்ந்தாள்.

"அகிலா! இங்க ரொம்பக் குளிருது இல்ல?"

"ஆமாம்!"

"ஏன் இப்படி மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கே? "

"என் மூஞ்சியே அப்படித்தான்"

"அகிலா! என்ன ஒரு மாதிரிப் பேசற? உனக்கு என்ன ஆச்சி?"

"ஒண்ணுமில்லம்மா! நீங்க உற்சாகமா இருக்கீங்க இல்ல எனக்கு அது போதும்."

மௌனமானாள் அம்மா. ஏனோ முன்னைப் போல இருவராலும் மனம் விட்டுப் பேச முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத திரை இருவர் நடுவிலும் விழுந்தாற் போலிருந்தது. நாளாக நாளாக சரியாகும் என்று எண்ணிக் கொண்டாள்.

மறு நாள் காலை பரபரப்பாக வந்த அப்பா நாம் இப்போதே ஊருக்குத் திரும்பி விடுவோம் என்று சொல்லி அவசர அவசரமாக காலி செய்து கிளம்பி விட்டார். அவரது முகம் கொஞ்சம் சீரியசாக இருந்தது. என்ன விஷயம் என்று இவர்களும் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை.

வீட்டுக்கு வந்து விட்டார்கள்.

"ராதா! உனக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் சொல்லப் போறேன். மனசை திடப்படுத்திக்கோ" என்றார்.

திக்கென்றது அகிலாவுக்கு. "என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறாரோ தெரியலியே?" என்றவள் அம்மா பக்கத்தில் போய் நின்று கொண்டாள்.

"அம்மாவால எந்த அதிர்ச்சியையும் தாங்க முடியாது. இதை நான் அன்னிக்கே உங்க கிட்ட சொல்லிட்டேன். அப்படி இருக்கும் போது நீங்க ஏன் இப்படி பேசறீங்க?" என்றாள் கோபமாக.

"நீ சொல்றது நியாயம் தாம்மா! ஆனா நான் இந்த விசயத்தை அவகிட்ட சொல்லலைன்னா ரொம்பத் தப்பாப் போயிடுமே? அப்பவும் என் மேல தான் பழி வரும். அதனால் நான் சொல்லிடறேன். நீ உங்கம்மா பக்கத்துலயே இரு"

கேட்கத் தயாரானாள்.

"ராதா! உங்கப்பா சதாசிவம் இறந்து போயிட்டாரும்மா! நேத்து அவரு ரொம்ப சீரியசா இருக்கறதா எனக்கு தகவல் கெடச்சிது. அதான் உங்களை அழைச்சுக்கிட்டு வந்திட்டேன். இன்னிக்குக் காலையில தான் அவரு இறந்து போனாராம்." என்றார்.

அகிலா அம்மாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். ஆனால் அவள் நினைத்தபடி அம்மா ஒன்றும் மயங்கி விழவில்லை. ஆனால் துக்கம் தாங்காமல் அழத் துவங்கினாள்.

"எங்கப்பா .... எங்கப்பா செத்துப் போயிட்டாரா? எப்படி? என்ன செஞ்சது? உங்களுக்கு யாரு சொன்னா?"

"உங்கப்பா ஆபீசுல வேலை செய்யற ஒருத்தரை எனக்குத் தெரியும். அவரு தான் ஃபோன் பண்ணி சொன்னாரு. அவருக்கும் வயசாச்சில்ல? "

"எனக்கு அவரைப் பாக்கணும்! இத்தனை வருஷம் நான் பாக்காமயே இருந்துட்டேன். அவரும் என்னை மன்னிக்கவே இல்லை. செத்தப் பிறகாவது அவரோட ஒடம்பைக் கடைசியா ஒரு தடவை பாத்துடறேனே? என்னைக் கூட்டிக்கிட்டுப் போங்களேன்."

"அம்மா அங்கெல்லாம் நீ போக வேண்டாம். உன்னை அவமானப்படுத்துவாங்க! அதைப் பாத்துட்டு பேசாம இருக்க என்னால முடியாது!" என்றாள் அகிலா.

"உங்க வீட்டுல தான் வெச்சிருக்காங்களாம். பெரிய தொழிலதிபர் இல்லியா? அதனால டி வி சேனல்லருந்தெல்லாம் ஆட்கள் வந்திருப்பாங்க"

"அப்ப நீங்க கண்டிப்ப்பாப் போகக் கூடாது!" என்றாள் அகிலா அழுத்தமாக.

"நீ சும்மாரும்மா! உலகம் தெரியாத பொண்ணு! பாவம் உங்கம்மா பாக்கணும்னு ஆசைப்படறா! நானே அவளைக் கூட்டிக்கிட்டுப் போறதாத்தான் இருந்தேன். கிளம்புங்க ! போயிட்டு வந்திடுவோம்"

"அகிலா எதுக்குங்க? நம்மையே உள்ள விடுவாங்களோ மாட்டாங்களோ?"

"அகிலாவும் பாக்கட்டும் அவங்க தாத்தாவை! அது எப்படி நம்மை உள்ள விட மாட்டேங்கிறாங்கன்னு நான் பாத்துடறேன். உனக்கும் உரிமை இருக்கு அதை அவங்களால மறுக்க முடியாது" என்றவர் இவர்களைக் கிளம்பச் சொல்லி கட்டாயப்படுத்தினார்.

அம்மா பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அங்கு போக அவளது தன்மானம் தடுக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாள் அகிலா. ஆனால் அப்பா விடவில்லை. மூவரும் சிறிய காரில் போய் இறங்கினார்கள்.

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய பிறந்த வீட்டிற்குள் நுழைந்தாள் ராதா. செய்தி இன்னும் வெளியில் தெரியாததாலோ என்னவோ கூட்டம் இல்லை. ஓரிருவர் மட்டுமே இருந்தனர்.

படபடத்த இதயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ராதா, எதிலும் மாற்றமில்ல. ஹாலில் அப்பாவின் உடல் ஒரு கண்ணாடிப் பேழையில் கிடத்தப்பட்டிருந்தது. காலடியில் சில மாலைகள் , வளையங்கள்.

அப்பா முகத்தைப் பார்த்ததும் அழுகை பீறிட்டுக் கொண்டு கிளம்பியது.

"அப்பா ! நான் ராதா வந்திருக்கேன்ப்பா! கடைசி வரைக்கும் என்னைப் பாக்காமலேயே போயிட்டீங்களே! என் நினைவு உங்களுக்கு வரவே இல்லியா? என்னை நீங்க மன்னிக்கவே இல்லியா?" என்று கதறினாள். அகிலா அமைதியாக பக்கத்தில் நின்றிருந்தாள். அம்மா அழுது தன்னுடைய துக்கத்தை ஆற்றிக் கொள்ளட்டும் என்று பேசாமல் பார்த்திருந்தாள்.நாகராஜன் இல்லாத கண்ணீரை துடைப்பது போல பாவனை செய்தார்.

குரல் கேட்டு உள்ளிருந்து இரு சகோதரர்கள் வெளியில் வந்தனர். அம்மா அவர்களை ஏறிட்டாள்.

"செந்தில் அண்ணே! கார்த்தி அண்ணே! என்னைத் தெரியுதா? நான் தான் உங்க தங்கச்சி , ராதா!" என்றாள் குரல் நடுங்க.

"ராதா! நீயா? நீ எப்ப வந்த? எப்படிம்ம்மா இருக்கே? இது யாரு?" என்றார் செந்தில் அகிலாவைக் காட்டி.

"என்னண்ணே இப்படிக் கேட்டுட்ட? இவ என் மக அகிலா! அகிலாண்டம்னு நம்ம அம்மா பேரைத்தான் வெச்சிருக்கேன். "

மூத்தவர் அருகில் வந்து அகிலாவின் தலையைத் தடவிக் கொடுத்தார். அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

"அண்ணே! அப்பாவுக்கு என்ன செஞ்சது?"

"ஒண்ணும் இல்லம்மா! வயசு 82 ஆயிடிச்சில்ல? தூக்கத்துலயே போயிட்டாரு. "

"வந்து.. அண்ணே...வந்து என்னிக்காவது அப்பா என்னைப் பத்திக் கேட்டாரா?"

இரு அண்ணன்களும் தலையை அசைத்து மறுத்தனர்.

"இல்லை ராதா! கடைசி வரை அவரு வைராக்கியமா இருந்துட்டாரு. ஆனா அவருக்கு எப்பவும் உன் நினைவு இருந்தது. எங்களுக்குக் கல்யாணம் நடக்கும் போதும் சரி , குழந்தை பிறந்த போதும் சரி எல்லாரோடயும் சந்தோஷமா பேசுவாரு. ஆனா கொஞ்ச நேரம் கழிச்சி தனியாப் போயி நின்னுக்குவாரு. அவரு கண்ணு கலங்கியிருக்கும். பாவம் அவரும் வேதனைப் படாத நாளில்லை"

குற்ற உணர்வில் குறுகிப் போனாள் ராதா.

"அண்ணே உங்க பிள்ளைங்களைக் கூப்பிடுங்க அண்ணே ! ஒரு தடவை பாத்துட்டுக் கிளம்பறேன்." என்றாள்.

"நாம எதுக்குக் கிளம்பணும்? இந்த வீட்டுல உனக்கும் உரிமை இருக்கு! அதனால நீயும் இங்க இருக்கலாம்" என்றபடி வந்தான் நாக ராஜன்.

சகோதரர்கள் முகம் மாறியது.

"ஓஹோ! அப்ப தகறாரு பண்ணத்தான் நீங்க வந்தீங்களா? நீ திருந்தவே இல்லியா நாகராஜா? இப்ப உனக்கு என்ன வேணும்?"

"இதோ இருக்காளே இவ உங்க தங்கச்சி! உங்க அப்பாவுக்கு முறையாப் பொறந்த மக! இப்ப சட்டத்துல பெண்ணுக்கும் சொத்துல உரிமை உண்டுன்னு இருக்கு. அதனால இவ பங்கைக் கொடுங்க! அதைக் கேக்கத்தான் வந்தோம். "

அகிலாவுக்கு சீ என்று ஆனது. இதற்குத்தான் அழைத்து வந்தாரா? பண வெறி பிடித்தவர்! என்று நினைத்துக் கொண்டாள்.

"ராதா! நீ சொல்லி உன் புருஷன் இப்படிப் பேசறானா? இல்லை தானாப் பேசறானான்னு தெரியல்ல! எப்படி இருந்தாலும் உங்களுக்கு சொல்ல வேண்டியது என் கடமை" என்ற செந்தில் தம்பி பக்கம் திரும்பி "கார்த்தி அந்த காகிதத்தை எடுத்துட்டு வா!" என்றார். கார்த்தி உள்ளே போனார்.

"ராதா! நீ அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட! ஆனா அப்பா அதை மறக்கவே இல்ல! உன் புருஷனால எங்களுக்கு நாளைக்குப் பிரச்சனை வரலாம்னு அப்பாவுக்கு அப்பவே தோணியிருக்கு. அதனால அவரு 20 வருஷத்துக்கு முன்னாடியே உன்னை தன் மகள் இல்லைன்னு எழுதி வெச்சு அதை பதிவும் பண்ணிட்டாரு. அந்த விடுதலைப் பத்திரத்தை தான் கொண்டு வரச் சொல்லியிருக்கேன்" என்கவும் கார்த்தி பத்திரத்தோடு வரவும் சரியாக இருந்தது.

"இந்தா இதைப் படிச்சுப் பாரு" என்று கொடுத்தார்.

அதை ராதா வாங்குமுன் தானே வாங்கி சத்தம் போட்டு படிக்க ஆரம்பித்தான் நாகராஜன். அதன் சாராம்சம் இது தான்.

"எனது மகள் ராதாவை என்னுடைய எல்லா சொத்து , நகை ரொக்கம் , இவற்றிலிருந்து விலக்கி வைக்கிறேன். நான் இறந்த பிறகும் கூட அவளுக்கு எதற்கும் உரிமை இல்லை. சொத்துக்களில் எனது இரு மகன்களுக்கு மட்டுமே உரிமை. அவர்களாக விரும்பி ராதாவுக்குக் கொடுத்தால் அதை நான் தடுக்கவில்லை. இதை என்னுடைய சு நினைவுடனும் , தெளிந்த அறிவுடனும் தான் எழுதுகிறேன். "

சற்று நேரம் அமைதி நிலவியது.

"உயிரோட இருக்கும் போது தான் என்னை மன்னிக்கல்ல! இப்பவாவது என்னை மன்னிங்கப்பா!" என்று கதறி அழுதாள் அம்மா.

"அம்மா! போகலாம் வா! நிறையப் பேரு வர ஆரம்பிச்சிட்டாங்க! எல்லாரும் நம்மையே வேடிக்கை பாக்கறாங்க! சங்கடமா இருக்கு! வாம்மா போவோம்" என்று கையைப் பிடித்தாள். தாயும் கிளம்பினாள்.

"இரு ராதா! நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட! "

"என்ன?"

"உங்கப்பா எழுதியிருந்த விடுதலைப் பத்திரத்துல உங்க அண்ணனுங்க விரும்பி ஏதாவது குடுத்தா அவரு தடுக்கல்லன்னு இருந்தது இல்ல? உங்கப்பாவுக்கு ஊருக்கு ஒதுக்குப் புறமா கிட்டத்தட்ட நாலு ஏக்கர் நிலம் இருந்தது இல்ல? அதைக் கேளேன். அவங்க என்ன தராமயா போயிடப் போறாங்க?" என்றான்.

இத்தனை நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பியது ராதாவுக்கு.

"உங்களுக்கு மான ரோஷமே இல்லியா? எங்கப்பா என் கிட்ட இருந்து மகள்கிற உரிமையையே பறிச்சிட்டாரு. அப்புறம் எது இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? என்னை என்ன பிச்சைக்காரின்னு நெனச்சீங்களா? நான் எங்கண்ணன் கிட்ட கையேந்த மாட்டேன். எனக்கு இந்த சொத்தும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். "

"சார்! அவ ஏதோ துக்கத்துல பேசறா! நீங்க அதைப் பெரிசா எடுத்துக்காதீங்க! நீங்க இவளுக்கு என்ன குடுக்கணும்னு ஆசைப் படறீங்களோ அதைக் குடுங்க! " என்றார் இளித்துக் கொண்டே.

"ஓஹோ! இதுக்குத்தான் வந்தீங்களா? இப்பல்ல புரியுது உங்க திட்டம்? சாவு வீட்டுல கூட பணம் சொத்துன்னு கேக்கறீங்களே நீங்க மனுஷங்க தானா? உங்களையெல்லாம் திருத்தவே முடியாதா? போங்க வெளிய!" என்று கத்தினார் கார்த்தி.

அதற்கு மேல் தாங்க முடியாமல் அம்மா அகிலா இருவரும் கிடு கிடுவென வெளியில் வந்து விட்டார்கள். இனிமேலும் நின்றால் க்ழுத்தைப் பிடித்துத் தள்ளுவார்கள் என உணர்ந்து கொண்ட நாகராஜனும் வேறு வழியின்றி தொடர்ந்து வந்து காரில் ஏறிக் கொள்ள கார் விரைந்தது.
 
Nirmala vandhachu ???
 
நாகராஜன பத்தி தெரியுமே...கார் ஊட்டி பயணம்னு செலவழிச்சானே...பணம் ஏது...இவனோட பணமா.. இல்ல கடன் வாங்கி செலவு பண்ணானா...
அவன் கிட்ட ஏது பணம். எல்லாம் கடன் தான். இவங்க கிட்ட பணம் கேட்டா தப்பா நினைப்பாங்க இல்ல? அதான் இப்படி.
 
சரியான ஈனப்பிறவி
அப்ப இந்த தகவல். தெரிஞ்சுதான்
இவங்கள நாடகமாடி தன்கூட
வச்சுக்கிட்டானா
 
சரியான ஈனப்பிறவி
அப்ப இந்த தகவல். தெரிஞ்சுதான்
இவங்கள நாடகமாடி தன்கூட
வச்சுக்கிட்டானா
ஆமாங்க! அவன் எல்லாத்தையுமே திட்டம் போட்டுத்தான் பண்றான்.
 
Top