Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 19

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 19


அனைத்தும் நன்றாகவே நடந்து முடிந்தது. விகே குரூப் ஆஃப் கம்பெனி முக்கிய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரிகள் என அனைவரும் கூடியிருக்க திருமதி கனலி விஸ்வஜித் புதிய ஜேஎம்டி என ரஞ்ஜித்தால் அறிவிக்கப்பட்டாள்.

திருமதி கனலி விஸ்வஜித் என்ற பெயரால் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட, ரஞ்சித் கனலி விஸ்வஜித் திருமணம் எளிமையாக நடந்து முடிந்துவிட்டது எனவும், விரைவில் வரவேற்பிற்கான அழைப்பு அனைவருக்கும் இருக்கும் என்று பேச்சை முடித்துக் கொண்டார்.

நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனலி ஏதோ மாய உலகில் இருப்பது போல அமர்ந்து இருந்தாள். பூஜா தன்னை தரக்குறைவாக பேசவும் அன்றிருந்த மனநிலையில் கனலி விஸ்வஜித்திடம் தன்னை ஜேஎம்டியாக மாற்றும்படி கூறியிருந்தாள்.

இந்த அளவு விரைவாக தனக்காகவே விஸ்வா அனைத்தையும் செய்திருப்பதை நினைத்து கனலி அவனை பெருமையுடன் பார்த்துக்கொண்டிருக்க, அவள் அருகில் வந்த ரஞ்சித்

"கனலி..." என்று அழைக்க தங்களுக்கான உலகில் சஞ்சரித்து இருந்த கனலி காதுகளை சென்றடையவில்லை.

அவளோ சுத்தி இருக்கும் யாரையும் கருத்தில் கொள்ளாமல் தன் கடமை விஷ்வாவை கவனிப்பது மட்டுமே என்ற ரீதியில் அவனை வைத்த கண் மாற்றாமல் பார்த்துக் கொண்டே நிற்க, ரஞ்சித் உரத்த குரலில் கனலியை மீ்ண்டும் அழைத்தார்.

திடுக்கிட்டு திரும்பிய கனலி அவரை பார்த்ததும் மில்லிமீட்டர் புன்னகை ஒன்றை வழங்கிவிட்டு, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க அவளின் மன நிலையை புரிந்து கொண்ட ரஞ்சித் ஒரு சிரிப்புடன்

"இன்னைக்கு ஈவினிங் நாங்க உன்னுடைய அம்மா வீட்டுக்கு வராேம். அட்லீஸ்ட் நாங்கள் அந்த வரும்போதவது நீ எங்களை கொஞ்சம் கவனித்தால் நல்லாயிருக்கும்." என்று

தான் வந்த விஷயத்தை கூறிவிட்டு நகர்ந்துவிட, அவர் கூறிய செய்தியின் சாராம்சத்தை உணர்ந்த பின்பு நடப்பதை நம்பமுடியாமல் மேலும் வியப்புடன் விஷ்வாவை கவனிக்க ஆரம்பித்தாள்.

விஸ்வா வந்திருக்கும் ஒவ்வொருவரிடமும் தகுந்த முறையில் பேசி அனுப்பி வைத்து கொண்டிருந்தாலும் அவனது கவனமும் கனலி மீதே இருந்தது.

ஒவ்வொரு முறை அவனது பார்வை கனலி மீது பட்டு திரும்பும் போதும் அவன் மனதுக்குள்

"அடியே ஏன்டி இப்படி எல்லார் முன்னாடியும் இப்படி பார்த்து வைக்கிற. தனியா இருக்கும் போது எல்லாம் சண்டை போட வேண்டியது, கிட்ட வந்த முறைத்து பார்த்து 10 அடி தள்ளி நிற்க வைக்க வேண்டியது.

ஆனா இப்படி கூட்டத்தில் இருக்கும் பொழுது பார்வையாலே என்ன முழுங்குற மாதிரி பாக்குறியே இது உனக்கே நல்லா இருக்கா. தனியா என்கிட்ட மாட்டாமலா போய்விடுவ கவனிச்சிக்கிறேன்." என செல்லமாக திட்டிக்கொண்டு வந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

ஒரு வழியாக அனைவரையும் அனுப்பிவிட்டு இருவரும் எதிர்பார்த்த தனிமை கிடைக்க மணி இரண்டு ஆகியிருந்தது. கனலியிடம் ரஞ்சித் கூறியிருந்த விஷயத்தை விஷ்வா விடமும் சொல்லிவிட்டு

"நாங்க ஆறு மணிக்கு கனலி வீட்டில் இருப்போம் அதுக்குள்ள ரெண்டு பேரும் வந்து விட்டால் நல்லது." என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

விஸ்வாவின் ஆடிR8 கார் மிதமான வேகத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சென்று கொண்டிருக்க, இருவரின் மனமும் வேகமாக தங்களது கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.

இருவரும் எதிர் பார்த்து தனிமை கிடைத்த பின்பும் பேச முடியாத மௌனம் ஒன்று இருவரையும் ஆட்கொண்டது. தங்கள் காதல் இன்று கைக்கூடி இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய பின்னரும் கேட்க வேண்டிய விஷயங்களும்,
கூறவேண்டிய விளக்கங்களும்,
பெற துடிக்கும் மன்னிப்பும்,
தர நினைக்கும் அரவணைப்பு என எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் மௌனம் மட்டுமே இருவரின் மொழியாக மொழியானது.

தனது ஆடி காரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு கனலி புறம் திரும்பி அமர்ந்த விஷ்வா கனலி பார்க்க, அவளோ இன்னும் பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்திருக்கவில்லை.

அவள் உள்ளத்தின் சிந்தனைகளை முகம் பிரதிபலிக்க, அவள் சிந்தனை செய்யும் விஷயங்கள் பிடிக்காததை தடைசெய்ய தன் காதல் மனைவியை தன் கைகளுக்குள் கொண்டுவந்தான்.

அவனது அணைப்பு இறுக அதில் சிந்தனையில் இருந்து தன்னை மீட்டுக் கொண்ட கனலி அவனிடமிருந்து விடுபட நினைக்காமல் அவனுள் புதைந்து கொள்ள முற்பட்டாள்.

"விஷ்வா உனக்கு என்கிட்ட எதுவும் கேட்க வேண்டியது இல்லையா?"

இருவரின் மௌனத்தை முதலில் முடிவுக்கு கொண்டுவந்து கனலி பேச, அவள் உதட்டின் மீது தன் விரலை வைத்த விஷ்வா

"கனலி இது நமக்கான நேரம் இதுல பழச பத்தி பேசி நம்மளுடைய மூடை ஸ்பாயில் பண்ணிக்க வேண்டாமே."

"ப்ளீஸ் விஷ்வா இன்னைக்கு சில விஷயங்களை பேசி நாமல் தெளிவு பண்ணிக்கலாம்."

இனிதான் எவ்வளவு முயற்சி செய்தாலும் கனலி சிந்தனையில் மாற்றம் இருக்காது என்பதால்தான் விஷ்வா உடன்பட்டான்

"சரி நீ கேட்க வேண்டியத என்கிட்ட கேளு."

விஸ்வா தன் கைகளை தலைக்கு பின் கட்டி கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொள்ள

"உனக்கு என்கிட்ட கேக்க வேண்டியது எதுவும் இல்லையா."

தன்னை பார்த்து அமர்ந்து இருந்த கனலியை பார்த்து "எனக்கு தெரிய வேண்டிய விஷயங்கள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு அப்புறம் கேட்க வேண்டியது எதுவும் இல்லை."

தான் கமதிபுறவில் இருந்தது விஷ்வாவிற்கு எப்படி தெரிந்திருக்கும் என்று கமலி முன்பே யோசித்து இருந்திருந்தாள். ஏனெனில் அவள் அங்கு இருந்த விஷயம் பற்றி யாரிடமும் கூறியதில்லை. சிறிது நேர யோசனைக்குப் பின்பு

"பத்மா.." என்று ஒற்றை வார்த்தையில் தன் தோழி மூலம் விஸ்வாவிற்கு தெரிந்திருக்குமோ என்று நினைத்து கேட்க, அவனோ மீண்டும் பழையபடி சாய்ந்து அமர்ந்து கொண்டு தன் கண்களை மூடிக்கொண்டு

"உன்னுடைய பிரெண்ட் என்ன வந்து பார்க்கிறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே எனக்கு எல்லாம் தெரியும்."

"எப்படி தெரியும்.." என்று கேட்ட கனலி உதடுகள் அச்சத்தால் நடுங்க ஆரம்பித்தது.

காரணம் தான் இருந்தது ஒன்றும் வெளியில் பிறரிடம் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய இடமல்ல. தன் மனதுக்குள் வருடக்கணக்கில் இருந்த பாரத்தை இறக்கி வைப்பதற்காக மட்டுமே அன்று கோவிலில் வைத்து பத்மாவிடம் நடந்ததை கனலி கூறியிருந்தாள்.

அவளைத் தவிர வேறு யாரிடமும் இதைப்பற்றி கனலி பேசியது. இல்லை அப்படி இருக்க மூன்றாவது நபர் ஒருவர் விஷ்வாவிடம் சென்று தானிருந்த இடத்தை பற்றி கூறி இருக்கின்றார் என்றால் பலருக்கும் அதை பற்றி தெரியும் என்ற எண்ணமே அவள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது.

முடிந்த அளவு தன் நடவடிக்கையில் கவனமாக நடந்து கொண்டும் பலர் தன்னை சிங்கிள் மதர் என்ற காரணத்திற்காகவே கீழாக நடத்துவதை ஏதோ ஒருவிதத்தில் சந்தித்துக்கொண்ட கனலி, தானிருந்த இடம் பற்றிய விஷயம் வெளியில் பரவினால் அதனால் தன்னைப் பார்க்கும் மற்றவரின் பார்வையில் ஏற்படப்போகும் மாற்றத்தை நினைத்து கலங்கினாள்.

அவள் மனதுக்குள் ஏற்பட்ட கலக்கம் கண்மூடி இருந்த விஸ்வா மனதை சென்றடைந்ததாே என்னவோ அவன் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிக்கொண்டு

"நிச்சயமா நீ பயப்படுற மாதிரி இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரிய வராது. தெரிஞ்சவங்க யாரும் வெளியே சொல்ல போறது இல்ல, சொல்லக்கூடிய நபர் இப்போ வெளிய இல்ல."

'இவன் என்ன கூறுகின்றான்.' என்பது போல பார்த்த கனலியிடம்

"உனக்கு சுந்தர் மாமா பத்தி ஓரளவு தெரிஞ்சிருக்கும். என் அம்மாவோட தம்பி தான் சுந்தர். உடம்பு முழுக்க விஷம் மட்டும்தான் அந்த ஆளுக்கு.

நேர்மையா அந்த ஆளுக்கு தொழில் பண்ண தெரியாது, அதனால நிறைய நஷ்டம். தன்னுடைய தம்பி கஷ்டப்பட்டது பொறுக்கமுடியாத எங்களுடைய அம்மாவும் அவருக்கு உதவி பண்ண ஆரம்பிச்சாங்க.

பணத்தாசை பிடிச்ச அவரு எங்களுடைய தாெழில் முழுக்க முழுக்க அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கீழே வரனும்னு நினைச்சாரு. அவருடைய பேச்சைக் கேட்டு நடந்த எங்க அப்பாவுடைய தொழிலையும் பல பிரச்சனைகள் வர ஆரம்பிச்சது.

அதனால என்னுடைய தாத்தா சொத்து எல்லாத்தையும் என்னுடைய பெயரிலும் என்னுடைய அண்ணன் பிரஜித் பெயரிலும் எழுதி வைச்சிட்டார். அதுபோக சில தொழில் மேஜர் ஷேர்ஸ் எல்லாம் என்னுடைய பாட்டி கட்டுப்பாட்டில் தான் இருந்துச்சு.

என் அப்பாவால் இனி எதுவும் காரியம் நடக்காது என்பதை புரிந்து கொண்ட அந்த ஆளு வசதியான வாழ்க்கைக்கு வேற ஒரு திட்டம் போட்டார்.

என்னுடைய அண்ணா பிரஜீத் ஒரு பொண்ண காதலிச்சான்.
ரொம்ப நல்ல பொண்ணு, ஆனா ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்துல பிறந்ததுதான் அவங்களுடைய காதலுக்கு எதிரானதா அமைந்துவிட்டது.

குடும்பம் கவுரவம் மரியாதை அப்படின்னு ஏதேதோ சொல்லி எங்க அப்பா அம்மா மனச கலைத்து அவருடைய மூத்த பொண்ணு சாந்தியை என்னுடைய அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.

இவனும் எங்க அப்பா அம்மாவை எதிர்த்துப் பேச முடியாமல் அடங்கி வாழ ஆரம்பிச்சுட்டான். இது நடந்து மூன்று வருடத்திற்கு அப்புறமாதான் நம்முடைய பிரச்சனை நடந்து முடிந்தது.

அடங்கி வாழ தெரிந்தவனுக்கு தன்னுடைய மனைவியை அடக்க தெரியல. வீட்ல எப்பவும் பிரச்சனை மட்டும்தான். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் தவிச்ச அவனுக்கு தன்னுடைய காதலி மரணம் தாங்கமுடியாத பிரச்சனையா முடிஞ்சிருச்சு.

கொஞ்சநாள் ஏதோ யோசனையில் திரிந்தவன் கடைசியா தற்கொலை பண்ணிக்கிட்டான். அவள் செத்துப் போன கொஞ்ச நாள்லயே சாந்தி புருஷன் சொத்து பொண்டாட்டிக்கு தான் சொந்தம் கோர்ட்டில் கேஸ் போட்டு பெரிய பிரச்சினை பண்ணிட்டாங்க.

ஆனால் அவன் சாகறதுக்கு முன்னாடி தன்னுடைய சொத்து எல்லாம் தன்னுடைய வாரிசுக்கும், அதை பார்த்துக்காெள்ளும் பாெறுப்பு எனக்கும்னு எழுதி வச்சு ரெஜிஸ்டர் பண்ணி இருக்கான்.

சொத்து கிடைக்காத கோபத்தில் அபி மூலமாக என்ன பிரஷர் பண்ண ஆரம்பிச்சாங்க. இருக்கிற பிரச்சினை போதாதுன்னு பிரஜீத் இன்னொரு குழந்தை இருக்கிற விஷயம் எனக்கு தெரியவந்தது.

அதிர்ந்து பார்த்த கனலி கண்களில் தெரிந்த கேள்வியை கண்டுகொண்டு ஆம் என்பது போல் தலையை அசைத்த விஷ்வா

கிருபா என் அண்ணனுடைய காதலிக்கு பிறந்த பொண்ணு. வீட்டுக்கு தெரியாமல் கிருபா அம்மா பைரவியை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருந்திருக்கிறான். சட்டப்படி பைரவி பொண்ணு கிருபா தான் பிரஜித் சொத்து எல்லாத்துக்கும் வாரிசுன்னு நிருபித்ததுக்கு அப்பறமா அவங்களால அபி மூலமாவும் எதுவும் செய்ய முடியல.

இப்போ சாந்தி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்குறா. ஆனால் அந்த சுந்தரருடைய பணத்தாசையால் இரண்டு உயிர் அநியாயமா போயிட்டு.

பணத்தை முக்கியமா நெனச்ச சாந்திக்கு சொந்த மகனை நினைக்க தெரியல. ஈசியா தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டா. அபிக்கு அப்பொழுது ஒரு வயசு கூட ஆகால.

உன் மேல இருந்த கோபம்....
நீ எப்படி என்ன விட்டுட்டு போகலாம் இப்படி பல யோசனையில் துடித்த எனக்கு அபி கிருபா இவங்க ரெண்டு பேரும் ஆறுதலா இருந்தாங்க.

அபி என்ன அப்பாவா ஏத்துக்கிறதில் எந்த பிரச்சனையும் இருக்கால. ஆனால் கிருபா இந்த வீட்டுக்கு வரும்பொழுது அவளுக்கு மூணு வயசு முடிஞ்சு இருந்துச்சு.
அதுவரைக்கும் தாத்தா பாட்டி கூட வளர்ந்தவளுக்கு என்ன அப்பான்னு கூப்பிட முடியல. இன்னைக்கு வரைக்கும் என்ன விஷ்வான்னு பேர் சொல்லிதான் கூப்பிடுவ.

என்னனு தெரியல எனக்கு ஒவ்வொரு தடவையும் கிருபா பெயர் சாெல்லி கூப்பிடும் பாேதும், அவ செய்யிற ஒவ்வொரு விஷயமும் உன்னை மட்டும் தான் எனக்கு ஞாபகப்படுத்து.

ஸ்கூல்ல சேர்க்கும் பொழுது கிருபா அப்படின்னு பேரு கொடுக்காமல் கிருபாலி கொடுத்தேன்.

உன்ன பத்தி ஒவ்வொரு விஷயங்களையும் நான் தெரிஞ்சிக்க ஆரம்பித்தாலும் திரும்பவும் உன்கிட்ட வருவதற்கு மட்டும் என்னுடைய ஈகோ அனுமதிக்கல. இதுல நானே எதிர்பார்க்காத ஒரு விஷயம் நீ என்னுடைய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தது.

உன்னுடைய பர்சனல் டீடெயில்ஸ் பார்த்தவுடனே அது நீதான் எனக்கு தெரிஞ்சிடுச்சு. இருந்தாலும் உடனே பாக்குறதுக்கு எனக்கு தைரியம் இல்லை.

உன்னை நான் அப்போ பாத்து இருந்தா இருந்த கோபத்தில் கண்டிப்பாக உன்னை காயப்படுத்தி இருப்பேன். நீ காயப்பட்டா எனக்கு அதிகமா வலிக்கும் கனல்."

இதை கூறும் பாெழுது விஸ்வா கண்களில் தெரிந்த வலி தன் கஷ்டகள் அனைத்தையும் அவன் ஏற்றுக்காெள்ள நினைப்பது கனலிக்கு புரியவே செய்தது.

"ஒரு மாதம் இருக்கிற எல்லா வேலையையும் முடித்து விட்டு திரும்பவும் சென்னைக்கு வந்தேன். உன்ன கண்டுக்காம அலைய விடனும் அப்படின்னு நான் நினைச்சா, ஒவ்வொரு நாளும் மோகினி மாதிரி அழகா நீ ஆபீஸ்க்கு வரும்போது எல்லாம் எனக்குள்ளே நான் எடுத்துக்கிட்ட சபதம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உடைய ஆரம்பித்தது.

பாேன வாரம் சுந்தர் மாமா இரண்டாவது பொண்ணு மாலினி அவங்க அப்பா இதுவரைக்கும் பண்ணின எல்லாத்தையும் ஆதாரத்தோடு எங்கிட்ட வந்து சொல்லவும் அவரை கொன்று புதைக்க அளவுக்கு எனக்கு வெறி வந்தது. ஆனால் அவரை கொன்று விட்டு ஜெயிலுக்கு போக எனக்கு விருப்பமில்லை.

உன் கூட நூறு வருஷம் சந்தோஷமா வாழணும்னு ஆசையோடு அந்த நாளுக்காக எல்லா ஏற்பாட்டையும் செய்து முடித்து விட்டு தான் உன்கிட்ட வரனும்னு நினைச்சேன்.

அன்னைக்கு பார்ட்டிக்கு தேவதை மாதிரி நீ வந்ததை பார்த்ததுக்கு அப்புறம் இனி நீயா என்கிட்ட வரும் வரைக்கும் என்னால் காத்துக்கிட்டு இருக்க முடியாதுன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு.

அடுத்தநாள் காலையில் உன் கிட்ட பேசிட்டு நான் எடுத்த முடிவை செயல்படுத்தலாம் நினைக்கும் பொழுது ஆபீஸ் வாசலில் பத்மாவை பார்த்தேன்.

அவங்க சொன்னதை எல்லாம் கேட்டபோது நான் எடுத்த முடிவை தாமதப்படுத்தக் கூடாது அப்படின்னு உறுதியோடுதான் உள்ள வந்தேன். அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் உனக்கு தெரியுமே."

அனைத்தையும் கூறி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்த கனலி

"அந்த சுந்தரை என்ன பண்ண விஜி." என்று கேட்க

"கனல் பேபி நான் எவ்வளவு பீலிங்கா உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன், ஒரு முத்தம், ஒரு வெக்கம், etc... etc... அதையெல்லாம் விட்டுட்டு அந்த ஆளைப் பத்தி இப்போ எதுக்கு கேக்குற."

"ப்ளீஸ் பா இந்த கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லு இல்லாட்டி என்னால நிம்மதியா இருக்க முடியாது."

"அந்த ஆள் இப்போ ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பான். கவலப்படாத கனல் இது உன்னை கடத்தினதற்காக இல்ல, எங்களுடைய கம்பெனியில் நிறைய கையாடல் பண்ணதுக்காகவும், கிருபா அம்மாவை கொலை முயற்சி செய்ததாகவும், அவர்களுடைய மரணமும் எனக்கு சந்தேகமா இருக்கு அதை பற்றி விசாரிக்க சொல்லியிருக்கேன்.
எப்படியும் அந்த ஆள் இன்னும் பத்து பதினைந்து வருடத்திற்கு வெளியே வர முடியாது." என்று கூறிவிட்டு

"கனலி உனக்கு தெரிஞ்சுக்க வேண்டியது எல்லாம் தெரிஞ்சிடுச்சு தானே, இதுக்கு அப்புறமா நாம நம்மள பத்தி பேசலாமா."என்று அவள் கன்னங்களை தன் கைகளால் பிடித்துக்கொண்டு கேட்க அவன் கைகளை தட்டிவிட்ட கனலி


"நீ சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி முடிச்சிட்ட, பட் நான் சொல்ல வேண்டியது நிறைய இருக்கு."

"ஓ ப்ளீஸ் கனல் பேபி எனக்கு எதையும் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை."

தேவையில்லாத எதையும் பேசி கனலி தன்னை வருத்திக் கொள்வதை விரும்பாத விஷ்வா தடுக்க நினைக்க அவளோ பிடிவாதமாக

"உனக்கு கேட்க அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனா எனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இருக்கு."

நீ சொல்வதை நான் கேட்க விரும்பவில்லை என்ற பாவனையுடன் சாலையை வெறித்து பார்த்த வண்ணம் விஷ்வா அமர்ந்து இருக்க, அவனின் முகத்தை தன் புறம் திருப்பிய கனலி

"ப்ளீஸ் விஜி இந்த ஒரு தடவை மட்டும் நான் சொல்றதை கேளு. இதுக்கு அப்புறம் நான் இதைப் பத்தி எப்பவும் பேசமாட்டேன்.

அன்னைக்கு நான் திரும்பவும் பெங்களூர் வந்ததுக்கு அப்புறம் நடந்ததை பத்தி உன்கிட்ட சொல்லி இருக்கேன். எனக்கு என்னால என் குடும்பத்துல எந்த பிரச்சினையையும் வருவதில் விருப்பமில்லை.

அதுமட்டுமில்லாமல் எனக்கு ஆபத்து இல்லைனு தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட நான் மும்பையில் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் அனுபவித்த வேதனை எனக்குத்தான் தெரியும். அப்படி இருக்கும் பொழுது அதை வேதனை என்னுடைய தங்கச்சிக்கு வரவிட எனக்கு விருப்பமில்லை.

வேற வழி இல்லாமல் நான் வீரபாண்டிக்கு திரும்பவும் வந்ததுக்கு அப்புறம் வீட்டில ரொம்ப பிரச்சனை. எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கூட முயற்சி பண்ணினாங்க, எதுக்கும் நான் ஒத்துக்கல.

மதுரையில நான் வேலைக்கு கொஞ்ச நாளில் எந்த பிரச்சினையும் இல்லாம தான் போச்சு. என்னுடைய அக்கா கமலி செகண்ட் டெலிவரி வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் அடுத்த பிரச்சனை ஆரம்பமாகிறது.

ஏற்கனவே அவளுடைய ஹஸ்பன்ட் வீட்ல பணம் வாங்கிட்டு வர சொல்லி அவளை ரொம்ப டார்ச்சர் பண்ணிருக்காரு. அவர் கொடுத்த எல்லா கஷ்டத்தையும் வாங்கிகிட்டு வீட்டில எதையும் சொல்லாமல் அமைதியா தான் இருந்தா.

கடைசியில நான் எல்லோருக்கும் சொத்தில் கொடுக்கிறதா சொன்ன பங்குதான் அவளுடைய உயிருக்கு எமனாக முடிந்து விட்டது.

ஒருபக்கம் என்னுடைய அண்ணா சொத்து எல்லாம் அவனுக்கு வேணுமுன்னு பிரஷர் கொடுக்க ஆரம்பித்தான், இன்னொரு பக்கம் கிரிதரன் சாெத்தை வித்ததும் அதில் கமலின் பங்கு வாங்கிட்டு வரச் சொல்லி அவளே கொடுமை படுத்துகிட்டு இருந்தாரு.

ஒரு கட்டத்தில் எதையும் பாெறுத்துக்க முடியாத கமலி சூசைட் பண்ணிக்கிட்ட. என்னால தான் அவள் இறந்திட்டாளாே என்கின்ற நினைப்பே என்னை காெல்லாமல் காெல்ல அரம்பித்தது.

அவ குழந்தைகளை நான் பாத்துக்க ஆரம்பித்தேன். நீ என்ன சூழ்நிலையில் அப்போ இருந்தியோ அதே சூழ்நிலையில் தான் நானும் இருந்தேன்.

தீபா ரூபா ரெண்டு பேரையும் நான் கூட்டிக்கிட்டு வரும்பொழுது அவங்களுக்கு ஆறு மாத குழந்தை, அவங்க என்னை ஈசியா அம்மாவா ஏத்துக்கிட்டாங்க.

ஆனால் இந்திரா....
அவனால் என்ன அம்மாவா உடனே ஏற்றுக் கொள்ள முடியல. ஆனா கொஞ்சம் கொஞ்சமா என்ன புரிஞ்சிக்க ஆரம்பித்தான்.

ரொம்ப பொறுப்பான பையன். சொல்வதையெல்லாம் அப்படியே செய்வான். என்ன கஷ்டப்பட விடவே மாட்டான். அவனுடைய பொறுமை, எனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தது எல்லாம் எனக்கு உன்னைத்தான் ஞாபகப்படுத்தும். ஆனா தீபா ரூபா பிரபா ரெண்டு பேரும் இந்த அளவுக்கு பாெறுமை கிடையாது."

கனலி பிள்ளைகள் பாெறுமை பற்றி பேச ஆரம்பித்ததும் அன்று பீச்சில் நடந்ததை நினைத்து சிரிக்க, கனலி முகத்திலும் புன்னகை தாேன்றியது.

"இனியனுக்கு அமெரிக்காவில் நீ படித்த அதே யூனிவர்சிட்டி படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. உனக்கு நல்லா தெரியும் அவதுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்ன்னு.

பணப் பிரச்சினை என் பிரச்சனையை பின்னுக்கு தள்ளிவிட்டது. ஒரு வழியா இனியன் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் அண்ட் பேங்க் லோன் கிடைத்ததால் அந்த பிரச்சனை அப்பொழுது முடிந்துவிட்டது.

என்னுடைய ஃப்ரெண்ட் பிரகாஷ் விரும்பி வந்து பெண் கேட்டதால் யாழினி கல்யாணம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடந்து முடிந்தது.

இருந்தாலும் என்னுடைய கடமையை முழுசா செஞ்சு முடிக்கணும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் எடுத்துக்கிட்ட பிள்ளைகளுடைய பொறுப்புபை விட முடியாது."

இதை கனலி கூறி முடிக்கும் பொழுது விஷ்வாவின் முகம் பாறை என இருகியது. விஸ்வா முக மாற்றத்தை கவனித்த கனலி தன் பேச்சை நிறுத்திவிட்டு என்ன என்று பார்க்க

"எதற்காக கனலி பேச்சை நிறுத்திட்ட, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி முடி. I didn't expect these words from you. உனக்கு பிரச்சனைன்னு ஒன்னு வரும்பொழுது நீ என்கிட்ட தான் வந்து இருக்கணும். ஆனா நீ அப்படி எதுவும் செய்யல.

இட்ஸ் ஓகே உன்னால இது வரைக்கும் எல்லாத்தையும் சமாளிக்க முடிந்தது. இப்போ நாம் நம்ம வீட்டில உள்ள எல்லாருடைய சம்மதத்துடன் சேர பாேறாேம். இதற்கு அப்புறமும் கூட உனக்கான ரெஸ்பான்சிபிலிட்டியில் எனக்கும் பங்கு இல்லைன்னு பேசுவது சரியில்லை.

அபி கிருபா ரெண்டு பேருடைய ஸ்கூல் சர்டிபிகேட் எல்லாத்துலயும் அம்மா பேரு உன்னுடைய பெயரை தான் நான் கொடுத்து இருக்கேன்."

கனலி ஏதாே கூற வர அதை கண்டுகொள்ளாத விஷ்வா "என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது. எப்பவும் உன் குடும்பம், உனக்காக பிரச்சனையை மட்டுமே யோசிக்கிற நீ, உன்னுடைய குடும்பம் எனக்கும் குடும்பம் தான், உன்னுடைய பிரச்சனை தீர்த்து வைக்க எனக்கும் பங்கு இருக்குன்னு நீ ஏன் நினைக்கல."

"அப்படி இல்ல விஷ்வா....."

"அப்படி இல்லன்னா இப்ப நீ பேசினா வார்த்தைக்கு என்ன அர்த்தம். உனக்கு எப்பவும் நான் முக்கியமா தெரியல. எல்லா விஷயத்துலயும் நான் உனக்கு செகண்டரி ஆப்ஷனா தான் நான் இருக்கிறேன்."

பேசும் விஸ்வாவை தடுக்க வழி தெரியாத கனலி இறுதியில் அவன் சட்டை காலரை பிடித்து இழுக்க தற்பொழுது இருவரின் முகமும் நூலடைவு இடைவெளியில் இருந்தது.

"என் விஷயத்தில நீ என்னைக்குமே ஃபஸ்ட் தான்....
அதுவும் இந்த விஷயத்துல எனக்கு எந்த ஆப்ஷனும் கிடையாது." என்று கூறிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் விஷ்வாவின் இதழ்களை பேச முடியாதபடி தன்னுடைய இதழ்களால் சிறை செய்தாள்.

கனலி என்ன கூற போகின்றாள் என்று கவனித்துக்கொண்டிருந்த விஷ்வா இப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்காததால் இன்பமாக அதிர்ந்தான்.

இனி நிஜங்களுடன்............
 
Last edited:
Top