Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் மூடிக்காதல் நானாவேன்,எனது பார்வையில்.

Advertisement

Selvipandiyan

Active member
Member
சரண்யா ஹேமாவின் கண் மூடிக்காதல் நானாவேன்.
அக்கா தங்கைகளுக்குள் எவ்வளவு பாசம் இருக்கோ அந்த அளவுக்கு பொறாமையும் போட்டியும் இருக்கும்!அது அளவுடன் இருக்கும் வரை பிரச்சினையில்லை,அளவுக்கு மீறினால்?அதுதான் கதை.
ரோஜாவும் பிரஷாந்தியும் சகோதரிகள்.மூத்தவள் என நாட்டாமை செய்யும் பிரஷாந்தி,ரோஜாவை மட்டம் தட்டி தான் தான் வீட்டில் முக்கியம் என காட்டிக்கொள்பவள்.நடித்தே காரியம் சாதித்துக்கொள்பவள்.ரோஜா சிறு வயதில் இருந்தே சுயம்புவாய் வளர்ந்து தானாகவே தன்னை செதுக்கிகொள்கிறாள்.மூன்று தோழிகளுடன் மகிழ்ச்சியாக அவள் போடும் ஆட்டங்களும் குறும்புகளும் புன்னகையுடன் படிக்க வைக்கிறது!விதுரனை சந்தித்ததில் இருந்து அவனை மூஞ்சியில் தொப்பை வைத்த அங்கிள் என அழைப்பதில் இருந்து,எல் இ டி ,ராஜமாதா என அழைப்பது வரை ஹா ஹா!
அவனுக்கும் அவள் லிட்டில்ட்டெவில்,எல் டி தான்!அவள் கல்யாணத்திலும் தலையிடும் பிரஷாந்தி,கல்யாணக்குளறுபடியில் தற்செயலாக விதுரன் வர,அவனின் திடீர் முடிவில் ரோஜாவை மணம் செய்கிறான்.அதன் பின்னான திருப்பங்கள்,பிரஷாந்தி விதுரனின் முன் பகை,ரோஜா சிறு வயதில் அனுபவித்த கஷ்டங்கள் என கதை ஜெட் வேகம்தான்!
கதை முழுக்க ரோஜாவின் குறும்புகளும் அட்டகாசங்களும் நம்மை ரசிக்க வைக்குது.கனவில் தோழியின் மூக்கை கடிப்பதில் இருந்து போனை தூரத்தில் வச்சு பேசுவது,அங்கிள் அங்கிள் என விதுரனை அழைப்பது,கயல்விழியிடம் மல்லுக்கு நிற்பது என பட்டாம்பூச்சிதான்!இருளுக்கு பயப்படுவதும் நடுங்குவதும்,விதுரன் பதிலுக்கு பிரஷாந்தியை வெறுப்பேத்துவதும் ,விதுரனின் பதில் நடவடிக்கைகள் அட்டகாசம்!ரோஜாவின் விதுரன் என சொல்வது அழகு!விஸ்கி என்னும் பெயர் எதுக்குன்னு தெரியவே இல்லியே?நான் மிஸ் பண்ணிட்டேனா?அங்கிள் என்னும் அழைப்பில் அப்படி ஒரு காதல் தெரியுது!பேபியும் அங்கிள்ன்னு சொல்வது கவிதை!
 
பிரஷாந்தியில் இருக்கும் ஷா-வை எடுத்து விட்டு பிராந்தி, விஸ்கி-ன்னு பெயர் இருக்குமோ?
 
Top