Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-9

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member

அத்தியாயம் -9

ஒருவழியாக அன்றைய நலுங்கு ஃப்ங்ஷனில் தன்னுடைய கையை யாருக்கும் காட்டாமல் சாமர்த்தியமாக மறைத்தாயிற்று. இன்னும் ஒருநாளை எப்படியேனும் கடத்தி விட்டால் இந்த இக்கட்டிலிருந்து தப்பித்துவிடலாம் என்று எண்ணி அடுத்த நாளைப் பற்றி சிந்திக்கலானாள் சங்கமித்ரா.

விடிந்தால் திருமணம்.

சற்று முன்னர் தான் சந்தியாவின் அறையிலிருந்து அழுத கண்களோடு விடைப்பெற்று வந்து படுக்கையில் விழுந்தாள். தோழிகள் இருவரும் சின்ன வயது கதைகளில் தொடங்கி கடைசியாக சைட் அடித்த ஹரிஷ் கல்யான் வரை அலட்டிக்கொண்டு இருந்தார்கள். இதுவரை அவளுக்கென்றே இருந்த சந்தியா இனி இன்னொருவரின் சொந்தமாகப் போகிறாள். தோழிகள் இருவரும் அதை உணர்ந்து அழுது கொஞ்சம் கண்களை சுத்தப்படுத்திக் கொண்டனர்.

" உங்க ரெண்டு பேருக்கும் இதே வேலையா போச்சு.. அழாதிங்க.. அப்புறம் காலையில முகம் டல்லாவா இருக்கும்.." என்று வேடிக்கையாக சொல்லி விட்டுச் சென்ற கௌதமியும் கண்களை கசக்கிக்கொண்டு தான் நகர்ந்திருந்தார்.

" ஆன்ட்டி சொல்றது கரெக்ட். அழுகாத சந்தியா.. அப்புறம் முகம் ஃப்ரெஷ்ஷா இருக்காது... " என்று சொல்லிவிட்டு அவனை அணைத்து ஒரு அணைப்பை கொடுத்துவிட்டே வெளியேறியிருந்தாள் நாயகி. இரண்டு நாளும் கல்யாண வீட்டில் ஓடியாடி வேலை செய்தது இவளாகத்தான் இருக்கும். கௌதமிக்கு அவள் இருந்தது இலகுவாக இருந்தது.

' அதுவா.. மித்ராவை கேளுங்க. மித்ரா அந்த ஸ்வீட்ஸ் எல்லாம் பேக் பண்ணினது சரியானு பாரும்மா.. மித்ரா அந்த அம்மாவுக்கு தலைவலி மாத்திரை எடுத்து கொடும்மா.. மித்ரா! சந்தியா சாப்பிட்டாளானு பாரு.. மித்ரா அந்த கார்ல டெக்கரேஷன் பிடிக்கலனா மாற்ற சொல்லிடு.. மித்ரா ரெண்டு வாய் சாப்பிட்டு வேலையை செய்.. மித்ரா! மேக் அப் லேடிக்கு எல்லா வசதியும் செஞ்சி கொடுத்துடு. மித்ரா.. மித்ரா..' என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு இருந்ததில் மித்ரா அவர்கள் வீட்டில் ஒருத்தியாகவே மாறிப்போனாள். அசதியில் உறக்கம் அவளது விழிகளை தழுவியது. அவளை அடுத்த நாள் சந்திக்கவென்றே காத்திருந்த நவிலனுக்கு உறக்கமே வரவில்லை. அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.

' மித்ராகிட்டு லவ்வை சொன்னா என்ன..? வேணாம் நவிலா..! அடி வாங்க ஆசையா உனக்கு? அப்புறம் எப்படி அவகிட்ட நெருங்குறது.. நெருப்பு மாதிரி இருக்காளே.. ' யோசித்தவாறு படுக்கையில் விழுந்தவன் அவள் நினைவுகளோடே தூங்கிப் போனான்.

சூரியன் உதித்தது.

' வசந்த மஹால்' திருமண மண்டபத்தின் கார் தரிப்பிடம் உயர்ரக வாகனங்களால் நிரம்பியிருந்ததிலிருந்தே விஜயகாந்தின் செல்வாக்கு நமக்கு தெரிந்திருக்க வேண்டும். வாசலில் பன்னீர் தெளித்த தாவணிப்பெண்கள் அதிக ஒப்பனையில் இருக்க அழகுநிலையத்தை நாடியிருக்க வேண்டும். நாற்காலிகளை தேய்த்துக்கொண்டு வம்பு கதைகளைப் பேசிக்கொண்டு இருந்த யாவருக்கும் வீட்டில் எக்கச்சக்க ஸ்ட்ரெஸ் போல. அதை மறக்க இப்படியாய் பூஸ்ட் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள். நந்தவனததையே இறக்கியிருந்த விஜயகாந்த் அந்த திருமண மண்டபத்தை சொர்க்கபுரியாக மாற்றியிருந்தார் என்றால் அதில் மாற்றுக்கருத்து இல்லை.

மணப்பெண்ணுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்கையில் அவளை எப்படியாவது பார்த்துவிட மாட்டோமா என்று கண்களை அலையவிட்ட மதிவாணனுக்கு நவிலன் உதவினான். ஃபோட்டோவில் சந்தியாவைப் பார்த்து அசடு வழிந்து கொண்டான் மதிவாணன். அதை துடைத்தெடுத்தார்கள் அவனது நண்பர்கள். பார்ட்டியில் நடந்த அசம்பாவிதத்தை பின்னர் அறிந்த மதிவாணன் மித்ராவிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். மித்ரா விருப்பப்பட்ட படி அந்த சம்பவம் சந்தியாவிடம் இருந்து மறைக்கப்பட்டது.

நவிலனது கண்களோ அவளைத் தேடின. தேடிச்சென்று நிலைத்தது ஒரு சிலையிடம். அது ஒரு தங்கச்சிலை.

அவள் சந்தன நிற சேலையில் அழகு பதுமையாக ஜொலித்துக்கொண்டிருந்தாள். மிதமான ஒப்பனையில் அவள் முகம் புத்தம் புது பூவாய் மலர்ந்திருக்க, கழுத்தை ஒட்டி அவள் அணிந்திருந்த அட்டியலும், காதுகளில் கணமாய் தொங்கிய ஜிமிக்கிகளும், கைநிறைய கலகலத்த கைவளையல்களும் அவள் நடைக்கு சங்கீதமாய் ஒலிக்க, இடையை தழுவிய மெல்லிய ஒட்டியாணம் நீ அவள் இடையை பார்க்காதே என எச்சரிக்க, கணுக்காலை உரசிய கால் கொலுசு அவள் சிவந்த பாதங்களை திரும்பத் திரும்ப பார்க்க வைத்தது.

நவிலன் தன்னை மறந்து அவளை கண்கொட்டாமல் பார்த்து வைத்தான்.

'யார்ரீ நீ.. இத்தனை நாளா எங்கிருந்த..? இவ்ளோ அழகா நீ.. இத்தனையும் எனக்கு சொந்தமாகப் போகிறதா?? ' அவளை தன் மனைவியாக கற்பனை செய்து, அவனோடு அவள் கரம் கோர்த்து ஒன்றாக இருப்பதாக நினைத்துப்பார்த்து தனியே சிரித்துக்கொண்டான்.

சந்தியாவின் அறைக்குள் அவளது தோழிகள் அவளை கிண்டல் செய்து ஒருவழி செய்துக்கொண்டிருந்தனர். ஐராவதமும் பாமாவும் திருமணத்தில் கலந்து கொண்டாலும் அவர்களை தவிர்த்து, வீட்டு கவலைகள் அனைத்தையும் மறந்தவளாய் நிம்மதியாய் அவர்களோடு இணைந்துக்கொண்டாள் சங்கமித்ரா.

அங்கு மகளுக்கு பூட்டி அழகு பார்க்க வைத்திருந்த தங்க நகைகளோடு வந்த கௌதமி மகளை கல்யாண கோலத்தில் பார்த்து பூரித்து திருஷ்டி கழித்து நெற்றியில் முத்தமிட்டார்.

"என்ன ஆன்ட்டி! எங்களுக்கெல்லாம் முத்தம் இல்லையா.." என்று மித்ரா கௌதமியை சீண்டினாள்.

"ஏன் இல்லாம, நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.. அப்ப உனக்கும் தாரேன்..." என்றதும் மித்ராவின் முகம் கொஞ்சமாய் சுருங்கியது. அதை கவனித்த கௌதமி அவளிடம் பிறகு அதைப்பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.

சங்கமித்ராவோ ஏதோ வசம்பை உண்டவள் போல முகத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்து நகர முற்பட்டாள்.

"ஹலோ! ஒரே பிசியா இருக்கிங்க போல..." என்று பின்புறமிருந்து வந்த குரலைக் கேட்ட மித்ராவுக்கு கண்கள் சிரித்தன. நொடிபபொழுதில் உற்சாகமானாள்.

" ம்.. பிஸி தான்.. நவிலா நீ எங்க இங்க....?" என்று கௌதமி கேட்க, " அதுவா.. அம்மா.. தான் உங்களை ஸ்டேஜூக்கு வர சொன்னாங்க.." என்று அடித்துவிட்டான். கௌதமி நகர்ந்துவிட தன் தாயார் தன்னை காப்பாற்றுவார் என்று அவன் நம்பினான். அவனது நம்பிக்கை வீண் போகவில்லை.

" கூப்பிட்டிங்களா அக்கா.. நவிலன் சொன்னான்.. சந்தியாவோட ரூம்ல இருந்தேன்.."

நொடியில் மகன் ஏதோ காரியத்தில் இறங்கிவிட்டான் என்று ஊகித்த ரோகிணி " ஆமா.. ஐயர் கூப்பிடுவார்.. முகூர்த்த நேரம் நெருங்குதுல்ல.. அங்க இங்க போகாம இங்கேயே நில்லு கௌதமி.." என்று பொறுப்பாய் பேசி வைத்தார்.

இங்கோ நவிலன் வேஷ்டி சட்டையில் அட்டகாசமாய் சிரித்துக்கொண்டிருந்தான். அவனது சந்தன நிற சேர்ட் அவளை ஒரு நொடி சிந்திக்க வைத்தது. உண்மையில் அவன் திட்டமிட்டு எதையும் செய்திருக்கவில்லை. இது சத்தியமாய் எதேச்சையாக நடந்தது என்று வாசகர்கள் நம்ப வேண்டும்.

' இவர் சிரிக்கும் போது தான் எத்தனை அழகு..' என்று தன்னை மறந்து அவனைப் பற்றி நினைத்து, அவள் முகத்துக்கு நேரே அவன் சொடக்கு போடவும் நிதானத்துக்கு வந்தாள்.

"ஹா.. ஹாய்..." திக்கித்தினறியவளுக்கு கையில் எழுதியிருந்த அவன் பெயர் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.

"என்ன மித்ரா! அடிக்கடி ஏதோ ஒரு உலகத்துக்கு போயிடுறிங்க...?"

"இல்ல... ஒன்னுமில்ல..." என்று எச்சில் விழுங்கினாள். ' உன் சிரிப்பை ரசித்தேன் கண்ணா..!' என்று சொல்லவா முடியும்.

"நிஜமா ஒன்னுமில்லையா...." என்று கண்களில் குறும்பு தூவ கேட்ட நவிலன் அத்தனை அட்டகாசமாக இருந்தான்.

இல்லையென்று மறுப்பாக தலையசைத்தாள். ஆனால் அவள் கண்களில் எதுவோ ஒன்று ஓடியது.

"ம்... ஏதோ இருக்கு.. சொல்ல மாட்டேன்றிங்க.." என்றபோது அந்த குரல் கேட்டது.

" ஹலோ அண்ணா.. நாங்களும் இங்க இருக்கோம்.." சந்தியா தன்னுடைய தலையை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டே கேட்டாள்.

அதற்கு அவன் சில 'ஹி ஹி' க்களை உதிர்த்து வைத்தான். " ஹேய் கல்யாண பொண்ணு.." அவன் தங்கையோடு பேசிக்கொண்டே மித்ராவைப் பார்க்க அவளோ அருகில் இருந்த தட்டுகளை சீர்திருத்துவது போல பாவ்லா காட்டிக்கொண்டு இருந்தாள்.

திடீரென அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்து அங்கிருந்து நழுவினால் போதும் என்ற நினைப்பு வர ஓசையின்றி வெளியேறினாள். அவளை கண்களாலேயே தொடர்ந்தவன் இப்போது நிஜமாகவே தொடர்ந்து வந்து அவளைப் பிடித்தான்.

" மித்ரா..!"

பிரேக் அடித்தவள் போல நின்றாள்.

" என்னாச்சு.. ஒரு மாதிரி ஆகிட்டிங்க..?"

" அதெல்லாம் எதுவும் இல்ல.." தரையில் பார்வையை மிதக்க விட்டாள்.

"சரி போகட்டும். நீங்க பண்ணி தந்த விளம்பரம் நல்லா இருக்கதா எல்லாரும் சொல்லியிருக்காங்க. தேங்க் யூ சோ மச்." பேச எதுவுமில்லாமல் அதற்கு தாவினான்.

"இதுக்கு எதுக்கு தேங்கஸ் எல்லாம். இது எங்க மொத்த டீமோட வர்க்... சோ... இட்ஸ் ஓகே.."

"மொத்த டீமுக்கும் என்னால தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. ஆனா..." என்று இழுத்தான்.

அவள் கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.

"நீங்க சரினா.. சின்னதா ஒரு ட்ரீட் தரலாம்னு யோசிக்கிறேன்...." என்று அவள் கண்களை கூர்ந்துப் பார்த்தான்.

வழக்கமாக இப்படியான அழைப்புகளை தவிர்க்கும் மித்ரா, ஏனோ அவனை தவிர்க்க முடியாமல் ஓரிரு நொடிகளில் சம்மதித்தாள். அந்த நேரம் அவளது ஜிமிக்கிகள் அவளது கழுத்தோடு உரசி ஒரு நில அதிர்வை உண்டு பண்ணின.

"அப்பாட்டா.. எங்க முடியாதுனு சொல்லிடுவிங்களோனு பயந்துக்கிட்டே இருந்தேன்." உண்மையை போட்டுடைத்தான்.

"ஏன்.." என்று கேட்ட அவள் கன்னங்களில் சிவப்பு கூடியிருந்தது.

"அது அப்படித்தான். நான் உங்களுக்கு எங்க டீரீட்னு பிறகு சொல்றேன். ஓகே.." என்று சொல்லிவிட்டு அவசரமாய் யாரையோ பார்த்து செல்லத் துவங்கினான்.

போகும் போது ஒருதரம் விழிகளை அவள் மீது பதித்தான். அவள் சிரித்துக்கொண்டே செல்வதை கண்ட போது அவனுக்கு மின்னலடித்துவிட்டு சென்றது போல இருந்தது.

அன்றைய நல்ல நேரத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மதிவாணன் சந்தியாவின் கரம் பற்றினான்.

திருமணம் இனிதே நடந்தது. மதிவதணன் சந்தியாவின் கழுத்தில் மங்கலநாணை சூட்டும் போது நவிலனை நிமிர்ந்து பார்த்த மித்ராவின் விழிகள், அவனுடைய விழிகளும் தன்மீதே பதிந்திருப்பதை கண்டதும், விதிர்விதிர்க்க அவசரமாய் பார்வையை திருப்பிக்கொண்டாள். அதற்குப் பிறகு அவன் இருக்கும் பக்கமே தலைகாட்டாமல் சுற்றிக்கொண்டிருந்தாள். அது வெட்கம் என்று அவளுக்கே தெரிந்திருக்கவில்லை.

அதற்குள் நவிலனோ தன் தாய் ரோகணியிடம் மித்ராவைக் காட்டி அவள் தன் தோழி என்று சொல்லிவிட்டிருந்தான். அந்த தோழிக்கு அர்த்தம் புரிந்து ரோகிணியும் " ம்.. தோழி.. " என்று மகனது முதுகில் லேசாய் தட்டினார். ஆனால் மித்ராவுக்கு மனசுக்கு என்னவோ இடித்தது. நவிலன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் அறிமுகம் செய்து வைப்பான் என எதிர்ப்பார்த்து அவள் ஏமார்ந்தது என்னவோ உண்மை.

மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றும், மறுவீடு சென்றும், கோவிலுக்கு சென்று வந்தும் திருமண சடங்குகள் யாவும் ஒருவழியாக முடிந்து மித்ரா சந்தியாவுக்கு விடை கொடுக்கையில் வெகுவாக கலங்கினாள். ஆனால் அவளுக்கு கௌதமியை தேற்றும் பொறுப்பு இருந்ததால் தைரியமாக இருந்தாள். அவரை தேற்றினாள்.

உண்மையில் மித்ராவுக்கு மனசுக்குள் ஏதோ ஒரு சுகமான உணர்வு வந்து அழுத்தியது. அது இந்த திருமண வைப்ரேஷனா? அல்லது நவிலனது அருகாமையா என்று புரியவேயில்லை.

' ஹேய் மித்ரா..! என்ன புதுசா யோசிக்கிற..? அழகா ஒருத்தர் இருந்தாரு.. லைட்டா சைட் அடிச்சோம்.. அவ்வளவு தான்.. மற்றபடி எதுவும் இல்லை.. அவர் யாரோ நான் யாரோ..' என்று மண்டைக்கு சொன்னாள்.

' ஓ.. அவர் யாரோ நீங்க யாரோ..? அதான் அப்படி முழுங்குற மாதிரி பார்த்திங்களோ..? ட்ரீட் தாறேனு சொன்னதும் பல்லை இளிச்சிக்கிட்டு ஓகே சொன்னிங்களோ..?' என்று அவளது இன்சைட் மித்ரா கேட்ட கேள்விகளை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் தன் துணிமணிகளை எடுத்து வைத்துவிட்டு கௌதமியை கட்டியணைத்து விடை கொடுத்துவிட்டு டாக்ஸி பிடித்தாள்.

வீடு திரும்ப வேண்டும். மீண்டும் ஐராவதத்தை எதிர்கொள்ள அவளது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அதுவும் அவள் இப்போது இருக்கும் இந்த சுகமான நினைவுகளில் இருந்து திடீரென இறுக்கமான மனநிலைக்கு செல்ல விரும்பவில்லை. அதனால் அத்தை மங்களாதேவியின் பங்களா நோக்கி திரும்பினாள்.

உடனே நிஜமாலும் அது பங்களா என்று கற்பனை கோட்டை கட்ட தொடங்கிவிடாதீர்கள். அந்த வீட்டில் ஒரு ஹால், இரண்டு படுக்கையறைகள், சமைக்க ஏதுவாய் காற்றோட்டமாய் ஒரு சமையலறை, அதற்குள்ளேயே அடங்கிய டைனிங் டேபிள், ஒரு குளியலறை. முன்புறம் சிறிய பூந்தோட்டம். பின்பிறத்தில் ஒரு காய்கறி தோட்டம். மங்களா நீண்ட காலமாக அந்த வீட்டில் தான் வசிக்கிறார். மித்ராவுக்கு மிகவும் பிடித்த வீடு அது. அந்த சின்ன வீட்டில் அதிக சந்தோஷம் இருப்பதாக அவள் நம்பினாள். அதைவிட மங்களாவின் தாய்மையை அவள் ரசித்தாள்.

பாமாவும் அன்பான தாய் என்றாலும் பாமாவுக்கு மகளை இழுத்து மடியில் போட்டு கொஞ்சத் தெரியாது. எப்போதாவது ஒருதரம் சோறு ஊட்டிவிட தெரியாது. மழையில் நனைந்த தலையை திட்டிக்கொண்டே துவட்டி விட தெரியாது. அவளென்ன சின்னக்குழந்தையா சோறு ஊட்டி மடியில் தூங்க வைக்க என்று நீங்கள் கேட்டால் நீங்கள் வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கக் தெரியாதவர்கள் என்று முத்திரை குத்தலாம்.

வாசலில் வந்து நின்ற டாக்ஸி சத்தத்தை ஊகித்து கதவைத் திறந்து வெளியே வந்த மங்களா அந்த சிறிய தோட்டத்தை கடந்து வந்து கேட்டில் தொங்கிய சிறிய பூட்டுக்கு விடுதலை அளித்துவிட்டு " வாடீ ராசாத்தி.. இங்க தான் வருவனு தெரியும்.."

" அப்ப நான் வந்தது உங்களுக்கு பிடிக்கலை.. அதானே.. சரி நான் திரும்பி போயிடுறேன்.." என்று பொய்யாய் திரும்பிய மித்ராவைப் பார்த்து சிரித்தார் மங்களா.

" நடிச்சது போதும். உள்ள வா.. " என்று அவளது சூட்கேஸ்ஸை வாங்கிக்கொண்டு போய் எக்ஸ்ட்ராவாக இருந்த அறையில் வைத்தார். அந்த அறை அவளுக்கென்று புத்தம் புது படுக்கை விரிப்புகளுடன் தயாராக இருந்தது.

" ம்.. நாட் பேட்.." என்று கட்டிலில் தொப்பென விழுந்தாள்.

" கல்யாணம் எப்படி இருந்திச்சுடீ..?" அருகில் அமர்ந்தார் மங்களா.

" ம்.. ரொம்ப நல்லா இருந்திச்சு.. அத்தே.. ரொம்ப நாட்களுக்கு பிறகு சந்தோஷமா இருந்த மாதிரி இருக்கு.." என்று அவர் மடியில் குழந்தை போல படுத்துக்கொண்டாள்.

" ம்.. உன் ஃப்ரெண்டு கல்யாணத்துக்கே இப்படி சந்தோஷப்படுறனா உன் கல்யாணத்தப்போ உன் மனசுக்கு பிடிச்சவனை கைபிடிக்கையில உலகமே உன் காலடியில கிடக்குற மாதிரி இருக்கும்.." என்று அவர் சொன்ன போது மித்ரா மடியில் இருந்தவாறே அவரை உண்மையில் முறைத்தாள்.

" சரி மகளே.. நான் ஒன்னும் சொல்லல.. "

" அந்த பயம் இருக்கனும்.."

" பயமா.. உனக்கா? அடிப்போடி.. நீதான் பயப்படனும். என்கிட்ட கோச்சிக்கிட்டா நீ எங்க அண்ணா வீட்டுக்குதான் போகனும்.. ஞாபகமிருக்கட்டும்.." என்று சொன்ன அத்தையை அவள் பொய்யாய் முறைத்தாள்.

" என்ன செய்ய.. என் விதி அப்படி.. அத்தை பசிக்குது.. சாப்பிடுவோமா..?"

" ம்.. சாப்பிடலாம்..வா.." என்று அவளது தலையை ஆதரவாய் தடவிக்கொடுத்த மங்களாவிற்கு உண்மையில் அவளை நினைத்து கவலையாக இருந்தது. இவளுக்கும் இது போல் கல்யாணம் ஆக வேண்டும். அதற்கு இவள் இந்த முரண்டு பிடிக்கும் குணத்தை எப்போது விடுவாளோ என்று கவலைப்பட்டார்.

அத்தையின் சமையலை 'அடடா.. அமிர்தம்..' என ருசித்து சாப்பிட்டு விரல்களை நக்கிவிட்டு அவருக்கு கிச்சனில் உதவி முடித்துவிட்டு படுக்கையில் விழுந்தவளுக்கு ஏனோ இறக்கை கட்டிப் பறப்பது போல இருந்தது. அது எதனால் ஏனென்று தெரியாமலே இருந்தவளுக்கு அவளது உள்ளங்கை விடை சொல்லியது. நல்லவேளையாக யாரும் பார்க்காமல் அவள் மறைத்த நவிலனது பெயர் அவளை பார்த்து கண் சிமிட்டியது. யாரும் பார்க்கவில்லை என நினைத்து அவள் உறங்கிப்போனாள். ஆனால் அவளது சிவந்த கைகளை எட்டி எட்டிப் பார்க்க முயற்சித்து அவள் அசந்த நேரத்தில் தன்னுடைய பெயரை அவள் கைகளில் பார்த்து வியந்து போன நவிலன் கவிதைகள் வரைய ஆரம்பித்தான்.

நீ தெரிந்தோ தெரியாமலோ
மருதாணியில்
என் பெயர் வரைகிறாய்
நான் மனசெல்லாம்
உன் பெயர் வரைகிறேன்..!

ஆட்டம் தொடரும் ❤️?

Nirmala vandhachu ???
 
Nice epi dear.
Kalyanam scene super...
Pera paarthutaana???
Aduthu treat ah???
Naan kuda intha kalyathilaye thaanum, thanda kalyanam mudichuduvan intha Navi nu expect pannunan.
Rohini , super mom. Ella payanmarum ippadi oru amma than kelkum, aana vithi valiyathu allo.
 
Lovely review Leenu.. Unga comment Ku wait paninen. ?❤️
 
Top