Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா! -6

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -6


கதவு திறந்ததும் உள்ளேயிருந்த ஒவ்வொருவரையும் துப்பியது லிஃப்ட். அதற்குள்ளிருந்து வெளியே வந்தவள் எதிரே வந்தவருடன் மோதிக்கொண்டாள். அவருக்கு ஒரு மன்னிப்பை உதிர்த்துவிட்டு தன்னுடைய டெஸ்கிற்குச் சென்று அமர்ந்தாள் சங்கமித்ரா. அவளுடைய படபடப்பு குறைந்திருக்கவில்லை. ஏதோ அவளையும் அறியாமல் ஒருவித இன்பத்தை அனுபவித்தாள்.

' நோ.. இதென்ன புதுசா.. இது நீயில்ல மித்ரா.. ஒரு வேலையா போனா.. அந்த வேலையை செய்றதை மட்டும் கவனி.' என்று தனக்குள் பேசிக்கொண்டாள்.

சங்கமித்ரா தன் டீமோடு கலந்தாலோசித்து மூன்று ஐடியாக்களுடன் அடுத்த நாள் அவனை காண ஆயத்தமானாள். அடுத்த நாள் அவளுக்கு மதியம் தான் அப்பாய்ன்மன்ட் கிடைத்திருந்தது. அந்த நாளுக்காக காத்திருந்த நவிலனுக்கு இரவு உறக்கமே வரவில்லை.

' இந்த மித்ரா ஏன் என்னை இவ்வளவு கவர்கிறாள்? அவகிட்ட என்ன இருக்கு..? ஏன் அவளை எனக்கு பிடிச்சிருக்கு? எனக்குள்ள வந்த மாதிரியே அவளுக்குள்ளயும் இப்படி ஒரு உணர்வு இருக்குமா? அவ சரியா பேசவே மாட்டேன்றாளே.. அவளை எப்படி அடைவது?' என்று யோசித்துக்கொண்டே விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.

'நீ கவனிக்காமலேயே
கடந்து செல்வதால்
உன் மீது
என் காதலும் வளரச்
செய்கிறது..'


என்ற வரிகளை யோசித்தவாறே உறங்கிப் போனான்.

கனவில் மித்ரா வந்து அவன் கைகோர்த்து நடந்தாள். அவன் தோளில் சாய்ந்தாள். அவனோடு ஓடி விளையாடினாள். அவனை செல்லமாக அடித்தாள். அவன் தலையை கலைத்து விட்டாள்.

இது எதுவுமேயின்றி சங்கமித்ரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் கனவில் முகம் தெரியாத யாரோ வந்து அவள் கழுத்தை நெறித்தான். அவளது விரல்களை ஒடித்தான். அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடினாள் மித்ரா. அந்த சமயம் திடீரென ஒருவன் வந்து அவளை ஆதரவாய் அணைத்துச் சென்றான். அவர்கள் ஒரு சோலைக்குள் நடந்து கொண்டிருந்தார்கள். திடீரென அவன் அவளை ஒரு வானவில்லில் ஏற்றி விட்டான். மித்ரா சிரித்துக்கொண்டே நட்சத்திரங்களை நோக்கி கை நீட்டினாள். அவள் தலையை அவன் வருடினான். அவளது கண்களை அவன் பொத்தினான். பொத்திய கைகளை பிரித்து பின்னால் திரும்பிப் பார்த்தாள் சங்கமித்ரா. நவிலன். அதிர்ந்தாள். அவளது உதடுகள் உச்சரித்தன.

" ந...வி...லன் .."

" மித்ரா.. மித்ரா... "குரல் கேட்டு விழித்ததும் மிரண்டாள் மித்ரா. எதிரே பாமா.

" என்னடீ.. கனவா...."
மிரண்டு எழுந்த சங்கமித்ரா கொட்ட கொட்ட விழித்தாள்.

'என்ன கனவு இது.. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல்.. வானவில்.. நட்சத்திரம்.. ' தலையை உலுக்கிக்கொண்டு நேரத்தைப் பார்த்தாள். ஐந்து இருபது.

" எதுக்கும்மா எழுப்பினிங்க..?"

" நான் எங்கடீ எழுப்புனேன்..? வருணனை படிக்க எழுப்ப வந்தேன். ஏதோ ஆ.. ஊ..னு கத்திக்கிட்டு இருந்த.. அதான் கெட்ட கனவோனு உலுக்கினேன்.. என்னடீ எதும் கெட்ட கனவு கண்டியா..?"

சங்கமித்ரா ஆம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் ஒரு விதமாய் சுத்தி தலையாட்டினாள்.

" ராத்திரி உட்கார்ந்து பேய் கதையா வாசிக்க வேண்டியது..அப்புறம் கனவு கண்டு கத்த வேண்டியது.. " திட்டிக்கொண்டே வெளியேறினார் பாமா.

சங்கமித்ரா நேரத்தைப் பார்த்தாள். ஐந்து இருபத்தைந்து. யோசித்தாள். இன்னும் கொஞ்ச நேரம் படுக்கையில் சுருண்டிருக்கலாம் என்று முடிவெடுத்தாள். தலை லேசாக வலித்தது. இறுக கண்ணை மூடிக்கொண்டாள். ஏதோ அந்த கனவே வந்து இம்சை செய்தது.


அவன் எதிர்ப்பார்த்த அந்த நாளும் விடிந்தது. குளித்துவிட்டு க்ரே கவர் பாண்ட் அணிந்தான். இளநீலநிற சேர்ட்டை அணிந்தான். அறையில் இருந்து படியில் இறங்கி வந்தவன் நேராக ஸ்வாமி அறைக்கு சென்று " பிள்ளையார்ப்பா.. நீ தான் கூடவே இருந்து என் மித்ராவை என்கிட்ட சேர்க்கனும். ஓ.. நீ சிங்கிளாச்சே.. முருகா நீ தான். ஓ.. நீ டபுள் பொண்டாட்டிகாரர் ஆச்சே.. கடவுளே.. கிருஷ்ணா . அட.. என்ன எல்லாரும் நம்மளை விட மோசமா இருக்காங்க.. கடவுளே நீதான் என்னை காப்பாற்றனும்..." ஒட்டுமொத்த ஸ்வாமி படங்களுக்கும் ஒரு கும்பிடு போட்டு லேசாய் வாய் விட்டே புலம்பி பிரார்த்தித்தான்.

என்றுமில்லாதவாறு ஸ்வாமி அறையில் இருந்து வெளிப்பட்ட மகனைக் கண்ட ரோகிணி கன்னத்தில் வை வைத்து அதிசயத்தார்.

" என்னப்பா இது புதுசா..?"

" என்னம்மா..?"

" கடவுள் தரிசனம்???" என்று மகனை கேலியாக கேட்டார்.

" அதெல்லாம் ஒன்னுமில்லம்மா.. "

" சரி.. சாப்பிடு.. உனக்கு பிடிச்ச இட்லியும் தக்காளி சட்னியும்.."

" இல்லம்மா.. பசிக்கல.. நான் ஆபிஸ்ல ஏதாச்சும் சாப்பிட்டுகிறேன்.." அவசரமாய் வெளியேறினான்.

" நவிலா.. நில்லு ..." அம்மா கத்த கத்த அவன் ஓடியே போய் காரை கிளப்பிக்கொண்டு போனான்.

" என்னாச்சு இந்த பையனுக்கு.. ?" என்று வாய் விட்டே புலம்பிய ரோகிணிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இது அவனது திட்டம் என்று. அது மத்தியானம் தெரிய வரும்.

ஆபிஸ்க்கு வந்தவனுக்கு பயங்கரமாய் பசித்தது. வேலைக்கு நடுவில் இரண்டு காபி குடித்தான். பதினொரு மணிவாக்கில் அம்மாவுக்கு போன் செய்தான்.

" ம்மா. லன்ச் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா அனுப்புங்க..."

" இதுக்குதான் காலையிலயே சாப்பிட்டு போகனும்னு சொல்றது.."

" சரி சரி திட்டாதிங்க.. உங்க செல்ல பையன் தானே நான்.." என்று ஐஸ் வைத்தான்.

ரோகிணிக்கு தலையில் ஏதோ பொறி தட்டியது. மகனுக்கு பிடித்த சமையலை சமைத்துக் கொண்டு இருந்தவர் இன்னும் மெனுவை ரிச் ஆக்க ஸ்வீட் செய்ய ஆரம்பித்தார்.

மதியம் ஒரு மணிக்காக காத்திருந்த நவிலனுக்கு கடிகாரத்தின் மீது வழக்கு போடலாம் என்று அளவில் கோபம் வந்தது. நேரம் பன்னிரண்டு முப்பது தான் ஆகியிருந்தது. இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என்ற கடுப்பில் ஃபைல்களை புரட்டிக் கொண்டு இருந்தான்.
அந்த கேப்பில் அம்மாவின் சாப்பாடு அவனது அறைக்கே வந்தது. அவன் சாப்பாடு கூடையை கவனித்தான். இரண்டு தட்டுகள் இருந்தன. அம்மாவை நினைத்து மெய்ச்சிக்கொண்டான்.

ஒரு மணி. நவிலன் இயல்பாக வேலை செய்வது போல பாவ்லா காட்டினான். அவனுடைய தொலைபேசி அடித்து அவள் அவனை காண வந்திருப்பதாக தகவல் சொன்னது.

" யா.. வரச் சொல்லுங்க.." என்று தன் முகத்தில் தெரிந்த படபடப்பை மறைக்க முயன்றான்.

அவனுடைய கேபின்னின் கண்ணாடி வழியே அவள் தெரிந்தாள். இன்று வெள்ளை டெவிலாக வந்திருந்தாள். கண்ணாடியை தட்டி உள்ளே வர அனுமதி கேட்க, அவன் " யெஸ்.. கம் இன்.." என்ற வார்த்தையை உதிர்த்தான். புயல் உள்ளே வந்தது.

" ஹாய் மித்ரா.. கம்.. சிட் டவுண்.." ஒயிலாய் அமர்ந்தாள்.

" என்ன மித்ரா.. ஐடியாவோட வந்திருக்கிங்களா?" வேலையைப் பற்றி கேட்கிறாராம்.

"ஆமா சார்..."

"லன்ச் ஆச்சா?"

"ஓ.. ஆச்சு.."

"அப்படியா? என்ன சாப்பிட்டிங்க...?" என்று லாக் செய்தான்.

திடீரென்று அவன் கேட்கவும் அவள் தடுமாறினாள். அதை அவன் வெகுவாக ரசித்தான். அவள் கண்களில் படபடத்த பட்டாம்பூச்சி இமைகளை பிடித்து தனக்குள் பதுக்கி வைத்து கொள்ள யோசித்தான்.

"உங்களுக்குத் தான் பொய் சொல்ல வரலயே.. அப்புறம் ஏன் ட்ரை பண்றிங்க.. வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்.. நான் வேற காலையில சாப்பிடல.." கடைசி வார்த்தையை அனுதாபத்துக்காக சொன்னான்.

சங்கமித்ரா அந்த சந்தர்ப்பத்தை தவிர்க்க எண்ணினாள். உண்மையில் அவள் திட்டிக்கொண்டே தான் வந்தாள். நவிலனுடைய செக்கரட்ரி மஞ்சரிக்கு போன் செய்து அப்பாய்மண்ட் கேட்ட போது மதியம் ஒரு மணிக்கு தான் தந்தாள். இதென்ன ரெண்டும் கெட்டான் நேரம். சாப்பிட்டும் வர நேரமிருக்காது. மீட்டிங் முடிந்து வந்து சாப்பிடவும் நேரமாகி விடும் என்று திட்டினாள்.

"இல்ல சார்.. நீங்க சாப்பிட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்." என்றாள்.

"சரி.. அப்ப நானும் சாப்பிடல.. " அவன் அடுத்த நொடியே சொல்லிவிட்டு ஃபைலலை எடுத்தான்.

'என்ன இவன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறான்.' என்று மித்ரா அவனை கொஞ்சமாய் முறைத்துப் பார்த்தாள். 'காலையில் வேற சாப்பிடலையாமே..' சட்டென அவளுக்குள் ஒரு பரிதாப உணர்ச்சி வந்தது.

"இப்ப லன்ச் ஹவர்ஸ் தானே.. இந்த டைம் அப்பாய்ண்மண்ட் தந்தது எங்க தப்பு தான். சோ...என் ஃப்ரெண்டா சாப்பிட வாங்க.." என்று அன்போடு விளித்தான்.

"சரி.. சாப்பிடலாம்." உடனே ஒத்துக்கொண்டாள்.

அவனுடைய அறையில் ஒரு மூலையில் ஃசோபாக்கள் போடப்பட்டு இருந்தது. அதில் அவளை உட்கார சொல்லிவிட்டு அதோடு ஓட்டினாற் போல தடுப்பு அமைத்து இருந்த பகுதியில் இருந்த சிறிய மேஜையில் சாப்பாடு பாத்திரங்களை திறந்து அடுக்கினான். தட்டை கழுவி வைத்துவிட்டு அவளை கூப்பிட்டான்.

இருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவு மேஜை. அதில் இருந்த உணவு பாத்திரங்களைப் பார்த்தவளுக்கு தலை சுற்றியது. மதியத்துக்கே இத்தனை ஐட்டங்களா? இதெல்லாம் அவன் திட்டம். அவனுக்கு தெரியும். காலையில் சாப்பிடாமல் வந்தால் அம்மாவின் சமையல் எப்படி இருக்கும் என்று. அது வேலை செய்தது.

சூடான சாதம் ஹாட் பேக்கில் இருந்தது. வத்தல் குழம்பு, பீன்ஸ் சாம்பார், பீட்ரூட் பொரியல், முட்டை மசாலா, கீரை, வெண்டிக்காய் பச்சடி, மிளகு ரசம், வஞ்சிரம் மீன் வறுவல். பார்த்ததுமே அவளுக்கு எச்சில் ஊற ஆரம்பித்தது. அவள் தடுத்தும் அவனே அவளுக்கு பறிமாறினான். அவளுக்கு சங்கோஜமாக இருந்தது.

" வெயிட் வெயிட்.. முதல்ல ஸ்வீட் சாப்பிடுங்க.." என்று கேசரியை தந்தான். அவள் அவனை ஒருமாதிரியாக பார்த்தாள்.

" இல்ல எந்த நல்ல விஷயத்தை ஆரம்பிச்சாலும் ஸ்வீட்டோட ஆரம்பிக்கனும்னு டீவில சொன்னாங்க.." என்று குறும்பு பேச்சு பேசினான்.
அவள் லேசாக சிரித்தேவிட்டாள். இவன் இப்படியெல்லாமா கேலியாக பேசுவான் என்று அவனை பார்த்தாள்.

" என்ன மித்ரா?"

" ஒன்னுமில்ல.." என்று கேசரியை வாயில் போட்டவள் முகம் ஆரஞ்சு கலருக்கு மாறியது. கேசரி அத்தனை சுவை. அதை வாய் விட்டு சொல்ல எதுவோ தடுத்தது.

"மித்ரா.. கொஞ்சம் ப்ரீயா சாப்பிடுங்க. ஏன் இத்தனை தயக்கம்..?" அவள் தயக்கம் உணர்ந்து சொன்னான்.

"ம்......" தலையாட்டினாள்.

"இல்ல ஏதோ இருக்கு.. என்ன யோசனை..? என்னனு சொல்லுங்க..."

"இல்ல.. உங்க எல்லா க்ளைன்ட்டோவும் இப்படித்தான் லன்ச் சாப்பிடுவிங்களா...?" சந்தேகம் கேட்டாள்.

அவன் சிரித்தான். அந்த சிரிப்பில் ஒரு கணம் அவளது இதயம் தடுமாறியது. அதை மறைத்தாள்.

"இல்ல.. யாரோடும் சாப்பிடுறது இல்ல.. என் ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் வந்தா அவங்க கூட சாப்பிடுவேன். அம்மா சமையல் தான். தினமும் அனுப்பிடுவாங்க... நானும் அப்பாவும் சேர்ந்தே சாப்பிடுவோம். இன்னைக்கு உங்களோட சாப்பிடுற பாக்கியம் கிடைச்சிருக்கு..."

"அச்சோ.. அப்ப உங்க அப்பா எதை சாப்பிடுவார்...?" என்றாள் பரிதாபமாய்.

"அவர் சீக்கிரமே வீட்டுக்கு போயிட்டார்.. கொஞ்சம் தலைவலியாம். சோ.. டென்சன் ஆகாம சாப்பிடுங்க."

சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை மித்ராவே எடுத்து அலசி கூடையில் வைத்தாள். கூடவே இன்னொன்றையும் வைத்தாள்.

இருவரும் பின்னர் வேலையில் ஆழ்ந்தார்கள். அவள் சொன்ன ஐடியாக்களில் பரம்பரை பரம்பரையாக அவர்களது பர்னிச்சரை ஒரு குடும்பம் உபயோகிப்பதை கொஞ்சம் சென்டிமெண்டாக சொல்வது போல அவள் சொன்ன விளம்பரம் அவனுக்கு பிடித்திருந்தது. அதையே கன்பார்ம் செய்தான்.

"ஓகே சார். நான் கிளம்புறேன். நீங்க சொன்ன பட்ஜெட்ல, நீங்க எதிர்பார்க்கிற மாதிரி விளம்பரத்தோட வரேன்..."

" ஸ்யூர்.. வேற ஏதும் டீடெய்ல்ஸ் தேவைன்னா மஞ்சரியை காண்டாக்ட் பண்ணுங்க.. " என்றான்.

"கண்டிப்பா..பை த வே.. உங்க அம்மா சமையல் சூப்பர். சாப்பாட்டுக்கு தேங்க்ஸ்.." என்று விடைப்பெற்றாள்.

அவன் அவளுக்கு அந்த நேரத்தில் அப்பாய்ன்ட்மன்ட் கொடுத்ததே அவளை எப்படியாவது தன்னோடு சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காகத் தான். அவன் சாப்பிட மாட்டேன் என்றதும், அவள் உடனே ஒத்துக்கொள்ளவும் அவனுக்கு உச்சி குளிர்ந்தது போல இருந்தது.
அடுத்து எப்போது சந்திக்கலாம் என்று காத்திருக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்குப் பிறகு அவளுடைய டீம்மேட் மதனே தொடர்ந்து அந்த ஃப்ராஜெக்ட்டை கொண்டு நடத்தினான். அதனால் அவனுக்கு சங்கமித்ராவை பார்க்கும் வாய்ப்புகள் குறைந்தன.

அவள் தினம் தினம் அவனை நினைவுகளால் வதை செய்ய ஆரம்பித்தாள். நாட்கள் வேகமாக கடந்து சென்றன.




இரவு உணவுக்கு பின் மித்ரா தன் கர்போட்டை குடைந்துக்கொண்டிருந்தாள். சந்தியாவும் மதிவாணனும் இணைந்து தங்களுடைய நண்பர்கள் வட்டாரத்துக்கு மட்டும் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. அந்த பார்ட்டிக்கு என்ன உடை அணியலாம் என்ற குழப்பத்தில் தான் அலுமாரியை குடைந்து இருந்த எல்லா உடைகளையும் எடுத்து கட்டிலில் போட்டு ' என்கிட்ட நல்ல டிரஸ்ஸே இல்ல..' என்று புலம்பிக் கொண்டு இருந்தாள்.

"மித்ரா! உன்கிட்ட ஒருவிஷயம் சொல்லனும்.." என்று வந்து நின்றார் பாமா.

"என்னம்மா...? அம்மா! சந்தியாவோட வெட்டிங்க்கு ஒரு நல்ல சாரி வாங்கனும். இன்னும் வன் வீக் கூட இல்ல... வாங்கி உடனே ப்ளவுஸ் தைக்க கொடுக்கனும். நாளைக்கு வேற பார்ட்டி வச்சிருக்கா.. எதை உடுத்துறதுனே தெரியல.." என்று கட்டிலில் கிடந்த உடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பாமா விழித்துக்கொண்டிருந்தார்.
'சொல்ல வந்த விடயத்தை இவளிடம் எப்படிச் சொல்வது..? கத்த மாட்டாளா? குதிக்க மாட்டாளா? '

" என்னம்மா.. ஏதோ சொல்லனும்னு சொன்னிங்க...?"

"அது வந்து... உங்க அப்பா..."
மித்ரா கண்கள் இடுங்க பார்த்தாள்.

"ஒரு மாப்பிள்ளையை பார்த்திருக்கார்..."

"போதும்மா.. மது மாதிரி நானும் ஆகனும்னா அவர் விரும்புறார். இத பாருங்க. என் கல்யாணம் என் சம்மதத்தோட தான் நடக்கும்... எனக்கு ஒருத்தரை பிடிச்சா அவரை நானே தெரிவு செஞ்சி உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்.. என் கல்யாணத்துக்கு நீங்க மட்டும் சம்மதம் சொன்னா போதும்..ஆனா அவர் சொல்றவனுக்கு மட்டும் நான் கழுத்தை நீட்ட மாட்டேன்... என்னால அதுமட்டும் முடியாது.." கோபத்தில் வெடித்தாள்.

அவள் பேச்சில் அர்த்தமிருக்கிறதா என்று பாமாவுக்கும் விளங்கவில்லை. அதற்கு மேல் அவளிடம் பேச்சை வளர்க்க விரும்பவில்லை பாமா. வெளியே வந்து கணவன் முகம் பார்த்தார். மித்ரா பேசியது ஹாலில் இருந்த அவருக்கும் கேட்டிருக்க வேண்டும். முகம் சிவக்க அமர்ந்திருந்தார் ஐராவதம்.

"என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா உன் பொண்ணு. ஏதோ நடந்தது நடந்து போச்சு. அதுக்காக பெத்த அப்பன் நான் பழி ஆகிடுவேனா..? முழு பழியையும் என் மேல தூக்கி போடுறா.. நான் பார்க்கிறவனை கட்டிக்க மாட்டாளா.. இது எப்படி நடக்கும்னு நானும் பார்க்கிறேன். நான் பார்க்கிற மாப்பிள்ளையை கட்டிக்க மாட்டாளாம்... " என்று உறுமிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார். அந்த உறுமலில் அவருக்கு நிச்சயம் பீபி எகிறியிருக்கும்.

பாமா கலங்கிய கண்களோடு அந்த படத்தைப் பார்த்தார். அந்த வீட்டின் கலகலப்பையும் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அவள் கொண்டு போய் விட்டாளே என்று அவர் மனம் வேதனைப்பட்டது.

இது எதுவுமே தெரியாது மதுபாலா அந்த ஃப்ரேம் போட்ட படத்தில் மாலைகளுக்கு நடுவில் சிரித்துக்கொண்டு இருந்தாள்.

சங்கமித்ராவினுடைய மனோநிலை திடீரென ஒரு நடுக்கத்துக்குப் போனது. இங்கு இவளோ இப்படி இருக்க அங்கு நவிலனோ அடுத்த நாள் சங்கமித்ராவைப் பார்க்க ஒரு வாய்ப்புண்டு என்ற நினைப்பில் சுகமாய் மிதந்து கொண்டு இருந்தான்.


ஆட்டம் தொடரும் ❤?
 
Last edited:
Nice epi dear. Tq for daily updates.
Avan than manda oodipoi irrukane, appo support ku ,kadavul enna saathanayum koopiduvaan.
Akka husband thavaranavara irrunthu akka irranthathal ippadi oru kanava??? Vidu unn kanavan than hero (so nallavan thanam. author solliachu.)
Yedi, unn appava yen eppavum depression la ye vachu irrukura??
Lunch aalu kooda saapida idili saapidaathu vanthuteeya idili varutha padaatha??
Konjam spl ah lunch venum sonna amma seythu koduka poranga,amma romba, romba nallavana da.
Appa irrukaara ??? Sollave illa.
Party vera varuthu,kalyanam vera hmmm... enjoy monae.
 
Nice epi dear. Tq for daily updates.
Avan than manda oodipoi irrukane, appo support ku ,kadavul enna saathanayum koopiduvaan.
Akka husband thavaranavara irrunthu akka irranthathal ippadi oru kanava??? Vidu unn kanavan than hero (so nallavan thanam. author solliachu.)
Yedi, unn appava yen eppavum depression la ye vachu irrukura??
Lunch aalu kooda saapida idili saapidaathu vanthuteeya idili varutha padaatha??
Konjam spl ah lunch venum sonna amma seythu koduka poranga,amma romba, romba nallavana da.
Appa irrukaara ??? Sollave illa.
Party vera varuthu,kalyanam vera hmmm... enjoy monae.
Thank you for your lovely review Leenu ❤️. It means a lot ?
 
Top