Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 15...

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 15.

ரணதீரன் மந்திர தந்திரங்களில் மிகவும் தேர்ந்தவன் மட்டுமல்ல அளவற்ற அறிவாற்றலும் கொண்டவன். ஆனால் அதனை அவன் தன் சுய நலத்துக்காக பயன் படுத்தியது தான் வேதனை. ஏற்கனவே சேங்காலி, கருத்த வீரன் இன்னும் நால்வரை தன் வசப்படுத்திக்கொண்டிருந்தான். அதிலும் சேங்காலி தான் அவனது அடிமை என்றே சொல்லலாம். அவனிடம் தனது ஜெப மாலைகளில் ஒன்றை மந்திரித்துக் கொடுத்தான்.

"செங்காலி நீங்கள் காட்டு வழியில் பயணப்படும் போது இந்த மாலையை நீ உன் இடுப்புக் கச்சையில் வைத்துக்கொள். என்னிடம் தகவல் சொல்ல வேண்டும் என்றாலோ இல்லை என்னை வரவழைக்க வேண்டும் என்றாலோ இந்த மாலையை உருட்டு. நான் தெரிந்து கொள்வேன்" என்று சொல்லியிருந்தான். அதன் படி செய்தான் சேங்காலி. அவன் மாலையை உருட்டத் தொடங்கிய மெல்லிய அதிர்வு தோன்றி அது நேரமாக ஆக அதிகம் ஆனது. சற்று நேரத்தில் ரண தீரன் எங்கிருந்தோ வந்தான்.

"என்ன சேங்காலி? என்னை எதற்காக அழைத்தாய்?" என்றான்.

"சாமி! நீங்கள் இத்தனை பெரிய மந்திரவாதியாக இருப்பீங்கள் என நான் நினைக்கவில்லை. ஏதோ ஒரு மாலையை உருட்டினேன நீங்கள் தோன்றுகிறீர்களே?" என்றான்.

"என்னைப் புகழ்வது இருக்கட்டும். நீ இப்போது என்னை எதற்காக அழைத்தாய்?"

"சாமி! மாலை நேரத்தில் இளவரசி ஏதோ பூஜை செய்கிறார்கள். ஆனால் அதனை மற்றவர்கள் பார்க்கா வண்ணம் மார்த்தாண்டனும் வசந்த மாலையும் கவனமாக இருக்கிறார்கள். பூஜை முடித்து அந்த மலர்களைக் கூட வெளியில் போடுவது இல்லை. இதனை உங்களிடம் தெரிவிக்கவே அழைத்தேன்" என்றான்.

கைகளால் காற்றில் சொடுக்கினான் ரணதீரன். அவன் கரங்களில் கனமான முத்து மாலை ஒன்று தோன்றியது.

"மிக நல்ல செய்தி கொடுத்தாய் சேங்காலி! இதற்காகத்தான் நான் இத்தனை காலம் காத்திருந்தேன். இதனை என் பரிசாக வைத்துக்கொள்" என்று அந்த முத்து மாலையை அளித்தான். முகமெல்லாம் பல்லாக அதனை வாங்கிக் கொண்டான் அவன்.

"சாமி! நான் கேட்கிறேன் என என்னைத் தவறாக எண்ண வேண்டாம். காற்றில் சொடுக்கி விலை உயர்ந்த மாலையை வரவழைக்கும் மந்திரம் தெரிந்த உங்களுக்கு அந்தப் பெட்டியில் உள்ளதைக் கவர்வது அத்தனை கடினமா? எதற்கு எங்கள் உதவியை நாடினீர்கள்?" என்றன்.

"உம்! தெரியும் கேட்பாய் என்று! எனக்கு உன் உதவி தேவை என்பதால் சொல்கிறேன். இனி அதிகம் கேள்விகள் கேட்காதே"

"அப்படியே சாமி! சொல்லுங்கள்"

"நான் மந்திரம் கற்றவன் தான். ஆனால் எனக்கும் மேலே மிகப்பெரிய சக்தியான இறை சக்தியின் முன் என்னால் எதுவும் செய்ய முடியாது. அதுவும் தவிர இளவரசியும் மந்திர சித்துகளில் வல்லவள். அதனால் என்னால் சில மந்திரங்களைப் பிரயோகிக்க முடியாது" என்றான்.

"சரி சொல்லுங்க்ள் சாமி! நான் என்ன செய்ய வேண்டும்?"

"மொத்தம் எத்தனை படை வீரர்கள் அவர்களில் நம்மவர் எத்தனை பேர்?"

"25 பேர் மொத்தம் இருக்கின்றோம். அதில் நம்மவர் என்றால் பத்து பேர் தான்"

"உம்! அப்படியா சரி! இன்று இரவு மூன்றாம் நாழிகையில் நீ மார்த்தாண்டத் தேவனைத் தாக்கத் தொடங்கு! உனக்குத் துணையாக அந்த 10 பேரையும் அழைத்துக்கொள். மார்த்தாண்டத் தேவனும் வசந்த மாலையும் உங்களிடம் போரிடும் மும்முரத்தில் இருப்பார்கள். அப்போது நான் அரூபமாக மாறி இளவரசியின் பாதுகாப்பில் இருக்கும் பெட்டியை கவர்ந்துவிடுவேன். பிறகு நீ அவர்களைக் கொன்று விடலாம்" என்றன்.

"திட்டம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் மற்ற 15 பேர் இருப்பார்களே? அவர்கள் இளவரசிக்கு மிகவும் விசுவாசமானவர்களாயிற்றே? அவர்கள் எங்களை சும்மா விடுவார்களா?"

"அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நீ மார்த்தாண்டனைத் தாக்கும் போது உனக்கு வேறு யாராலும் இடைஞ்சல் இருக்காது. அது போதும் தானே?"

"போதும் சாமி."

"இப்போது நீ கிளம்பு! உன்னைக் காணவில்லையே என யாரேனும் தேடுவார்கள். இனி இந்த மாலையை நீ உருட்ட வேண்டாம். எப்போது தேவையோ அப்போது நான் வந்து விடுவேன்" என்று சொல்லி அவனை அனுப்பினான். இருபுறமும் திரும்பிப் பார்த்துகொண்டே சென்றான் சேங்காலி.

இரவு கவிழ்ந்தது. வழக்கம் போல பின் மாலையில் பூஜையை முடித்தாள் இளவரசி செண்பகவல்லி. அந்தப் பூஜை மலர்களில் சிவவற்றை கூந்தலில் சூடிக்கொண்டு சிலவற்றை வசந்த மாலயின் கூந்தலிலும் சூடினாள். வேறு எதுவும் பேசாமல் அமைதியாக தியானத்தில் அமர்ந்து விட்டாள். இரவு இரண்டாம் சாமத்தில் சற்று தொலைவில் ஏதேதோ விபரீதமான ஒலிகள் கேட்டன. யாரோ ஒரு பெண் கூக்குரலிடுவது போலவும் பலர் வாட் போர் இடுவது போலவும் பல விதமான சத்தங்கள் கிளம்பின. திடுக்கிட்டு எழுந்தான் மார்த்தாண்டன். வசந்த மாலையும் கூட வெளியில் வந்தாள்.

"அது என்ன சத்தம் அத்தான்?" என்றாள் கலவரத்துடன்.

"எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ ஒரு பெண்ணின் கூக்குரல் போல இருக்கிறது. அவளுக்கு என்ன ஆபத்து எனத் தெரியவில்லையே?" என்று கைகளைப் பிசைந்தான்.

"நீங்கள் சென்று பாருங்களேன். எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது" என்றாள் வசந்த மாலை.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே இளவரசி வந்து விட்டாள்.

"இளவரசி! யாரோ என்னவோ தெரியவில்லை. இந்த நடுக்காட்டில் ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. நான் சென்று பார்த்து வரட்டுமா?" என்றான். அவனை வினோதமாகப் பார்த்தாள் செண்பக வல்லி.

"எல்லாம் மாயம்! தாயே எல்லாம் உன் அருள்!" என்றாள்.

"எனக்குப் புரியவில்லை இளவரசி! சொல்வதை என் போன்ற பாமரனும் விளங்கிக்கொள்ளும் படி சொல்லுங்களேன்" என்றான் சற்றே பொறுமை இழந்து.

"நீ செல்ல வேண்டாம் மார்த்தாண்டா உனக்கு இங்கே சில கடமைகள் உள்ளன. உன் படை வீரர்களை அனுப்பு. அதிலும் அனைவரையும் அனுப்பி விடாதே. நம் பாதுகாப்புக்கும் இங்கே ஆட்கள் தேவை" என்றாள்.

சேங்காலி ஏற்கனவே சொல்லி வைத்திருந்தான் என்பதால் அவனது வீரர்கள் பத்து பேரும் நின்று விட்டனர். மீதமிருந்து 15 பேரில் பேரில் பத்து பேர் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றனர். அவர்கள் செல்லச் செல்ல சத்தம் தள்ளிப் போய்க்கொண்டிருப்பது போலத் தோன்றியது. அரை மணி நேரம் நடந்தும் அவர்களால் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனாலும் சத்தம் கேட்ட படியே இருந்தது. இப்போது அந்த வீரர்கள் இரு தலைக் கொள்ளி எறும்பு போல தவித்தார்கள். இளவரசிக்குக் காவலாக மீண்டும் அங்கே செல்வதா? இல்லை இதை மீண்டும் தொடர்வதா என தத்தளித்தார்கள். அவர்கள் முன்னே சிறு வெளிச்சம் தெரிந்தது. அங்கிருந்து தான் சத்தம் வந்திருக்க வெண்டும் என நினைத்து அதை நோக்கி முன்னேறினார்கள். அவர்களுக்கு பசியும் தாகமும் ஏற்பட்டு ஆளை அசத்தியது.

கொஞ்ச தூரம் சென்றதும் அந்த வெளிச்சம் சிறு குடிசை ஒன்றிலிருந்து வருகிறது எனப் புரிந்து கொண்டர்கள். அவர்களின் சற்றே துணிச்சலான கண்ணன் பேசினான்.

"வீரர்களே! இந்த இருட்டில் திரும்பிச் செல்ல நமக்கு வழி தெரியாது. அதோடு பசியும் தாகமும் நாக்கை வருத்துகிறது. இந்தக் குடிசைக்குச் சென்று தண்ணீர் வாங்கிக் குடித்து இங்கேயே இளைபாறுவோம். காலை பொழுது புலர்ந்ததும் திரும்பிச் செள்வோம். இந்த ஒரு இரவில் இளவரசிக்கு அபாயம் எதுவும் நேராது. மார்த்தாண்டர் இருக்கவே இருக்கிறார்" என்றான்.

மற்றவர்களும் அதனை ஆமோதித்தார்கள். கண்ணன் சென்று வீட்டின் கதவைத் தட்டினான். மிகவும் வயதான கிழவி ஒருத்தி வந்து கதவைத் திறந்தாள். அவர்களைக் கண்டதும் அவர்களுக்கு சுவையான உணவும் தண்ணீரும் கொடுத்தாள். அதனை உண்ட அடுத்த பத்தாவது நிமிடத்தில் பத்து பேருக்கும் கண்களை சுழற்றிக்கொண்டு உறக்கம் வந்தது. அப்படியே உறங்கிப் போனார்கள். அனைவரும் உறங்கிய பின்னர் கிழவி வேடத்தில் இருந்த ரணதீரன் சிரித்துக்கொண்டே அவர்களை குடிசையினுள் போட்டு கதவை பூட்டினான். இளவரசி தங்கியிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.

அங்கே அவர்கள் உறங்காமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"ஏன் இன்னமும் அவர்கள் திரும்பவில்லை? சத்தம் வெகு சமீபத்தில் இருந்து கேட்பதாக அல்லவா இருந்தது?" என்றாள் வசந்த மாலை.

"மாய மானைத் தேடிச் சென்றிருக்கிறார்கள் அல்லவா? அதிக சமயம் ஆகத்தானே செய்யும்?" என்றள் இளவரசி சோகமாக புன்னகைத்தபடி.

"என்ன சொல்கிறாய் நீ செண்பகம்? வர வர நீ செய்வது சொல்வது எல்லாமே புதிராக இருக்கிறது. "

"என்ன செய்ய வசந்த மாலை! காலம் நம்மை ஆட்டுவிக்கிறது. "

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அரூபமாக ரணதீரன் அங்கே வந்தான். அவன் அந்தப் பகுதிக்கு வந்ததும் இளவரசியின் உடல் விறைத்தது. சேங்காலிக்கு உத்தரவு கொடுத்தான் மெல்லிய குரலில். அவனது உத்தரவைக் கேட்டதும் சேங்காலி பத்து வீர்களையும் சேர்த்துக்கொண்டு மார்த்தாண்டன் மீது பாய்ந்தான். அவனது வாளைத் தட்டிவிட முயற்சி செய்தான்.

"இது என்ன செய்கை சேங்காலி? எதற்கு என்னைத் தாக்குகிறாய்?" என்றான் மார்த்தாண்டன் ஆச்சரியமும் ஆத்திரமுமாக. அதற்குள் சுதாரித்துக்கொண்ட வசந்த மாலை தனது வாளை சுழற்றிக்கொண்டு வீரர்களை நோக்கிப் பாய்ந்தாள். அவளது மனோ திடத்தைக் கண்டதும் மார்தாண்டனும் தாக்கத் துவங்கினான். இளவரசி தனது கூடாரத்துக்குள் ஓடிச் சென்று காளி சிலை இருந்த பெட்டியை அணைத்துக்கொண்டாள்.

ரணதீரன் கூடாரத்துக்குள் நுழைந்தான், ஆனால் அந்தப் பெட்டியின் மேல் பட்ட காற்று அவன் மேல் பட்டது தான் தாமதம் அவனது அரூபம் விலகி அவன் மற்றவர்கள் கண்களுக்கும் தெரிந்தான். அவனைப் பாத்து விட்டாள் இளவரசி.

"நீ வருவாய் என நம் குரு நாதர் சொல்லியிருந்தார், ஆனாலும் நீ இப்படி தரம் தாழ்ந்து போவாய் என நான் எதிர்பார்க்கவில்லை ரணதீரா! மாணவர்களிலேயே அறிவிற் சிறந்த நீயா இப்படிச் செய்கிறாய்?" என்றாள் ஆத்திரமாக.

"என்ன செய்ய இளவரசி? குரு நாதர் எனக்கு சில வித்தைகளைக் கற்றுக்கொடுக்க விரும்பவில்லை. அதனால் நானே எடுத்துக்கொள்ளும்படி ஆயிற்று. இதிலே என் தவறென்ன?" என்றான்.

"முட்டாள்! நீ சுயநலக்காரன் அதோடு உனக்கு வேண்டுமென்றால் கொலை கூடச் செய்ய தயங்க மாட்டாய். அதனால் தான் குரு நாதர் உனக்கு சில வித்தைகளைக் கற்றுக்கொடுக்கவில்லை."

"வீண் பேச்சு வெட்டிப் பொழுது போக்க நான் வரவில்லை. காளி சிலை அடங்கிய பெட்டியை என்னிடம் கொடுத்து விடு. பிறகு உனக்கு எந்தத் துன்பமும் இல்லை. நீ பாண்டிய நாடு சென்று நலமாக வாழலாம்"

"இதன் மதிப்பு தெரியுமா மூடனே உனக்கு? "

"தெரிந்து தான் கேட்கிறேன் இளவரசி! இந்தப் பெட்டியின் அருகில் வந்ததுமே என் மந்திரங்கள் வேலை செய்யவில்லை என்றால் இதன் அருமை எனக்குத் தெரியாதா? "

"இல்லை! இது குரு விந்தையனால் பூஜிக்கப்பட வேண்டியது. உன் போன்ற கயவனிடம் கொடுக்க மாட்டேன்" என்றான்.

கண்களில் கோபம் தெறிக்க இளவரசியை நோக்கி அடியெடுத்து வைத்தான் ரணதீரன். சரியாக அந்த நேரத்தில் உள்ளே வந்து வாளால் அவனைத் தடுத்தாள் வசந்த மாலை.
 
செண்பகத்திற்கி தெரியுது மாயை என்று வீரர்களை அனுப்பியிருக்க கூடாது
Nice update sis
 
Nice ep
 
Top