Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 14....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 14.

இளவரசி செண்பகவல்லி அவளது தோழி வசந்தமாலை மற்றும் மார்த்தாண்டத்தேவன் ஆகியவர்களின் பாண்டிய நாட்டை நோக்கிய பயணம் தொடங்கியது. விடை பெறும் முன் கண் கலங்கி விட்டாள் செண்பகவல்லி. அவளது விழிகளில் நீரைக் கண்டு மன்னன் அதிகம் துயரப்பட்டார்.

"மகளே! நீ இத்தனை தூரம் துயரப்படுவாய் எனத் தெரிந்திருந்தால் நான் உன்னை பாண்டிய நாட்டுக்கு அனுப்பவே சம்மதித்திருக்க மாட்டேன். இன்னமும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உன் தோழியும் மார்த்தாண்டனும் மட்டும் செல்லட்டும் நீ இங்கே என் அருகேயே இரு" என்றார்.

பிரம்ம தத்தர் குறுக்கிட்டார்.

"இப்போது போவது உமது மகளல்ல மன்னரே! வரலாற்று நாயகி, காளியின் அம்சம் நிறைந்த ஒரு மங்கலச் செல்வி. அவளை தடுக்காதே! அவளை காலம் பாண்டிய நாட்டுக்கு அழைக்கிறது. அங்கே அவளுக்காக கடமைகள் நிறைய இருக்கின்றன" என்றார்.

செண்பகவல்லி குருவை ஆழமான பொருள் நிறைந்த பார்வை பார்த்தாள். அதில் எத்தனையோ ரகசியங்கள் அடங்கியிருந்தன. மூவருக்கும் துணையாக 25 பேர் கொண்ட ஒரு சிறு படையை அனுப்பினார் மன்னன். அதில் ஒருவன் துரோகி என்ற உண்மை தெரிந்து தான் பயணமானாளோ? இல்லை தெரியாமல் பயணமானாளோ செண்பகவல்லி? அதற்கான பதில் யாரிடமும் இல்லை.

எந்த விதமான நிகழ்வுகளும் இல்லாமல் முதல் நாள் பயணம் நல்லபடியாக முடிந்தது. அன்று இரவு துவங்கும் நேரம் கொண்டு வந்த காளி சிலைக்கு நிதானமாக பூஜை செய்து அதனை மீண்டும் மலர்களின் நடுவே பத்திரப்படுத்தி தனது சிவிகையில் வைத்து பெட்டியை மூடினாள் செண்பகவல்லி. காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே கூடு திரும்பும் பறவைகளின் ஒலி மனதை நிறைத்தது. மூலிகைகள் நிறைந்த அந்த மலைக்காற்றை ஆழ்ந்து சுவாசித்தாள். அப்படியே சில சித்துப் பயிற்சிகளையும் செய்தாள் இளவரசி. இவற்றை சற்றே தள்ளி இருந்து பார்த்த வண்ணம் இருந்தனர் வசந்த மாலையும் மார்த்தண்டனும்.

"மாலை! நம் இளவரசி நமக்கு உயிரினும் மேலானவர். அவரை பாதுக்காப்பாக மன்னர் பராக்கிரம பாண்டியரிடம் நாம் கொண்டு சேர்க்கும் வரை எனக்கு ஓய்வும் இல்லை உறக்கமும் இல்லை"

அவனை நோக்கி அழகாக புன்னகை செய்தாள் வசந்த மாலை.

"நீங்கள் ஏன் இத்தனை கவலை கொள்கிறீர்கள்? இந்தக் காட்டில் இளவரசிக்கு என்ன ஆபத்து வந்து விட முடியும்? வன விலங்குகளால் ஆபத்து வராத வண்ணம் தான் நாம் நெருப்பை வளர்க்கிறோமே? முகலாயர்கள் அத்தனை சீக்கிரம் இங்கே வந்து விடுவார்கள் என நினைக்கிறீர்களா?"

"இல்லை வசந்த மாலை! என் கவலை வன விலங்குகளோ. முகலாயர்களோ அல்ல! கூட இருந்தே குழி பறிக்கும் எத்தர்களைப் பற்றித்தான். ரணதீரன் என்ன திட்டமிட்டிருக்கிறானோ? தெரியவில்லையே?"

"நாம் காட்டு வழியே எப்போது எங்கே பயணம் செய்கிறோம் என அவனுக்கு எப்படித் தெரியும்? அதுவும் போக அவன் ஒருவன் நாமோ பலர். ஆகையால் கவலையை விட்டு நிம்மதியாக இருங்கள்"

"வசந்த மாலை! இளவரசியை பத்திரமாக சேர்ப்பித்து விட்டு நீ என்ன செய்யப் போகிறாய்?"

"எனக்கென தனி வாழ்வு ஏது அத்தான்? எப்போதும் அவளுடனே தான் இருப்பேன். அது தான் என் வாழ்க்கை லட்சியம். அவள் என்னை மணந்து கொள்ளும்படி கட்டளையிட்டால் கட்டாயம் அவள் சொல்லும் நபருக்கு மாலையிடுவேன்"

"அந்த நபர் நானாக இருக்கும் பட்சத்தில் உனக்கு ஆனந்தமா வசந்த மாலை?"

"சந்தேகம் என்ன? இந்தப் பணி முடிய வேண்டும் என்பதற்காக என் மனதை பூட்டி வைத்துள்ளேன் மார்த்தாண்டரே! நாம் தென்காசியை அடைந்ததும் மன்னரது உத்தரவைக் கேட்டு விட்டு பின்னர் மண மங்கலம் தான்" என்றாள் வெட்கத்தோடு.

"எப்படியும் நமது பயணம் ஐந்து நாட்கள் தொடரும். இன்றிலிருந்து மூன்றாம் நாள் நாம் காட்டின் நடுப்பகுதியை அடைந்திருப்போம். பகலிலேயே வெளிச்சம் கூட உட் புகாத பகுதி அது. அந்த இடத்துக்கு நிஷாவனம் என்று பெயர். எப்போதும் இருளாகவே இருப்பதால் அப்படி பெயர் ஏற்பட்டது. நாம் அதைக் கடக்க இரு தினங்கள் ஆகும். அப்போது தான் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். "

"நிச்சயம் இருப்போம் மார்த்தாண்டரே! ஒரு கணம் கூட என் கண் பார்வையிலிருந்து இளவரசியை தப்ப விட மாட்டேன்" என்றாள் வசந்த மாலை.

அவனும் சிரித்து தான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். இவற்றையெல்லாம் பார்த்தபடி பக்கத்தில் ஒரு மரத்தில் மறைந்திருந்தான் சேங்காலி என்னும் வீரன். அவன் தான் ரணதீரனின் ஒற்றன். இருவரின் நிழலும் கூட படாத இடத்துக்குச் சென்றான். அவன் கையில் எலும்புகளால் ஆன மாலை ஒன்றிருந்தது. அதை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்தான். அடுத்த கணம் அந்த மாலை அதிரத் தொடங்கியது.
 
கூடவே ஒற்றன் வைத்துக் கொண்டு எப்படி தான் நல்லபடியாக பாண்டிய நாடு போவாங்களோ
 
Nice ep
 
Top