Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 6

Advertisement

niranjana subramani

Well-known member
Member
6.

“ கொலையா?????.....” என அந்த பாட்டியை ஹர்ஷா பின்தொடர எண்ணுகையில்,

“ எங்க ஹர்ஷா போற?? சீக்கிரம் வா கோவில் நடையை சாத்த போறாங்க.” என
ஹர்ஷாவின் கையை இழுத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றான் கிஷோர்.

“ டேய் இருடா அந்த பாட்டி என்னமோ சொல்றாங்க கேட்டுட்டு வரேன்” என ஹர்ஷா கூறி கொண்டிருக்கையில்,

தீபாராதனை தட்டுடன் வந்த குருக்கள்,

“ அம்பிகளா தீபாராதனை எடுத்துகோங்கோ” என கூறினார்.

அதனை கேட்ட இருவரும் தீபாராதனை எடுத்துக்கொள்ள அவர்களை பார்த்துக்கொண்டிருந்த குருக்கள் “நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு புதுசா??... “

“ ஆமா நாங்க இந்த கோவில் பத்தி ஒரு கட்டுரை…..” என கிஷோர் கூறிக்கொண்டிருக்கையில், இடைமறித்த குருக்கள்,

“ ஓ!!! நீங்கதான் பண்ணையார் வீட்டுல தங்கிருக்கவாளா??” என கேட்க,

“ ஆமாம். உங்களுக்கு எப்படி தெரியும்?” என கிஷோர் கேட்க

“ சாமிக்கண்ணு நேத்து சாயங்காலமே என்னோட ஆத்துக்கு வந்து நீங்க ரெண்டுபேரும் இன்னைக்கு கோவிலுக்கு வருவீங்கன்னு சொன்னார்.

சரி செத்த சீக்கிரம் வந்துருக்கப்புடாது நடை சாத்துற நேரத்துக்கு வந்துருக்கீங்க.”

“ இல்ல எங்களுக்கு சீக்கிரம் நடையை சாத்திறுவீங்கன்னு இப்போதான் தெரியும்” என கிஷோர் கூறினான்.

கிஷோர் , குருக்கள் சம்பாஷணையில் தலையிடாது ஹர்ஷா அந்த பாட்டி போன திசையையே நோக்கி கொண்டிருந்தான்.

அவனை கவனித்த குருக்கள் “ என்ன….? தம்பி ரொம்ப நேரமா ஒரே திசையை பார்த்துண்டு இருக்கார்” என வினவ

கிஷோர் ஹர்ஷாவின் கையை பிடித்து சுரண்டினான்.அதில் ஹர்ஷா இவர்களை கவனிக்க,

“ அது ஒன்னும் இல்ல சும்மாதான்” என கிஷோர் சமாளிக்கையில்,

“ இல்ல ஒரு பாட்டி இங்க இருந்து போனாங்க.
அதான் எங்க போனாங்கன்னு பார்த்துட்டு இருந்தேன்” என ஹர்ஷா இடைபுகுந்து கூறினான்.

“ எந்த பாட்டி???” என குருக்கள் கேட்க

“ நெத்தியில ஒரு பெரிய பட்டையும் அதுல சந்தனமும் வச்சுருந்தாங்க. கையில ஊண்டி நடக்க தடியும், காதுல தண்டட்டியும் போட்டுருந்தாங்க.

மாநிறத்துக்கு கொஞ்சம் அதிகமான நிறம். அப்புறம் வலது கன்னத்துல ஒரு தழும்பு ……..” என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கையில்,

“ ஓ!!! சொர்ணாம்பிகா பாட்டியா??? அவா அந்த ஒத்த கல்லு மண்டபத்துல இருப்பா.
அப்புறம் இங்க கோவிலை சுத்தி காட்ட ராஜான்னு ஒரு பையன் இருக்கான் அவனோட போனீங்கன்னா கோவில்பத்தி ஸ்தல வரலாறு சொல்வான்.

சரி சீக்கிரம் பெருமாளை சேவிச்சுண்டு; கோவிலையும் சுத்தி பார்த்துடுங்கோ. நடையை சாத்திண்டு கோவிலையும் மூடனும் நாழியாருது. ” என கூறிவிட்டு ராஜாவையும் இவர்களுக்கு அறிமுகபடுத்திவிட்டு புதிதாக அர்ச்சனையுடன் வந்த ஒருவரிடம் அர்ச்சனை வாங்க சென்றுவிட்டார்.

“ எத்தனை வருசமா இங்க கோவிலை சுத்தி காட்டுறீங்க?”
என ஹர்ஷா ராஜாவிடம் வினவ

“ ஒரு மூணு வருசமா சார்”
என ராஜா கூற

“ ஓ அப்போ இங்க ஒற்றை கால் மண்டபத்துல ஒரு பொண்ணு இறந்ததா சொல்றாங்களே அப்போ நீங்க இங்கதா வேலைபார்த்தீங்களா?”

“இல்ல சார் அந்த சம்பவம் நடந்து ஒரு மூணு மாசம் கழிச்சுத்தான் இங்க கோவில் சுத்தி காட்டுற வேலைக்கு சேர்ந்தேன்”.

“ சரி கோவில் பத்தி சொல்லுங்க ராஜா” என கிஷோர் கேட்டான்.

“ சார் இந்த அரங்கநாதர் கோவில் எட்டாம் நூற்றாண்டுகளில் கட்டுன குடைவரை கோவில். இங்க பெருமாள் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார்.

இந்த கோவில்ல எல்லா கடவுளுக்கும் சின்ன சின்ன சிற்பங்கள் இருக்கு. அதே மாதிரி பெருமாளோட பத்து அவதாரங்களின் முழு கதையையும் நாம ரொம்ப சுலபமா புரிந்துக்குற மாதிரி ஓவியங்களா வரைஞ்சுருக்காங்க.”
என கூறிக்கொண்டு ஒற்றைக் கால் மண்டபத்தை நோக்கி ராஜா ஹர்ஷாவையும் கிஷோரையும் அழைத்து சென்றான்

“ என்னடா மச்சி மண்டபம்னா கோவிலுக்கு உள்ள தானே இருக்கும் இங்க என்ன வெளிய இருக்கு….” என கிஷோர் கேட்க.

“ சார்
அப்போ இந்த பகுதியை ஆண்ட ஆதிகேசவ வர்மன் அப்படின்ற மன்னன் இங்க அரங்கநாதர்க்கு பெரிய கோவில் கட்டணும்னு முடிவு பண்ணி கோவில கட்டினார்.

அப்போ இங்க வைணவ சமயம் அதிகம் பரவி இருந்த காலம்.

அப்புறம் காலப்போக்கில் சைவம் வைணவம் பிரச்சனை வரவும் அப்போதைய மன்னன் தவரூபேஸ்வரர் சிவனுக்கும் கோவில் கட்ட முடிவு செய்து பஞ்சாட்சரம் என்ற மந்திரத்தை உணர்த்தும் வகையில் ஐந்து தூண்களை வைத்து அரங்கநாதர் கோவில்
குளத்துக்கு பக்கத்துல கோவில் கட்ட தொடங்கினார்.

அதுல ஒரு தூணை மட்டும் தான் அவரால கட்டி முடிக்கமுடிஞ்சு. அதோட அவர் இறந்து போக அவர் வழி வந்த அரசர்களால் அந்த கோவில் பணியை முடிக்க முடியல.

தவரூபேஸ்வரர் மன்னனால் கட்டப்பட்ட அந்த பெரிய தூண் நடுவிலும் மற்ற நான்கு தூண்களும் இந்த பெரிய தூணை சுத்தி நான்கு திசைகளையும்
நோக்கி பெரிய தூணின் பாதி அளவு வரைதான் இருக்கும்.

இந்த மண்டபத்தோட மேற்கூரையை இந்த பெரிய தூண் தான் தாங்கி
இருக்கு.தூரத்துல இருந்து பார்க்கும்போது விழுதுகள் இல்லா பெரிய ஆலமரம் போல இருக்கும்.

அதனால இந்த மண்டபம் ஒற்றை கால் மண்டபம்னு சொல்றாங்க.அதோட இந்த மண்டபத்துக்கு பக்கத்துல ஒரு பெரிய தாமரை குளம் இருக்கு.

இந்த குளத்தோட தண்ணி துளசி வாசனை வரும்.அப்புறம் இந்த தூண்ல ஒவ்வொரு இடத்தை தட்டும்போதும் ஒவ்வொரு விதமான சத்தம் கேட்கும்”. என கூறி முடித்தான் ராஜா.

“ அவ்வளவுதானா ராஜா??” என ஹர்ஷா வினவ,

“ இனி கோவில் சிற்பங்கள் பத்தி சொல்லணும் சார். அதை நாளைக்கு சொல்லட்டுமா சார்” என தயக்கத்துடன் கேட்க

ஒற்றை கால் மண்டபத்திற்குள் செல்வதற்கான பயமே இவனின் தயக்கத்திற்கான காரணம் என உணர்ந்த ஹர்ஷா,

“ சரி ராஜா நாளைக்கு சொல்லுங்க. இப்போ நாங்க ரெண்டு பேரும் சும்மா போய் அந்த மண்டபத்தை பார்த்துவிட்டு வரோம்” என ஹர்ஷா கூற

அந்த ஒற்றை கால் மண்டபத்திற்குள் வந்தடைந்தனர் இருவரும்.
அந்த பெரிய துணை பார்த்துக்கொண்டிருந்த கிஷோர்

“ என்னடா
இந்த தூண் இவ்வளவு வளவளப்பா இருக்கு”

“ அது இங்க இருக்குற பாறையை நல்லா செதுக்கி வளவளப்பாக்கிருக்காங்க.”
என ஹர்ஷா கூறி கொண்டே,

ரத்தம் இருந்ததுக்கான எதுவும் தடயம் இருக்கான்னு ஹர்ஷா தேடி கொண்டிருக்கையில்,

“ மச்சி….” என கிஷோர் அழைத்தான்

“ என்னடா????” என அவனை நோக்கி ஹர்ஷா திரும்பையில் “

“ இங்கப்பாரு இந்த தூண்ல யாரோ அரசன் அரசி அப்படின்னு எழுதி வச்சுருக்காங்க” என் கிஷோர் கூற

அதை பார்த்துக்கொண்டிருந்தான் ஹர்ஷா

“ ஏன்டா கோவிலை கட்டுன அரசன் பெயரை கல்வெட்டுல பொறிப்பாங்க. இங்க என்ன வெறும் அரசன் அரசின்னு எழுதிருக்கு” என தன சந்தேகத்தை கிஷோர் கேட்க

“ டேய் அறிவுகெட்ட …….
ஏன்டா கல்வெட்டுல பொறிக்குறதுக்கும் கிறுக்குறதுக்கும் உனக்கு வித்யாசம் தெரியலையா. நல்லா பாரு யாரோ எதோ ஒரு கூர்மையான பொருளை வைத்து இந்தமாதிரி அரசன் அரசின்னு கிறுக்கிருக்காங்க” என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கையில்,

அங்கு குளத்துக்கரையில் சொர்ணாம்பிகை பாட்டி அமர்ந்துருப்பதை கவனித்தான் ஹர்ஷா.

உடனே அந்த பாட்டியை காண ஹர்ஷா குளத்துக்கரைக்கு விரைந்தான்.

அவனை பின்தொடர்ந்து கிஷோரும் “டேய் எங்கடா போற???” என கத்திக்கொண்டு சென்றான்.

அங்கு ஹர்ஷா சொர்ணாம்பிகை பாட்டியை நெருங்கி “ பாட்டி” என அழைத்தான்.
அப்போது கிஷோரும் அங்கு வந்தான்.

“ பாட்டி” என ஹர்ஷா மறுபடியும் சற்று சத்தமாக அழைக்க,

இம்முறை திரும்பிப்பார்த்த சொர்ணாம்பிகை
இருவரையும், எழுபது வயதிலும் தன் கூரிய விழிகளால் யாரென ஆராயும் பார்வையுடன் நோக்கி கொண்டிருந்தார்.

“ பாட்டி நாங்க கோவில்ல பேசிட்டு இருக்கும் பொது எதோ கொலைன்னு சொன்னிங்களே அது என்னது????” என ஹர்ஷா வினவ

“ என்ன கொலை??” என புரியாமல் பாட்டி வினவ

“ இல்ல பாட்டி இந்த மண்டபத்துல ஒரு பொண்ணு செத்துப்போச்சுன்னு பேசிட்டு இருந்தப்போ சொன்னிங்களே”

“எந்த பொண்ணு??? யாரு செத்துபோனா???”

“பேருகூட மயிலரசின்னு சொன்னிங்களே.”

“மயிலரசி….. பாவம் அந்தப்புள்ள செத்துப்போச்சு. ரொம்ப நல்ல பொண்ணு. எதுனாலும் உடனே உதவி செய்யும்”
என தன்போக்கில் புலம்ப

“ சரி பாட்டி. அந்த பொண்ணு எப்படி செத்துச்சு??”

“ எந்த பொண்ணு??? யாரு செத்துபோனா???” என மறுபடியும் அதேயே பாட்டி கேட்க.

“ டேய் என்னடா லூசு பாட்டியா???” என கிஷோர் ஹர்ஷாவிடம் கிசுகிசுக்க;

“ சும்மா இருடா” என ஹர்ஷா கடிந்துவிட்டு, “அதான் பாட்டி மயிலரசி”
என கூற

“ மயிலரசி….. பாவம் அந்தப்புள்ள செத்துப்போச்சு. ரொம்ப நல்ல பொண்ணு….” என பாட்டி மறுபடியும் புலம்ப

“ பாட்டி அந்த மயிலரசி தற்கொலை பண்ணிக்கிட்டாங்களா??”

“ தற்கொலையா இல்ல இல்ல… முப்பது வருசத்துக்கு முன்னாடி எப்படி என் தங்கச்சிய இதோ இந்த ஒத்த காலு மண்டபத்துல அந்த பாவி கொன்னானோ, அதே மாதிரி மூணு வருசத்துக்கு முன்னாடி இந்த மயிலு பிள்ளையையும் கொன்னுட்டான். நா இத சொன்னா என்னை லூசுங்குறாங்க” என அழ ஆரம்பித்துவிட்டார்.

“ என்னடா இப்படி அழுகுறாங்க???” என கிஷோர் கேட்க

“ இருடா” என ஹர்ஷா அவனிடம் கூறிவிட்டு,

“ பாட்டி நாங்க நீங்க சொல்றதை நம்புறோம். அது யாரு கொலை பண்ணுனது??” என கேட்க

“ யாரு???? என்ன கொலை???..” என மறுபடியும் பாட்டி கேட்க

“ டேய் மறுபடியும் முதல்ல இருந்தா” என கிஷோர் முணுமுணுக்க,

ஹர்ஷா அவனை முறைத்துவிட்டு “ அதான் உங்க தங்கச்சிய கொன்னது யாருன்னு கேட்டேன்”
என பாட்டியிடம் வினவினான்.

“ ஹ்ம்ம் எல்லாம் இந்த ஊரு பெரிய மனுஷன் ஆதிலிங்க மூர்த்திதான்”

“ என்ன பண்ணையாரா???”
என இருவரும் ஒரே நேரத்தில் கேட்க

“ ஆமா, அவன்தான் என் தங்கச்சியையும் கொன்னான் மயிலரசியையும் கொன்னான்.
சந்ததிகளுக்கு சொத்து சேர்க்குறேன்னு எல்லாரும் பாவத்தை சேர்க்குறாங்க.

இந்த பண்ணையார் எல்லாம் நல்லா இருக்கமாட்டான் இந்த அரங்கநாதன் ஒருநாளு கேட்பான் கேட்பான்” என தன் போக்கில் புலம்பிக்கொண்டு சென்றுவிட்டார்.

அவர் போவதை பார்த்து கொண்டிருந்த ஹர்ஷா “என்ன கிச்சா பண்ணையாரை கொலைகாரன்னு சொல்றாங்க இந்த பாட்டி”
என யோசனையுடன் கேட்க,

“ மச்சி அதுவே ஒரு லூசு அது பேச்செல்லாம் கேட்டுக்குட்டு.
வாடா போலாம் எனக்கு பசிக்குது சீக்கிரம் போய் மதிய சாப்பாட்டை சாப்டலாம்.” என கூறி ஹர்ஷாவை அழைத்துக்கொண்டு கிஷோர் பண்ணையார் வீட்டிற்கு சென்றான்.

பண்ணையாரின் வெளியே வீட்டிற்குள் இருவரும் சென்று மதிய உணவை உண்டுவிட்டு வரும்போது வீட்டின் வாயிலில் பந்தல் போட்டுக்கொண்டிருந்தனர்.

அதை பார்த்த கிஷோர் “ என்ன மச்சி எதுக்கு இப்போ இங்க பந்தல் போட்டுட்டு இருக்காங்க???”.

“ என்கிட்ட கேட்டா… எனக்கு எப்படி தெரியும். அங்க பாரு சாமிக்கண்ணு வராரு அவர்கிட்ட கேளு”
என் ஹர்ஷா கூறினான்.

“அண்ணே அண்ணே” என கிஷோர் சாமிக்கண்ணை அழைத்தான்.

அவர்களைப்பார்த்த சாமிக்கண்ணு அவர்களிடம் “ என்ன தம்பி எதுக்கு கூப்பிட்டீக??”

“ அண்ணே என்ன பந்தல் போடுறாங்க எதுவும் விஷேசமா” என கிஷோர் கேட்க

“ ஆமா தம்பி எங்க சின்ன அம்மாவுக்கு இன்னும் அஞ்சு நாளுல நிச்சயதார்த்தம் அதுக்குதான் இந்த பந்தல். ஊருக்கே இங்கதான் விருந்து”.

“ அது யாரு சின்ன அம்மா”

“ என்ன தம்பி இப்பிடி கேட்டீக எங்க ஐயா பொண்ணு வனிதா அம்மாதான்”

“ என்னது வனிதாவா ???? இந்த ஒருவாரமா எங்க இருந்தாங்க??” என ஹர்ஷா கேட்க

“ அவுங்க சொந்தக்காரவங்க கல்யாணத்துக்கு போயிருந்தாங்க இன்னைக்கு ராவுக்கு ஐயா கூட்டிட்டு வராக” என கூறிக்கொண்டிருந்த சாமிக்கண்ணு திடீரென “ ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் வனிதா அம்மா இங்க இந்த ஒருவாரமா இல்லைன்றது”…….. என
கேட்டான்


வனிதாவின் வருகை??????.............




(likes and comments போட்ட அனைவருக்கும் நன்றி friends .
இந்த episode ல நான் சொல்லிருக்க அனைத்தும் என்னோட கற்பனை தான் )








 
மிகவும் அருமையான பதிவு,
நிரஞ்சனா சுப்பிரமணி டியர்
 
Last edited:
Top