Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 5

Advertisement

niranjana subramani

Well-known member
Member
5.

“ஆஆ ….. ஆஆஆ……….”

என்ற ஒரு ஆணின் அலறலில் எழுந்த ஹர்ஷா, கையில் டார்ச் லைட்
எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

‘ யாராக இருக்கும்’ என்ற சிந்தனையுடன் சுற்றி முற்றும் பார்த்துக்கொண்டிருக்கும் போது,

ஆதிலிங்க மூர்த்தியின் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையிலிருந்து ஒரு நிழல் உருவம் இவனை நோக்கி கொண்டிருந்தது .

அந்த நிழல் உருவத்தை கையில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் பார்க்கும் சமயம் அந்த உருவம் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தது.

‘யாருடையது இந்த உருவம். ஒருவேளை பண்ணையாரா இருப்பாரோ??..... ஆனா
அந்த சத்தம் யாரோடதா இருக்கும்” என முணுமுணுத்தபடி ஹர்ஷா பண்ணையாரின் வீட்டை நோக்கி செல்ல முயலுகையில்,

திடீரென ஒரு கரம் அவனின் வலதுபுற தோல் பட்டையில் பதிந்து அவனை தடுத்து
நிறுத்தியது.

சிறு திடுக்கிடலுடன்
ஹர்ஷா திரும்பி தன் கையில் உள்ள டார்ச் மூலம் பார்க்கையில்,

படிந்து வாரிய சிகை; முகத்தில் பெரிய மீசை, சிவப்பு ஏறிய கண்கள்;நெற்றியில் திருநீறு பட்டை ; அரைக்கை வெள்ளை பனியனும்அணிந்து கையில் அரிக்கேனுடன் முரட்டு உருவம் கொண்டு ஒருவன் நின்றான்.

ஹர்ஷா அவனை நோக்கி கொண்டிருக்கையில்

“ யார் நீ???” என
முரட்டு குரலில் புதியவன் ஹர்ஷாவிடம் வினவ,

“ நான் இங்க தோட்டத்து வீட்டுல தங்கிருக்கேன். நீங்க யாரு” என ஹர்ஷா வினவ,

“ஓ!!!! நீங்க தான் சாமி அண்ணே சொன்ன, தோட்டத்து வீட்டுல தங்கிருக்கிற தம்பியா?”
என அந்த புதியவன் கேட்க

“ ஆமா, நீங்க யாருன்னு கேட்டேனே?”

“ நான் இங்குன ஐயா வீட்டுலதான் வேலைபார்க்குறேன்க பேரு மாரி”

“ஓ!!! வீட்டு காவலுக்குன்னு சாமி அண்ணே சொன்னாங்களே அவரா?”.

“ ஆமா தம்பி. நீங்க இந்நேரத்துல இங்குன என்ன செய்றீக”.

“ இல்ல எதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு அதான் என்னனு பார்க்கலாம்னு வந்தேன்"

“ என்ன சத்தம் தம்பி?”

“ யாரோ அலறுன மாதிரி……”

“ அப்பிடியெல்லாம் எனக்கு எதுவும் கேட்கலைங்களே”
என மாரி யோசனையுடன் கூற.

“ இல்ல இப்போ ஒரு பத்து
நிமிசத்துக்கு முன்னாடி ரெண்டுதடவை கேட்டுச்சு”

“ தம்பி நா இங்க ரவைக்கு ஒரு ஒம்பது மணிக்கு வந்தேன் அப்பதிலிருந்து எந்த ஒரு அலறல் சத்தமும் நா கேட்கல. நீங்க கனா ஏதும் கண்டுருப்பீங்க புது இட
மில்ல அதான்” என மாரி கூறினான்.

“ இல்லங்க….”என ஹர்ஷா எதோ மறுத்து கூற வர.

“ தம்பி அதான் நா சொல்றேன்ல இங்க அப்பிடி சத்தம் எதுவும் கேட்கல, போய் உறங்குக.”

“இல்லைங்க எனக்கு யாரோ ஒரு ஆண் குரல் அலறுன சத்தம் கேட்டுச்சு”
என் மறுபடியும் ஹர்ஷா கூறி பண்ணையார் வீட்டை நோக்கி செல்ல முயன்றான்.

“ நான்தான் எந்த சத்தமும் கேட்டலைன்னு சொல்றேனே தம்பி. மறுபடியும் நீங்க இப்பிடி ஐயா வீட்டை நோட்டம் பார்க்க போனீங்கன்னா காலைல நா ஐயாட்ட சொல்ல வேண்டியதுவரும்.

பிறவு நீங்க இங்குன தங்குறது சந்தேகம்தான் பார்த்துங்கோங்க”
என மாரி கூறிவிட்டு சென்றுவிட்டான்.

‘ நிச்சயமா இங்க என்னோமோ நடக்குது. முதல்ல அந்த அலறல் யாரோடது கூடியவிரைவில் கண்டுபிடிக்குறேன்.’ என எண்ணிக்கொண்டு உறங்க சென்றுவிட்டான்.

ஹர்ஷா சென்றுவிட்டதை பின்னுருந்து உறுதிப்படுத்திவிட்டு மாரி நேராக பண்ணையார் வீட்டின் முகப்பு அறைக்கு சென்றான்.

அங்கு அமர்ந்து இருந்த பண்ணையார் முன் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றான்.

“ என்ன மாரி பய செம உஷாரு போல?” என ஆதிலிங்க மூர்த்தி சிறு நகைப்புடன் வினவ.

“ ஆமாங்கய்யா அலறல் சத்தம் கேட்டுச்சுன்னு வீட்டை சுத்திட்டு இருந்தாரு. நா கனா எதுவும் கண்டுருப்பிங்கன்னு சொல்லி சமாளிச்சு அனுப்பிச்சுட்டேங்கய்யா”
என மாரி கூறினான்.

“ஓ ஆனா அவன் நம்பிருக்கமாட்டான். இனிமேதான் என்னன்னு தோண்ட ஆரம்பிப்பான். அவன்மேல் ஒரு எதுக்கும் கண்ணை வச்சுக்கோ” என ஆதிலிங்க மூர்த்தி கூறினார்.

“ சரிங்க ஐயா. ஆனா இப்பிடி இவங்கள சந்தேகத்தோடு தங்க வைக்கறதுக்கு, நாம உதவி செய்யாம வெளில அனுப்பிடலாம்ல ஐயா?” என மாரி
தயக்கத்துடன் கூறினான்.

“ இல்ல மாரி காரணமாதான் இவங்கள இங்க வச்சிருக்கேன்.
சரி நீ வீட்டுக்கு கிளம்பு”

“ இல்லங்கய்யா பொழுது விடுஞ்சவுடன் போறேன்”

“ ஏன் மாரி?? மணி ஒன்னு ஆச்சு. உன் சம்சாரத்துக்கு முடியலன்னு சொன்ன. இனி நான் இங்க பார்த்துக்குறே போயிட்டு வா.”

“ இல்லங்கய்யா”
என மாரி மறுபடியும் தயங்க

“ அம்மாவசை முடுஞ்சு இன்னைக்கு நாலாவது பிறை அதனாலதான் இன்னைக்கு கொஞ்சம் சிரமமா போச்சு.
இப்போ பரவால்ல நான் பார்த்துக்குறேன்” என ஆதலிங்கமூர்த்தி கூற

“ இன்னைக்கு நாலாவது பிறைன்றத நா மறந்துட்டேங்க ஐயா”

“ நீ மறந்துடலாம் ஆனா நான்?” என கூறி சிறிது நேரம் கண்களை மூடி தன் வேதனையை அடக்கினார்.
பின் வற்புறுத்தி மாரியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு உறங்க சென்றார் ஆதிலிங்கமூர்த்தி.

மாரியிடம் பேசிவிட்டு தோட்டத்து வீட்டிற்கு வந்த ஹர்ஷா பலவாறு யோசனையில் இருந்தான்.
பின் காலையில் கிஷோரிடம் இதை பற்றி கூறிக்கொள்ளலாம் என்ற முடிவுடன் உறங்கினான்.

காலையில் பண்ணையார் வீட்டில் உணவு உண்டுவிட்டு அரங்கநாதர் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருக்கையில், ஹர்ஷா கிஷோரிடம்
இரவு நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கிஷோர்,

“ ஏன்டா இருட்டுல நீ பார்த்த நிழல் உருவம் உண்மையா?”

“உண்மைதான்டா. நேத்து நம்மள மாடியில இருந்து பார்த்ததா சொன்னில ரெண்டு பேரு. அதுல ஒன்னு ஆதிலிங்க மூர்த்தி இன்னொன்னு நேத்து ராத்திரி நான் பார்த்த உருவம்.”
என ஹர்ஷா கூற

“ எதை வைத்து அப்படி நிச்சயமா சொல்ற ஹர்ஷா?”

“ நேத்து நானும் அந்த ரெண்டு உருவங்களையும் பார்த்தேன். ஆனா முகம் தூரத்துல தெளிவா தெரியல. ஒருத்தரோட வெள்ளி கை காப்பு மட்டும் தெருஞ்சுச்சு.

இங்க வெள்ளிக்காப்பு போட்டுருக்கது ஆதிலிங்க மூர்த்திதான். அதே மாதிரி ரெண்டாவது உருவம் நம்மள எந்த அறைல இருந்து பார்த்துச்சோ .
அதே அறை ஜன்னல் வழியேதான் நேத்து இரவும் பார்த்தது.”

“ நீ சொல்றது சரி ஹர்ஷா. ஆனா இந்த அலறல் சத்தம் ஏன் மாரிக்கு கேட்கல?”.

“ கேட்டுருக்கும் ஆனா மறைக்குறான்” என ஹர்ஷா கூற

“ எதைவச்சு அப்படி சொல்ற ஹர்ஷா?”

“ சத்தம் கேட்டுச்சுன்னு சொல்றேன் , அப்படியான்னு!! சிறு திடுக்கிடல்கூட இல்லாம, முன்னமே நான் கேட்கப்போறது என்னன்னு தெரிஞ்ச மாதிரி இருந்தது அவரோட பதில்”

“ ஓ!!! இப்போ அடுத்து என்ன செய்றது ஹர்ஷா??”

“ முதல நாம இப்போ கோவிலுக்கு போயிட்டு அங்க இருக்குற ஒற்றை கால் மண்டபத்தை பத்தி தெரிஞ்சுக்குவோம்.
அப்புறம் அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்கலாம்”.

“ சரி வாடா போகலாம்” என கிஷோர் கூற

இருவரும் அரங்கநாதர் கோவிலுக்கு புறப்பட்டனர்.

வீட்டை தாண்டி சிறுது தூரம் நடக்க ஆரம்பிக்கையில்,

“ ஐயா!!! ஐயா செத்த நில்லுங்க”
என்று கூறிக்கொண்டு கந்தன் இவர்கள் பின்னால் ஓடிவந்தான்.

கந்தன் ஓடிவருவதை பார்த்து “எங்களையா நிக்க சொன்னிங்க ?”என ஹர்ஷா வினவ,

“ ஆமாங்கய்யா.
உங்களுக்கு கோவிலுக்கு போற பாத தெரியாதுன்னு உங்களுக்கு வழிய காட்டிட்டு வரசொன்னாக சாமிக்கண்ணு அண்ணே” என கந்தன் கூறினான்.

“ ஓ சரி கந்தன். ஆனா உங்களுக்கு வேற எதுவும் வேலை இருந்தாக்கூட பாருங்க நாங்க இங்க யார்கிட்டையாவது பாதையை கேட்டு கோவிலுக்கு போய்க்குறோம்” என ஹர்ஷா கூறினான்.

“ வேலை எல்லாம ஒன்னும்மில்லீங்க. உங்களுக்கு கோவிலை காட்டிட்டு தென்னத்தோப்புக்கு போகணுங்க”
என கந்தன் கூற; மூவரும் அரங்கநாதர் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

“ ரொம்ப நாள் இங்க பண்ணையார் வீட்டுல வேலை பார்க்குறீங்களா கந்தா” என கிஷோர் கேட்க,

“ இல்லீங்க ஒரு நாலு வருஷம்தான். அதுக்கு முன்னாடி பக்கத்தூரு பண்ணைல வேல பார்த்தே”

“ சரி….. கந்தா பண்ணையாருக்கு அதிகமா கோவம் வருமோ” என ஹர்ஷா வினவ,

“ ஏங்கையா கேட்குறீக?”

“ இல்ல நாங்க வந்த அன்னைக்கி குடிக்க எதுவும் குடுக்கலன்னு சாமிகண்ணை சத்தம்போட்டாரு அதான்”

“ ஆமாங்க ஐயாவுக்கு சட்டுன்னு கோவம் வந்துடும். அதுவும் அவுங்க சொன்னமாதிரி செய்யல…. சிலநேரம் கையும் பேசும். அம்புட்டு கோவம் வரும்” என கூறிக்கொண்டிருக்கையிலையே திடீரென எதோ நினைவு வந்தவனாக,

“சொல்ல மறந்துட்டேங்க இன்னைக்கு கோவில் நடை காலையில 11 மணிக்கு எல்லாம் சாத்திடுவாங்க. இப்போவே மணி 10.30 சீக்கிரம் வாங்க போகலாம்” என கூறி கந்தன் வேகமாக நடக்க ஆரம்பித்தான்

“ ஏன் அப்படி இன்னைக்கு சீக்கிரம் நடையை சாத்திடுவாங்க??” என கிஷோர் வினவ

“ இன்னைக்கு அம்மாவாசை முடிஞ்சு நாலாவது நாள் அன்னைக்கு மட்டும் அப்படித்தான்” என கந்தன் கூறினான்.

“ அதுக்கு எதுவும் காரணம் இருக்கா கந்தன்?” என ஹர்ஷா வினவ

“ அது வந்துங்க……..” என கந்தன் இழுக்க,

“ சொல்லக்கூடாதுன்னா சொல்லவேணாம் கந்தன். நாங்க வேற யாருகிட்டையாவது கேட்டுக்குறோம்” என ஹர்ஷா கூறினான்.

“ அப்படியெல்லாம் இல்லீங்க. அது ஒரு மூணு வருசத்துக்கு முன்னாடி இந்த கோவில்ல இருக்குற ஒற்றை கால் மண்டபத்துல ஒரு பொண்ணு செத்துடுச்சு.

அந்த பொண்ணு செத்தது அம்மாவாசை முடிஞ்சு நாலாவது நாள் அன்னைக்கு தான்.
அதனால ஒவ்வொரு மாசமும் இந்த நாள் அன்னைக்கு கோவில் நடை யை சீக்கிரம் சாத்திடுவாங்க” என கந்தன் கூறி முடித்தான்.

“ எனக்கு ஒரு விஷயம் புரியல கந்தா. அந்த பொண்ணு இறப்புக்கும் கோவில் நடை சாத்துரதுக்கும் என்ன சம்பந்தம்?” என கிஷோர் புரியாமல் வினவ,

“ அது வந்து அந்த பொண்ணோட ஆவி இங்குனாதான் இந்த ஒற்றை கால் மண்டபத்துல இருக்குறதா சொல்றாங்க.
அதோட அந்த பொண்ணு செத்த அன்னிக்கு அந்த பொண்ணோட ஆவி ரொம்ப உக்கிரமா இருக்கும்னு சொல்றாங்க.

அதான் கோவிலை சீக்கிரம் மூடிருறாங்க. அதோட இன்னைக்கு ராவும் யாரும் இங்குட்டு வர மாட்டாங்க”
என கந்தன் கூறி முடிப்பதற்கும் கோவிலை நெருங்குவதற்கு சரியாய் இருந்தது.

“ அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சா இல்ல கொலையா கந்தன்? என ஹர்ஷா வினவ,

“ அது…… அது.. ….அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்குச்சுங்க……….” என
சிறு தயக்கத்துடனும் யோசனையுடனும் கூறி விட்டு பின் அவசரமாக

“ சரிங்கய்யா நேரமாச்சு நா தோப்புக்கு போவணும் நீங்க சீக்கிரம் முடிச்சுட்டு வீட்டுக்கு போயிடுங்க” என கூறிவிட்டு கிளம்பினான்.

“ என்னடா புதுசா இவன் வேற பொண்ணு தற்கொலை, ஆவி அப்படின்னு இப்படின்னு சொல்லிட்டு போறான்” என கிஷோர் ஹர்ஷாவிடம் கூற,

ஆனால் ஹர்ஷா அதனை கவனிக்காமல் எதோ ஒரு யோசனையுடன் இருந்தான்.

“ டேய் ஹர்ஷா” என சத்தமாக அழைக்க,

“ என்னடா???” என
தன் யோசனையை தடைசெய்த சலிப்புடன் கேட்க

“ என்ன யோசனைல இருக்க?”

“ இல்ல இறந்த அந்த பொண்ணை பத்திதான். எதனால தற்கொலை பண்ணிருக்கும். அதுவும் இங்க கோவில்ல இருக்க மண்டபத்துல….”
என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கையில், தீடீரென

“அந்த புள்ள… மயிலரசி…. செத்தது தற்கொலை இல்ல கொலை தான்……
எனக்கு தெரியும் ……எனக்கு தெரியும்… பாவம் அந்த புள்ள…” என தன் போக்கில் புலப்பிக்கொண்டு அங்கு அமர்ந்துகொண்டிருந்த எழுபது வயது பாட்டி ஒருவர் எழுந்து கோவில் குளக்கரையை நோக்கி சென்றார்.



யார் இந்த மயிலரசி????????........

இவளின் இறப்பு தற்கொலையா?????? ........


கொலையா????????.........







 
மிகவும் அருமையான பதிவு,
நிரஞ்சனா சுப்பிரமணி டியர்
 
Last edited:
இருக்க இருக்க மூடிச்சி அதிகமாகிட்டே போகுது .... கண்டிப்பா அமாவாசை 4வது நாளுக்கும் பண்ணையாருக்கும் சம்பந்தம் இருக்கு... அதே போல அந்த வீட்டுல இருக்கு இன்னொரு ஆளுக்கும்
 
Top