Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 4

Advertisement

niranjana subramani

Well-known member
Member
4.

“ நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா அந்த ஏழுமலை பொண்ணுக்கு கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆச்சு. 5 வயசுல ஒரு குழந்தையும் இருக்கு” என ஹர்ஷா கடித்த பற்களுக்கிடையில் கூற

“என்னடா சொல்ற!!!..... அப்போ ஏழுமலை கொன்னுருக்க வாய்ப்பு இல்லையோ?” என யோசனையுடன் கேட்க

“ நான் எப்போ அப்படி சொன்னே?”.

“ பின்ன?”

“ டேய் நீ சொன்ன மாதிரி அதுக்கு வாய்ப்பு இருக்கு. ஏன்னா நீ சொன்ன மாதிரி
அவுங்க ஓடி போறதா இருந்த விஷயம் ஏழுமலைய தவிர யாருக்கு தெரியாது.

அதேநேரம் இதுல இன்னொன்னு நமக்கு தெரிய வேண்டியது வனிதாவுக்கு என்ன
நடந்தது அப்படின்றதுதான். அது தெரிஞ்சாதான் நாம அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்க முடியும்.

அதுக்குதான் இந்த அரங்கநாதபுரத்துக்கு போறோம் சரியா” என ஹர்ஷா பொறுமையாக கூறினான்.

“ அது இல்லடா” என மறுபடியும் கிஷோர் ஆரம்பிக்க

“ டேய் ஒழுங்கா அமைதியா தூங்கு. சும்மா பட்டையில போட்ட நண்டு மாதிரி தொண தொணன்னு எதுவும் சொல்லாம” என ஹர்ஷா கூறிவிட்டு உறங்க ஆரம்பித்தான்.

“ஹுகூம் நாம நல்லா யோசிச்சுட்டா யாருக்கும் பிடிக்காது என முணுமுணுப்புடன் கிஷோரும் உறங்க ஆரம்பித்தான்.

அதன் பின் அதிகாலை 4 மணிக்கு மாணாகிரியூரில் இறங்கி, 5.30 மணிக்கு அரங்கநாதபுரத்துக்கு வந்தனர்.

“ ஹர்ஷா ஒருவழியா அரங்கநாதபுரத்துக்கு வந்தாச்சு. நாம இங்க எங்க தங்கப்போறோம்?” என கிஷோர் கேட்க

“ வாடா சொல்றேன்” என ஹர்ஷா கூற, இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

“ அங்கிட்டு எங்க தம்பிகளா போறீக?”.

என திடீரென ஒலித்த கரகரப்பான குரல் கேட்க ஹர்ஷாவும் கிஷோரும் தூக்கிவாரிப்போட திரும்பி பார்த்தனர்.

அங்கு சைக்ளில் வெள்ளைசட்டையும் மடித்துக்கட்டிய கருப்பு வேட்டியும் உடுத்தி 40 வயது மதிப்புள்ள ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவரை கண்ட ஹர்ஷா அவரிடம் நெருங்கி, “அண்ணே நீங்களா எங்களை கேட்டிங்க???”.

“ ஆமா தம்பி நாந்தான் கேட்டேன்…...

நீங்க ஊருக்கு புதுசா தம்பி ?”என அந்த புதியவர் கேட்க

“ ஆமா அண்ணே நாங்க கோயம்பத்தூரில் இருந்து வரோம்” என ஹர்ஷா பதிலளித்தான்.

“ இங்க யாரு வீட்டுக்கு வந்துருக்கீக தம்பி?”

“ ஆதிலிங்கமூர்த்தி சார பார்க்கவந்துருக்கோம் அண்ணே”

“எங்க பண்ணையார் ஐயாவையா பார்க்க வந்துருக்கீக!!! அதுக்கு எதுக்கு தம்பி ரெண்டு பேரும் கிழக்கால போறீக. அது அரங்கநாதர் கோயிலுக்கு போற பாத.

வாங்க, நா ஐயா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”
என அந்த புதியவர் கூற

ஹர்ஷாவும் கிஷோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு யோசனையில் இருந்தனர்.

அதனை கண்ட அந்த புதியவர், “தம்பிகளா ரொம்ப யோசிக்காதீய. நா ஐயா வீட்டுல தான் வேலை செய்றேன் அதனால வாங்க நானே கூட்டிட்டு போறேன்”
என கூறினார்.

பின் ஹர்ஷாவும் கிஷோரும் அந்த புதியவருடன் ஆதிலிங்கமூர்த்தி வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

“ அண்ணே உங்க பேரு என்ன?” என கிஷோர் வினவினான்.

“ சாமிக்கண்ணு தம்பி”

“ அண்ணே நீங்க எத்தனை வருசமா பண்ணையார்கிட்ட வேலை பார்க்குறீங்க?” என ஹர்ஷா வினவினான்.

“ என்ன ஒரு ஆறு வருசமா ஐயாட்ட வேலைபார்க்குறே.
.ஆமா நீங்க என்னவிஷயமா தம்பி ஐயாவ பார்க்கபோறீக?”.

“ இந்த ஊரை பத்தியும், இங்க உள்ள கோவில் பத்தியும் அப்புறம் இங்க இருக்க ஒற்றை கால் மண்டபம் பத்தியும் கட்டுரை எழுதப்போறோம் நாங்க.

அதனால இங்க தங்குறதுக்கு உதவிகேட்டு பண்ணையாரை பார்க்க போறோம்”
என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கும்போது,

“ என்னது அந்த ஒத்த காலு மண்டபமா!!!!!.....” என சாமிக்கண்ணு அதிர்ச்சியுடன் வினவ;

அதுவரை இவர்கள் உரையாடலை கவனித்துக்கொண்டு வந்த கிஷோர்

“ எதுக்கு அண்ணே நீங்க இப்போ அதிர்ச்சி ஆகுறீங்க?....” என வினவ,

“ அது வந்து தம்பி……….” என திணறிவிட்டு “…..ஒண்ணுமில்லங்க இதோ ஐயா வீடு வந்துருச்சு வாங்க போகலாம்” என பெரிய கேட் முன்னாடி நின்றார்.

“ என்னடா இது ஒத்த காலு மணடபமா அப்படின்னு சொல்லிட்டு; இப்போ இவருக்கு ரெண்டு காலுளையும் சுடுதண்ணி ஊத்துனா மாதிரி ஓடுறாரு” என கிஷோர்
ஹர்ஷாவிடம் கேட்க,

“ அதான் நானும் யோசிக்கிறேன். சரிவிடு இங்க தானே இருக்க போறோம் என்னன்னு பார்த்துக்கலாம்” என ஹர்ஷா கூறினான்.

பின் நண்பர்கள் இருவரும் சாமிகண்ணை பின்தொடர்ந்து, அவர்களும் அந்த பெரிய கேட் முன்னால் நின்றனர்.

“ என்னடா வீட்டை காட்ட சொன்னா அரண்மனையை காட்டுறாரு” என கிஷோர் ஹர்ஷாவிடம் கிசுகிசுக்க;

“ சும்மா இருடா” என ஹர்ஷா கூறி கொண்டிருக்கும்போது,

“ என்ன சொல்றாக தம்பி?” என சாமிகண்ணு வினவினார்.

“ ஒன்னும் இல்ல அண்ணே வீடு அழகா இருக்குன்னு சொல்றான்” என ஹர்ஷா கூறினான்.

“ ஓ!!!... இது எங்க ஐயாவோட பாட்டன் கட்டுனதாம் இன்னும் இத இவ்வளவு அழகா பராமரிகுராக எங்க ஐயா” என கூறிவிட்டு,

“ ஏல…. கந்தா…… எங்குட்டுல போன சீக்குர வா” என கத்தினார் சாமிக்கண்ணு.

“ இதோ வந்துட்டேண்ணே” என கைகளை தன் துண்டில் துடைத்து கொண்டேவந்தார் கந்தன்.

“எங்கவ போன?” என சாமிக்கண்ணு வினவ,

“ சாப்டுகிட்டு இருந்தே…. அதான் வர நேரமாச்சு ஆமா இவிக யாருண்ணே?” என கந்தன் கேட்க

“ நம்ம ஐயாவ பார்க்க வந்துருக்காக. நீ மொத கதவ தெற” என சாமிக்கண்ணு கூறினார்

இவர்கள் வாசலில் பேசிக்கொண்டிருக்கும்போது,
பண்ணையாரின் வீட்டின் மாடியில் உள்ள அறையின் ஜன்னல் வழியே இரு ஜோடி கண்கள் இவர்களை வெறித்து நோக்கி கொண்டிருந்தது.

ஹர்ஷாவையும் கிஷோரையும் உள்ளே அழைத்து சென்ற சாமிக்கண்ணு “ரெண்டு பேரும் இங்க இருங்க. நா போய் ஐயாவை கூட்டியாரேன்” என கூறிவிட்டு ஆதிலிங்க மூர்த்தியை அழைக்க சென்றுவிட்டான்.

“ மச்சி” என கிஷோர் ஹர்ஷா கையை சுரண்ட,

“ என்ன கிச்சா”

“ இல்ல நாம வெளியில நிற்கும்போது எதோ ரெண்டு உருவம் மாடியில இருந்து நம்மளையே பார்த்தமாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தா யாரும் இல்ல அதான் ஒரு மாதிரி இருக்கு”.

“ஓ!!!”

“ என்னடா ‘ஓ’ ன்னு சொல்ற”

“ இல்ல எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு.”

“ யாரோ பார்க்குற மாதிரியா?”

“ ஹ்ம்ம்… அதான் யோசிச்சுகிட்டு இருந்தேன்”.என ஹர்ஷா பேசிக்கொண்டிருக்கையில்,

மாடியிலிருந்து வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கை சட்டை, நெற்றியில் திருநீறு பட்டை, கையில் வெள்ளி காப்பு என அறுபது வயசுள்ள ஆதிலிங்க மூர்த்தி நாற்பது வயசு இளமையுடன் இறங்கி வந்தார்.

அவரை பார்த்தவுடன் நண்பர்கள் இருவரும் எழுந்து நின்றனர்.

ஆதிலிங்க மூர்த்தி அருகில் வந்த பின் சாமிக்கண்ணு, “ஐயா நா சொன்னேன்ல உங்கள சந்திக்க வெளியூர்ல இருந்து ரெண்டு தம்பிக வந்துருக்காகன்னு. அது இவுகதான்”
என அறிமுகப்படுத்தினார்.

“ ஓ!! ஏன் நிற்குறீங்க ரெண்டு பேரும் உட்காருங்க. சாமிக்கண்ணு வந்தவங்களுக்கு சாப்பிட எதாவது குடுத்தீயா??” என ஆதிலிங்கமூர்த்தி கேட்க

“ இல்லங்கய்யா….” எனசாமிக்கண்ணு தயக்கத்துடன் கூற

“ வீட்டுக்கு வந்தவங்களுக்கு எதாவது குடிக்க கொடுக்க சொல்லிருக்கேன்னா இல்லையா” என கடிந்துவிட்டு,

“ கனகம்… கனகம்…” என உரக்க அழைத்தார்.

“ ஐயா” என கனகம் வர,

“ வீட்டுக்கு வந்துருக்க ரெண்டுபேருக்கும் குடிக்க டீ கொண்டுவா” என கூறினார்

“ அப்புறம் எதுக்கு நீங்க ரெண்டு பேரும் என்னைய சந்திக்க வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா”
சற்று விரைப்புடன் ஆதிலிங்கமூர்த்தி வினவினார்.

“ சார் என் பெயர் ஹர்ஷவர்தனன். இவன் என் நண்பன் கிஷோர். நாங்க கலைநயம் பத்திரிக்கையில் இருந்து வரோம்.

இங்க இந்த ஊர பத்தி, இங்க இருக்க கோவில், அப்புறம் மண்டபம் எல்லாம் ஆராய்ச்சி பண்ணி கட்டுரை எழுதலாம்னு வந்துருக்கோம்.

அதுக்கு இங்க தங்குறதுக்கும், ஆராய்ச்சி பண்றதுக்கும் ஊரு பெரியவர், அப்படின்ற முறையிலஉதவி கேட்டு வந்துருக்கோம் சார்”.

அதற்குள் டீ கொண்டுவர “ சரிப்பா ரெண்டு பேரும் முதல டீயை குடிங்க” என கூறிவிட்டு,

“ சாமிக்கண்ணு நம்ம வீட்டுக்கு பின்னாடி இருக்க தோட்டத்து வீட்டை சுத்தப்படுத்தச்சொல்லு,

நீங்க ரெண்டு பேரும் நம்ம தோட்டத்து வீட்டுலையே தங்கிக்கோங்க” என கூற,

“ நன்றி சார்” என இருவரும் கூறினர்.

அதனை ஒரு தலை அசைப்புடன் ஏற்றுக்கொண்டு வாசல்வரை சென்ற ஆதிலிங்க மூர்த்தி, “தம்பிங்களா ஊரை பத்தி மட்டும் ஆராய்ச்சி பண்ணுங்க. இங்க இருக்கவங்கள பத்தி இல்ல.சரியா?

அப்புறம் சாப்பாடும் இங்கயே சாப்பிட்டுக்கோங்க. சாமிக்கண்ணு இவுங்களுக்கு என்னென்ன வேணும்னு பார்த்து பண்ணிகொடுத்துடு” என கூறி ஒரு ரெண்டு நிமிடம் ஹர்ஷாவை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

“ சரிங்க ஐயா” என சாமிக்கண்ணு கூற, ஒரு தலை அசைப்புடன் தோப்புக்கு சென்றார் ஆதிலிங்க மூர்த்தி.

“ வாங்க தம்பிங்களா காலை சாப்பாட்டை இங்க சாப்பிடுங்க. அதுக்குள்ள நீங்க தங்குற தோட்டத்து வீட்டை சுத்த பண்ண சொல்லிடுரேன்”
என சாமிக்கண்ணு கூறிவிட்டு சென்றார்.

“என்னடா இவரு ஒரு விவரமும் கேட்காம நம்மள தங்க சொல்லிட்டாரு??”
என கிஷோர் ஹர்ஷாவிடம் மெதுவான குரலில் கேட்க,

“ அதை தான் நானும் யோசிக்குறேன்.
அதோட அந்த ஆதிலிங்க மூர்த்தி என்னை ஏன் அப்படி பார்த்தார்?....” என ஹர்ஷா கூற.

“ சரி சரி ரொம்ப யோசிக்க வேணாம் மச்சி, அப்புறம் பிரச்சனை மறந்து யோசனை மட்டும்தான் மனசுல நிற்கும்.

எனக்கு இப்போ ரொம்ப பசிக்குது வா சாப்பிட போலாம்” என கிஷோர் ஹர்ஷாவை இழுத்துக்கொண்டு சாப்பிட சென்றான்

காலை உணவை முடித்துவிட்டு தோட்டத்து வீட்டுக்கு சென்ற ஹர்ஷாவும் கிஷோரும் பயண களைப்பில் உறங்கிவிட்டு மதியம் 2 மணிக்கு எழுந்தனர்

அப்பொழுது சரியாக வீட்டின் கதவு தட்டும் ஒலி கேட்டது,

‘ யாராக இருக்கும்’ என யோசனையுடன் ஹர்ஷா கதவை திறக்க; அங்கு நெடு நெடு என உயரத்துடன் மாநிறத்துடன் ஒரு 30 லிருந்து 35 வயதுள்ள ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

“ நீங்க” என ஹர்ஷா இழுக்க

“ ஐயா நா வேலுங்க. இங்க பண்ணையார் ஐயா வீட்டுல வேலை பார்க்குறேன்ங்க. சாமிக்கண்ணு அண்ணே மதியத்துக்கு சாப்பாடு குடுத்து விட்டாங்க.”

“ ஓ அப்படியா உள்ள வாங்க வேலு. இதோ இங்க இருக்க டேபிள்ல வச்சுருங்க நாங்க போட்டு சாப்டுக்குறோம்” என கூற

“ சரிங்கய்யா” என கூறிவிட்டு சாப்பாட்டை வைத்துவிட்டு சென்றுவிட்டான் வேலு.

பின் மதிய உணவை உண்டு முடித்துவிட்டு கிஷோர் மறுபடியும் உறங்க செல்ல,

“ டேய் எங்கடா மறுபடியும் தூங்க போற”

“ எனக்கு தூக்கம் வருது மச்சி”

“ தூக்கமா??? பிச்சுடுவேன். வாடா அரங்கநாதர் கோவில் வரை போய்ட்டு வந்துடலாம்” என கிஷோரை ஹர்ஷா அழைத்துக்கொண்டிருக்கும் போது,

ஜன்னல் வழியே சாமிக்கண்ணு தோட்டத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்தான். பின் கோவிலுக்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டு சாமிக்கண்ணை நோக்கி கிஷோரை ஹர்ஷாஅழைத்து சென்றான்.

“ அண்ணே சாமி அண்ணே” என நண்பர்கள் இருவரும் தோட்டத்தில் நின்றுகொண்டு அழைக்க.

சத்தம் கேட்டு திரும்பி பார்த்த சாமிக்கண்ணு “தம்பிகளா அங்கனையே இருங்க நா வாரேன்” என இவர் அவர்கள் அருகில் சென்றார்.

“ நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீகளா??”

“ சாப்டோம். வேலுன்றவரு கொண்டுவந்தார்.”

“ அது இன்னைக்கு வந்த களைப்புல தூங்குவீங்கன்னு சாப்பாட்ட கொடுத்துவிட்டே. இன்னைக்கு ராவுக்கும் கொடுத்துவிட்டுருறேன்.

நாளையிலிருந்து வீட்டுக்கு வந்துடுங்க தம்பிகளா ஐயா சொல்ல சொன்னாங்க”

“ சரிங்க அண்ணே. ஆமா நீங்கதான் இங்க வீட்டுலயும், தோட்டத்துக்கு மேற்பார்வையா” என ஹர்ஷா கேட்க,

“ ஆமா தம்பி”

“ எப்படி வீட்டுல அத்தனை வேலைகாரர்களுக்கும் வேலைய பிரிச்சு குடுத்துட்டு, இங்கயும் எல்லா வேலையையும் பார்க்குறீங்க” என கிஷோர் வினவ

“ என்ன தம்பி அத்தனைன்னு சொல்றீக அஞ்சு பேருதான். அது எல்லாம் வேலை சுலபந்தான்”.

“ அஞ்சு பேருதானா அண்ணே??”

“ ஆமா தம்பி காலையில பார்த்திகள கந்தன் அப்புறம் உங்களுக்கு சாப்பாடு கொண்டுவந்தான்ல, வேலு அப்புறம் கனகம், வள்ளி, மாரி”

“ அதுயாரு அண்ணே வள்ளி, மாரி?” என ஹர்ஷா கேட்க

“ அவுகளும் இங்கனதான் ஐயா வீட்டுல வேலைபார்க்குராக. வள்ளி அவ மக பிரசவத்துக்காக விடுப்பு சொல்லிட்டு போயிருக்கா. இன்னும் ஒரு அஞ்சு நாளுல வந்துருவா.

மாரி இன்னைக்கு ராவுக்குத்தான் வருவான். இன்னிக்கு வீட்டு காவல் அவன்தான். சரிப்பா ஐயா வந்துருவாங்க எல்லாருக்கும் டீ போட சொல்லணும். உங்களுக்கும் குடுத்துவிடுறேன்” என கூறிவிட்டு சாமிக்கண்ணு சென்றுவிட்டார்.

“ என்னடா இவர்க்கிட்ட பேச்சு கொடுத்து வனிதாவை பத்தி தெருஞ்சுக்கலாம்ன்னு, பார்த்தா மனுஷ வேலைகாரவங்கள மட்டும் சொல்லிட்டு பாதியோட போய்ட்டாரு” என கிஷோர் கேட்க.

“ சரி விடு கிச்சா ஏதோ ஒன்னு தெரிஞ்சுக்கிட்டோம்ல வா போலாம்” என பேசிக்கொண்டே இருவரும் திரும்பி தோட்டத்து வீட்டுக்கு சென்றனர்.

பின் இரவு உணவை முடித்துவிட்டு ஹர்ஷாவும் கிஷோரும் 9 மணிக்கு உறங்க ஆயத்தமாகினர்.

அப்போது “ஏன் மச்சி இத தோட்டத்து வீடுன்னு சொல்றதுக்கு பதிலா தோட்டத்து அறைன்னு சொல்லலாம்” என ஒரு பெரிய அறையை மட்டும் கொண்ட வீட்டை கண்களை சுழற்றி பார்த்துக்கொண்டே கிஷோர் கூற,

“ ஏண்டா சொல்லமாட்ட. நமக்கு இங்க இது தங்க கிடைச்சதே பெருசு. ஒழுங்கா தூங்கு” எனகூறிவிட்டு ஹர்ஷா தூங்கிவிட்டான்.

சிறுது நேரத்தில் கிஷோரும் உறங்கிவிட்டான்.

பின் நள்ளிரவில் திடீரென “ ஆஆஆ……. ஆஆஆ…….”. என்ற ஒரு ஆணின் அலறல் சத்தம் கேட்டு ஹர்ஷா எழுந்து அமர்ந்தான்.

பக்கத்தில் இருக்கும் கிஷோரை பார்க்க அமைதியாக உறங்கி கொண்டிருந்தான்.

பின் கைபேசியை எடுத்து பார்க்க மணி 12 என காட்டியது.

‘ என்னடா இது நள்ளிரவு 12 மணிக்கு இப்படி சத்தம் கேட்டமாதிரி இருக்கு. ஒருவேளை கனவாக இருக்குமோ’ என மனதில் எண்ணி கொண்டு
மறுபடியும் உறங்க இமைகளை மூடும்போது,

மறுபடியும் “
ஆஆ ஆஆ……..” என்ற ஒரு ஆணின் அலறல் சத்தம் கேட்க விருட்டென்று எழுந்து அமர்ந்தான் ஹர்ஷா.





யாருடைய அலறலாக…….. இருக்கும்?????……..
 
Top