Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 21

Advertisement

niranjana subramani

Well-known member
Member
( sorry friends இந்த epiosde ல flashback முடியல ரொம்ப பெருசா வந்ததால அடுத்த episode லதான் முடியுது அதை சீக்கிரம் போட்டுடுறேன் . Thanks for the comments and likes friends )

21.



சரத் பேசி சென்ற பின் அதே அதிர்ந்த நிலையிலையே எங்கோ வெறித்துகொண்டு அமர்ந்து இருந்தார் தில்லை நாயகி.

கோவில் குளத்தில் சமைப்பதற்கு குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்த மயிலரசி தன் அன்னையின் நிலையை கண்டு,

“ என்னம்மா ஒரு மாதிரி இருக்கீங்க. உடம்பு எதுவும் சரி இல்லையா???. முகமே ஒரு மாதிரி இருக்கு” சற்றே பதட்டமாக வினவ,

அதற்கு பதில் கூறாது “ நீ குடத்தை சமையல் அறையில வச்சுட்டு வா. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என தில்லை நாயகி கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

‘ என்னவா இருக்கும்’ என்ற யோசனையுடன் மயிலரசி தில்லைநாயகி சொன்னதை செய்துவிட்டு தன் தாயின் முன் நின்றாள்.

தன் முன் நிற்கும் மகளிடம் எதுவும் பேசாது மகளையே பார்த்துக்கொண்டு ‘ என் மகளுக்கு என்ன குறைச்சல்???. மாநிறத்தைவிட சற்று அதிகமான நிறம். வட்டமுகம்.

அடர்ந்த புருவங்கள். விழிமொழி பேசும் கண்கள் கூர்மையான நாசி. அழகுதான் என் மகள். உயரம் கூட சராசரி பெண்களின் உயரத்தைவிட சற்றுதான் குறைவு.

இருந்தும் எதற்காக வேற பொண்ணுக்கு நிச்சயம் பண்ணின பையனை விரும்புறா????. ஒருவேளை அந்த பையன் நம்ம பொண்ணை ஏமாத்திருப்பானோ???.’ என பலவாறு எண்ணிக்கொண்டிருந்த தில்லைநாயகியிடம்

“ அம்மா பேசணும்ன்னு கூப்பிட்டு ஒன்னும் சொல்லாம பார்த்துட்டே இருக்கீங்க” என மயிலரசி கூற

அதில் தன் சிந்தனையில் இருந்து விடுபட்டவர்,

“ நீயும் பண்ணையார் பையன் அரசனும் விரும்புறீங்களா???” என தில்லைநாயகி நேரடியாக தன் மகளிடம் விசயத்திற்கு வர

மயிலரசி திகைத்து நின்றுவிட்டாள். ‘ அம்மாவுக்கு இந்த விஷயம் எப்படி தெரிஞ்சிருக்கு???....’ என எண்ணிக்கொண்டு எதுவும் கூறாமல் இருக்க,

“ நான் கேட்டது காதுல விழுந்துச்சா இல்லையா அரசி????” என சற்றே அழுத்தமாக தில்லைநாயகி கேட்க.

அதில் சிந்தனை கலைந்த மயிலரசி,

“ அம்மா… அது… அது.. ஆமா.. நானும்.. நிலவன்… அது” என எச்சிலை முழிங்கிக்கொண்டு சற்றே திணறலுடன்

“ அது வனிதா அண்ணன் நிலவரசனும் நானும் விரும்…. விரும்புறோம்” என ஒருவழியாக கூறினாள்.

மகள் இல்லை என்று கூறிவிட மாட்டாளா என்ற சிறு நம்பிக்கை வைத்திருந்த தில்லைநாயகிக்கு மகளின் பதில் மனதில் வலியை ஏற்படுத்தியது.

“ அப்போ தெரிஞ்சேதான் இந்த ரெண்டாம் தாரம் வாழ்க்கைக்கு ஆசைப்பட்டிருக்க” என கடின குரலில் தில்லைநாயகி

தன் அம்மாவிடம் தன் காதலை சொன்னால் கோவப்படுவார்கள் திட்டுவார்கள் என மயிலரசி எதிர்பார்த்திருக்க. ஆனால் தில்லைநாயகி எதோ கேட்கவும்

“ என்னம்மா சொல்றிங்க???. எனக்கு புரியல” என மயிலரசி கூற

“ புரியலையா!!!!.... என்ன புரியல???. வேற ஒரு பொண்ணுக்கு நிச்சயம் பண்ணுன பையனை விரும்புறியே. அதை கேட்குறேன்”

“ அம்மா நீங்க என்ன சொல்றிங்க????. யாருக்கு நிச்சயம் பண்ணிருக்காங்க????...” என குழப்பத்துடன் மயிலரசி வினவ

“ என்ன அரசி தெரியாத மாதிரி கேட்குற???. பண்ணையார் பையனுக்கும் பட்டாளத்துக்காரரோட பொண்ணுக்கும் பேசிருக்காங்கன்னு அந்த பட்டாளத்துக்காரரோட பையன் இன்னைக்கு சொல்லிட்டு போறான்.

பத்தாததுக்கு உன்னை பத்தி தப்பா பேசிட்டு போறான். நீ சொல்றத பார்த்தா பண்ணையார் பையனுக்கு பொண்ணு பார்த்த விஷயமே உனக்கு தெரியாது போல”

“ அம்மா நீங்க சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லம்மா” என சற்றே பதட்டமாக கூற

“ உனக்கு எப்படி தெரியும்??. அந்த பையன் அவ்வளவு தெளிவா சொல்லிட்டு போறானே. சரி நீ சொல்ற மாதிரி ஒன்னும் இல்லன்னு வச்சுக்குவோம். நீங்க காதலிக்குற விஷயம் பண்ணையாருக்கு தெரிஞ்சா உங்க காதலுக்கு ஒத்துக்குவாரா??.”

“ கண்டிப்பா அம்மா அப்படித்தான் அவரு சொன்னாரு”

“ எப்படி???...... தன் நண்பரோட பொண்ணை தன் பையனுக்கு எடுப்பாரா இல்ல வாழ்றதுக்கே வழி இல்லாம வந்தப்போ எல்லா உதவியும் செஞ்சு இன்னைக்கும் அவுங்க தயவுல வாழுற நம்ம வீட்டுல பொண்ணு எடுப்பாங்களா???.”

“ இல்லம்மா நானும் அவரும் உயிருக்கு உயிரா விரும்புறோமா. அவரு என்னைய ஏமாத்தாமாட்டாரு. நீங்க….. நீங்க…… எதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறீங்க” என அழுகையுடன் மயிலரசி கூற

“ நான் தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசுறேனா????. அதுசரி…….. என்ன சொன்ன உயிருக்கு உயிரா
விரும்புறீங்க அவரு உன்னைய ஏமாத்தமாட்டாரா????. ஹா…… ஹா…….” என சத்தமாக சிரித்தார் தில்லைநாயகி.

இதுவரை கோவமாக பேசிக்கொண்டிருந்த தன் அம்மா திடீரென சத்தமாக சிரிக்க. ஒன்றும் புரியாது குழப்பத்தோடு கலங்கிய விழிகளால் தில்லைநாயகியை பார்த்துக்கொண்டிருந்தாள் மயிலரசி.

“ உன் வயசிலே உன் அப்பனை நம்பி நானும் இதையே சொல்லி என் பெத்தவுங்க பார்த்த கல்யாணத்த நிறுத்திட்டு உங்க அப்பா கூட ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

ஹ்ம்ம்…… என் பெத்தவங்கள ஏமாத்தின பாவோமா????. இல்ல கல்யாண மேடைல ஒருத்தன மாலையும் கழுத்துமா நிக்க வச்சு ஏமாத்தின பாவமோ???. உன் அப்பன் என்னைய ஏமாத்திட்டான்”
என்று கூறிவிட்டு தில்லைநாயகி யோசனையுடன் நின்று விட்டார்.

சிறிது நேர அமைதிக்கு பின் ,

“ உன் அப்பாவ நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா அரசி???. என் பெத்தவுங்க முன்னாடி நான் தேர்ந்துடுத்த வாழ்க்கை எப்படி வாழுறேன் பாருங்கன்னு ஆணவமாக சுத்திட்டு இருந்தேன்” என கலங்கிய விழிகளோடு கூறிக்கொண்டிருந்த தில்லைநாயகியை காணும் போது மயிலரசிக்கு அழுகையாக வந்தது.

“ அரசிம்மா உனக்கு நியாபகம் இருக்கா இல்லையான்னு தெரியல. ஆனா, நான், உன் அப்பா, நீ எல்லாரும் எவ்வளவு சந்தோசமா இருந்தோம் தெரியுமா???. எல்லாம் உன் அஞ்சு வயசுவரைக்கு தான்.

உன்னோட அஞ்சாவது பிறந்த நாள் முடிஞ்சு அடுத்த நாள் எதோ வேலை விஷயமா வெளியூர் போயிருந்தார். அப்போ ஒரு பொண்ணு என்னையைவிட நாலு வயசு அதிகம் இருக்கு. ஒரு எட்டு வயசு பைனோட வந்தா. யாரு என்னன்னு விவரம் கேட்டதுக்கு உன் அப்பனோட சம்சாரம்ன்னு சொன்னா.
எனக்கு ஒரு நிமிஷம் உலகமே நின்னு போச்சு.

இருந்தாலும் நானும் பைத்தியக்காரி மாதிரி நீங்க வேற யாரை பத்தியோ சொல்றிங்க. என் வீட்டுக்காரர் அப்படி எல்லாம் இல்ல. முகவரி எதுவும் மாத்தி வந்திட்டிங்களான்னு கேட்டுகிட்டு இருக்கும் போது,

வீட்டுக்குள்ள வந்த உன் அப்பன் ‘ ஏய் கலை நீ என்ன இங்க??. நான் உன்னை தேடித்தான் ஊருக்கு போனேன்னு’ சொன்னாரு பாரு எனக்கு தலையில இடி விழுந்தமாதிரி ஆகிடுச்சு” என கூறி கலங்கிய விழிகளை மூடிக்கொண்டு மடிந்து தரையில் அமர்ந்தார் தில்லைநாயகி.

தன் அம்மாவின் நிலை கண்ட மயிலரசி தில்லைநாயகியின் அருகில் சென்று அவரின் தோள் தொட்டு,

“ எப்படி ம்மா அவருக்கு உங்கள ஏமாத்த மனசு வந்துச்சு???. உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி இன்னொரு பொண்ணுகூட…” என வேதனையில் கேட்டுக்கொண்டிருக்க

“ அரசி நீ ஒரு விஷயத்தை கவனிக்கல.” என தில்லைநாயகி கூற

“ என்னதுமா???”

“ அந்த பொண்ணுதான் அவரோட முதல் சம்சாரம். நான் தான்
தெரியாம அந்த பொண்ணோட வாழ்க்கைக்குள்ள வந்துட்டேன்” என தில்லைநாயகி வேதனையுடன் கூற

“ அம்மா!!!!!” என அதிர்ந்து விழித்தாள் மயிலரசி

“ ஆமா அரசி. உன் அப்பாவுக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் கழிச்சு, எங்க ஊருக்கு இடம் வாங்குற விஷயமா வந்தவருக்கு என்னைய பிடிச்சுபோக, எனக்கும் அவரை பிடிச்சுபோக காதலிச்சு வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணினோம்.

அப்போகூட அவரு என்னைய அவரோட ஊருக்கு கூட்டிட்டுபோகல. கேட்டதுக்கு எங்க வீட்டுல ஒத்துக்கலை. நீ அங்க வந்தாலும் தனியாத்தான் இருக்கனும். அதுக்கு உன் ஊருலையே இருந்துட்டா உனக்கு சௌகரியமா இருக்கும்.

ஒருநாள் உன்னையும் உன் பெத்தவங்க ஏத்துக்குவாங்க நான் என் வேலை விஷயமா அப்போ அப்போ
வெளியூர் போய் வந்துக்குறேன்னு சொன்னாரு. அவரு சொன்ன எல்லாமும் எனக்கு அப்போ சரியாய் தெரிஞ்சுச்சு.

ஆனா அவரோட உண்மை முகம் தெரிஞ்சவுடன் தான் நான் எவ்வளவு ஏமாந்துருக்கேன்னு புரிஞ்சுக்கிட்டேன். இதுல கொடுமை என்னன்னா அந்த பொண்ணோட சம்மதத்தோடதான் என்னைய கல்யாணம் பண்ணினாராம்.

எப்படி ஒத்துக்கிட்டாங்கன்னு கேட்டா அவரு சந்தோசம் தான் எனக்கு முக்கியம்ன்னு சொன்னுச்சுப்பாரு அந்த பொண்ணு!!!!.... இழுத்து ஒரு அரை விடணும் போல இருந்துச்சு.

ஆனா என்ன செய்ய நான் ஏமாளியா இருந்துருக்கேன். அதுல யாரை குற்றம் சொல்ல. ஆனா அந்த பையன் அதான் உங்க அப்பாவோட முதல் சம்சாரம் பையன். உன்னையும் என்னையும் பார்த்த பார்வையில அப்படி ஒரு வெறுப்பு.

அப்போ நான் மனசளவுல செத்துட்டேன் அரசிம்மா. அப்புறம் என் பெத்தவங்க கிட்ட போய் நிக்க பிடிக்கல. அந்த ஊருல இருக்கவும் பிடிக்கல. முதல்ல சாகனும்ன்னு நினைச்சேன். ஆனா உன் அப்பா மாதிரி சுயநலமா ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையோட விளையாண்டவன் இந்த பூமில வாழும்போது, நான் எதுக்கு சாகனும்???.

நான் வாழ்க்கையில தோத்துட்டேன். ஆனா வாழ்க்கையே தோக்கல. எனக்கு நீ இருக்க அரசி. உன்னைய நான் வளர்க்கணும். கடமை இருக்குன்னு முடிவு பண்ணி ஊரைவிட்டு இங்க வந்துட்டேன்.

குலசேகரன் ஐயாவும் வடிவழகி அம்மாவும் குடுத்த ஆதரவுலயும். என் குடும்ப தொழிலும் கைகுடுத்து இன்னைக்கு கௌரவமா இருக்கோம்” என தில்லைநாயகி தன் வாழ்வின் இருண்ட பக்கத்தை சொல்லி முடிக்க.

என்ன கூறுவது என்று தெரியாது நின்றாள் மயிலரசி.

சிறுது நேர அமைதிக்கு பின்,

மீண்டு தில்லைநாயகி “ அதான் அரசிம்மா சொல்றேன். எப்படியும் நீ சொல்ற மாதிரி நீயும் அந்த பையனும் விரும்பினாலும் இந்த கல்யாணம் நடக்காது.

ஏன்னா அந்த பட்டாளத்துக்காரன் பையன் அப்படி உறுதியா சொல்லிட்டு போனான். அவன் தங்கச்சிக்கு அந்த நிலவரசனுக்கும் தான் கல்யாணம்ன்னு. அதனால நீ தேவை இல்லாம ஆசைய வளர்த்துக்காதடா” என பொறுமையாக கூற

“ இல்லம்மா அப்படி எல்லாம் நடக்காது. நிலவரசன் என்னைய ஏமாத்தமாட்டாரு” என மயிலரசி மன்றாடும் குரலில் கூற

“ நான் இவ்வளவு பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ திரும்ப திரும்ப அந்த பையன் தான் வேணும்ன்னு நிக்குற. நீயும் என்னைய மாதிரி ஒரு ஏமாளியாவோ இல்ல ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காத துரதிஷ்டசாலியாவோ வாழணும்ன்னு நினைக்குறியா.

அது இந்த தில்லைநாயகி உயிரோட இருக்கற வரை நடக்காது. இன்னும் பத்து நாளுல நாம வேற ஊருக்கு போறோம். அதுக்குள்ள நீ எதாவது குளறுபடி பண்ண நினைச்சா என்னைய உயிரோடவே பார்க்க முடியாது. எனக்கு உன்னோட வாழ்க்கைதான் முக்கியம்” என கூறிவிட்டு சென்றுவிட்டார் தில்லைநாயகி.

மயிலரசி அதிர்ந்த நிலையிலையே நின்றுவிட்டாள்.

மாலை ஒரு 5 மணி போல் கோவில் குளகரையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த மயிலரசியின் பின் புறம் ஒரு கரம் தொட்டது. திடீரென ஒரு கரம் பட்டதும் யாரென திரும்பிப்பார்த்து மயிலரசி அங்கு வனிதா நிற்பதைப்பார்த்து எதுவும் கூறாது அவளை தாவி அணைத்து
தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் மயிலரசி.

எதுவும் கூறாது அழுது கொண்டிருந்த மயிலரசியை பார்த்த வனிதா,

“ மயிலு எதுக்கு இப்போ அழற???. என்ன ஆச்சு????. யாரு எதுவும் சொல்லிட்டாங்களா???. இல்ல உனக்கும் அண்ணாவுக்கும் எதுவும் சண்டையா???” என கேட்க எதுவும் கூறாது அழுதுகொண்டே இருந்தாள் மயிலரசி.

அதில் பொறுமை இழந்த வனிதா “ இப்போ சொல்ல போறியா இல்லையா மயிலு???. எதுக்கு இப்படி அழற??” என மயிலரசியை தன்னிடம் இருந்து பிரித்து வினவ,

தேம்பிக்கொண்டே தில்லையாகி கூறிய அனைத்தும் சொல்லி முடித்தாள் மயிலரசி.

அதனைக்கேட்டு வனிதா சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க, மயிலரசி தன் அழுகையை நிறுத்திவிட்டு,

“ என்னடி நான் எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு இருக்கேன். நீ இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்க” என சலித்துக்கொண்டே மயிலரசி வினவ

“ என்ன பெரிய விஷயம்????. இது முதல்ல ஒரு பிரச்சனையே இல்ல. அண்ணா அப்பாக்கிட்ட பேசுனா. அப்பா அண்ணனுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க.

அதுவும் உன் அம்மாவோட சம்மதத்தோட. அப்புறம் அந்த மஞ்சரி எல்லாம் ஒரு ஆளே இல்ல. எனக்கும் அவளுக்கும் எப்போதும் ஆகாது. அப்படி இருக்குறப்போ எனக்கு பிடிக்காத ஆளை எப்படி என் அண்ணன் கல்யாணம் பண்ண சம்மதிப்பான்.

நீ சொல்றதை வச்சு பார்குறப்போ அந்த சரத் தான் ஏதோ தில்லாலங்கடி வேலை பார்க்குறான். அண்ணன் அவனோட நண்பனோட ஊருக்கு போயிருக்கான்ல, வந்தவுடன் உங்க கல்யாண வேலையை பார்க்க சொல்லுவோம்.

இப்போ அழுகையை நிறுத்து உங்க கல்யாணம் நடக்க வேண்டியது என் பொறுப்பு சரிதானே” என நம்பிக்கையாக வனிதா கூற மயிலரசி சற்றே தெளிந்தாள்.

“ அப்பா…. இப்போதான் உன் மூஞ்சில பிரகாசம் வருது மயிலு. அதுக்குள்ள அண்ணனோட கனவுல வாழறதுக்கு போய்ட்டியா??” என வனிதா கிண்டல் செய்ய

“ சீ….. போடி….” என கூறி தன் சிவந்த முகத்தை மறைத்துக்கொண்டு மயிலரசி ஓட ,

“ என்ன ச்சீ போன்னு சொல்ற????. உனக்கும் அண்ணனுக்கும் கல்யாணம் முடிந்தவுடன் உங்க காதல் பயிரை வளர்த்த ஒத்த காலு மண்டபத்துல வேணும்ன்னா நிலவரசன் மயிலரசின்னு எழுதிவைப்போம்” என கூறி வனிதா அவளை துரத்தி கொண்டு ஓடினாள்.

தோழிகள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த ஒரு உருவம்

‘ யாருக்கு சொந்தமானவங்கள யாரு அடையுறது. நான் இருக்குறவரை நிலவரசனை உனக்கு கிடைக்க விடமாட்டேன். என்னைய மீறி எப்படி உனக்கும் நிலவரனுக்கும் கல்யாணம் நடக்குதுன்னு பார்க்குறேன். நான் நினைச்சதுதான் நடக்கும் நடத்திக்காட்டுறேன்” என வன்மத்துடன் எண்ணிக்கொண்டு அந்த உருவம் அங்கிருந்த நகர்ந்தது.

அந்த உருவம் அங்கிருந்து நகர்ந்த அதே வேளை வனிதாவும் மயிலரசியும் பேசிக்கொண்டிருந்ததை மறைவாக நின்று கேட்ட மாரியும் குழப்பத்துடன் அங்கிருந்து நகர்ந்து தன் வீடு நோக்கி சென்றான்.

அப்போது தோப்பில் வேலையை முடித்துக்கொண்டு அங்கு வந்த வேலு “ என்ன அண்ணே முகமே சரியில்ல. வீட்டுல அண்ணிக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா??” என
வினவ

“ அப்படி எல்லாம் இல்லடா ஒரு சின்ன யோசனை. அதான் அதை பத்தியே யோசிச்சுகிட்டு இருக்கேன். ஆமா நீ என்ன இப்போதான் தேங்காய்யெல்லாம் லோடு ஏத்திட்டு வரியா???”

“ ஆமா அண்ணே அந்த லாரிக்காரன் ரொம்ப தாமதமாதான் வந்தான்”

“ ஓ!!!.. ஆமா கந்தன் எங்க????. அவனும் நீயும் ஒன்னாத்தானே போனீங்க???”

“ அவன் அப்பவே எதோ முக்கியமான வேலை இருக்குன்னு கிளம்பிட்டான். ஆமா அண்ணே எதை பத்தி யோசிச்சுகிட்டு வந்திங்க??”

“ அது…. அது….” என சிறுது யோசித்துவிட்டு பின் தான் கேட்ட விஷயங்களை கூறினான் மாரி.

“ என்னது!!!... சின்ன ஐயாவும் அந்த மருத்துவச்சி பொண்ணும் விரும்புறாங்களா???”

“ ஆமாம்டா அப்படித்தான் பேசிக்கிட்டாங்க .இப்போ இதை பெரிய ஐயாக்கிட்ட சொல்றதா வேணாமான்னு இருக்கு”

“ அண்ணே நீங்க ஐயாகிட்ட சொல்லிடுங்க. அவரு எந்த முடிவு எடுத்தாலும் அது அவுங்க குடும்ப விஷயம். ஆனா கேள்வி பட்டதை நாம சொல்லிடனும்ல”

“ நீ சொல்றது சரிதான். ஒரு வேளை ஐயா ஏன்டா உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சா சொல்லிருக்க கூடாதான்னு கேட்டுட்டா???. என்ன செய்றது???. நான் நாளைக்கே இந்த விஷயத்தை பெரிய ஐயாகிட்ட சொல்லிடுறேன்”

“ சரி அண்ணே நேரமாச்சு நான் வரேன்”

“ டேய் வீடு கிட்டத்தானே இருக்கு வந்து கொஞ்சம் மோராவது குடிச்சுட்டு போ”

“ இல்ல அண்ணே அண்ணி இப்போதான் காய்ச்சல் வந்து தேறிக்கிட்டு வருது அதை எதுக்கு கஷ்டப்படுத்துகிட்டு இன்னொரு நாள் வரேன்” என கூறி வேலு மாரியிடம் விடை பெற்று சென்றான்.



அடுத்த நாள் விடியலில்????????................
 
முதல் மனைவி இருக்கும் பொழுது தில்லைநாயகியின் கணவர் செய்தது ரொம்பவே அநியாயம்
பெற்றோரை ஏமாற்றி இன்னொரு ஆண் மகனை கல்யாண மண்டபத்தில் அவமானப்படுத்திய தில்லைக்கு இந்த தண்டனை தேவைதான்
ஆனால் மயிலரசி எந்த குற்றமும் செய்யவில்லையே
நிலவரசனை காதலித்த பாவத்துக்கு சரத் அவளை ஏன் கொன்றான்?
இதில் ஏழுமலையின் பங்கு ஏதும் இருக்கோ?
மயிலரசி, வனிதா இருவரின் பேச்சைக் கேட்ட உருவம் சரத்தா? இல்லை மஞ்சரியா?
வேலு, மாரி இருவரின் பேச்சை யாரும் கேட்கவில்லையா?
ஆதிலிங்க மூர்த்தியிடம் விஷயத்தை சொல்ல விடாமல் இவர்கள் இருவரையும் மிரட்டவில்லையா?
 
Last edited:
Top