Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் 20

Advertisement

niranjana subramani

Well-known member
Member
20.







அன்றைய காலை அழகாக விடிய,

சதாசிவம் வீட்டின் நடு கூடத்தில் அமர்ந்து செய்தி தாள் படித்துக்கொண்டிருக்க, அடுக்களையில் ஜெகதீஸ்வரி சமைத்துக்கொண்டே வழமைபோல் தன் புலம்பல்களை தனக்குதானே சற்று சத்தமாக கொட்டிக்கொண்டிருந்தார்.

“ பொண்ணுக்கு இருபத்தி ஒன்னு வயசாச்சே கல்யாணம் பண்ணிகுடுக்கணுமேன்னு கொஞ்சமாவது கூறு இருக்கா இந்த மனுசனுக்கு????. மாப்பிள்ளையை பார்ப்பாராம், இவரு பொண்ணு என்ன காரணம்ன்னு சொல்லாம வேணாம் பிடிக்கலன்னு சொல்லுவாங்கலாம்.

இவரும் பொண்ணு சொன்னா சரியாதா இருக்கும்ன்னு போய்டுவாராம். சரி கழுதை!!!... ஒழுங்கா படிச்சுருந்தாவாவது மேல படிக்கட்டும், இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும்ன்னு இருக்கலாம் கல்யாணம் பண்ண.

எங்க பன்னிரெண்டாவது படிக்குறதுக்குள்ளையே வீட்டுல எல்லாரையும் ஒருவழி ஆக்கிட்டா. காலேஜ்க்கு போகமாட்டேன்ட்டு சொல்லி நாலு வருசமா வீட்ல இருக்கோமே சமையலையாவது கத்துக்கலாமேன்னு எண்ணம் வருதா???.

மணி 8.30 ஆச்சு.இன்னும் எந்திரிக்கவே இல்ல. எந்த மாமியா கிட்ட குத்துப்பட போறாளோ தெரியல. எல்லாம் இந்த மனுஷனை சொல்லணும்” என்று ஜெகதீஸ்வரி காலையிலையே தன் கணவன் சதாசிவத்தையும் தன் மகள் மஞ்சரியையும் திட்டிக்கொண்டிருக்க

மனைவியின் சத்தம் கேட்டு “ அங்க என்னடி சத்தம்???” என சதாசிவம் நடுக்கூடத்தில் இருந்து கத்த

“ வறுத்துகிட்டு இருக்கேனுங்க”


“ காலையிலையே அப்படி எண்ணத்தை வறுக்குற????. இப்படி சத்தமா???”

“ உங்களையும் உங்க மகளையும்”

“ என்னது????”

“ இல்லங்க உங்களுக்கும் உங்க மகளுக்கும் இட்லி பொடிக்கு பருப்பை வறுக்குறேன்”

“ கல்யாணம் ஆனா காலத்துலே இருந்து இவ உணமைலையே நமக்கு பயப்புடறாளா இல்ல நம்மள கிண்டல் பண்றளான்னு தெரிய மாட்டேங்குது” என தனக்குள் தன் மனைவி பற்றி முணுமுணுத்துக்கொண்டிருந்த சதாசிவத்திடம் வந்த மஞ்சரி,

“ அப்பா” என அழைக்க

“ என்ன மஞ்சு இன்னைக்கு சீக்கிரம் எழுந்திட்டியா????. காப்பி எதாவது குடிச்சியாத்தா???” என சதாசிவம் கேட்க

“ இல்லப்பா இன்னும் எதுவும் குடிக்கல. நான் உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.”

“ என்னமா???”

“ நான் ஆதி மாமா பையன் நிலவரசன கல்யாணம் பண்ணிக்குறேன்” என மஞ்சரி பேசிக்கொண்டிருக்கையில் ,

அடுக்களையில் இருந்து இவர்களின் சம்பாஷணையை கேட்டுக்கொண்டே வந்த ஜெகதீஸ்வரி,

“ அடிங்க!!!.. ஏண்டி!!!.. அப்பாகிட்ட பேசுற மாதிரியா பேசுற???. என்ன திமிரா???? நீயா என்ன மாப்பிள்ளை பார்த்துட்டு
வரியோ???” என கோவமாக கத்த ஆரம்பித்தார்.

உடனே “ ஜெகா இப்போ எதுக்கு பிள்ளையை சத்தம் போடுற. அதுக்கு யார புடிச்சுருக்கோ அவுங்களத்தானே சொல்லுது” என சதாசிவம் மகளுக்காக மனைவியிடம் பேச

“ ஏனுங்க நீங்க எத்தனை மாப்பிள்ளை பார்த்தீங்க. அப்போ எல்லாம் சொல்லவேண்டியது தானே நிலவரசனை பிடிச்சுருக்குன்னு. திடீர்ன்னு என்ன உங்க மகளுக்கு” என ஜெகதீஸ்வரி பேசுகையில் இடைமறித்த மஞ்சரி

“ அம்மா நீங்க ஒவ்வொருதடவையும் மாப்பிள்ளைய பிடிச்சுருக்கான்னு தான் கேட்டீங்க. நான் பிடிக்கலன்னு சொன்னேன். என்னைய யாருமே காரணம் கேட்கல. அதோட நிலவரசன் இவ்வளவு நாள் படிச்சுக்கிட்டு இருந்தாரு.

இப்போதான் படிப்பை முடிச்சுட்டு ஊருக்கு வந்து மூணு மாசம் ஆகுது. அதான் இப்போ சொன்னேன்” என சற்றே திமிராக பேச

“ அப்போ நீயும் நிலவரசனும் இத்தனை நாள் விரும்பிகிட்டு இருந்திங்களா??”

“ இல்ல எனக்குதான் நிலவரசனை பிடிச்சுருக்கு. நிலவரசன்கிட்ட இதைப்பத்தி இன்னும் நான் பேசல”

“ ஏண்டி அப்போ அந்த பையனுக்கும் உன்னைய பிடிச்சாதானே கட்டி வைக்க முடியும்???”

“ ஏன் எனக்கு என்ன குறைச்சல் என்னைய கட்டிக்க அந்த அரசு பயலுக்கு கசக்குதா” என மஞ்சரி சற்றே கோவமாக பேச

“ நீ பேசுறது நல்லா இல்ல மஞ்சு ஏற்கனவே உனக்கும் அந்த வனிதா பொண்ணுக்கும் சிறுசுல இருந்தே ஆகாது”
என ஜெகதீஸ்வரி பேசுகையில் இடைமறித்த சதாசிவம்

“ ஜெகா” என சற்றே அழுத்தமாக அழைக்க அந்த குரல் பேதத்தில் சட்டென்று அமைதியாகிவிட்டார்.

“ மஞ்சும்மா உனக்கு நிலவரசனைதான் கட்டிக்கணும்ன்னா அப்பா கல்யாணம் பண்ணிவைக்குறேன். நீ எதுக்கு இப்போ கோவப்படுற???. நீ ஆசைப்பட்டு அப்பா இதுவரைக்கு நிறைவேத்தாமா இருந்துருக்கேனா??.

நீ என் குலசாமிடா. போய் நீ சாப்புடு. அப்பா பார்த்துக்கறேன்” என சதாசிவம் மகளை சமாதானம் செய்து அனுப்பிவைத்துவிட்டு மனைவியிடம்,

“ ஜெகா இனிமேல் நீ இதப்பத்தி மஞ்சுகிட்ட பேசாத. அவ ஆசைப்பட்ட வாழக்கையை அமைச்சுக்குடுக்குறதுதான் என் கடமையே. அதோட நிலவரசன் நல்ல பையன்தான்.
இதுவரைக்கு என மக இஷ்டப்பட்டி தான் எல்லாமே நடந்துருக்கு இப்போ அவளோட கல்யாணமும் அப்படிதான் நடக்கும்.

நான் நடத்திக் காட்டுறேன். இன்னைக்கே போயி ஆதிகிட்ட கல்யாணத்தை பத்தி பேசுறேன்” என கூறி சதாசிவம் செல்ல எத்தனிக்கையில்

“ என்னங்க இன்னைக்கு அம்மாவாசை முடிந்து மூணாவது நாலு இந்நேரத்துக்கு ஆதி அண்ணே தோப்புவீட்டுலதான் இருப்பாங்க” என ஜெகதீஸ்வரி கூற

“ ஆமா இதை எப்படி மறந்தேன்!!!. தை அம்மாவாசைக்கு திதி குடுத்துட்டு ஆதி தோப்புவீட்டுல இருப்பான். மூணாவது நாள் இரவுதான் வீட்டுக்கு வருவான். அப்போ நான் நாளைக்கே பேசுறேன்” என கூறி விட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார்.

“ பொண்ணு ஆசைப்பட்ட எல்லாத்தையும் குடுக்கணும்ன்னு நினைக்குறீங்க. ஒரு தாயா எனக்கு சந்தோசம்தான். ஆனா வாழ்க்கையில நமக்கு ஒரு விஷயம் பிடிச்சா மத்தவங்களுக்கு பிடிச்சுருக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லையே.

உங்க மக பிடிவாதம் பிடிக்குறா. ஒருவேளை இந்த கல்யாணம் நடக்கலைன்னா????. ரொம்ப பெரிய ஏமாற்றத்தை மஞ்சரியால தாங்கமுடியாது. இறைவா என் பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு அமைச்ச்சு குடுத்துடுப்பா”
என தனக்குள் புலம்பிவிட்டு அவரும் அடுக்கலைக்குள் நுழைந்தார்.

அதுவரை மாடியில் தன் அறையில் இருந்து கீழே நடந்த சம்பாசனைகளை கேட்டுக்கொண்டிருந்த சதாசிவம் ஜெகதீஸ்வரியில் மகன், மஞ்சரியின் அண்ணன் சரத்,

‘ மஞ்சரி நிலவரசனை விரும்புறா. ஆனா நிலவரசனோட பார்வை அடிக்கடி அந்த மருத்துவச்சி பொண்ணு மயிலரசி மேல ஆர்வமா படியுதே. ஒருவேளை அரசு அந்த பொண்ணை விரும்புனா???. எப்படி என் தங்கச்சி கல்யாணம் நடக்கும்???.

எப்படியாவது மஞ்சரி ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும். அதுக்கு முதல்ல அரசனுக்கு அந்த பொண்ணு மேல விருப்பமான்னு தெரிஞ்சுக்கணும்’ என தனக்குள் எண்ணிக்கொண்ண்டு ஆதிலிங்க மூர்த்தி வீட்டிற்கு சென்றான் நிலவரசனை காண்பதற்கு.

ஆதிலிங்க மூர்த்தியின் வீட்டிற்கு சென்ற சரத் அங்கு கல்லூரிக்கு கிளம்பி செல்ல தயாராகி வந்த வனிதாவிடம்,

“ இந்தாம்மா வனிதா பொண்ணு” என அழைக்க

“ நான் வனிதா பொண்ணு இல்ல. நான்தான் வனிதா” என வனிதா கூற

முதலில் அவள் கூறியது புரியாது முழித்த சரத் பின் புரிந்துகொண்
டு ‘ எல்லா திமிரு பிடிச்சது. இருடி இரு அரசனுக்கு மஞ்சுக்கும் கல்யாணம் நடக்கட்டும் உன் திமிர அடக்குறேன்’ என எண்ணிக்கொண்டு,

“ அப்படியா சரிம்மா வனிதா. எங்க உங்க அண்ணன்??. நான் அவனை பார்க்கணும்” என கடித்த பற்களுக்கிடையில்
வினவ

“ அண்ணா அவனோட அறைலதான் இருக்கான். எனக்கு நேரமாச்சு வரேன்” என கூறிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அப்போது தன் அறையில் இருந்து வந்த நிலவரசன்

“ சரத் வாடா எப்போ வந்த???. நீ வரப்போறன்னு சொல்லவே இல்ல. எதாவது சாப்பிடுறியா” என கேட்டுக்கொண்டே சரத்தின் அருகில் வர

“ அதெல்லாம் ஒன்னும்வேண்டாம்டா. நான் சாப்பிட்டுத்தான் வந்தேன். உன்கிட்ட முக்கியமா பேசணும்”

“ சொல்லுடா”

“ அது.. அது …..வனிதாவோட தோழி. அதான் அந்த மருத்துவச்சி நாயகியோட பொண்ணு இருக்குள்ள.”

“ ஆமாம் மயிலரசி. அவளுக்கு என்ன இப்போ??”

“ இல்லடா அந்த பொண்ணு உன்னைய பார்குறப்ப எல்லா ஆர்வமா பார்க்குறாப்புல இருக்கு அதான்.
நீ அந்த பொண்ணை பார்த்து பேசி இது எல்லாம் தப்புன்னு கண்டிச்சுடு.

பாவம் வேற வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போற பொண்ணு. பெயர் கேட்டுறக்கூடாது பாரு அதான்” என கூறி நிலவரசன் மயிலரசியை விரும்புகிறானா இல்லையா என அறிய மயிலரசி உண்மையிலயே நிலவரசனை பார்ப்பதை அறியாது அவனாக கூறுவதாக நினைத்து கூறினான்.

“ எதுக்கு கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு போகணும்???. என் வீட்டுக்கே வந்துட்டா பிரச்சனை இல்லைல” என புன்னைகையுடன் நிலவரசன் கூற

“ நீ!!!.... நீ!!!... என்ன சொல்ற அரசு???” என சற்றே அதிர்வுடன் சரத் கேட்க

“ ஹ்ம்ம் நானும் மயிலரசியும் விரும்புறோம்டா”.

“ என்ன???!!!”

“ ஹ்ம்ம் ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடிதான் என் காதலை சொன்னேன்.”
என நிலவரசன் கூறிக்கொண்டிருக்கையில்

“ இதுக்கு ஆதி மாமா ஒத்துக்கணுமே” என கூறி எப்படியாவது நிலவரசனை குழப்ப நினைத்தான் சரத்.

“ அப்பா என்னைய மீறி எதுவும் செய்ய மாட்டாங்கடா. என் விருப்பம் தான் முக்கியம்ன்னு சொல்லிடுவாங்க. அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. இன்னும் மூணு மாசத்துல அப்பாகிட்ட
சொல்லிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவுல இருக்கோம்” என நிலவரசன் பேசுகையில்

“ இல்ல நடக்காது” என சற்றே உரக்க கத்திவிட்டான் சரத்

அந்த சத்தத்தில் “ என்ன நடக்காது சரத்??” என கூர்மையாக பார்த்துக்கொண்டே நிலவரசன் வினவ

“ இல்ல… இல்ல…. அது… அது… உன் தங்கச்சி கல்யாணம் நடக்காம எப்படி நீ கல்யாணம் பண்ணமுடியும். என்னைய பாரு மஞ்சரி கல்யாணம் முடியாம நான் பண்ணிக்க முடியுமா??” என சமாளித்தான்

“ ஓ நீ அதை சொல்றியா. வனிதாதான் எங்க கல்யாணம் இப்போ முடியட்டும் அவள் படிப்பு முடிஞ்சவுடன் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லிட்டா. அதோட அவளோட கல்யாணத்துக்கு அப்பா அம்மா இடத்துல இருந்து நானும் மயிலரசியும் அவளை தாரைவார்த்துகுடுக்கணுமாம்” என நிலவரசன் புன்னகையுடன் கூற அதனை சரத் கோவத்தோடு கேட்டுக்கொண்டிருந்தான்.

பின் அங்கு இருக்க பிடிக்காது,

சரி அரசு நான் கிளம்புறேன்டா.”

“ என்னடா உடனே கிளம்பிட்ட???”

“ இல்ல அரசு நான் அந்த பொண்ணு மயிலரசி பத்திதான் பேச வந்தேன். பேசிட்டேன் நான் மில்லுக்கு போகணும் இன்னைக்கு கணக்கு முடிக்குற நாளுவேற. அதான் கிளம்புறேன்டா”

“ எதாவது குடிச்சுட்டாவது போகலாமலடா???”

“ இல்ல அரசு எனக்கு ஒரே நெஞ்சு எரிச்சலா இருக்கு இன்னொரு நாள் வரேன்” என கூறிவிட்டு கிளம்பிவிட்டான் சரத்.

ஆதிலிங்க மூர்த்தி வீட்டில் இருந்து தன் மில்லிற்கு வந்த சரத் யோசனையில் இருந்தான் ‘ என்ன இந்த அரசு மயிலரசியை விரும்புறேன்னு சொல்லிட்டான். சரி அவுங்க அப்பாவை வைத்து ஏதவது குழப்பலாம்ன்னா. அவரு சம்மதிச்சுருவாருன்னு ரொம்ப நம்பிக்கையா சொல்றான்’என எண்ணிக்கொண்டிருந்தவன்

திடிரென ‘ ஏன் மயிலரசி அம்மாகிட்ட பேசிப்பார்க்கக்கூடாது. ஒருவேளை அவுங்க அம்மா அவுங்க காதலுக்கு ஒத்துக்கலைன்னா. நமக்கு லாபம்தானே’ என ஒரு யோசனை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் மயிலரசியின் அம்மாவை காண ஒற்றை கால் மண்டபத்தை அடுத்து இருந்த அந்த சந்துவீட்டிற்கு சென்றான்.

அங்கு திண்ணையில் இருந்து எதையோ உரலில் இடித்துக் கொண்டிருந்த தில்லைநாயகியை கண்ட சரத்,

“ வணக்கம் நாயகியம்மா” என கூற

“ யாரது????” என நிமிர்ந்து பார்த்த தில்லைநாயகி

“ தம்பி யாருன்னு தெரியலையே???”.

“ நான் சதாசிவம் அதான் பட்டாளத்துக்காரரோட பையன்”

“ ஓ!!!... அவுக பையனா. என்ன தம்பி என்ன விஷயமா வந்துருக்கீங்க. யாருக்காவது உடம்பு எதுவும் சௌகரியம் இல்லாம இருக்கா???”

“ எங்க எல்லாருக்கும் உடம்பும் மனசும் நல்லாத்தான் இருக்கு .உங்க மகளோட மனசுதான் சரி இல்ல அதை என்னன்னு பாருங்க முதல்ல” என சற்றே திமிராக சரத் பேச

“ என் மகளா???. தம்பி என் பொண்ணை பத்தி எனக்கு நல்லா தெரியும். அதனால வேற எதுவும் பேச வேண்டியது இருந்தா பேசிட்டு கிளம்புங்க” என தில்லைநாயகி தன் மகளை பற்றி ஒருவர் கூறுவதா என சற்றே எரிச்சல் மேலிட கூறினார்.

“ என்ன தெரியும் உங்க பொண்ணை பத்தி???. எங்க ஆதி மாமா அதான் இந்த ஊரு பண்ணையார் ஆதிலிங்க மூர்த்தி ஐயாவோட பையன் நிலவரசனை விரும்புறது தெரியுமா???.

“ என்ன???” என தில்லைநாயகி அதிர்ச்சியாக

“ உங்க பொண்ணு விரும்புறதுக்கே இப்படின்னா .நிலவரசனுக்கும் என் தங்கச்சி மஞ்சரிக்கும் நாளைக்கு நிச்சயம் பண்ணப்போறோம். ஒருத்தருக்கு பார்த்துருக்க மாப்பிள்ளையை போய் உங்க பொண்ணு விரும்புறாளே வெட்கமா இல்ல.

ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை பறிக்க நினைக்குறா” என சரமாரியாக மயிலரசியை பற்றி சரத் தவறாக பேச

“ இல்ல…. இல்ல… என் பொண்ணு அப்படி எல்லாம் பண்ண மாட்டா. ஒரு வேளை அந்த நிலவரசன் தம்பியும் விரும்பிருக்கலாம்” என தன் மகளை அறிந்தவராய் பேச

“ அப்படியா!!!!... அப்ப உங்க பொண்ணை விரும்புறவரு எதுக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ண சம்மதிக்கனும்???. பொண்ணை கண்டிக்க சொன்னா என்னமோ நியாயம் பேசுது இந்த அம்மா. பிழைக்குறதுக்கு ஊருக்கு வந்தா அந்த வேலையை மட்டும் பார்க்கணும்.

அத விட்டுட்டு கண்ட கண்ட வேலை எல்லாம் பார்த்தா ஊரைவிட்டு துரத்தவேண்டியது வரும் பார்த்துகோங்க” என சரத் பேச தில்லைநாயகி அதிர்ந்து நின்றுகொண்டிருந்தார்.

பின் அவரின் நிலையை கண்ட சரத் ‘ நம்ம வந்த வேலை முடிஞ்சது. எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் மஞ்சரி நிலவரசன் கல்யாணத்தை முடிக்கணும்” என எண்ணிக்கொண்டு கிளம்பினான்.



இனி?????.......................




(Friends, flashback will be over in next episode .and thanks for the likes and comments friends)
 
Dei sarath konjamavathu arivu irukka da innoru ponna luv pantravana un thangachiku katti vaikka nenaika :mad: :mad: ivanu ivan appavu than mayilarasiya kondrupanugalo
Nice epi
Late ah vanthutu rendu epi ya koduthu samathana kodi parakka viduranga writerஜி
 
Dei sarath konjamavathu arivu irukka da innoru ponna luv pantravana un thangachiku katti vaikka nenaika :mad: :mad: ivanu ivan appavu than mayilarasiya kondrupanugalo
Nice epi
Late ah vanthutu rendu epi ya koduthu samathana kodi parakka viduranga writerஜி
Thanks sago (appo adikadi rendu epi ya potanumaa ???)
 
Top