Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் 19

Advertisement

niranjana subramani

Well-known member
Member
19.

“ மயிலரசியா!!!!!.. ரொம்ப நல்லா இருக்கும்மா பெயர். அப்புறம் உன் வீட்டுக்காரர் எப்போ வருவாரும்மா” என வடிவழகி வினவ

சற்று அதிர்ந்து பின் “ இல்ல… அது…. வந்து… எனக்கு புருஷன் கிடையாதுமா” என தில்லைநாயகி தயக்கத்துடன் கூற ,

“ என்னது !!!... புருஷன் இல்லையா????” என வடிவழகி அதிர்ந்து தில்லைநாயகியை ஆராய நெற்றியிலும் நெற்றி வகுட்டிலும் குங்குமம் வைத்து கழுத்தில் மஞ்சள் கயிருடன் காலில் மெட்டியுடனும் இருந்தவளை புரியாது நோக்கினார் வடிவழகி.

அவரின் பார்வையில் இருந்த குழப்பத்தை உணர்ந்த தில்லைநாயகி ஒரு பெருமூச்சுடன், “ அம்மா என் புருஷன் என்னைய ஏமாத்திட்டான். நான் வாழ்க்கையை வெறுத்த நிலையில என் மக அரசிக்காகத்தான் இங்க இப்போ உங்க கிட்ட வேலை கேட்டு நிக்குறேன்”
என வருத்தத்துடன் கூற

வடிவழிகியோ தன் மனதில் ‘ கணவன் வேறு இந்த பொண்ணை பத்தியும் இந்த சின்ன பொண்ணை பத்தியும் விசாரின்னு கண்ணுலையே சமிக்கை செய்துவிட்டு போனாரே. ஆனால் இந்த பொண்ணு இவ்வளவு வருத்தப்படுது’ இதற்குமேல் எப்படி கேட்பது என்று யோசித்துக்கொண்ட்டே

“ சரிம்மா காலை சாப்பாட்டை இங்க சாப்டுட்டு போகலாம். அதுக்குள்ள மாடசாமிக்கிட்ட சொல்லி வீட்டை சுத்தம் பண்ண சொல்லிடுறேன்” என வடிவழகி கூற

“ எதுக்கும்மா உங்களுக்கு வீண் சிரமம். நீங்களும் ஐயாவும் இங்க எனக்கு வேலை குடுத்து தங்க வீடும் குடுத்துருக்கீங்க. இதுவே எனக்கு போதும்மா. நீங்க கஷ்டப்பட வேணாம்” என தில்லைநாயகி மறுத்து கூற

“ இதுல என்ன சிரமம் இருக்க போகுது. நீ பேசாம இரும்மா சின்ன பிள்ளை எவ்வளவு நேரம் பசி தாங்கும். நீ அந்த வீட்டுக்கு போய் எல்லா சாமானும் வாங்கி சமைக்கிற வரைக்கும் இங்கயே சாப்பிட்டுக்கோங்க அவ்வளவுதான். இல்லைனா ஐயாகிட்ட சொல்லிக்கோங்க” என கூறி விட்டு வடிவழகி உள்ளே சென்றுவிட்டார்.

வடிவழகி முடிவாக கூறி சென்ற பின் அதனை மறுக்க தோணாது சற்று தயக்கத்துடன் அமர்ந்த்திருந்த தில்லைநாயகியிடம்,

“ ம்மா இனிமேட்டுக்கு நாம இங்னதான் இருபோம்மா???” என மயிலரசி கேட்க

“ ஆமாம்டா நாம இங்க தான் இருக்க போறோம். உன்னைய இங்க இருக்குற பள்ளிக்கூடத்துல சேர்த்துவிடுறேன். இங்கையே படிக்கலாம் சரியா”

“ ஹ்ம்ம்” என தன் மண்டையை ஆட்டிவிட்டு,

“ ம்மா அப்போ இனி ப்பா வராதா????”

மகளின் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வது ‘ உன் தகப்பன் என்னை ஏமாத்திவிட்டான் . இத்தனை நாள் ஒரு ஏமாளியாய் இருந்துருக்கேன் என்றா’ என தன் மனதில் எண்ணிக்கொண்டு கலங்கிய விழிகளோடு,

“ அரசிம்மா இனிமேல் நீ அப்பாவை பத்தி என்கிட்டே கேட்ககூடாது. சரியாடா???” என தில்லைநாயகி பாவமாக வினவ தன் தாயின் குரலில் இருந்த பேதமும் கண்களில் இருந்த கண்ணீரும் “சரிம்மா” என கூறி தலை அசைக்க வைத்தது மயிலரசியை.

ஒரு நடு கூடமும், அதில் சிறிய பகுதியை தடுத்து ஒரு சமையல் அறை. அதனோடு சின்ன படுக்கை அறையும் கொண்ட அந்த சந்து வீட்டில் குடியேறிய தில்லைநாயகியும் மயிலரசியும் அவர்களின் கடந்த காலத்தை மறந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.

அதற்கு காரணம் தில்லைநாயகி வந்த கொஞ்ச நாட்களிலையே தன் மருத்துவ சேவையாலும் தன் கைராசியாலும் ஊரில் நன்மதிப்பு பெற்று இருக்க. அதனால் தன் முழு கவனத்தையும் சித்த மருத்துவத்திலையே செலுத்தினார்.

தில்லைநாயகி மயிலரசியை அரங்கநாதபுரத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்துவிட்டார். அங்கு அதே வகுப்பில் படித்த வனிதாவுக்கும் மயிலரசிக்கும் சிறு நட்பு ஏற்பட்டது .

வனிதாவுக்கு அம்மா இல்லை என்றும் மயிலரசிக்கு அப்பா இல்லை என்றும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பரிதாபப்பட்டு கடைசியில் பாசமாக மாறி அவர்களுக்கு இடையே இருந்த சிறு நட்பும் நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தது.

மயிலரசி எப்பொழுதும் அமைதியானவள் தான். சிறு வயதிலையே அப்பாவின் துரோகம், அம்மாவின் அழுகை அவளிருந்த ஊரில் ஏற்பட்ட உதாசினம், அவளின் சொந்தங்களின் நிராகரிப்பு என அவளை ஒரு கூட்டுக்குள் ஒடுக்கி வைத்துக்கொண்டாள்.

மயிலரசி தன் கூட்டைவிட்டு வந்து அதிகம் பேசுவது வனிதாவிடம் மட்டுமே. தன் அன்னையை விட அதிக விஷயங்களை வனிதாவிடம் பகிர்ந்துகொள்வாள்.
வனிதாவிற்கு அதிக தோழிகள் இருந்தாலும் நெருங்கிய தோழி மயிலரசிதான்.

வனிதாவின் பதிமூன்று வயதில் குலசேகரன் வயது முதிர்வால் இறந்துவிட. அதற்கு அடுத்த ஆண்டே வடிவழகியும் இறந்துவிட்டார்.

அதனோடு நிலவரசனும் மேற்படிப்புக்கு வெளியூருக்கு சென்று விடுதியில் தங்கி படிக்க; வனிதாவின் மயிலரசியின் நட்பின் பிணைப்பு அதிகமானது.

காலங்கள் கடக்க, பள்ளி படிப்பை முடித்தனர் வனிதாவும் மயிலரசியும். பள்ளி படிப்பை முடித்தவுடன் மேற்கொண்டு படிக்க தில்லைநாயகி சம்மதிக்கவில்லை. வழக்கம் போல் தன் ஆசையை மனதில் போட்டு புதைத்துவிட்டு தில்லைநாயகியோடு சித்த மருத்துவத்தை கற்றுகொண்டிருந்தாள்.

வனிதா கல்லூரியின் முதலாம் ஆண்டின் இறுதியில் இருந்தாள். நிலவரசனும் தன்
மேற்படிப்பின் இறுதி ஆண்டை வெளியூரில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தான்.

வனிதாவின் அதிகபட்ச பேச்சு நிலவரசனை பற்றியதாகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் எதார்த்தமாக கேட்டுக்கொண்டிருந்த மயிலரசி நாளடைவில் ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள். அந்த ஆர்வமே மயிலரசிக்கு
நிலவரசன் மேல் ஒரு பிடித்தத்தை கொண்டுவந்தது.

பிடித்தம் நாள் ஆக ஆக காதலாக மாறியது. தன் காதல் நிறைவேறாது என்று தெரிந்தும் எனோ மானசீகமாக தன் காதலை வளர்த்துக்கொண்டிருந்தாள்

எப்பொழுதாவது தன்னைக்கண்டால் தெரிந்தவர் முக பாவனையுடனோ இல்லை சிறு புன்னைகையுடனோ கடந்துவிடும் நிலவரசன் மேல் உள்ள காதல் நிச்சயம் நிறைவேறாது என்று தெரிந்தும் இந்த காதல் ஒன்றே தன் வாழ்க்கைக்கு போதும் என்ற முடிவுடன் இருந்தால் மயிலரசி.

. இந்நிலையில் நிலவரசன் தன் படிப்பை முடித்து கொண்டு ஊர் திரும்புவதாக வனிதா மூலம் அறிந்த மயிலரசி மிகவும் சந்தோஷ மனநிலையில் இருந்தாள். எப்படியும் அடிக்கடி நிலவரசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் அவனை கண்களால் மனதில் நிரப்பிக்கொள்ளலாம் என்று.

அன்று கோவிலில் விளக்கு பூஜை நடைபெறுவதால் மாலை கோவிலுக்கு செல்லலாம் என கூற வனிதாவை தேடி அவளின் வீட்டிற்கு
சென்றாள் மயிலரசி.

அங்கு ஆதிலிங்க மூர்த்தி எங்கோ வெளியே செல்ல கிளம்பி வாசலில் நின்றகோண்டிருந்தார். அவரை பார்த்த மயிலர்சி சற்றே தயங்க

“ என்னம்மா????” என சற்றே தோரணையுடன் ஆதிலிங்க மூர்த்தி வினவ

“ இல்ல… அது… வந்துங்கய்யா…. வனிதாவை பார்க்கணும்ன்னு” என் மெல்லிய குரலில் மயிலரசி கூற

“ சரிம்மா உள்ள போய் பாரு” என கூறிவிட்டு கிளம்பிவிவிட்டார் ஆதிலிங்க மூர்த்தி.

‘ ஹப்பா இவரை பார்த்தாலே நமக்கு பயம் நடுக்கம் எல்லாம் வந்துடுது. அதுக்கு காரணம் இவரு தோரணையா இல்ல வனிதா இதுவரைக்கு அப்பாகிட்ட நான் அதிகம் பேசுனது இல்லன்னு சொன்னதா இல்ல இவரு மகனை காதலிக்கறதாலையா ’என தன் போக்கில் எண்ணிக்கொண்டிருந்தவள்

‘ அட லூசே நீ காதலிக்குறது நிலவரசனுக்கே தெரியாது .இதுல ஆதி ஐயாவுக்கு தெரிஞ்ச மாதிரி பயப்ப்புடுற’ என மனசாட்சி கேள்வி எழுப்ப. அதுக்கு பதில் கூறாது அமைதியாக வனிதாவின் அறையை நோக்கி சென்றாள்.

வனிதாவின் அறையை நெருங்குகையில் இன்பமாக அதிர்ந்து நின்றாள் .

அதற்கு காரணம் வனிதாவின் அறையில் நிலவரசனின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. ‘ என்ன நிலவரசனோட குரல் கேட்குது. ஒரு வேளை நம் மன பிரம்மையோ’ என மயிலரசி எண்ணிக்கொண்டிருக்கையில்,

“ நான் சொல்றத முதல்ல கேளு வனிம்மா”
என நிலவரசனின் குரல் ஓங்கி ஒலித்தது. அந்த சத்தத்தில் தன் சிந்தனையில் இருந்து வெளி வந்த மயிலரசி

‘ என்ன என்று’ பாதி கதவு திறந்திருந்த அறையின் வாசலில் இருந்து கவனித்தாள்.

“ இல்லண்ணா அது….. அது……” என வனிதா தயங்குகையில்

“ இங்கப்பாரு வனிம்மா நீ படிப்பை முடிக்கணும்ன்னு தானே இப்போ கல்யாணம் வேணாம்ன்னு சொல்ற. ஆனா அப்பா பார்த்துருக்க மாப்பிள்ளை கல்யாணம் முடிஞ்சதும் அவரே உனக்கு எதுவரை படிக்கணுமோ படிக்க வைக்குறேன்னு சொல்றார். இதுக்கு மேல என்ன” என நிலவரசன் பேசிக்கொண்டிருக்கையில்

“ எனக்கு மாப்பிளைய பிடிக்கல” என இடையிட்டு வனிதா கூற

“ மாப்பிள்ளையை பிடிக்கலையா?????. நீ இன்னும் மாப்பிளையோட போட்டோவைக்கூட பார்களையே. அப்புறம் எப்படி பிடிக்கலன்னு சொல்ற??” என கூர்மையான பார்வையுடன் நிலவரசன் வினவ

“ அண்ணா” என அழுத்தமாக சற்று உரக்க அழைத்து தன் கண்களை மூடிக்கொண்டு,

“ நீ எத்தனை மாப்பிளையை கூட்டிட்டு வந்தாலும் என்னோட பதில் இதுதான். ஏன்னா நான் வேற ஒருத்தரை விரும்புறேன்” என வனிதா கூற அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த மயிலரசி அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘ என்ன வனிதா யாரையோ விரும்புறாளா????. அதுவும் எப்பவும் கூட இருக்குற நெருங்குன தோழியான எனக்கு கூட தெரியாம’ என எண்ணிக்கொண்டு நிலவரசனை காண,

அவன் எந்தவொரு பாவனையும் முகத்தில் காட்டாது அதே கூர்மையான பார்வையுடன் வனிதாவையே நோக்கிக்கொண்டிருந்தான்.

‘ என்ன இவரு அதிர்ச்சி ஆகாம இருக்காரு’ என மயிலரசி என்ணுகையில்; அதே நேரம் கண்மூடி நின்றிருந்த வனிதாவும் எந்தவொரு சத்தமும் கேட்காததால் கண்திறந்து தன் அண்ணனை பார்க்க; நிலவரசன் வனிதாவிடம்,

“ உனக்கு காதலிச்சு ஒரு வருசம் கழிச்சு இப்போ சொல்லத்தான் தைரியம் வந்துச்சா” என கேட்டான்

“ அண்ணா!!!! இல்ல……. வந்து.. …”
என வார்த்தைகளை மென்று முழுங்கியவள் திடீரென “ அண்ணா!!!....” என அதிர்ந்து

“ உனக்கு…… உனக்கு…. அப்போ முன்னாடியே தெரியுமா???”

“ தெரியும் நம்ம அம்மாவோட மாமா பொண்ணு தாமரை. .அவுங்களோட பையன் கதிர் தானே”.

“ ஆமாம்” என வனிதா தலை ஆட்ட

“ இப்போ IT ல வேலைபார்க்குறாரு. அவருக்கு எல்லாமே அவரோட மாமா ஏழுமலைதான்” என நிலவரசன் கூற

“ உனக்கு எப்போ??? எப்படி தெரியும்????. தெரிஞ்சும் என்கிட்டே கேட்காம இருந்துருக்க”

“ ஹ்ம்ம்…. நீயா சொல்லுவன்னு பார்த்தேன். எங்க???....” என நிலவரசன் இழுக்க

“ இல்ல…. அது….” என திணறலோடு வனிதா பேச வருகையில்

“ மூணு மாசம் முன்னாடி திருவிழாவுல நான் விரும்புற பொண்ணை பார்த்துகிட்டு இருந்தேன். அப்போ பக்கத்துல கதிர் நின்னுகிட்டு யாருக்கோ கண்ணுல செய்தி சொல்லிட்டு இருந்தார்.

யாருடா இது பையன் ஊருக்கு புதுசா இருக்கான். அதுவும் கண்ணுல பேசுற அளவுக்கு இங்க எந்த பெண்ணுக்கிட்ட பேசுறார்ன்னு பார்த்தா, அது நீ” என நிலவரசன் கூறி நிறுத்த வனிதா தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள்.

“ உன்னைய பார்த்தா நீயும் எதோ அவருகிட்ட சைகை செஞ்சுகிட்டு இருந்த. அந்த நேரம் எனக்கு வந்த ஆத்திரத்துக்கு உன்னைய அங்கையே அடிச்சுறுப்பேன். ஆனா நானே காதலச்சுகிட்டுதான் இருக்கேன். இதுல எங்க உன்னைய கண்டிக்குறதுன்னு பேசாம வீட்டுக்கு போய்ட்டேன்.

ஆனா ஒரு அண்ணனா என்னால அப்படியே விட முடியல. அதான் கதிரை பார்த்து பேசுனேன். எனக்கு திருப்திதான். நான் ஊருக்கு திரும்பி வர்றதுக்குள்ள உன்னோட காதல் பத்தி சொல்லுவான்னு எதிர்பார்த்தேன். ஆனா சொல்லல. அதான் அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காருன்னு பொய் சொல்லி உண்மையை வாங்குனேன்” என நிலவரசன் கூறி முடித்தான்.

அப்போதும் வனிதா எதுவும் கூறாது குற்றஉணச்சியுடன் தலை குனிந்தே இருக்க. அதனை கண்டு நிலவரசன் அவளின் அருகில் சென்று தோள் தொட்டு,

“ வனிம்மா நீ இப்போ குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டியது இல்லடா. எனக்கு ஆதங்கம் என்னோட தங்கச்சி ஒரு விஷயத்தை மறைக்குறதா அப்படின்னு. ஆனா காதல் வந்தா கள்ளத்தனமும் வரும் அதுக்கு நீ என்ன செய்வ”
என மெல்லிய புன்னைகையோடு கூற

வனிதாவும் சிறு புன்னைகையுடன் “ மன்னிச்சுருண்ணா” என கூற

“ ஹம்ம்ஹும் மன்னிப்பெல்லாம் வேண்டாம். உன் படிப்பு முடிஞ்சவுடன் உனக்கும் கதிருக்கும் அப்பாகிட்ட பேசி கல்யாணம் பண்ணிவைக்குறேன். நீங்க சந்தோசமா வாழ்ந்தா அதுவே போதும்”

“ ரொம்ப நன்றி அண்ணா” என கூறிய வனிதா திடீரென,

“ அண்ணா நீ விரும்புற பொண்ணு. அதான் என் வருங்கால அண்ணி யாரு????. இங்க இந்த ஊருதானா” என மகிழ்ச்சியுடன் சற்றே உரக்க கேட்க.

அதே நேரம் வாசலில் நின்னிருந்த மயிலரசியின் மனநிலையே வேறு மாதிரியாக இருந்தது. நிலவரசன் வனிதாவிடம் பேசியதை கேட்டுக்கொண்டிருக்கும் போது

‘ மூணு மாசம் முன்னாடி திருவிழாவுல நான் விரும்புற பொண்ணை பார்த்துகிட்டு இருந்தேன்’
என நிலவரசன் கூறியதை கேட்டபோது இதயத்தை பிழிவதை போல் உணர்ந்தாள்.

ஊரிலே பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நிச்சயம் தன் போன்ற ஏழை குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள் . அப்படியும் எதோ ஒரு வகையில் பெண் எடுக்க நினைத்தாலும் தன் தந்தையை பற்றி தெரிந்தால் நிச்சயம் யோசிப்பார்கள் பெண் எடுக்க.

நிலவரசனின் அழகுக்கும் படிப்புக்கும் அந்தஸ்துக்கும் தான் நிகர் இல்லை. அதனால் எட்டி நின்றே எட்டாக்கனியாக தன் காதலை வளர்க்க முடிவு
செய்து தன் மனதை சமன் செய்து இருந்தாலும்; நிலவரசன் வாயால் இன்னொரு பெண்ணை விரும்புறதை கேட்டவுடன் மயிலரசிக்கு உலகமே ஸ்தம்பித்த உணர்வுதான்.

அப்போது ‘ பெண் யார்’ என்று கேட்ட வனிதாவின் குரலில் சுயநினைவு வந்த மயிலரசி யார் அந்த அதிர்ஷ்டசாலி என அறியும் பொருட்டு நிலவரசன் கூறப்போவதை கவனிக்க ஆரம்பிக்க,

திடீரென நிலவரசன் “ இந்த பொண்ணுதான்” என பாதி திறந்து இருந்த கதவை முழுவதுமாக திறந்து மயிலரசியை கை கட்டினான்.

நிலவரசன் சட்டென்று கதவை திறந்து தன்னை கை காட்டியதும் அதிர்ந்து விழித்தாள் மயிலரசி.

“ என்னது!!!!!!..... மயிலரசியா!!!......” என அதிர்ந்த வனிதா

“ அண்ணா நிஜமாவா!!!!..” என சந்தோசமாக அதே அதிர்ச்சியுடன் கேட்க

“ ஆமா வனிம்மா. உன் தோழி மயிலரசிய தான் உயிரா நேசிக்குறேன். இவதான் உன் வருங்கால அண்ணி போதுமா” என வனிதாவிடம் கூறிவிட்டு மயிலரசியிடம் தன் புருவங்களை உயர்த்தி “ சரிதானே” என வினவினான் நிலவரசன்.

‘ நானா!!!... நானா!!!... நிலவரசன் மனசுல இருக்குற பொண்ணு???. அப்போ அந்த அதிர்ஷ்டசாலி நான்தானா????. என்னோட காதல் அப்போ உயிர்போடுதான் இருக்குமா???’ என மனதில் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தவள்,

நிலவரசனின் சரிதானே என்ற கேள்வியில் என்னமாதிரி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை. அதே நேரம் அந்த சூழ்நிலையின் சந்தோசத்தின் கணம் தாங்காது வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள் மயிலரசி.

“ அண்ணா மயிலரசி எப்போ இங்க வந்தா??. நீ விரும்புறேன்னு சொன்னவுடன் வேகமா ஓடிட்டா. ஒருவேளை உன்னைய பிடிக்கலையா???” என கவலையாக வனிதா வினவ

“ அவ நாம பேச ஆரம்பிக்கும் போதே வந்துட்டா. சரி இங்கதான் நிக்குறா நாம இன்னைக்கே அவளை காதலிக்குறத சொல்லிடலாம்ன்னு முடிவு பண்ணித்தான் உன்கிட்ட நான் விஷயத்தையே சொன்னேன்.

அப்புறம் அம்மணி ஓடுனது பிடிக்காம இல்ல வெட்கத்துல” என நிலவரசன் கூற குழப்பத்துடன் நின்று கொண்டிருந்த வனிதாவிடம்

“ எப்பவும் நீ மயிலரசிய பத்திதான் என்கிட்டே அதிகம் பேசுவ. அப்போது இருந்து அந்த பொண்ணை பார்குறப்போ ஒரு விதமான உணர்வு தோணும். அது கொஞ்ச நாள் அப்புறம் தான் நான் மயிலரசிய காதலிக்குறேன்னு தெரிஞ்சுகிட்டேன்.

சரி சின்ன பொண்ணா இருக்காளே நாம காதலை சொன்னா புருஞ்சுக்குவாளா???. இல்ல என்னைய விரும்புவாளா அப்படின்னு குழப்பத்தோட அவளை பார்குறப்போ
அவளோட பார்வையில எப்போவும் ஒரு அலைப்புறுதல் இருக்கும். ஒரு ஏக்கம் இருக்கு .அதேநேரம் எனக்கான காதலையும் நான் பார்த்தேன்.

அப்புறம் நான் படிப்பை முடிச்சுட்டு இங்க வந்து என்னோட காதலை சொல்லணும்ன்னு முடிவுல இருந்தேன். இன்னைக்கு சந்தர்ப்பம் அமைஞ்சுடுச்சு.”

“ எதுக்கு நீ மயிலரசிகிட்ட நேரடியா ஒரு தடவை பேசிரு அண்ணா” தங்கையாக மட்டுமில்லாமல் நல்ல தோழியாகவும் கூறினாள்.

“ நிச்சயம் வனிம்மா இப்போ அம்மணி அந்த ஒத்தை காலு மண்டபத்துக்குத்தான் போய்ருப்பாங்க. நான் போய் பேசுறேன்” என கூறி ஒற்றை கால் மண்டபத்திற்கு சென்றான் நிலவரசன்.

அங்கு ஒற்றை கால் மண்டபத்தில் சந்தோச மிகுதியில் அழுதுகொண்டிருந்தாள் மயிலரசி.

திடீரென “ என்ன மயிலம்மா என்னைய காதலிக்குறது அவ்வளவு கொடுமையா????. இப்படி கண்ணீர்விட்டு அழுகுற” என நிலவரசன் கிண்டல் குரலில் கூற

திடீரென நிலவரசன் சத்தத்தில் தன் அழுகையை நிறுத்தி திரு திரு என விழித்துக்கொண்டிருந்தாள்.

“ ஹ்ம்ம்…. சொல்லு எதுக்கு இந்த அழுகை???. என்னைய பிடிக்கலையா??. எப்படி என்னைய மறுக்குறதுன்னு அழுகுறியா??” என நிலவரசன் கேட்டுகொண்டேபோக

“ இல்ல… இல்ல… எனக்…. எனக்கு….. உங்கள பிடிச்… பிடிச்சுருக்கு” என திணறலோடும் சிறு வெட்கத்தோடும் தன் மனதில் இருந்ததை கூறிவிட்டாள் மயிலரசி.

“ அப்போ எதுக்கு இந்த அழுகை????”

“ அது… அது… நாம ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கை நமக்கு கிடைக்காது. அந்த வாழ்ககைக்கு நமக்கு தகுதி இல்லைன்னு நினைக்குறப்போ. அது நமக்கு கிடைச்சுடுன்ற சந்தோஷத்துல வந்த கண்ணீர்”
என கூறிக்கொண்டே தன் கண்ணீரை துடைத்தாள் மயிலரசி.

“ என்னது தகுதியா??”

“ ஆமாங்க உங்க படிப்புக்கும், அழகுக்கும், குடும்ப பாரம்பரியத்திற்கு” என பேசிக்கொண்டிருந்த மயிலரசியை இடைமறித்த நிலவரசன்,

“ ஒரு நிமிஷம் இரு மயிலு.
தகுதின்றது நாம பார்க்குற கண்ணோட்டத்துல தான் இருக்கு. ஒவ்வொருத்தருக்கு அது படிப்பு, வேலை, குடும்ப சுழல், ஒழுக்கம், பணம் இப்படி மாறும்.

நமக்கு எது தேவையோ அது அடுத்தவர்கள்கிட்ட இருந்த அதை தகுதின்னு சொல்லுறது நம்ம எதிர்பார்க்குறது இல்லைன்னா அதை தகுதி இல்லைன்னு சொல்றது.

அப்படி பார்த்தா நான் எதிர்பார்க்குற நல்ல மனசும், நல்ல குணமும் உன்கிட்ட இருக்கு. ஆனா நீ எதிர்பார்க்குறக்கற எதாவது ஒண்ணாவது என்கிட்ட, அதாவது உன் பாஷையில உன்னை காதலிக்க எனக்கு தகுதி இருக்கா???” என நிலவரசன் கேட்க

மயிலரசி ப்ரம்மித்து நின்றாள். ‘ எவ்வளவு அழகாக என் மன சஞ்சலத்தையும் என் தாழ்வு மனப்பான்மையையும் புரிந்துகொண்டு. இப்போது என்னை இலகுவாக்கிவிட்டார்’ என எண்ணி உடனடியாக நிலவரசனின் கைகளை இறுக்க பிடித்துக்கொண்டு புன்னகையுடன் அவன் தோள்சாய்ந்தாள்.

நிலவரசனும் மயிலரசியை ஒரு கையால் அணைத்து பிடித்துக்கொள்ள சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். பின்

“ மயிலம்மா ஒரு ஆறு மாசம் காதலிச்சுட்டு. அப்புறம் உங்க அம்மாகிட்டயும் எங்க அப்பாகிட்டையும் பேசி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கலாம்” என நிலவரசன் கூற

“ ஹ்ம்ம்…” என தலையாட்டினாள் மயிலரசி.

அதீத மகிழ்ச்சியில் இருப்பதால் வார்த்தைகள் வரவில்லை என புரிந்துகொண்ட நிலவரசனும் எதுவும் கூறாது அமைதியாக இருந்தான்.

பின் காதலர்களுக்கே உரித்தான காலத்தின் வேகம் இவர்களுக்கும் வேகமாக சென்று மூன்று மாதங்கள் கடந்திருந்தது.



இனி??????..........................



 
அருமையான பதிவு
காதலிப்பது தெரிந்தது
யார் அந்த காதலுக்கு எதிரி
 
Top