Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-21

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -21

"ஏன்டி.. நீ என்ன புது டைப்பா இருக்க...? மூவிஸ்ல, புக்ஸ்ல எல்லாம் புருஷனை பிரிச்சு கூட்டிக்கிட்டு போற மனைவியைத் தான் காட்டி பார்த்திருக்கேன். நீ வேற மாதிரி இருக்கியே..." என்று அதிசயத்தான் நளன்.

"வேற மாதிரியா...? எப்படி? ரெண்டு கொம்பா இருக்கு?" என கையை தலைக்கு மேலே உயர்த்தி கொம்பு வைத்துக் காட்டினாள்.

"ஹூம்.. கொம்பு இல்ல... ஆனா வால் இருக்கு...." என்றான். அதற்கு அவனை ஆசையுடன் முறைத்தாள் ஸ்வப்னா.

"ஹேய்... மேட்டருக்கு வா.... வேற மாதிரினா... மறுபடியும் அங்க போகனும்னு பிடிவாதமா இருக்கியே... அதான் புரியல..." என்றான்.

"உன்னையும் உங்க அம்மாவையும் பிரிச்ச பாவம் எனக்கு எதுக்குப்பா.. "

"அப்ப.. ஊர் உலகம் எதாச்சும் சொல்லும்னா இந்த முடிவுக்கு வந்துருக்க..."

"அப்படில்லாம் இல்லனு பொய் சொல்ல மாட்டேன். நான் அவ்வளவு நல்ல பொண்ணு இல்ல. அதான் உனக்குத் தெரியுமே.. கொஞ்சம் அதுலயும் உண்மை இருக்கு. ஆனா ஊர் உலகத்துக்காக எல்லாம் நான் இதை பண்ணல..." என்றாள் அவள்.

"அப்ப என்னடி காரணம்?" என்றான்.

" எந்த பிரச்சனையானாலும் அதை சமாளிச்சு, மாமாவையும் அத்தையையும் கடைசி வரைக்கும் நாம வச்சி பார்க்கனும். அது தான் என்னோட விருப்பம், குறிக்கோள் எல்லாம்... தனியாவே வளர்ந்தவடா நான்.. கல்யாணத்துக்கு பிறகு குடும்பமா இருக்கனும்னு ஆசைப்பட்டேன்... நீ என்னனா கல்யாணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் கூட்டிக்கிட்டு வந்துட்ட..." வருத்தத்துடன் சொன்னாள்.

"ம்... நல்ல ஆசை தான்.. ஸ்வப்னா! ஆனா.. எல்லாம் நல்லதுக்கு தான் செய்தேன்டீ.. என் கடமையில் இருந்து நான் தப்பிச்சிக்க பார்க்கிறேனு நினைக்கிறியா...?"

" இல்ல நளா.. நீ எனக்கே ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்றப்ப அவங்களை அப்படியே விட்டுருவியா...? என்ன நீ உன் இஷ்டப்படி வாழனும்னு நினைக்கிற.. அதுல எந்த தப்பும் இல்ல..." என்று அவன் கைகளைப் பிடித்து சமாதானப்படுத்தினாள்.

"இல்லடி.. எங்க நான் ரொம்ப செல்ஃபிஷா இருக்னோனு நீ நினைச்சியிட்டியோனு..... " பரிதவிப்புடன் சொன்னான்.

"உன்னை கனவிலும் தப்பா நினைக்க மாட்டேன் கண்ணா!" என்று அவன் அருகில் முத்தமிட வந்துவிட்டு, அவன் கையிலிருந்த பூரிக்கட்டையை பிடுங்கிக்கொண்டாள். அவனோ அவளை லேசாய் முறைத்தான்.

"சப்பாத்தி போடனும் இல்ல..." என்று சமாதானம் வேறு சொன்னாள்.

அவளை துரத்திப்பிடித்து பின்புறமாய் அவளை அணைத்தான்.

"ஹேய் பொண்டாட்டி! அங்க போனா இதெல்லாம் மிஸ் பண்ண வேண்டி இருக்கும்டி..." என்று ஏங்கினான்.

"ம்ம்... ஆமா நளா... அங்க கொஞ்சம் அடக்க ஒழுக்கமாத் தான் இருந்தாகனும். ஆனா மாட்டிக்குவோமோனு பயந்து பயந்து பதட்டத்தோட, ஆசையோட ஒரு கிஸ் தந்தாலும் அதுல ஒரு 'கிக்' இருக்கும் இல்ல... அதை சந்தோஷமா அனுபவிப்போம். என்ன...?" என்று கண்சிமிட்டினாள்.

"உன்னை... சரி மேடம்...." என்று அழுத்தமாக அவள் கன்னத்தில் ஒரு இச்சு கொடுத்தான்.

அடுத்து என்னென்னமோ நடக்கப்போவது தெரியாமல் அவர்களிருவரும் கற்பனையில் மிதக்கத்தொடங்கிங்கிருந்தனர்.

~~~

அடுத்து வந்த நாட்களில் அதிரடி மாற்றம் நிகழத்தொடங்கியிருந்தது.

நளனும் ஸ்வப்னாவும் மகேஸ்வரியின் ஆரத்தியில் திருஷ்டிகளை கழற்றி எறிந்து விட்டு அந்த வீட்டில் தம் புது வாழ்வை ஆரம்பித்தனர். இரண்டு நாட்கள் கூடவே இருந்த சஞ்சனா அவள் கணவரிடமிருந்து அடுத்த அழைப்பு வரும் முன்னே அடித்துப்பிடித்துக் கொண்டு கிளம்பினாள். நளனின் புது வீட்டை பாச்சுலர் சத்யாவின் பொறுப்பில் விட்டுவிட்டிருந்தனர்.

முதல் இரண்டு நாட்களும் நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது. அதோடு ஆட்டம் காண ஆரம்பித்தது ஸ்வப்னாவின் கனவுகள்.

காலையில் எழுந்து வீட்டு வேலைகள் சிலவற்றைக் கவனித்துவிட்டு, காலை மற்றும் மதிய உணவையும் தயார் செய்து வைத்துவிட்டு பறக்கப் பறக்கச் செல்வாள். பின்நேரம் பள்ளியிலிருந்து வந்ததும் தன்னுடைய வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டாள். சில நேரங்களில் மகேஸ்வரி கவனித்துக்கொள்ள, சில நேரங்களில் அவள் செய்து வந்தாள். போகப் போக அந்த வேலை அட்டவணையில் நிறைய மாற்றங்கள் எழத் துவங்கின.

"ஏன் ஸ்வப்பு இவ்ளோ சீக்கிரம் எழும்புற...? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் தானே..." என்று அவளை இழுத்து அணைத்து மீண்டும் உறங்க வைக்க முற்பட்டான் நளன்.

அவளுக்கும் அவனை உடல் ஒட்ட உரசிக்கொண்டு, அவன் கைகளில் குழந்தையைப் போல உறங்கவேண்டும் என்ற ஆசை டண்டண்ணாய் வந்தது. இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு அவன் கைகளை சிரமப்பட்டு தூக்கி அவன் மீதே போட்டுவிட்டு எழுந்தாள்.

"அச்சோ.. விடு நளா.. எனக்கு நிறைய வேலை இருக்கு...."

அவன் அடுத்த ரவுண்டு தூங்க தயாராக அவள் குளித்து, வீட்டைக் கூட்டி சுத்தமாய் துடைத்துவிட்டு, சமையல் செய்துவிட்டு அறைக்குள் வந்தாள்.

நளன் வேலைக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தான். அவள் வேக வேகமாக வந்து கப்போர்டைக் குடைந்தாள். அவன் ஆசையாய் பின்னால் வந்து அணைத்துக்கொண்டான்.

"அச்சோ.. விடு நளா... லேட் ஆகுது. ஹேய்.. இன்னைக்கு எந்த கலர் சாரி உடுத்தட்டும்..?"

"இன்னைக்கு என்ன புதுசா கேக்குற..?"

"சும்மா சொல்லு கண்ணா.. இன்னைக்கு விநாயகர் சதுர்த்தி. போறப்போ என்னை கோவில்ல டிராப் பண்ணிட்டுப் போ... முடிஞ்சா நீயும் வந்து ஸ்வாமி தரிசனம் பண்ணலாம்."

" இந்த தேவதையை இங்கயே தரிசனம் பண்ணலாம்..." என்றவன் பார்வை எங்கெங்கோ சென்றது.

"உதை விழும். நான் தரிசனம் பண்ண சொன்னது ஸ்வாமியை... ராஜா..." என்று மிரட்டினாள்.

"சரிடி பொண்டாட்டி....." என அவளை சேலை கட்டவிடாமல் தொல்லை பண்ணினான்.

"ஐயோ... கட்டவிடு செல்லம்.. "என்று அவனை சமாளித்து கட்டத்துவங்கினாள். அவன் கண்ணிமைக்காமல் அமர்ந்து அவளை விழுங்கிவிடுபவள் போல பார்த்துக்கொண்டிருந்தான்.

"எதுக்கு ராஜா இப்படி பார்க்கிறிங்க...? "

எழுந்து அவள் அருகில் வந்து அவள் இடைக்கு சபோர்ட் கொடுதான்.

"இன்னைக்கு ஏதோ புதுசா தெரியுறடி...." அவன் குரல் ஏக்கமாய் வந்தது.

"அப்படியா.. சரி கொஞ்சல்ஸ் எல்லாம் போதும். வா சாப்பிட்டு கிளம்பலாம்..."

"ஐயோ... உன் அழகுல என் மூட் எல்லாம் என்னென்னவோ பண்ண சொல்லுதே...."

"ஹும்.. என்ன பண்ண சொல்லுது...." என்று சொல்லி கண்ணாடியில் அவனைப் பார்த்து சிரித்தாள். அவளை அணைத்து அவள் உதடுகளை தன் விரல்களால் அளவெடுத்தவனின் கைகள் கொஞ்சமாய் கீழே இறங்கி செல்லத் தொடங்கின.

"அப்படியே... இந்த...." என்று அவன் தொடங்கும் முன்னரே அறைக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார் மகேஸ்வரி. இருவரும் திகைத்தார்கள்.
 
Nirmala vandhachu ???
 
Top