Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! - 6

Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரெண்ட்ஸ்....

உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுகளுக்கும் மிக்க நன்றி....!!

ஆறாவது அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க...!!
அத்தியாயம் 6ஆதித்யன் அறையிலிருந்து வெளியே வந்த நித்திலாவை,லீலா அழைத்துச் சென்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.முதல் பார்வையிலேயே.....சிநேகமாய் புன்னகைத்தவளை... பார்த்த அனைவருக்குமே பிடித்துப் போனது.

அறிமுகப் படலம் முடிந்ததும்,"சரி...வாங்க நித்திலா....!நம்ம இடத்துக்குப் போவோம்....",என்று லீலா அவளை அழைத்துச் சென்றாள்.

லீலாவின் டேபிளுக்கு அருகிலேயே,நித்திலாவுக்காக புது டேபிள் போடப்பட்டிருந்தது.நித்திலாவின் டேபிளை ஒட்டி....சுமித்ராவின் இடம் இருந்தது.

"அட....!இவங்களை அறிமுகப்படுத்த மறந்துட்டேனே.....நித்தி....!இவங்கதான் சுமித்ரா......கிட்டத்தட்ட நம்ம ஜெனரல் மேனேஜர் கெளதம் சார்க்கு P.A மாதிரி....",என சுமித்ராவை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

ஏனோ பார்த்த முதல் பார்வையிலேயே....சுமித்ராவுக்கும் நித்திலாவிற்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப் போனது.

"ஹலோ சுமித்ரா...!நைஸ் நேம்.....ராமாயணத்துல வர்ற சுமித்திரையைப் போலவே அமைதியா இருப்பீங்களோ.....?",என சிரித்துக் கொண்டே நித்திலா கேட்க,அதற்கு ஒரு அழகான புன்னகையை சிந்தினாள் சுமித்ரா.

"உண்மைதான் நித்திலா....இவங்க ரொம்ப அமைதிதான்....",என லீலா இடையில் புக,

"அப்படி எல்லாம் இல்ல நித்திலா....அதுதான்....ரெண்டு பேரோட டேபிளும் பக்கத்திலதான இருக்கு....என்னோடப் பழகிப் பார்த்து 'நான் அமைதியானவளா....?இல்லையான்னு தெரிஞ்சுகோங்க....",என சுமித்ரா புன்னகைத்தபடிக் கூற,

"அடடே...!சுமித்ரா....!நீங்க இவ்வளவு பேசியதே அதிகம்தான்....சரி...வாங்க நித்திலா....!நாம போய் நம்ம வேலையைப் பாப்போம்....",என லீலா அழைக்க,சுமித்ராவைப் பார்த்து தலையசைத்தபடி தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் நித்திலா.

நித்திலாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகள் பற்றியும்....அதன் நுணுக்கங்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள் லீலா.செயலாளர் வேலை...அதுவும் அவ்வளவு பெரிய நிறுவனத்தின் M.D யின் செக்ரெட்டரி எனும் போது வேலை சிறிது கடினமாகத்தான் இருந்தது.

நித்திலா....இயற்கையிலேயே புத்திசாலி என்பதால் அனைத்தையும் துடிப்புடன் கற்றுக் கொண்டாள்.அவளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பது,லீலாவிற்கு ஒரு பெரிய வேலையாக இருக்கவில்லை.அதை நித்திலாவிடம் கூறவும் செய்தாள்.

"இவ்ளோ ஸ்பீடா கத்துக்கிட்டா....மூணு மாசம் தேவைப்படாது...ஒரு மாசமே போதும்...",

அவள் கூறியதை சிறு புன்னைகையுடன் ஒதுக்கித் தள்ளியவள்,தனக்கு இருக்கும் சந்தேகங்களைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள்.

நித்திலாவின் சந்தேகங்களை தீர்த்து வைப்பதிலும்....அவளுக்குத் தேவையான விபரங்களைக் கூறுவதிலும் நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

மதிய நேரம் நெருங்கவும்,"சரி...வாங்க நித்திலா...!இது லன்ச் டைம்....சாப்பிட்டுட்டு வந்து வேலையைப் பார்க்கலாம்...",என லீலா அழைக்க,

"ம்ம்...போலாம் மேடம்....வாங்க....",என்றபடி தன் கைப்பையை எடுத்துக் கொண்டு எழுந்தவள்,அருகிலிருந்த சுமித்ராவைப் பார்த்து,

"நீங்களும் வாங்க சுமித்ரா....!சாப்பிடப் போகலாம்...",என அழைக்க,

"இல்ல...பரவால்ல...நீங்க போங்க....நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்...",எனத் தயங்கியவளை,

"அட வாங்க...!இனி லன்ச்சுக்கு எங்க கூட ஜாயின் பண்ணிகோங்க....",என விடாப்பிடியாய் அழைத்துச் சென்றாள்.

மூவரும் மேல்தளத்தில் இருந்த ஆபிஸ் கேன்டீனில் சென்று சாப்பிட அமர்ந்தனர்.

"அப்புறம் நித்திலா...உங்க ஊர் எது...?உங்க அம்மா அப்பா என்ன பண்றங்க...?",எனப் பேச்சை ஆரம்பித்தாள் லீலா.

"சொந்த ஊர் கோயம்புத்தூர் மேடம்....அப்பா ஒரு பிரைவேட் கம்பெனில்ல அக்கவுண்டண்ட் அண்ட் அம்மா ஹவுஸ் வைஃப்...அப்புறம் என் அக்கா தீபிகா...!இப்போ அவளுக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு....",எனத் தன் குடும்பத்தைப் பற்றிக் கூறினாள்.

"நித்திலா...!நான் ஒண்ணு சொல்லட்டுமா....?இந்த 'மேடம்' எல்லாம் வேண்டாமே...ஜஸ்ட் கால் மீ லீலா...",

"அது எப்படி மேடம்.....?பேர் சொல்லிக் கூப்பிடறது...?நீங்க என்னை விட வயசுல மூத்தவங்களா இருக்கீங்க....வேணும்னா 'அக்கான்னு' கூப்பிடட்டுமா...?",எனத் தயக்கத்துடன் வினவ,

"ஓ...ஷ்யூர்...!எனக்கும் ஒரு தங்கச்சி கிடைச்ச மாதிரி ஆச்சு...நானும் இந்த 'போங்க...!வாங்க...!' எல்லாம் கட் பண்ணிட்டு 'நித்தின்னே' கூப்பிடறேன்...",என்று புன்னகைத்தாள் லீலா.

"சூப்பர் க்கா....!அப்படியேக் கூப்பிடுங்க....சுமி...!நீயும் எனக்கு மரியாதை எல்லாம் தர வேண்டாம்...எப்படி பார்த்தாலும்....ரெண்டு பேருக்கும் ஒரே வயசாகத்தான் இருக்கும்...",என நித்திலா கூற,

"சரி டி நித்தி....இனி உனக்கு மரியாதை எல்லாம் தரலை டி...இது போதுமா டி...?",என சுமித்ரா குறும்பாகக் கண்ணடிக்க,

"போதும்...போதும்...!",என சிரித்தவளைப் பார்த்த லீலா,"சரி...சரி...!ரெண்டு பேரும் சாப்பிடுங்க...நமக்கு லன்ச் டைம் ஒரு மணி நேரம்தான்...",எனவும் மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர்,

மூவரும் தங்களுக்குள் வழவழத்தபடி,தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை ஷேர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது,"ஹாய் லீலா அக்கா...!என்ன புதுசா ரெண்டு பேரைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க...?",என்றபடி ஒருவன் வந்து அமர்ந்தான்.

"ஹே பாலா...!வா...வா....!சாப்பிடலாம்...",என்று அவனை அழைத்த லீலா,"இவங்க ரெண்டு பேரும் நம்ம பிரெண்ட்ஸ்....இவ நித்திலா....!நம்ம M.D யோட புது செக்ரெட்டரி....அண்ட் இது சுமித்ரா...!நம்ம ஆபிஸ்லதான் வொர்க் பண்ணறாங்க....",என அவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தியவள்,

நித்திலா மற்றும் சுமித்ராவிடம் திரும்பி,"நித்தி அண்ட் சுமி...!இது பாலா...!ப்ரொடக்க்ஷன் மானேஜர்....!நம்ம M.D கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் மட்டும் பண்ணல....பெரிய பெரிய மெஷின்களுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கிற பிசினஸ்...எக்ஸ்போர்ட்....அப்படி இப்படின்னு...நிறைய பிசினெஸ் பண்ணறாரு... அதுல ப்ரொடக்க்ஷன் வொர்க்கையெல்லாம் மேற்பார்வை பார்க்கற வேலைதான் இவனுடையது...",என அறிமுகப்படுத்தினாள்.

"ஹாய் கேர்ள்ஸ்...!நைஸ் டூ மீட் யூ போத்....!",என இருவரைப் பார்த்தும் புன்னகைத்தவன்,நித்திலாவைப் பார்த்து,"நித்திலா....!நம்ம M.D யுடைய புது செக்ரெட்டரி....அவர் கூட நேரடியாப் பழகப் போறீங்க....நிறைய பொறுமைத் தேவைப்படுமே....?",எனப் பேச்சை வளர்த்தான்.

"நிறையப் பொறுமையா...?ஏன் அப்படி சொல்றீங்க...?",எனக் கேட்டவளிடம்,

"என்ன இப்படி கேட்கிறீங்க...?உங்களுக்கு விஷயமே தெரியாதா....?நம்ம M.D க்கு கோபம் ரொம்ப ரொம்ப அதிகமா வரும்....வேணும்னா நம்ம லீலா அக்காவைக் கேட்டுப் பாருங்க....!",என லீலைவைக் கை காட்டினான்.

நித்திலா சாப்பிடுவதை மறந்தவளாய் லீலாவைத் திரும்பிப் பார்க்க,அவளோ,"ஆமா நித்தி....!அவருக்குக் கொஞ்சம் கோபம் அதிகமாத்தான் வரும்....எந்த வேலையையும் கச்சிதமா முடிக்கணும்னு நினைப்பார்....நானே எத்தனை டைம் திட்டு வாங்கியிருக்கேன்....தெரியுமா....?",எனத் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டாள்.

"என்னக்கா.....ஏதோ ஆஸ்கார் அவார்ட் வாங்கின மாதிரி சொல்றீங்க....",என நித்திலா வாயைப் பிளக்க,

"அவங்களுக்கு அது ஆஸ்கார் அவார்ட் வாங்கின மாதிரிதான் நித்திலா....நீங்க வாங்கும் போது உங்களுக்கேத் தெரியும்....",எனக் குறுக்கே புகுந்து பேசினான் பாலா.

அவன் கூறியதைக் கேட்டு சற்று பயப்படத்தான் செய்தாள் நித்திலா.அவள் முகத்திலிருந்தே....அவள் நிலையை அறிந்துக் கொண்ட லீலா,பாலாவிடம் திரும்பி,"சும்மா அவளை பயமுறுத்தாத பாலா....அவளே இன்னைக்குத்தான் வேலையில ஜாயின் பண்ணியிருக்கா....",என்று அவனைக் கடிந்தவள்,

நித்திலாவைப் பார்த்து,"அப்படி ஒண்ணும் பயப்பட வேண்டிய அவசியமில்ல நித்தி....!என்ன....நாம செய்யற எல்லா வேலைகளிலேயும் ஒரு பெர்ஃபக்ஷன் எதிர்பார்ப்பாரு....அவ்வளவுதான்....நீ சாப்பிடு....!",என்று எடுத்துக் கூறினாள்.

இதை அனைத்தையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த பாலா,"ஒகே கேர்ள்ஸ்....நீங்க சாப்பிடுங்க....நான் கிளம்பறேன் அண்ட் நித்திலா....வெல்கம் டூ அவர் ஆபிஸ்....பை....!",என்று அவளுக்கு வாழ்த்திவிட்டுக் கிளம்பினான்.

'இவை அனைத்திற்கும்....எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை...' என்பது போல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த சுமித்ராவைப் பார்த்த நித்திலா,"என்ன சுமி....!நீ மட்டும் அமைதியா இருக்க....நீயும் உன் M.D யைப் பத்தி உன் பங்குக்கு....ஏதாவது புகழ வேண்டியதுதானே....?",என்க,

"இல்ல நித்தி....!நான் அவரோட அவ்வளவா பேசியதில்ல.....ஸோ...எனக்கு நம்ம MD யைப் பத்தி ஒண்ணும் தெரியாது...",என்று தோளைக் குலுக்கினாள்.

இதைக் கேட்ட லீலா,"ஆமா....ஆமாம்...!அவளுக்கு நம்ம MD யைப் பத்தி ஒண்ணும் தெரியாதுதான்....இதுவே....நம்ம G.M யைப் பத்திக் கேட்டுப் பாரு....எல்லா விஷயத்தையும் பிட்டு பிட்டு வைப்பாள்....!",எனக் கண்ணடித்துச் சிரிக்க,

லீலா கூறுவதிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்தது.கெளதம் அடிக்கடி...சுமித்ராவை தனது அறைக்கு அழைத்துக் கொண்டே இருப்பான்.அதற்கு ஏற்றார் போல்,அவளது வேலைகள் அனைத்தும் அவனது மேற்பார்வையின் கீழ்தான் வரும்....அவன் உண்மையிலேயே வேலைக்காகத்தான் அழைத்தானா...?இல்லை....வேறு எதற்காகவாவது அழைத்தானா....என்பதை அவன்தான் கூற வேண்டும்....!

ஆனால்....என்ன ஒரு விஷயமென்றால்....இவர்களது கண்ணாம்பூச்சி ஆட்டத்தை அலுவலகமே வேடிக்கைப் பார்க்கும்.அதனால்தான் லீலா அப்படி கிண்டலடித்தாள்.

இதைக் கேட்ட நித்திலா,சந்தேகமாக சுமித்ராவைப் பார்க்க,அவளோ,"நான் என்ன செய்யட்டும்....?என் வொர்க் எல்லாமே கெளதம் சார்க்கு கீழதான் வருது....இருந்தாலும்....லீலா அக்கா...நீங்க நினைக்கற மாதிரி...அவரைப் பத்தி எல்லாம்...எனக்கு ஒண்ணும் தெரியாது....",என்று அவசர அவசரமாக மறுத்தாள்.

"என்னவோ போ...ஒரு நாளைக்கு இருபது முறையாவது...அவர் உன்னை அவரோட ரூம்க்கு கூப்பிட்டறார்....இதுல 'அவர பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது'ன்னு நீ சொல்றது...நம்பற மாதிரி இல்லையே....?"

சுமித்ராவை,விளையாட்டாய்....வம்பிழுப்பதற்காகத்தான் லீலா அவ்வாறு கூறினாள்.

ஆனால்,சுமித்ராவோ...விட்டால் அழுது விடுபவள் போல் முகத்தை வைத்துக் கொண்டு,"இதுல நான் என்ன செய்ய முடியும்....?அவரு...வேலை விஷயமா பேசறதுக்காகதான் என்னை...அவரோட ரூம்க்கு கூப்பிடுவாரு....",என்றாள்.

"ஹே...சுமி!ஜஸ்ட் ஃபார் ஃபன்....!நீ இத சீரியஸா எடுத்துக்காத....",என்று லீலா அவளைத் தேற்ற,

"சரி...சரி....!விடுங்கப்பா.....லேட் ஆகிடுச்சு....!நாம கிளம்பலாம்....",என நித்திலா கூற,மூவரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கிளம்பினர்.

மதிய உணவிற்கு பிறகும்....நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்வதில் நித்திலாவிற்கும்....லீலாவிற்கும் நேரம் போனது.

இப்படியாக அலுவலக நேரமும் முடிய,வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராக அலுவலகத்தில் இருந்து கிளம்ப ஆரம்பித்தனர்.

"ஒகே நித்தி....!டைம் ஓவர்....நீ கிளம்பு....நாளைக்குக் காலையில மீட் பண்ணலாம்....",என்றபடி லீலா விடைப்பெற்றுச் செல்ல,நித்திலாவும் கிளம்ப ஆயத்தமானாள்.

சுமித்ராவும்,"பை நித்தி....!நான் போய் கெளதம் சார்கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டுக் கிளம்பறேன்....",என்றபடி அவளும் சென்று விட்டாள்.

'சரி...நாமும் ஆதி சார்கிட்ட சொல்லிட்டுக் கிளம்புவோம்...' என்று எண்ணியபடி நித்திலா...ஆதித்யனின் அறைக்குச் சென்றாள்.அங்கு அவனுடன் கௌதமும் இருந்தான்.இவளைப் பார்த்ததும் ஆதித்யன்,"வா நித்திலா...!ஹவ் வாஸ் தி டே....?வேலை எல்லாம் உனக்கு பிடிச்சுதா....?",என உற்சாகமாக விசாரித்தான்.

"ம்ம்....சூப்பர் சார்...அண்ட் வேலையையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....புதுசு புதுசா....கத்துக்கறதுக்கு....நிறைய விஷயம் இருக்கு....!",என அவளும் ஆர்வமாகப் பதில் கூறினாள்.

இருவரையும் சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கௌதமைப் பார்த்த ஆதித்யன்,அப்பொழுதுதான் நினைவு வந்தவனாய்,"நித்திலா....இது கெளதம்!நம்ம கம்பெனி G.M அண்ட் மை பெஸ்ட் பிரெண்ட்.....",என்று அறிமுகப்படுத்தியவன்,

கௌதமிடம் திரும்பி,"கெளதம்....இது நித்திலா!என் புது செக்ரெட்டரி.....காலையில நீ இல்லாததுனால அறிமுகப்படுத்த முடியல....",என்று இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான்.

கௌதமிற்க்கு ஆச்சரியமாக இருந்தது.ஆதித்யன்...அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு பெண்ணையும்....ஒருமையில் அழைக்க மாட்டான்.இப்பொழுது...நேற்றுப் பார்த்த பெண்ணை அவன் இன்று ஒருமையில் அழைக்கிறான் என்றால்....அவள் எந்த அளவிற்கு ஆதித்யனின் மனதில் இடம் பிடித்திருக்கிறாள் என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

"ஹாய் நித்திலா....!வெல்கம் டூ அவர் ஆபிஸ்....",என்று கை நீட்டியவனிடம்,"ஹலோ சார்....!",என்று ஒரு புன்னகையுடன் கை குலுக்கியவள்,ஆதித்யனிடம் திரும்பி,"ஒகே சார்.....!நான் கிளம்பறேன்.....லேட் ஆகிடுச்சு...."என்றபடி தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க,

"ஒகே நித்திலா....!நீ கிளம்பு....நாளைக்குப் பார்க்கலாம்....",என்றபடி அவளை வழியனுப்பி வைத்தான் ஆதித்யன்.

அவள் போவதையே விழியிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்த கௌதமிற்கு....எதுவோ புரிவது போல் இருந்தது....!இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,ஆதித்யனிடம் பேசி விட்டுக் கிளம்பிச் சென்றான்.

அகம் தொட வருவான்...!!!
 
eanandhi

Well-known member
Member
Super sis

Top