Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! - 5

Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரெண்ட்ஸ்.....

அடுத்த அத்தியாயத்தோடு வந்து விட்டேன்.....வழக்கம் போல் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.....அப்படியே லைக் போடவும் மறந்துடாதீங்க...!!

சென்ற அத்தியாயத்திற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்....லைக் போட்டவர்களுக்கும் நன்றி...!!
 
Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 5நித்திலா சென்னை சென்று இறங்கிய போது....அவளை அழைத்துச் செல்வதற்காக...அவளது தோழி நந்தினி,பேருந்து நிலையத்திற்கே வந்திருந்தாள்.

"ஹே....நித்தி எரும....வெல்கம் டு சென்னை டி...!",என்று முதுகிற்குப் பின்னே ஒலித்த ஆர்ப்பாட்டமான குரலில் முகம் மலரத் திரும்பினாள் நித்திலா.

அவளது தோழி நந்தினிதான் வாயெல்லாம் புன்னகையாக நின்றிருந்தாள்.

"ஹாய்...!நந்தி குரங்கே....!எப்படி டி இருக்க...?",என்று ஓடிப் போய் தோழியைக் கட்டிக் கொண்டாள் நித்திலா.

"சூப்பர் பா....!எப்படியோ உன் அம்மா முந்தானையை பிடிச்சிக்கிட்டு தொங்கறதை விட்டுட்டு இங்க வந்துட்ட....",என சிரிக்க,

"அதுதான் நீ இருக்கிறாயே.....உன் துப்பட்டாவை பிடிச்சுக்கலாம்னு வந்துட்டேன்....",எனக் கண்ணடித்தாள்.

"ஆக மொத்தம்....எதையாவது பிடிச்சுத் தொங்கறத மட்டும் விட மாட்ட....அப்படித்தானே.....?சரி சரி....வா....ஹாஸ்டலுக்குப் போய் பேசிக்கலாம்",என்றபடி தோழியை இழுத்துச் சென்றாள்.

தோழிகள் இருவரும் ஆட்டோப் பிடித்து ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

வந்ததும் முதல் வேலையாக ஹாஸ்டல் வார்டனிடம் நித்திலாவை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவள்....பிறகு...அவளை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

நந்தினியின் அறை நான்கு பேர் தங்கக் கூடியதாக இருந்தது.ஏற்கனவே...இரு பெண்கள் அறையைப் பங்கு போட்டிருந்தனர்.நித்திலாவும் அவர்களுடன் தங்கி கொள்வதாக ஏற்பாடாகி இருந்தது.

அறைக்குள் நுழைந்ததும்,"ஹாய்....!வெல்கம் டு சிங்கார சென்னை...!",என்ற குரல் கோரஸாக ஒலித்தது.

"ஹே நித்தி...!இவங்களும் நம்ம பிரெண்ட்ஸ்தான்....இவ காவ்யா...!அண்ட் இவ வர்ஷினி....!நாம நாலு பேரும்தான் இந்த ரூமில் தங்கப் போறோம்...",என்று அறிமுகப் படுத்தி வைத்தாள் நந்தினி.

"ஹாய்...!",என்று பதிலுக்கு முறுவலித்த நித்திலாவை பார்த்ததுமே...மற்ற இரு பெண்களுக்கும் பிடித்துப் போனது.

நால்வரும் ஒத்த வயதினர் என்பதால்.....அவர்களுக்குள் நட்பு பாராட்டுவது கடினமாக இல்லை.

...........................................................................................................................................

அன்று காலை மிகுந்த உற்சாக மனநிலையோடு அலுவலகத்திற்குக் கிளம்பினான் ஆதித்யன்.அன்றிலிருந்து அவன் தேவதை....அவனுடனேயே இருக்கப் போகிறாள் அல்லவா...!அந்த மகிழ்ச்சி.....அவன் முகத்திலும் பிரதிபலித்தது.

என்றும் கடுமையான முகத்துடன்...அலுவலகத்தில் வலம் வருபவன்....அன்று...உதட்டில் பூத்த சிறு புன்னகையோடு வந்து இறங்கினான்.

அனைவரும் சொன்ன 'குட் மார்னிங்கை' சிறு முறுவலோடும்...சின்ன தலையசைப்போடும்...ஏற்றுக் கொண்டு,தன் கேபினுக்கு விரைந்தவன்...முதல் வேலையாக கௌதமை வரச் சொன்னான்.

"ஹாய் டா ஆதி....!குட் மார்னிங்...!",என்றபடி வந்த கௌதமை "வெரி குட் மார்னிங் டா...!",என்ற விரிந்த புன்னகையுடன் வரவேற்றான் ஆதித்யன்.

வெகு உற்சாகமாக தன்னை வரவேற்ற தன் நண்பனை பார்த்தவன்,"என்னடா...!உன் முகத்துல 1000 வாட்ஸ் பல்பு எரியுது....சிரிக்கறதுக்கே கூலி கேட்கற ஆள் ஆச்சேடா நீ....",என்க,

அதற்கும் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தவனைக் கண்டு,"ம்ஹீம்....ஏதோ சரியில்ல....என்னடா மச்சான் மேட்டர்....?",எனக் கண்ணடிக்க,

ஆதித்யனின் மனதில் நித்திலாவின் முகம் மின்னி மறைந்தது.

"ஒரு மேட்டரும் இல்ல...சரி...என் செக்ரெட்டரி போஸ்டுக்கு ஆள் வேணும்னு விளம்பரம் கொடுக்க சொல்லிருந்தேன்ல...அதை கேன்சல் பண்ணிடு..."தன் கனவில் இருந்து வெளி வந்தவனாய் கூற,

"ஏன்டா...உனக்கு செக்ரெட்டரி வேண்டாம்னு முடிவு பண்ணிட்டயா....?", என்ற கௌதமிடம்,

"இல்ல டா....என் செக்ரெட்டரியா ஒரு பொண்ண நானே செலெக்ட் பண்ணிட்டேன்....ஸோ...நீ அத கேன்சல் பண்ணிடு....",

"என்ன....! ஒரு பொண்ண நீ செலெக்ட் பண்ணிட்டயா....?நம்பவே முடியலையே....?!!",என்று தன் தாடையைத் தடவ,

"ஆமா டா....ஒரு வகையில என் ரிலேட்டிவ் பொண்ணுதான்....",இதைக் கூறும் போதே அவன் முகம் மென்மையாக மாறியது.கெளதம் ஒரு மாதிரியாக தன்னைப் பார்ப்பதைக் கண்டு சுதாரித்துக் கொண்டவன்,. "ஒகே டா....லீவ் இட்....!அந்த R.V கம்பெனி ப்ராஜெக்ட் எந்த நிலைமையில இருக்குது....",என்று பேச்சை மாற்ற,அதன் பிறகு பேச்சு தொழிலுக்கு மாறியது.

"அல்மோஸ்ட் கம்ப்ளீட் டா....!அந்த சைட்டுக்கு போய் பார்க்கலாம்னு சொன்னாயே.....பதினோரு மணிக்கு கிளம்பலாமா...?"

"இல்ல....இன்னைக்கு வர முடியாது....நீ மட்டும் போயிட்டு வா....!", என்றவனின் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை வந்தமர்ந்தது.

அவனை வித்தியாசமாகப் பார்த்த கெளதம்,"ம்ஹீம்....!இன்னைக்கு நீ ஒரு மார்க்கமாத்தான் இருக்கற டா மச்சான்....ஒகே...!நீ என்னமோ பண்ணு....நான் போய் என் வேலையைப் பார்க்கறேன்...",என்றபடி கிளம்பினான்.

தன் முடியைக் கோதிக் கொண்டவன்,'சே..!கெளதம் பார்த்து கேட்கற அளவுக்கா என் முகத்தை வைச்சிருக்கிறேன்.....ஹ்ம்ம்....பேபி...!எல்லாத்துக்கும் நீதான் காரணம்....உன்னுடைய அழகான முகம் என் மனசுல தோணுனாவே நான் என் கண்ட்ரோல்லயே இருக்கறது இல்ல....இதுல...நீ என் பக்கத்துலயே இருந்தா அவ்வளவுதான்....",எனப் பெருமூச்சு விட்டவன்,

ரிசெப்ஷனுக்கு அழைத்து 'நித்திலா' என்று ஒரு பெண் வருவாள் என்றும்,அவள் வந்தால்...உடனே தன் கேபினுக்கு அனுப்பும் படியும் சொல்லிவிட்டு போனை வைத்தான்.

'பேபி...!எல்லாமே ரெடி....நீ வர்றது மட்டும்தான் பாக்கி....சீக்கிரம் வா...ஐ யாம் வெயிட்டிங் ஹியர் பார் யூ டியர்.....!' மனதுக்குள் அவளுடன் பேசிக் கொண்டிருந்தவனை வேலைகள் அழைக்க,ஒரு வழியாக அவள் நினைவுகளில் இருந்து பிரியா விடை பெற்று வெளியே வந்தவன்,அதன் பிறகு தன் அலுவலக வேலைகளில் மூழ்கினான்.

..............................................................................................................................................

ஒரு வழியாக....நந்தினியிடம் வழி கேட்டுக் கொண்டு...பேருந்து நெரிசலில் சிக்கித் தவித்து...நித்திலா...அலுவலகத்தை வந்தடைந்த போது மணி பத்தை தாண்டியிருந்தது.

'ச்ச்சே....முதல் நாளே லேட் ஆகிடுச்சு...',என்று சலித்தபடியே அலுவலகத்திற்குள் நுழைந்தவள்....ஒரு நிமிடம்...அதன் பிரம்மாண்டமான அமைப்பில் மயங்கிப் போய் நின்றாள்.

'ஹை...இவ்வளவு பெரிய ஆபிஸிலேயே வொர்க் பண்ணப் போறோம்....அதுவும் M .D க்கு செக்ரெட்டரியா...சூப்பர் நித்தி...!', மனதிற்குள் வியந்து கொண்டே ரிசெப்ஷனுக்கு சென்றாள்.

"குட் மார்னிங் மேம்...!வாட் கேன் ஐ டூ பார் யூ...?",அழகாக சிரித்தாள் வரவேற்பறையில் இருந்த அந்தப் பெண்.

"குட் மார்னிங்...!ஐ யாம் நித்திலா...",அவள் முடிக்கும் முன்பே அந்தப் பெண்,

"வெல்கம் மேம்...நீங்க வந்தா உடனே கேபின்க்கு அனுப்ப சொல்லி M.D சொல்லியிருந்தாரு....நேரா போய்...ரைட் கட் பண்ணினா M .D யுடைய ரூம் வரும்...நீங்க போய் பார்க்கலாம்....",என்றாள்.

"தேங்க் யூ...!",என்று புன்னகைத்து விட்டு அந்தப் பெண் காட்டிய வழியில் சென்றாள் நித்திலா.

'ஆதித்யன் மேனேஜிங் டைரக்டர் ' என்ற பெயர் பலகைத் தாங்கிய கதவை,"எக்ஸ்க்யூஸ் மீ சார்...!",என்று ஒற்றை விரலால் நாசுக்காக தட்டி விட்டுக் காத்திருந்தாள்.

"யெஸ்....கம் இன்...!",என்று கம்பீரமாக ஒலித்தக் குரல் கேட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவளை,

"வாங்க மேடம்....!ஒரு வழியா பேரண்ட்ஸை சம்மதிக்க வைச்சு....சென்னை வரைக்கும் வந்தாச்சு...வெல்கம் டு அவர் ஆதித்யன் குரூப் ஆப் கம்பெனீஸ்....",என்ற குதூகலமான ஆதித்யனின் குரல் வரவேற்றது.

அவனைப் பார்த்து சிறு புன்னகையை சிந்தியவள்,"தேங்க் யூ சார்...நீங்க மட்டும் சொல்லலைன்னா...நான் சென்னை வர்றதை பத்தி யோசிச்சுக் கூட இருக்க மாட்டேன்....தேங்க் யூ அகைன்....",என்றாள்.

அவளை ரசனையாகப் பார்த்தவன்,"உன் தேங்க் யூவை வேற விதத்தில...வேணும்ங்கற போது வாங்கிக்கறேன்....",என்றான் புரியாத குரலில்.

தன்னை ஒரு மாதிரியாக பார்த்தவளைக் கண்டு,"இல்ல...உன் தேங்க்யூவை வொர்க்கில் காண்பிக்க சொன்னேன்..."என்று சமாளித்தான்.

"ஷ்யூர் சார்....!என்னை நம்பி இவ்வளவு பெரிய போஸ்ட்டைத் தரும் போது....நிச்சயமா நல்லபடியாத்தான் செய்வேன்...."

"தென் நித்திலா....எந்த காலேஜ்ல படிச்ச அண்ட் எந்த ஏரியால இண்ட்ரெஸ்ட் இருக்கு...",

அவள்....அவள் படிப்பு பற்றிய விபரங்களை மும்முரமாகக் கூற ஆரம்பித்தாள்.ஆனால்....அந்தக் கள்வன் எங்கே அவள் கூறியதைக் கேட்டான்...?!!அவள் பேசப் பேசக் கூட இணைந்து கதை பேசிய அவள் விழிகளையும்....அவள் செயலுக்கு ஏற்றவாறு அபிநயித்த அவள்
இதழ்களையும்....நெற்றியில் தவழ்ந்த அவள் கருங்கூந்தலையும் தான்....அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.

அவன் மொபைல் ஒலித்ததில்...இவ்வுலகிற்கு வந்தவன்...நித்திலாவிடம்,"ஒன் மினிட்...",என்றபடி போனை எடுத்துப் பேசினான்.

மறுமுனையில் பேசியவருக்கு உரிய பதிலை அளித்துவிட்டு போனை அணைத்தவன்,மீண்டும் நித்திலாவைப் பார்த்து,"சொல்லு நித்திலா....எங்க படிச்ச...?",என மறுபடியும் ஆரம்பிக்க,

அவனைப் பார்த்து விழித்தவள்,"இவ்வளவு நேரம் அதைத்தானே சார் சொல்லிக்கிட்டு இருந்தேன்....",எனக் குழம்பவும்,

'அடேய் ஆதி...!அவ பேசும் போது அவ பேசறதைக் கேக்கணும்...அத விட்டுட்டு...இப்படி 'பே'ன்னு அவளையே பார்த்துட்டு இருந்தா...இப்படித்தான் முழிக்கணும்....சரி...எப்படியாவது சமாளிப்போம்....',என்று மனதிற்குள் பேசிக் கொண்டவன்,

வெளியே,"ஒஹ்....யா..யா....!",என்று அசடு வழிந்து கொண்டிருந்தவன் கண்ணில்,அவள் கையில் இருந்த பைல் தென்பட,"நான் உன் சர்டிபிகேட்ஸை கேட்டேன்....",என்று ஒருவாறாக சமாளித்தான்.

மனதிற்குள் குழம்பியபடியே அவனிடம் தன் பைலை நீட்டினாள் நித்திலா.

அவள் சான்றிதழ்களைப் பார்த்தவன்,'பரவால்ல...நம்ம பேபி நல்லா படிக்கற பேபிதான் போல...!',என நினைத்துக் கொண்டான்.

"ஒகே நித்திலா....ஆல் ஆர் வெல்....!நீ இன்னையில இருந்தே வேலையில ஜாயின் பண்ணிக்கலாம்....",என்றவன் தன் பழைய செக்ரெட்டரி லீலாவை அழைத்தான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் தன் முன் நின்றிருந்த லீலாவிடம்,"வாங்க லீலா...இவங்கதான் நித்திலா....என் புது செக்ரெட்டரி...!நீங்க ரிசைன் பண்றதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கல்ல....அதுக்குள்ள....உங்க வேலை எல்லாத்தையும் நித்திலாவுக்கு பழக்கிவிட்டுருங்க....உங்க கேபினுக்கு பக்கத்திலேயே இவங்களுக்கு டேபிள் ஏற்பாடு பண்ணியிருக்கு....தட்ஸ் ஆல்...யூ கேன் கோ...!",எனத் தலையசைத்தான்.

"தேங்க் யூ சார்...",என அவனிடம் விடைபெற்றவள்,நித்திலாவைப் பார்த்து சினேகமாக ஒரு புன்னகையை சிந்தி விட்டுச் சென்றாள்.

"அப்புறம் நித்திலா....எங்க தங்கியிருக்க...?எல்லாம் வசதியா இருக்கா....?",பொறுப்பாக அவளிடம் விசாரிக்க ஆரம்பித்தான் ஆதித்யன்.

"தளிர் லேடீஸ் ஹாஸ்டல் சார்....இந்த ஆபிஸில் இருந்து அந்த ஹாஸ்டல்தான் பக்கத்துல இருக்கு...அண்ட் என் பிரெண்டும் என்கூடதான் ஸ்டே பண்ணியிருக்கா...ஸோ...நோ ப்ராப்ளம்...."

"ஓ...",என்று ஒரு நிமிடம் யோசித்தவன்,பிறகு,"ஒகே நித்திலா...!நீ போய் உன் வொர்க்ல ஜாயின் பண்ணிக்க....ஆல் தி பெஸ்ட்....",என்று புன்னகைத்தான்.

புன்னகையோடு அவனுக்குத் தலையசைத்து விட்டு வெளியேறினாள் நித்திலா.

அவள் சென்றதும் முதல் வேலையாக ஒரு புகழ் பெற்ற டிடெக்டிவ் ஏஜென்சிக்கு அழைத்தவன்....தளிர் ஹாஸ்டல் பற்றியும்....அதன் பாதுகாப்பு பற்றியும் விசாரிக்கச் சொன்னவன்...அதன் பிறகே...அலுவலக வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.

இதுதான் ஆதித்யன்....தன்னவளை அவள் அறியாமலேயே அவன் வட்டத்திற்குள் வரவழைத்து விட்டான்...அவள் வாழ்க்கையை அவன் எப்போதோ கையிலெடுத்துக் கொண்டான்...!இனி....அவள் வாழ்க்கையில்...அவன் அறியாமல்...அவனது அனுமதி இல்லாமல்....எதுவும் நடக்காது என்பதை அறியாதவளாய்...பட்டாம்பூச்சியாய் சுற்றிக் கொண்டிருந்தாள் நித்திலா.....!!

பார்ப்போம்...!!அந்த பட்டாம்பூச்சி....காதல் என்னும் வலைக்குள் விழுமா...?விழாதா...??என்பதற்கான பதிலைக் காலம்தான் சொல்ல வேண்டும்.....!!ஆனால்....இதில் என்ன ஆச்சரியம் என்றால்....அந்த வலையும் சுகமானதொரு வலையாக மாறிப் போகும்....!!அந்த ஒரு அதிசயத்தையும் காதல் நிகழ்த்தி வைக்கும்...!!!இதுதான் விந்தையிலும் விந்தை....!!!அகம் தொட வருவான்....!!!
 
Top