Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! - 3

Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரெண்ட்ஸ்....

உங்களுடைய அழகான கருத்துக்களுக்கும்.....நீங்க போட்ட லைக்குக்கும் மிக்க நன்றி....!

வழக்கம் போல் இந்த மூன்றாவது அத்தியாயத்தையும் படித்து விட்டு....உங்கள் கருத்துக்களை சொல்லுங்க...அப்படியே லைக் போடவும் மறந்துடாதீங்க....!!
 
Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 3


நித்திலாவின் வீட்டில் அவளுக்குத் திருமணம் செய்யும் பொருட்டு குரு பலன் வந்திருக்கிறதா எனக் கேட்பதற்காக ஜோசியரிடம் சென்றிருந்தனர் அவளது பெற்றோர்கள். ஜோசியரோ,அவளது ஜாதகப்படி இன்னும் ஒரு வருடம் கழித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி விட்டார்.

அதுவரைக்கும் வேலைக்கு சென்று வரட்டும் என்று நித்திலாவுக்கு அனுமதி வழங்கியிருந்தனர். நித்திலாவும் அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் மும்முரமாக வேலைத் தேடிக் கொண்டிருந்தாள்.

அன்று......தலைக்குக் குளித்துவிட்டு,கூந்தலை உலர வைத்தபடி அமர்ந்திருந்த நித்திலாவிடம் வந்த மீனாட்சி,"நித்தி.....!சம்மந்தி அம்மா.....அதுதான் நம்ம தீபிகாவின் மாமியார் ராஜாத்தி அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்து இருக்காங்களாம்...... நானும் உன் அப்பாவும் போய் பார்த்துட்டு வந்துட்டோம்..... இன்னைக்கு பிரீயா இருந்தா நீ போய் பார்த்துட்டு வந்துடு.....,"என்க,

"சரிம்மா.....இப்போவே கிளம்பறேன்.......",என்றவள் வேகமாக சென்று உடை மாற்றிவிட்டு,உலர்ந்த கூந்தலை தளர பின்னலிட்டுக் கொண்டு கிளம்பினாள்.

இவள் மருத்துவமனை சென்றடைந்த நேரத்தில் தீபிகாவும் கேசவனும் அங்குதான் இருந்தனர்.அதிதி குட்டியை வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் விட்டுவிட்டு வந்திருந்தனர்.

இவளை பார்த்ததும்,"வா நித்தி......!",என்று வரவேற்று அழைத்துச் சென்றனர்.

நித்திலாவின் மீது ராஜாத்திக்கு எப்பொழுதுமே ஒரு தனிப் பிரியம் உண்டு.

நித்திலாவைப் பார்த்ததுமே,"அடடே.....வா நித்தி.....!",என்று புன்னைகையுடன் வரவேற்றார் ராஜாத்தி.

"அத்தை.....!இப்போ உடம்புக்குப் பரவாயில்லையா.....?",என்று விசாரித்தபடி கட்டில் அருகே சென்று அவர் கையைப் பிடித்துக் கொண்டாள்.

"இதுதான் நீ உன் அத்தையைப் பார்க்க வரும் லட்சணமா.....?எனக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சவுடனே அலறி அடிச்சுட்டு ஓடி வந்து.....இந்நேரம் சாத்துக்குடி பிழிஞ்சு தந்திருக்க வேண்டாமா....?",என அவளை சீண்ட,

"என்ன பண்றது அத்தை.....!இதுவே நீங்க இன்னொரு பிள்ளையைப் பெத்து வைச்சிருந்தீங்கன்னு வைச்சுக்கோங்க.....நான் அவரைக் கட்டிக்கிட்டு இந்நேரம் உங்களுக்கு விழுந்தடுச்சுக்கிட்டு சேவகம் செஞ்சிருப்பேன்...... ஒரு பையனை மட்டும் பெத்துக்கிட்டு என்னை ஏமாத்திட்டிங்களே....!",எனப் போலியாய் வருத்தப்பட,

"ஏமாற்றுவானேன்.....அதுதான் நான் இருக்கேனே......?",என்ற குரல் அறை வாசலில் இருந்து வர அனைவரின் பார்வையும் சட்டென்று வாசலின் பக்கம் திரும்பியது.அங்கு வாசலையே இடித்துவிடும் உயரத்துடன் கம்பீரமாக நின்றிருந்தான்,ஆதித்யன்.

ஆம்....ஆதித்யன்தான்.....ஆதியின் அம்மாவிற்கு ராஜாத்தி அம்மாள் ஏதோ தூரத்து முறையில் ஒன்று விட்ட தமக்கை முறை.இரு குடும்பத்திற்கும் எந்தவொரு போக்குவரத்தும் பேச்சுவார்த்தையும் இல்லை.ஆதி மட்டும்.....அவன் சிறு வயது விடுமுறையில் ஒரு பத்துநாள் ராஜாத்தி அம்மா வீட்டில் கொண்டாடினான்.

அவனுக்குப் பிடித்த பலகாரம் செய்து கொடுத்து அவனைப் பார்த்துக் கொண்ட பெரியம்மாவையும்.....தன்னோடு இணைந்து விளையாடிய கேசவன் அண்ணாவையும் அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது.அவ்வப்போது அவன் பெரியம்மாவுடனும்.....கேசவனிடமும் போனில் பேசுவான்.ஏதாவது வேலையாக கோவை வந்தால் இவர்களை பார்க்காமல் செல்ல மாட்டான்.

இன்று மீட்டிங்கை முடித்துவிட்டு கடைவீதியில் சுற்றிக்கொண்டிருந்தவன்,அவனது பெரியப்பா... ராஜாத்தியின் கணவர் ரகுராமை சந்தித்தான். அவர் விபரம் கூறவும் நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

'யார் இவன்.....?ஆள் பார்க்க கம்பீரமாக ஸ்மார்ட்டாக இருக்கிறான்.... இந்த இடத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இங்க வந்து நின்னுகிட்டு இருக்கான்.... கண்ணைப் பார்.... எதிர்ல இருக்கறவங்களை அப்படியே மயக்கிடும்.....' என்று ஆதித்யனை அளவிட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா.

அவன் பார்வையிடலைக் கண்டு கொண்டதற்கு அடையாளமாக அவன் விழிகளில் மின்னல் தெறித்தது. ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி 'என்ன?' என்று கேட்டவனைக் கண்டு ஒரு கணம் மயங்கி நின்றவளை,"அடடே.....!வாடா ஆதி....!எப்போ வந்த.....?",என்ற ராஜாத்தியின் குரல்,மயக்கத்தைத் தெளியச் செய்து இவ்வுலகிற்கு அழைத்து வந்தது.

'சேச்சே.....!ஒரு பையனை இப்படி பார்த்துக்கிட்டு இருக்கேனே.....அவன் என்ன நினைப்பான்.....!',என தன்னைத் தானே கடிந்து கொண்டவள் அவன் பேசுவதைக் கேட்பதில் தன் கவனத்தைத் திருப்பினாள்.

"இன்னைக்கு காலையிலதான் வந்தேன் பெரியம்மா.......கடை வீதில பெரிப்பாவைப் பார்த்தேன்...... விஷயத்தை சொன்னாரு...... இப்போ உங்களுக்கு பரவாயில்லையா....?டாக்டர் என்ன சொன்னாரு.....?",எனக் கேட்டவனிடம்,

"அதெல்லாம் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டாருப்பா...... நாளைக்கு டிஸ்சார்ஜ் செஞ்சிடுவாங்கலாம்....", எனக் தகவல் கூறினார் ராஜாத்தி.

திடீரென்று "நீங்க என்னை ஏமாத்திட்டிங்க பெரியம்மா.....",எனத் தன் பெரியம்மாவின் மீது ஆதித்யன் குற்றம் சாட்ட,

அவன் கூறியதைக் கேட்டு சிரித்த ராஜாத்தி,"ஹா ஹா.....இன்னொரு பையனைப் பெத்த தராம நித்தியை ஏமாத்தினேன்......உன்னை எப்படி ஏமாத்தினேன்னு அதையும் சொல்லிடு..... கேட்டுக்கிறேன்.....!',என்க,

"நீங்க என் பெரியம்மாதானே....?",என்று ஆதித்யன் கேள்வி எழுப்பினான்.

"ஆமா....",

"நான் உங்க பையன்தானே.....?,

"ஆமா.....!",

"நீங்க என்னை உங்க பையனாத்தானே நினைக்கறீங்க.....?,

"ஆமாம்டா......!இதிலென்ன உனக்கு சந்தேகம்.....?",என ராஜாத்தி கேட்க,

"அப்படின்னா.... இந்தப் பொண்ணு.....இவ்வளவு நேரம் 'என்னை ஏமாத்திட்டிங்க' அப்படின்னு உங்க மேல பழி போட்டுட்டு இருந்தாலே..... அப்போ நீங்க என்ன சொல்லியிருக்கணும்....?,என ஆதித்யன் கேட்க,

"என்ன சொல்லியிருக்கணும்.....",என அவர் திருப்பிக் கேட்க,

" 'இல்லைம்மா.......எனக்கு இன்னொரு மகன் இருக்கான்..... அவன் பேரு ஆதித்யன்..... சென்னையில பிசினெஸ் பண்ணிட்டு இருக்கான்....' அப்படின்னு சொல்லியிருக்கணுமா ......இல்லையா? என்று அவரை மடக்க,

"ஆமாம்ப்பா...... சொல்லியிருக்கணும்தான்......சரி விடு!இப்போ ஒன்னும் கெட்டு போகல..... ஏம்மா நித்தி.....!கேட்டுக்கோம்மா...... இதோ இவன்தான் என்னோட இன்னொரு பையன்..... ஆதித்யன்.....நான் ஒன்னும் உன்னை ஏமாத்தல......!என்னோட பையனை காண்பிச்சுட்டேன்..... இப்போ நீ என்ன பண்றதா உத்தேசம்.....?",என ராஜாத்தி நித்திலாவிடம் குறும்பாக வினவ,

அந்நேரம் அவளையும் அறியாமல் அவளுடைய பார்வை ஆதித்யனின் மேல் படிந்தது.அவனும் இவளைத்தான் குறும்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அத்தோடு நில்லாமல் அவளை நோக்கி யாரும் அறியாமல் ஒற்றைக் கண்ணை சிமிட்ட வேறு செய்தான்.

அவனுடைய செய்கையில் விதிர்த்துப் போனவள்,"இல்லை....அது வந்து.....விளையாட்டுக்கு......",என்று திக்கித் திணற,

"அடடா.....எங்க நித்தியையே திணற வைச்சுட்டாயே...... வெல்டன் ஆதி.....!",என்று கேசவன் ஆதித்யனைப் பார்த்து சிரிக்க,

"அது.......அதெல்லாம் ஒண்ணுமில்லை.... எனக்கு வேலை இருக்கு.....!நான் கிளம்பறேன்.....!",என்றபடி ஓடி விட்டாள் நித்திலா.

அறையில் இருந்த நால்வரின் சிரிப்பொலியும் அவளை பின்தொடர்ந்தது. அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனை,"என்னப்பா ஆதி.....வந்தவுடனே என் கொழுந்தியாக்கிட்ட வம்பிழுக்கற.....?",என்ற கேசவனின் குரல் கலைத்தது.

அப்பொழுதுதான் தீபிகா அங்கிருப்பதைக் கவனித்த ஆதித்யன்,"ஹாய் அண்ணி....!எப்படி இருக்கீங்க.....?உங்க கல்யாணத்திற்கு என்னால வர முடியல....",எனத் தன் வருத்தத்தை தெரிவித்தான்.

"பரவாயில்லை ஆதித்யன்.....உங்களைப் பத்தி இவர் நிறைய சொல்லியிருக்காரு.... வெரி பிஸி மேன் போல.....!",என சிரித்தாள் தீபிகா.

"அப்படியெல்லாம் இல்லை அண்ணி.....",என்றவன் கேசவனைப் பார்த்து,"அண்ணா.....உங்களுக்குப் பொண்ணு பிறந்திருக்கறதா கேள்விப் பட்டேன்.... எங்க அந்த குட்டி தேவதை.....?" என்று வினவ,

"அவளை வீட்ல விட்டுட்டு வந்திருக்கோம் டா.... சரி.... நீ வீட்டுக்கு வா......!,என அவனை அழைக்க,

"இல்லைண்ணா......நாளைக்கு காலையில கிளம்பணும்..... இன்னொரு நாளைக்கு வரேன்.....",என்றவன் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பி சென்றான்.

-அன்று இரவு......

மெத்தையில் படுத்திருந்த நித்திலாவிற்கு உறக்கம் வருவதற்குப் பதிலாக,ஆதித்யனின் முகம்தான் வந்து போனது. ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி 'என்ன?' என்று கேட்ட அவன் முகமும்...... குறும்புப் புன்னகையை சுமந்த அவன் இதழ்களுமே..... அவள் மனதில் வந்து.... அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.

'யாராக இருக்கும்.....?அத்தைக்கு மகன் முறை போல......!எவ்வளவு உரிமையுடன் நடந்து கொண்டான்.....!பேச்சிலேயே எல்லோரையும் கவர்ந்துவிடுவான்....அத்தையோட வாயாலையே அவரை மடக்கிட்டான்.....',என்று ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தவள் பிறகு 'சே...... என்ன நித்தி இது......?நீ சரியில்ல..... யாரோ ஒருத்தனைப் பத்தி இப்படித்தான் யோசிச்சுகிட்டு இருப்பாயா..... பேசாம படுத்துத் தூங்கு.....!' என்று தன் மனதைக் குட்டி அடக்கியவள்,தூங்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றாள்.

அங்கு...... ஒரு உயர் ரக ஹோட்டல் ரூமில் மெத்தையில் படுத்திருந்த ஆதித்யனும் கிட்டத்தட்ட இதே நிலைமையில்தான் இருந்தான்.

'எவ்ளோ அழகா இருந்தாள்.....!துறு துறுன்னு அங்கேயும் இங்கேயும் அலை பாய்ஞ்சுட்டு இருந்த கண்களாலேயே என்னை மயக்கிட்டா..... இது என்ன நான்தானா.....?ஒரு டீன் ஏஜ் பையன் மாதிரி மனசுக்குள்ள வர்ற இந்த குறுகுறுப்பு.....நிச்சயமா இது வயசுக்குண்டான கவர்ச்சி இல்ல.....!'

'இப்படி பார்த்த உடனே ஒரு பொண்ண காதலிக்க ஆரம்பிச்சிடுவேன்னு.... நேத்து வரைக்கும் யாரு சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன்.....கண்டிப்பா இது காதல்தான்...... நிச்சயம் அவள் என்னவள்தான்.....!அவளை எப்படியாவது என்கிட்டே வர வைக்கணும்...... அவளைப் பத்தி எல்லா விஷயமும் கலெக்ட் பண்ணினத்துக்கு அப்பறம்தான் சென்னைக்குக் கிளம்பணும்.....!',என்ற உறுதி ஆதித்யனுக்குள் உதித்தது.

இதுதான் ஆதித்யன்......!ஒன்றை மனதில் நினைத்து விட்டால்,அதை முடிக்காமல் விட மாட்டான்.

இங்கு......இவன் 'அவள் என்னவள்.......!என்னிடம் வரவழைக்க வேண்டும்.....!'என்ற எண்ணத்தில் இருக்கிறான்..... அவளோ..... ஒரு அந்நிய ஆடவனை மனத்தால் நினைப்பதும் தவறு என்ற எண்ணத்தில் இருக்கிறாள்....!

காதல் என்ற ஒன்று இருக்கிறதல்லவா......!அது எத்தனை மாயங்களையும் செய்யவல்லது.....!இங்கு என்ன மாயம் செய்ய இருக்கிறதோ.....!பார்ப்போம்.....!

।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

அன்று காலை....... நித்திலா பரபரப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தாள். அன்று அவளுக்கு ஒரு இண்டெர்வியூ இருந்தது. அதற்காகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

அழகிய வேலைப்பாடு அமைந்த இளஞ்சிவப்பு வண்ண சுடிதார் அணிந்து,தலைக்குக் குளித்து உலர வைத்தக் கூந்தலை தளர்வாக பின்னலிட்டு.... மிதமான ஒப்பனையோடு தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

அழகாக..... அதே சமயம்,கண்ணுக்கு உறுத்தாமல் தயாராகி வந்த மகளை பெருமைப் பொங்க பார்த்தார் மீனாட்சி.

"இருடி.....!டிபன் ரெடி ஆகிருச்சு..... சாப்பிடுட்டுப் போ.....!",என்ற தாயாரிடம்,

"இல்லைம்மா..... லேட் ஆகிடுச்சு..... நான் கிளம்பறேன்......!",என்றபடி தன் கையில் வாட்சைக் கட்டிக் கொண்டிருந்தாள்.

"சரி இரு....!",என்றவர் சமையலறைக்கு சென்று இரு இட்லிகள் அடங்கிய தட்டுடன் வந்தார்.

"நீ பாட்டுக்குக் கிளம்பு.... நான் அப்படியே ஊட்டி விடறேன்.....",என்றபடி மகளுக்கு ஊட்ட ஆரம்பித்தார்.

தன் அம்மா ஊட்டுவதற்கு வாகாக வாயைத் திறந்தபடி தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

"என்னடா நித்திம்மா.....!இன்டெர்வியூக்கு கிளம்பிட்டாயா.....?ஆல் தி பெஸ்ட் டா கண்ணா.....!",என்று வாழ்த்துக் கூறியபடி வந்த தன் தந்தைக்கு,

"தேங்க்ஸ் ப்பா......!நான் கிளம்பறேன்.....",என்று இருவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு தன் வண்டியைக் கிளம்பினாள்.

"பார்த்துப் போ.....!நல்லபடியா அட்டெண்ட் பண்ணிட்டு வா.....!",என்ற தன் தாய்க்கு ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்தபடி விரைந்தாள்.


காலையில் எழுந்த ஆதித்யன்,முதல் வேலையாக கௌதமிற்கு போன் செய்து அலுவலக நிலவரத்தைப் பற்றி விசாரித்தான். வேலை சம்பந்தமாக அவனுக்கு சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு,அனைத்தையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு போனை வைத்தான்.

"இங்க ரூமிலேயே இருக்கறதுக்கு பக்கத்தில இருக்கற மாலுக்கு போய்ட்டு வருவோம்..... மால் கட்டறதுக்கு எதாவது ஐடியா கிடைக்கும்.....',என்று எண்ணியவன் குளித்து கிளம்பித் தயாராகி காலை உணவை முடித்து விட்டு வெளியேறினான்.

மாலின் கட்டிட அமைப்பு முறையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆதித்யனின் பார்வை வட்டத்தில் வந்து விழுந்தாள் நித்திலா. ஒரு டேபிளில் அமர்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் விழிகள் பளிச்சிட.....அவளை நோக்கி நடந்தான் ஆதித்யன்.

"ஹாய் நித்திலா.....!என்ன இந்த பக்கம்.....?",என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள்,அங்கு ஆதித்யன் நிற்பதைக் கண்டு ஒரு சிறு முறுவலுடன்,

"ஹாய் சார்.....!ஒரு இன்டெர்வியூக்கு வந்தேன்....",என்றாள்.

"இன்டெர்வியூவா...?என்ன படிச்சிருக்க....?",இயல்பாக அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தபடி கேட்டவனின் விழிகள் அவளை ரசனையுடன் அளவிட்டது.

இதுவரை அவன் பார்த்துப் பழகியிருந்த பெண்கள் அனைவரும்,அரைகுறை ஆடையுடன்..... அதீத மேக்கப்புடனும் .... உதட்டுச் சாயத்துடனும்தான் அறிமுகம் ஆகியிருந்தார். அணிந்திருக்கும் ஆடை எப்பொழுது கழண்டு விழுமோ என்ற ஐயத்துடன்தான் அது அவர்களது உடலைத் தழுவியிருக்கும்.

இவளோ...... அவர்களுக்கு முற்றிலும் நேர்மாறாய் கண்ணியத்துடன் உடை அணிந்திருந்தாள். துப்பட்டாவைக் கூட ஒரு வித நேர்த்தியோடு அவள் அணிந்திருந்த விதம் அவனைக் கவர்ந்தது.

அவளைக் காதலுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன்,"சார்.....!" ,என்ற பேரரின் அழைப்பில் தன்னை சுதாரித்துக் கொண்டான்.

"ஒரு ஆப்பிள் ஜூஸ்!",என்று ஆர்டர் கொடுத்துவிட்டு நித்திலாவிடம் திரும்பியவன்,"சொல்லு....!என்ன படிச்சிருக்க.....?",எனத் திரும்பவும் கேட்டான்.

அவன் தன்னை ஒருமையில் அழைப்பதைக் கவனித்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், "எம்.காம் சார்...!வீட்ல இருக்கறதுக்கு வேலைக்குப் போகலாம்ன்னு வேலை தேடிட்டு இருக்கேன்...",என்றாள்.

"ஓ....!அப்படியா...!",என்று சிறிது நேரம் யோசித்தவன் பிறகு,"என் ஆபிஸ்ல ஒரு வேலை காலியா இருக்கு...உனக்கு ஓகேன்னா...அந்த போஸ்ட்டை உனக்கே கொடுக்கறேன்...நீ என்ன சொல்ற...?",என்க,

"என்ன போஸ்ட்...?",என்று அவள் ஆவலாகக் கேட்க,

"என் செக்ரெட்டரி...!",என்றான் அசால்ட்டாக.

"செக்ரெட்டரி போஸ்ட்டா....?,என்று விழி விரித்தவளிடம்,

"ம்ம்...என் செக்ரட்டரி இன்னும் மூணு மாசத்தில ரிசைன் பண்ணப் போறாங்க....எப்படி இருந்தாலும் ஒரு ஆளைத் தேடணும்...உனக்கு ஓகேன்னா...எனக்கு ஒரு வேலை மிச்சம்....!",என்றவன் அவள் பதிலுக்காக அவளை நோக்கினான்.

"இல்ல சார்...!இது சரி வராது....அதுவும் இல்லாம என் படிப்புக்கும் செக்ரெட்டரி வேலைக்கும் சம்பந்தமே இல்லையே...!",என்று மறுத்தவளிடம்,

"அதனால் என்ன...?செக்ரெட்டரி வேலை என்ன பெரிய கம்ப சூத்திரமா...?கத்துக்கிட்டா போச்சு...!அதுதான் என் செக்ரெட்டரி ரிசைன் பண்றதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே...அதுக்குள்ள கத்துக்க மாட்டியா...என்ன...?",என்று விடாமல் வாதாடினான்.

"இருந்தாலும்....சென்னை வரைக்கும் அனுப்ப என் அம்மா அப்பா ஒத்துக்க மாட்டாங்க....",என்று தயங்க,

"கமான் நித்திலா...!வெளியே போனாதான் உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும்...உன் பேரெண்ட்ஸை உன்னால சமாளிக்க முடியாதா...?",என்க,

சிறிது மனம் தெளிந்தவள்,"ஒகே சார்...!நான் என் வீட்ல சொல்லிப் பாக்கறேன்...",என்றாள்.

"சொல்லிப் பார்க்க வேண்டாம்...சம்மதிக்க வை...!உன் திறமையை வளர்த்துக்க இது ஒரு சான்ஸா அமையும்ல...?"

"நீங்க சொல்றதும் சரிதான்....நான் என் முடிவை நாளைக்கு சொல்றேன்....",என்றவளிடம்,

"எப்படி சொல்லுவ...?போன் நம்பர் வேணும்ல....?",என்றவன் அவளது கையில் இருந்த செல்போனை பிடுங்காத குறையாக வாங்கி....அதில் தன் நம்பரை 'ஆதி' என்ற பெயரில் பதிவு செய்தவன்....தனது மொபைலுக்கும் ஒரு மிஸ்டு கால் கொடுத்துக் கொண்டான்.

அவனது செய்கையை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன்,"அது...வந்து....நான் இன்னைக்கு சாயந்திரமே சென்னைக்குக் கிளம்பிடுவேன்.....அதுதான்...",என்று அசடு வழிந்தபடியே செல்போனை அவளிடம் கொடுத்தான்.

"ம்ம்....சரி....நான் கிளம்பறேன்....",என்று விடைபெற்று சென்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில்....எப்படியாவது அவளைச் சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது.

அவள் தன் அருகில் இருந்தால் போதும்....தன் மனதைப் புரிய வைத்துவிடலாம் என்ற நினைப்பில் அவன் இருந்தான்....ஆனால்....அவன் அறிய மாட்டான் அல்லவா....?தன் மனதைப் புரிய வைப்பதுற்கு அவன் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கும் என்பதை...!!!- .அகம் தொட வருவான்...!!!
 
Top