Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! - 2

Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரெண்ட்ஸ்....

ஆர்ப்பாட்டமாய் வரவேற்பு அளித்த அத்தனை நட்புக்களுக்கும் நன்றி....!

இரண்டாவது அத்தியாயத்தோடு உங்கள் அகம் தொட வந்து விட்டேன்...

தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்....!!படித்து விட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்....அப்படியே லைக் போடவும் மறந்துடாதீங்க...!!
.
 
Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 2


வாசலில் தன் ஸ்கூட்டியை நிறுத்திக் கொண்டிருந்த நித்திலாவின் காதில் கேசவனின் குரல் வந்து விழுந்தது.

'மாமா வந்திருக்கார் போல...' என்று எண்ணியபடியே உள்ளே நுழைந்தவள் கேசவனைப் பார்த்ததும்,"ஹாய் மாமா...பாரினில் இருந்து எப்ப வந்திங்க...?",என உற்சாகமாய் வரவேற்க,

அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,"ஹாய் நித்தி.....!இன்னைக்கு காலையில்தான் வந்தேன்...உனக்கு எக்சாம்ன்னு சொன்னாங்க....எப்படி எழுதின...?",என்று விசாரிக்க,

"நல்லா எழுதியிருக்கேன் மாமா....",என்று உற்சாகமாக கூறியவள்,தீபிகா எங்கோ கிளம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து,"அக்கா....எங்கே கிளம்பிட்ட....?",என்றபடி அவளருகில் செல்ல,"எங்க வீட்டுக்குத்தான் டி....என்னைக் கூட்டிட்டுப் போகத்தான் உன் மாமா வந்திருக்கார்....",என்றாள் தீபிகா.

தன் மாமவைப் பார்த்தவள் குறும்பாக,"என்ன மாமா....!ஒரு வார சுதந்திரம் இன்றோடு முடிந்ததா...?",என சீண்ட,

"ஹ்ம்ம்.....ஆமா நித்தி.....!இந்த ஒரு வாரம் ஜாலியா உன் அக்கா தொல்லை இல்லாம ஊர் சுத்திக்கிட்டு இருந்தேன்....இன்னையோட எல்லாம் முடிந்தது....",சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவன்,தீபிகா முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்.

தன் கணவனைப் பார்த்து புசு புசுவென முறைத்தவள்,"நான் உங்களுக்குத் தொல்லையா....?நான் ஒன்னும் உங்க கூட வரல....இன்னும் ஒரு மாசம் என் அம்மா வீட்டிலேயே இருக்கேன்....நீங்க மட்டும் போய்ட்டு வாங்க...",என்ன பொரிந்து விட்டு தங்கள் அறைக்குள் சென்று விட்டாள்.

"தீபுக் குட்டி...!அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடா...!நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்....",என்று கொஞ்சியபடிே பின்னாலேயே ஓடினான் அவளது காதல் கணவன்.

இதைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் அறைக்கு சென்று ஒரு சின்ன குளியலைப் போட்டு விட்டு.....உடை மாற்றி புத்தம் புது மலராக வந்த நித்திலாவின் கையில், சுட சுட பட்டாணி அடை நிரம்பிய தட்டைக் கொடுத்தார் மீனாட்சி।

"வாவ்...!சூப்பர் மா...!!இதுக்குத்தான் என் அம்மா வேணும்ங்கறது....",என்று தன் தாயைக் கொஞ்சியபடியே பட்டாணி அடையை உள்ளே தள்ள ஆரம்பித்தாள்.

அதற்குள் கேசவனும் தீபிகாவும் கிளம்பி வர,அவர்களுக்கும் டிபன் பரிமாறப்பட்டது.சாப்பிட்டுவிட்டு இருவரும் கிளம்ப.....சில பல அன்பு முத்தங்களுடன் அதிதி குட்டியை வழியனுப்பி வைத்தாள் நித்திலா.

"நாளைக்கு எக்ஸாம் மா...நிறைய படிக்க வேண்டி இருக்கு....நான் படிக்கப் போறேன்...",என்று தன் தாயிடம் உரைத்து விட்டு அறைக்கு சென்றவள் அதன் பிறகு படிப்பில் மூழ்கினாள்.


।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

-ஆதித்யா குரூப் ஆப் கம்பெனீஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்க்ஷன்.....

அலுவலகத்தில் வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.அமெரிக்கா ப்ரொஜெக்ட்டை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று அனைவரும் தத்தம் வேலைகளில் மூழ்கியிருந்தனர்.

ஆதித்யன் இது சம்பந்தமான வேலையை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க சொன்னது நியாபகம் வர,கெளதம் தன் டேபிளில் இருந்த தொலைபேசியை எடுத்து,"சுமித்ரா....!என் கேபினுக்கு வாங்க....!",என்று அழைப்பு விடுத்தான்.

சிறுது நேரத்தில் ,"எகஸ்க்யூஸ் மீ சார்...!",என்று யாரோ கதவை தட்ட நிமிர்ந்து பார்த்தால் சுமித்ராதான் நின்றிருந்தாள்.

"வாங்க சுமித்ரா....!உட்காருங்க....",என்று அவளை அமர சொன்னவன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான்.

பிறகு அவளைப் பார்த்து,"சுமித்ரா.....!அமெரிக்கா ப்ராஜெக்ட் சம்பந்தமா ஆஃபீசில நடக்கற வேலையை சூப்பர்வைஸ் பண்ற வேலை இனி உங்களுடையது.இன்னையிலிருந்தே வேலையை ஆரம்பிச்சிடுங்க....தினமும் ஈவ்னிங் கிளம்பறதுக்கு முன்னாடி 'ப்ராஜெக்ட் எந்த நிலையில இருக்கு' அப்படிங்கறதை பத்தின ரிப்போர்ட் என் டேபிளுக்கு வரணும்....இப்போ நீங்க கிளம்பலாம்....",எனப் பேச்சை முடித்துக் கொள்ள,

இவள் அவசரமாக,"ஐயோ சார்....!!இவ்வளவு பெரிய பொறுப்பை எதுக்கு என்கிட்ட கொடுக்கறீங்க...நான் வேலைக்கு சேர்ந்தே ஒரு மாசம்தான் ஆகுது...",என்று மறுக்க,

"சோ வாட்?உங்க திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.....!இந்த வேலையை நீங்கதான் செய்ய வேண்டும்...",என்ன முடிவாகக் கூறியவன் 'இனி நீ போகலாம்'என்பது போல் அவளை பார்க்க,அவளோ என்ன செய்வது என்று அறியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது குழப்பமும்...மிரட்சியுமாக விழித்தவளைக் கண்டு எப்பொழுதும் போல் இன்றும் அவளிடம் தாவிச் செல்லும் மனதை,அதன் தலையில் குட்டி அடக்கியவன், அவளை பார்த்து,"நீங்க போகலாம்...",என்று கண்டிப்பாகக் கூற,

வேறு வழியில்லாமல்,"ஒகே சார்...!எதாவது சந்தேகம்ன்னா உங்ககிட்ட வரேன்...",என்று உரைத்து விட்டு பலியாடு போல் வெளியேறினாள்.

உதட்டில் சிறு புன்னகையுடன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன்.....தன் தலையை உலுக்கிக் கொண்டு வேலையில் ஆழ்ந்தான்.

சுமித்ரா வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகிறது.முதல் நாளன்றே குழந்தைத்தனமாக...ஒன்றும் தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு அலுவலகத்தில் நுழைந்தவளைக் கண்டவனின் மனதில் தென்றல் அடிக்கத்தான் செய்த்து....இப்பொழுதும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் பூ பூக்கத்தான் செய்த்து...ஆனால்'இதுதான் காதலா...?'என்பதில் அவனுக்கு சந்தேகம் இருந்தது.

எதோ அழகானப் பெண்ணைப் பார்ப்பதால் உண்டாகும் வயதின் மயக்கமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்....பார்ப்போம்....!!காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....!!இது வெறும் வயதின் மயக்கமா...?இல்லை...தீராத காதல் மயக்கமா...??என்று...!!!

அவள் சென்றவுடன் ஆதித்யனிடம் இருந்து கௌதமிற்கு அழைப்பு வந்தது.வேலை நடக்கும் இடத்திற்கு சென்று வரலாம் என்று அழைத்திருந்தான்.

இருவரும் சைட்டிற்கு சென்று அனைத்து வேலைகளும் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்து விட்டு...மணல்,செங்கல் மற்ற அனைத்துப் பொருட்களும் தேவையான அளவு கிடைக்கிறதா என்று விசாரித்து...தொழிலாளர்களையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்கி விட்டு அலுவலகம் திரும்பும் போது மாலை ஆகியிருந்தது.

ஆதித்யன் தன் அறைக்குள் நுழைவதைக் கண்டு அவனுடைய செக்ரெட்டரி லீலா,பைலை எடுத்துக் கொண்டு அவன் பின்னாலேயே வந்தவள்,"சார்...கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ரிலேட்டடா ஒரு மீட்டிங் நாளைக்கு மறுநாள் கோவையில் நடக்க இருக்கு...அதுல உங்களை கலந்துக்க சொல்லி அழைப்பு வந்திருக்கு...",என்று கூற,

"அப்படியா...!சரி...அட்டெண்ட் பண்ணுவோம்!அந்த அன்னைக்கு இருக்கற மற்ற ஒர்க்ஸ் எல்லாத்தையும் தள்ளி வைச்சிடுங்க...",என்றவன்,அவள் கொண்டு வந்திருந்த பைலை பார்த்து கையெழுத்திட ஆரம்பித்தான்.

லீலா சென்றது கௌதமிற்கு போன் செய்து கோவை மீட்டிங் பற்றி கூறியவன்,தான் மட்டும் சென்று வருவதாகவும்...கெளதம் இருந்து மற்ற வேலைகளைக் கவனித்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டு,பிறகு எதோ நியாபகம் வந்தவனாய்,

"டேய்...!என் செக்ரெட்டரி லீலா ரிசைன் பண்ராங்களாம்..."எனக் கூற,

"அதுக்கு நான் என்னடா செய்ய முடியும்..?வேணும்னா போய் வழியனுப்பிட்டு வரவா..?",என்று கிண்டலாக கேட்க,

"ப்ச்...அதுக்கு சொல்லலைடா...என் செக்ரெட்டரி போஸ்டுக்கு ஆள் வேணும்னு விளம்பரம் பண்ணிடு...அதுக்குதான் கூப்பிட்டேன்...",என்க,

"சரி டா...!நான் பார்த்துகிறேன்..நீ போய் மீட்டிங்கை அட்டென்ட் பண்ணிட்டு வா...பை..!",என்று கூறி போனை வைத்தான்.

................................................................................................................................

மறுநாள் காலையில் வழக்கம் போல் கிளம்பிய நித்திலா,தன் அம்மாவிடம்,"அம்மா..!இன்னையோட எக்ஸாம் முடிஞ்சுது...சோ,நாங்க எல்லாம் சேர்ந்து சினிமாவுக்கு போகிறதா பிளான் போட்டு இருக்கோம்...நான் வர்ரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்...அதுவரை அப்பாகிட்ட வம்பிழுக்காம அமைதியா இருக்கனும்...சரியா...?",என்று அவர் கன்னத்தை பிடித்து வம்பிழுத்துவிட்டு,இதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த தன் தந்தைக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி விட்டு,தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குள் கிளம்பினாள்.

தேர்வு முடிந்தவுடன் தோழிகள் அனைவரும் ஏற்கனவே சொல்லி வைத்தது போல் சினிமாவுக்கு கிளம்பினர்.அது ஒரு நகைச்சுவை படம்.இவர்கள் அடித்த கும்மாளத்தில் தியேட்டர் முழுவதும் இவர்களைத் திரும்பிப் பார்த்தது.எதையும் கண்டு கொள்ளமல் சிரித்து கூத்தடித்து விட்டு ஐஸ்கிரீம் பார்லருக்கு கிளம்பி சென்றனர்.

"அடுத்து எல்லாம் என்ன செய்ய போறிங்க டி...?",என்று நித்திலா பேச்சை ஆரம்பித்தாள்.

"எனக்கு வீட்டில் மாப்பிளை பார்க்கறாங்க டி....நல்ல வரன் அமைஞ்சா டும் டும்தான்...",வெட்கப் பட்டுக் கொண்டே கூறிய நிவேதாவைப் பார்த்து,"ஹேய்...நம்ம குரூப்பில் முதல் கல்யாணம்....ஹேய்...!!,"என்று தோழிகள் கூட்டம் ஆர்ப்பரித்தது.

"போதும் நிறுத்துங்க டி...ஹே சுமி!நீ உன் காதலை உங்க வீட்ல சொல்லிட்டாயா...?",என்று நிவேதா பேச்சை மாற்ற,

"இன்னும் இல்லை டி...எங்க வீட்ல ஒத்துக்க மாதிரி தெரியல...யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு ரவி சொல்லறாரு...என்ன பண்றதுன்னே தெரியல...!",என்று சுமதி புலம்ப,

இதைக் கேட்ட நித்திலாவிற்கு சுறு சுறுவென்று கோபம் ஏறியது."எப்படி டி...இப்படி வீட்டுக்குத் தெரியாம லவ் பண்றதும் இல்லாம...அப்பா அம்மாவுக்குத் தெரியாம கல்யாணமும் பண்ணிக்க மனசு வருது....அப்படி என்னதான் லவ்வோ...மண்ணாங்கட்டி...!",எனப் பொரிந்து தள்ளினாள்.

"அதெல்லாம் உனக்கு தெரியாது டி...நீயும் லவ் பண்ணினாதான் அந்த உணர்வை உணர முடியும்...வேணும்னா நீயும் லவ் பண்ணிப் பாரு..",என சுமதி பதிலடிக் கொடுக்க,

"லவ்வா...?",என் முகத்தை சுளித்தவள்,"இந்த ஜென்மத்தில் அது நடக்காது...அப்பா அம்மாவை மீறி ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்...",என உறுதியாகக் கூறினாள்.

பாவம்!!அவளுக்குத் தெரியவில்லை...காதலிக்க மாட்டேன் என்று கூறுபவள்,ஒரு காலத்தில்....உயிரைக் கொடுக்கும் அளவிற்கு காதலிக்கப் போகிறாள் என்று...!!பெற்றோரை மீறி ஒரு விரலைக் கூட அசைக்க மாட்டேன் என்பவள்...ஒரு நாள்...அவர்களுக்குத் தெரியாமல் மலையையே புரட்டப் போகிறாள் என்பதையும் அவள் அறியவில்லை....!!!
அகம் தொட வருவான்....!!!
 
Top