Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் பார்வையில் நீதான் எந்தன் அந்தாதி.

Advertisement

Selvipandiyan

Active member
Member
டெய்ஸி மாறனின் நீதான் எந்தன் அந்தாதி.
இவங்க கதையில் நான் கவனித்த ஒரு விஷயம்,எதையும் மேலோட்டமாக எழுதுவதில்லை.சின்ன தகவலை கூட ஆழ்ந்து விவரித்து நிறைய தகவல்களுடன் எழுதுகிறார்.

இந்த கதையிலும்,மகாபலிபுரம் சிற்பக்கலை,பாறைகள் விவரத்திலிருந்து அங்கு சிலை செய்யும் மக்கள்,அவர்களின் பிரச்சினைகள்,சிலை கடத்தல் வரையும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்!கதையில் வரும் எந்த காட்சியிலும் அந்த இடங்கள் பற்றிய விவரங்கள்,வால்பாறை அந்த காடுபற்றிய விவரங்கள்,பழங்குடியினர் அவர்களின் பிரச்சினைகள்,ஆட்சியர் வேலையின் சிரமங்கள்,ஒரு கண் காட்சியாக இருந்தாலும் அதில் வரும் பொருட்கள் பற்றிய விவரங்கள்,முதியோர் இல்ல விவரங்கள்,கோசாலை பற்றிய தகவல்கள்,சுனாமி பற்றிய தகவல்,ஶ்ரீ வில்லிபுத்தூர் வரலாறு,திண்ணை வீடுகள் பற்றியவிவரங்கள்!இப்படி எக்கச்சக்கமான தகவல்கள் சேகரித்து எழுதியதற்கே என் பாராட்டுக்கள்!
வேழவேந்தன் அபினயா காதலர்கள்.அபினயாவின் பெற்றோர் சம்மதிக்காமல் அவன் குடும்பத்தை வீட்டுக்கு வரவைத்து அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்கள்.வேழவேந்தனும் அவன் அப்பாவு ஒரு சிலைகடத்தல் வழக்கில் சிக்கி அரெஸ்ட் செய்யப்படுகிறார்கள்.அத்துடன் அவளால் அவனை தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது.
எட்டு வருடங்களின் தேடலின் பின் கார்த்திக்குடன் திருமணத்துக்கு சம்மதித்த நிலையில் அவனை திரும்பவும் சந்திக்கிறாள்!அதன் பின் நடப்பதுதான் கதை!அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என தெரிந்து அவள் அமைதியாக இருப்பது சரியே,ஆனால் அவன் எதுக்கு அவளிடம் உண்மையை சொல்லாமல் இருந்தான்? இது கொஞ்சம் இடிக்குது!பெற்றோரின் கொலை மிரட்டலும் மாமாவின் சத்தியமும் என சொன்னாலும் ஆட்சியர் ஆன நிலையில் சொல்லியிருக்கலாமே?அதே போல் ராகவனின் உறவு பற்றியும் அந்த குட்டி பையன் உறவு பற்றியும் கடைசி வரை அவளுக்கு தெரியாமலே போய் விட்டதா?அதை அப்படியே விட்டுட்டது மாதிரி இருந்தது.
கதையின் விறு விரிப்பில் இதெல்லாம் குறையாக தெரியவில்லை.கடைசி அத்தியாயம் சட்டுன்னு முடிஞ்ச மாதிரி இருந்தது.
 
Top