Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் தளிர்மலரே 5.1

SHALU shalu

Member
Member
அத்தியாயம் 5

வீட்டில் தன் அன்னையிடம் வந்த கோவர்த்தனன் ,
" ம்மா நாளைக்கு நானும் , ஹரீஷூம் கோவிலுக்குப் போகலாம்னு ப்ளான் போட்ருக்கோம் "
என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போது மணி ஒன்பது.

" போய்ட்டு வா ப்பா. அப்படியே உன் ராசி , நட்சத்திரத்துக்கும் , ஹரீஷோடதுக்கும் அர்ச்சனைப் பண்ணிடு "

தன் மகன் கோவர்த்தனனின் தோழன் ஹரீஷிற்கும் சேர்த்தே அர்ச்சனை செய்யச் சொல்வது அவரது வழக்கம்.

" பண்ணிடறேன்மா. உங்களுக்கு எதாவது மளிகை சாமான் வாங்கிட்டு வரனுமா ? "

அடுத்த நாள் கோயிலுக்குப் போய் விட்டு ,வரும் வழியில் வாங்கி வர வேண்டிய பொருட்கள் என்னவென்று முந்தைய நாளிலேயே தாயிடம் கேட்டு வைத்துக் கொள்வான் கோவர்த்தனன்.

" நாளைக்கு நான்வெஜ் செய்ய முடியாது. அதனால் சாதம் , புடலங்காய் கூட்டு செஞ்சுடறேன். நீ புடலங்காய் வாங்கிட்டு வந்துடு.அப்பளம் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வா "

சைவ உணவிற்கான சிறு பட்டியலை அவனிடம் கூறியவர் ,

" ஹரீஷ் வீட்ல நான்வெஜ் செய்வாங்களே ! அவன் எப்படி சாப்பிடாம வருவான் ? "

" அவனும் அதையே தான் சொன்னான்மா. எப்படியோ சம்மதிக்க வச்சுட்டேன் "

புன்னகையுடன் கூறி முடித்தான் மகன்.

" நல்ல ஃப்ரண்ட்ப்பா " என்று அவரும் சிரித்தார்.

" போய் சீக்கிரம் தூங்கு "
மகனை உறங்க அனுப்பி விட்டு இவரும் உறங்கச் சென்றார்.

🏵🏵🏵🏵🏵🏵
பொழுது புலர்ந்ததும் , காலைச் சூரியனின் புது மலர்ச்சியைப் பார்த்து அக்கா , தங்கை இருவரும் கண்குளிரப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தனர்.

விடுமுறை நாள் ஆதலால் , சுபாஷினியும் , இளந்தளிரும் எப்போதும் போல் , நிதமும் தாங்கள் கண் விழிக்கும் நேரத்திற்கு விழித்திருந்தனர்.

" அக்கா... அந்த சூரியனைப் பாரேன்.செம்மயா இருக்குல்ல ! சச் அ க்யூட் லுக் ! "

தளிரின் விரல்களைப் பற்றிக் கொண்டு அருகில் இருத்தி வைத்த சுபாஷினி தான் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கும் காட்சியைத் தவறாமல் தமக்கைக்கும் காட்டி அவளையும் மகிழ்விக்க நினைத்தாள்.

" யெஸ் சுபா. விடியற்காலையில் எழுந்தாலும் அலுப்பே இல்லாம , தூக்கக் கலக்கமே இல்லாம இந்த சூரியன் எவ்ளோ ஃப்ரஷ்ஷா இருக்காரு பாரு ! "

சுபாஷினிக்கு நிகராக இளந்தளிரும் ஆதவனின் ஆளுமையைப் பார்த்து வியந்து மகிழலானாள்.

" போதும் டி. கண்ணுக் கூசுது "

தன் விழிகளை சூரியனிடத்தில் இருந்து சற்று விலக்கி அங்கே வான வெளியில் பறந்து கொண்டு இருந்த அழகிய பறவைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் இளந்தளிர்.

ஆகாயம் முழுவதையும் தன் சிறகுகளால் சிறை எடுக்க நினைத்ததோ அப்பறவைகள் கூட்டம் !

" சுபா அங்கே பாரேன். அந்த பேர்ட்ஸ் எல்லாம் அவ்ளோ உயரத்துலப் பறந்துட்டு இருக்குதுங்க ! "

தங்கையிடம் கூறி அவளது பார்வையை அந்த பறவைகளினிடத்தில் வீசச் செய்தாள்.

" ஐஐ.. சூப்பர் சூப்பர். அழகா இருக்குக்கா "

அவ்விருவரும் இந்த தருணங்களை இழந்து விடாமல் கண்ணுக்குத் தெரிந்த சுகமான , மனதை வருடும் காட்சிகளைப் பார்த்து மனதினுள் சேகரித்துக் கொண்டனர்.

" இளா ! சுபா ! வீட்டுக்குள்ள வாங்க "
சிவசங்கரி மகள்கள் இருவரையும் மாடியிலிருந்து இறங்கி வருமாறு அழைத்தார்.

" அம்மா கூப்பிட்றாங்க. வா போகலாம் "
சுபாஷினியை அழைத்துக் கொண்டு இல்லத்திற்குள் விரைந்தாள் இளந்தளிர்.

" என்ன அக்காவும் , தங்கச்சியும் மாடிக்குப் போய்ட்டு இவ்ளோ நேரம் கழிச்சு வர்றீங்க ? "
எதார்த்தமாக விசாரித்தார் சிவசங்கரி.

" அதுவா அம்மா ! இயர்லி மார்னிங் வானத்தையும் , அந்த சூரியனையும் பார்த்துட்டு இருந்தோம். கூடவே பட்சிகளையும் பார்த்துட்டே இருந்ததுல எங்க ரெண்டு பேரோட மைண்ட் - யும் ஃப்ரஷ் ஆகிருச்சு.அதையே பார்த்துட்டே இருந்துட்டோம் "

பொறுப்பாக பதில் சொன்னாள் மூத்தவள்.

" உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. குளிச்சுட்டீங்க தான ? போய் சிக்கன் வாங்கிட்டு வாங்க "

அன்றக்கு அசைவ உணவு சமைப்பதற்காக கோழிக்கறி வாங்கி வரச் சொன்னார்.

" நான் இன்னும் குளிக்கலம்மா "
குளிக்கச் செல்வதற்காக வந்த சுபாஷினி அக்காவைத் தேட , அவள் மாடிக்கூச் சென்றிருப்பதை அறிந்து கொண்டு இவளும் அங்கே சென்று விட்டாள்.குளிப்பதை மறந்தும் விட்டாள்.

" அப்போ நீ போய் குளி. இளா நீ மட்டும் கடைக்குப் போய்ட்டு வா "

" சரிங்க அம்மா. போய்ட்டு வரேன். எப்பவும் போல ஒரு கிலோ தான ?"

என்று கேட்டவாறே தனது கைப்பை மற்றும் இறைச்சியை வைத்துக் கொண்டு வருவதற்காகத் தனியே ஒரு பையையும் எடுத்துக் கொண்டாள்.

" ஆமாம் இளா. இந்த நேரத்துக்குக் கடையில் கூட்டம் இருக்காது. நீ சீக்கிரமே வந்துடலாம் "

மகளிடம் கூறிவிட்டு , இறைச்சியைச் சமைக்கத் தேவையான பொருட்களை அரிந்து வைக்கச் சமையலறைக்குள் சென்றார் சிவசங்கரி.

" ரொம்ப நாள் ஆச்சு. ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வா அக்கா "
ஆசையாகக் கேட்ட சுபாஷினியைப் பார்த்தாள் இளந்தளிர்.

" அம்மாகிட்ட கேட்டியா ? "

" இல்லக்கா. நீ வாங்கிட்டு வந்த பிறகு சொல்லிக்கலாம் "
என்று அறிவுப்பூர்வமாக யோசனைக் கூறினாள் சுபா .

" எதுக்கு ! அந்த ஹாஸ்பிடல் விஷயம் மாதிரி மறுபடியும் திட்டு வாங்கனுமா ? நீ விஷயத்தை சொல்லிக் கேளு அம்மா சரின்னு சொன்னா நான் ரெண்டு ஐஸ்க்ரீமே வாங்கிட்டு வர்றேன் "

முன்னர் நிகழ்ந்த சம்பவம் இளந்தளிரை , ' இனி அம்மாவிடம் பொய் சொல்லவே கூடாது ' என்ற முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது.அதனால் தான் தங்கையிடமும் அதை எதிர்பார்க்கிறாள்.

" அவங்ககிட்ட கேக்குறதா ? வேணாம் க்கா . நீ கிளம்பு "

ஏற்கனவே அம்மாவிற்குத் தன் மேல் சிறு வருத்தம் இருப்பதைக் கண்டு கொண்ட சுபாஷினிக்கு இதை அவரிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது.

" இளா .... இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க ? "
அதட்டலாய் வந்தது தாயின் குரல்.

" அம்மா சுபாவுக்கு ஐஸ்கிரீம் வேணுமாம் . அதையும் வாங்கிட்டு வரவா ? "
கோரிக்கை விடுத்தாள் மகள்.

" அட என் உடன்பிறப்பே ! ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர முடியாதுனு சொல்லி இருக்க வேண்டியது
தான ? அவங்ககிட்ட மாட்டி விட்டுப் பழி வாங்கப் பாக்குறியா ? "
சமையலறையை எட்டிப் பார்த்தாள் சுபாஷினி.

" என்ன இன்னும் இவங்களைக் காணோம் ? "
என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கே சிவசங்கரி விஜயம் செய்தார்.

" ஐஸ்க்ரீம் தான வாங்கிக்கோங்க. இளா லேட் ஆக்காம கிளம்பு "

இரண்டே இரண்டு வாக்கியத்தில் சுபாஷினியின் கண்களில் ஆச்சரியத்தை விதைத்து விட்டு , அமைதியாக சென்றிருந்தார் அவர்களின் தாயார்.

" என் தாயெனும் கோயிலோட வார்த்தைகளைக் கேட்டு மெர்சலாகிட்டேன். இன்னும் ஏன் வெய்ட் பண்ற அக்கா ? கடைக்குப் போய் எனக்கு ஒரு சாக்லேட் கோன் வாங்கிட்டு , உனக்குப் பிஸ்தா கோன் யும் வாங்கிட்டு வா "

அக்காவை வாசல் வரை கைப்பிடித்துச் சென்று அனுப்பி வைத்தாள் சுபா.
 




Last edited:
  • Like
Reactions: Ums




Advertisement

Latest Posts

Advertisement

Top